Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

12011278_10153334105053801_8974413034410

யாழ் நல்லூரில் முன்னொரு காலத்தில் வைக்கப்பட்டு சிங்கள இராணுவத்தால் அழிக்கப்பட்ட தியாகி திலீபனின் நிழலுருவம்!

12039595_10153329813158801_1392244573335

காலத்தாலும் அழிக்கமுடியாதது.

Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பும், யோசிப்பும் 119: தமிழினியின் 'அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்...'

 

 

அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்.நிகழ்வுகளை விபரிக்கின்றது தமிழினி ஜெயக்குமாரனின் கவிதை. யுத்தத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தும் கவிதை. கவிதையின் ஆரம்பம் நன்றாக வந்திருக்கின்றது. கவிதையின் முதல் பகுதியே முழுக்கவிதையினதும் கூறு பொருளை நிர்ணயித்து விடுகிறது. 

கவிதை

'போருக்குப் புதல்வரைத் தந்த
தாயாக வானம்
அழுது கொண்டேயிருந்தது' 


என்று ஆரம்பமாகின்றது. அம்பகாமப்பெருங்காட்டில் யுத்தம் நடைபெறும் மழை பொழியும் இரவு. மழையை வானத்தாயின் அழுகையாக உவமையாக்கியிருக்கின்றார் கவிஞர்.  வானத்தாய் ஏன் அழுகின்றாள்? போருக்குத்தன் புதல்வர்களைத்தந்து விட்டதற்காகத்தான் அழுகின்றாள். யுத்தம் நடைபெறும் சமயம் கானகம் வெடியோசையால் அதிர்வுறுகின்றது. அவ்வதிர்வினால் ,மருண்ட யானைக்கூட்டங்கள் குடி பெயர்ந்தலைகின்றன. இடம் விட்டு இடம் மாறி நகரும் இருண்ட மேகங்களும் வெடியதிர்வுகளால் குடி பெயர்ந்தலையும் யானைக்கூட்டங்களாகக் கவிஞருக்குத்தென்படுகின்றன. இங்கு யானைக்கூட்டங்களின் இடப்பெயர்வினை வெறும் உவமையாகவும் கருதலாம். அத்துடன் உண்மையாகவே அவ்விதம் நடைபெறும் யுத்தத்தினால் யானைக்கூட்டங்கள் இடம் பெறுவதாகவும், அவ்விதமாக அவை இடம் பெயர்வதைப்போல் இடம் பெயரும் மேகக்கூட்டங்கள் உள்ளதாகவும் கவிஞர் கருதுவதாகவும் கருதலாம். மழை பொழியும் யுத்தம் நடக்கும் இருண்ட இரவு அச்சத்தினைத்தருவது. அந்த இரவானது அம்பகாமப்பெருங்காட்டில் நடைபெறும் யுத்தத்தின் கோரத்தை வெளிப்படுத்துவது. ஏற்கனவே அந்த இரவானது பகலை விழுங்கித்தீர்த்திருக்கின்றது. இருந்தும் அதன் பசி அடங்கவில்லை. யுத்தத்தின் பேரொலியானது பகலை விழுங்கித்தீர்த்த இரவின் கர்ஜனையாகப் பயமுறுத்துகிறது கவிஞரை. 
மேலும் 'காதலுறச் செய்யும் / கானகத்தின் வனப்பை / கடைவாயில் செருகிய / வெற்றிலைக் குதப்பலாக / சப்பிக்கொண்டிருந்தது / 'யுத்தம்.

கவிதையின் இந்த முதற் பகுதியினைப்படிக்கும்போதே சங்ககாலக்கவிதையொன்றின் தாக்கம் பலமாகவே இருப்பதை உணர முடிகின்றது. சங்கக்கவிதைகளில் இயற்கையாக மையமாக வைத்தே, ஐம்பெருந்திணைகளை மையமாக வைத்தே கவிதைகள் பின்னப்பட்டிருக்கும். அவ்விதமானதோர் உணர்வே மேற்படி கவிதையின் ஆரம்பப்பகுதியை வாசிக்கும்போதெழுகின்றது.  அம்பகாமப்பெருங்காட்டை மையமாக வைத்தே கவிதை பின்னப்பட்டிருக்கின்றது.

மேலும் தமிழினியின் மொழி அவரது எழுத்தாற்றலை வெளிப்படுத்துகிறது. மரபுக்கவிதையின் அம்சங்களான எதுகை, மோனை போன்றவற்றையும் சீர்களில் அளவாகப்பாவித்திருக்கின்றார். உதாரணத்துக்கு மோனைகளாக போருக்கு / புதல்வரை, தந்த / தாயாக, பகலை / பயங்கரமாயிருந்தது, பெருங்காட்டின் / போர்க்களத்தில் போன்றவற்றைக்குறிப்பிடலாம். எதுகைகளாக வெடியதிர்வுகளின் / குடி பெயர்ந்தலையும், இருண்ட / மருண்டு போன்றவற்றைக்குறிப்பிடலாம். 

இவையெல்லாம் சேர்ந்துதான் கவிதை வரிகளைக் கவித்துவமுள்ளவையாக மாற்றுகின்றன.

அடுத்துவரும் வரிகள் கவிதையின் முக்கியமான வரிகள். அவை:

மீளாப் பயணம் சென்ற தோழி
விடைபெறக் கை பற்றி
திணித்துச் சென்ற கடதாசி
செய்தி சொன்னது..
காலமாவதற்காக காத்திருக்கும்
அம்மாவின் ஆத்மா
கடைக் குட்டியவளின்
கையாலே ஒரு துளி
உயிர்த் தண்ணிக்காகத்
துடிக்கிறதாம்.


போராளியான தோழியோ போர்க்களத்தில் மீளாப்பயணம் சென்று விட்டாள். அதற்கு முன்னர் அவள் விடைபெறுகையில் தன் தோழியான கவிஞரிடம் கடிதமொன்றினைத்தந்து விட்டே செல்கின்றாள். மரணப்படுக்கையில் கிடக்கும் அவளது தோழியின் தாயாரைப்பற்றிய கடிதமது. அத்தாயின் கடைக்குட்டியான மீளாப்பயணம் சென்றுவிட்ட தோழியின் கையால் ஒரு துளித்தண்ணீருக்காகத்துடிக்கிறது அந்தத்தாயின் மனது. அதனைத்தான் விபரிக்கின்றது அந்தக்கடிதம். அந்தத்துளித்தண்ணீரைக் கவிஞர் 'உயிர்த்தண்ணி' என்று கூறுகின்றார். ஏனென்றால் உயிர் போகக்கிடக்கும் அந்தத்தாயின் உயிர் அதற்காகவே, அந்தத்துளித்தண்ணீருக்காகவே துடிப்பதால்.'உயிர்த்தண்ணி'யாகின்றது.

