Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

 • Replies 3.7k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்
 • ஆயிரம் புள்ளினளை அள்ளித் தந்த அனைத்து உறவுகளுக்கும் 
 • மனம் நிறைந்த நன்றிகள். 1,000 ???
 • Like 7
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நியாயமாய் பார்த்தால் உங்களுக்கு இன்னும் அதிகமாய் வந்திருக்க வேண்டும்...! நாங்கள் சைக்கிளுக்கு காத்தடிக்கிற மாதிரி  அமுக்க அமுக்க அது ஓட்டை ரியூப்பால போனமாதிரி புஸ்  புஸ் எண்டு போகுது ...!  மேலும் உங்களின் அதி சிரத்தையுடன் கூடிய கோரிக்கை மோகனிடம் நிறைவேறியதால்தான் கொஞ்சம் சீக்கிரமாய் 1000 வந்திருக்கு .....!  வாழ்த்துக்கள் ....! :11_blush:

சே .... 10  புள்ளிகள் கேட்டிருக்கலாம் , இல்லையா சகோதரி. அந்தாள் இப்படி வள்ளலாய் இருக்கும் என்டு யார் கண்டது ...!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
 • இனிய காலை வணக்கம்...have a grate weekend..?

நவராத்திரி ஏழாம் நாள்...!

 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஆயிரமாவது புள்ளியை அடுத்து வரும் இரண்டநை ஆண்டுகளில் பெறுவேன் என்று நினைக்கிறேன்...ஏன் எனில் இவற்றை பெறுவதற்கும் மிகுந்த சிரமபட்டேன் ...எல்லாருக்கும் எல்பாரையும் பிடீக்கும் என்றில் எல்லாமும் பிடிக்கும் என்றில்லை...எனது பக்கத்திற்கும் அந்த நிலை தான்....it's ok..

