சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.
யாயினி

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Recommended Posts

STS-116 spacewalk 1.jpg

 

விண்வெளி நடை என்பது விண்வெளி வீரர்கள் மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கை ஆகும். இவை பெரும்பாலும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளியே நடைபெறுகின்றன. சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்பாகங்களில் ஏற்படும் இயந்திரக் குறைபாடுகளை சரி செய்யவோ அல்லது புதிய பாகங்களை இணைக்கவோ இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

படம்: நாசா
 

Share this post


Link to post
Share on other sites
சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.

யாயினியின் 73 ஆவது பக்கம் உங்களை அன்போடு வர வேற்கின்றது!!!

64df9d95f7a6d9fb7b8785ca466af711.gif  yayini's 73

12410579_1667401800195028_15784899222540

 

Edited by யாயினி
 • Like 2

Share this post


Link to post
Share on other sites

12509259_158904474481172_214699670504045

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்….

இதோ... அப்துல் கலாமின் வார்த்தைகளில் , 
அவரது இளமைக்கால வாழ்க்கை :
"நான் சிறுவனாக இருக்கும் போது ...ஒரு நாள் இரவு நேரம் ... வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்...
என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு செல்வது வழக்கம்...
சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன் , என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய் ..... ஆனால் என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டார்....
‘ இன்றைய பொழுது பள்ளியில் எப்படிப் போனது ’ என்று என் தந்தை என்னிடம் கேட்டார்.
நான் அன்று என்ன பதில் சொன்னேன் என்று தெரியவில்லை ..
என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறியதற்கு வருத்தம் தெரிவித்தார் என் தாய்...
ஆனால் அதற்கு என் தந்தையோ .."எனக்கு கருகிய ரொட்டிதான் ரொம்ப பிடிக்கும் " என்று பதில் சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது ....
சாப்பிட்டு முடித்த சற்று நேரத்துக்குப் பின்... நான் மெல்ல என் தந்தை அருகில் சென்று இரவு வணக்கம் சொல்லிவிட்டு , அவரிடம் தயக்கத்துடன் கேட்டேன் :
" அப்பா ... உங்களுக்கு உண்மையாகவே கருகிய ரொட்டி ரொம்பப் பிடிக்குமா..?"
சற்று நேரம் அமைதியாக இருந்த என் தந்தை , என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு சொன்னார்....
" மகனே...உங்க அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு , நமக்கும் பணிவிடை செய்கிறார் ..
களைத்துப் போய் இருப்பார் ... 
ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ... 
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்...
நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ... ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...
இவ்வளவு வருடங்களில் நான் கற்றுக்கொண்டது ....
நடப்பது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு சந்தோஷமான மனநிலைக்கு நாம் மாறுவதே ....”

# அப்துல் கலாமின் இந்த அனுபவத்தைப் படித்தபோது அவரது அப்பா மீது , அளவில்லாத மரியாதை எழுந்தது...
அது இன்று முழுவதும் என்னைத் தொடர்ந்து வந்தது...
ஆம்.. 
சாப்பாடு சரியில்லை என்றால் “சட்” என்று கோபப்படும் ஒரு சராசரி கணவன்தான் நான்...!
இன்று காலையில் கூட சப்பாத்தி மென்மையாக இல்லை என்பதை , கொஞ்சம் மென்மை இல்லாத வார்த்தைகளை உபயோகித்தே என் மனைவியிடம் என்னால் சொல்ல முடிந்தது...!

“ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ... 
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்....”
# இந்த தத்துவத்தை எண்ணியபடியே இன்று இரவு சாப்பிட அமர்ந்தபோது ...
எனக்கு பரிமாறப்பட்ட உணவு கொஞ்சம் ஆறித்தான் போய் இருந்தது...
ஆனால் என் உணர்வுகள் ரொம்பவுமே மாறிப் போய் இருந்தது...
மனைவியின் உணவை இனி ஒருபோதும் குறை சொல்லக் கூடாது என்ற திருந்திய மன உணர்வோடு , இருந்ததை இனிதே உண்டு முடித்தேன்...
# எதிர்காலத்தில் நம் குழந்தைகள் கலாமின் கொள்கைகளை கடைப்பிடிக்கட்டும்..
இப்போது நாம் கொஞ்சம் அவரது அப்பாவின் கொள்கைகளை கடைப்பிடிக்கலாமே...!!!
# நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ... 
ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...!!!

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

 

பூக்களும்,,முட்களும் ..................................!....

11057222_10207077683674967_8527944485935

Edited by யாயினி

Share this post


Link to post
Share on other sites

நாம் யாரும் தோற்பதற்காகத் திட்டமிடுவதில்லை 
திட்டமிடுவதில்தான் தோற்றுப் போகிறோம்.....................!!....

12509577_10207085193262702_8082513402031

டாக்ரர் பொன்மணி

Share this post


Link to post
Share on other sites

வடமாகாண விவசாய அமைச்சின் உழவர் விழாவில் கலந்துகொள்ள முல்லைத்தீவு வருகிறார் கவிஞர் வைரமுத்து-

குளோபல் தமிழ் செய்தியாளர்

வடமாகாண விவசாய அமைச்சின் உழவர் விழாவில் கலந்துகொள்ள முல்லைத்தீவு வருகிறார் கவிஞர் வைரமுத்து-

வடக்கு மாகாண விவசாய அமைச்சு நடாத்தும் உழவர் விழா நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தென்னிந்தியாவின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து முல்லைத்தீவுக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் 23ஆம் திகதி முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில் உழவர் விழா இடம்பெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கவிஞர் வைரமுத்து கலந்துகொள்கிறார். 

உழவர்களை கௌரவப்படுத்தும் இந்த நிகழ்வில் சிறந்த வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கையாளர்கள், சிறந்த கால்நடைப் பண்ணையாளர்கள், சிறந்த கோழிப் பண்ணையாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
 

Edited by யாயினி

Share this post


Link to post
Share on other sites

12391792_1109110059122380_82043592823933

ஷாஜகானின் 17ஆவது மனைவிக்கு கட்டிய மண்டபத்தை விட சோழ மன்னவனின் ஒரே தாய்க்கு கட்டிய கோவில் - பரவ செய்யுங்கள்.
பளிங்குக் கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமா?
 