போருக்குத்தன் புதல்வியைத்தந்த அன்னை அவள். இவளைப்போன்ற அன்னையர் பலர். அவர்களைப்பற்றித்தான் கவிதை கூறப்போகின்றது என்பதற்காகவே போலும் ஆரம்பத்திலேயே கவிஞர் 'போருக்குப் புதல்வரைத் தந்த / தாயாக வானம் /அழுது கொண்டேயிருந்தது' என்று குறிப்பாகக்கூறினார்போலும். இவ்விதமாகக்கவிதையின் பிரதான கூறுபொருளினை ஆரம்பத்திலேயே குறிப்பாகக்கவிதை கூறி நிற்பதால் அதுவே கவிதையின் சிறப்புமிகு அம்சங்களிலொன்றாக ஆகிவிடுகின்றது.

அதற்குப்பின்னரான கவிதையின் பகுதிகள் கவிஞரின் தோழியின் இழப்பு ஏற்படுத்திய உணர்வுகளை, போர் பற்றிய கவிஞரின் விமர்சனத்தை எடுத்தியம்புகின்றன.

கவிஞர் கவிதைக்கு எந்தவிதத்தலைப்புமிட்டிருக்கவில்லை. ஆனால் கவிதை வரிகளிலொன்றான 'அம்பகாமப் பெருங்காட்டின்
போர்க்களத்தில்.... ' என்பதையே கவிதையின் தலைப்பாகக்கூறலாமென்று எனக்குத்தோன்றுகிறது.

கவிதை: அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்.

- தமிழினி ஜெயக்குமாரன் -


போருக்குப் புதல்வரைத் தந்த
தாயாக வானம்
அழுது கொண்டேயிருந்தது.
வெடியதிர்வுகளின் பேரோசைகளால
யானைக் கூட்டங்களாக
இருண்ட முகில்களும் கூட
மருண்டு போய்க் கிடந்தன.
பகலை விழுங்கித் தீர்த்திருந்த
இரவின் கர்ஜனை
பயங்கரமாயிருந்தது
அம்பகாமப் பெருங்காட்டின்
போர்க்களத்தில்.

காதலுறச் செய்யும்
கானகத்தின் வனப்பை
கடைவாயில் செருகிய
வெற்றிலைக் குதப்பலாக
சப்பிக்கொண்டிருந்தது
யுத்தம்.

மீளாப் பயணம் சென்ற தோழி
விடைபெறக் கை பற்றி
திணித்துச் சென்ற கடதாசி
செய்தி சொன்னது..
காலமாவதற்காக காத்திருக்கும்
அம்மாவின் ஆத்மா
கடைக் குட்டியவளின்
கையாலே ஒரு துளி
உயிர்த் தண்ணிக்காகத்
துடிக்கிறதாம்.

எவருக்கும் தெரியாமல்
என்னிடத்தில் குமுறியவள்
விட்டுச் சென்ற
கண்ணீர்க் கடலின்
நெருப்பலைகளில்
நித்தமும்
கருகிக் கரைகிறது
நெஞ்சம்.

தனி மனித
உணர்ச்சிகளின் மீதேறி
எப்போதும்
உழுதபடியே செல்கின்றன
போரின்
நியாயச் சக்கரங்கள்.

அக்கணத்தில்
பிய்த்தெறியப்பட்டிருந்த
பச்சை மரங்களின்
இரத்த வீச்சத்தை
நுகர்ந்த வல்லுாறுகளின்
நீண்ட நாக்குகளில்
உமிழ்ந்து
பெருகுகிறது
வெற்றிப் பேராசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செப்டம்பர் 20: பெண்கள் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் அன்னிபெசன்ட் அம்மையார் நினைவு தினம் இன்று.

 

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கனடாவில் இன்று இலை உதிர் கால ஆரம்பம்.image.jpg

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.இந்துக்கல்லூரிக்கு 3மாடிக்கட்டடம் மற்றும் மலசலகூட வசதிகளை
அமைத்துக் கொடுக்க 12மில்லியன் ரூபா நிதியை ஒதுக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராச் காரியவசம் தெரிவித்தார்.

இன்று யாழ்.இந்துக்கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

யாழ்.இந்துக்கல்லூரி மிகச் சிறந்த பாடசாலையாக விளங்குகின்றது. மாணவர்கள் கல்வி கற்பதற்கு போதிய இடவசதியில்லை. மற்றும் மலசலகூடவசதிகள் போதியளவு இல்லை போன்ற விடயங்கள் தொடர்பில் பாடசாலை சமூகத்தினர் என்னிடம் தெரிவித்துள்ளனர்.அவர்களின் கருத்தை உள்வாங்கி யாழ்.இந்துக்கல்லூரிக்கு 10மில்லியன் ரூபா செலவில் 3மாடிக்கட்டடமும்,2மில்லியன் ரூபா செலவில் மலசலகூடவசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையிலே உயர்தரத்தில் கணிதத் துறையில் முதலிடம் பிடித்த பாடசாலையாக யாழ்.இந்து விளங்குவது பாராட்டத்தக்க விடயமாகும்.

எனது தந்தையின் வழியில் இருந்து தமிழ் மக்களின் நலன் முக்கியப்படுத்தப்பட்டு பேணப்பட்டு வந்தது.அதேபோல நானும் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு காத்திரமாக நடந்து கொள்வேன்.

கல்வி அமைச்சின் கொள்கை வேறுபாடின்றி அனைவருக்குமே கல்வி என்ற நிலைப்பாடு,ஜனாதிபதி,பிரதமர் கூறியிருக்கின்றனர் இலங்கையில் வேறுபாடின்றி அனைவருக்கும் கல்வியை சமமாக புகட்ட வேண்டும்.இலங்கையின் எதிர்காலம் கல்வியிலேயே தங்கியுள்ளது என்பது முக்கியவிடயமாகும்.

எனவே தமிழ் மக்களின் நலனுக்காகவும்,அவர்களின் எதிர்கால வாழ்வுக்காகவும் அயராது பாடுபடுவேன் என்றார்.

 

12046806_1051630981538481_57574372658012

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் திலீபன் அவர்களது 28ம் ஆண்டு நினைவு தினம் இன்று!!!

