Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் தொடங்கிட்டார்கள்........

Welcome to the 2016 Census

Complete your census questionnaire online today. It’s quick and easy.

Before beginning, please read the following:

Select the "Start questionnaire" button below.

Your browser will automatically be tested to see if it meets the necessary security requirements to begin the questionnaire. You will get a message if you need to update or modify your settings.
 

Start questionnaire

Message from the Chief Statistician

The Census of Population provides a portrait of our people and the places in which we live. Census information is important for your community and is vital for planning its public services. Be part of this new portrait of Canada and complete your census questionnaire.

If you are a farm operator, it is equally important that you complete your Census of Agriculture questionnaire. The Census of Agriculture provides a definitive statistical picture of Canada's farm sector.

To reduce the number of questions on the Census of Population questionnaire, Statistics Canada will obtain your income information from personal income tax and benefits records.

By law, your household must complete a Census of Population questionnaire. Under the Statistics Act, agricultural operators are required to complete the Census of Agriculture. Your answers are collected under the authority of the Statistics Act and will be kept strictly confidential.

The information that you provide may be used by Statistics Canada for other statistical and research purposes or may be combined with other survey or administrative data sources.

Thank you for your cooperation.

Wayne R. Smith
Chief Statistician of Canada

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://www.census.gc.ca/ccr16_r000-eng.html

Link to comment
Share on other sites

 • Replies 3.7k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்

அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters' Day) மே 4ஆம் நாளன்று ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகிறது. வழக்கமாக இந்நாளன்று ஐரோப்பிய நாடுகளில் தீயணைப்பும் படையினர் நாள் கொண்டாடப்பட்டு வந்தது. எனினும் 1999 ஆண்டு ஜனவரி 4 அன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் உயிரிழந்த ஐந்து தீயணைக்கும் படையினரை நினைவுகூருவதற்கு ஆதரவாக உலகெங்கும் மின்னஞ்சல் மூலமாக இடம்பெற்ற பரப்புரையினை அடுத்து மே 4ஆம் நாளை உலகெங்கும் நினைவுகூர முடிவுசெய்யப்பட்டது.

IFFD_ribbon.jpg

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்திகளை இணைக்கும் யாயினிக்கு பாராட்டுக்கள்.

தொடர்ந்தும் இணையுங்கள்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மெதுவாக நகரும்
நத்தை
மழைக்காலத்திலிருந்து
வெயிற்காலம் வரை

 

image.jpg

Edited by யாயினி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

13178817_1130918523633603_57707360025845

கவியரசர் தாகூரின் பிறந்த தினம் இன்று. வங்கம் ஈன்றெடுத்த இணையற்ற புதல்வர் அவர் ;இளம் வயதில் எண்ணற்ற கலாசாரங்களின் சங்கமம் நிகழ்ந்த வீட்டில் பிறந்து வளர்ந்ததால் அவரின் சிந்தனை எண்ணற்ற தளங்களை தொட்டது ;இங்கிலாந்திற்கு சட்டம் படிக்க போய் அதன் மீது மனம் ஒட்டாமல் திரும்பினார் .

ஏகத்துக்கும் பயணம் செய்வதில் விருப்பம் கொண்ட இவர் ஒரு நாள் நதியின் மீது படகினில் போய்க்கொண்டிருந்தார் ;அப்பொழுது விளக்குகள் வீசிய காற்றில் அணைந்துபோயின .நதியின் சலனமற்ற தன்மையை பார்த்துக்கொண்டே ஸ்தம்பித்து நின்றார் ;அங்கே தான் தாகூர் மஹாகவி தாகூர் ஆனார் .வீட்டின் நிர்வாகத்தை கையில் எடுத்துக்கொண்ட தாகூர் கல்விமுறை குழந்தைகளின் மீது வன்முறையை கையாள்வதாக உணர்ந்தார் ;இயற்கையான சூழலில் பிள்ளைகள் கற்கவேண்டும் என விரும்பினார் .

அமைதியின் உறைவிடம் என பொருள் தரும் சாந்தி நிகேதனை உருவாக்கினார் ;அதில் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார் .ஆங்கிலேய அரசிடம் எந்த சூழலிலும் கையேந்த மாட்டேன் என சொல்லி இந்தியர்களின் நிதியுதவியிலேயே அப்பள்ளியை நடத்தினார் .அற்புதமான பல கவிதைகள் எழுதினார் ;அவரின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டதால் மேற்கின் கவனம் பதிந்து கீதாஞ்சலி நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது ;ஆசியாவின் முதல் நோபல் பரிசு இவருக்கே கிடைத்தது .

