Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு
கொதிக்க வையுங்கள்,
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும்போது தவளை
தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி
கொண்டே வரும்......

வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு
ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி
கொள்ளும்.

தண்ணீர் கொதிநிலையை அடையும் போது
வெப்பத்தை தாங்கமுடியாமல் தவளை
பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க
முயற்சி செய்யும்.

ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும்
தவளையால் வெளியேற முடியாது.

ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை
மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து
போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை
இறந்து விடும்.

எது அந்த தவளையை கொன்றது ?

பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த
தவளையை கொன்றது என்று சொல்வீர்கள். ஆனால்
உண்மை என்னவென்றால், எப்போது தப்பித்து
வெளியேற வேண்டும் என்று சரியாக
முடிவெடுக்காத அந்த தவளையின்
இயலாமை தான் அதை கொன்றது......

நாமும் அப்படித்தான் எல்லோரிடமும்
சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
ஆனால்.....

நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும்,
எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை
தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
மனரீதியாக, உடல்ரீதியாக, பணரீதியாக மற்றவர்கள்
நம்மை நசுக்க ஆரம்பிக்கும்போது நாமும்
சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே
தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.

உடலில் வலிமை இருக்கும் போதே
அவர்களிடமிருந்து தப்பித்துவிடுதல் நன்று.

நாம் அனுமதித்தால் ஒழிய நம்மை அழிக்க எவராலும் முடியாது...

 

 

 

11224053_1033920019982105_15267145015717

  • Like 4
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

உடல் நலிந்தோரை பரிகாசம் பண்ணும் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள்...உடல் ஊனமோ,வலிகளோ யாரும் அவர்களாக கேட்டுப் பெறுவதலில்லை....கடவுளாக யாரால் பொறுமையாக எந்த வலியை தாங்கிக் கொள்ள முடியோ அவர்களுக்கு மட்டுமே ஒவ்வொரு வலிகளையும் பரிசாக கொடுக்கிறான்...

........................................................................................................................................................................................................................................................................................

11987143_996149213756545_147480640673674

ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

தன் அம்மாவுடன் நடந்துசென்ற ஒரு சுட்டிப் பையன், பட்டாம்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னால் ஓடினான். தன் தாயை விட்டு வெகுதூரம் வந்து விட்டதை அப்போது தான் சிறுவன் உணர்ந்தான்.


யாருமே இல்லாத அப்பகுதியில் சிறுவனின் அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது."அய்யோ, வழி தெரியாம ரொம்ப வந்துட்டேனே...அம்மா..அம்மா...எங்கம்மா கிட்ட யாராச்சும் கொண்டு போய் விடுங்களேன்! என கதறி அழுதான்.

 

அப்போது அவ்வழியே வந்த ஒரு உழவன், சிறுவனின் அழுகுரல் கேட்டு அவனிடம் சென்றார்.நீ யாரு...எதுக்காக இங்க தனியா நிக்கற?நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடி வந்து அம்மாவ தொலைச்சிட்டேன்..அவங்க வயல்ல வேலை செஞ்சிட்டு வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்காங்க..எனக்கு திரும்பிப் போக வழி தெரியல.. என்று சிறுவன் கூறவே, அவனை சமாதானப்படுத்திய உழவன், "சரி, பயப்படாதே... நான் உங்கம்மா கிட்ட கூட்டிகிட்டு போறேன்! உங்கம்மா எப்பிடி இருப்பாங்கன்னு சொல்றியா?" எனக் கேட்டார்.

 

அதற்கு "எங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க...இந்த ஊருலயே அவங்க தான் அழகு!" என பெருமையுடன் பதிலளித்தான் சிறுவன்.

சிறுவனை அழைத்துக் கொண்டு ஊரை நோக்கிச் சென்ற உழவன், எதிரில் மிகவும் அழகான பெண் நடந்து வருவதைக் கண்டார். உடனே "தம்பி, இவங்க ரொம்ப அழகாக இருக்கிறாங்க. இவங்க தானே உன் அம்மா? எனக் கேட்க, தன் அம்மா இன்னும் அழகாக இருப்பாள் என சிறுவன் பதிலளித்தான்.வழியில் இரண்டு அழகான பெண்கள் தண்ணீர் சுமந்து செல்வதை உழவர் கண்டார். கண்டிப்பாக இவர்கள் ரெண்டு பேரில் ஒருவர் தான் சிறுவனின் அம்மாவாக இருக்க வேண்டும் என்று நம்பிய உழவன், சிறுவனிடம் கேட்டார்.