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உலகத்தின் முதல் தத்துவஞானி என போற்றப்படுபவர் சாக்ரடீஸ். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர். உலகில் எந்த மதமும் தோன்றாத காலக்கட்டத்திலேயே மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கியவர்.
''எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும், ஏனெனில் நான் ஒரு அறிவாளி'' என்பது சாக்ரடீஸின் புகழ்பெற்ற தத்துவம்.
பிளாட்டோ
க்ரீஸில் கி.மு 348-ம் ஆண்டுகளில் வாழ்ந்த தத்துவஞானி. பிளாட்டோவின் தத்துவங்கள்தான் 2400 ஆண்டுகளாக உலகத்தை ஆண்டு வருகிறது. சாக்ரடீஸின் மாணவரான பிளாட்டோ மேற்கத்திய அறிவியல், வாழ்வு மற்றும் கணித தத்துவத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர். கண்மூடித்தனமான மத நம்பிக்கைகளை உடைத்ததில் ப்ளாட்டோவின் தத்துவங்களுக்கு பெரும் பங்கு உண்டு.
'உள்ளடக்கத்துடன் வாழ்வதே மிகப்பெரிய செல்வம். நல்லவர்களுக்கு சட்டங்கள் தேவையில்லை, ஏனெனில் அவர்கள் பொறுப்புடன் வாழ்வார்கள். கெட்டவர்கள் தங்களுகே உரிய சட்டத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள்'' என்பது பிளாட்டோவின் புகழ் பெற்ற தத்துவம்.
அரிஸ்டாட்டில்
மனிதன், இறைவன், அரசியல், மூன்று பிரிவுகளையும் அலசி ஆராய்ந்து தமது தத்துவ தரிசனமாக உலக்கு வங்கியவர் அரிஸ்டாட்டில். இவர் பிளாட்டோவின் மாணவர். மாவீரனாகத் திகழ்ந்த அலெக்சாண்டருக்கு பன்னிரண்டு ஆண்டுகள் நண்பராகவும், ஆசிரியராகவும் இருந்தவர் அரிஸ்டாட்டில்.
“இந்த உலகம் இறைவனால் தோற்றுவிக்கப்படவில்லை. ஆனால் இந்த உலகை இயக்குபவன் இறைவனே!” “மனிதன் தனிமனிதச் சிந்தனை கொள்ளாமல், சமூகச்சிந்தனையோடு வாழ வேண்டும்'' என்கிறார் அரிஸ்டாட்டில்
கார்ல் மார்க்ஸ்
பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் முக்கியமானவர் கார்ல் மார்க்ஸ். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில், வரலாற்றை ஆராய்ந்து சொன்ன இவரது தத்துவங்கள், சமூக பொருளாதார அரசியல் அரங்கில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
''மூலதனம் இறந்த தொழிலாளரை போன்றது. இது உயிருள்ள தொழிலாளரின் உழைப்பை உறிஞ்சும் வாழ்கிறது'' என்பது மார்க்ஸ்சின் கருத்து.
டார்வின்
'மனிதன் எப்படித் தோன்றியிருப்பான்?' என்ற பன்னெடுங்காலமாக தொங்கி நின்ற கேள்விக்கு தெளிவான விடையை சொன்னவர். மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியை பல நூற்றாண்டுக்கு முன்பே தெளிவுபடுத்திய வகையில், பல ஆராய்ச்சிக்கான கதவுகளை அகல திறந்து வைத்த பெருமைக்குரியவர்.
''மனிதன் ஒரு மணி நேரத்தை வீணாக்கிறான் என்றால், அவன் வாழ்கையில் மதிப்பை உணரவில்லை என்று அர்த்தம்'' என்கிறார் டார்வின்
விவேகானந்தர்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவராக திகழ்ந்தவர் விவேகானந்தர். இவரின் கருத்துக்கள் இளைஞர்களிடையே மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
'' நீங்கள் யாருக்கும் உதவி செய்ய முடியாது. சேவை மட்டுமே செய்ய முடியும்'' என்பது விவேகானந்தரின் புகழ் பெற்ற கருத்து.
வள்ளலார்
வள்ளலார் என்ற இராமலிங்க அடிகளார் ஓர் சிறந்த தத்துவ ஞானி. சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக ஆன்மீகவாதிகளாலே விமர்சனத்திற்கு உள்ளானவர். ''அறியாமை என்னும் மாயத்திரைகள் நம்மை விட்டு விலகினால் அருட்பெருஞ்சோதியான ஆண்டவரை நாம் தரிசிக்கலாம்'' என்பது வள்ளலாரின் வாதம்.
ஓஷோ
சிறு வயதிலிருந்தே தியானத்தில் ஈடுபட்ட ஓஷோ, தன்னுடைய இருபத்தொன்றாவது வயதில் ஞானம் அடைந்தார். ஞானமடைதல் என்பது, முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்பு உணர்வு நிலை என்பதை குறிப்பதாகும். கெளதமபுத்தர், கபீர், ரமணர் மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்கள்தான்.
''கடவுள் உன்னிடமிருந்து தன்னை எப்போதும் மறைத்துக் கொள்வதில்லை.நீ தான் உன்னுடைய கோப தாபங்களால் அவரைக் காணமுடியாதபடி கண்களை மூடி வைத்துக் கொள்கிறாய்'' என்கிறார் ஓஷோ.
புத்தர்
தத்துவ ஞானி கௌதம புத்தரை அடிப்படையாகக்கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும் புத்த மதம் ஏற்றுக்கொண்டுள்ளது.
''பிராத்தணைகளை விட மிக உயர்ந்தது பொறுமை தான்'' என்பது புத்தரின் புகழ்பெற்ற பொன்மொழி.
மகாவீரர்
சமண சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய துறவி. மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் ‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ என்ற போதனையை போதித்தவர்.அவருடைய போதனைகளும், தத்துவங்களும் இன்றும் உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு போற்றப்படுகிறது.
''கவனமுடன் செயலாற்றுங்கள்..நல்ல விஷயங்களில் மட்டும் மனதை திருப்புங்கள்.'' என்பது மகாவீரரின் அறிவுரை.

