Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் யாயினி  ...............வாசகர் அநேகர் கருத்திடுவோர் ஒரு சிலர் தான்.

தொடருங்கள் உங்களுக்கான அங்கீகாரம் என்றும் இருக்கிறது 

Link to comment
Share on other sites

 • Replies 3.7k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்

மெரிக்காவில் தெருவோர தோசை கடை 
DosaMan in NY
Dosa Man in NY - Must have Masala

 

அமெரிக்காவில் தோசை மனிதன் என்று செல்லமாக அழைக்கப்படும் திருக்குமார் உலகப் புகழ் பெற்ற நியூயார்க் தோசை எனும் பெயரில் தனது சிறிய இழுவை வண்டியில் தோசை வியாபாரத்தை ஆரம்பித்தார்.
வாஷிங்டன் தென்மேற்கு பகுதியில் ஸ்கொயர் என்ற சிறுவர் பூங்காவிற்கு அருகாமையில் 2001ம் ஆண்டு வியாபாரத்தை ஆரம்பித்தார்.
இவர், பரிமாறும் காய்கறிகள் மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு அடைத்த முறுமுறுப்பான சமோசா மற்றும் தோசையை உண்பதற்காக ஒரு நீண்ட வரிசையில் அமெரிக்கர்கள் காத்திருகின்றார்கள்.
இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்த திருக்குமார் 1995ம் ஆண்டு மற்றைய புலம்பெயர்ந்தவர்கள் போன்றே பச்சை அட்டை லாட்டரி (green card lottery) மூலமாக தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அமெரிக்கா நாட்டு நியூயார்க் நகரத்தில் குடியேறினார்.
ஆரம்பத்தில் தனது மனைவி பிள்ளைக்காக கட்டுமான வேலை, ஒரு எரிவாயு நிலையம் மற்றும் தனது நண்பரின் உணவகம் என கிடைத்த வேலைகளை செய்து சொந்தமாக தொழில் செய்ய வழி தேடினார்.
தான் நினைத்தபடி தொழில் தொடங்க அமெரிக்க சட்டப்படி 27,000 டாலர்களை செலுத்த 31/2 வருடங்கள் கடுமையாக உழைத்து, சேமித்த பணத்தை கொண்டு நியூயார்க் தோசை எனும் வீதியோர உணவகத்தை ஆரம்பித்தார்.
இன்று, உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில், அவரது மலிவான மற்றும் ருசியான உணவிற்காக உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தருகின்றனர்.
கலிபோர்னியா மற்றும் ஜப்பானில் ரசிகர் சங்கமும் உள்ளது. 2002 ஆம் ஆண்டு நியூயார்க் பத்திரிகை மூலம் இவருடைய உணவகம் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டது.
அதனை தொடர்ந்து உலகம் முழுவதும் நியூயார்க் தோசை பற்றி செய்தித்தாள்களிலிருந்து வெளிவந்தன.
மிகப் பிரபலமான நடைபாதைகள் சமையல்காரர்களுக்கும் மற்றும் தெரு விற்பனையாளர் Vendy விருது 2007ல் திருக்குமாருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Edited by யாயினி
 • Like 5
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

happy-fathers-day_dsc00879.jpg அனைத்து தந்தையர்களுக்கும் இனிய தந்தையர் தின நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உலக அகதி நாள் (World Refugee Day), ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது.

2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆபிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20 இல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும்.

அன்றைய நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) ஒவ்வோர் ஆண்டும் இந்நிகழ்வுகளுக்கான கருப்பொருளைத் தீர்மானிக்கிறது.

10345540_782778465089304_596190015423894

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் 
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இ*ளமையும் 
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் 
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் 
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு 
துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய 
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே! 
ஆதிகட வூரின் வாழ்வே! 
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே! 
ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! 
அருள்வாமி! அபிராமியே! 
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! 
அருள்வாமி! அபிராமியே!


தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Alerts for: City of Toronto

Warnings

11:29 AM EDT Monday 20 June 2016
Heat Warning in effect for:

 • City of Toronto

Hot and humid conditions will continue today with temperatures forecast to reach the low to mid thirties and Humidex values near 40.
An approaching cold front will bring scattered showers and thunderstorms this afternoon and early this evening, followed by cooler and less humid conditions.