ஐயா "பஞ்சவன் மாதேவி" பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்....வழி....என்று இழுத்ததும், அந்த பேர்ல இங்க எந்த கோயிலும் இல்லீங்களே, "ராமசாமி கோயில்” தான் ஒன்னு இருக்கு,அந்த கோயிலும் பூட்டியே தான் கெடக்கும், அங்க போகும் போது அந்த தெருவுல ஒரு பெரியவர் இருப்பாரு அவர கூட்டிட்டு போங்க அவர் தான் அந்த கோயில பாத்துக்குறாரு என்று வழிகாட்டினார் அந்த பெரியவர், பள்ளிப்படை கோயில் தான் இன்று பெயர் மாறி ராமசாமி கோயிலாகியுள்ளது! உலகப் புகழ் பெற்று இருக்க வேண்டிய இடம், வழி கேட்டு செல்லும் நிலையில் உள்ளது. "பட்டீஸ்வரம்" தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த ஊரின் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான "பழையாறை" செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்!.

தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் இந்த "பஞ்சவன் மாதேவி" , தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான் கங்கை முதல் கடாரம் வரை வென்ற "ராஜேந்திர சோழன்". உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம். தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவளின் நினைவாக எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது, தாஜ் மஹாலை நான் குறை கூற வில்லை அதுவும் பாசத்தின் வெளிப்பாடு தான், ஆனால் தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா? குறைந்த பட்சம் எத்தனை தமிழர்களுக்கு தெரியும்? பளிங்குக்கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமாக கணக்கிடப்படுமா?வேதனை! இந்த பட்டீஸ்வரத்தின்அருகில் தான் சோழர்களின் மாளிகை இருந்தது, ராஜ ராஜன் தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தன் கடைசி காலத்தை இங்கு தான் கழித்தார், தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்காமல் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இன்றைக்கும் அந்த ஊரின் பெயர் "சோழன் மாளிகை". கேட்பாரற்று இடிந்து கிடந்த இந்த கோயிலை சில வருடங்களுக்கு முன் தான் புதுப்பித்து இருக்கிறார்கள்.

பஞ்சவன்மாதேவி எப்பேர்பட்ட சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த பெண்மணியாக இருந்தால் தன் அன்னை அல்லாத ஒரு பெண்ணுக்கு பள்ளிப்படை அமைத்து இருப்பார் ராஜேந்திர சோழர். தனது சிற்றன்னையின் மேல் எத்தனை அன்பு இருந்தால் இந்த எண்ணம் அவருக்கு தோன்றி இருக்கும். இது இந்த மண்ணில் வாழ்ந்த மகத்தான பெண்ணின் நினைவிடம் மட்டும் அல்ல, உண்மையான தாய் பாசத்தால் தனயன் எழுப்பிய புனித தளம். உங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த புண்ணியவதி தரிசித்துவிட்டுவாருங்கள்,அப்படியே தனயன் ராஜேந்திர சோழனையும் நினைவு கூறுங்கள் ..
 
 
படித்ததிலிருந்து..........
 
 
 
 
 
 • Like 2

Share this post


Link to post
Share on other sites

"இரட்டைப் புலவர்கள்" என்று பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த இரு புலவர்கள். இணைந்து பல பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஒருவர் முதல் பாதி பாடலைச் சொன்னால், மற்றவர் பின் பாதியைச் சொல்லி முடிப்பார்.

ஒருவர் பெயர் 'இளஞ்சூரியர்'. மற்றொருவர் 'முதுசூரியர்'. ஒருவருக்கு கண்கள் தெரியாது. மற்றவர்க்கு கால்கள் இல்லை. காலில்லாதவர் கண் தெரியாதவர் தோல்கள் மீதமர்ந்து வழி சொல்வார். அவரைச் சுமந்து கொண்டு கண்ணில்லாதவர் நடந்து செல்வார். 
(** தமிழை எப்படி நேசித்திருக்கிறார்கள். பக்தி செய்திருக்கிறார்கள் என்றெண்ணினால் சிலிர்க்கும்).

அவர்கள் இருவரும் கோயில்களுக்கு யாத்திரையாய் சென்று பாடல்களை பாடுவர். அதிலும், சிவபெருமான் மீது பாடிய பாடல்களே அதிகம்.

ஒருமுறை மதுரையில் குளக்கரையில், கால் இல்லாதவர் அமர்ந்திருந்தார். கண்ணில்லாதவர் ....தண்ணீரில் இறங்கித் துணியைத் தோய்த்துக் கொண்டிருந்தார். அங்ஙனம் அலசுகிறபோது துணி கையை விட்டு நழுவிப் போய்விடுகிறது. 
கண் தெரியாமல் 'இப்படி அப்படி' என்று தேடுகிறார். கரையில்..இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த கால்களற்றவர் கேலியாக...

"அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாமதைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ?

(அப்பு - தண்ணீர், தப்புதல் - அடித்து துவைத்தல், நீ அந்த தப்பு தப்பினால் அது நம்மைவிட்டு தப்பிப் போய்விடாதோ? அதனால் தான் அது நம்மை விட்டுத் தப்பி போய்விட்டது என்றார்)

இதைக் கேட்ட அந்தகர் பாடுகிறார் ...

"செப்பக் கேள் ஆனாலும் கந்தை, அதிலுமோர் ஆயிரங்கண் போனால் துயர் போச்சுப்போ"

(கந்தல் துணி, அதிலும் ஆயிரம் ஓட்டை, போனால் போகட்டும். நம்மை பிடிச்ச துன்பம் போச்சு போ” என்றாராம்.

கால்களற்றவர் விடவில்லை. அவர் மேலும்

‘கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும்
தண்ணார் குளிரையுடன் தாங்காதோ?"

(அது எத்தனை கந்தையானாலும் இரவிலே குளிருக்கு ஆகுமே)

இப்பொழுது முடிவாக, பார்வையில்லாதவர் சொல்லுகிறார்

"எண்ணாதீர், இக்கலிங்கம் போனாலென் ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை!’