ஆனால் "இல்ல... எங்கம்மா இவங்க எல்லாரையும் விட அழகா இருப்பாங்க!" என்று உறுதியாகக் கூறினான்.அப்போது எதிரில் பதற்றத்துடனும், கண்ணீருடனும் ஒரு பெண் ஓடிவருவதைப் பார்த்த சிறுவன் "அதோ என் அம்மா! அதுதான் என் அம்மா! என் அம்மா கிடைத்து விட்டாள்!" என சந்தோஷக் கூக்குரலிட்டான்.

கருப்பாகவும், ஒரு கண்ணில் பார்வையில்லாமலும் காட்சியளித்த அந்தப் பெண்ணைப் பார்த்த உழவன்... அந்த ஊரே அதிரும் படி சிரித்தான். "இதுவா உங்கம்மா.. இவங்களையா அழகுன்னு சொன்ன" என்று சிறுவனைப் பார்த்துக் கேட்டான்.

 

அதற்கு சிறுவன் மிகவும் பெருமையாக, "ஆமா...அவங்க என்ன ரொம்ப பாசமா பாத்துக்குவாங்க.. எல்லோர்கிட்டயும் அன்பா நடந்துக்குற இவங்க தான் உலகத்துலயே ரொம்ப அழாகானவங்க!" என்று பதிலளித்து விட்டு, தன் தாயின் கையைப் பிடித்து துள்ளிக் குதித்து நடந்தான்.

உண்மையான அழகு எது என்பதை உணர்ந்து கொண்ட உழவன், முகம் இருண்டு போய் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தார்!

 

dinakaran daily newspaper

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டளைகள்,பணிவுகள், விருப்பங்கள்,விளக்கங்கள் இல்லா வாழ்க்கை 
வாழ ஆசைப்படுகிறேன்....
-கே.திசி-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மேடை இசைநிகழ்ச்சி என்றாலே, குத்துப்பாடல்களும், Record danceகளும் கோலோச்சும் இந்நாளிலே, அர்த்தமுள்ள நிகழ்சியொன்றைத் தொகுத்து வழங்கக் கிடைப்பது ஆத்ம திருப்தியைத் தரும் அபூர்வ நிகழ்வாகும். நீண்டகாலம் என் நெஞ்சில் தேக்கிவைத்திருந்த கருவை, ஒரு அற்புத நிகழ்ச்சியாக மேடையேற்றக் களம் அமைத்த GAMA Media Event க்கு நெஞ்சார்ந்த நன்றி. 
சென்னை Music Academy யில் நடந்தேறிய இந்த நிகழ்ச்சி 'புதுயுகம்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சிலர் மட்டுமே கண்டுகளித்தார்கள். தற்போது, you tube தளத்தில் மூன்று பாகங்களாகக் காணும் வாய்ப்பினைத் தந்துள்ளார்கள். இது ஒரு இசையாவணப் பதிவு. எனவே இசைப்பிரியர்கள் தம் நண்பர்களோடு இதனைத் தாராளமாகப் பகிர்ந்துகொள்ளாலாம்..
 
 
 
 
Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


.
There was a blind girl in a village. 
ஒரு கிராமம் ஒன்றில் கண் தெரியாத பெண் ஒருத்தி இருந்தாள்.
.
She hated everyone except her boy friend.
அவள் தன்னுடைய ஆண் நண்பனை தவிர மற்றவர்கள் மீது வெறுப்பாகவே இருந்தாள்.
.
She used to tell him that "IF I HAD EYES THEN I WOULD HAVE MARRIED you".
அவள் வழமையாக அடிக்கடி அவனுக்கு சொல்லும் வசணம்.
.
எனக்கு கண் பார்வை பிரச்சனை இல்லாமலிருந்திருந்தால்.. நான் உன்னை திருமணம் செய்திருப்பேன்.
.
After some days someone donated eyes to that girl.
யாரோ ஒரு புண்ணியவான் கண் தானம் செய்து அவளுக்கு கண் பார்வை கிடைத்தது.
.
She so excited and ran to see her boy friend.
சந்தோசம் என்றால் அப்படி ஒரு சந்தோசம். உடனே முதல் முதலாக தன்னுடைய boy friend இனை பார்க்க ஓடிப்போகிறாள்.
happy சந்தோசம் - excited என்பது சந்தோசத்தின் உச்சி. பயங்கர சந்தோஷப்பட்டாள்
.
She was surprised because he was blind.
அவனை கண்டது அவளுக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. ஏனென்றால் அவன் ஒரு கண் தெரியாதவன் என்று இப்போதுதான் அவளுக்கு தெரியும்.
.
The boy asked her "now you have eyes.will you marry me?"
இப்போது உனக்கு கண்கள் இருக்கின்றது தானே. நீ என்னை திருமணம் செய்வியா?
.
The girl was calm for some time and said 'NO'.
அந்த பெண் அமைதியாக இருந்து கடைசியில் இல்லை என்று மறுத்துவிட்டாள்.
.
The boy walked away crying and told her softly."TAKE CARE OF MY EYES"
.
அந்த boy சோகத்துடன் அழுதவாறு போய்க்கொண்டிருந்தான். பின்னர் அவளை நோக்கி திரும்பியவாறு எனது கண்கள் கவனம் என்றான்.
.
தனது கண்களை அவளுக்காக கண் தானம் செய்த அந்த புண்ணியவான் அவனேதான்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் எழுந்தால் மாலை தூங்க செல்வதற்கு இடையில் நாளாந்தம் நாம் நிறைந்த அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்...அந்த வகையில் இன்று நான் வெளியில் செல்லும் போது நேராக பார்த்த விடையம்..செக்கர்(Checker)ரக்ஸி ரோறண்டோவில் அண்மைய காலங்களில் புதிய வடிவமைப்போடு பாவனைக்கு விடப்பட்டுள்ளது..