 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் யாயினி...எத்தனையோ பெண்கள் யாழுக்கு வந்து,ஏதோ ஒரு காரணத்திற்காக தொடராமல் போனாலும், நீங்கள் விடாமல் தொடர்வதும்,ஆயிரம் பச்சைகளைப் பெற்றதும் மிக்க மகிழ்ச்சியை தருகின்றது.ஆனாலும் பச்சையை வைத்து உங்கள் எழுத்துக்களை எடை போடாமல் உங்களுக்கு சரியெனப்பட்டதை தொடர்ந்தும் எழுதுங்கள்

 • Like 3
Link to comment
Share on other sites

6 hours ago, யாயினி said:

அடுத்த ஆயிரமாவது புள்ளியை அடுத்து வரும் இரண்டநை ஆண்டுகளில் பெறுவேன் என்று நினைக்கிறேன்...ஏன் எனில் இவற்றை பெறுவதற்கும் மிகுந்த சிரமபட்டேன் ...எல்லாருக்கும் எல்பாரையும் பிடீக்கும் என்றில் எல்லாமும் பிடிக்கும் என்றில்லை...எனது பக்கத்திற்கும் அந்த நிலை தான்....it's ok..

வாழ்த்துக்கள் யாயினி..:)  உங்களால் இயன்றதை, உங்களுக்கு பிடித்ததை இணையுங்கள் தொடர்ந்து.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

இரண்டு அணுகுண்டுகளுக்கும் தப்பிய ஒரே மனிதர்

 
Tsutomu-Yamaguchi-Japanes-001.jpg
சுடோமு யாமகுச்சி
ந்த உலகம் தோன்றிய காலங்களில் இருந்து இன்று வரை இரண்டே இரண்டு அணுகுண்டுகள்தான் உலகில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. அந்த இரண்டு அணுகுண்டும் வீசப்பட்ட இடம் ஜப்பான். அந்த இரண்டையும் தாங்கிக்கொண்ட நாடும் ஜப்பான் தான். அந்த நாட்டைப் போலவே இந்த இரண்டு அணுகுண்டுகளையும் தாங்கிய ஒரு நபர் இருக்கிறார். அவர் பெயர் சுடோமு யாமகுச்சி.
 
1916-ல் பிறந்த இவர். நாகசாகி நகரில் உள்ள 'மிட்சுபிசி ஹெவி இண்டஸ்ட்ரீஸ்'  நிறுவனத்தில் டிராப்ட்ஸ் மேனாக வேலைப்பார்த்து வந்தார். 1945-ம் ஆண்டு அந்த நிறுவனம் ஹிரோஷிமாவில் இருக்கும் தனது துணை நிறுவன வேலை விஷயமாக யாமகுச்சியை அங்கு  அனுப்பிவைத்தது.
 
yamaguchi-01.jpg
அணுகுண்டு வீச்சுக்கு முன்பு யாமகுச்சி
ஹிரோஷிமோ சென்ற யாமகுச்சி அங்கு அவருக்கு ஒதுக்கப்பட்ட வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டு தனது சொந்த ஊரான நாகசாகிக்கு திரும்ப தயாரானார். தன்னுடன் பணியாற்றும் அகிரா இவனாகா, குனியோஷி சடோ ஆகிய இருவருடன் புறப்பட்டார். 
 
வெகுதூரம் நடந்து வந்தபின் தான் தனது பயணச்சீட்டை அந்த நிறுவனத்திலேயே வைத்துவிட்டது நினைவுக்கு வந்தது. உடனே நினைவுக்கு வர யாமகுச்சி மட்டும் தனது பணியிடம் வந்து, பயணசீட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். 
 
அப்போது காலை 8.15 மணி. 
 
little_boy_mushroom_cloud_05.jpg
 
ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்க போர் விமானம் 'லிட்டில் பாய்' என்ற உலகின் முதல் அணுகுண்டை வீசியது. அந்த இடத்திற்கும் யாமகுச்சி இருந்த இடத்திற்கும் 3 கி.மீ. தொலைவு இருந்தது. இருந்தபோதும் அணுகுண்டு ஏற்படுத்திய இடிபோன்ற சத்தம் அவரின் இடது காது ஜவ்வை கிழித்து விட்டது. ரத்தமாக கொட்டியது. தற்காலிக பார்வை இழப்பும் ஏற்பட்டது. அதோடு உடலின் இடது பக்கம் தீப்பிடித்து எரிந்தது. உடனே உணர்விழந்து மயங்கி விழுந்தார். பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இது நடந்தது 1945 ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி. 
 