* கலிங்கம் - ஆடை (வேட்டிக்கு கலிங்கம் என்றும் சொல்வதுண்டு) இந்த கலிங்கம் போனாலென்ன?! நமக்கு மதுரைச் சொக்கநாதர் துணை இருக்குதப்பா என்றாராம்.

'இவர்களும்' 'கவி காளமேகமும்' சமகாலத்தவர்கள். கவிகாளமேகத்திற்கும் இவர்களுக்கும் நிகழ்ந்த சுவையான நிகழ்வு ஒன்று அடுத்த பதிவு ஒன்றில்.

 

படித்ததிலிருந்து..................

Share this post


Link to post
Share on other sites

ஒரு ரோஜாவை இன்னொரு மலரோடு ஒப்பிடாதீர்கள். இன்னொரு ரோஜாவோடுகூட. ஏனெனில் இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளும் தனித்துவமானது!
-ஓஷோ

10929897_1541737949419792_33986829148228

Share this post


Link to post
Share on other sites

10314675_1059662020722492_32861510137595


மேஸ்ட்ரோ இளையராஜாவுக்கு கேரளா மாநிலத்தின் உயரிய விருதான "நிஷாகந்தி புரஸ்காரம்" விருதை வழங்கி அம்மாநில அரசு  (21.1.2016) கவுரவித்து இருக்கிறது. மேலும், இசைக்கல்வி நிலையம் தொடங்க ஐந்து ஏக்கர் நிலத்தையும் அளித்துள்ளது கேரள அரசு. கேரளா முதல்வர் உம்மன் சாண்டி இளையராஜாவுக்கு விருதை வழங்கியுள்ளார்.

Maestro Ilaiyaraaja has been honoured by the Kerala Government with the prestigious Nishagandhi Puraskaram today. Along with the award, the Kerala government has also decided to allocate five acres of land for the musician to open his own music academy. The award was presented by Chief Minister Oommen Chandy.

Share this post


Link to post
Share on other sites

மொட்டுக்கள் இதழ் விரிக்கும் நேரம்!!!

10620264_588800121226207_392590750897271

10710367_588799261226293_594042556254527

10604482_588799741226245_180787350368622

படங்கள்:- பாலபிரசன்னா பூந்தோட்டம் வவுனியா

Share this post


Link to post
Share on other sites

 

தூக்கணாங்குருவி கூடு தூங்கக் கண்டான் மரத்திலே

10679534_578163782289841_435739251528363

 

ஒரு மரத்தில் பல சோடி தூக்கணாங்குருவிகள் கூடு கட்டும்.

10708764_578162675623285_417553205547575

 

பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது தூக்கணாங்குருவிக் கூடு ஒன்றுதான்.

10633288_578162698956616_771771374846658

படங்கள்:- பாலபிரசன்னா பூந்தோட்டம் வவுனியா

 
 •  

இந்த அழகியலை எல்லாம் பார்த்து ரசிக்கிறவர்கள் இனாமாக தலா ஒவ்வொரு பச்சைகளை தந்துட்டு போகுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.......பிரியோசனம் இல்லாது விட்டால்  திருசிற்றம்பலம் சொல்லி முடிச்சு வைக்கலாம் என்ற ஒரு நினைப்பும் இருக்கிறது...யாழ் உறவுகள் கையில் தான் தங்கி இருக்கிறது......

12400578_732692736865790_236222066711905

Edited by யாயினி
 • Like 5

Share this post


Link to post
Share on other sites

உங்களது பதிவுகள் அத்தனையும் கண்களுக்கும், சிந்தனைகளுக்கும் விருந்து படைப்பவை . அதில் எள்ளளவும் சந்தேகமில்லை சகோதரி....! :)

 

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்க பனிப்புயலில் 18 பேர் வரை பலி:-

அமெரிக்க பனிப்புயலில் 18 பேர் வரை பலி:-

 

அமெரிக்காவின் அண்மைய வரலாற்றில் மிகப்பெரிய பனிப்புயலில் ஒன்றாக கருதப்படும் குளிர்கால பனிப்புயல் தாக்கியதில் கிழக்கு கடற்கரையோரப் பிராந்தியத்தின் அன்றாட வாழ்க்கை ஸ்திம்பித்துள்ளது.

மிக மோசமான காற்று மற்றும் பனிப்பொழிவுடன் சம்பந்தப்பட்டதாக 18 மரணங்கள் பதிவாகியுள்ளன.

லட்சக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

சில இடங்களில் படிந்த ஒரு மீட்டர் உயரம் வரையிலான பனி காரணமாக ரயில்களும், பஸ்களும் மற்றும் விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

நியூயார்க்கில் முழுமையான பயணத்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள், அருங்காட்சியகம் மற்றும் திரையரங்குகள் மூட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. சூதாட்ட மையங்களும் மூடப்பட்டன.

இப்போது இந்த பனிப்புயல் குறைந்து அத்திலாந்திக் கடலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்ற போதிலும் அதன் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Thanks - BBC
 

Share this post


Link to post
Share on other sites

 

ஸ்கார்புரோ ரூஜ் ரிவர் தொகுதியில் கல்விச் சபைக்கு இடைக் கால தேர்தலில் போட்டியிட்டு  வெற்றி பெற்றுள்ளார் 
நீதன் சாண்..

12512290_10153507669076374_8173417475535

Neethan Shan· 

My special thanks to all the hundreds of volunteers for all the hard work especially in this winter campaign! Thanks to the people of Scarborough Rouge River for giving me their overwhelming support and trust! Very humbled by this incredible support. My long list of thank yous will follow! But for now.. BIG THANK YOU!

Neethan Shan elected new TDSB trustee for Scarborough-Rouge River

Candidate outdistances packed field to take seat

Neethan Shan

Neethan Shan

Photo/COURTESY
Neethan Shan was easily elected the new Toronto District School board trustee for Scarborough-Rouge River in a byelection Monday.
Scarborough Mirror

Neethan Shan will be the new Toronto District School Board trustee for Scarborough-Rouge River.

Shan was easily elected in a byelection on Monday night (Jan. 25), beating out a field of 19 other candidates running for the position left vacant after incumbent Shaun Chen was elected as Liberal MP for the Scarborough North riding in October. 

With 49 of 53 polls in, Shan had 3,193 votes.

In second, was Jack Wang with 1,043 votes. 

