Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தகாலத்தின் முதல் நாள்
இலையுதிர்காலத்தின் இறுதியை
நினைத்துக்கொண்டிருக்கிறேன்,.

பாஷோ

Image may contain: tree, plant, flower, outdoor and nature
  • Like 3
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.

அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.

“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?”

“கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.

அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.

அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.

அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.

“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!”

அவளுக்கு கண்கள் பனித்தன.

அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.

நான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)

பொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம் பெற்ற ஒருவன் அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும். .!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றுப் புகழ்வாய்ந்த வெள்ளை மாளிகை…..

 
 
white_house-5280.jpg
 
ஐக்கிய அமெரிக்கா ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகிய 
வெள்ளை மாளிகைக்கு முதன்முதலில் அடிக்கல் நாட்டப்பட்டு இன்றுடன்(13 அக்டோபர் 2012) 220 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.  
 
வெள்ளை மாளிகை தொடர்பான சுவாரஷ்சியமான தகவல்கள்...
 
Ø  அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதியாக பதவிவகித்தஜோர்ஜ் வோஷிங்டன் பதவிக்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி வாசஸ்தல  நிர்மாணமானது 1792ம் ஆண்டு ஆரம்பித்தபோதிலும் ஜோர்ஜ் வோஷிங்டன் இம்மாளிகையில் வசிக்கவேயில்லை. ஏனெனில் இம்மாளிகையின் நிர்மாண வேலைகள் பூர்த்தியாகும் முன்னரே ஜோர்ஜ் வோஷிங்டன் 1799ம் ஆண்டு காலமாகிவிட்டார். வெள்ளை மாளிகை நிர்மாணப்பணிகள் 1800ம் ஆண்டளவில் நிறைவுற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
Ø  அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் முதன்முதலில் வசித்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் அடம்ஸ்(அமெரிக்காவின் 2வது ஜனாதிபதி) ஆவார். 1800ம் ஆண்டு நவம்பர் 1ம் திகதி இந்த நிகழ்வு இடம்பெற்றது.
 
Ø  1812ம் ஆண்டு அமெரிக்காவினை ஆக்கிரமித்த பிரிட்டன் இராணுவ வீரர்கள் அமெரிக்காவின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு கட்டடங்களினை தீ வைத்து நாசப்படுத்தினர். இதன்போது வெள்ளை மாளிகையினையினையும் ஆகஸ்ட் 24, 1814ம் ஆண்டு தீ வைத்து சேதப்படுத்தினர்.  அமெரிக்காவின் 4வது ஜனாதிபதியாக பதவிவகித்த ஜேம்ஸ் மடிசன் 1815-1817ம் ஆண்டுவரை வெள்ளைமாளிகைக் கட்டிடத்தினை மீள நிர்மாணிக்க பாடுபட்டார்.
 
Ø  வெள்ளை மாளிகையினை வடிவமைத்த பிரதான கட்டிடக் கலைஞர் அயர்லாந்து நாட்டில் பிறந்த ஜேம்ஸ் ஹோவன்.
 
Ø  132 அறைகள், 35 குளியல் அறைகள், 6 அடுக்கு மாடி இருப்பிடங்களை வெள்ளை மாளிகை 55000 சதுர அடி பரப்பளவில் கொண்டுள்ளது. மேலும் 412 கதவுகள், 147 ஜன்னல்கள், 28 எரிப்புகள், 8 மாடி படிக்கட்டுத்தொகுதிகள், 3 மின்னகர்த்திகள் ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
 
Ø  வெள்ளை மாளிகைக்கு 1891ம் ஆண்டு மின்சார இணைப்பு வழங்கப்பட்டது.
 
Ø  வெள்ளை மாளிகை வெளிச்சுற்றுப்பரப்புக்கு தீந்தை பூசுவதற்கு 570 கலன்கள் வர்ணப்பூச்சுக்கள் தேவையாகும்.
 
Ø  1901ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி மாளிகைக்கு "வெள்ளை மாளிகை(White House)" என்று பெயர் சூட்டியவர் தியோடர் ரூஸ்வெல்ட். இவர் அமெரிக்காவின் 26வது ஜனாதிபதியாவார்.
 
teddy-roosevelt.jpg
 
Ø  வெள்ளை மாளிகையினைப் பார்வையிட பொதுமக்களுக்கு 1805ம் ஆண்டு சந்தர்ப்பத்தினைக் ஏற்படுத்திக்கொடுத்த முதல் அமெரிக்க ஜனாதிபதி தோமஸ் ஜெபர்சன். இவர் அமெரிக்காவின் 3வது ஜனாதிபதியாவார். 
                                                                                                                                                       9/11 தாக்குதல் சம்பவத்தினைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையினைப் பார்வையிட பல்வேறு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். வெள்ளை மாளிகையினைப் பார்வையிட வருடாந்தம் 2மில்லியனுக்கும் அதிகமான விருந்தினர்கள் வருகை தருகின்றனராம்.
 
Ø  வெள்ளை மாளிகைக்கு மோட்டார் இயந்திர வாகனத்தில் பயணம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்.
 
Ø  வெள்ளை மாளிகைக்கு ஆகாயவிமானத்தில் பயணம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி பிராங்ளின் ரூஸ்வெல்ட். இவர் அமெரிக்காவின் 32வது ஜனாதிபதியாவார்.
 
