Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டில் வசித்திரமான வழக்கம் இருந்தது. பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால் அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்..

எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி மடிவார்கள்.

இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமையடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் மலை உச்சியை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

தாய், மகன் இருவருமே எதுவும் பேசவில்லை!

ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார். ஏதோ ஒருவித மணம் கொண்ட மரங்களின் சின்னசின்ன கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான்.

உடனே, அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' என்று கேட்டான் நடந்து கொண்டே.

அதற்கு தாயார், ""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு திரும்பும்போது வழி தெரியாமல் திண்டாடக் கூடாதல்லவா?

இங்கே போடப்பட்டுள்ள கிளைகளின் வாசனையைக் கவனித்து நடந்தால் வழி தவறாமல் நீ பாதுகாப்பாக வீடு போய் சேரலாம். அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்'' என்றாள்.

"வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் பாசமிகுந்த இந்த தாயார் பயனற்றவரா? என்று உள் மனம் கேட்க, அவன் தன் தாயை மீண்டும் தன்வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான் .

அதன்பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது.

 • Like 2
Link to post
Share on other sites
 • Replies 3.3k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது முகநூல் எப்படி பலதும் பத்துமாக பிரகாசித்ததோ அது போன்று என்னை பல ஆண்டுகளுக்கு முன் உறுப்பினர் ஆக்கிக் கொண்ட யாழில் பல அம்சங்களையும் பதிவிட எண்ணி உள்ளேன்...அடுத்த பக்கத்தில் எந்தப் பதிவுகளும் பதிய

ஆயிரம் புள்ளினளை அள்ளித் தந்த அனைத்து உறவுகளுக்கும்  மனம் நிறைந்த நன்றிகள். 1,000 ???

நீ உழைக்கும்  உழைப்பில் சிறிதாவது உனக்கென சேமித்து வைத்துக்கொள்  இல்லையெனில்  கஷ்டம் வரும்பொழுது உதவுவதற்கு யாரும் முன் வர மாட்டார்கள் உன் சகோதரனாக இருந்தாலும். 1ரூபாயாக இருந்தாலு

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டில் வசித்திரமான வழக்கம் இருந்தது. பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால் அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்..

எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி மடிவார்கள்.

இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமையடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் மலை உச்சியை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

தாய், மகன் இருவருமே எதுவும் பேசவில்லை!

ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார். ஏதோ ஒருவித மணம் கொண்ட மரங்களின் சின்னசின்ன கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான்.

உடனே, அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' என்று கேட்டான் நடந்து கொண்டே.

அதற்கு தாயார், ""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு திரும்பும்போது வழி தெரியாமல் திண்டாடக் கூடாதல்லவா?

இங்கே போடப்பட்டுள்ள கிளைகளின் வாசனையைக் கவனித்து நடந்தால் வழி தவறாமல் நீ பாதுகாப்பாக வீடு போய் சேரலாம். அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்'' என்றாள்.

"வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் பாசமிகுந்த இந்த தாயார் பயனற்றவரா? என்று உள் மனம் கேட்க, அவன் தன் தாயை மீண்டும் தன்வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான் .

அதன்பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது.

 

இதே மாதிரி இன்னுமொரு கதையும் உண்டு, யாயினி!

 

ஒரு காதலன், தனது சுயநலம் பிடித்த காதலியிடம்... உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்..தருகிறேன் என்கிறான்!

 

அந்தக் கபட மனம் கொண்ட காதலியும், அவனது அம்மாவினது இதயத்தைக் கொண்டு வந்து தரும்படி கேட்கிறாள்!

 

அவனும், தாயைக்கொன்று அவளது இதயத்தைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடி வரும்போது.. கல் தடுக்கிக் கீழே விழுகிறான்!

 

அப்போது அந்தத் தாயின் இதயம்.. அவனது கையிலிருந்து விலகிக் கொஞ்சத் தூரத்துக்கு உருண்டு போய்க் விழுந்து கிடந்தது!

 

அந்த இதயத்திலிருந்து, ஏக்கத்துடன் ஒரு கேள்வியும் வந்தது!

 

எங்காவது அடி பட்டிருக்கிறதா மகனே என்று..!!! :o

Edited by புங்கையூரன்
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்று[20.01.2015] தை அமாவாசை .அபிராமிப்பட்டர் தினம் .

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

ஸ்ரீ அபிராமிப்பட்டரைப் பற்றி ..