ஆங்கிலேய அரசின் ஜாலியான்வாலா பாக் படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தன்னுடைய சர் பட்டத்தை துறந்தார் .இவர் இயற்றிய பாடல்களுக்கு இசையும் அமைத்திருந்தார் இவர் ,அவை ரவீந்திர சங்கீதம் எனும் பெயரில் இன்றும் பாடப்படுகின்றன ;நல்ல ஓவியர்,நாவலாசிரியர்,சிறுகதை வல்லுநர்,நாடக ஆசிரியர் என எண்ணற்ற முகங்கள் இவருக்கு . காந்தியை மகாத்மா என அழைத்தது இவர் தான் .அவர் .இந்தியாவின் ஜன கண மண மற்றும் வங்காள தேசத்தின் அமர் சோனார் பங்களா எனும் இரண்டு தேசிய கீதங்களுக்கு ஆசிரியர் இவர் ஒருவரே . என் ஆடைகள், ஆபரணங்களை களைந்து விடு அன்னையே ‘;அவை மணல்வெளியில் ஆனந்தித்து விளையாட பெருந்தடையாக உள்ளன என பாட மட்டுமல்ல அப்படியே வாழவும் செய்தார் தாகூர் .ப்ரணாம் குருதேவ் !

அவரின் HEAVEN OF FREEDOM மற்றும் WALK ALONE எனும் கவிதைகள் உங்களுக்காக

உள்ளம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலைநிமிர்ந்து நிற்கிறதோ,
சிறைவாசங்களின்றி
அறிவு வளர்ச்சிக்கு
எங்கே பரிபூரண
விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய கட்டுப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டு
துண்டுகளாய்ப்
போய்விடவில்லையோ,
வாய்ச்சொற்கள் எங்கே
மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே
தளர்ச்சியின்றி
முழுமையை நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடியாதாரத்தை தேடிச் செல்லும்
தெளிந்த
அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில்
வழி தவறிப்
போய்விட வில்லையோ,
நோக்கம் விரிகவும்,
ஆக்கப் பணி புரிகவும்
உள்ளத்தை எங்கே
வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
விடுதலைச் சொர்க்க பூமியில்
எந்தன் பிதாவே!
விழித்தெழட்டும்
என் தேசம் !

****************
யாரும் உன் குரலுக்கு செவிமடுக்கவில்லையா ?
நீண்ட சுவடுகளை பதித்து தனித்து நட
எல்லாரும் அகக்கதவுகளை மூடி மவுனித்திருந்தால்
உன் மனதை திறந்து,தனித்து பேசு !

தனித்து நட,தனித்து நட,தனித்து நட

சுடும்பாதை தடைகளால் அழுத்தும்
முகங்களை திருப்பிக்கொண்டு கைவிட்டு போவார்
முற்களை நசுக்கு !
உதிரக்காயங்கள் தோய்ந்து ரத்தம் சொட்டும் பாதையில்
கம்பீரமாக பயணிப்பாய்

தனித்து நட,தனித்து நட,தனித்து நட

யாரும் விளக்கை ஏந்த மறுக்கும்
இருள் கசியும் பொழுதை பெரும் புயல் தாக்கி
பிணிநெருப்பை இடிபோல தந்திடுமாயின்
உன் உள்ளத்தை உருக்கி நீயே ஒளியாகு

தனித்து நட,தனித்து நட தனித்து நட....ந்

vikatan

Edited by யாயினி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

நியுயோர்க் புரூக்ளினின் உள்ள தாவரவியல் பூங்கா.Brooklyn Botanic Garden New York May 2015 panorama 2.jpg

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Rabindranath-Tagore2.jpg

தாகூரின் கீதாஞ்சலியின் தாக்கத்தில் கவிமணி சில பாடல்கள் இயற்றியுள்ளார். இவை நண்பர்களின் தூண்டுதலால் 1925-30 காலத்தில் எழுதப்பட்டன என்பர்.

இவற்றில் உள்ள முதல் இரண்டு பாடல்களையும், அவற்றின் ஆங்கில மூலங்களையும் இங்கே இடுகிறேன்.
 

km.png
 
என்றுமெனை அழிவிலாப் பொருளா யியற்றினை

         ஈதுனது திரு வுள்ளமே;

   ஈடற்ற கலமித கவிழ்த்திக் கவிழ்த்தியுயிர்

        ஏனோ திருத்தி வைப்பாய்?

குன்றினொடு குழியெலாம் இச்சிறிய வேயின்வரு

        குழல் கொண்டு சென்ற நீயுன்

  குமுதவாய் வைத்துநவ நவமான இசைகள் செவி

        குளிரவே ஊதி நிற்பாய்

பொன்றுத லிலாதநிலை தரவல்ல உன்கரப்

        புனிதமுடல் தீண்ட லாலே,

  பூரித்த உள்ளமகி ழெல்லையற மாய்ந்ததும்,

       போற்றமொழி யற்று நின்றேன்;

நன்றுதவு கொடைகோடி இக்குழவி கைகளில்

       நாளும்நீ அள்ளி யிடினும்,

  நான்குறைகள் சொல்லி அருள் வேண்டா திருந்திடேன்,

       ஞானஒளி வீசி மதியே!