Third place was Kwesi Johnson with 295 votes, while Yama Arainfar was in fourth with 184 votes.

Other candidates running were Austin Han, Kuga Kasilingam, Sharon Kerr, Aasia Khatoon, George Lin, Dwight McLean, Ron McNaughton, Kabirul Mollah, Noah Ng, Andy Nguyen, Arjun Sahota, Piravena Sathiyanantham, Simone Si, Sandeep Srivastava, Sahl Syed, and Sonny Yeung. 

Shan, who was a public school trustee in Markham and has run for provincial and council seats in Scarborough several times, told The Scarborough Mirror in an interview prior to the election he knew there was much work to be done at the TDSB.

“Therefore my focus will be solely on doing the work necessary to make our community a better place to go to school, not on future political considerations,” he said.

http://www.insidetoronto.com/news-story/6248281-neethan-shan-elected-new-tdsb-trustee-for-scarborough-rouge-river/#.VqbcYYLncIM.facebook

Share this post


Link to post
Share on other sites

 

இனிக்கும் சாக்லேட்டின் கசப்பான பின்னணி! – காதலர்களின் கவனத்துக்கு….

 

 

 

 

 

 

chocklate

காதலர் தினம் வருகிறது. ‘சாக்லேட் பாய்’, ‘ஸ்வீட் ஹார்ட்’, ‘ஹனி பேபி’, ‘ஹாய் ஸ்வீட்டி’ என நிச்சயம் இப்படியான இனிப்பு வார்த்தைகள் இல்லாமலோ, இனிப்பு இல்லாமலோ…காதலர் தினம் முடிந்துவிடாது. இதோ… முதல் வரியைக் கடந்த உடனேயே காதலி/காதலனுக்கு பரிசுப் பொருளோடு என்ன சாக்லேட் வாங்கித்தரலாம்? என எத்தனிக்கும் உங்களுக்கு சாக்லேட்டின் மறுபக்கத்தைக் கொஞ்சம் புரட்டிக்காட்டலாம்…

சில்லறைக்குப் பதிலாகக் கொடுக்கப்படும் சாக்லேட்டுகளுக்கும் சரி, குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் அடைக்கப்பட்ட காஸ்ட்லி சாக்லேட்டுகளுக்கும் சரி. ‘கொக்கோ’ மரத்தின் விதைகள்தான் மூலப்பொருள். மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கோட் டிவார் (ஐவரி கோஸ்ட் எனவும் அழைக்கப்படுகிறது) நாட்டில், ‘கொக்கோ’ மரங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், இங்கிருந்துதான் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு கொக்கோ ஏற்றுமதி ஆகிறது. விஷயம் அதுவல்ல… குழந்தைகளின் ஆல்டைம் ஃபேவரைட்டான சாக்லேட் தயாரிப்பின் பின்னணியில் இருப்பது ஆப்பிரிக்காவின் ஏழைக் குழந்தைகள்!

‘கொக்கோ’வை உலகளவில் அதிகமாக உற்பத்தி செய்யும் இந்த ஐவரி கோஸ்ட் நாடானது, உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்று என்பதுதான் இந்தப் பிரச்னைக்கு முக்கியமான காரணம். இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்ட மற்ற நாடுகள், ஐவரி கோஸ்ட்டில் இருக்கும் ‘கொக்கோ’ தோட்டங்களில் சிறுவர்களைப் பணிக்கு அமர்த்தி, லாபநோக்கத்தோடு செயல்படத் தொடங்கியது. அதுவும் கட்டாயப்படுத்தி, கடத்தி, அடிமைகளாக நடத்தப்படும் ஆப்பிரிக்க நாடுகளின் ஏழைக் குழந்தைகள்தான் ‘கொக்கோ’ மரத்தில் இருந்து சாக்லேட் தயாரிப்பிற்குத் தேவையான கொட்டைகளைப் பிரித்தெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு, சாக்லேட் தயாரிப்பின் பின்னணியை பத்திரிக்கையாளர் ஒருவருடைய உதவியோடு, ‘தி டார்க் நைட் ஆஃப் சாக்லேட்’ என்ற தங்களது ஆவணப்படத்தில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள் மிக்கி மிஸ்ராதி மற்றும் ராபர்டோ ரோமான் என்ற இருவர். 2012ல் இந்த ஆவணப்படம் வெளியானது. அரசியல், அதிகாரம், அடாவடி என, ‘கொக்கோ’ தோட்டங்களில் குழந்தைகள் மீது சுமத்தப்படும் பயங்கரத்தைப் பார்த்தால், நம்ம ஊர் ‘பரதேசி’ படம் ஞாபகத்திற்கு வரலாம்.

உலக மக்களிடம் ‘சாக்லேட்’ பரவலான காலம்தொட்டே தொடர்ந்துகொண்டிருக்கும் இந்தப் பிரச்னையை, 2000-ம் ஆண்டில் பிபிசி நிறுவனம் தனது ஆவணப்படத்தில் பதிவு செய்தது. கூடவே, ஏறத்தாழ 15 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கொக்கோ தோட்டங்களில் இருப்பதாக ஐவரி கோஸ்ட் நாட்டைத் தாண்டியும் எழுந்தது குரல்கள். விஷயம் வெளியே தெரிந்த பிறகு, சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் 2008-ம் ஆண்டுக்குள், ‘கொக்கோ’ தோட்டங்களில் இருந்து குழந்தைத் தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று நம்பிக்கை கொடுத்தது. ஆனால், குழந்தைகளைக் கடத்திக்கொண்டுவந்து வேலை வாங்குவது, கட்டாயப்படுத்துவது போன்ற விஷயங்கள் குறைந்தாலும், குழந்தைத் தொழிலாளர்கள் ‘கொக்கோ’ தோட்டங்களில் முற்றிலும் இருந்து விடுவிக்கப்படவில்லை!