பாவனையாளர்களினது நெருக்கடிகளை குறைக்கும் நோக்கில் இவை வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளதாயினும்..எவ்வளவுக்கு நன்மை பயக்கும் என்று சொல்லி விட முடியாது..

இதன் முக்கியமான பாவனையாளர்கள் நோயாழிகள் மற்றும் உடல் ஊனமுறவர்களுக்கான தேவையே அதிகமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்...இருந்தாலும் கூட நன்மை என்றும் சொல்லி விட முடியாது...

புதிய முறையில் வடிவமைப்பு செய்து இருக்கிறார்கள், எப்படி என்றால் முன் இருக்கை பகுதியில் இருவரும்,பின் இருக்கைப் பகுதியில் இருவருமாக மொத்தம் நான்கு பேரே அடங்கும்.
முக்கியமாக சக்கரநாற்காலியில் இருக்க கூடிய ஒருவர் சாரதிக்கு பக்கத்து ஆசனப்பகுதயில் இருக்க கூடியதான ஒரு வடிவமைக்கு இது தேவையா..

.எனக்கு இதைப் பார்க்கும் போது மிகவும் வெறுப்பாக இருந்தது..காரணம் ஆண்கள் பக்கத்திலிருந்து பயணம் செய்து பழக்கப்படாத ஒருவருக்கு மிகவும் அருவருக்க தக்க செயலாகே இருந்தது...

எத்தனை சத வீதம் மற்றவர்களுக்கு பாதுகாப்பாக அமையும் என்று சொல்லத் தெரியவில்லை..ரொன்டோவின் பொது போக்குவரத்தை பெரிதும் பாவிப்பவள் என்ற வகையில் அதிகாலைப் பொழுதில் வெளியில் செல்லும் போது அந்த நேரத்தில், சாரதிகளாக வருபவர்களிடத்தில் மற்றவர்க்கு மனக் கஸ்ரத்தை கொடுக்க கூடிய நிறைய வேண்டாத பழக்க முiடியவர்களையே காணக் கூடியதாக இருக்கும்.

நிறைந்த அசௌகரியங்களை ஏற்படுத்தும் ஒருவகை வாகனமாகவே நான் நினைக்கின்றேன்.மக்கள் எதற்கும் விழிப்பாக இருப்பது நன்று அதற்காகவே இவற்றை பகிர்ந்து கொள்கிறேன்...எனக்கு என்னமோ போல் இருந்தது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் கள்ள மௌனம் .

உலகின் மனசாட்சியை உலுக்கும் குழந்தையின் புகைப்படம் - மாறுமா ஐரோப்பாவின் அணுகுமுறை?

ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரே ஒரு புகைப்படம் சொல்லிவிடும். விட்நாமில் அமெரிக்கா நடத்திய கொடூராத்தை உலகுக்கு காட்டியது ஒரு புகைப்படம் தான், ஆப்ரிக்காவில் நிலவிய கொடிய வறுமையை சரியாக உணர்த்தியது ஒரே ஒரு புகைப்படம் தான்.

தாங்கள் எதற்காக கொல்லப்படுகிறோம் என்பது கூட அறியாத நிலையில் போரில் ஒவ்வொரு நாளும் பல குழந்தைகள் பலியாகிவருகிறார்கள். அந்தவகையில், தற்போது தினம் தோறும் நாம் வாசிக்கும் செய்திகளில் ஒன்றாகிவிட்ட அகதிகளின் துயரத்தை, வலியை உணர்த்தும் புகைப்படம் ஒன்று வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரகணக்கான மக்களை கண்ணீர் சிந்தவைத்து வருகிறது.