 

Abirami_Ma.jpg

இந்தியாவின் பொன்னி நன்னதி பொய்யாது பாயும் சோழ நாட்டிலேதிருக்கடவூர் என்ற பதியிலே அன்னை அபிராமி அம்மனுக்கு ஓர் ஆலயம் இருக்கின்றது .ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன் சரபோஜி மன்னன் ஆட்சிபுரிந்த காலம் .திருக்கடவூரிலே அந்தணர் மரபில் தோன்றிய ''சுப்பிரமணியர் ''என்னும் பெயருடைய பக்தர் இசைக்கலையிலே வல்லவராய் விளங்கினார் .இவர் அரசவையிலேபஞ்சாங்க கணிப்புக்களைச் செய்வதில் பனி புரியும் ஒருவர் .இவ் வடிகளார் அபிராமி அம்மனை ஒளி வடிவமாகக் கண்டு பேரின்பத்தில் ஆழ்ந்து விடுவார் .இவருடைய ஆழ்ந்த பக்தியை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை .இவர் பித்தர் போல உலகப் பற்று அற்றவராய் விளங்கினார் .அன்று அமாவாசை தினம் சரபோஜி மன்னன் திருக்கடவூர் அம்மனுடைய ஆலயத்துக்குள் வந்தார் .சுப்பிரமணியர் அச் சந்நிதியில் தியான நிலையில் உலகையே மறந்து அமர்ந்திருந்தார் .அவருடைய முகத்தில் புத்தொளி வீசியது .மன்னர் ''இவர் யார் ''? என அங்கிருந்தவர்களைக் கேட்டார் .

அரசவையில் பணிபுரியும் .இவர் ஒரு பித்தர் போன்றே நடந்து கொள்கின்றார் என்று அங்கிருந்தோர் கூறினார்கள் .மன்னன் பட்டரின் பக்கத்தில் நின்று ''இன்றைக்கு என்ன திதி '' என்று கேட்டார் .அம்மையை ஒளி வடிவமாய் கண்ட பட்டர்'' பௌர்ணமி '' என்று கூறினார் .அரசன் இவர் பித்தர் .மனநிலை சரியில்லாதவர் என்று எண்ணினார் .மன்னன் அரண்மனைக்கு திரும்பிய பின் சுய நினைவு வந்த பட்டர் நடந்த சம்பவத்தை எண்ணி அழுதார் .ஆலயத்திலே அக்கினிக் கிடங்கு அமைத்தார் .நூறு இழைகளில் உறி அமைத்தார் .அதில் அமர்ந்தார் .அம்பிகையை நோக்கி ''உதிக்கின்ற செங்கதிர் '' என்று ஆரம்பித்துப் பாடத் தொடங்கினார் .ஒவ்வொரு பாடலாகப் பாடினார் .ஒவ்வொரு பாடல் முடிவிலும் உறியின் ஒவ்வொரு இழை அறுக்கப்பட்டது .சூரியன் மறையும் நேரம் வந்து விட்டது .எழுபத்தொன்பதாவது பாடல் முடிந்து விட்ட நேரம் அபிராமியின் காட்சி: அன்னை தனது காதணியை வீசிப் பூரணை ச் சந்திரனாய் வானத்தில் காட்சி அளித்தாள்.அரசனும் அங்கிருந்தவர்களும் வியக்க வானத்தில் ஒளி தெரிந்தது .சுப்பிரமணியர் ''அபிராமிப்பட்டர் '' என்று அழைக்கப்பட்டார் .பட்டர்நூறு பாடல்காளையும் பாடினார் .அபிராமி அந்தாதி அன்னை அபிராமியின் அருளால் பாடப்பெற்றது .

 

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்.....

 

10626375_929115913768391_590421760811490

உலகிற்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக்கொள்கின்றனர் பலர்; ஆனால் தனக்கு ஏற்றாற் போல், உலகையே மாற்றிக்கொள்கின்றனர் சிலர்....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஐந்தறிவு

உயிர்களுக்கு உள்ள பாசத்தில் ..

ஒரு துளி கூட

சில மனிதர்களுக்கு இருப்புது இல்லை...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஐந்தறிவு

உயிர்களுக்கு உள்ள பாசத்தில் ..

ஒரு துளி கூட

சில மனிதர்களுக்கு இருப்புது இல்லை...

 

உண்மை தான் அக்கா...

