Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

12823315_10156488771455198_5457145909120

ஆஸ்கார் மேடையை மீண்டும் அலங்கரித்த தமிழ்! 

தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக வடநாட்டு ஊடகங்கள் இவரை பற்றி வாய் திறக்கவில்லை. அதற்கும் மேலாக இவர் மேடையில் தமிழில் பேசியது வடநாட்டு இந்தி ஊடகங்களை கோபமடைய செய்திருக்கும் என்பதில் ஐயமில்லை. கோட்டலாங்கோ லியோன் (Cottalango Leon) தமிழகத்தில் தமிழ்வழியில் பள்ளி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை வீதியின் இரு மருங்கிலும் தற்போது வெளிநாட்டு பறவைகளை காலை மாலை நேரங்களில் அவதானிக்க கூடியவாறு உள்ளது.

12748140_1277512265597461_5422900854165312828990_1277512308930790_4692142429938812717915_1277512315597456_1078011776405612828990_1277512308930790_46921424299388891802_1277512438930777_892882187950113912819427_1277512535597434_3196502668239512792372_1277512545597433_7876888898526612795389_1277512638930757_7055997359160412821514_1277512775597410_1828852809980312823235_1277512838930737_7557702631314612794902_1277512742264080_1227807155778112778778_1277512862264068_2221383602343312828508_1277512898930731_1873327847061212794877_1277512935597394_7042821157322812819461_1277513005597387_3728731558296512783719_1277513015597386_57234715458491
 
படப்பிடிப்பு:ஊடகவியளாளர்  மயூரப்ரியன்.(யாழ்ப்பாணம்)
Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூழைக்கடாக்களை எமது மண்ணில் மீண்டும் காண்பது மகிழ்ச்சி..!

செங்கை ஆழியானின் வாடைக்காற்று.. அவர் நினைவைச் சுமந்து வீசட்டும்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புங்கையூரன் said:

கூழைக்கடாக்களை எமது மண்ணில் மீண்டும் காண்பது மகிழ்ச்சி..!

செங்கை ஆழியானின் வாடைக்காற்று.. அவர் நினைவைச் சுமந்து வீசட்டும்!

 வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி நன்றி புங்கையண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சிற்றம்பலம்

"யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே".

திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'எவராலும் எதனாலும் வெள்ளை மாளிகை வாழ்க்கைக்கு தயாராக முடியாது' எனக் கூறிய நான்சி ரீகன் மரணமானார்:-

 

 

12670392_1734152763488884_6167661024977012832342_1734152783488882_5417046442957412806088_1734152793488881_29934725516426

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் மனைவியும் முன்னாள் முதற் பெண்மணியுமான நான்சி ரீகனிற்கு மறைவிற்கு  அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா தனது அஞ்சலியை தெரிவித்துள்ளார். நான்சி ரீகனின் பெருமைக்குரிய முன்னுதாரனத்திலிருந்து நன்மையடைந்துள்ளதாக ஓபாமாவும் அவரது மனைவியும் குறிப்பிட்டுள்ளனர்.