ஆனால் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு புகலிடம் தேடி வரும் அகதிகள், தங்கள் நாட்டுக்குள் நுழைவதை கடுமையாக எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளின் மனநிலை இந்த புகைப்படத்தை பார்த்த பிறகாவது மாறுமா?

சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு போரில் இருந்து உயிர் தப்பி, ஐரோப்பாவிற்கு அகதியாக செல்ல முயன்ற போது, படகு விபத்துகுள்ளாகி மத்தியதரைகடலில் முழ்கி இறந்து போன ஒரு குழந்தையின் இந்த படம், உலகின் கள்ள மௌனத்தை அசைத்து பார்க்க துவங்கியுள்ளது.

உயிரை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு வரும் அகதிகள், தங்கள் நாட்டுக்குள் நுழைவதை கடுமையாக எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளின் மனநிலை மாறுமா?

இறந்து போன இந்த குழந்தையின் ஆன்மா நம் அனைவரையும் மன்னிக்குமா?

11987085_868842433201207_66852492176156011215883_868842453201205_16824835151795211947502_868842473201203_78161017775623411951865_868842509867866_250847578848816

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

11986994_10155860505895012_3658863226732

 

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலை
கழகத்தில் ஒரு ஆராய்ச்சி செய்தார்கள்.
பழையதை வைத்து.முன்தினம் வடித்த
சோறை நீர்விட்டு அதில் தயிரையும்
சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் என்ன பலன்
கிடைக்கும் என்று.
கிடைத்த முடிவுகளை பார்த்து மூக்கின்
மேல் விரலை வைத்துக்கொண்டு
சொன்னார்களாம் தென்னிந்தியர்கள் மனிதர்கள்
அல்ல அவர்கள் தோவர்களாகத்தான் இருக்க
வேண்டும்.
ஏனெனில் அவர்களின் பாரம்பரிய உணவான
இந்த பழையதையும் தயிரையும் உண்டால்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.!
வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.!
உடல் சோர்வை போக்குகிறது.!
உடலில் உள்ள அனுச்சிதைவுகளை
தடுக்கிறது.!
உடல் சூட்டை தணிக்கிறது.!
வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து
வெளியேற்றுகிறது.!
உற்சாகமான மனநிலையை தருகிறது.!
என்று பலவிதமான நன்மைகளை
பட்டியலிட்டனர்.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும்.
நம்மவர்கள் குப்பை உணவான பர்கரையும்
பீட்சாவையும் புரோட்டவையும் தேடி
அலைவது போல உலகமே பழையச்சோறை
தேடி அலைந்தது
HOW to MAKE PALAYA
SORU? என்று அமெரிக்கர்கள் இந்திய
நண்பர்களிடமும் இணையத்திலும்
கேள்விகேட்க ஆரம்பித்துவிட்டனர்.
நட்சத்திர ஓட்டல்களிலெல்லாம்
பழையச்சோறை புதிய நவீன உணவு
பட்டியலில் சேர்த்தர்வு விட்டனர்.
ஆனால் இன்றைக்கு நம்மவர்கள்
சளிபிடிக்கும், உடல் குண்டாகி விடும்
என்றெல்லாம் சொல்லி பழையதை பழித்து
வருகிறார்கள்.
அதுபெரிய தவறு வெயில் காலங்களில்
மட்டுமல்ல அனைத்து நாட்களிலும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு
பழையசோறு.!
சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு
மணிநேரம் கழித்து தேவையான அளவு
தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8
மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால்
அமிர்த பானம் தாயரிக்க தேவையான முக்கிய
பொருளான பழையது தயார்.
இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு
மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர்
கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய்
ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக
வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது
உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும்
கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு
பாருங்கள்.
ஆகா.! இதுதான் தேவாமிர்தம் என்பதை
நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.
இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று
நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்
பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள்
தேவர்கள்.!
அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க
கற்றுக்கொடுத்தவர்கள் நம் முன்னோர்

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தினமும் சாப்பிடும் நீராகாரத்தை இப்ப அமரிக்காவே ஆராச்சி செய்கின்றதா..., செய்யட்டும்  ... செய்யட்டும்...!  :)

(அவர்கள்  ஊறுகாயை மறந்து விட்டார்கள்...!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம் ......

எப்படி இருக்கீங்க...?..