 

12063889_536490516498489_571788694674032

11947632_1641386816139403_60964829400770

 

12036882_481468862033999_407393377078271

 

 

திலீபன்: உயிரை ஆயுதமாக்கியவன்: குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-
 
திலீபன்: உயிரை ஆயுதமாக்கியவன்: குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-
 
பசி
 
எரியும் அனலில் 
தேகத்தை உருக்கி
உயிரால் பெருங்கனவை எழுதிய 
ஒரு பறவை
அலைகிறது தீராத் தாகத்தில் 
 
ஒரு சொட்டு நீரில் உறைந்த 
நிராகரிக்கப்பட்ட ஆகுதி
வேள்வித் தீயென மூழ்கிறது
 
சுருள மறுத்தது குரல்
அலைகளின் நடுவில் உருகியது ஒளி
 
உறங்கமற்ற விழியில் பெருந்தீ
இறுதிப் புன்னகையில்
உடைந்தது அசோகச் சக்கரம்
 
எந்தப் பெருமழையாலும்
தணிக்க முடியாத அனலை
இன்னமும் சுமந்து திரிபவனுக்காய்
ஒருநாள்
எழுமொரு நினைவுதூபி 
வந்தமரும் ஒரு பறவை
நிறைந்திருக்கும் பூக்கள் 
 
தணியும் அவன் பசி. 
cleardot.gif

 

 
தீபச்செல்வன்
25.09.2015

 



இன்று செப்டம்பர் 26. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய போராளிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவுநாள். ஒவ்வொரு ஆண்டும் திலீபன் தியாகச் சாவடைந்த நாளை நினைவுநாள் தவிர்க்க முடியாது நினைவுக்கு வருகிறது. சின்ன வயதில் இடம்பெயர்ந்து வீடுகளே இல்லாத நாட்களில்கூட திலீபனின் தியாகத்தை நினைவுகூர்ந்தோம். 1995இற்கு முன்பாக ஒரு வருடத்தில், அதுவும் ஒரு நாவற்பழக்காலம் வீட்டின் முன்பாக உள்ள நாவல் மரத்தின் கீழ் எங்கேயோ வாங்கி வந்த திலீபனின் படத்தை கொண்டு வந்து தீபம் ஏற்றிய நினைவு இப்பொழுதும் அந்த நாவல்மரத்தின் கீழிருக்கிறது. 

இடம்பெயர்ந்து ஸ்கந்தபுரத்தில் இருந்த பொழுது எங்களுக்கு வசிக்க வீடே இருக்கவில்லை. ஒரு மர நிழலில் வாழ்ந்துகொண்டிருந்தோம். அப்பொழுதும் திலீபனின் நினைவுநாள் வந்தது. ஒரு துணியால் சிறிய கூடாரம் அமைத்து அதற்குள் திலீபனின் திருவுருவப்படத்தை வைத்து அதற்கு பன்னிரண்டு நாட்களாக தீபம் ஏற்கிக் கொண்டிருந்தேன். சிறுவர்களாக இருந்த போது திலீபனின் நினைவுநாட்களில் அவரைக் குறித்த நாகடங்கள், பேச்சுக்கள், கவிதைகள் என்று நிகழ்த்தி அவரது தியாகச் சாவை நினைகூர்ந்தோம். 

பாடசாலையில் திலீபன் நினைவு நாட்களில் பிரதான வாசலில் அவரது நினைவுநாட்களைக் குறித்த பதாகை ஒன்றை நடுவோம். காலை வணக்க நிகழ்வில் திலீபனுக்காக மலர் தூவி, தீபம் ஏற்றி வணங்குவோம். புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னிப் பெருநிலம் இருந்த காலத்தில் திலீபனின் தியாகம் வன்னி முழுவதும் நினைவகூரப்படும். சமாதான காலத்தில் யாழ்ப்பாணம் போன்ற அரச கட்டுப்பாட்டு இடங்களிலும் அவரை நினைவுகூறுவார்கள். 
அகிம்சை என்பது என்ன என்பதை உலகத்திற்கு எடுத்துரைத்தவர் திலீபன். இந்தியாவிற்கு அகிம்சைப் போராட்டத்தின் வழியாக காந்தி விடுதலையைப் பெற்றுக் கொடுத்தார் என்று மகாத்மா காந்தி காந்தியை அழைப்பதுடன் காந்தி தேசம் என இந்தியாவை அழைக்கிறார்கள். அதே இந்தியாவுக்க எதிராகவே திலீபன் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கை வந்த இந்திய அமைதிப்படையினரிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து தியாகி திலீபன் உண்ணா விரதத்தை மேற்கொண்டார். 

ஈழத்தின் யாழ்ப்பாணம் ஊரெழுவைச் சேர்ந்த திலீபன்  நவம்பர் 27, 1963 அன்று பிறந்தார். பார்த்திபன் இராசையா என்ற இயற்பெயரை உடைய திலீபன் புலிகளின் ஆரம்பால முக்கிய உறுப்பினராவார். 1987 செப்டம்பர் 15ஆம் திகதி தனது உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்து 1987 செப்டம்பர் 26 அன்று காலை 10.48 மணிக்கு மரணத்தை தழுவினார். யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபனுக்கு மரணத்தின் பின்னர், புலிகள் லெப்டினன் கேணல் திலீபன் எனும் நிலையை வழங்கியிருந்தனர். 

திலீபனின் ஐந்து அம்சக் கோரிக்கைகள்: 

1.மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2.சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3.அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4.ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5.பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

அகிம்சைப் போராட்டத்தின் மூலம் சுதந்திரத்தைப் பெற்றாக கருதப்படும் இந்திய தேசம் திலீபனின் அகிம்சைப் போராட்டத்தை மதிக்கவில்லை. பன்னிரண்டு நாட்கள் ஒரு துளி நீர்கூட அருந்தாமல் உண்ணவிரதம் இருந்தார் திலீபன். அகிம்சை என்பது மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படாமல் அல்லது மற்றவர்களை தண்டிக்காமல் தாம்மை வருத்தி முன்னெடுக்கும் ஒரு போராட்டம். காந்தி இந்த அறவழிப் போராட்டத்தையே இந்திய சுகந்தி விடுதலையை வென்றெடுக்கப் பயன்படுத்தினார்.

ஆனால் இந்திய விடுதலைப் போராளி பகத்சிங்கிற்கு தூக்குத் தண்டணையை ஆங்கிலேயர்கள் வழங்க முடிவுசெய்ய பொழுது தண்டனைக்கான பத்திரத்தில் காந்தி ஒப்பமிட்டதாகவும் அகிம்சையை பின்பற்றுபவர் எப்படி இம்சையை ஆதரிப்பது எனவும் கேள்வி எழுப்படுகிறது. திலீபனின் உண்ணா விரத அறப் போராட்டத்திலும் இந்தியா திலீபனுக்கு மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் இம்சையையே பரிசளித்தது. உலகத்தில் நடந்த அகிம்சைப் போராட்டங்களில் திலீபனின் போராட்டம் ஒரு உன்னதப் போராட்டமாக கருதப்படுகிறது.  