2009-ல் சுற்றுச் சூழலுக்காக உலகளவில் போராடும் ‘ரெயின் ஃபாரஸ்ட் அலையன்ஸ்’ என்ற என்.ஜி.ஓ நிறுவனம், ‘கொக்கோ’ தோட்டங்களில் இருக்கும் ஆப்பிரிக்க ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தீவிரமான முன்னெடுப்பை எடுக்கவே, வருகிற 2020க்குள் ‘கொக்கோ தோட்டங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நிலையைக் கொண்டுவந்துவிடுவோம்!’ என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள் சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள். இப்படி இன்னும் பல செய்திகளைச் சொல்வதுடன், சாக்லேட் தயாரிப்பில் இருக்கும் குழந்தைகளின் நிலைமையை, குழந்தைத் தொழிலாளர் பிரச்னையை மூடி மறைக்கும் சாக்லேட் தயாரிப்பாளர்களின் முகத்தை அவ்வளவு நெருக்கத்தில் காட்டுகிறது இந்த ஆவணப்படம்.

நீங்கள், நான், தோழி, காதலி, நண்பன் என உங்கள் சுற்றம் மட்டுமல்ல, உலகெங்கும் இருக்கும் ஒட்டுமொத்த மக்களும் ஆண்டுக்கு 30 லட்சம் டன் அளவுக்குச் சாக்லேட்டுகளைச் சுவைப்பதாகச் சொல்கிறது ஒரு கருத்துக் கணிப்பு. குறிப்பாக, காதல் உணர்வு கொண்டவர்களுக்கு ‘சாக்லேட்’ ஒரு கிளர்ச்சியூட்டும் பொருளாகக் குறிப்பிடுவதாக உலவும் ஆதாரமற்ற வாதம், காதலன்/காதலிக்கு ‘காதலர் தினம்’ அன்று சாக்லேட் பரிசளிப்பதை மரபாக்கியிருக்கிறது!

டிட்பிட்ஸ்: என்னதான் சாக்லேட் பின்னணி பற்றி எழுதினாலும் நம் காதலர்கள் அதை வாங்காமல் இருக்கப் போவதில்லை. என்ன செய்யலாம்? வேண்டுமானால் இப்படிச் செய்யலாமா…?! இனி சாக்லேட் கொடுப்பதற்கு பதில் முத்தங்களைப் பரிசளித்துக் கொள்ளுங்களேன்..!

 

கனடாமிரர்.கொம்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஸ்பெயின் நாட்டுக்குச் சொந்தமான Lanzarote தீவில் நீருக்கடியில் மியூசிம் அமைந்திருக்கிறார்கள். இங்குள்ள சிற்பங்களை பிரிட்டிஷ் சிற்பக் கலைஞர் Jason deCaires Taylor செதுக்கியது. 12-14 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கும இந்த மியூசியத்தில், பெரும்பாலும் மனித சிற்பங்களைப் பார்க்கலாம். ஐரோப்பாவில் நீருக்கடியில் முதல் சிற்பக்கலை அருங்காட்சியகம் இதுவே.

12654352_675136642588881_220793331527081
12642829_675136632588882_135231239556470
12670847_675136639255548_176413580563463
12670459_675136669255545_284700743563292
12631273_675136672588878_799891998925811
10309650_675136679255544_675783605296785
943921_675136699255542_20936980304965738
12687988_675136719255540_833181574291043
12645140_675136722588873_245691508340719
21581_675136745922204_305117491896999151
12642816_675136755922203_285226662833746
12670430_675136769255535_804532389699425
 
 

Share this post


Link to post
Share on other sites

சொக்கிலேட் தயாரிப்பின் பின்னால் இவ்வளவு துயரம் இருக்குது என தெரிந்தாலும் சாப்பிடாமல் இருக்க முடிவதில்லை. அது சரி காதலர்கள் மட்டுமா சொக்கிலேட் சாப்பிடுகிறார்கள்

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, ரதி said:

சொக்கிலேட் தயாரிப்பின் பின்னால் இவ்வளவு துயரம் இருக்குது என தெரிந்தாலும் சாப்பிடாமல் இருக்க முடிவதில்லை. அது சரி காதலர்கள் மட்டுமா சொக்கிலேட் சாப்பிடுகிறார்கள்

எல்லாரும் சொக்லேட் சாப்பிடுவது வழமை தான்..ஆனால் அண்மையில் தானே இந்த தகவலையும் வெளியீட்டு இருக்கிறார்கள் போல் உள்ளது.அதனால் தான் எடுத்து வந்தேன்...

Share this post


Link to post
Share on other sites
54 minutes ago, யாயினி said:

எல்லாரும் சொக்லேட் சாப்பிடுவது வழமை தான்..ஆனால் அண்மையில் தானே இந்த தகவலையும் வெளியீட்டு இருக்கிறார்கள் போல் உள்ளது.அதனால் தான் எடுத்து வந்தேன்...

எல்லாம் வியாபாரிகளின் வியாபார யுக்திகள்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

12650836_993240274048522_776235620466474

10014542_970670916305458_121569337938049

அன்புள்ள மருமகனுக்கு உங்கள் மதிப்புக்குரிய மாமனார் எழுதிக்கொள்வது,.

எனது மகளை நீங்கள் மனைவியாக ஏற்று ஐந்து மணி நேரங்கள் கடந்துவிட்டன.இத்தனை காலமும் எனது நெஞ்சிலும் தோளிலும் சுமந்த எனது மகளை உங்களின் பொறுப்பில் இனி விட்டுவிட்டேன்.ஒரு தந்தை என்ற ரீதியில் எனது கடமையை நான் சரியாகச் செய்து முடித்திருக்கிறேன் என நம்புகிறேன்.ஒரு கணவனாக உங்கள் கடமையைச் செய்வீர்கள் என மனமாற எதிர்பார்க்கிறேன்.

இப்பொழுது நேரம் இரவு பத்து மணி.அதிகாலையிலேயே நானும் உங்கள் மாமியாரும் இந்த வீட்டை விட்டு வெளியேறி விடுவோம்.ஏனெனில் இனி இது எங்கள் வீடல்ல.உங்கள் வீடு.பரம்பரையாக வாழ்ந்த வீட்டை பாதியில் விட்டுப் போக நேர்ந்ததில் பெட்டி படுக்கைகளைக் கட்டும் கயிறெல்லாம் உங்கள் மாமியாரின் கண்ணீராலேயே கழுவப்படுகிறது.
நானும் உங்கள் மாமியாரும் இன்னும் எட்டு மணி நேரங்கள்தான் இந்த வீட்டில் இருப்போம்.உள்ளம் அமைதியில்லாமல் உலாவிக்கொண்டிருக்கிறது.இனம் தெரியாத ஏதோ ஒன்று இதயத்தைப் பிசைந்து எடுக்கிறது.என்ன செய்வதென்று தெரியாமல் நான் எழுத ஆரம்பிக்கின்றேன்.