10150729_10205761683175777_1453147773653

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்னை தெரேசா நினைவு தினம்...அன்னை தெரேசா (’Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), 

MotherTeresa 090.jpg

11913245_10206233757537341_4513450638461

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 யாயினியின் பக்கம் எவ்வளவு  பேரால் விருப்பத்துடன் பார்க்கப்பபடுகின்றது என்று சொல்லத் தெரியாது விட்டாலும், ஒரு சில உறவுகளாவது வந்து செல்வது மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது..வந்து போகும் அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள் பற் பல....எனக்கு தெரிந்த,அறிந்த விடையங்கள் என்று பகிரத் தொடங்கி இன்றுடன் ஓராண்டைப் பூர்த்தி செய்கிறது......எவ்வளவு பிரியோசனமாக இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியாது விட்டாலும் மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காது இரவாய்,பகலாய் என் பெரும்பாலான பொழுதை போக்கும் இடம் யாழ் ...அந்த வகையில்  மோகன் அண்ணாவுக்கும்,யாழுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்...

11666061_982461921815829_916301181684275

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தடைகள் வந்தாலும் விடாமல் தொடருங்கள் யாயினி...பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தடைகள் வந்தாலும் விடாமல் தொடருங்கள் யாயினி...பாராட்டுக்கள்

முடிந்தவரைக்கு தொடர்வேன்.வருகைக்கு மிக்க நன்றி ரதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா- ஸ்காபுரோ பிளவெர்ஸ் பார்க்கில் நீரில் மூழுகிய சாத்திய கூறுகளில் அகப்பட்ட இரு சிறுவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்டனர்.

11.25மணியளவில் சிறுவன் ஒருவன் சம்பந்த பட்ட சம்பவம் காரணமாக அவசரமருத்துவ சேவை பிரிவினர் அழைக்கப்பட்டனர். 10-வயதிற்கும் குறைந்த சிறுவன் ஒருவன் தண்ணீருக்குள் இருந்து வெளியே எடுக்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது பிள்ளை ஒரு 12வயதுடைய பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுவிரையப்பட்டுள்ளாள்.

இருவரும் வேகமான நீரோட்டத்தால் அடித்து செல்லப்பட்டதாக சாட்சியங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அடித்து செல்லப்படுவதை கண்ட உடன்பிறப்புகளின் உறவினர் அவர்களை காப்பாற்ற இறங்கியுள்ளார். ஆனால் இருவருக்கும் நிச்சல் தெரியாத காரணத்தால் உறவினரை கீழே தள்ளியுள்ளனர். தொடரந்து இருவரும் நீரில் மூழ்கியதை தான கண்டதாகவும் உறவினரான அலிசா பொறொமியோ கூறினார்.

சிறுவர்கள் நீருக்குள் மூழ்குவதை கண்ட மற்றொரு சாட்சி சத்தமிட்டு உதவி கோரியுள்ளார்.
பின்னர் பையனும் பெண்ணும் நீருக்குள் இருந்து வெளியே எடுக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.

பெண் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் சிறுவன் ஆபத்தை தாண்டிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

girl

girl1

girl2

 

www.canadamirror.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தமிழ் மக்கள் மீது திணிக்க திட்டமிட்டிருக்கும் உள்ளக விசாரணையை கண்டித்து அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி இனப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணை மூலம் நீதி வேண்டி தமிழீழ தாயகம், தமிழகம், புலம் பெயர்ந்து வாழும் தேசங்கள் ஆகிய அனைத்து இடங்களை சேர்ந்த தமிழ் மக்களும் ஒன்றாக ஓரணியில் ஒருமித்த குரலில் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.

இந்த நூற்றாண்டின் மிகக் கொடிய இனப்படுகொலை அரங்கேறி 6 ஆண்டுகளாகியும் எம் ஈழமண்ணில் நடந்தது ஒரு கொடிய இனப்படுகொலை என சொல்ல முன்வராத சர்வதேசத்திடம் நீதி வேண்டி உலகத் தமிழினம் உலகெங்கும் இருந்தும் குரல் கொடுத்து போராடி வரும் காலகட்டத்தில் ஐ. நா. வின் முன்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் நாள் ஐரோப்பா வாழ் தமிழ் உறவுகளும் மற்றும் உலகின் பல பாகங்களில் இருக்கும் உறவுகளும் ஜெனீவாவில் ஐ. நா. முன்றலில் முருகதாசன் திடல் நோக்கி பேரணியாக அணி திரள இருக்கும் எழுச்சிக் நிகழ்வுக்கு வலுச் சேர்க்கும் முகமாக கனடா வாழ் தமிழ் மக்களும் சம காலத்தில் அதே நாளில் ரொறொன்ரோவில் அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக நீதி வேண்டி மாபெரும் அணியாக திரண்டு எழுந்து போராட உள்ளார்கள்.