 
தாகூரின் மூலம்: ( கீதாஞ்சலியில் முதல் பாடல்.  தாகூரே தன் வங்க மொழிப் பாடலிலிருந்து மொழிபெயர்த்தது.) 
gitanjalisongoff00tagouoft-p31.jpg
பண்ணொழுகு பாடலைப் பாடென் றெனக்குமருள்
       பாலிக்கும்வேளைஇந்தப்
  பாரெங்கும் அறியாத கர்வமது பொங்கிப்
       பரந்துளம் விம்ம நிற்பேன்;
அண்ணலுன் திருமுகம் நோக்கிநிற்பேன்விழிகள்
       அருவிநீர் பாய நிற்பேன்;
  ஆகாத குணமெலாம் அடியோடு நீங்கநல்
       அமுதகுணம் ஓங்க நிற்பேன்;
எண்ணரிய ஆழியைத்தாண்டுபுள்போல் அன்பும்
       இறகினை விரிக்கும்அதனால்
  ஏத்தியிசை பாடத் தொடங்குவேன்நீயும் அதில்
       இன்புறுவை என்ப துணர்வேன்;
நண்ணுதற் கானவழி வேறெதுங் கண்டிலேன்;
       நானுமென் களிம யக்கால்,
  நண்பனென் றேயழைக் கின்றனன்என்னையாள்
       நாதனே! ஞான பரனே! 
gitanjalisongoff00tagouoft-p32.jpg
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்,

 

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கடவுச் சொல் தினம் : 2016 இல் பயன்படுத்தப்பட்ட மிகவும் மோசமான கடவுச் சொற்கள் :

 

இந்த வார தொடக்கத்தில்  உலக ‘கடவுச்சொல் தினம்’ கொண்டாடப்படுகிறது. நாள் உலகம் முழுவதும் இணைய பயனர்கள் மத்தியில் நல்ல கடவுச்சொல்லை அதாவது யாரும் யூகிக்க முடியாத கடவுச் சொல்லை பயன்படுத்துவதை  ஊக்குவிக்க ஒரு தினமாக கொண்டாடி  வருகின்றனர்.

SplashData என்கிற வருடாந்திர பட்டியலின்  அடிப்படையில்,  கடந்த  ஆண்டின்  போது கசிந்த 2 மில்லியன் கடவுச்சொற்களை இருந்து தொகுக்கப்பட்ட சில கடவுச் சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி,  இனி இணைய பயனர்கள் இதுபோன்ற . ‘மோசமான கடவுச்சொற்களை ‘ பயன்படுத்துவதனை  நிறுத்தி கொள்ள வேண்டும்.

download (6)

 
 இந்த பட்டியலில் பட்டியலில் மக்கள்  எளிதில் guesseable கடவுச்சொற்களை பயன்படுத்துவதனால்   ஹேக்கிங் மற்றும் மற்றும் அடையாள திருட்டு ஆபத்துகளில் இருந்து  தங்களை காத்து வைத்து கொள்ளலாம். ஆகையால் இனிமேல் .  பயனர்கள் ஷாப்பிங், வங்கி, சமூக ஊடகங்கள் மற்றும் இன்னும் போன்ற நமது பல்வேறு ஆன்லைன் கணக்குகள் போன்ற அணுகலை பாதுகாக்க இதுபோன்ற கடவுச் சொற்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

 123456

* password

*12345678

* qwerty

* 12345

* 123456789

* football

* 1234

1234567

* baseball

* welcome

1234567890

* abc123

* 111111

* 1qaz2wsx

* dragon

* master

* monkey

* letmein

* login

* princess

* qwertyuiop

* solo

* passw0rd

starwars

Edited by யாயினி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

image.jpgimage.jpg

நினைவில் கொள்க - 2016ஆம் ஆண்டுக்கான கனடிய மக்கள் தொகை கணக்கெடுப்பை பூர்த்தி செய்யவேண்டிய இறுதித் திகதி இன்றாகும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பை பூர்த்தி செய்யவேண்டியது சட்டமாகும்.

Today is the deadline to complete your 2016 Canadian Census. 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ராதிகா, பிரகால், நீதன், அமுதா, தியோ

கைவசம் இருப்பது ஒரு தொகுதி 
போட்டியிடுபவர்கள் ஐந்து தமிழர்கள்

‪#‎ஸ்காபுரோ‬-ரூஜ் ரிவர் இடைத் தேர்தல்

Edited by யாயினி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

image.jpg

இன்று மே 12......... உலக செவிலியர் தினம்...!!...

துடிப்பாகப் போராடி எண்ணற்ற உயிர்களைக் காத்த, காக்கும் செவிலியர்கள் ஏராளம் ஏராளம்.........
செவிலியர்கள் இன்றி மருத்துவர்களும் இல்லை, மருத்துவமனைகளும் இல்லை......!!