நான்சி ரீகன் எவராலும் எதனாலும் வெள்ளை மாளிகை வாழ்க்கைக்கு தயாராகமுடியாது என எழுதியிருந்தார். அவர் தெரிவித்தது மிகச்சரியான விடயம், எனினும் அவரது பெருமைக்குரிய முன்னுதாரனம் காரணமாக எங்களால் இந்த விடயத்தில் நன்மையடைய முடிந்தது என ஓபாமா தம்பதிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை நான்சி ரீகன் தனது கணவரின் மீது மிகத்தீவிரமான விசுவாசத்தை கொண்டிருந்தார்,அந்த விசுவாசம் அவர் தனது நாட்டின் மீதுகொண்டிருந்த விசுவாசத்துடன் மாத்திரம் பொருந்தக்கூடியது என முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபில்யூ புஷ் தெரிவித்துள்ளார். இதயபாதிப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை மரணமான நான்சி ரீகனிற்கு பல உலகதலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129764/language/ta-IN/------.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Penguin in Antarctica jumping out of the water.jpg பென்குயின் தென் அரைக் கோளத்தில் வாழ்கின்ற, பறக்காத பறவைகளாகும். பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, இவை அண்டார்டிகா போன்ற குளிர்ப் பகுதிகளில் மட்டும் வாழ்பவை அல்ல. பென்குயின்கள் நீர்வாழ்வுக்கு மிகச் சிறப்பாக இசைவாக்கம் பெற்றுள்ளன. இவற்றின் சிறகுகள், பறப்பதற்குப் பயனற்றவை. எனினும் நீரில் பென்குயின்கள் பிரமிக்கத்தக்க வகையில் விரைவாகவும், இலகுவாகவும் நீந்தவல்லவை. படத்தில் பேரரசப் பென்குயின் ஒன்று நீரில் இருந்து வெளியே தாவுகிறது.
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12814000_1570297093285484_38203574153295

வயதான முதியவர்களை சந்திக்க நேரும் போது, அவர்கள் கரங்களை ஆதரவாய் பிடித்து அவர்களிடம் அன்பாக பேசுங்கள்இந்த ஒன்று தான் அவர்களுக்கு ஆத்ம சந்தோஷத்தை தரும்.

 

 

மிருகங்களை பார்க்க மனிதர்கள் வந்து செல்லும் - இடம் மிருககாட்சிச்சாலை!

மனிதர்களை பார்க்க மிருகங்கள் வந்து செல்லும் இடம் -முதியோர் இல்லம்!

 

ஓரளவுக்கு சொல்லப் போனால் வெளி நாடுகளுக்கு அழைக்கபட்ட அனேகமான வயாதான பெற்றோரின் நிலை இது தான்...பிள்ளைகள் தங்கள் கருமங்கள் எல்லாம் முடித்து பெற்றோர் இயலாது போகும் நிலைக்கு தள்ளப்படும் போது முதியோர் காப்பகங்களில் தான் கொண்டு போய் விடுகிறார்கள்..தயவு செய்து எல்லாப் பிள்ளைகளுக்களுக்குமாக சேர்த்து வேண்டிக் கொள்கிறன்..முடிந்தவரைக்கு .
பெற்றோரை உங்கள் கூடவே வைத்திருக்கப் பாருங்கள்...எல்லா இடங்களிலும் எமது பெற்றோர் சந்தோசமாகத் தான் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் என்று இல்லை...கடந்த பல ஆண்டுகளாக முதியோரோடு பழகி இருக்கிறேன்,அவர்கள் ஒவ்வொரு உணர்வுகளும் ஒவ்வொரு விதமானவை...அவைக்கு உரிய மாதிரி எங்களை மாற்றிக் கொள்வது கடினம் ஆனாலும் மாறித் தான் ஆக வேண்டும்..... மனைவி பிள்ளைகளோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் ஆணுக்கோ இல்லை அதே போல் பெண்ணிற்கோ பெற்றோரையும் வைத்து பராமரிப்பது என்பது  மிகவும் இயலாத விடையம்...பிள்ளைகளின் ஆதரவைத் தேடி வந்த பெற்றோர் மீண்டும் ஊருக்கு போய் விடும் சம்பவங்களும் நடக்கிறது...

எங்காவது கொண்டு போய் விட்டுப் போட்டு ஊரில் போய் நின்று ஏதோ குழந்தைகள் காப்பகத்தில் விட்டது போல் தம்பட்டம் அடிக்காதீர்கள்..நானும் எனது பெற்றோர் கூடத் தான் இன்று வரை இருக்கிறேன்..இன்றைய நிலையில் எனது தாயார் ஒரு குழந்தை போல் ஆகி விட்டார்..திடீரென ஏற்பட்ட உடல் நிலை மாற்றம்...

