Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் பயந்தும்
பணிந்தும் குனிந்தும் போவாயானால்
உன் சுயத்தை இழந்தேயாவாய்......!!!

இனிய காலை வணக்கம் !!!..

 

 

 

 


10629796_806662606034300_420690132674217

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

வெறுமை நிரம்பியதாயும் மலிவானதாகவும் போய்கொண்டிருக்கும் வாழ்க்கையில் என் இருப்பை உணர்த்தும் ஒவ்வொரு செய்கையும் கோமாளியாக உங்களுக்கு தெரிவதில் ஒன்றும் அபத்தமில்லை. 'கோமாளி'யாக இருந்திடவே விருப்பம்...ரரஜன் விஸ்வாவின் பதிவிலிருந்து.

 

 

நான்  உட்பட இன்று பலரது நிலை இது தான்.கோமாளிகளாகப்பட்டுக் கொண்டே போகிறோம். :(:)

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லார் ஒருவருக்கு செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத
ஈரமில்லா நெஞ்சத்தாருக்கு ஈந்த உபகாரம்
நீர்மேல் எழுத்துக்கு நேர்.

 

10369721_764057013628116_490474777948391

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறைகள் சொல்லும் உறவுகள் வேண்டாம்
குற்றம் காணும் நட்புகளும் வேண்டாம்…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறைகள் சொல்லும் உறவுகள் வேண்டாம்

குற்றம் காணும் நட்புகளும் வேண்டாம்…

 

உண்மையான  உறவும்

நட்பும் இப்படித்தான் இருக்கணும்..

 

நல்லதை வெளியிலும்

கூடாததை  எம்முடனும்  சொல்பவனே

உண்மை  உறவு

உண்மை  நட்பு

 

ஆனால் 

மருந்தை விசத்தைப்போல நாம் ஏற்கமறுக்கின்றோம்

அவர்கள் என்ன  செய்யமுடியும்??? :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பக்கத்தையும் புரட்டிப் பார்த்து செல்பவர்களுக்கு நன்றி.யாயினி என்னாச்சும் புலம்பி வைச்சு இருக்கும். நமக்கேன் சோலி என்று விட்டு சென்றால் அதற்கும் நன்றி என்பதை விட வேறை ஒன்றும் சொல்லத் தோன்ற இல்லை.இதற்கு உரிய பதில் உண்மையாக பப்பிளிக்கில் எழுத முடியாமைக்கு மனம் வருந்திறன்..சில வலிகள் கிழமைகள் அல்ல,மாதங்கள் அல்ல,வருடங்கள்,இறுதிக் கணம் வரைக்கும் வலித்துக் கொண்டே இருக்கும்.அது போலத் தான். சிலருடைய பேச்சுக்களை எப்படி மறக்க நினைத்தாலும் மறக்க முடிவதில்லை...தங்கள் தேவைகள் எங்கயோ ஒரு இடத்தில் பூர்த்தி செய்யப்பட்டதும் மற்றவர்களில் இல்லாத பேச்சுக்களை,பழிகளை பேசி செல்வர்களை எப்போதும் உண்மை என்று நம்பக் கூடாது..நாக்கு நல்லதும் பேசும் தீதும் பேசும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் நல்லதொரு பொழுதாக அமைய என் வாழ்த்துக்களை தொிவித்துக் கொள்கிறேன்.ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம். உயிரினும் ஓம்பப் படும்.

 

10325139_766637163370101_387043078174438

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று யாழ் கள உறவும் எங்களின் நட்பும் ஆகிய நிவேதா உதயராஜன் அவர்களின் 'நிறம் மாறும் உறவுகள் மற்றும் வரலாற்றைத் தொலைத்த தமிழர் ' எனும் இரு நூல்கள்களின் வெளியீடும் திறன் ஆய்வும்  பரிஸ் லாச்சப்பலில் நடை பெற இருக்கிறது..அவர்களது நூல் வெளியீடு இனிதே நடை பெற எனது பக்கம் நல் வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கிறது.208396_202571636443326_7406707_n.jpg?oh=

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரம் இல்லாத மனித வாழ்வில்
அர்த்தமே இல்லை - தமிழ்தேசிய தலைவர்
பிரபாகரன்