இத்தகைய ஈடில்லா சேவையில் ஈடுபட்டிருக்கும் செவிலியர்கள் அனைவருக்கும் என்

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

-இன்று இருண்டநாள்-

இனங்களிலே சபிக்கப்பட்ட இனம்போல் திட்டமிட்டு திரும்பத்திரும்ப தமிழ்இனத்தையே சின்னாபின்னமாக்கி சூறையாடும் சிங்கள பேய்களின் ஈனச்செயல்கள்தான் அதிகம்....
அதிலும் கடல்மார்க்கத்தில் குமுதினியை குருதிசுமக்க வைத்து கடல் அன்னையையே சிவப்பாக்கி உலகையே உறையச்செய்த அந்த கரிநாள் இன்றுதான்....
15.05.1985...அன்றுதான் நெடுந்தீவு பூபாளத்தின் இனிமையை இறுதியாய்ச் சந்தித்தது.எப்போதும் போலவே எதிர்பார்புக்களாலும் தம்மை சுற்றியநினைவுகளாலும் மனங்களை நிறைத்த நம் உறவுகள் குமுதினியையும் நிறைத்தார்கள்.
காலைப்பொழுதின் இனிமை கடற்காற்றின் இதம் கடல்நீரின் உப்புச்சாரல் எல்லாமே ஒன்றாகி மனதின் உணர்வுகளை மென்மையாக்கி நினைவுகளை அகலவிரித்து இயற்கையின் அரவணைப்பின் சுஜத்தின் சோகங்கள் தற்காலிகமாகவேனும் மறந்திருந்த நம் உறவுகளின் அமைதி நீடிக்கவில்லை..!
நடுக்கடலில் வழிமறித்த சிங்களக்காடையர்களின் காட்டுமிராண்டித்தனத்தின் முன்னால்..! எம்மை ஒன்றும் செய்யாதீர்கள் என கதறினார்கள்...மன்றாடினார்கள்....புலம்பினார்கள்.. அவலக்குரல்எழுப்பினார்கள்..அத்தனையும் கொலைவெறிபிடித்த சிங்கள கடல்பேய்கூட்டத்தின் முன்னால் தோற்றுப்போனது. 
கொச்சைத்தமிழின் உச்சரிப்பில் உரக்க பெயரை எழுப்புமாறும் கடல்ப்பேய்களிடமிருந்து கட்டளையும் பிறந்தது. அப்பாவி உறவுகள் தயங்கத்தயங்கி கூனிக்குறுகி உச்சரிக்க அந்தக்கொடுரம் தாண்டவமாடியது. 
எம் உறவுகள் துடிக்கத்துடிக்க கொலைவெறிகொண்ட கடல்ப்பேய்கள் கூரிய ஆயுதங்களினால் ஈவிரக்கம் எதுவுமின்றி வெட்டியும் குத்தியும் குதறப்பட்டுசரிக்கப்பட்டனர்.சரிந்தவர்களில் சிலர் கடலுக்குஇரையாகினர். குமுதினியில் இருந்து எழுந்த மரண ஓலம் யாருக்கும் தெரியாது...!
உறவுகள் குதறப்பட்ட அந்த இறுதிக்கணம் என் உடன்பிறப்பு பச்சிளம்பாலகி எதைத்தான் எண்ணியிருப்பாளோ..? என்னதான் நிகழ்கிறது என்பது எதனையும் அறியாத இந்த பிஞ்சுமழலை இந்த உலகினை கண்திறந்து பார்த்து ஏழுமாதங்களே...!
இந்தமழலையால்கூட கொலைவெறிப்பேய்களிடமிருந்து எதையும் பெறமுடியாமல்ப்போனது.பேய்கள் அன்பையும்அறநெறியையும் போதித்த புத்த பெருமானின் வாரிசுகளாம்..! எதுவும் அறியாத மழலை மேனியும் முக்கூர்முனை கொண்ட ஆயுத்த்திற்கு பலியாகியது. ஒன்றரைமணி நேரம் குமுதினியை குதறிய நாய்கள் நடுக்கடலில் விட்டு மறைந்தார்கள்..தொலைந்தார்கள்...! 
உச்சத்தில் நின்றிருந்த சூரியனும் நயினையம்பதித்தாயும் நடுக்கடலில் நிகழ்ந்த கொடுரத்தினை மனதினுள் புதைத்துக்கொண்டு மௌனமாகினர். 
உறவுகளைப் பிரித்தெடுத்தாலும் அதன் உணர்வுகளை பிரிக்கவே முடியாது..! வாருங்கள் உறவுகளே இன்று இவர்களுக்காய் அஞ்சலிப்போம்....!