இரண்டு நாள் சிகிச்சை எடுத்துக்கொண்ட யாமகுச்சி உடல் கொஞ்சம் தேறியது. மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் இருந்ததாலும், யாமகுச்சியை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத காரணத்தாலும், அவரை அவரது சொந்த ஊரான நாகசாகிக்கு மருத்துவர்கள் மாற்றினார்கள்.  
 
மறுநாள் காலை 11 மணி.
 
அவர் தனது மேலதிகாரியிடம் ஹிரோஷிமா குண்டுவீச்சில் ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது அமெரிக்க போர் விமானம் 'பேட் மேன்' என்ற இரண்டாவது அணுகுண்டை வீசியது. இதுவும் யாமகுச்சி இருந்த இடத்தில் இருந்து சரியாய் 3 கி.மீ. தொலைவில் நிகழ்ந்தது. ஆனால் இந்த முறை எந்தவித காயமும் இல்லாமல் யாமகுச்சி தப்பிவிட்டார். ஆனால் அந்த கொடுமையான சத்தம் அவர் காதை மீண்டும் பதம் பார்த்து, அவரை ஒரு வாரத்திற்கு காய்ச்சலில் படுக்க வைத்துவிட்டது.  
 
destruction-hiroshima-atomic5.jpg
நெருப்பு வடுக்கள்
இப்படி உலகிலே இரண்டு அணுகுண்டு வெடிப்பிலும் நேரடியாக பாதிக்கப்பட்ட ஒரே துரதிர்ஷ்டசாலி மனிதர் இவர் ஒருவர்தான். 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானிய அரசு 'இரண்டு அணுகுண்டுகளுக்கும் தப்பிய ஒரே நபர்' என்று இவரை கவுரவித்தது. அதன்பின் நாடு முழுவதும் தொடர்ந்து அவருக்கு பாராட்டு விழாக்கள் நடந்தன.  
 
2010, ஜனவரி 4-ல் தனது 93-வது வயதில் கிட்னி மற்றும் வயிற்றுப் புற்றுநோயால் யாமகுச்சி மரணமடைந்தார். உண்மையில் இரண்டு அணுகுண்டு வெடிப்பில் இருந்து தப்பித்த ஆச்சரியமான மனிதர்தான் சுடோமு யாமகுச்சி.

 

 

 

 
 

http://senthilmsp.blogspot.com/2016/04/blog-post_5.html 

 

 

 

 
 
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நீண்ட விடுமுறை நாள் வாழ்த்துகளோடு...

நன்றி தெரிவித்தல் நாள்....அடுத்து திருவிழாக் காலம் தொடங்கி விட்டது. இந்த திருவிழா அமெரிக்காவிலும், கனடாவிலும் முக்கியமாக கொண்டாடப் படுகிறது. எல்லோருக்கும் நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும். ஆரம்பத்தில் இது கிருத்துவ மதத்தின்பேரில் கொண்டாடினாலும் இப்பொழுது மதங்களுக்கு அப்பாற்பட்டு இந்த திருவிழா நடக்கிறது. இந்த நன்றி தெரிவித்தல் நாள் கிட்டத்தட்ட"உழவர்" திருநாளைப் போலவே அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாலாவது வியாழக் கிழமையிலும், கனடாவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட் கிழமையிலும் நடைபெறும்.

தோற்றம்
சுமார் 400 வருடங்களுக்கு முன்னால் இந்த திருவிழா ஆரம்பித்ததாக வரலாறு கூறுகிறது. 1620 இல் ஒரு கப்பல் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை இங்கிலாந்திலிருந்து அட்லான்டிக் கடல் மார்க்கமாக ஒரு புனிதப்பயணம் மேற்கொண்டது. அவர்கள் அமெரிக்காவில் மசாசூட் என்ற மாகாணத்தில் வந்து இறங்கினார்கள். அவர்கள் வந்து இறங்கிய நேரம் கடுமையான குளிர் மற்றும் பனியினால் அவதிப்பட்டார்கள். அந்த நேரம் அவர்களால் எதையும் பயிரிட்டு உண்ண முடியாமல் பசியால் வாடினார்கள். கடுமையான நோய்களும் அவர்களைத் தாக்கியது. அதில் சிலர் இறந்தும் போனார்கள். அந்த நேரம் அங்குள்ள சிவப்பிந்தியர்கள்(Red Indians) அவர்களுக்கு உணவு கொடுத்து, அந்த பரிச்சயம் இல்லாத மண்ணில் எப்படி பயிர்களை விளைவிப்பது என்பதையும், மீன் பிடிக்கவும் கற்றுக் கொடுத்தார்கள். 1621 ம் வருடம் அந்த மண்ணில் சோளக்கருது, பீன்ஸ், பார்லி மற்றும் பூசணிக்காய் போன்றவற்றை விளைவித்து அறுவடை செய்தார்கள்.