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தவரைக்கு சகிப்புத் தன்மை அனைவருக்கும் இருக்க வேண்டிய ஒன்று. ஆனால் எல்லா நேரமும் சகிப்புத் தன்மையோடு இருந்து விடமுடியாது..மற்றவர்களது ஏமாற்று வித்தைகளை எல்லாம் பார்த்துக் கொண்டு,.......இந்த உலகத்தில் எப்போதும் எவ்வளவுக்கு அப்பாவிகளாக இருக்கிறோமோ அந்தளவுக்கு மனதை காயப்படுத்திட்டு போறவர்களும் இருக்கிறார்கள்.எதிர்த்து  பேச,போராட ஆரம்பிக்கும் போது அதற்கும் மனதை கஸ்ரப்படுத்தும் படியான எண்ணப்பாடுகளோடு கூடிய எதிர்ப்பாக்காத  இலவச விருதுகள் கிடைத்த வண்ணமமே இருக்கிறது.எல்லாம் சுய நலமான உலகமும் மனிதர்களும் தந்து விட்டு போகும் இலவச பட்டங்கள்.தன் சுய நலம் கருதி குற்றம் சொல்ல நினைத்தால் எவ்வளவு குற்றங்களை ஒருவர் மேல் கண்டு கொள்ளலாம்......மற்றவர்களோடு ஒத்துப் போகத் தெரியாது என்ற பட்டத்தில் இருந்து நிறைய,நிறைய பட்டங்கள் கிடைக்கும் போது சகிப்புத் தன்மையோடு எவ்வளவுக்கு இருக்கலாம் இல்லை வாழலாம்.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு அன்னம்

 

(கருப்பு அன்னம்) (Cygnus atratus) என்பது பிரதானமாக அவுசுதிரேலியாவின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் வாழும் அளவிற் பெரிதான நீர்ப்பறவை இனமாகும். நியூசிலாந்து நாட்டில் இவ்வினம் கிட்டத்தட்ட முற்றாக அழியும் அளவிற்கே வேட்டையாடப்பட்ட போதிலும் பிற்காலத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

அவுசுதிரேலியாவில் இது காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப இடம் பெயரும் ஓருயிரனமாகவே காணப்படுகின்றது. கறுப்பு அன்னம் உடல் முழுவதும் கருமையாயும் சொண்டு சிவப்பாயுமுள்ள பெரிய பறவைகளுள் ஒன்றாகும்.

 

கறுப்பு அன்னத்தை முதன் முதலில் 1790 ஆம் ஆண்டு விஞ்ஞான ரீதியில் விளக்கியவர் ஆங்கிலேய இயற்கையியலாளரான ஜோன் லதாம் ஆவார். கறுப்பு அன்னங்கள் தனியாகவோ அல்லது சிறு சிறு கூட்டங்களாகவோ காணப்படும். சில வேளைகளில் அவை நூற்றுக் கணக்கில் அல்லது ஆயிரக் கணக்கில் சேர்ந்திருக்கும்.

 

[2] கறுப்பு அன்னங்கள் விலங்கியற் பூங்காக்களிலும், பறவையினச் சேகரிப்பு நிலையங்களிலும் பிரபலமானவையாகும். சில வேளைகளில் அவை காப்பகங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதால் அவற்றின் இயற்கை வாழிடத்துக்கு அப்பாற்பட்ட இடங்களிலும் காணப்படுவதுண்டு.

பண்டைத் தமிழிலக்கியங்களில் உரையாசிரியர்களால் காரோதிமம் எனும் பெயரிலே குறிக்கப்பட்டுள்ள இது தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் ஆகும்.

 

599981_424997857534035_1659836750_n.jpg?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா (Laika, ரஷ்ய மொழி: Лайка), என்ற நாய், சோவியத் ஒன்றியம் முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பிய உயிரினமாகும். ஒரு காலத்தில் மாஸ்கோவின் வீதிகளில் திரிந்த இந்நாய் நாய்கள் சரணாலயம் ஒன்றிலிருந்து விண்வெளிப் பயணப் பயிற்சிக்காக வேறு இரண்டு நாய்களுடன் தெரிந்தெடுக்கப்பட்டது. இதன் இயற்பெயர் "குத்ர்யாவ்க்கா" (Kudryavka, кудрявка) என்பதாகும். பயிற்சிக்காலம் முடிந்த பின்னர் சோவியத்தின் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் பூமியின் சுற்றுப்பாதையைச் சுற்றிவர லைக்கா தேர்ந்தெடுக்கப்பட்டது. லைக்கா (பெண் நாய்)