-என்றும் உறவுகளுடன்
யாழ் சபேசன்
நெடுந்தீவு-13

 
யாழ் சபேசன்'s photo.

image.jpg

Edited by யாயினி
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • என்னைப்பொறுத்தவரை நீங்கள் கூறியது சரியே.. பாலகுமாரனின் புத்தகங்களை தேடி வாசித்த காலங்களும் உள்ளது.. பாலகுமாரன் எழுதிய “ இது போதும்” என்ற 📖  வாங்கி வைத்துள்ளேன் .. இன்னமும் வாசிக்க தொடங்கவில்லை🙂
  • முதல் வீடியோவிலும் பார்க்க இரண்டாவது வீடியோ நல்லா இருக்கு but First video: 814 views Oct 17, 2021 Vs. Second video: 268 views May 2, 2021   Please watch from 5:05 mins   சிவரதன் voice > நான்தான் இஞ்ச குடியிருக்கிறனில்ல ...            
  • பசில் மகே கித்தே.......என சில்வாவின் மகள் பாடுவார்
  • ஒரு கலகக்காரனின் கதை – ஜே. ஜே. சில குறிப்புகள் நாவல் – இராயகிரி சங்கர் October 16, 2021 1981ல் எழுதப்பட்ட நாவல் ஜே.ஜே.சில குறிப்புகள். எழுத்தாளன் மீது பெரும் பித்துக்கொண்ட வாசகன் ஒருவனின் பார்வையில் சொல்லப்படும் புனைவு. ஜோசஃப் ஜேம்ஸ் என்கிற மலையாள எழுத்தாளனை வாசிக்க நேர்ந்து அவனிடம் தன்னை அறிமுகம் செய்துகொள்ளத்துடிக்கும் பாலு என்கிற இளைஞனின் பரவசத்துடன் நாவல் ஆரம்பம் ஆகிறது. பாலுவின் பார்வையின் ஊடாக .ஜே.ஜே. வின் மொத்த வாழ்க்கையும் நாவலில் குறிப்புகளாக, நினைவோடை உத்தியில் பிறரின் சொற்களாக, ஜே.ஜே.வே எழுதிய நாட்குறிப்புகளாக விரிகிறது. வெளியாகி கிட்டத்தட்ட முப்பந்தைந்து ஆண்டுகளாகிவிட்ட நிலையில்  இந்நாவலின் முக்கியத்துவம் என்ன? அதற்குமுன் இந்த நாவலின் பேசுபொருள் என்ன என்பதும், அறிமுக வாசகர்கள் எதிர்கொள்ள  இருக்கும் தடைகள் எவை என்பதையும் கொஞ்சம் சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். இந்நாவல் நடக்கும் காலம் சுதந்திரப் போராட்டம் நடந்து முடிந்து பொன்னுலகம் வாய்க்கும் என்று நம்பி ஏமாந்து,  மனித மனத்தின் பேராசைகளால் தியாகங்கள், லட்சியவாதங்கள் துார்ந்து போயிருந்த காலம். பொதுவுடைமைச் சித்தாந்தம் அவ்வெற்றிடத்தை நிரப்பும் என்று ஏகமனதாக அறிவுஜீவிகள் நம்பி, பெரும் ஊக்கத்தோடு அவர்களை இயங்கச்செய்திருந்த காலமும்கூட. இலக்கியத்தில் கலை கலைக்காக என்றும், கலை மக்களுக்காக என்றும் தனித்தனி அலைகள் குமுறிக்கொண்டிருந்த காலம். முன் மாதிரிகள் ஏதும் இந்நாவலின் வடிவத்திற்கு தமிழில் இல்லை. கலைஞனின் தேடலில் விழைந்த வடிவம். கூறுமுறையும் முன்னர் அனுபவப்படாதது. இதுவே ஆரம்ப வாசகர்களிடம் இந்நாவல் ஒருவித அந்நியத்தன்மை கொள்ள காரணமாக அமைகிறது. ஜே.ஜே. இடதுசாரி சிந்தனைகளின் மீது ஈர்ப்புக்கொண்டவன். நாளடைவில் தோழர்களிடம் தத்துவம்  அவர்களின் சுயநலத்தை நிறைவேற்றிக்கொள்ள வாய்த்த ஒரு உபாயமாக மாறிப்போனதைக்கண்டு கலங்கி, அவற்றில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டவன். இது அப்போதைய காலகட்டத்தில் பரவலாக நிழந்த உண்மை. சுந்தர ராமசாமியே ஆரம்பத்தில் முற்போக்குக் கதைகள் எழுதியவர்தான். தண்ணீர், கோவில்காளையும் உழவுமாடும் போன்ற கதைகள் அக்காலத்தியவை. அதன்பின் ஸ்டாலினிய நிர்வாகத்தினால் மனம்நொந்து அக்கிருந்து வெளியேறுகிறார்.  