ஆனாலும் நான் கப்பியாகத் தான் வைச்சு பாக்கிறன்..என் நிலைக்கு மற்றவர்களைப் பார்ப்பது என்பது மிகவும் கடினமான செயல்... ஆனாலும் இறுதிவரை காப்பகத்தில் விடும் எண்ணம் இல்லை...என்ன தப்பைச் செய்தாலும் பெற்றோர்,பெற்றோர் தானே...கொஞ்சம் வருத்தம் கூடி கஸரப்படுத்தினாலும் பெடியள் கண்ணடால் உமக்கு கஸ்ரத்தைக் கொடுக்கிறன் என்று எங்காவது கொண்டு போய் விடப் போறாங்கள் என்று கவலைப்பட்டு சொல்வார்..
ஆனாலும் எனது பெற்றோர் என்னை விட்டு எங்கு வாழ்ந்தாலும் என்னிடத்திலிருந்து பெறும் சந்தோசத்தைப் பெற மாட்டார்கள்.நான் பார்ப்பது போலவும் யாரும் பார்க்கவும் மாட்டார்கள்....ஆகவே எமது பெற்றோர் அவர்கள் இல்லாத காலத்தில் நாம் அவர்களுக்கு அது செய்யவில்லை,இது செய்யவில்லை என்று நினைத்து கண்ணீர் விடுவதை விட இருக்கும் போதும் முடிந்தவரைக்கு சந்தோசமாக வைத்து பராமரிப்போம்..

 

 

Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
     மார்ச் 08 திகதியானது உலகளாவியரீதியில் சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகின்றது. சர்வதேச மகளிர் தினமானது 1909ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டுவருகின்றது.

 
Happy-Womens-Day.jpg
 
 
·        பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து ஆகும்.(1893ம் ஆண்டு)

 
·        ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற முதல் பெண்மணி பிரிட்டனைச் சேர்ந்த சார்லொட் கூப்பர், இவர் 1900ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

 
·        பெண்கள் முதன்முதலில் தடகள மற்றும் சுவட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது 1928ம் ஆண்டு அம்ஸ்ரெர்டாம் ஒலிம்பிக் போட்டியிலாகும்.

 
·        பெண்களுக்கான மருத்துவப் பாடசாலையினை நிறுவிய முதல் நாடு ஜப்பான் ஆகும். 1900ம் ஆண்டு யோஷிகா யயோய் என்பவரால் நிறுவப்பட்டது.

 
·        விண்வெளிக்கு பயணம் செய்த முதல் பெண்மணி ரஷ்யாவினைச் சேர்ந்த வெலன்டினா தெரெஷ்கோவா ஆவார். (1963ம் ஆண்டு)

 
HighFlight-ValentinaTereshkova42.jpg
 
 
·        முஸ்லிம் நாடொன்றில் தலைமைத்துவத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட முதல் பெண்மணி பெனாசீர் பூட்டோ ஆவார். இவர் 1988ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக மக்களால் தெரிவுசெய்யப்பட்டார்.

 
Benazir-Bhutto2.jpg
 
·        பெண்கள் பட்டப்படிப்பினை மேற்கொள்ள அனுமதி வழங்கிய முதல் ஐரோப்பிய பல்கலைக்கழகம் சூரிச் பல்கலைக்கழகம் ஆகும்.(1865ம் ஆண்டு)

 
·        ஐக்கிய அமெரிக்க தபால் துறை வரலாற்றில் தபால் முத்திரையில் உருவப் படம் பொறிக்கப்பட்ட முதல் பெண்மணி என்கின்ற பெருமையினைப் பெறுபவர் ஸ்பெய்ன் மகாராணி இசபெல்லா ஆவார்.(1893ம் ஆண்டு)

     கிறிஸ்தோபர் கொலம்பஸ்சின் நாடுகாண் பயணத்திற்கு வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை இவரையே சாரும்.
 