என்ன ஆயிற்று ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மித்திரன் வாரமலரில் வெளிவந்த  பேட்டி  '(நிலவைத்தேடும் வானம் வெற்றிக்கு பின்னர் )

 

1015184_340709529391730_1372761051_o.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இனிய ஞாயிறு காலை வணக்கங்கள்..

 

265351_227221343978355_7422234_o.jpg

 

268432_227220303978459_4595008_n.jpg?oh=

 

Osoyoos-Pocket-Desert in british colombia.பிரிட்டிஷ்கொலம்பியாவில் உள்ள குட்டிப் பாலைவனம்..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

//எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – குரு (Jupiter)

ஒன்பது எண்களில் 3ம் எண்ணிற்குத் தனிச்சிறப்பு உண்டு. தேவகுருவான பிரகஸ்பதிக்கு உரியது. எப்போதுமே அடுத்தவர்க்கு நல்லது மட்டுமே செய்பவர்கள் இவர்கள்தான். இவர்களது திறமையையும், புத்திசாலித் தனத்தையும் மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டு, இவர்களுக்குரிய மரியாதையைச் செய்ய மாட்டார்கள். தனக்கு எதிரியான 6 எண்காரர்களுக்கும் இவர்கள் நன்மையே செய்வார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு உதவாமல், பல பிரச்சினைகளைக் கொடுப்பார்கள். தன்னை நம்பி வருவோர்க்கு நிச்சயம் உதவி செய்வார்கள்.

தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும், தங்களது ஆலோசனைகளையும் கேட்க வேண்டும் என்று மட்டும் மிகவும் எதிர்பார்ப்பார்கள். முகஸ்துதி செய்வதன் மூலம் மற்றவர்கள் இவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள். தங்களது உடை விஷயத்திலும், தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் விஷயத்திலும் ஆர்வமாக இருக்க மாட்டார்கள். மானத்தை மறைப்பதற்காக உடை அணிகிறோம் என்று மட்டும் நினைப்பார்கள். அடுத்தவர்களிடம் உதவி கேட்டுச் செல்ல மாட்டார்கள். சுயகௌரவம் பார்ப்பது இவர்களது குறைபாடாகும். இதனாலேயே பல நல்ல வாய்ப்புகளை இவர்கள் வாழ்க்கையில் இழந்திருப்பார்கள். இவர்கள் பழைய சாத்திரங்கள், பழைய பழக்கங்கள் ஆகியவற்றின் மீது மிகவும் மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். எனவே, கட்டுப்பாடுகளை மீறப் பயப்படுவார்கள்.

பெயர் கெட்டு விடுமோ என்று பெரிதும் அஞ்சுவார்கள். உயிருக்குச் சமமாக கௌரவத்தைக் காப்பாற்றுவார்கள். இவர்கள் அடுத்தவர்களின் வேலைக்காக மிகவும் அலைவார்கள். இவர்களின் பேச்சில் மனச்சாட்சி, விதி, நேர்மை, பாலம் போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார்கள். இவர்கள் சுதந்திரமாக வாழவே பிரியப்படுவார்கள். கோயில் நிர்வாகம், ஊர்த்தலைமை போன்ற பதவிகளில் கௌரவமாக (ஊதியம் பெறாமல்) வேலை செய்ய விரும்புவார்கள். அன்பிற்கு அடிபணிவார்கள். அதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும் அடிபணிய மறுப்பார்கள். சில சமயங்களில் ஆவேசமாகவும் எதிர்ப்பார்கள். கையில் பணமிருந்தால் அழுகுக்காகவும், சிக்கனத்திற்காகவும் (தேவையைப் பற்றிக் கவலைப்படாமல்) பொருட்களை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்வார்கள்.

சொத்துக்கள் விஷயத்திலும் விட்டுக் கொடுக்கும் குணம் அதிகம் உண்டு. ‘‘என் தம்பிதானே வைத்துக் கொள்ளப் போகிறான், வைத்துக் கொள்ளட்டும்.’’ என்று எதார்த்தமாக நினைப்பார்கள். தங்களத உரிமையை விட்டுக் கொடுத்து விடுவார்கள். இந்தக் குணத்தால் பல அன்பர்கள் பிற்காலத்தில் கவலைப்படுவார்கள். இவர்கள் தீனிப்பிரியர்கள். காபி, டீ, டிபன் போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்வார்கள். குரு ஆதிக்கம் நன்கு அமையப் பெற்றவர்கள். அன்பிலும், பக்தியிலும், சிறந்தவர்கள்.