இந்த பேரணியில் கனடா வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் கனடியத் தமிழர் சமூகம் மாணவர் சமூகமுமாக அணி திரண்டு இணைந்து கொண்டு நீதியை வேண்டி போராட அணி திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

இடம்: 360 University Avenue (In front of U.S Consulate)

திகதி: September 21 – திங்கள் கிழமை

நேரம்: மாலை 3 மணியிலிருந்து 7 மணி வரை

– கனடியத் தமிழர் தேசிய அவை –
மேலதிக தொடர்புகளுக்கு :416.830.7703

 

Tamils toronto

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 19ம் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை காலை சூர்யோற்சவம் நடைபெற்றது.

11954789_1171709452844410_4396695284574011942269_1171708262844529_80553829912011

11999848_1171708259511196_65947383492316

11953583_1171708362844519_53093863526169

11954608_1171709676177721_44365406962140

11156334_1171709132844442_13558380529205

11752458_1171709089511113_90545906281470

 

11875022_1171708272844528_74759090310569

11225441_1171708976177791_79231110129543

 

 

 

 

 

 

 

11872170_1171440536204635_55887147729118

11950353_1171440539537968_16507671805514

 

11947801_1171440532871302_81124687901957

 

11947971_1171440636204625_53425617733708

 

11923342_1171440666204622_89992808294979

11930805_1171440662871289_33411530841317

 

11209353_1171440722871283_47151035604371

 

11220143_1171440792871276_81724368807844

11950293_1171440756204613_14012915907857

 

11170297_1171440832871272_55307953683646

 

11947764_1171440836204605_60669951963703

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

60 வயது 'மிஸ்டர் பீன்' கொண்டாடிய 25வது பிறந்தநாள்! 

கலகலப்பான தோற்றம், பார்த்தாலே சிரிப்பு வரும் சைகைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே கவரும் கதாபாத்திரம் தான் மிஸ்டர் பீன். கடந்த வெள்ளிக்கிழமையோடு மிஸ்டர் பீன் கதாப்பாத்திரம் உருவாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை வித்தியாசமான முறையில் கொண்டாடினார் 60வது வயதான ரோவன் அட்கின்சன்.

 

11218891_987185681340222_507109852220056

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை  வணக்கத்தோடு.....இன்று கனடாவில் தொழிளாளர் தின விடுமுறை நாள்..அனைவருக்கும்  தொழிளாளர் தின விடுமுறை நாள் வாழ்த்துக்கள்!!தொழிளார்களுக்காக பாடுபடும் உறவுகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்..

labor-day-2014-in-canada-2.jpg

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஈழத்தின் ஈடிணையற்ற வயலின் மேதை உ.இராதாகிருஷ்ணன் வயலின் கச்சேரி மேடையிலேயே மாரடைப்பினால் மரணம்...

11737940_1171995766149112_21323501676082

ஈழத்தின் ஈடிணையற்ற வயலின் மேதை உருத்திரபதி இராதாகிருஷ்ணன் அவர்கள் நல்லைக்கந்தன் திருவடியில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

ஞாயிற்றுக்கிழமை (06.09.2015) மாலை 6.45 மணியளவில் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் தெய்வீக இசையரங்கின் 19ஆம் நாள் நிகழ்வில் அவரது வயலின் இசைக்கச்சேரி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அரங்கில் அவரது மகள் திருமதி சைந்தவி நிசாகரன் உடன் வயலின் வாசித்துக்கொண்டிருந்தார். முதலாவது உருப்படியாக மல்லாரியை வாசித்துக்கொண்டிருந்த போது திடீரென நினைவிழந்த அவர் உடனடியாக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் காலமாகி விட்டதை மருத்துவர்கள் அங்கே உறுதிசெய்தனர்.

இவரது மறைவினால் ஏற்பட்டிருக்கும் இடைவெளி மிகவும் பெரியது. அதனை எளிதில் நிவர்த்தி செய்துவிட முடியாது.

ஈழத்தின் செவ்விசை வரலாற்றில் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளிற்கும் மேலாகப் பக்கவாத்திய, தனியிசைக் கலைஞராகப் பணியாற்றி இரண்டாயிரத்து ஐநூறிற்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்ட மாபெரும் வயலின் கலைஞராக விளங்குபவர் இசைஞானதிலகம் உ.இராதாகிருஷ்ணன்.

அமரர் உருத்திராபதி - திருமதி தையலாம்பாள் தம்பதியரின் மகனாக 27.06.1943இல் இணுவில் என்னும் கலையெழில் சூழ்ந்த சிற்றூரில் இவர் பிறந்தார். இணுவில் மஹாஜனாக் கல்லூரியிலும் யாழ்.பரமேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்ற இவர் பல்துறைக் கலைஞராக விளங்கிய தனது தந்தையிடமே குரலிசையையும் விரலிசையையும் கற்றுக்கொண்டார்.