வேகா வெயிலில் வியர்வை சிந்தி நான் கட்டிய இந்த இரண்டு அடுக்கு மாடியின் பிரமாண்டமான படுக்கையறையின் பஞ்சு மெத்தையில் நீங்கள் உல்லாசமாய் உறங்கிக் கொண்டிருக்க அதே வீட்டில் யாருமில்லாத ஒரு மூலையில் பழைய பாயில் கிழிந்த தலையணையில் என்னைத் தூங்க வைத்திருக்கும் இந்த சமூக நீதியைப் பார்த்து நான் சிரித்துக் கொள்கிறேன்.
வீட்டின் சொந்தக்காரனே விருந்தாளியாய்ப் போன நிலையை எண்ணி வெட்கப்படுகிறேன்.தான் கட்டிய சொர்க்கத்தில் தானே வாழமுடியாத திருசங்குவை விட என்னைக் கேவலமாக்கிவிட்ட இந்த சமூகத்தை எண்ணி நான் சிரித்துக் கொள்கிறேன்.

அன்பின் மருமகனே,
இந்த வீட்டின் ஒவ்வொரு கல்லுக்குப் பின்னாலும் ஒரு கதையும்.ஒரு வேதனையும்,ஒரு வியர்வையும் இருப்பது உங்களுக்கு விளங்காது.உங்களுக்கு வெயில் படாது செய்த இந்த கூரைக்குப் பின்னால் நான் வெயிலில் நின்று வெட்டிய வேளாண்மை இருக்கிறது.நீங்கள் காலாற நடக்கும் இந்த “டைல்” தரைக்குப் பின்னால் எனது மனைவிக்கு நான் செய்த நகைகள் இருக்கிறது.நீங்கள் தூங்கி விழும் அந்தத் தேக்குமரக்கட்டிலுக்குப் பின்னால் நான் எனது மகனுக்கென்று மிச்சம் வைத்த வளவொன்று விற்றகதை இருக்கிறது.நீங்கள் சுகமாகக் கழிக்கும் கழிப்பறைக்குப் பின்னால் கையிலிருந்த சேமிப்பெல்லாம் கரைந்து கிடக்கிறது.நீங்கள் உண்டு பருக குளிர் சாதனப் பெட்டி,கண்டு களிக்க கலர் டீவி,கழுவித் துடைக்க வோஷின் மெஷின்.இவற்றிற்குப் பின்னால் இந்த ஏழையின் கடன் இருக்கிறது.மனிதாபிமானம் என்பது மருந்துக்கும் இல்லாத சமூகமா இது மருமகனே?

முதுமையின் பலவீனமும்,தனிமையின் மறதியும் என்னை முடியாதவனாய் ஆக்குகின்றன.மூலையில் இருந்து முழங்கால் வலியால் முனகிக்கொண்டிருக்கும் உங்கள் மாமியாரோடும், இருந்தால் எழும்பமுடியாத இடுப்பு வலியோடும் எனது காலங்கள் மெதுவாய்க் கழிகின்றன.எனக்கு அதிகமான நாட்கள் எதிரில் இல்லை என்பதை எனது உடம்பு எனக்கு அடிக்கடி ஞ்சாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறதுநாளை ஒரு வருத்தம் வாதம் வந்தாலும் கடன் பட்டுக் காலம் கழிக்கும் நிலைக்கு வந்திருக்கிறேன்.
நான் செய்த தவறு என்ன என்று சிந்தித்துப் பார்க்கிறேன்.ஒரு பெண்ணைப் பெற்றதா?எனது மகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கனவு கண்டதா?படித்தவர் கையில் பாதுகாப்பாகக் கொடுக்க வேண்டும் என நினைத்ததா?சந்தோஷமாய் வாழ்வதற்கு அடுக்கு மாடி எதற்கு மருமகன�?ஒரு ஓலைக் குடிசை போதுமே?

நாளை மாமாவுக்கு ஏதாவது கடன் இருக்கிறதா என்று அன்புருகக் ��ேட்பீர்கள்?மச்சான் எத்தனை கருணையுள்ளவர் என்று எனது மகளும் உங்களில் மயங்கி விடுவாள். அறைந்துவிட்டு வலிக்கிறதா?தடவிவிடவா? எனக் கேட்பது போல்தான் இது இருக்கிறது .இதற்கு நீங்கள் அறையாமலே இருந்திருக்கலாமே.இந்த வேதனையில் நான் விழுவேன் என்று தெரிந்த பின்னும் நீங்கள் என்னைத் தள்ளிவிட்டுவிட்டு கைகொடுத்து காப்பாற்ற நினைப்பது எத்தனை கபடத்தனம்.
இத்தனை அதிருப்தி இருந்தும் ஏன் உங்களைத் தேர்ந்தெடுத்தேன் தெரியுமா?அந்த ஏலத்தில் இலகுவாகக் கிடைத்தது நீங்கள் மாத்திரம்தான்.அப்துஸ்ஸமதின் மகன் ஐந்து மாடி வீடும் ஆறு கோடிப்பணமும் கேட்டார்.கூரைக்கும் டைல் போடச் சொன்னார் குத்தூஸின் மகன்.கௌரவமான குடும்பமாம் கார் ஒன்று வேண்டும் என்றார் காதரின் பேரன்.வெளிநாட்டு டிகிரியாம் வேனொன்று இருந்தால் நல்லம் என்றார் நபீலின் தம்பி.கட்டாரில் எஞ்சினியராம் கை நிறைய சம்பளமாம் காணி நாலு ஏக்கர் தந்தா குறைஞ்சா போகும் என்றார் சொழுக்கரின் சின்ன மகன்.கொம்பியூட்டர் ஸ்பெசலிஸ்டாம்,கொழுத்த சம்பளமாம் கொழும்பில் ஒரு வீடு தாருங்கள் என்றார் தம்பிலெப்பையின் மூத்த மகன்.