·        எவரெஸ்ட் சிகரத்தினை அடைந்த முதல் பெண்மணி ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த ஜுன்கோ தஃபெய் ஆவார்.(1975ம் ஆண்டு)

 
fl20120527x2b.jpg
 
 
·        ஐக்கிய நாடுகள் சபையானது 1975ம் ஆண்டினை சர்வதேச பெண்கள் ஆண்டாக பிரகடனப்படுத்தியது.

 
·        தற்போது உலகில் 17 நாடுகளில் பெண்கள் ஜனாதிபதிகளாகவும், பிரதம மந்திரிகளாகவும் ஆட்சிபீடத்தில் இருக்கின்றனர். 
    அந்த நாடுகளாவன;  ஜேர்மனி, லைபீரியா, ஆர்ஜென்ரீனா, பங்களாதேஷ், ஐஸ்லாந்து, லுத்துவேனியா, கொஸ்டாரிக்கா, டிரினாட் & ரொபாக்கோ, அவுஸ்திரேலியா, ஸ்லோவாக்கியா, பிரேசில், கொசோவா, தாய்லாந்து, டென்மார்க், ஜமைக்கா, மலாவி, தெ கொரியா

 

மகளிர் தின வரலாறு!

 

Womens%20day300.jpgமார்ச்-8, 1857 - அன்று முதல் உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 -ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆனால், அது வந்த வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான‌ போராட்டத்திற்கான வெற்றிகள் அவ்வளவு எளிதாக கிட்டவில்லை. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் இது.

1910-ம் ஆண்டு பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துகொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினார். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரா செர்கினே, ஒரு தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார். அந்த தீர்மானத்தின் முக்கிய சாரம்சமாக மார்ச் மாதம் 8-ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அந்த தீர்மானம் நிறைவேறாமல் போனது. இதற்கிடையில், 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார். அவர்தான் உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

மார்ச் 8-ம் தேதிக்கும், மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டு பெண் வர்க்கமே அறிந்துகொள்ளாத தினமாகத்தான் இந்த பெண்கள் தினம் இன்று இருக்கிறது. 1789-ம் ஆண்டு ஜூன் 14-ம்‌ தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன் வைத்து, பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கு ஏற்ற ஊதியம், எட்டுமணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.

1907-ல் தொடக்கம். 1909-ல் அமெரிக்காவில் நடைபெற்ற முதல் தேசிய மகளிர் தினம், 1910-ல் இரண்டாவது தேசிய பெண்கள் மாநாடு, 1911-ல் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற தேசிய மகளிர் தினம், 1912-ல் Bread and roses வாசகம், 1914-1916-ல் ரஷ்யா பெண்களுக்கான போராட்டம், 1917-ல் ரஷ்யாவில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட மகளிர் தினம், 1945 தனி பெண்ணுக்கான உரிமை,  உலக பெண்களுக்கான உரிமையாக மாற்றப்பட்ட வருடம். 1975-1977 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது. 2014-ல்  100-க்கு மேற்பட்ட நாடுகளில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

சமீப காலமாகத்தான் இந்தியாவில் மகளிர் தின கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது.

 

12828425_1664900890431354_34331122135608

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12799081_10156708835295637_3801353979194

ஈழத்தில் புதிய சரித்திரம் எழுத எட்டுத்திக்கும் வாழும் அன்னையர்கள், அக்கா, தங்கையர் அனைவருக்கும் " மகளிர் தின வாழ்த்துக்கள்"