இந்த உலகத்தில் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எண்ணிவிட முடியாது. பல்வேறு தேவைகளுக்காக பலரும் உண்ணா விரதம் இருக்கிறார்கள். அலுவலகத்தில் சம்பள உயர்வு, கட்சியில் பதவி கோரி, அடிப்படைத் தேவைகளை கேட்டு என்று பல்வேறு காரணங்களுக்காக பலரும் உண்ணா விரத்தில் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியலில் உண்ணா விரதம் என்பது ஒரு தந்திரம். நான் உங்களுக்காக உண்ணாவிரதம் இருந்தேன் என்று சொல்லிக் கொண்டு பலரும் வாக்குகளை கேட்க வருவதைப் பார்த்திருக்கிறோம். பெரும்பாலான அரசியல்வாதிகளின் பின்னால் உண்ணா விரதத்தின் வரலாறு இருக்கும். 

ஆனால் அது போலியான உண்ணா விரதம். பலர் உணர்ச்சி வசப்பட்டு முன்பின் யோசிக்காமல் உண்ணா விரத்திற்கும் செல்வதும் பின்னர்  உண்ண விரம் இருந்து சில மணிநேரங்களில் எப்படியாவது அதை கைவிட்டு பழரசம் அருந்துகிறார்கள். இவர்கள் யாரும் உண்ணவிரதம் இருந்து உயிரை துறக்கவில்லை. 

பான்கிமூன் நியமித்த மனித உரிமைகள் தொடர்பான நிபுணர் குழுவை கலைக்க வேண்டும் என்ற ஐ.நாவுக்கு எதிராக விமல் வீரவன்ச உண்ணா விரத நாடகம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். திலீபனுடைய உண்ணாவிரதத்தையும், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவினுடைய உண்ணாவிரதத்தையும் ஒப்பிட்டு சிங்களக்கவிஞரும் எழுத்தாளருமான புலஸ்தி இப்படி எழுதியிருக்கிறார். 

“இலங்கையில் இதுவரையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிரிழந்த ஒரே நபர் திலீபன் மட்டுமே. திலீபனின் உண்ணாவிரதமானது விளம்பரத்துக்காகச் செய்யப்பட்ட ஒன்றல்ல. ஆனால் விமலினுடையைது விளம்பரத்துக்கானது. திலீபன் மரணம் நிச்சயம் என்பதை முழுதாக ஏற்றுக் கொண்டு உண்ணாவிரதத்தில் இறங்கியவர். ஆனால் விமல் சாவை எதிர்பார்க்கவேயில்லை. திலீபன் உண்மையிலேயே விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் விமல், மஹிந்தவிடம் தானும் இருக்கிறேனெனக் காட்டிக் கொள்வதற்காக உண்ணாவிரதம் இருந்தார். திலீபனுக்கு சாவின் மூலமாக கைவிட்டுச் செல்ல ஏதுமில்லை. ஆனால் விமலுக்கு பணம், மாளிகைகள், வாகனங்கள், அரசியல் எனப் பல உண்டு. இந் நிலையில் அவர் உண்மையில் சாக விரும்புவாரா? திலீபனுக்கு உண்ணாவிரதமென்பது தனது அரசியல் எதிர்ப்பைக் காட்டும் ஒரு ஆயுதம். ஆனால் விமலுக்கு தனது வியாபாரத்தை விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஒரு நாடகம்.” 

திலீபன் அப்படி ஒரு முடிவை எடுத்தார் என்றால் அதற்கு அடிப்படையானது ஈழ மண்ணின் வரலாறும் நிலவரமும்தான். தனது தேசம் தொடர்பிலும் மக்களின் விடுதலை தொடர்பிலும் திலீபன் என்ற போராளியிடம் காலம் உருவாக்கிய மனோதிடம்hன் அவரை அத்தகையதொரு மரணப் போராட்டத்தை செய்யத் தூண்டியது. உண்ணா விரதப் போராட்டம் தொடர்பிலும் இந்திய அரசின் நிலைப்பாடு தொடர்பிலும் முழுமையான புரிதலுடன்தான் திலீபன் போராட்டத்தில் இறங்கினார். அதனால்தான் அகிம்சை தேசம் என்ற இந்தியவின் முகத்திரையை கிழித்து அதன் இம்சை முகத்தை திலீபனால் அம்பலப்படுத்த முடிந்தது. 

ஒரு காலத்தில் திலீபனின் நினைவுநாட்களை பெருமெடுப்பில் நினைவுகூர்ந்த ஈழ மண் இன்று மௌனித்துக் கிடக்கிறது. திலீபனுக்காக தமிழர் தேசத்தில் எழுப்பட்டிருந்த நினைவுத்தூபிகள் எiதையும் சிங்கள இராணுவத்தினர் விட்டு வைத்திருக்கவில்லை. ஏனெனில் திலீபன் என்ற குறியீடு வலிமை மிகுந்தது. அவரது போராட்ட வடிவம் இந்த உலகத்தை என்றும் கேள்விக்கு உள்ளாக்கியபடியிருக்கும். திலீபனின் சிலைகளுக்கும் படங்களுக்கும் தூபிகளுக்கும் அஞ்சிய இராணுவத்தினர் அவற்றை மெல்ல மெல்ல இரவோடு இரவாக அழித்து முடித்துவிட்டனர். திலீபனின் மனோ திடத்திலிருந்து வெளிப்பட்டவைதான் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுகந்திர தமிழீழம் மலரட்டும்” போன்ற கருத்துக்கள். நினைவுகளில் எழுப்பப்பட்ட திலீபனின் சிலைகளை படங்களை சித்திரத்தை யாராலும் அழிக்க முடியாது. திலீபன் தமிழ் மக்களிடத்தில் என்றும் மறக்க முடியாத ஒரு அற்புதப் போராளி.   

திலீபன் ஈழத் தமிழர்களின் ஒரு குறியீடு. திலீபனின் பசி என்பது மக்களின் பசி. திலீபனினை இன்றும் நாம் நினைவுகூரவேண்டியிருப்பதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன. திலீபன் அன்று முன் வைத்த கோரிக்கைகள் இன்றும் இந்திய அரசை நோக்கி மாத்திரமன்றி இலங்கை அரசை நோக்கியும் எழுகின்றன. இருப்பதாறு வருடங்கள் கடந்துவிட்டன. அன்று தொடங்கி இன்னமும் ஈழத் தமிழ்களுக்கு ஒரு தீர்வில்லை. 