While heat can put everyone at risk from heat illnesses, health risks are greatest for
- older adults;
- infants and young children;
- people with chronic illnesses such as breathing difficulties, heart conditions or psychiatric illnesses;
- people who work in the heat;
- people who exercise in the heat;
- homeless people; and
- people without access to air conditioning.

Drink plenty of liquids especially water before you feel thirsty to decrease your risk of dehydration. Thirst is not a good indicator of dehydration.

Heat warnings are issued when very high temperature or humidity conditions are expected to pose an elevated risk of heat illnesses, such as heat stroke or heat exhaustion.

Please continue to monitor alerts and forecasts issued by Environment Canada. To report severe weather, send an email to storm.ontario@ec.gc.ca or tweet reports to #ONStorm.

 

cp24.com

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
 
nagesh-limg2.jpg
 
 
நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...
 
- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்
 
வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
 
நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.
 
ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.
 
கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.
 
அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
 
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.
 
மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!
 
நான் வாழை அல்ல...! சவுக்குமரம்....

image.jpg

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

world music day.........இன்று உலக இசை தினம்!!!

bannr.jpg

hqdefault.jpg

instruments.jpg

10464360_783325305034620_568055410570399

 

இன்று உலக இசை தினம்.உலகில் உள்ள அத்தனை இசைக் கலைஞர்களையும் கௌரவிக்கும் நாளாக ஜுன் 21ம் திகதி உலக இசை நாளாக அறிமுகப்படுத்தப்படுள்ளது..

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இசையால் வசமாக இதயமுண்டோ…!

அந்தவகையில், இசை தொடர்பிலான சில சுவாரஷ்சியமான தகவல்கள்…!

 
v பியானோ இசைக்கருவியில் மொத்தமாக88 விசைக்கருவிகள் உண்டு. இதில் 52வெள்ளை விசைக்கருவிகளும், 36 கறுப்புவிசைக்கருவிகளும் அடங்கும். 
yamaha-clavinova-clp465gp-polished-ebony
v உலகில் மிகப்பழமையானஇசைக்கருவியாக கருதப்படுகின்றகழுகின் எலும்பினால் தயாரிக்கப்பட்டபுல்லாங்குழல் தென்மேற்கு ஜேர்மனியில்கண்டுபிடிக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கதாகும். இது 35,000ஆண்டுகள் பழமைவாய்ந்தது எனஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

_45967547_bone_flutehf_jensen.jpg
 
v இசை மீதான பயம் மெலோபோபியா(Melophobia) எனப்படுகின்றது.

v அயர்லாந்து நாட்டு குற்றி நாணயத்தில்உள்ள இசைக்கருவி யாழ் (Harp) ஆகும்.

Coin.Euro.1Euro.Ireland.02.jpg4554354d-4
 
v 1877ம் ஆண்டு ஜேர்மனி நாட்டினைச் சேர்ந்தஇசையமைப்பாளர் ஜொகன்னஸ் பிராம்ஸ்அவர்களுக்கு கேம்பிரிட்ஜ்பல்கலைக்கழகம் கெளரவ பட்டமளிக்கமுன்வந்தது, ஆனால் படகு பயணபயத்தின் காரணமாக தனக்கானகெளரவமளிப்பினை அவர் நிராகரித்தார்.

 
v   முதன்முதலாக தொலைபேசிஇணைப்பினூடாகஇசையானது 1876ம் ஆண்டுஅனுப்பப்பட்டது. 1876ம் ஆண்டு தொலைபேசிகண்டுபிடிக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கதாகும்.
 
 
v உலகில் அதிகளவில் விற்பனையாகும்இசைக்கருவி ஹார்மோனிகா ஆகும். 


 
folk.jpg
vஅண்மைய நாட்களில் DJ (Disc Jockey)என்கின்ற வார்த்தைமிகப்பிரபலமானதொன்றாகவிளங்குகின்றது. இவ்வார்த்தைமுதன்முதலில் 1937ம் ஆண்டுபயன்படுத்தப்பட்டது.

 
 
¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯

http://kklogan.blogspot.ca/

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

“ 
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
 
Lankathas Pathmanathan's photo.
 