 

விண்ணுக்குச் சென்ற சில மணித்தியாலங்களில் அழுத்தம் மற்றும் வெப்பமிகுதி காரணமாக இது இறந்துவிட்டது. லைக்கா இறந்தததன் காரணம் இது இறந்து பல ஆண்டுகள் கழித்தே அறிவிக்கப்பட்டது. சில முன்னாள் சோவியத் அறிவியலாளர்கள் லைக்கா இறக்க விடப்பட்டது எனக் கருத்துத் தெரிவித்தனர்.[1]

லைக்கா இப்பயணத்தின் போது இறந்தாலும், உயிரினம் மட்டுமல்லாமல் மனிதர் விண்ணுக்குச் செல்லுவதற்கு இச்சோதனை வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.இது நவம்பர் 1957 இல்விண்ணுக்கு அனுப்பப்பட்டது.381930_283570411676781_789593442_n.jpg?o

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலதையும் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது யாயினி.தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாராய் நாராய் செங்கால் நாராய் **
இந்த செய்யுளை இயற்றியவர் திரு. சத்தி முத்தி புலவர் ஆவார். ஒருநாள் பாண்டியன் தனது சபையிலிருந்த புலவர்களை வரவழைத்து நாரையின் வாய்க்கு எதனை ஒப்பிடலாம் என கேட்க அதற்கு சபையிலிருந்த புலவர்கள் திரு திருவென விழித்தனராம்.

அன்றிரவு மன்னன் நகர சோதனைக்கு புறப்பட்டான். அவ்வழியே வறுமையின் பிடியில் இருந்த புலவர் ஒருவரைக் கண்டான். அவர் மிகவும் களைப்படைந்து காணப்பட்டார். மன்னன் நகர சோதனைக்கு வருவது அறியாது, அந்த நேரத்தில் மேலே பறந்து போன ஒரு நாரைக் கூட்டத்தைக் கண்ட புலவர் நெஞ்சில் பாடல் பிறந்தது. உடனே வாய் திறந்து "நாராய் நாராய் செங்கால் நாராய்" -என பாட ஆரம்பித்து விட்டார்.

அந்த பாடல் வரிகளில் நாரையின் வாய்க்கு பனங்கிழங்கை உவமையாக ஒப்பிட்டு பாடப்பட்டிருந்தது.மன்னன் மிகவும் மகிழ்ந்து அந்த புலவரின் வறுமையைப் போக்கினான் என்பது வரலாறு.

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்

நீயும் உன் மனைவியும் தென்திசை குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின் எம்மூர்ச்
சத்தி முத்த வாவியுட் தங்கி

நனை சுவர் கூரை கனை குரற் பல்லி
பாடு பார்த்திருக்கும் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்

ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇ
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே!

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மாதங்கள்

வழக்குச் சொல் தூயதமிழ்.

தை _ சுறவம்

மாசி _ கும்பம்

பங்குனி _ மீனம்

சித்திரை _ மேழம்

வைகாசி _ விடை

ஆனி _ இரட்டை

ஆடி _ கடகம்

ஆவணி _ மடங்கல்

புரட்டாசி _ கன்னி

ஐப்பசி _ துலை

கார்த்திகை _ நளி

மாரகழி _ சிலை

தமிழ் கிழமைகள்

ஞாயிறு _ ஞாயிறு

திங்கள் _ திங்கள்

செவ்வாய் _ செவ்வாய்

புதன் _ அறிவன்

வியாழன் _ வியழன்

வெள்ளி _ வெள்ளி

சனி _ காரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பக்கத்தை திருப்பி செல்பவர்களுக்காக,

வோர் அடிக்காமல் இருக்க ஒரு பாடல்..

 

ஹே ஹோ ஹ்ம்ம் லா லா லா
பொன்மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம் மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம் எழுதிய அன்பு இலக்கணம் தவறாகலாம் .......இனிய காலை வணக்கம் !!!!!!!

 

1795655_745619068805244_7233624130550286

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.