அனைத்துலக பெண்கள் நாள் உலகெங்கும் வாழும் பெண்கள் அனைத்து ஒடுக்குமுறைகளுக்காகவும் குரல் கொடுக்கும் நாள். சமூக, பொருளாதார, பண்பாடு என அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் உலகெங்கும் பெண்கள் போராடுகிறார்கள்.. பெண்களுக்காக பெண்கள் மட்டும் அன்றி ஆண்களும் போராடுகிறார்கள் இன்று உலகப் பெண்கள் போல் வாழும் அருகதை எம் தமிழீழ பெண்களுக்கு இல்லை. யுத்தத்தின் கொடுமைகளால் அவர்கள் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்து வருகிறார்கள். இந்த வேளையில் அவர்கள் வலிகளை கூட அவர்களால் வாய் விட்டுச் சொல்ல முடியாது.. அவர்கள் உரிமைகள் ஒட்டு மொத்தமாக மறுக்கப் பட்ட நிலையில் வாழ்வா சாவா என வாழ்வோடு போராடுகிறார்கள். அவர்களை இந்த கொடிய நிலையில் வாழ செய்கின்ற தமிழினப் படுகொலை செய்த ஸ்ரீ லங்கா அரசுக்கு எதிராக எம் பெண்களுக்காக எம் மக்களுக்காக போராடுவது ஒவ்வொரு தமிழனதும் கடன். உலகப் தமிழ் பெண்களே எம் பெண்களுக்காக குரல் கொடுக்க விழித்தெழுங்கள்! இன்றில்லையேல் என்றும் இல்லை. ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல் அனைத்து தமிழர்களும் எம் இனத்தின் சோகம் தீர்க்க போராட வேண்டிய காலம் இது! எழுந்து வா தமிழா. சாதனை படைத்த பெண்மணிகள் மாலதி,அங்கயற்கண்ணி,மேரி கொல்வின் அவர்களுக்கும் வீர வணக்கம்.

12799066_192888237749974_834272339839009

லகமெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர்.வீட்டு வேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.
1857ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.
இதனால் பெண்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி கொடுக்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர், 1857ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன் பிறகு 1907ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராடத் தொடங்கினர். 1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு அவர்கள் காட்டினர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.

1920ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.
இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பெற்ற தாய் தனை மகமறந்தாலும்.
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்.....
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்..
உயிரை மேவிய உடல் மறந்தாலும்....

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நேசிப்பவர்கள் உன்னை சோம்பலினால் நலிவுற விடமாட்டார்கள். அவர்களின் செயல் கூடாத செயலாகத் தெரிந்தாலும் நம் வளர்ச்சி, செழிப்பு எனும் நன்மைகளுக்காக அவர்கள் நம்மை கடினமான பாதையில் தள்ளுவார்கள்!

- பிடித்தது....இல்லாவிட்டால் நமக்கு எதிர்ப்பு உணர்ச்சி வருமா என்ன???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Clocks in most of Canada will spring forward an hour this weekend

Daylight savings time clocks go back Ontario

நேர மாற்றம்..........12.03.2016

85771-Happy-Spring-Blue-Bird.gif?1

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் தேசிய மலர் மாற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய மலராக இதுவரையில் நீலோற்பலம் எனப்படும் நீல அல்லி மலர் கருப்பட்டது. எனினும் இனிமேல் அல்லி மலரே இலங்கையின் தேசிய பூவென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரியல் பல்வகைமை செயலகத்தின் பணிப்பாளர் பத்மா அபோகோன் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்காக அமைச்சரவை அந்தஸ்த்து கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நீலோற்பலம் எனப்படும் நீல அல்லி வெளிநாட்டைச் சேர்ந்த மலர் என்பதால், அல்லி மலரை இலங்கையின் தேசிய மலராக கொள்ள தீர்மானிக்கபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

1690459_1147945511912888_581631016372750

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, யாயினி said:

இலங்கையின் தேசிய மலர் மாற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய மலராக இதுவரையில் நீலோற்பலம் எனப்படும் நீல அல்லி மலர் கருப்பட்டது. எனினும் இனிமேல் அல்லி மலரே இலங்கையின் தேசிய பூவென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரியல் பல்வகைமை செயலகத்தின் பணிப்பாளர் பத்மா அபோகோன் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்காக அமைச்சரவை அந்தஸ்த்து கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நீலோற்பலம் எனப்படும் நீல அல்லி வெளிநாட்டைச் சேர்ந்த மலர் என்பதால், அல்லி மலரை இலங்கையின் தேசிய மலராக கொள்ள தீர்மானிக்கபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

1690459_1147945511912888_581631016372750

வர வரத் தேசிய மலரும்... முகப்புத்தகப் புரோபைல் .. படம் மாதிரி  வந்திட்டுது...!