ஏழைப்பங்காளிகளின் உலகத்தை சமத்காரமாக ரத்தமும் சதையுமாக எழுதிப் பேரும் புகழும் பெற்றுவரும் முல்லைக்கல் மாதவன் நாயர் மீது ஜே. ஜே. வைக்கும் விமர்சனங்கள் இன்றைக்கும் முக்கியமானவை. முல்லைக்கல் நாயர் ஒரு போலி என்ற ஜே.ஜேயின் அவதானிப்பு கடும் விமர்சனமாக உருவெடுக்கிறது. எழுதுவதும் வாழ்வதும் வெவ்வேறாக இருக்கும்போது புரட்சியாளன் பிம்பத்தை முல்லைக்கல்லுக்கு அளிக்க ஜே.ஜே. ஒப்புக்கொள்ளவில்லை.  உண்மையைக் காணும் வேட்கை, அதை எழுத்தில் பதிவுசெய்யத்துடித்த வேகம் என்று தன் செயல்களால் தொடர்ந்து எதிரிகளைச் சம்பாதித்துக்கொள்கிறான் ஜே.ஜே. தன்னுடைய மொழியான மலையாள இலக்கிய உலகத்தின் மீது அவன் காட்டும் சமரசமற்ற கறாரான விமர்சனம் அவனுக்கு அளிப்பது புறக்கணிப்பையும் பரம்பரையாகத் தொடர வாய்ப்புள்ள பகைகளையும். பாலு ஜே.ஜேயை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நுால்தான் இந்நாவல். தொடர்கதைகளும் நெடுங்கதைகளும் பரவலாக எழுதப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் இந்நாவலின் வடிவம் அளித்த அந்நியத்தன்மை இன்றும் வாசகர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. இதில் வாசக ஊகங்களுக்கான இடைவெளி ஏராளம். காலம் முன்பின்னாக ஊஞ்சலாடி குதிக்கிறது.  ஜே.ஜே. என்கிற எழுத்தாளன் தமிழில் உள்ளவன் என்றும் ஒரு கற்பனைக்காக புதுமைப்பித்தன் என்றும் கொண்டு மலையாள இலக்கிய உலகத்தின் மீது ஜே.ஜே.கொட்டும் விமர்சனங்கள் தமிழ் இலக்கிய உலகம் சார்ந்தவை என்றும் கற்பனை செய்துகொண்டால் இந்நாவலின் முக்கியமான பரிமாணம் பிடிபடும். மொத்த நாவலும் சிந்திக்கும் மனிதர்களின் மீது தயவுதாட்சண்யமின்றி கடுமையான விமர்சனங்களை முன்னிறுத்துகிறது. போலிகளைக்கண்டு கொந்தளிக்கிறது. துவேசம்கொள்கிறது. ஏளனம்செய்து சபையில் இருந்து விரட்டி அடிக்கிறது. சிந்தனை என்ற பெயரில் நடக்கும் மொண்ணைத்தனங்களை செவிட்டில் அறைந்து அது சிந்தனை அல்ல சிந்தனைப் போலி என்று உரக்கச் சொல்கிறது. மேலும்  பொதுவுடைமை தத்துவத்தை பாவித்தவர்கள்  குறித்த துல்லியமான விமர்சனம் நாவலில் பெரும்பாலான இடங்களில் வருகிறது. எண்பதுகளில் நாம் எப்படி இருந்தோம் என்பதையும், நம் அறிவுலகக் சீரழிவுகள் எவை என்பதையும்  விமர்சனப்பூர்வமாக பதிவுசெய்துள்ளது என்பதே இந்நாவலின் முக்கியத்துவம். இரண்டாவதாக தமிழ்ச்சமூகத்தின் மீது சுந்தர ராமசாமிக்கு இருந்த விமர்சனங்கள். அவை இன்றும் மாறாமல் தொடரந்து கொண்டிருக்கின்றன. வணிக எழுத்தின் மீது சு.ரா.விற்கு  இருந்த எண்ணம் இந்நாவலில் ஓரிடத்தில் பதிவாகியுள்ளது.  ”மாயக் காம உறுப்புகளை மாட்டிக்கொண்டு அவ்வுறுப்புக்களை ஓயாமல் நம்மேல் உரசிக்கொண்டிருக்கும் அற்பங்கள்” என்று அது வெளிப்படுகிறது. அக்கவலை “சீதபேதியில் தமிழ் சீதபேதி என்றும், வேசைத்தனத்தில் தமிழ்வேசைத்தனம் என்றும் உண்டா? என்று சினங்கொள்கிறது. சு.ரா.வின் பாலயத்தில் இலக்கிய உலகம் எப்படி இருந்தது என்பதை ”நான் பள்ளி இறுதியாண்டில் படித்துக்கொண்டிருந்தபோது என் மனத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியவன் ஜே.