45 mins · 
 

ஸ்காபுரோவில் 16 வயதான யாருக்சன் உதயச்சந்திரன் என்ற சிறுவன் காணாமல் போயுள்ளதாக ரொறன்ரோ காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை முதல் இந்தச் சிறுவனைக் காணவில்லை எனக்கூறும் காவல்துறையினர் இவர் இறுதியாக Brimley மற்றும் Ellesmere சந்திப்புக்கு அருகாமையில் திங்கள் 12:30 மணியளவில் காணப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

The Toronto Police Service is requesting the public’s assistance locating a missing boy. 

Yarukshan (Yoshi) Uthayachandran, 15, was last seen on Monday, June 20, 2016 at 12:30 a.m., in the Brimley Road and Ellesmere Avenue East area. 

இவர் குறித்த தகவல் அறிந்தவர்கள் காவல்துறையினரை நாடவும்.

call @ 416-808-4100
crime Stoppers anonymously @ 416-222-TIPS (8477)
online @ www.222tips.com
text TOR and your message to CRIMES (274637)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சின்ன உயிர்களைக் கூட 
அலட்சியம் செய்வதில்லை
நடிகர் பார்த்திபன்.

அவர் வளர்க்கும் குட்டித் தாவரமிது.

 
'சின்ன உயிர்களைக் கூட அலட்சியம் செய்வதில்லை நடிகர் பார்த்திபன். அவர் வளர்க்கும் குட்டித் தாவரமிது.'
 • 60,002 views?
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

'புத்தகங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!'....

image.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கவியரசர் கண்ணதாசன்  

வெங்கடேசன் 

kannathasan.jpg


ஜூன் 24. கவிஞர் கண்ணதாசனின் பிறந்த தினம். ‘தினமணி’யில்  2014-இல் "  தமிழறிஞர்கள் அறிவோம்"  தொடரில் வந்த   ஒரு கட்டுரை இதோ:
===

முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக விளங்குவது நமது தொன்மையான தமிழ்மொழி. காலந்தோறும் ஆற்றல் மிகு கவிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் தோன்றி, தமிழின் இளமைப் பொலிவை காத்து வந்துள்ளனர். அவர்களில் முக்கியமான இடம் வகித்து, வெள்ளித்திரையிலும் மெல்லிய தமிழை வாழவைக்க முடியும் என்று நிரூபித்தவர் கவியரசர் கண்ணதாசன் ‘கவியரசு’ எனப் போற்றப்பட்டவர்.

தமக்கெனத் தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டவர். அரசியலிலும் ஆன்மிகத்திலும் அவர் வாழ்வில் நேர்ந்த மாற்றங்களுக்கேற்ப, அவர் சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் நேர்ந்தன; அவற்றையொட்டி அவர் கவிதையும் முரண்பாடுகளைக் கண்டு வளர்ந்தது. தமிழ் வழங்கும் இடங்களில் எல்லாம் அவரைச் சிறப்பாகத் திகழ வைத்தவை அவர் எழுதிய ஆயிரக்கணக்கான திரைப்பாடல்களே.

சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதியின் சிறுகூடல்பட்டியில் பெற்றோர் சாத்தப்பனார் - விசாலாட்சி ஆச்சிக்கு 1927, ஜூன் 24 ல் பிறந்தவர் முத்தையா,  பின்னாளில்  கண்ணதாசன் ஆனது சுவாரசியமான கதை. அதை அவரது 'வனவாசம்' நூலைப் படித்தால் உணரலாம்.

கல்வி: சிறிகூடல்பட்டியில் ஆரம்பக்கல்வி, அமராவதி புதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 15 வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். 17 வயதில் அவரது முதல் கவிதை வெளிவந்தது.

புனைப்பெயர் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி

தொழில் - கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்

எழுதிய காலம்: 1944 - 1981

முதல் குறுங்காவியம்: மாங்கனி. இவை டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் சிறையிலிருந்துகொண்டு படைத்தது. (1952-53)

மணவாழ்க்கை: 1950ல் கண்ணதாசனின் மண வாழ்க்கை தொடங்கியது. கவிஞருக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி பெயர் பொன்னழகி என்கிற பொன்னம்மா. இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்கள். அலமேலு, தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்கள் (விசாலாட்சி என்பது கண்ணதாசனின் தாயாரின் பெயர்).

இரண்டாவது மனைவி பார்வதிக்கு காந்தி கண்ணதாசன், கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்கள். ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்கள். (காந்தி கண்ணதாசன் தற்போது 'கண்ணதாசன் பதிப்பக'த்தின் அதிபர்).