பூவரசம் பூ இன்னும் வடிவாயிருக்கும்..!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1915209_1115646948469784_711033663183704

டைட்டானிக் கப்பலை மூழ்கடித்த பனிப்பாறையின் வயது 1 லட்சம் ஆண்டுகளுக்கும் மேல்....

#titanic

டைட்டானிக் கப்பலை மூழ்கடித்த பனிப்பாறையின் வயது 1 லட்சம் ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் என லண்டனில் உள்ள ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். 

கடந்த 1912 ஏப்ரல் 10-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு டைட்டானிக் சொகுசு கப்பல் புறப்பட்டது. 2224 பேர் பயணம் செய்த இந்தக் கப்பல், நான்கு நாட்கள் பயணத்திற்குப் பிறகு வடக்கு அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்தபோது பனிப்பாறையில் மோதி விபத்தில் சிக்கி நீரில் மூழ்கியது. 

கப்பலில் பயணம் செய்த பயணிகள் 1500 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். டைட்டானிக் மூழ்குவதற்கு காரணமாக இருந்த அந்த பனிப்பாறை தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில் அந்த பனிப்பாறையின் தொடக்கம் தென்மேற்கு கீரின்லாந்தில் உள்ளது எனவும் அது ஒரு இலட்சம் ஆண்டுகள் பழமையானது எனவும் தெரிய வந்துள்ளது. 

இந்த பனிப்பாறையின் தற்போதைய எடை 75 மில்லியன் தொன்னும், உயரம் 1500 அடியாகவும் உள்ளது. ஆனால் டைட்டானிக் கப்பல் மூழ்கும் போது அதன் எடை 1.5 மில்லியன் தொன்னும் அதன் உயரம் 400 அடியும் கொண்டதாகவே இருந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சிட்டுக் குருவிகள் தினம்!!!
 

10401990_663350733805210_4396861332843335423_663350687138548_5897565110167411284

 

குருவிகள் தினம் கொண்டாடுவது சரிதான்...
குருவிகளை நாம் தான் விரட்டி அழித்து விட்டோம்.
செல்போன் டவர்களினால் அவை வாழமுடியாது போய்விட்டது என்பது உண்மையல்ல. செல்போன் டவர்கள் குறிப்பிட்ட தூரம்வரை தங்களது கதிர்களைப் பரப்புகின்றன. ஆனால் அது மட்டுமல்ல., முழுக்காரணம்.