தக்க சமயத்தில் தங்களைக் காப்பாற்றியதற்காகவும், உணவுகொடுத்து ஆதரித்தமைக்காகவும் நன்றி செலுத்தும் விதமாக அமெரிக்கர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தார்கள். அந்த விருந்தில் வான்கோழி முக்கிய உணவாகப் பரிமாறப்பட்டது. விருந்து முடிந்ததும் சில விளையாட்டுக்களையும் அமெரிக்கர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். இதைத் தான் இன்றுவரை நன்றி தெரிவித்தல் நாளாக அமெரிக்கர்கள் கொண்டாடுகிறார்கள்.

அதிலிருந்து அமெரிக்கா வந்த காலனிக்காரர்கள் ஒவ்வருவருடமும் அறுவடை முடிந்ததும் நன்றி தெரிவிக்கும் நாளை விருந்துடன் கொண்டாட ஆரம்பித்தார்கள். அமெரிக்கா தனிநாடாக அறிவிக்கப் பட்டதும், காங்கிரஸ் கூட்டத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து அதை நன்றி தெரிவித்தல் நாளாகவும், விடுமுறை நாளாகவும் அறிவித்தார்கள். ஜார்ஜ் வாஷிங்டன் நவம்பர் 26ம் தேதியை தேங்ஸ்கிவ்விங் டே என்று திட்டவட்டமாக அறிவித்தார். 1863ம் ஆண்டு ஆப்ரகாம் லிங்கன் நவம்பர் நாலாவது வியாழக் கிழமையை தேங்ஸ்கிவ்விங் டே என்று மாற்றினார். அதிலிருந்து நவம்பர் நாலாவது வியாழக் கிழமையை இன்றுவரை அமெரிக்கர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

வழக்கம்

நன்றி தெரிவித்தல் நாளை அதே கலாச்சாரத்துடன் பழமை மாறாமல் ஒவ்வருவருடமும் வழக்கமாக கொண்டாடி வருகிறார்கள்.பெற்றோரை விட்டு வெகு தூரத்தில் இருப்பவர்கள், உறவினரைப் பிரிந்தவர்கள் எல்லோரும் அந்த குடும்பத்தில் மூத்தவர் வீட்டில் அன்று கூடுவார்கள்.அன்று ஒருவருக்கொருவர் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வர். ஏழைகள் மற்றும் வீடு இல்லாதவர்களை தொண்டு நிறுவனங்கள் உணவு, உடை கொடுத்து பரிசுப் பொருட்களையும் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது வழக்கம்.

விருந்து

வியாழன் அன்று இரவு நன்றி தெரிவித்தல் நாள் விருந்து நடைபெறும். அன்று முக்கிய உணவாக வான்கோழி(Turkey), மக்காச்சோளம்(Corn), பூசணிக்காய் மற்றும் கிரேன்பெர்ரி(Cranberry) வகைப் பழங்கள் இருக்கும். வான்கோழியில் சில மசாலாக்களை வைத்து அடுப்பில் நீண்ட நேரம் அதை வறுத்து சுடச்சுட பரிமாறப்படும். கிரேன்பெர்ரியில் சில நோய்களைத் தீர்க்கும் மருந்து இருப்பதால் அதை பழமாகவோ, ஜூஸாகவோ பரிமாறப்படும்.