Ø  வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்த முதல் போப்பாண்டவர் 2ம் ஜோன் போல். இவர் 1979ம் ஆண்டு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
Ø  வெள்ளை மாளிகையில் மணமுடித்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் ரைய்லர். இவர் அமெரிக்காவின் 10வது ஜனாதிபதியாவார்.
 
Ø  அமெரிக்க ஜனாதிபதிகளின் உறவினர்களின் இரண்டு திருமண நிகழ்வுகள் வெள்ளை மாளிகையில் நடைபெற்றுள்ளது; ரிச்சட் நிக்சனின் மகளின் திருமணம் மற்றும் பில் கிளிண்டனின் சகோதரரின் திருமணம்.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் தங்கச்சி  இடையில் நான் இந்தப்பக்கம் வராமல் விட்டுவிட்டேன்:( .இனி தொடர்ந்து வருகிறேன் .:107_hand_splayed:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

How a Sri Lankan Refugee Became an Australian Army Major – Six Life Lessons in Self Leadership

lavanI couldn’t be happier and prouder of one of my best mates Major Seralaadan Tharmarajah aka Lavan.  This week, he became a Major in the Australian Army.

19 years ago we both landed on Australian soil to call this land home. Both from single parent households, both from developing countries with a history of racial tensions and violence and both of us looking to find our place in multicultural Australia. We had alot in common as we sat next to each other in our Homebush Boys, Year 10 ESL class!

major-lavanLavan is not one who usually talks about his journey. However his journey has taught me many lessons and I believe it’s important to share it.  At a time when many question the value of letting refugees into a country, when racial tensions everywhere are high and when people give up hope on their dreams and following their passions because of a fast changing world and an uncertain future– the lessons i’ve learned from Lavan, and now Major Tharmarajah stick with me because of its simplicity and his walking the talk on his life philosophy.

Today, I’m proud of my brother as he takes yet another step on his journey and i’m writing this to all those people who make excuses in life and let things hold them back . Lavan’s journey inspires me and many who know his story – for many close to him, he is somewhat of a superhero.

Below is what I’ve learned from watching Lavan’s story.

majorjacket

  1. Its Not Where You Start, Its Where You’re Going.

Lavan came to Australia as a refugee from Sri Lanka when he was 15 years old with his mom and sister. His dad had passed away a few years earlier and his mom who’s only job prior to coming to Australia was a traditional Bharatanatyam dance teacher. Coming to Australia she had to learn a new role and re-skill. I remember while most kids were getting part time jobs to fund dating habits, go to the movies and buy the latest designer clothes. Lavan was working at Franklins and Flemington Markets helping out his mom and sister with the bills.

The responsibility of being the “man of the house” was thrust on him at an early age. The family pretty much started from ground zero, but knew that Australia provided them with not only security, but more importantly with opportunity.

It was an opportunity that Lavan did not take lightly. He knew that it was a turn of fate and destiny that allowed him to be here, in Australia while many of his friends and family languished back in Sri Lanka suffering under a political regime which didn’t support the equality of all ethnic groups.

Lavan and I knew that in this country with free education and healthcare that we could be, do and have anything that we wanted to if we worked hard, persevered and took the opportunities presented to us.

WHERE we were, was not WHO we were. We were BECOMING something more and we grabbed it with both hands.

  1. The Journey to Your Dreams can be a Winding Road

Looking back it seems easy to say that Lavan was ALWAYS going to join the army. He was a history, geography and army buff. They all went hand in hand. In the days of dialup internet of the ninetees, Lavan was our Wikipedia. He was faster than Altavista, Lycos and Excite! In fact, he would talk your ear off even if you asked him a simple question in those areas. He taught me all i needed to know about Sri Lankan and world history, politics, and culture.

But it wasn’t always that way. Despite coming fifth in the state of NSW for history, Lavan chose to do Computer Science, a subject he neither liked or was passionate about. Why you ask ? Because just like me he was told that he had to get a JOB that was safe and secure. People always tend to say do what makes you happy until it comes time to pay the bills. Then you better not be studying a Bachelor of Arts! Engineer, Doctor or Lawyer where the first round picks…Followed by Business, Computer Science and Accounting if you weren’t “good enough” for the aforementioned. Coming from a migrant community it’s easy to see why the catch cry “Follow your Passion” wasn’t something that was top of mind. When your fleeing a country – you do what you do to survive. Passion and Purpose are not values that many have the privilege of.

To cut a long story short. Lavan did Computers Science in Coffs Harbour because he didn’t get the grades to do it in Sydney. Then he transferred to Sydney a year later. Then he transferred degrees to Bachelor of Arts. Then he joined the Army reserves. Then, when he was about to graduate, he didn’t apply for any Graduate Jobs!

He didn’t actually know what he was going to do after his degree was complete. In fact the degree was just an obligation he was fulfilling to his mom. He had his heart set on gaining entry as an Officer at the Royal Military College in Duntroon. He planned this in silence. Not telling his wife. Not telling his best mates. Not telling his mom. Putting all his eggs in one basket.

And by a twist of fate and destiny (coupled with desire and hardwork) — his wish was granted! The rest as they say – is history.

  1. The Journey Comes with Sacrifice – but It’s a Labour of Love. 

574570_3883924771251_1416392134_nSo Lavan is happier than ever to finally have his childhood dreams of being in the Army playing out. But even still sacrifices needed to be made. He had to move to Canberra and leave the family. He has moved to Wagga Wagga, Darwin, Brisbane, and most recently Darwin again while all his roots have been in Sydney previously – each assignment being approx 2 years in length. Sometimes he could take the family – other times he couldn’t. During this time he has had a long distance relationship with friends and family. He has gotten married, had children, built a house and home. I’m sure he has questioned the sacrifice he was making, the impact it takes on family and the commitment he has made to this adopted country. He has missed important dates in the lives of family and friends and many nights out with the boys. His training has taken him away into many areas of Australia and postings overseas.  The road is has not been an easy one! But it’s been a worthwhile one and one i’m sure he would never trade.