இன்னமும் ஈழத் தமிழர்களின் நிலங்களில் சிங்களவர்கள் திட்டமிட்டுக் குடியேற்றப்படுகின்றனர். பலர் இன்னமும் சிறைகளில் தவிக்கின்றனர். அன்று ஊர்காவல்படைகள் இன்று இராணுவப்படைகளே தமிழர் தாயகத்தில் நிறைந்துவிட்டன. பொலிஸ் நிலையங்களும் பெருகிவிட்டன. அன்று திலீபன் முன்வைத்த பிரச்pசனைகள் இன்று உச்ச கட்டத்தை அடைந்துவிட்டன. 27 வருடங்கள் கடந்த பின்னரும் அகிம்சைக்கு தன்னை பலியிட்ட ஒரு ஈழப் போராளி திலீபனின் கோரிக்கைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. 27 வருடங்கள் கடந்த பின்னரும் திலீபனின் பசி இன்னமும் தீராவில்லை!

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

11947602_176918685972912_344213830144791

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி உங்கள் வீட்டு முற்றத்தில் அடிக்கடி இளைப்பாறிச் சென்றாலும் கதவைத் தட்டி நலம் விசாாிக்காமல் சென்று விடுவதற்கு மன்னிக்கவும். உங்கள் உற்சாகத்திற்கு வாழ்த்துக்கள்.பல நல்ல விடயங்களை எடுத்து வந்து பாிமாறுவதற்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி உங்கள் வீட்டு முற்றத்தில் அடிக்கடி இளைப்பாறிச் சென்றாலும் கதவைத் தட்டி நலம் விசாாிக்காமல் சென்று விடுவதற்கு மன்னிக்கவும். உங்கள் உற்சாகத்திற்கு வாழ்த்துக்கள்.பல நல்ல விடயங்களை எடுத்து வந்து பாிமாறுவதற்கு நன்றிகள்

அய்யய்யோ மன்னிப்பு எல்லாம் வேணாம் அக்கா...யாழ் உறவுகள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது  இந்தப் பக்கத்தையும் பார்த்து செல்கிறீர்கள் என்று அறிந்தால் மிகுந்த சந்தோசப்படுவேன்..வருகைக்கு நன்றியக்கா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா-சாதனை மிக்க லொட்டோ மக்ஸ் ஜக்பொட்டின் 60மில்லியன் டொலர்களிற்கான ரிக்கெட் ஒன்ராறியோவில் விற்பனையாகி உள்ளது. லொட்டோ மக்சின் வரலாற்றில் மிகப் பெரிய பரிசுத்தொகை இதுவாகும்.
இத்துடன் ஒரு மில்லியன் டொலர்களிற்கான 27 மக்ஸ்மில்லியன் பரிசுகளில் 15வென்றுள்ளன.
19-மக்ஸ்மில்லியன் ரிக்கெட்டுகள்–6ஒன்ராறியோவிலும், ஐந்து கியுபெக்கிலும், ஐந்து பிறைறீஸ் பகுதியிலும், மூன்று அட்லான்டிக் மாகாணங்களிலும் விற்கப்பட்டுள்ளன.

litto

 

http://www.canadamirror.com/canada/49623.html

lotto

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11224682_175410709463216_789211063530427

கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...

1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு
 
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அழகோவியம்'s photo.
 

இன்று அபூர்வ சந்திரகிரகணம்: இன்றுடன் உலகம் அழியாதாம்!

அபூர்வமான ஒரு சந்திர கிரகணம் நாளை ஏற்படவுள்ளதாக வானியல் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

30 வருடங்களுக்கு பின்னர், இப்படியான சந்திர கிரகணம் ஒன்று ஏற்படவுள்ளதாக நாஸா நிறுவனம் கூறியுள்ளது. இந்த சந்திர கிரகணம் இலங்கையிலும் தென்படும்.

நாளைய இந்த அபூர்வ சந்திர கிரகணத்துடன் பூமியும் அழிந்துவிடும் என்றும் அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் செய்திகள் கட்டுத் தீயாக பரவி வருகிறது.
ஆனால் அவ்வாறு எந்த அச்சமும் கொள்ளத் தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது இவ்வாண்டு ஏற்படும் இரண்டாவது சந்திர கிரணனமாகும்.

சந்திரன் முதலில் மிகவும் பிரகாசமான மற்றும் மிகப் பெரிதாக தெரிந்த பின்னரே மறைய ஆரம்பிக்கும்.

சாதாரண நாட்களில் தென்படும் சந்திரனை விட நாளை தென்படும் சந்திரன் 17 வீதம் பெரிதாக தென்படும் என்றும் 100 வீதம் பிரகாஷமாக இருக்கும் என்றும் நாஸா கூறியுள்ளது.

நாளை மறுதினம் கடல் அலையின் மட்டம் சற்று உயரக் கூடும் எனவும் அது பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.இந்துக்கல்லூரிக்கு 3மாடிக்கட்டடம் மற்றும் மலசலகூட வசதிகளை
அமைத்துக் கொடுக்க 12மில்லியன் ரூபா நிதியை ஒதுக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராச் காரியவசம் தெரிவித்தார்.

இன்று யாழ்.இந்துக்கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

யாழ்.இந்துக்கல்லூரி மிகச் சிறந்த பாடசாலையாக விளங்குகின்றது. மாணவர்கள் கல்வி கற்பதற்கு போதிய இடவசதியில்லை.
மற்றும் மலசலகூடவசதிகள் போதியளவு இல்லை போன்ற விடயங்கள் தொடர்பில் பாடசாலை சமூகத்தினர் என்னிடம் தெரிவித்துள்ளனர்.அவர்களின் கருத்தை உள்வாங்கி யாழ்.இந்துக்கல்லூரிக்கு 10மில்லியன் ரூபா செலவில் 3மாடிக்கட்டடமும்,2மில்லியன் ரூபா செலவில் மலசலகூடவசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையிலே உயர்தரத்தில் கணிதத் துறையில் முதலிடம் பிடித்த பாடசாலையாக யாழ்.இந்து விளங்குவது பாராட்டத்தக்க விடயமாகும்.