நன்றி தெரிவித்தல் நாளுக்கு அடுத்த நாள் வருவது பிளாக் ஃபிரைடே. இந்த நாளுக்காக வருடம் முழுவதும் காத்திருப்பவர்கள் உண்டு. இன்றிலிருந்து ஆரம்பித்து கிறிஸ்துமஸுக்கு முந்தின நாள் வரை பரிசு வாங்கும் படலம் தொடரும். இந்தப் பரிசு வாங்கும் காலத்தில்தான் அமெரிக்க சில்லறை வியாபார சங்கிலித் தொடர் கடைகளும் வணிக நிறுவனங்களும் அந்த வருடத்திய லாபத்தில் நாற்பது சதவிகிதத்தைச் சம்பாதிக்கின்றனவாம். அந்த லாபத்தில் பதினைந்து சதவிகிதத்தை இந்த வெள்ளிக் கிழமையும் அதை அடுத்து வரும் சனி, ஞாயிற்றுக்கிழமையும் சம்பாதிக்கின்றனவாம். கருப்பு வெள்ளிக்கிழமை என்றால் சோகமான வெள்ளிக்கிழமை என்று அர்த்தமல்ல. நஷ்டம் ஏற்பட்டால் வியாபாரிகள் சிவப்பு எழுத்தில் அதைக் குறிப்பிடுவார்களாம். அதனால் லாபத்தைக் குறிப்பிட கருப்பு எழுத்தில் எழுதுவார்களாம். அதீத லாபம் கொடுக்கும் இந்த நாளை கருப்பு வெள்ளி என்கிறார்கள்...

Sahana Sahana's photo.
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழில் பேசிய ஹரி ஆனந்தசங்கரி.
பாரளுமன்ற உரையின் போது ஹரி ஆனந்த சங்கரி தமிழிலும் பேசினார் (வீடியோவில் 4:15 நிமிடத்தில் காணலாம்).  https://www.youtube.com/watch?v=PUhpnYrOn8c அவரது உரையில் தமிழ்மொழி இந்தியாவில் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஆட்சி மொழியாகவும், இலங்கையில் தேசிய மொழியாகவும், தமிழ் நாட்டு அரசின் ஆட்சி மொழியாகவும் உலகமெங்கும் அறிந்த மொழியாக விளங்குகிறது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கனியன் பூங்குன்றனாரின் உலகப்புகழ்பெற்ற முழக்கத்தையும் கூறி விவரித்தார்....http://tamil.oneindia.com/

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் பதிவுகளில்/ செய்திகளில் ஒரு முத்தத்திற்கு கொடுத்த முக்கியத்தும் மலையக மக்களின் போராட்டத்துக்கு கொடுக்கப்படவில்லை
'ஒரே நாட்டு தமிழர்கள் '.v.m.ramesh

Image may contain: text
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

"உலக தபால் தினம்" → ஒக்டோபர் மாதம் 9ம் திகதி

wpd.jpg
ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 9ம் திகதி "உலக தபால் தினம்"கொண்டாடப்படுகின்றது. உலக தபால் சங்கம் 1874ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ம் திகதி சுவிட்சர்லாந்து நாட்டின் பேர்ன் நகரில் அமைக்கப்பட்ட நிறைவினையொட்டி 1969ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியா நகரில் உலக தபால் சங்க சம்மேளனத்தில் ஒக்டோபர் மாதம் 9ம் திகதி "உலக தபால் தினம்" என பிரகடனம்செய்யப்பட்டது.
இன்று நவீன தொழில் நுட்ப முறைகளில் ஏற்பட்ட அபிவிருத்தியானது தொடர்பாடல் துறையில் பல்வேறுபட்ட மாறுதல்களை ஏற்படுத்தினாலும் தபால் துறையானது தனிச்சிறப்பிடத்தினை வகிக்கின்றன.
 
தபால் துறை தொடர்பான சில சுவையான தகவல்கள்....
 
Ø  தபால் விநியோகத்தினை இலகுபடுத்தும்வகையில் வீடுகளுக்கு இலக்கங்கள் வழங்கும் முறை முதன்முதலில் 1463/64ம் ஆண்டளவில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஆரம்பமானது.
 
Ø  முதன்முதலில் தபால் குறியீட்டு எண்களை அறிமுகப்படுத்திய நாடு ஜேர்மனி ஆகும். இங்கே 1942ம் ஆண்டு இரண்டு இலக்க முறையானது அறிமுகமானது.
 
Ø  உலகில் அதிகளவு அஞ்சல் அலுவலகங்களினை கொண்ட நாடு இந்தியா ஆகும். அதனை தொடர்ந்து சீனா, ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், இந்தோனேசியா, பிரிட்டன், பிரான்ஸ், உக்ரெய்ன், இத்தாலி ஆகிய நாடுகள் ஆகும்.
 