  1. You Need A Team.

suba-pinning-badgeFor as long as I’ve known Lavan, although he has been fiercely independent he has never been too proud to ask for help. From day one, if he was short on cash he’d ask me to spot him some money which he would pay back. If he needed help moving house – he’d ask. If he was having personal issues – he’d open up to close friends.

His biggest ally and best friend has been his wife. Without her – i’m not sure how Lavan would achieve what he has so far. She has been instrumental in their success. And has really showed me what love, sacrifice and patience is all about. Military wives are often the unsung superheros. I really have come to respect and admire all that they do. She has played project manager planning birthdays, moving houses, and building a home. She has played counsellor to Lavan.

She has played mother while Lavan is stationed away from home, ensuring the children know that their dad is away serving the country and that “Appa” (Dad in Tamil) always loves them.226840_6037603161_6048_n

 

She even helps co-ordinate boy’s nights so that we can catch Lavan when he is in town.

She is the rock and the glue upon which success is built on and which it continues to stick together. 

If you have a dream you will need a team. It’s important to choose yours wisely! Success is never, ever just one person.

  1. Small Actions Repeated Daily

imagesLavan demonstrates that life is a marathon and with many short intense sprint sessions. I remember this when we first started hitting the gym together.  .  I’ve seen him do this with his army career, his approach to health and fitness, and education. Lavan was always the consistent achiever.  Lavan, like Usain Bolt was never the fastest out of the blocks of life. But once he had the habit in place and the decision made, he just kept putting one foot in front of the other. While many (including myself) were looking for quick fixes and sprint sessions Lavan did the ol Tortoise and the Hare. Slowly chipping away at the marble to reveal the masterpiece that lay within the rock.

  1. Respect Your Roots. Honour What Allows You to Bear Fruit.

lavanwedding2He is Proudly Australian and He is Proudly Tamil. They are both equally valued. This is a message I think is relevant to all Refugees and migrants. Lavan was born in Sri Lankan and raised a Tamil. His family has seen the ravages of war in the northern part of the country. Lavan writes and speaks his mother tongue, Tamil, proudly.  He is fiercely proud of his culture, and history. When joining the Army, he was often questioned by other migrants,” why fight for a country that  isn’t yours”, “isn’t there a lot of racism in the army”, “what’s a Sri Lankan doing in the Army”.  He always has fired back  that this  (Australia) is the country that has given him opportunity for him and his family. And if its good enough for you  to  live  in then surely its  good enough for  you  defend its traditions because it is that that has brought you  to his shores.

Australia has given him opportunity when the country he was born in didn’t. So of course his loyalty lies here.

He is as much Australian as any other person of this land and has defended its values and culture with his life.

He’ll enjoy a beer in the bar with thongs on as much as a masala dosai and kothu roti while wearing a lungi!

To me it’s what makes Australia a great place to live and i’m super happy that this perceived apparent paradox is defended by the people that defend it!

Remember your roots and never forget what feeds your fruits !

img-20160918-wa0013-1When Lavan first told me he was going to join the Army full time, I had my reservations and doubts like everyone else. But I couldn’t see what he saw. I couldn’t see the vision that he had because it was HIS VISION. And today this vision has seen him become Major Tharmarajah before his  35th birthday. Quite an achievement for a little refugee boy from Jaffna hey !

Much love to you brother.  I was happy when you joined the Reserves, when you entered Duntroon, when you graduated RMC, when you became Captain and now as you become Major Tharmarajah – I know it’s just the beginning.

Key Takeaway : 

You have a story… and often the people around you  cannot see what you see.  

Do not let their “box of life” become your reality. Live Your Life for You. 

lavan

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோட்ட தொழிலளர்களுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைகழக சமூகமும் போராட்டத்தில் குதிப்பு.

October 14, 2016
18 Views
  • Share This!

14643175_1108151052600355_1593547076_n
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைகழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் இன்று மதியம் முன்னெடுக்கப்பட்ட குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தின் போது பலர் கலந்து கொண்டு இருந்தனர்.

 

14658252_1108151515933642_1847834585_n

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தோட்டத்தொழிலார்களின் விடயத்தில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஆயிரம் ரூபா சம்பளமும் வாரத்தில் ஆறுநாள் வேலை வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது

14658276_1108152029266924_1853420962_n

14699713_1108150592600401_1680615086_n

14699843_1108151522600308_1277974784_n

14699982_1108152219266905_670342163_n

You may also like

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான  விடயத்தை, எமக்கு அறியத் தந்தமைக்கு, நன்றி யாயினி.
அவர்களுக்கு, ஆதரவு கொடுக்க இறங்கிய யாழ். பல்கலைக் கழக சமூகத்துக்கு பாராட்டுக்கள்.
யாழ். பா. உ, க்கள்,..... வழமை போல்   குறட்டை  தானா?
இதுக்கு... குரல் கொடுக்க,  வரா விட்டால்....  பச்சை  பனை மட்டை எடுத்து....  
வெறும் முதுகிலை.... சடார், பிளார்... எண்டு....  xxxxx   xxx, xxxxxx xxx.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் தொடர்கிறது 10 நாட்களுக்கு மேலாக ஆனால்   இன்னும் எந்த பலனும் கிடைக்க வில்லை கொழுந்து கொய்யும் கைகளுக்கு  போராட்டமான வாழ்க்கையே :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றது.