எனது தந்தையின் வழியில் இருந்து தமிழ் மக்களின் நலன் முக்கியப்படுத்தப்பட்டு பேணப்பட்டு வந்தது.அதேபோல நானும் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு காத்திரமாக நடந்து கொள்வேன்.

கல்வி அமைச்சின் கொள்கை வேறுபாடின்றி அனைவருக்குமே கல்வி என்ற நிலைப்பாடு,ஜனாதிபதி,பிரதமர் கூறியிருக்கின்றனர் இலங்கையில் வேறுபாடின்றி அனைவருக்கும் கல்வியை சமமாக புகட்ட வேண்டும்.இலங்கையின் எதிர்காலம் கல்வியிலேயே தங்கியுள்ளது என்பது முக்கியவிடயமாகும்.

எனவே தமிழ் மக்களின் நலனுக்காகவும்,அவர்களின் எதிர்கால வாழ்வுக்காகவும் அயராது பாடுபடுவேன் என்றார்.

 

 

 

கழிவறை வசதி இல்லாத பள்ளியில் படித்துவிட்டு ...
எதோ ஹர்வேர்டில் படித்த மாதிரி இங்கின சிலர் படம் காட்டிக்கொண்டு திரிவினம். 

எடுப்பு எடுக்கிறதிட்கு யாழ்ப்பான தமிழனை அடிக்க உலகில் ஆள் இல்லை.

படிச்சு ஆருக்கும் அறிவு வந்திருந்தால் .....?
பள்ளி இந்த நிலையில் இருந்து இருக்குமா 2015இல்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Ravi Nag's photo.

Let's learn something - 41 What is Super Moon Eclipse and How it happens after so many years.......இந்த வாரம் ஒன்றை கற்போம் - 41 சூப்பர் மூன் எக்ளிப்ஸ்

1900களில் இருந்து ஐந்து முறையே இந்த சூப்பர்மூன் + லூனார் எக்ளிப்ஸ் நடந்துள்ளது. நாளை இதை நீங்கள் கான மிஸ் செய்து விட்டால் இனிமேல் 2033 ஆம் ஆன்டு தான் நடைபெறும். இதனை எப்படி வெறும் கண்கள் அல்லது நாசாவின் லைவ் ஸ்ட்ரீம்காஸ்டில் காண்பது என்ற டீட்டெயிலை பார்பதற்க்கு முன் இது என்ன எப்படி இருக்கும் என்பதை பற்றி ஒரு குறிப்பேடு...

1. சூப்பர் மூன் என்பது புது முழு நிலா நாளை ஈக்குவினாக்ஸ்க்கு கீழே பூமிக்கு மிக அருகில் வரும் மூன் தான் சூப்பர் மூன். இது வழக்கத்தை விட 14% பெரிதாக காணப்படும்.

2. லூனார் எக்ளிப்ஸ் என்பது நிலா பூமிக்கு நேர் பின்புறம் அந்த நிழலுக்கு பின்பு செல்வதால் சிவப்பு கலரில் நிலா ஒளிரும்.

3, சூப்பர் மூன் + லுனார் எக்ளிப்ஸ் இந்த இரண்டும் ஒரு சேர நடைபெறுவது தான் சூப்பர்மூன் எக்ளிப்ஸ் என்பதாகும். கடைசியில் 33 வருஷத்துக்கு முன் 1982 ஆம் ஆண்டு நடந்த ஒன்று நாளை நடைபெறுகிறது. அமெரிக்கா / ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் வெறும் கண்களால் காண முடியும் மற்ற நாடுகள் அறிவியல் கோளரங்கள் வழியே இரவு 9:07 முதல் காண முடியும். அல்லது இந்த நாசா லைவ் ஸ்ட்ரீமில் காண முடியும் .......................http://www.nasa.gov/…/live-feed-of-sundays-supermoon-eclips… இந்த பக்கத்தில் நான் சொன்ன அத்தனை விஷயத்தையும் விளக்க வீடியோ மூலம் காணலாம் மிஸ் பண்ணிட்டா 2033 தான் பாக்க முடியும்.

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கழிவறை வசதி இல்லாத பள்ளியில் படித்துவிட்டு ...
எதோ ஹர்வேர்டில் படித்த மாதிரி இங்கின சிலர் படம் காட்டிக்கொண்டு திரிவினம். 

எடுப்பு எடுக்கிறதிட்கு யாழ்ப்பான தமிழனை அடிக்க உலகில் ஆள் இல்லை.

படிச்சு ஆருக்கும் அறிவு வந்திருந்தால் .....?
பள்ளி இந்த நிலையில் இருந்து இருக்குமா 2015இல்? 

உங்கள் வருகைக்கு நன்றி.......அதே நேரம் அவர்கள் என்ன செய்கிறார்களோ நமக்குத் தெரியாது..முக்கியமாக எனக்கு தெரியாது..பல தரப்பட்ட விடையங்களை கொண்டு வந்து போடுவது போலத் தான் இந்த செய்தியையும் பகிர்ந்தேன்.மற்றப்படி சொல்வதற்கு ஒன்றும் இல்ல.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கழிவறை வசதி இல்லாத பள்ளியில் படித்துவிட்டு ...
எதோ ஹர்வேர்டில் படித்த மாதிரி இங்கின சிலர் படம் காட்டிக்கொண்டு திரிவினம். 

எடுப்பு எடுக்கிறதிட்கு யாழ்ப்பான தமிழனை அடிக்க உலகில் ஆள் இல்லை.

படிச்சு ஆருக்கும் அறிவு வந்திருந்தால் .....?
பள்ளி இந்த நிலையில் இருந்து இருக்குமா 2015இல்? 

அப்படியெல்லாம் இல்லை மருதர்!

வாளிக் காலத்திலேயே... வாட்டர் சீல்.. மலசல கூடங்கள் அங்கே அமைக்கப்பட்டிருந்தன!:cool:

கழிவறை வசதி கேட்டதன் 'சூட்சுமம்' இது தான்...!