ஏதாவது ஒரு துறையில் தனித் திறமையைக் காட்டுவார்கள். தேசப்பற்றும் நினைந்தவர்கள். பிறந்த நாட்டிற்காக உயிரையும் கொடுக்கத் தாயராவார்கள். பொருளாதாரத்தில் மிகவும் உயர்ந்திருப்பார்கள். பார்ப்பதற்குக் கடுமையானவர்களாகத் தோன்றினாலும், வெள்ளை மனதுடன் மற்றவர்களிடம் பழகுவார்கள். ஆனால் குரு பலம் குறைந்தவர்கள் கடன் என்னும் பள்ளத்தில் விழுந்து விடுவார்கள். சிந்திக்காமல் பல காரியங்களில் இறங்கித் தாங்களே சிக்கிக் கொள்வார்கள். சில அன்பர்களுக்குக் காதல் தோல்விகளும் ஏற்பட்டிருக்கும்.//

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

1960 காலங்களில் இருந்து பாலபோதினியில் காணப்பட்ட "ஈ" -ஈழம்

 

10351955_837044569670809_727229850633119

சிங்கப்பூர் அரச நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கும் 2015 நாட்காட்டியில் தமிழ் நாட்களும். #தை 1

 

10892027_820047594703840_426190852111608

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
அப்பிடி இருந்த ஈழம் இப்ப ஊதி பெருசாயிட்டு
 
Tamil-flag.gif
 
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பிரபல்யமான உணவக ஊழியர் ஒருவருக்கு கெப்பரைட்டிஸ் ஏ காணப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து சனிக்கிழமை நூற்றுக்கணக்கானவர்கள் தடுப்பூசி பெறுவதற்காக Guelph பகுதியில் குழுமினர்.
வெல்லிங்டன் பகுதியில் வேர்குஸ் என்ற இடத்தில் உள்ள பிரபல்யமான உணவகமான Marj’s Village Kitchen உணவு கையாளுநர் ஒருவருக்கு குறிப்பிட்ட தொற்று நோய் கண்டிருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அப்பகுதி பொது சுகாதார பிரிவினர் வியாழக்கிழமை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
இது வரை 1250-ற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
Marj’s உணவகத்தில் ஜனவரி மாதம் 2-ந் திகதிக்கும் ஜனவரி மாதம் 20-ந் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் உணவருந்தியவர்கள் அவசியம் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
காய்ச்சல், குமட்டல், வாந்தி ,அடர் நிற சிறுநீர், கண்கள் மற்றும் தோல் மஞ்சள் நிறமாதல் போன்றன இந்நோய்க்கான அறிகுறிகள் என கூறப்பட்டுள்ளது..

 

1920208_334397543428267_6313861994847907

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா நாள் (Australia day) என்பது ஆண்டு தோறும் ஜனவரி 26 ஆம் நாளன்று ஆஸ்திரேலியா முழுவதும் தேசிய ரீதியாகக் கொண்டாடப்படும் நிகழ்வாகும். இது ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக பிரித்தானியக் குடியேறிகள் வந்திறங்கிய நாளை நினைவு கூரும் முகமாக கொண்டாடப்படுகிறது. 1788 இல் இந்நாளில் நியூ சவுத் வேல்ஸ் ஜாக்சன் துறையில் ஆளுநர் ஆர்தர் பிலிப் என்பவரால் முதலாவது குடியேற்ற நாடு அமைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா நாள் நாடு முழுவதும் ஒரு பொது விடுமுறை நாளாகும்.

முதலாவது ஆஸ்திரேலியா நாள் 1808 ஆம் ஆண்டில் கொண்டாடப்படட்து. அப்போது ஆளுநராக இருந்த லக்லான் மக்குவாரி இவ்விழாவை அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். 2004 ஆண்டில்இ கிட்டத்தட்ட 7.5 மில்லியன் மக்கள் நாடெங்கும் நிகழ்ந்த வைபவங்களில் கலந்து கொண்டனர்.
 