14695591_1459755040706515_4373988154058961425_n.jpg?oh=f69d255abc8803820c5f281a87f24622&oe=58954AF914753962_1459754727373213_3106449903011001543_o.jpg14700860_1459755204039832_6640974230099950077_o.jpg14700832_1459755410706478_5384132486912493640_o.jpg14708080_1459755517373134_2278252284807348591_o.jpg

14682091_1459755754039777_8063379673657884112_o.jpg14753392_1459755790706440_250542272294362017_o.jpg

14715089_1459755914039761_1058088856915032462_o.jpg

14715586_1459755984039754_659599606099204680_o.jpg

14712955_1459756037373082_3708767234297275710_o.jpg

14707859_1459756060706413_8744335624311386203_o.jpg

14695591_1459755040706515_4373988154058961425_n.jpg?oh=f69d255abc8803820c5f281a87f24622&oe=58954AF9

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது.
நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் கலந்து கொண்டுள்ளன.

No automatic alt text available.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On October 14, 2016 at 4:33 PM, தமிழ் சிறி said:

மகிழ்ச்சியான  விடயத்தை, எமக்கு அறியத் தந்தமைக்கு, நன்றி யாயினி.
அவர்களுக்கு, ஆதரவு கொடுக்க இறங்கிய யாழ். பல்கலைக் கழக சமூகத்துக்கு பாராட்டுக்கள்.
யாழ். பா. உ, க்கள்,..... வழமை போல்   குறட்டை  தானா?
இதுக்கு... குரல் கொடுக்க,  வரா விட்டால்....  பச்சை  பனை மட்டை எடுத்து....  
வெறும் முதுகிலை.... சடார், பிளார்... எண்டு....  xxxxx   xxx, xxxxxx xxx.

 

On October 15, 2016 at 1:23 AM, முனிவர் ஜீ said:

போராட்டம் தொடர்கிறது 10 நாட்களுக்கு மேலாக ஆனால்   இன்னும் எந்த பலனும் கிடைக்க வில்லை கொழுந்து கொய்யும் கைகளுக்கு  போராட்டமான வாழ்க்கையே :unsure:

1970 க்கு பின் வடமாகாணத்தில் இருந்து மலையக மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த மிகப்பெரியதொரு போராட்டமாக யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற போராட்டத்தை பதிவு செய்யலாம்....இவ்வாறு மலையக மக்கள் தங்கள் கருத்துக்களில்  அறியதருகிறார்கள்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் உலகப்போரில் பத்தாயிரம் பேரைக் காப்பாற்றிய சுரங்கம் இதுதான்!

பகல் தான்... ஆனாலும், அந்த சுரங்கத்தினுள் ஒரு அடர்த்தியான இருள் சூழ்ந்திருக்கிறது. குறுகலான வழி. மெல்லிய பேட்டரி விளக்கு வெளிச்சத்தில் நடந்து, சில படிகளைக் கடந்தால் அந்த அகண்ட 

2.jpg

இடம் வருகிறது. இப்பொழுது விளக்குகளின் உதவியால் வெளிச்சம் கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்கிறது. துருப்பிடித்து, இரும்பு தோல்கள் உரிந்த நிலையில் நிறைய கார்கள். சில நீளமாகவும், சிலவை சிறியதாகவும் இருக்கின்றன. தார் சாலைகளையும், மண் மேடுகளையும், கடற்கரைகளையும் பார்த்து ஆவேசமாய், சமயங்களில் அமைதியாய் ஓடிக் களைத்த ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குள். தோலுரிந்து வரலாற்றால் தூக்கி எறியப்பட்ட ஒரு நீல ஸ்கூட்டரின் பக்கவாட்டில்  சிகப்பு வண்ண சுருள் முடி கொண்ட ஒரு பெண்ணின் ஸ்டிக்கர். அவரின் கனவு நாயகியாக இருந்திருக்கக் கூடும்.

இன்னும்... அழுக்கடைந்த அடுப்புகள், கருப்படைந்த பானைகள், உருக்குலைந்த உணவுக் கோப்பைகள், நசுங்கி, நைந்து போயிருக்கும் குழந்தைகளின் குதூகல நடை வண்டிகள் என திரும்பும் திசையெல்லாம் வரலாறு துப்பி எறிந்த மிச்சங்கள். இது இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் நகரின்  " கேலெரியா போர்பொனிகா" (GALLERIA BORBONICA).

2.jpg


 உலக வரலாற்றின் பல முக்கிய ஆதாரங்களைக் கொண்ட பழைய "பாம்பெய்" ( POMPEII)  தான் இன்றைய "நேப்பிள்ஸ்" நகரம் ... மண் தோண்டினால் பொன் கிடைக்கும் பூமி. இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் பல தேவாலயங்கள் குண்டுத் தாக்குதல்களுக்கு பலியான போது, ஒன்று மட்டும் உறுதியாக நின்றது. போர் முடிந்த பின்பு, அதை ஆராய்ந்த போது, அதற்கடியில் ஒரு நகரமே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி, நேப்பிள்ஸில் வீடு கட்ட மண் தோண்டினால் கூட அங்கு ஒரு பொக்கிஷம் கிடைக்கும் அளவிற்கு தன்னுள் வரலாறுகளைப் புதைத்து வைத்துள்ளது.