மூன்றாவது மனைவி புலவர் வள்ளியம்மைக்கு, விசாலி மனோகரன் என்ற ஒரே மகள். (கண்ணதாசன் இறந்தபோது விசாலிக்கு 4 வயதுதான். பிற்காலத்தில், சினிமாவிலும், டெலிவிஷன் தொடர்களிலும் நடித்தார்). கண்ணதாசன் தன் வாழ்க்கை வரலாற்றை, ஒளிவு மறைவு இன்றி 'வனவாசம்' என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். அது அவருடைய மறுபக்கத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறது. தன் குணச்சித்திரத்தை இரண்டே வரிகளில் பாடலாக எழுதியுள்ளார்.

'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு; ஒரு கோலமயில் என் துணை இருப்பு' என்பதே அப்பாடல். இப்பாடல், அவரே பாடுவது போல ரத்த திலகத்தில் இடம் பெற்றுள்ளது.

அரசியல்: 1949ல் திமுக தொடங்கி அரசியலில் பல்வேறு அனுபவங்களை தந்தது.

திமுகவிலிருந்து விலகல்: 1960-61 ஆம் ஆண்டுகளில் தி.மு.க.விலிருந்து விலகிச் சிறிது காலம் கழித்துக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

ஆரம்ப காலத்தில் பகுத்தறிவு என்ற போர்வையில் நடந்த நாத்திக பிரசாரத்தில் மூழ்கிய கண்ணதாசன், அதிலுள்ள ஏமாற்றுவித்தையை உணர்ந்து ஆத்திகப் பாதைக்கு திரும்பினார். ஆரம்ப காலத்து திமுக தலைவர்களுள் ஒருவராக விளங்கிய கண்ணதாசன், அரசியலில் துரோகமும் சுயநலமும் கோலோச்சுவது கண்டு விரக்தியுற்று 1960-61 ஆம் ஆண்டுகளில் அதிலிருந்து விலகினார். சில காலம் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்த அவர் அரசியல் தனக்கு ஒத்துவராது என்று முற்றிலும் விலகினார்.

கண்ணதாசனின் ஆளுமை என்பது, அவரது சாகாவரம் பெற்ற இலக்கியங்களில் தான் நிலைகொண்டுள்ளது. நான்காயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகள், ஐயாயிரத்திற்கு மேற்பட்ட திரைப்பாடல்கள், அற்புதமான துள்ளுதமிழ் நடையுடன் கூடிய நூல்கள், கட்டுரைகள், சிறு காப்பியங்கள், நவீனங்களை எழுதியது கண்ணதாசனின் சாதனை. தமிழில் புதிய மறுமலர்ச்சியை பாரதிக்குப் பிறகு ஏற்படுத்தியவர் கண்ணதாசனே.

இவரது 'சேரமான் காதலி' என்ற புதினம் 1980 ல் சாஹித்ய அகாதெமி விருது பெற்றது. 'குழந்தைக்காக' என்ற திரைப்படத்திற்கு எழுதிய திரைவசனத்திற்காக (1961) இவருக்கு தேசிய விருது கிடைத்தது. திரைப்படல்களிலும் செந்தமிழ் துள்ளி விளையாடுவது கண்ணதாசனின் சிறப்பு. பண்டைய இலக்கியங்களில் அவருக்கு இருந்த தேர்ச்சி திரைப்பாடல்களில் வெளிப்பட்டது. சந்தமும், செந்தமிழும் எந்த சிரமும் இன்றி கைகோர்த்தன, கண்ணதாசனின் பாடல்களில். அவர் ஆசுகவியாகவே திகழ்ந்தார்.

 பத்திரிக்கை: அரசியல்வாதி, திரையிசைக் கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர், நடிகர், படத் தயாரிப்பாளர் என்ற பன்முகங்களுடன், பத்திரிகையாசிரியராகவும் கண்ணதாசன் விளங்கினார். அவர் நடத்திய சண்டமாருதம், திருமகள், முல்லை, திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல் திரை, கண்ணதாசன் ஆகிய இதழ்கள் தமிழ் இதழ்களின் வரலாற்றில் குறிப்பிடத் தக்கவையாக இன்றும் பேசப்படுகின்றன. குறிப்பாக தென்றலில் அவர் தீட்டிய கூர்மையான அரசியல் நையாண்டியுன கூடிய  உருவக கட்டுரைகள் அக்காலத்தில் பெரும் விழிப்புணர்வையும் பரபரப்பையும் உருவாக்கின.