ஜே. தமிழ் நாவல்களில் அதாவது தமிழ்க் காதல் கதைகளில் அல்லது தமிழ்த் தொடர்கதைகளில் என் மனத்தைப் பறிகொடுத்திருந்த காலம். அன்று வானவிற்கள் ஆகாயத்தை மறைத்திருக்க, தடாகங்கள் செந்தாமரைகளால் நிரம்பியிருந்தன. உலகத்துப் புழுதியை மறைத்துக்கொண்டிருந்தார்கள் பெண்கள். ஆஹா தொடர்கதைகள் ஒரு குட்டியை ஏக காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டன்கள் காதலிக்கிறார்கள். பரிசுச் சீட்டு யாருக்கு விழும், கண்டுபிடிக்க முடிந்ததில்லை என்னால்.”  என்று வர்ணிக்கிறார். ஆன்மீக வாதிகளிடம் அவருக்கு ஏற்படும் அவநம்பிக்கை துரதிருஷ்டவசமானது. நாராயணகுருவின் சீடர் என்று தன்னைச் சொல்லிக்கொண்ட ஒருவரை சந்தித்து கொஞ்ச நாட்கள் அவரோடு தங்க நேரிடுகிறது பாலுவுக்கு. விரைவிலேயே அவரின் நம்பிக்கைகளால் ஒன்றும் இம்மண்ணில் விளையப்போவதில்லை என்று சோர்வுற்று விலகிச்செல்கிறார். ஆயினும் அவரைப்போன்ற லட்சியவாதிகளின், சந்நியாசிகளின் அத்தனை உழைப்பும் ஏன் வீணாகிப்போகிறது என்ற துக்கம் அவரை வாட்டுகிறது. பாலு ஜே.ஜே.யைச் சந்திக்க எழுத்தாளர் மாநாட்டுக்குச் செல்கிறான். அங்கு அவனுக்கு சரித்திர நாவலாசிரியர் திருச்சூர் கோபாலன் நாயரைச் சந்திக்க நேரிடுகிறது. அப்போது அவரின் நாவல்கள் குறித்து ஜே.ஜே. சொல்லும் வரிகள் அங்கதம் நிரம்பியவை. ”கொல்லங்கோட்டு இளவரசி உம்மிணிக்குடடியை அவளைத்துரத்திய அரசர்களிடமிருந்தும். முடிவில் அவளைக் காப்பாற்றிய இளவரசனிடமிருந்தும் விடுவித்து, திருச்சூர் கோபாலன் நாயருக்கே மணம் முடித்து வைக்க என்னால் முடியுமென்றால் , சரித்திர நாவல் எழுதும் அவஸ்தையில் இருந்து அவருக்கு நிரந்தர விமோசனம் கிடைக்கும்”, “பாவம் திருச்சூர், கற்பனைக் குதிரைகள் மண்டிக் கிடக்கும் லாயம் அவருடையது. ஏதோ சிலவற்றை அவிழ்த்துவிடுகிறார். அவை விண்ணென்று மேலே போய் மேகக் கூட்டங்களிடையே புரண்டு உடல் வலியைப் போக்கிக்கொண்டு சூரியனைப் பின்னங்காலால் உதைத்துதள்ளி, கிரகங்களை முட்டிக்குப்புறச் சாய்த்து சில நட்சத்திரங்களையும் விழுங்கிவிட்டு சந்திரனின் ஒரு துண்டை வாயில் கவ்விக்கொண்டு திரும்பி வந்து சேருகின்றன.” என்கிறான். அதைவிட உச்சபட்ச அங்கதம். ஜே.ஜே.பாலுவைச் சந்தித்த உடன் கேட்கும் கேள்வி.  ”சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா?”. இந்நாவலின் சில தருணங்களை ஜெயமோகன் கைப்பற்றி பின்தொடரும் நிழலின் குரல் என்ற பெரிய நாவலாக எழுதியிருக்கிறார். முல்லைக்கல் மாதவன் நாயரிடம் ஜே.ஜே.யைப்பற்றி விவரிக்கும் அரவிந்தாட்ச மேனன்  ஆல்பெர்ட் என்கிற இடதுசாரி தொழிற்சங்க வாதி ஒருவரைப்பற்றி சொல்கிறார். தனியாளாக மலைக்காட்டில் சங்கங்களை ஏற்படுத்தியவன் என்றும் பின்னாளில் கார் பங்களா நிலம் என்று ஒரு குட்டி முதலாளியாக தன்னை நிறுவிக்கொண்டவன் என்றும் வருகிறது. ஜே.ஜே.