1853யில், இரண்டாம்  ஃபெர்டினான்ட் போர்பன் (FERDINAND BOURBON - 2 ) போர் சமயங்களில் கோட்டையில் இருந்து தப்பிக்க ஒரு சுரங்கத்தைக் கட்ட ஆரம்பித்தான். ஆனால், அதை கட்டி முடிப்பதற்குள் அவனின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.  சில காலம் நீர் வழித்தடமாக.

உபயோகப்படுத்தப்பட்டது. இந்த சுரங்கத்தின் ஒரு பகுதியை 2005யில் கண்டுபிடித்து 7 ஆண்டுகளாக சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

 மேற்கூறிய செய்தியை, 2012 ஆம் ஆண்டில் படித்த தொனினோ பெர்சிகோ (TONINO PERSICO) என்ற 90 வயது முதியவருக்கு திடீரென ஒரு ஞாபகம் வந்தது. இரண்டாம் உலகப் போரின் போது, வான்வழித் தாக்குதலிலிருந்து தப்ப ஒரு சுரங்கத்தில் தான் இருந்தது ஞாபகம் வந்தது. அது குறித்த தகவல்களை சுரங்க ஆராய்ச்சியளர்களிடம் கூறுகிறார். அவர்களும் விரைவிலேயே அந்த இடத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். அதில் அவர்கள் கண்ட விஷயங்கள் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.

1930 களின் ஆரம்பத்தில் வண்டிகள் நிறுத்தும் இடமாக உபயோகப்படுத்தப்பட்ட இந்த சுரங்கம், இரண்டாம் உலகப் போரின் போது மக்களுக்கான பதுங்கும் இடமாக இருந்துள்ளது. கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இங்கு பதுங்கியிருந்திருக்கின்றனர். மூன்று ஆண்டுகள் சுத்தம் செய்த பிறகு சில மாதங்களுக்கு முன்பு இது பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

" தாக்குதல் முடிந்த பின்னர் மேல் வந்து பார்ப்போம்... பலரின் வீடுகள் தரைமட்டமாகியிருக்கும். அப்படி வீடிழந்தவர்கள் எல்லோரும் நிரந்தரமாக இந்த சுரங்கத்தில் தான் தங்கியிருப்போம். அதிகப்படியான மருத்துவ உபகரணங்கள் இல்லாவிட்டாலும் கூட, எங்களில் இருக்கும் சில மருத்துவர்கள் மருத்துவம் பார்ப்பார்கள். கழிவறை இருந்தது. கணவன் போரில் ஈடுபட்டிருப்பது குறித்து பெண்கள் வருதத்தோடு பேசிக் கொண்டிருப்பார்கள், குழந்தைகளான நாங்கள் ஒரு பக்கம் விளையாடிக் கொண்டிருப்போம்... சமயங்களில் அழகான பல பாடல்களையும் பாடி மகிழ்வோம்." என்று தன் ஞாபகங்களை தட்டி எழுப்புகிறார் தொனினோ பெர்சிகோ .

" போர் நடக்கும் போது இந்த சுரங்கத்தில் இருந்து மூன்று முறை சங்கு ஊதுவார்கள். அப்படியென்றால், எதிரிப் படை இன்னும் 15 நிமிடங்களில் தாக்குதலைத் தொடங்கும் என்று அர்த்தம். அனைவரும் இதனுள் ஓடிவருவோம்... இன்னும் நினைவிருக்கிறது... அவள் பெயர் "இதினா" ( EDINA )... ரொம்ப அழகாக இருப்பாள். கருப்பு முடி, பச்சைக் கண்கள்... ஒருமுறை இப்படி அவசரமாக ஓடிவரும் போது கூட்டத்தின் கால்களில் சிக்கி... மிதி பட்டு... தரையோடு தரையாய் நசுக்கப்பட்டு இறந்து போனாள்..." என்று வலியோடு தன் நினைவுகளை பதிவு செய்கிறார் டே ஜியோயா (De GIOIA).

2.jpg


வரலாற்றின் வரலாறுகளை சுமந்து கொண்டிருக்கும் இந்த சுரங்கத்தில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத சில பகுதிகளும் இருக்கின்றன. அதை நோக்கிய தேடுதலில் இருக்கிறார்கள் இத்தாலிய அகழ்வாராய்ச்சியாளர்கள். அதைக் கண்டுபிடித்தால் இன்னும் பல ஆச்சரியங்கள் கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள். !!!

http://payanakatturai.blogspot.com/2016/10/blog-post_90.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ந்து வரும் ஆட்சியாளர்கள்...! 

 
ஐக்கிய இராச்சியத்தின் அரசியான இரண்டாம் எலிசபெத், அந்நாட்டு அரியணையில் அதிக காலம் ஆட்சிபுரிந்தவர் என்ற சாதனையினை ஏற்படுத்தியுள்ளார். கடந்த செப்டெம்பர் 09, 2015 அன்று இச்சாதனையினை அவர் புரிந்தார். 

 
செப்டெம்பர் 09, 2015 மாலை 5.30 (இங்கிலாந்து நேரப்படி) மணியளவில் அவர் 63 வருடங்கள், 7 மாதங்கள், 2 நாட்கள், 16 மணித்தியாலங்கள், 23 நிமிடங்களை அரியணையில் கழித்த அவரது முப்பாட்டியான அரசி விக்டோரியாவின் சாதனையே அவர் முறியடித்தார். 