 

1280px-Flag_of_Australia.svg.png

 

 

Australia Day Picnic, Brisbane, 1908

 

Australia_Day_Picnic_1908.jpg

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ’20 ஆவது திருத்தத்தில் பிரதமருக்கான அதிகாரம் குறையாது’       நாட்டின் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளை கொண்ட தொடர்மாடி குடியிருப்புகளை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிலவும் வீடுகளுக்கான நெருக்கடி நிலைக்கு தீர்வாக இவ்வாறு  தொடர்மாடி குடியிருப்புகளை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சியினர் ஒரே நிலைப்பாட்டிலுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்தினூடாக பிரதமருக்கான அதிகாரங்கள் குறையாது எனவும் அதிகாரம் காணப்படுகிறதா?, இல்லையா? என்பது பிரதமரின் கையிலேயே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/20-ஆவத-தரததததல-பரதமரககன-அதகரம-கறயத/175-256079
  • இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.......!   💐
  • இலங்கையில் பசு வதைக்கு தடை - அமைச்சரவை அனுமதி   இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கையில் பசு வதையை தடை செய்வது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பில் வௌியிடப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் நிலவும் நாடு என்ற ரீதியில் இலங்கை கிராம மக்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக கால்நடை வளத்தின் மூலம் கிடைக்கும் பங்களிப்பு பாரியதாகும். பசு வதை அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது தேவையான கால்நடை வளம் போதுமானது இல்லை என்பதும், இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்காக வெளிநாட்டுக்கு செல்லும் பெரும் தொகையிலான அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தி கிராம மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் உள்ளூர் பசும் பால் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு போதுமான பசுக்கள் இல்லாமையால் இந்த தொழிற்துறையின் வளர்ச்சிக்கு தடை ஏற்பட்டுள்ளது என்று பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. • பசு வதை தொடர்பில் தற்பொழுது நாட்டிற்குள் நடைமுறையில் உள்ள 1958 ஆம் ஆண்டு இலக்கம் 29 இன் கீழான கால்நடை சட்டம், 1893 ஆம் ஆண்டு இலக்கம் 9 இன் கீழான அல்லது கொலை கட்டளைச்சட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட (Joint Act) ஏனைய சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களினால் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முடியாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுதல். • பசு இறைச்சியை பயன்படுத்தும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்தல் மற்றும் நிவாரண விலைக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். • விவசாய பணிகளுக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியாத வயதான நிலைமைக்கு உள்ளாகும் பசுக்கள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். • இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு உட்பட்டதாக உடனடியாக நடைமுறைபடுத்தும் வகையில் நாட்டில் பசு வதையை தடை செய்தல். http://tamil.adaderana.lk/news.php?nid=134449
  • 20ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஸ்தாபிக்க, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லப்போவதில்லை- அரசாங்கம் by : Yuganthini 20ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஸ்தாபிக்க, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லப்போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவையின் முடிவுகளை வெளியிடும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதயகம்மன்பில இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக  உதயகம்மன்பில மேலும் கூறியுள்ளதாவது, “20ஆவது திருத்தச்சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தும் யோசனை அரசாங்கத்திடம் கிடையாது. சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதாயின், அதற்கேற்ற சரத்துக்கள் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்னும் ஒரு வருடத்திலேயே புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிக்கவே நாம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம். புதிய அரசியலமைப்பை ஸ்தாபிக்க வேண்டுமெனில், தற்போது இருக்கும் அரசியலமைப்புக்கு இணங்க கட்டாயமாக சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு சென்றே ஆகவேண்டும். எனவே, ஒரு வருடத்தில் இரண்டு தடவைகள் சர்வஜன வாக்கெடுப்புக்களை நடத்தி, பொது மக்களின் பணத்தை வீணாக்க அரசாங்கம் தயாரில்லை. உயர்நீதிமன்றம் 20யை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டால், அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் தயாராகவே உள்ளது. 20 தொடர்பாக அரசாங்கமும் தீவிரமாக ஆராய்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. பலருக்கு பல கருத்துக்கள் இருக்கின்றன.  எவ்வாறாயினும், நாட்டில் முழுமையான ஜனாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் அனைவரும் தெளிவாக இருக்கிறோம். அரசியலமைப்பு என்பது அனைவருக்கும் உரித்தான ஒன்றாக இருக்க வேண்டும். அது ஜனாதிபதி- பிரதமரை மட்டும் சார்ந்திருக்கக்கூடாது. இதனால் தான் 19யை இல்லாதொழிக்கவும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தக் காரணங்களைக் கூறித்தான் பொதுத் தேர்தலிலும் நாம் வாக்குக்கேட்டிருந்தோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/20ஆவது-திருத்தச்சட்டமூலத/
  • மிகவும் நல்லது. செய்து காட்டுங்கள். அப்போதாவது எமது மக்களுக்கு / இன்றைய சமுதாயத்துக்கு அடக்குமுறைக்குள் தான் வாழ்கிறோம் என்ற உணர்வு வரும் இல்லையா. 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.