யின் நாட்குறிப்பு பகுதியில் ஒரு வரியில் ட்ராட்ஸ்கி ட்ராட்ஸ்கி என்று மாணவர்கள் புலம்பிக்கொண்டார்கள் என்று எழுதியிருக்கிறார். பின்தொடரும் நிழலின் குரல் நாவலின் கதைக்களத்தை ஜெயமோகன் இந்நாவலின் வரிகளில் இருந்தும் அதன்பின் அவருக்கு ஏற்பட்ட தொழிற்சங்க அனுபவங்களில் இருந்தும் எழுதியிருக்கலாம். அந்நாவலும் இந்நாவலைப்போன்ற வடிவ ஒற்றுமை கொண்டுள்ளது என்பது இந்த எண்ணத்தை வலுப்படுத்துகிறது. உண்மையான கலைவெளிப்பாட்டின் இயல்பு என்ன என்பதற்கு நாவலில் வரும் ஒரு காட்சிச்சித்தரிப்பு உதாரணமாக அமைகிறது. அது ஜே.ஜே. டயரிக்குறிப்பாக வருகிறது.  “முல்லைக்கல் உன் எழுத்தை நான் மனத்தால் வெறுக்கிறேன். மாட்டுக்குச்சொறிந்து கொடு அது நல்ல காரியம். ஆனால் மனிதனுக்கு ஒருபோதும் சொறிந்துகொடுக்காதே…லுாக்கோசின் மகள் ஏலியம்மாவின் வீணை வாசிப்பை நான் கேட்கச் சென்றிருந்தபோது அவளுடைய தனி அறையில் வீணையின் கம்பிகள் அதிர்ந்தன. ஏலிக்குட்டியோ எங்களுடன் இருந்தாள். நாங்கள் வேகமாக ஓடிக் கதவைத்திறந்து பார்த்தபோது கம்பிகள் தானாக அதிர்ந்துகொண்டிருந்தன. மேல்மாடி உத்தரத்தில் ஒரு தச்சன் ஒரு ஆப்பை மரச்சுத்தியலால் அறைந்துகொண்டிருந்தான். இதுதான் மனிதாபிமானம்.” நாவலில் அநேகம் இடங்கள் கவிதைவரிகளாக கவித்துவம் கொண்டிருக்கின்றன. சம்பத் காணும் கனவு அதன் வரலாற்றுப்பின்புலம், கரும்புள்ளிகளாத்தெரிந்து யானை உருப்பெற்று மீண்டும் கரும்புள்ளிகளாக யானை மறையும் மாயத்தோற்றம். சம்பத் காணும் பரவசமான சூரிய உதயம் என்று நாவல் முழுதும் சிந்தனையின் பாய்ச்சலையும் கலைவெளிப்பாட்டையும் காணலாம். படைப்பு மொழியோ சன்னதம் வந்து வேட்டைக்கு ஏகும் சாமியாடியுடையது. மந்திரங்கள் போன்று இந்நாவல் வெளிவந்த காலங்களில் சிலவரிகள் இலக்கிய வாசகர்களால் ஓதப்பட்டு வந்தன. அவற்றில் சில ”எனது குடி தற்காலிகத் தற்கொலை – நான் உயிர்வாழ அவ்வப்போது தற்கொலைகள் அவசியமாகின்றன”” ”மூலதனம் இல்லாமல் முதலாளி ஆக இன்று இரண்டு முக்கியமான வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தொழிற்சங்கம் , மற்றொன்று பாஷை. பாஷை என்பது மொழி மூலம் மக்களின் உணர்ச்சியை, முக்கியமாக மேடைகளில் துாண்டுவதற்கான ஆற்றல். மக்களின் மனத்தேவைகளைப் பெரும் மாளிகைகளாக எழுப்பி அவர்கள் முன் காட்டும் காரியம்.” ”சஞ்சலமின்றி முடிவெடுப்பது. சரியோ தவறோ அதன்பின் அதில் ஆழ்ந்து விடுவது. அதன்பின் எதிர்நிலைகளைப் பற்றி உணர்வில்லாமல்  இருப்பது. உயர்வோ தாழ்வோ இவை நிம்மதியானவை. மனநிம்மதி எப்போதும் மந்தத்தைப் பார்த்துக் கண்சிமிட்டுகிறது போலிருக்கிறது” ”பாஷை என்பது வேட்டை நாயின் கால்தடம். கால்தடத்தை நாம் உற்றுப்பார்க்கும்போது வேட்டைநாய் வெகுதுாரம் போயிருக்கும்.” ”ஆத்மாவை ஜேப்படிக்க ஒரு உடலுக்குள்தான் எத்தனை கைகள்” தமிழ்ச் சமூகத்தின் போலித்தனத்தின் மேல், சிந்தனைச்சோம்பல் மேல்  சுந்தர ராமசாமிக்கு இருந்த எண்ணங்கள்தான் இந்நாவலாக உருப்பெற்றுள்ளது. தமிழில் இதுபோன்று தன் உடல்முழுக்க சிந்தனையின் முத்திரைகள் கொண்ட வேறொரு நாவல் இல்லை. அது ஒன்றே இந்நாவலின் பேரழகு.     https://mayir.in/essays/rayakirisankar/1788/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.