1926 ஆம் ஆண்டு பிறந்த அரசி  எலிசபெத், 1952ஆம் ஆண்டு  முதல் இன்றுவரை அரசியாகக் காணப்படுகிறார்.

 
உலகிலேயே நீண்ட காலமாக அரசாட்சி புரிந்து வரும் ஆட்சியாளர்களின் விபரம் வருமாறு;

 
1) தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யடேஜ் 

 
pb-121206-thai-king-ps4.photoblog900.jpg
 
பிறப்பு : 1927

முடி சூட்டப்பட்ட ஆண்டு : ஜூன் 9, 1946

அரசாட்சி ஆண்டுகள் : 69

 
2) அரசி இரண்டாம் எலிசபெத்

 
Pretty-purple-Queen-Elizabeth-II-visited-Exeter-City-Centre.jpg
 
பிறப்பு : 1926

முடி சூட்டப்பட்ட ஆண்டு : பெப்ரவரி 6, 1952

அரசாட்சி ஆண்டுகள் : 63

 
3) புரூணை சுல்தான் ஹாஜி ஹஸ்ஸனல் போல்கியா 

 
sultan_brunei.jpeg
 
பிறப்பு : 1946

முடி சூட்டப்பட்ட ஆண்டு : அக்டோபர் 5, 1967

அரசாட்சி ஆண்டுகள் : 47

 
4) ஓமான் சுல்தான் கபூஸ் பின் சயிட் அல் சயிட்

 
sultan%2Bqaboos.jpg
 
பிறப்பு : 1940

முடி சூட்டப்பட்ட ஆண்டு : ஜூலை 23, 1970

அரசாட்சி ஆண்டுகள் : 45

 
5) டென்மார்க் அரசி மார்கெரெத்தே

 
queen%2Bmarg--z.jpg
 
பிறப்பு : 1940

முடி சூட்டப்பட்ட ஆண்டு : ஜனவரி 14, 1972

அரசாட்சி ஆண்டுகள் : 43

 
6) சுவீடன் மன்னர் கார்ல் பதினாறாம் கஸ்டாவ்

 
swedish_king450.jpg
 
பிறப்பு : 1946

முடி சூட்டப்பட்ட ஆண்டு : செப்டெம்பர் 15, 1973

அரசாட்சி ஆண்டுகள் : 41

 
7) சுவாசிலாந்து மன்னர் மூன்றாம் மஸ்வாதி 

 
mswati.jpg
 
பிறப்பு : 1933

முடி சூட்டப்பட்ட ஆண்டு : ஏப்ரல் 25, 1986

அரசாட்சி ஆண்டுகள் : 29

 
8) ஜப்பான் பேரரசர் அகிஹிடோ 

 
Kings_36.jpg
 
பிறப்பு : 1938

முடி சூட்டப்பட்ட ஆண்டு : ஜனவரி 7, 1989

அரசாட்சி ஆண்டுகள் : 26

 
9) லெசோதோ மன்னர் மூன்றாம் லெட்சிய்

 
Monarchie_Lesotho.jpg
 
பிறப்பு : 1933

முடி சூட்டப்பட்ட ஆண்டு :  நவம்பர் 12, 1990

அரசாட்சி ஆண்டுகள் : 24

 
10) நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட்

 
gholami20110801050725873.jpg
 
பிறப்பு : 1933

முடி சூட்டப்பட்ட ஆண்டு :  ஜனவரி 17, 1991

 
அரசாட்சி ஆண்டுகள் : 24
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person , guitar and outdoor
Palani Bharathi
 
பாப்டிலனுக்கு நோபல் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பாடல்கள் நிரம்பிய வாழ்க்கையை யாரால் நிராகரிக்க முடியும்?

1992 ஆம் வருட நாள்களில்... தமிழோசை பதிப்பகத்தின்  ... கலை இலக்கிய வெளியீடாக 'அரங்கேற்றம்' என்றொரு சிற்றிதழ் தொடங்கப்பட்டது. பதிப்பகத்தின் உரிமையாளர் கிள்ளிவளவன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு சில வருடங்கள்... பிறகு சிற்றிதழுக்கே உரிய பலம், பலவீனங்களோடு நின்றுவிட்டது.

எழுத்தாளர் இந்திரன், ஓவியர்கள் மருது, வீர சந்தானம்,கவிஞர் காசி ஆனந்தன், எஸ்.சண்முகம், அண்ணன் அறிவுமதி, நான், இப்போதைய 'ஜுனியர் விகடன்' திருமாவேலன், 'நிழல்' திருநாவுக்கரசு அனைவரும் அதன் பக்கங்களில் நிறைந்திருந்தோம். 

அப்போதுதான் சண்முகம் அமெரிக்க பாடகர் பாப்டிலனைப் பற்றி விரிவான ஒரு கட்டுரையை அதில் எழுதினார். அவர் சேகரித்து வைத்திருந்த இசைத்தட்டுகளிலிருந்து பாப்டிலனின் குரலைக் கேட்கச் சொன்னார்.அவர் தமிழாக்கம் செய்த 'துயிலின் இரு நிலங்கள்' நூலிலும் பாப்டிலனின் பாடல்கள் சேர்க்கப்பட்டிருந்தன. பிறகு அவற்றைத் தனி நூலாகக் கொண்டு வரலாம் என்பதால் தவிர்க்கப்பட்டுவிட்டது. அவரது முக நூல் பக்கங்களில் பயணித்தால் பாப்டிலனை நாம் பார்க்க...கேட்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்.