சிறு வயதிலிருந்து வயலின் இசையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த இவர் நாதஸ்வரக் கலையிலும் தேர்ச்சி கண்டார். இசையையே தொழிலாகக் கொண்ட இவரது தந்தை மற்றும் உறவினர்களின் வழிகாட்டுதல்களால் இசை ஆளுமையும் ஆற்றுகைத்திறனும் கொண்ட முழுநேர வயலின் கலைஞராகச் சிறு வயதிலேயே உருவாக்கப்பட்டார்.

அக்காலத்தில் இசைச் சொற்பொழிவு வல்லவர்களாக விளங்கிய தமிழறிஞர் கணேசசுந்தரம், லயமேதை மணிபாகவதர் போன்றோரது நிகழ்வுகளிலும் திருமுறையிசை அரங்குகளிலும் கண்ணன் மெல்லிசைக் குழுவில், பாடகர் கிருஷ்ணமூர்த்தி பக்திப்பாடல் கச்சேரிகளிலும் சிறப்புறத் தனது வயலின் இசையை வழங்கிவந்தார்.

எனினும் தனது இசையறிவை மேலும் வளர்த்துக்கொள்ளும் நோக்கோடு 1968இல் தமிழகம் சென்று வயலின் மேதை பரூர் எம்.எஸ்.அனந்தராமன் அவர்களிடம் வயலின் வாசிப்பு முறையில் கையாளப்பட வேண்டிய நுட்பங்களை இரண்டு ஆண்டுகள் கற்று நாடுதிரும்பித் தன் பணியைத் தொடர்ந்தார். அதன்பின் மீண்டும் 1972இல் தமிழகம் சென்று அனந்தராமன் அவர்களிடம் வயலினையும் தஞ்சாவூர் எம்.தியாகராஜன் அவர்களிடம் குரலிசையையும் சில ஆண்டுகள் கற்றுக்கொண்டார்.

இக்காலத்தில் தமிழகத்தில் நடைபெற்ற பல இசை விழாக்களிலும் ஈழத்தின் பெயர் சொல்லும் கலைஞராக சிறப்புற்று விளங்கினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அடையார் இசைக் கல்லூரி, சென்னைத் தமிழிசைச் சங்கம், திருவையாறு, கும்பகோணம், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் நடைபெற்ற பல இசைவிழாக்களில் தனது தனித்துவத்தை நிலைநாட்டினார்.

இவ்வாறு வரன் முறையான கற்றலும் மரபு தவறாத இசை அரங்க அனுபவமும் கொண்ட தன்னிகரற்ற வயலின் மேதையாக ஈழத்தில் காலடி பதித்தார்.

தனியிசைக் கச்சேரிகளை வழங்குவதிலும் தனித்துவமான பாணிகள் கொண்ட பாடகர்களிற்கு அவர்களின் பலம், பலவீனங்களை உணர்ந்து பக்கவாத்திய அனுசரணை வழங்குவதிலும் வல்லவராக விளங்கிய இவர் இலங்கையின் அனைத்துப் பாகங்களிற்கும் சென்று தனது இசை நிகழ்வுகளை வழங்கியவர்.

ஈழத்தின் தலைசிறந்த பாடகர்களாக விளங்கிய அனைவராலும் விரும்பப்பட்டு துணையிசையாளராக அழைக்கப்பட்ட இவர் தமிழகத்திலிருந்து வருகை தந்த பாடகர்களான சித்தூர் சுப்பிரமணியபிள்ளை, தஞ்சாவூர் ரி.எம்.தியாகராஜன், தஞ்சாவூர் எஸ்.கல்யாணராமன், மதுரை சோமசுந்தரம், மஹாராஜபுரம் சந்தானம், எஸ்.இராசசேகரன், ஜெயா விஜயா சகோதரர்கள், காயத்திரி கிரிஷ், அருட்சகோதரி மாக்கிரட் பஸ்ரின் போன்றோரது இசை அரங்குகளையும் தனது இசைத்திறனால் அழகு செய்தவர்.

இவ்வாறு மிகச் சிறந்த ஆற்றுகையாளராக ஈழத்தின் இசை வரலாற்றில் பல ஆண்டுகளாகத் தடம் பதித்து வரும் இவர் ஏராளமான மாணவர்களை உருவாக்கிய ஒப்பற்ற வயலின் ஆசிரியராகவும் இறுதி வரை பணியாற்றி வந்தார்.