அழுகிற பிள்ளை தான் அதிகம் கவனிக்கப் படும் சாத்தியங்கள் அதிகம்!:mellow:

Edited by புங்கையூரன்
கூகிள் முழி பெயர்ப்பு..!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன புங்கைஊரன் நான் என்ன ஆப்ரிக்காவிலா பிறந்து வளர்ந்தேன்.
இந்து மாணவர்கள் மல சல பிரச்சனைக்கு காட்டுக்கு போனார்கள் என்றா சொல்கிறேன்.
உரிய முறையில் இல்லை ....
எதோ இருந்ததை வைத்து சமாளித்தோம் 

ஆனால் சிலர்  காட்டும் படம்தான் ...
எதோ கார்ட்வேர்ட் ரேஞ்சில் இருக்கும் 
அதுவே எனது சுட்டி காட்டல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 33 ஆண்டுகளிற்குப் பின்னர் தோன்றிய ஒரு விசேட சந்திரன்...... சூப்பர்மூன்

12033241_1631993543750101_52711320734540

 

 

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

12039363_10204040292881212_2233740454298

12032091_10204040292761209_5473088794025

12043036_10204040292561204_4067060824547

12075057_10204040292401200_1603435634747

காலை நான்கு மணியிலிருந்து சந்திரன் சிவப்பாகி பெரிதாகி பின் ஆறு மணிக்கு நான் எடுத்தபோது செம்மஞ்சளாகி ஏழு மணிக்குக் காணாமல் போய்விட்டான். 1964 ம் ஆண்டின் பின் இப்போதுதான் மறுபடியும் அப்படித் தெரிந்தானாம்.தகவல் மற்றும் படம்:- நிவேதா உதயன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

33 ஆண்டுகளுக்கு பின்னர் வானில் இரத்த நிலா தோன்றிய அதிசயம் - பிரமிப்பூட்டும் படங்கள்

12027559_1050718668302240_91986224920034

11221604_1050718601635580_75679140819473

12033188_1050718704968903_37449688508254

12047113_1050718734968900_48023020201780

12002444_1050718784968895_87834906283280

11116515_1050718831635557_41935094939670

12032834_1050718881635552_34045717969189

12080314_1050718941635546_35184046049643

12045555_1050718968302210_64316202939466

12046840_1050718998302207_65640318104863

12038219_1050719038302203_72199520880319

12065876_1050719078302199_19027563753582

12063656_1050719108302196_32738236044766

12072745_1050719134968860_57251296671671

12032938_1050719158302191_56440653519751

12063663_1050719174968856_33258295340606

12027576_1050719208302186_83993547274451

12019759_1050719224968851_60748378815375

11147180_1050719254968848_76064412481374

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி யாயினி. ஒவ்வொரு நாட்டிலும், எடுக்கப் பட்ட படங்கள் மனதை கொள்ளை கொள்ள வைத்தது.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2015யூலை1-ன் கணிப்பீட்டின் பிரகாரம் கனடாவில் முதல் தடவையாக சிறுவர்களை விட வயோதிபர்கள் அதிகமாக உள்ளனர் என தெரியவந்துள்ளது. பூச்சியத்திலிருந்து 14வயது வரையிலான சிறுவர்களைவிட 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயோதிபர்கள் அதிகமாக உள்ளனர்.
யூலை 1ந்திகதி 2015ல் கனடாவின் சனத்தொகை 35.9மில்லயன். இத்தொகை கடந்த வருடத்தைவிட 308,100அதிகம். இவர்களில் 5.8மில்லியன் அல்லது 16.1சதவிகிதம் வயோதிபர்கள். சிறுவர்கள் 16.0 என கூறப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை மாற்றம் கடந்த 20ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது.
கடந்த வருடம் நிகர் சர்வதேச குடிவரவு கனடிய சனத்தொகையின் 60.8சதவிகிதத்திற்கு பொறுப்பாக இருந்துள்ளது.
முந்தய வருடத்தில் சர்வதேச குடிவரவு நிகர் 27.7சதவிகிதத்தால் 187,400 ஆக குறைந்திருந்தது. இந்த எண்ணிக்கை 2002-2003லிருந்ததை விட மிக குறைந்த தொகையாகும் எனவும் கணிப்பீடு தெரிவிப்பதாக கூறப்படுகின்றது.

sen1

 

sen

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று உலக சிறுவர் தினம். இனி மேலாவது உலகில் சிறுவருக்கான துஸ்பிரயோகங்கள்,பாலியல் வன்முறைகள் குறைந்து அல்லது இல்லாததொரு சமுதாயம் உருவாக வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று உலக சிறுவர் தினம். இனி மேலாவது உலகில் சிறுவருக்கான துஸ்பிரயோகங்கள்,பாலியல் வன்முறைகள் குறைந்து அல்லது இல்லாததொரு சமுதாயம் உருவாக வேண்டும்.

தகவலுக்கு மிக்க நன்றி ரதி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சிறுவர் கால வாழ்வே சிதைக்கப்படும் எம் சிறுவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

12043070_492953554198427_604093706311643

ஈழ நிலத்தில் குழந்தைகள் கைது செய்யப்படுகிறார்கள். குழந்தைகள் பதாகைகளை ஏந்தியவாறு போராடுகிறார்கள். குழந்தைகள் தங்கள் வாழ் நிலத்திற்காக போராடுகிறார்கள். உரிமை மறுக்கப்பட்ட அடக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட இனத்தின் குழந்தைகள் எதையெல்லாம் சந்திக்கவேண்டுமோ அதை எங்கள் குழந்தைகள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால்தான் மாபெரும் இழப்பும் மாபெரும் அபாயங்களும் நின்று மிரட்டுகின்றன. அவர்களைத்தான் சூனியமான எதிர்காலம் அச்சுறுத்துகிறது.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் குழந்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசியல் கைதிகளாக விடுதலையின்றி, நீதியின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தங்கள் தந்தையர்களை விடுவிக்குமாறு அந்தக் குழந்தைகள் வீதியில் இறங்கினார்கள். தந்தையின் முகமறியாது, தந்தையின் முத்தம் அறியாது தந்தை இருக்கும் வாழ்வு எப்படி இருக்குமென அறியாத வளர்ந்த பிள்ளைகள் அவர்கள். ஏக்கமும் துயரமும் நிரம்பிய அவர்களின் விழிகள் எவரையும், எவரின் மனசாட்சியையும் உலுக்கக்கூடியது.

ஆனால் எங்கள் குழந்தைகள் குழந்தைகளாக பார்க்கப்படுவதில்லை. அவர்களுக்கு என்று எந்த உரிமையும் இல்லை. பல்லாயிரம் குழந்தைகளின் சிறுவர்களின் இரத்தத்தால் எங்கள் நிலம் நனைந்தது. எத்தனையோ குழந்தைகள் எங்கள் மண்ணில் சிங்கள அரசு படைகளின் குண்டுகளால், விமானங்களால் பிய்த்தெறியப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் சரணடைந்த அப்பாவிக் குழந்தைகளை சிங்கள இராணுவம் கொலை செய்து அழித்தது. அவர்களின் புகைப்படங்கள் அவர்களின் இரத்தம் அவர்களின் கண்ணீர் இந்த உலகத்தின் மனசாட்சியை உலுக்கவில்லை. ஈழத்தில் இலங்கை அரசு நடத்திய போரால் எங்கள் குழந்தைகள் இடர்மிக்க காலத்தை சந்தித்துள்ளனர்.