No automatic alt text available.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் வல்லிபுராழ்வார் சமுத்திரத்தீர்த்தத்தின் போது எடுக்கப்பட்டது. யார் எடுத்ததென்று தெரியாது..

Image may contain: crowd, outdoor, water and nature
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Family of rare white squirrels living in Edinburgh - 

safe_image.php?d=AQAKdImayxOybRIY&w=476&
A family of rare white squirrels are living in a suburb of Edinburgh.
BBC.CO.UK/NEWS/UK-SCOTLA…
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியளாளர் மயில்வாகனம் நிமலராசனின் 16 ஆண்டு நினைவு நாள்!

Sahana Sahana's photo.  
Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
#நிமலராஜனின் 16ம் ஆண்டு #நினைவு தினம் #யாழில் அனுஸ்டிப்பு. #lka #jaffna #sl #nimalarajan #journalist
 
14753919_377027472628698_1682157930527871563_o.jpg
Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளை வெளிக்கொணர உயிரைக் கொடுத்தவர்கள் தமிழ் ஊடகவியலாளர்கள்
அ.மயூரன், 

அடிப்பாங்கள், உதைப்பாங்கள், எரிப்பாங்கள், கொழுத்துவாங்கள் ஆனாலும் தொடர்ந்தும் வரும் என்றார் யோகர் சுவாமிகள் 1961 இல். யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகை ஆரம்பிக்கப்ட்ட போது யோகர் சுவாமிகளிடம் அருள் வாக்குப்பெறச் சென்றபோது இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். ஆம் அவருடைய அருள்வாக்கு பின்நாட்களில் பலித்துத்தான் போய்விட்டது. 

உலகெங்கிலும் இல்லாத அளவிற்கு வீறுகொண்டெழுந்த போராட்டங்களும், அதனூடு எழுச்சி பெற்ற தமிழ்ஊடகவியலும் பின்னாளில் மிக மோசமாக அடக்கி ஒடுக்கப்படும் என்பதை அன்றே யாழ்ப்பாணத்தின் சித்தர் பரம்பரை வெளிப்படுத்திவிட்டது, 

அந்தவகையில் தமிழ் ஊடகவியலும், தமிழ் ஊடகவியலாளர்களும் எவ்வளவு வேகமாகவும், அறிவியல் சார்ந்தும் வளர்ச்சியுற்றார்களோ அவர்கள் அவ்வளவுக்கவ்வளவு அடக்கி ஒடுக்கி அழிக்கப்பட்டது வரலாற்று ஏடுகளில் பதிவாகிவிட்டது இப்பதிவுகளின் நினைவலைகள் இங்கே நிழலாடுகிறது. தமிழ் ஊடகவியலில் முத்திரை பதித்த யாம்பவான்களின் படுகொலைகள் எண்ணற்றுத் தொடர்ந்து கொண்டிருக்க அவர்களை நினைவு கூரும் முகமாக சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒக்ரோபர் 19 ஐ தமிழ் ஊடகவியலாளர் படுகொலை தினம்Tamil Journalists' Assassination Day என பிரகடணப்படுத்தி நினைவு கூருகின்றனர்

இந்நினைவு கூரும் நாளில் தமிழ் ஊடகவியலாளர்கள் கடந்து வந்த பாதையின் அடிச்சுவடினை பின்னோக்கிப் பார்க்கலாம். இந்த ஊடகவியலாளர் படுகொலை நாள் என்பது நிமலராஜன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட ஒக்ரோபர் 19 ஆம் நாளையே தெரிவுசெய்யப்பட்டிருந்து. காரணம் இதற்கு முன்னர் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தாலும் கூட அவர்கள் தமிழீழ விடுதலைப்போராட்ட அமைப்புக்களின் உறுப்பினர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆனால் நிமலராஜன் எந்தவொரு போராட்ட அமைப்பையும் சார்ந்திராதவர் என்ற வகையிலும், செய்தி சேகரிப்பின் போது படுகொலை செய்யப்பட்டவர் என்ற வகையிலும் அவர் கொல்லப்பட்ட ஒக்ரோபர் 19 தினத்தை அனைத்துத் தமிழ் ஊடகவியலாளர்களும் பொதுப்படையாக ~~தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நாளாக" ஏற்றுக்கொண்டுள்ளனர். 

தமிழ் ஊடகவியலாளர்களை படுகொலை செய்வதில் ஆரம்பித்த படுகொலைப் பயிற்சியானது சிங்கள ஊடகவியலாளர்களையும் பலியெடுக்கும் வரலாற்றுப் போக்குக்கு இட்டுச்சென்றது. இந்த வகையில் குறிப்பாக நெருக்கடி மிகுந்த இனப்படுகொலை சூழலில் இருந்து கொண்டு தமிழ் ஊடகவியலாளராக இருந்த நிமலராஜனை பலியெடுப்பதில் பயிற்சிபெற்றுத் தேறிய படுகொலையானது சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை வரை நீண்டு சென்றதை நாம் காணலாம். 

தமிழ் ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்யும் பயிற்சியில் அரச சக்திகள் ஈடுபட்டிருந்த போது அதற்கு நேரடியாகவோ அன்றி மௌனத்தால் ஆதரவு வழங்கிய அந்த ஆதரவுப் பிற்புலத்திலிருந்துதான் ஏனைய ஊடகங்களுக்கு எதிரான, ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஒடுக்கு முறையும் விரிவடைந்தது. 