தந்தையிடமும் எம்.எஸ். ஆனந்தராமன், ரி.எம். தியாகராஜன் போன்றோரிடமும் கற்ற கீர்த்தனைகளை, அமைப்பு மாறாமலும் அவற்றின் உயிர் நாடியாக விளங்கும் சங்கதிகளைச் சிறிதளவு கூட மாற்றாமலும் இன்றுவரை வாசிக்கும் நினைவாற்றலும் பாடாந்தர ஒழுக்கமும் கொண்ட இவரிடம் ஈழத்தின் முன்னணி நாதஸ்வரக் கலைஞர்கள் பலர் நுட்பமான கீர்த்தனைகளைத் தெரிவு செய்து கற்று வந்துள்ளனர். இவர்களுள் நாதஸ்வரமேதை வீ.கே.பஞ்சமூர்த்தி அவர்கள் முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்.பல்கலைக்கழக இசைத்துறையில் வருகை விரிவுரையாளராகவும் பரீட்சகராகவும் பல ஆண்டுகள் பணியாற்றிய இவர் பல்லவி, மல்லாரி போன்ற இசை உருப்படிகளையும் லயக் கணக்குவழக்குக் கோர்வைகளையும் புதிதாக உருவாக்குவதிலும் வல்லவராக விளங்கி வருகின்றார்.

லயவேலைப்பாடுகள் நிறைந்த அரங்காக உருவாக்கப்படும் மிருதங்க, நடன அரங்கேற்றங்களிலும் வயலினிசை வழங்கி வரும் இவரது தனியிசைக் கச்சேரி இறுவட்டுக்கள் “கானாம்ருதம்” என்னும் பெயரில் மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

அத்துடன் ஏழு பாகங்களாக வெளியிடப்பட்ட சங்கீதபூஷணம் பொன்.சுந்தரலிங்கத்தின் திருமுறையிசை ஒலிப்பதிவிலும் வயலினிசை வழங்கியிருக்கும் இவர் மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து,கனடா, யேர்மன், டென்மார்க், நோர்வே போன்ற வெளிநாடுகளிலும் தனது இசைக் கச்சேரிகளை வழங்கியுள்ளார்.

ஈழத்தின் இசை வரலாற்றில் சரித்திர நாயகனாக விளங்கிய இந்த மாபெரும் கலைஞனின் புகழ் என்றும் மறையாது. இசையோடு வாழ்ந்த அந்தக் கலைஞன் நல்லைக் கந்தனின் நிழலில் பக்கவாத்தியக் கலைஞர்கள் புடைசூழ்திருக்க அவர் மீட்டிய சுருதியும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்க இரசிகர்கள் முன்னிலையில் இறையடி சேர்ந்திருக்கின்றார்.

மேடையில் தான் சாகவேண்டும் என்று பல கலைஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இவரது இறப்பில் தான் அந்தப் புனிதத்தை நாம் நேரடியாகக் கண்டுள்ளோம்.

ஞானமும் மானமும் உள்ள கலைஞன் ஒருவனை ஈழதேசம் இன்று இழந்து விட்டது.

அவர் போல் கலைஞனை இவ்வுலகில் காண்பது அரிது.

அவர் புகழ் உலகெங்கும் பரவவேண்டும்.

அவர் இசை உலகெங்கும் கேட்கட்டும்.

அவரது ஆன்மா சாந்தி பெற நல்லையம்பதியானை வேண்டுகின்றேன்.

த.றொபேட்,
யாழ்ப்பாணம்.
06.09.2015

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

11887854_10153080927883354_4351542338214

அர்ஜுன் அண்ணாவின் பொழுது போகுது திரியிலிருந்து..கொப்பி-பேஸ்ட்.......

http://www.yarl.com/forum3/topic/162755-பொழுது-போகுது/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் இன்றைய நாள் - 1999 செப்டம்பர் 7 ஆம் நாள் - இலங்கை இராணுவத்தினரால் தமிழீழத்தில் யாழ்ப்பாணம் செம்மணியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் அம்பலமான நாள்.
புதைக்கப்பட்ட உண்மைகள் மீண்டும் எழுந்து நீதிக்காக போராடும் காலமிதில் தமிழினப் படுகொலைகளின் தொடர்ச்சிகளை உலகம் அறியச் செய்வோம்
விதைத்தவை முளைக்கும். புதைக்கப்பட்ட நீதி மீண்டு எழும் காலம் எழுகை கொண்ட இனமே விடுதலையை வென்றெடுக்கும்!

 

11958051_10155872309640012_8716593012657

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

11951406_1172037342811621_62688977584576

11986937_1172037279478294_77432751618707

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.