இன்றைக்கு எங்கள் குழந்தைகள் தாய் தந்தையரை இழந்து அனாதரவாக்கப்பட்டுள்ளனர். வடக்கில் உள்ள சிறுவர் இல்லங்கள் சிலவற்றுக்குச் செல்கிறபோது எத்தனை தாய் தந்தையரை இழந்த சிறுவர்களை சந்திக்க முடிகிறது. தாய் தந்தையர்களை குழந்தைகள் இழப்போடு அவர்கள் மாபெரும் தனிமைக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் பேரன்பை இழக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் வேறு ஒரு திசையில் செல்கிறது. இட்டு நிரப்ப முடியாத அந்த இடைவெளி அவர்களின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சிறுவர் இல்லங்கள் அவர்களுக்கு சிறைக்கூடங்களாகின்றன. அம்மா தரும் அன்பை அப்பா தரும் அரவணைப்பை சகோதரர்கள் கூடியிருக்கும் வாழ்வை யாரால் தர இயலும்? அந்த வாழ்வில் இருக்கும் ஆறுதலை இனிமையை எப்படித் தர இயலும். வாடிய முகங்களுடன் ஏக்கங்கள் நிறைந்த மனத்தோடு பிஞ்சு வயதிலேயே மன நெருக்கடிகள் நிறைந்து வாழும் ஒரு வாழ்க்கைக்கு எங்கள் குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கான சிறுவர் இல்லங்கள் என்றில்லாமல் சிறுவர் இல்லங்களுக்கான குழந்தைகளாக அவர்களின் சூழல் அமைக்கப்பட்டிருக்கிறது.

தய்தையை இழந்து, தாயை இழந்து அன்பும் ஆதரவுமற்று அனாதரவாக்கப்பட்டுள்ள குழந்தைகள் தொழிலாளிகளாக நடத்தப்படுகிறார்கள். பக்கத்து வீட்டிலிருந்து வணிக நிறுவனங்கள் வரை வடக்கில் தொழிலாளிகளாக குழந்தைகள் நடத்தப்படுவதைக் காணலாம். தாய் இறந்துபோக தந்தையார் செய்து கொண்ட மறுமணத்தின் ஊடாக கிடைத்த மாற்றுத் தாயே பாடசாலையை இடைவிலக்கி குழந்தைகளை தொழிலாளிகள் போல நடத்துவதையும் காணமுடிகிறது. இவ்வாறு குழந்தைகள் குடும்பங்களில், வீடுகளில் முகம்கொடுக்கும் சிக்கல்கள் ஏராளம்.

வடக்கில் பல பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் முழுக்க முழுக்க அபாயம் மிக்க சூழலில் வாழத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஆறு வருடங்களாக இராணுவத்தாலும் சிவிலியன்களாலும் சிறுமிகளை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவங்கள் பல வடக்கில் பதிவாகியுள்ளன. எவரும் சட்டத்திற்கு முன்னால் தண்டிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக நிலை நிறுத்தப்பட்ட இராணுவத்தினர் தொடர்ந்தும் தமது பாலியல் துஷ்பிரயோகச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இராணுவத்தின் இனவெறிப் பாலியல் துஸ்பிரயோகங்கள் சிவிலியன்களுக்கும் தூண்டுதலாக அமைகிறது.

போதைப்பொருள் பாவனை இன்று ஈழச் சிறுவர்களை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. பல சிறுவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாக்கப்பட்டு பாடசாலைகளைவிட்டு இடைவிலகி தமது எதிர்காலத்தை சூனியமாக்கியுள்ளனர். காவல் நிலையங்களில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினருக்கு போதைப் பொருள் காவுவதற்கு சிறுவர்கள் உபயோகப்படுத்தும் செயல்கள் ஊடகங்களில் வெளியாக்கப்பட்டிருந்தது. இவைகளுக்கு என்ன காரணம்?

எங்கள் சிறுவர்களின் பெற்றோர்கள் கொல்லப்பட்டு அவர்களின் தாய் தந்தையர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டு அவர்களின் தந்தையர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு அவர்கள் அனாதரவாக்கப்பட்டு அவர்கள் பாடசாலை கல்வியை இழந்து இராணுவ ஆக்கிரமிப்பும் அபாயமும் மிகுந்த சூழலில் வாழத் தள்ளப்பட்டுள்ளமை எதற்காக? இப்படி வாழும் எங்கள் குழந்தைகளுக்கு எங்கள் சிறுவர்களுக்கு இந்த மண்ணில் என்ன உரிமை இருக்கிறது? சிறுவர் கால வாழ்வே சிதைக்கப்படும் எங்கள் சிறுவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

முதலில் எங்கள் சிறுவர்களை உங்கள் திட்டமிட்ட செயற்பாடுகளிலிருந்து விடுதலை செய்யுங்கள். எங்கள் சிறுவர்களை சிறுவர்களாக வாழ விடுவதுதான் அவர்களுக்கு வேண்டிய முதல் உரிமை. அது அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை. எங்கள் சிறுவர்கள் தங்கள் பராயத்தில் தாங்களாக வாழ அனுமதியுங்கள். உரிமை பறிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு எல்லாமும் பறிக்கப்பட்ட எங்கள் சிறுவர்கள் இலங்கையில் ஈழச் சிறுவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை குறித்து இந்த உலகின் முன் நீதியை கோரி முகத்தில் அறைகின்றனர்.

ஏதுவுமறியாத எங்கள் சிறுவர்களை அழிப்பது ஏன்? அவர்களின் வாழ்வை பறிப்பது ஏன்? அவர்களின் நிலத்தை பறிப்பது ஏன்? அவர்களின் தாய் தந்தையரை கொன்றும் காணாமல் போகச் செய்தும் சிறையில் அடைத்தும் அனாதைகளாக்கியது ஏன்? குழந்தைகளை, சிறுவர்களை பழிவாங்கும் குறி வைக்கும் ஒரு நாட்டில் சிறுவர் உரிமையும் மனித உரிமையும் எந்த விசித்திரத்தில் இருக்கிறது? அந்த நாட்டை அதன் அரசை இந்த உலகம் மயிலிறகால் தடவுவது குழந்தைகளின் சிறுவர்களின் நலன்களுக்கு இந்த உலகம் உன்ன இடத்தை வழங்குகிறது என்பது இப்போது எழும் கேள்வி?

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.