அரசவை கவிஞர்: தமிழ்நாட்டின் 'அரசவை கவிஞராக (ஆஸ்தான கவிஞர்) கண்ணதாசனை எம்.ஜி.ஆர். நியமித்தார். தமிழ்நாட்டில், காங்கிரஸ் ஆட்சியின்போது நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அரசவைக் கவிஞராக இருந்தார்.

அதன் பிறகு அப்பதவி ரத்து செய்யப்பட்டது. 1977 தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று, தமிழக முதல்வரானார். அவர் கண்ணதாசனை, 28-3-1978-ல் 'அரசவைக் கவிஞர்' ஆக நியமித்தார்.

அர்த்தமுள்ள இந்து மதம்: அர்த்தமுள்ள இந்து மதம் (பத்து பாகங்கள்), வனவாசம், மாங்கனி, ஏசு காவியம் ஆகியவை கண்டிப்பாகப் படிக்கப்பட வேண்டிய நூல்களாகும். பகவத் கீதைக்கும் அபிராமி அந்தாதிக்கும் சௌந்தர்யா லகரிக்கும் (பொன்மழை) கண்ணதாசன் விளக்கம் எழுதி இருக்கிறார்.

சுயபிரகடனம்: கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கை கட்டுப்பாடற்றது. மனித பலவீனங்களுக்கு சாட்சியாக விளங்குவது. அதை அவரே தனது சுயசரிதையில் கூறி இருக்கிறார். '' நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழுங்கள்'' என்பதே கண்ணதாசனின் சுயபிரகடனம்.

தமிழகத்தில் நாத்திகவாதமும் பிரிவினைவாதமும் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில், அதே பிரசாரக் காலத்திலிருந்து விடுபட்டு, தேசியத்தையும் தெய்வீகத்தையும்  உயர்த்திப் பிடித்த குரல் கவிஞர் கண்ணதாசன். மக்களிடம் வெகுவாகப் புழங்கிய திரையிசைப்பாடல்களின் மூலம் தனது கருத்துக்களை ஆர்ப்பாட்டமின்றி அறிவுறுத்திய தேசிய சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது.

கண்ணதாசனின் நூல்கள்:

பிரதானமானவை

இயேசு காவியம்

அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)

திரைப்படப் பாடல்கள்

மாங்கனி

கவிதை நூல்கள்:

கண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில்

பாடிக்கொடுத்த மங்களங்கள்

கவிதாஞ்சலி

தாய்ப்பாவை

ஸ்ரீகிருஷ்ண கவசம்

அவளுக்கு ஒரு பாடல்

சுருதி சேராத ராகங்கள்

முற்றுப்பெறாத காவியங்கள்

பஜகோவிந்தம்

கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்

புதினங்கள்:

அவள் ஒரு இந்துப் பெண்

சிவப்புக்கல் மூக்குத்தி

ரத்த புஷ்பங்கள்

சுவர்ணா சரஸ்வதி

நடந்த கதை

மிசா

சுருதி சேராத ராகங்கள்

முப்பது நாளும் பவுர்ணமி

அரங்கமும் அந்தரங்கமும்

ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி

தெய்வத் திருமணங்கள்

ஆயிரங்கால் மண்டபம்

காதல் கொண்ட தென்னாடு

அதைவிட ரகசியம்

ஒரு கவிஞனின் கதை

சிங்காரி பார்த்த சென்னை

வேலங்காட்டியூர் விழா

விளக்கு மட்டுமா சிவப்பு

வனவாசம்

அத்வைத ரகசியம்

பிருந்தாவனம்

வாழ்க்கைச்சரிதம்:

எனது வசந்த காலங்கள்

எனது சுயசரிதம்

வனவாசம்

கட்டுரைகள்:

கடைசிப்பக்கம்

போய் வருகிறேன்

அந்தி, சந்தி, அர்த்தஜாமம்

நான் பார்த்த அரசியல்

எண்ணங்கள்

தாயகங்கள்

வாழ்க்கை என்னும் சோலையிலே

குடும்பசுகம்

ஞானாம்பிகா

ராகமாலிகா

இலக்கியத்தில் காதல்

தோட்டத்து மலர்கள்

இலக்கிய யுத்தங்கள்

போய் வருகிறேன்

நாடகங்கள்:

அனார்கலி

சிவகங்கைச்சீமை

ராஜ தண்டனை

கவிஞரின் பழமொழிகள்:

கையெழுத்துப் போடாத செக்கில் எத்தனை ஆயிரம் ரூபாய் வேண்டுமானாலும் எழுதலாம், செய்யப் போவதில்லை என்று முடிவு கட்டிவிட்டால், எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் செல்லலாம்!