நாம் தான் அடித்து விரட்டிவிட்டோம். இப்போதும் டவர் இருக்கும் பல ஊர்களில் அவை ஜாலியாக திரிகின்றன.
உம்; மேலப்பாளையம் , பெங்களூரூ, காயல்பட்டிணம்.
உண்மையில் அவை நம்மை விட்டுவிட்டு போனதற்கு பல காரணங்கள் உள்ளன.
அவைகளில் சில.,
1. சிட்டுக்குருவிகளுக்கு மழைக் காலத்தில் உணவும், வெயில் காலத்தில் நீரும் அவசியம். 65 மணி நேரத்திற்கு மேல் அவைகளால் பசி தாங்க முடியாது. ( பருந்துகள் 2 வாரம் பசி தாங்கும். கழுகு 1 மாதத்திற்கு மேல்) பழைய காலத்தில் அவற்றிற்குஎல்லா வீட்டின்முற்றங்களிலும உணவு கிடைத்தது . மனிதரகளை அண்டி வாழ்நததால் இரை தேடும் குணம் குறைந்திருந்தது.
2.அதன் கூடுகள் கூரை வீடுகளிலும் பழம் வீடி, ஓட்டு வாடுகளில் வசித்தது. கான்கிரீட் அவைகள் வாழ்வதற்கு வசதியாய் இல்லை.
3. வருடம் முழுவதும் இனப் பெருக்கம் செய்யும் வசதியை அழித்து விடடோம்.
4.குஞ்சுகள் 10 நாள் பறக்க பழக்குதல் வேண்டும். அதற்கு வழி, இல்லாததால் குஞ்சு அழிமானம் மிகப்பெரிய அளவி90'\. அளவிலானது ஆகிவிட்டது .
5. கூட்டில் குஞ்சுகளின் ரத்தம ஃ குடிக்கும் ஒரு வகை தெள்ளுப் பூச்சிகள பெருத்துவிட்டது. அதனா குஞ்சுகள் இரத்தமின்றி செததுவஅடும்
6. மின் நுண்ணலைகள்...

எனப் பல காரணங்கள் இருக்கின்றன . ஆனால் முதன்மை காரணம் உணவு வழங்கலும், உறைவிடமும் தான். அதற்கு மனிதன் தான்ஃ காரணம். 
உணவு கிடைக்கும் ஊரகளில் இன்னும் வாழ்கினறன.

உருவாக்குவோம் சிட்டுக்குருவிக்கும் ஒரு வீடு. அதுதான் வாழ்வு கொடுக்கும் அரிய செய்வோம்.
மீண்டும் வந்து விடும் ந

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓன்ராரியோவில் தமிழர் ஒருவர் நீதிபதியானார்.

 

 

கனடாவில் நீண்டகாலமாக வழக்கறிஞராக பதவி வகித்த திருமதி. தெய்வா மோகன் அவர்கள் ஒன்ராரியோவில் நீதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டார் என அறியப்படுகிறது.திருமதி. தெய்வா அவர்கள் சாவகச்சேரியினை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

இவர் காலஞ்சென்ற அரசியல்வாதியும், தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவரும் முன்னாள் ஊர்காவற்றுறை பாராளுமன்ற உறுப்பினரும் கனடாவின் மொன்றியால் மாநகர-ில் நீண்டகாலம் வாழ்ந்து மரணத்தை தழுவியவருமான திரு நவரத்தினம் அவர்களின் புதல்வர் தான் திரு ஜெகன் மோகன். இவர் கடந்த வருடம் காலமானார். ரொரென்ரோவில் 1985ம் ஆண்டு தமது சட்ட அலுவலகத்தைத் திறந்தவர் திரு ஜெகன்மோகன்- தெய்வா மோகன் தம்பதியினர்

காலஞ்சென்ற ஜெகன்மோகன் அவர்களின் துணைவியார்தான் தற்போது கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல் தமிழ் பேசும் நீதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள திருமதி தெய்வா மோகன் ஆவார்.

இதில் ஒரு முக்கியமான விடையம் என்னவென்றால் காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் திரு வி. நவரட்னம் அவர்கள் ஒரு சட்டத்தரணி, அவரது புதல்வர் ஜெகன் மோகன் ஒரு சட்டத்தரணி, ஜெகன் மோகன் அவர்களின் துணைவியார் தற்போதைய நீதிபதி- முன்னாள் சட்டத்தரணி, இந்த தம்பதியினரின் ஒரே புதல்வரும் ஒரு சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கதாகும்...

fff

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Why is called Easter island....ஈஸ்டர் தினத்தை முன்னிட்ட ஒரு செய்தி...

It was in the early 18th century when Dutch explorer Jacob Roggeveen was sailing the south Pacific. In his exploration, he “discovered” the island on Sunday, April 5, 1722 — which just so happened to be Easter that year on the Christian calendar....
2000px-Easter_Island_map-en.svg.png
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.