மார்க்கமான பொடியனாம் வீடு மட்டும் போதுமாம் என்று நீங்கள் வந்தீர்கள்.லாபமாக வருகிறது உடனடியாக வாங்கிப் போட்டுவிடுங்கள் என்றார் உங்கள் மாமியார்.உங்கள் வீட்டாரிடம் விலை பேசினேன்.உங்களை வாங்கிவிட்டேன்.
என்றாலும் மருமகனே,இதைப் போன்ற வியாபாரத்தில் எனக்கு இஷ்டம் இல்லை.வந்த இடத்தில் வாழ்ந்தவனை விரட்டி ஓரத்தில் வைத்து ஒய்யாரமாக உறங்கும் உங்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் வேறுபாடு தெரியவில்லை.அடிமை உள்வீட்டுக்குள், எஜமான் அரச மரத்தடியில்.இந்த சகவாசம் எனக்குச் சரிவராது.உங்களை யார் விரட்டியது?நீங்களாகப் போக விரும்பிவிட்டு என்னை ஏன் குறை கூறுகிறீர்கள் என்று கேட்காதீர்கள்.எனது நியாயம் என்னோடு.

வெளியில் இருந்து வியர்வையோடு வருவேன்.எனது சாய்மணையில் நீங்கள் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருப்பீர்கள்.என்னைக் கண்டதும் அரைவாசி எழும்பி “இருக்கப்போகிறீர்களா” என்று கேட்பீர்கள்.நான் “இல்லை நீங்கள் இருங்கள்” என்று சொல்லப் போவது உங்களுக்குத் தெரியும்.அந்த நிலை எனக்கு வேண்டாம்.
உங்களைத் தேடி யாரும் வரும்போது உள்ளே இருக்கும் என்னைத் தேடிவந்தவர்களை எழுப்பிக்கொண்டு நான் வாங்கிய ‘குஷன் செட்டை’ உங்கள் நண்பருக்குக் கொடுத்துவிட்டு வெளிவிராந்தையில் ரப்பர் கதிரை போட்டு பேசிக்கொள்ளும் கேவலம் எனக்கு வேண்டாம்.

சொந்த வீட்டில் சற்று சத்தமாகப் பேசினாலும் மருமகன் இருக்கிறார் மெதுவாகச் சிரியுங்கள் என்ற உங்கள் மாமியாரின் அதட்டலின் அசிங்கம் எனக்கு வேண்டாம்.
நான் வாங்கிய டீவியில் செய்தி பார்த்துக்கொண்டிருப்பேன்.”அவர் மெச் பார்க்கவேண்டுமாம்” என்று எனது மகளை தூது அனுப்புவீர்கள்.எழும்பிச்செல்லும் ஏமாற்றம் எனக்கு வேண்டாம்.
வீட்டுவாசலில் உங்கள் சைக்கில் சத்தத்தைக் கேட்டு எனது சாரனைச் சரிசெய்யும் சுதந்திரம் இல்லாத கோழைத்தனம் எனக்கு வேண்டாம்.

25 வயது உங்களோடு தோற்றுப் போவதற்கு 65 வயது சுதர்மம் இடம் தரவில்லை.ஒரு மகளைப் பெற்ற பாவத்திற்காக இந்த வீட்டில் நான் அடிமையாய் இருப்பதை விட ஒரு வாடகை குடிசையில் ராஜாவாய் இருந்து விட்டுப் போகிறேன்.
வாழ்க்கையில் சொந்தக் காலில் வாழப் பழகிக்கொள்ளுங்கள். சொந்தக்காரர்களிடமே சுரண்டி வாழாதீர்கள்.ஒற்றைப் பெண்ணைப் பெற்ற ஓரளவு வசதியுள்ள நானே ஓட்டாண்டியாகிவிட்டேன் என்றால் நாலு பெண்ணைப் பெற்ற ஏழையின் நிலையை என்னவென்று சொல்வது.
ஒரு தந்தையின் பாசத்தை துரும்பாகப் பயன��படுத்தி எங்களைத் துவைத்து துருவி எடுக்கிறீர்கள். பெண்ணைப் பெறுவது பரகத் என்பதை�் பொய்யாக்கிய பாவம் உங்களோடுதான்.
கடையில் இருந்ததையெல்லாம் உங்களுக்கு இறைத்துவிட்டு கடனாளியாய் கைவிரித்தபடி செல்கிறேன்.இது ஆயுள் கடனல்ல,பரம்பரைக் கடன்.எப்போது கழிக்கப்போகிறேனோ தெரியாது.

ஆனால் பயப்படாதீர்கள் மருமகனே,இதை யாரிடமும் சொல்லமாட்டேன். எனது உள்ளத்தில் உறுமும் எதையும் உங்களுக்கு காட்டமாட்டேன்.உங்களைப் பார்க்கும் போதெல்லாம் பரவசமாவதுபோல் பல்லிழித்துக்கொள்வேன்.சொந்தக்காலில் நிற்கத்தெரியாத சோம்பேறி என்று மனதுக்குள் சொல்லிக் கொள்வேன்.உங்கள் வீட்டார் வந்தால் விழுந்து விழுந்து கவனிப்பேன்.என்னை வங்குறோத்தாக்கியவர்கள் வெட்கமில்லாமல் வருகிறார்கள் என்று உள்ளே நினைத்துக்கொள்வேன்.எனது மருமகன் போல் உலகில் யாருமில்லை என்று எல்லோரிடமும் சொல்லிக் கொள்வேன்.ஒரு பெண்ணை வைத்து வாழ வழியில்லாதவன் என்று வாய்க்குள் முனகிக்கொள்வேன்.வெள்ளாமை நெல் அனுப்பிவைத்தால் என்ன கவனிப்பு எனது மருமகன் என்று வண்டிக்காரனிடம் சொல்லிவிடுவேன்.எனது விளைச்சலில் எனக்கே நெல் அனுப்புகிறான் என்று எனக்குள் நானே எண்ணிக்கொள்வேன்.எனது மகளோடு மருமகனுக்குத்தான் எத்தனை இரக்கம் என்று அயல் வீட்டுக்காரர்களிடம் கூறி வைப்பேன்.வீடு கொடுக்காவிட்டால் வந்திருப்பானா என்று எனக்குள் நானே கேட்டுக் கொள்வேன்.. நான் உங்களோடே இருப்பேன். உங்களோடே சிரிப்பேன். கடைசிவரைக்கும் எனது வெறுப்பை நீங்கள் கண்டுகொள்ளவே மாட்டீர்கள் இவ்வாறுதானே ஒவ்வொரு மாமனாரும் உலகத்தில் வாழ்கிறார்கள்.