முட்டையைக் கொடுத்துக் காசு வாங்கிறவன் வியாபாரி, காசைக் கொடுத்து முட்டையை வாங்குபவன் சம்சாரி, எதையும் கொடுக்காமல் எல்லாம் வாங்குபவன் அரசியல் வாதி.

கடிகாரம் மணியைக் காட்டுகிறது. காலண்டர் தேதியைக் காட்டுகிறது. தேர்தல் ஜாதியைக் காட்டுகிறது.

தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்!

யாருக்காகவும் என்னை மாற்றி கொள்ளாதே

ஒருவேளை மாற நினைத்தால்

ஒவ்வொரு மனிதர்களுக்கும்

நீ மாற வேண்டி வரும்.அழும் போது தனிமையில் அழு,

சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி!

கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்,

தனிமையில் சிரித்தால்

பைத்தியம் என்பார்கள்.நதியில் விளையாடி, கொடியில் தலைசீவி

          நடந்த இளந்தென்றலேமழைகூட ஒருநாளில் தேனாகலாம்

          மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்

ஆனாலும் அவையாவும் நீயாகுமா?

          அம்மாவென் றழைக்கின்ற சேயாகுமா?

உணர்ச்சிகளைச் சொல்லும்போது நேராகவும் கூராகவும் அவர் வெளிப்படுத்த தவறியதில்லை.நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?

நான்பேச நினைப்பதெல்லாம் நீபேச வேண்டும்.

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை.

சொல்லாத சொல்லுக்கு விலைஏது மில்லை.

தத்துவத்தைத் திரைப்பாடல்களில் மனமுருகக் காட்டியவர் கண்ணதாசன்.

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா-என்

இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா.

நூற்றுக்கணக்கான பாத்திரங்களின் ஆயிரக்கணக்கான உணர்வுகளின் நுட்ப வேறுபாடுகளைக் கண்ணதாசன் சித்திரித்ததுபோல வேறொருவர் சித்திரித்ததில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல்களை படைத்த கவிஞன் கண்ணதாசன். திரைப்படக் கவிஞராக புகழ்பெற்ற கண்ணதாசன் தான் இந்துவாக இருந்தாலும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளதோடு அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.

மக்கள் மனங்களிலும் உதடுகளிலும் அன்றும் இன்றும் என்றும் அசைப்போடும் பாடல்கள்:

"கலங்காதிரு மனமே ,உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே." என்று பாடல் எழுதி அவரது கனவை எல்லாம் நனவாக்கிய கவிஞர் அடுத்து...

போனால் போகட்டும் போடா .

இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா ?

--------------------------------------------------

வீ டுவரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ ?

................................

மனிதன் மாறி விட்டான்

மதத்தில் எறி விட்டான்

.........................................................

உன்னைச் சொல்லி குற்றமில்லை

...........................................................................

கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்

அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும் .

...................................................................................

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

.................................................................................................

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

........................................................................................................

உள்ளம் என்பது ஆமை -அதில்

உண்மை என்பது ஊமை

.....................................................................................................................

பிறக்கும் போது அழுகின்றான் .

....................................................................................................................................

நிலவைப் பார்த்து வானம் சொன்னது

என்னை தொடதே .

.........................................................................................................................................................

கவலை இல்லாத மனிதன் படம் எடுத்து நஷ்டப்பட்டு  கவலைப்பட்ட வரலாறும் உண்டு.

"நோட்டெழுதி வாங்கிய கடனுக்கு

பாட்டெழுதி வாங்கிய பணம் போகத் தொடங்கியது ." என்று சொன்ன வரிகள் இன்றும் பலரின் உதடுகளில் உறவாடி வருகின்றன.