Ø  உலகில் மிகப்பெரிய அஞ்சல் நிலையமும், மிகச்சிறிய அஞ்சல் நிலையமும் அமைந்துள்ள நாடு ஐக்கிய அமெரிக்கா ஆகும். மிகப்பெரிய அஞ்சல் நிலையம் இல்லியானோஸ் மாநிலத்தின் சிக்காக்கோவிலும், மிகச்சிறிய அஞ்சல் நிலையம் புளோரிடா மாநிலத்தின் ஒக்கோபீயிலும் அமைந்துள்ளது.
 
Ø  அரச குடும்பத்தினை சாராத ஒருவராக பிரிட்டன் தபால் முத்திரைகளில் இடம்பெற்ற முதல் நபர் வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆவார். 1964ம் ஆண்டு இம்முத்திரை வெளியிடப்பட்டது.
 
Ø  ஐக்கிய அமெரிக்க நாட்டின் அரச தலைவராக பதவிவகிக்காத ஒருவராக அந்த நாட்டின் தபால் முத்திரைகளில் இடம்பெற்ற முதல் நபர் பெஞ்சமின் பிராங்ளின் ஆவார். 1847ம் ஆண்டு, ஜூலை மாதம் இம்முத்திரை வெளியிடப்பட்டது. பெஞ்சமின் பிராங்ளின் ஐக்கிய அமெரிக்காவின் முதல் தபால்மா அதிபர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

b.gif

Ø  உலகுக்கு தபால் முத்திரைகளை அறிமுகப்படுத்திய நாடு பிரிட்டன் என்பது நாமறிந்த தகவலே... பிரிட்டனை தொடர்ந்து உலகில் முத்திரைகளை வெளியிட்ட இரண்டாவது நாடு பிரேசில் ஆகும். இந்த முத்திரைகள் "ஒக்ஸ் ஐய்ஸ்"என்றழைக்கப்பட்டன. 

888.JPG

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

"

இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!
மற்றும் விஜய் தசமி வாழ்த்துக்கள் !

Shanmugapriya Mani's photo.
Shanmugapriya Mani's photo.
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முதற் பெண் வித்து ●••

தாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை அன்ரன் உட்பட்ட ஆறு மாவீரர்களின் 29 ம் ஆண்டு நினைவு நாள் 1987.10.10 ...

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி ..

 

Image may contain: 1 person , hat and closeup
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நான் கொல்லப்பட்ட பின் எனது துப்பாக்கியை என் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள்., அப்போதும் உங்களை நோக்கி தோட்டாக்கள் சீறிப்பாயும்...!!

#மாவீரன்_சே_குவேரா .

09.10.1967 இன்று தோழர்.சேகுவேரா மறைவு

Image may contain: 1 person , text
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தாயக விடுதலைப் போரில் வீரச்சாவைத் தழுவிய முதல் பெண் மாவீரர் லெப்.மாலதியின் 29ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

14462778_646150708893118_815391660649991615_n.jpg
Edited by யாயினி
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Happy thanksgiving day!நன்றி தெரிவித்தல் நாள் நல் வாழ்த்துக்கள்!

safe_image.php?d=AQAqTy_lScVNNf7T&w=476&
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person

உலகில் மிகப்பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியா, ஐக்கிய அமெரிக்காவுக்கு அன்பளிப்புச் செய்த "கல்வித் தெய்வம்" சரஸ்வதியின் சிலை….!

இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் ஒரு அங்கமாக இந்த சரஸ்வதி சிலை விளங்குகின்றது.

16அடி உயரமான இந்த சரஸ்வதி சிலையானது ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில், அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான வெள்ளைமாளிகைக்கு அண்மையில் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
 

அனைத்துலக பெண் குழந்தைகள் தினம்.அனைத்து பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

No automatic alt text available.
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

SPB நண்பேண்ட நிகழ்வு நுழைவு சீட்டு வருமானம் மாத்திரம் ஒரு கோடி ரூபாய்.

Nadarajah Kuruparan Globaltamilnews's photo.
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உலகின் முதல் அதிகாரப்பூர்வ அஞ்சல் தலை பென்னி பிளாக் 
 

Image may contain: text
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.