இக்கடிதத்தை உங்களிடம் நான் காட்டவும்மாட்டேன். கிழித்துப்போட்டும் விடுவேன்.வாசித்த கையோடு எனது மகளை விட்டுவிட்டு ஓடிவிடுவீர்களே. எனது மகள்தானே எனது பலவீன்மும் உங்கள் பலமும்.

சரி மருமகனே நேரமாகிவிட்டது.செல்லவேண்டும்.நான் கட்டிய வீட்டை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
நாளை முதல் அழுத உள்ளத்தோடும் சிரித்த முகத்தோடும் அடிக்கடி நாம் சந்தித்துக் கொள்வோம்.வாழ்கையே ஒரு தற்காலிக நாடகம்தானே. மதிப்புக்குரிய மாமனார் எழுதிக்கொள்வது,.

 

Edited by யாயினி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • பொது ஜன பெரமுன  கட்சி ஒரு இனவாதக் கட்சியல்லை. அது அனைவரையும் கொலைசெய்யக் கூடிய  ஒரு பயங்கரவாதக் கும்பல்!
  • இந்தப் பதிவு பலருக்கு உவப்பாக இராது. சிலருக்கு சினம் கூடத் தோன்றலாம். என்றாலும் சொல்வது என் கடமை எனத் தோன்றுவதால் எழுதுகிறேன் இலங்கைத் தேர்தல் முடிவுகளினால் எழுந்த சிந்தனை இது. அங்குள்ள தமிழ் அரசியல்கட்சிகள் பலவாறாகப் பிரிந்து கிடந்தாலும், கோட்டபய, சஜீத் இருவரையும் ஆதரித்துப் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டாலும் தமிழ் மக்கள் பெரும்பாலும் ஒரே நோக்கில் வாக்களித்திருக்கிறார்கள். வேண்டாம் கோட்டபய என்பதுதான் அவர்களது முடிவு இலங்கைத் தேர்தல் முடிவுகள் இன்னொன்றையும் காட்டுகின்றன. பெரும்பான்மைச் சமூகம் ஒரு திரளாகத் திரண்டால் சிறுபான்மையரின் வாக்குகள் எவ்விதமாக இருந்தாலும் பெரும்பான்மையினரின் வெற்றியை பாதிக்காது. . இந்தப் பின்னணியில் சிறுபான்மையினர் சூழ்நிலைகளை எவ்விதம் எதிர்கொள்ளவேண்டும்? அவர்கள் முன் இரு அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று மோதல் (Confrontation) இன்னொன்று அனுசரித்தல் (Conciliation) உரிமைகளை முதன்மையாகக் கருதும் சமூகங்கள் ஒரு போக்கையும், வளர்ச்சியை முக்கியமாகக் கருதும் மனோபாவம் மற்றொரு போக்கையும் தெரிவு செய்து கொள்கின்றன. இலங்கைத் தமிழர்கள் மோதல் போக்கையும், சிங்கப்பூர் தமிழ்ச் சமூகம் அனுசரித்தல் போக்கையும் மேற்கொண்டனர். விளைவுகளை உலகம் கண்கூடாகப் பார்க்கிறது இந்தியாவிலும் கூட தமிழர்களது அரசியல் கட்சிகள் நாடு முழுமையும் பரவிக் கிடக்கும் தேசியக் கட்சிகளோடு தேர்தல் கூட்டு உட்பட பலவித அனுசரித்தல் என்ற அணுகுமுறையைப் பின்பற்றி ஆட்சி அதிகாரத்தை அடைந்திருக்கின்றன. தேர்தல் களத்தில், முரண்பட்ட கட்சிகளோடு கூட்டணி என்ற அணுகுமுறையைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர், அதற்கு முன் பிரிவினை கோரிய அண்ணா அவர்கள் என்பது வரலாறு. அதன் பின் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோரும் பின்பற்றினர். ஒரு கால கட்டம் வரை ஜெயலலிதாவும் பின்பற்றினார். ஸ்டாலின் பின்பற்றி வருகிறார். இதன் காரணமாக மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் அமைச்ச்ரவைப் பதவிகள், ஆகியவற்றைக் கட்சிக்ள் பெற்றன என்பது மட்டுமல்ல, தமிழகத்தின் வளர்ச்சி தொய்வுறாமல் பார்த்துக் கொண்டன இலங்கையில் மலையகத் தமிழர்களின் ஆதரவைப் பெற்ற கட்சியும், இஸ்லாமியர்களின் ஆதரவைப் பெற்ற கட்சிகளும், கிழக்கிலங்கையில் சில தலைவர்களும் இந்த அனுசரித்தல் போக்கை மேற்கொண்டு வந்திருக்கின்றனர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும் மக்களும் இன்று தீர்மானிக்க வேண்டியது அவர்களின் தேவை வளர்ச்சியா? உரிமையா? என்பது இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு திருப்பு முனையாக இருக்கட்டும்   malan naarayanan 
  • பொறுத்திருந்து பாப்போம் காலம் பதில் சொல்லும்.  அண்ணனும் ஒரு காலத்தில்  சொன்னவர், நான் தேர்தலில்  வென்றால் இனப்பிரச்சினையை தீர்ப்பேன் என்று கூறி வென்றார்.  பின் என்ன செய்தார்? கேட்ட குரல்வளையை நசுக்கி குரல் வெளியே வராமல்ப் பண்ணி விட்டு, பிரச்சனையை தீர்த்துவிட்டேன் என்று வீரம் பேசிப் பேசியே வாக்கு கேக்கிறார்.
  • திருப்பி ஒரு தடவை தான் சொன்னதை வாசிப்பாராக ஆனந்த சங்கரியார்.  இணைய மாட்டாதவர் கூப்பிடேல என்று  புலம்புறார்.
  • கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவளிப்பது ஏன்: வரதராஜப் பெருமாள் விளக்கம்