மணிமண்டபம்: தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

கவிஞரின் இரங்கல் கவிதை: மறைந்த பிரதமர் நேரு மீது மிகுந்த பற்று வைத்திருந்த கண்ணதாசன். 1964-ல் நேரு மறைந்தபோது அவர் மீது கொண்டிருந்த பக்திக்கு சான்றாக கண்ணதாசன் 'சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதா' என்று எழுதிய இரங்கல் கவிதை விளங்குகிறது.

அந்த கவிதை-----------

சீரிய நெற்றி எங்கே?

சிவந்த நல் இதழ் எங்கே?

கூரிய விழிகள் எங்கே?

குவலயம் போனதெங்கே?

நேரிய பார்வை எங்கே?

நிமிர்ந்த நன் நடைதான் எங்கே

நிலமெல்லாம் வணங்கும் தோற்றம் நெருப்பில் வீழ்ந்த திங்கே

ரோஜா மலரே ஏன் மலர்ந்தாய்?

எங்கள் ராஜா இல்லையே மார்பினில் சூட

தாயே எனக்கொரு வரம் வேண்டும்

தலை சாயும் மட்டும் நான் அழ வேண்டும்

சாவே உனக்கொருநாள்

சாவு வந்து சேராதோ

சஞ்சலமே நீ ஒரு சஞ்சலத்தைக் காணொயோ?

தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமோ?

தெய்வமே உன்னையும் நாம் தேம்பி

அழ வையோமோ

கண்ணதாசனின் ஆசையும் மறைவும்:

கண்ணதாசன் பொது நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் பேசி வந்தார். அப்போதெல்லாம் அவர் தனது இறுதி நாட்கள் பற்றியும், மரணத்தைப் பற்றியும் குறிப்பிடலானார். தன்னுடைய மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவரே உணரலானார். 'மரணத்தை ரகசியமாக இறைவன் வைத்துள்ளதால்தான் மனிதன் ஓரளவுக்காவது மனிதாபிமானத்துடன் நடக்கிறான்' என்று ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருக்கிறார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில், 'காமராஜர் போல, மறைந்த பட அதிபர் சின்னஅண்ணாமலை போல மரணம் திடீர் என்று வரவேண்டும். என் கண்ணனிடம் எனது கடைசி ஆசையாக இதைத்தான் கேட்டு வருகிறேன்' என்று கூறிவந்த கவிஞர் வெள்ளித்திரையில் ஒரு முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர். உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரப்படி 10.45 மணிக்கு மறைந்தார்.

[ நன்றி : தினமணி ] 

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அக்காப்பிள்ளையும் நானும் <3 <3 <3 [6]

எத்தொலைவுக் கோயில் ஆனாலும்
செருப்புத் துறந்து போகும்
அம்மாவின் ஒவ்வோர் கால் ரேகைகளும்
என் இதயத்தில் கீறிய
வலி ரேகைகளே

அம்மாக்கள் வலி சுமந்த கதைகள்
என் தலை முறையோடாவது
முடிந்து போகட்டும்

- ம.தி.சுதா

‪#‎akkappillai‬

 
MaThi Sutha's photo.
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எழுதிச்சென்ற பக்கம்.......83

 
 

புரியாத போது தொடங்கி...!!!!
புரியும் போது முடிவடைகிறது...!!!
""வாழ்க்கை""

 
கவி வைரமகள்'s photo.
 
 
Sahana Sahana's photo.
Edited by யாயினி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்


இன்றைய கண் விழித்தல்
நிகழ்வானது எனது 
அறையருகேயுள்ள
சாளரத்தின் வழியாக
கேட்கும் புதிய
பிறப்பின் பயனாய்
சிறகடித்து பறக்க
துடிக்கும் புறாக்களிதும்
காதிற்கினிய இசை
எழுப்பும் குருவிகனின்-இனிய

சந்தத்தோடும்  தொடர்ந்தது...

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10000000_723519977790119_1390396525_n.jp
ROBERTO MACHADO NOA/LIGHTROCKET/GETTY IMAGES
CN Tower: Toronto Landmark Observers 40th Anniversary on June 26
The tower was opened on June 26, 1976. At the time, the 533.33-meter tower was the world's tallest free-standing structure in the world, the Toronto Star reported.
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.