நிமலராஜன் தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவர் மட்டுமல்ல தமிழை விடவும் சிங்களத்தில் பேச்சுவழக்கு, எழுத்துவழக்கு ஆகிய இரண்டிலும் பாண்டித்தியம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் நீராவியடியை சேர்ந்திருந்தாலும் குருநாகல் அவருடைய சிறுபராய வதிவிடமாகிப்போனது. 

நிமலராஜன் ஒரு ஊடகவியலாளராக பணிபுரிய வேண்டும் என்ற நோக்கோடு ஊடகப்பணிக்கு வரவில்லை. மாறாக ஒரு தொழில் தேடும் படலத்தில் பத்திரிகை விநியோகஸ்தராக தன் பணியை ஆரம்பித்தார். 

1986 ஆம் ஆண்டு முரசொலி பத்திரிகையின் விநியோகஸ்தராக பத்திரிகைத்துறைக்குள் நுழைந்து அதன் பின்னர் 1990 களில் ஈழநாதம் பத்திரிகை ஆரம்பித்தபோது அங்கும் பத்திரிகை விநியோகஸ்தராகவே தன்பணியைத் தொடங்கிய நிமலராஜன் தன்னுள் இயல்பாக இருந்த கிறிக்கற் விளையாட்டின் விருப்பின் காரணமாக கிறிக்கற் பற்றிய தகவல்களை வர்ணணையாக ஈழநாதத்தில் எழுத ஆரம்பிக்கின்றார்.

இதன்பின்னர் கல்வி வலயங்கள் மற்றும் பிற இடங்ககளில் தகவல்களை சேகரிக்க ஆரம்பித்து ஈழநாதத்தின் செய்தியாளராக பரிணமிக்கின்றார். 

இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வரும் வரை அதாவது 1995 ஒக்ரோபர் யாழ்ப்பாணத்தில் ஈழநாதம் பத்திரிகை மூடப்படும் வரை அதில் பணியாற்றி அப்பத்திரிகை வன்னி வந்தபோது வன்னிக்கு இடம்பெயராது தொடர்ந்தும் யாழ்ப்பாணத்திலேயே இருந்து எழுத ஆரம்பிக்கின்றார். 

ஈழநாதத்தில் இருந்த போது ஏற்பட்ட துணிச்சலும், சிங்களப்புலமையும் இருந்ததனால் 1996 இல் பிபிசியின் சந்தேசியயும், தமிழோசையும் தமது யாழ் செய்தியாளராக நிமலராஜனை நியமிக்கின்றனர். இதுவே இவரின் கழுத்தில் வைக்கப்பட்ட கத்தியாகும். நிமலராஜன் ராவய பத்திரிகைக்கும் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தவராவார். 

யாழில் இராணுவத்தினர் செய்யும் கொடுமைகளை நிமலராஜனின் குரலில் பிபிசி சந்தேசியவில் வெளிவரத்தொடங்க இது சிங்கள மக்கள் மத்தியில் இலகுவில் சென்றடைந்தமையால் நெருக்கடிக்குள்ளான அரசு கைக்கூலிகள் மூலம் நிமலராஜனை அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்தது.

தன் நெஞ்சுக்கு, உண்மைக்கு, செய்திக்கு விசுவாசமாய் செய்திகளை வழங்கியவர் நிமலராஜன் ஆவார். இது ஒரு ஊடகவியலாளனின் படிமுறை வளர்ச்சியினைக் காட்டுகிறது. இதனால் தான் இவருடைய படுகொலை நாளை ஊடகவியலாளர் படுகொலை நாளாக அறிமுகப்படுத்தியது.

ஈழத்தில் ஈழநாடு பத்திரிகை நிலையம் முதலான பத்திரிகை நிலையங்கள் அடித்து நொருக்கப்பட்டாலும் ஈழத்தில் ஊடகத்துறை சார்ந்து கொல்லப்பட்ட முதலாவது நபராக புதிய பாதை சுந்தரத்தையே குறிப்பிடலாம். இவர் சித்திரா அச்சகத்தின் முன்னர் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து 1990 களில் கே.எஸ் ராஜாவும் கொலை செய்யப்பட்டார். 

அதன் பின்னர் ஈழத்தில் கொலைசெய்யப்பட்ட முக்கிய பத்திரிகை நபர் போராளியாக இருந்த அழகன் ஆவார். ஈழநாதம் என்கின்ற பத்திரிகையை அதன் கருத்தரிப்பிலிருந்து கட்டியெழுப்பிய சிறந்த ஊடக நிர்வாகியாக அழகன் காணப்பட்டார்.

அழகனைக் கண்டவர்கள், பழகியவர்கள், அழகனோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்கள் இன்றும் அழகனின் ஊடகத்துறைசார் நிர்வாகத்திறமையை வியப்புடன் கூறுவர். அழகன் நேரடியாக களங்களில் சென்று செய்தி சேகரிப்பவராகவும் இருந்தார். 

இவ்வாறு களத்தில் செய்தி சேகரிக்கும் போது இராணுவத்தினரின் சினைப்பர் தாக்குதலில் 1993 இல் கொல்லப்பட்டார். இவர் செய்தி சேகரிக்கும் போது கொல்லபட்டார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இதன் பின் தினமுரசு அற்புதனும் கொல்லப்பட்டார். தமிழீழத்தில் மட்டுமல்ல தமிழீழம் தவிர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும் தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஈழமுரசு கஜன் பிரான்சில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்

அடுத்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் வரிசையில் ஜி.நடேசன் முக்கியமானவர். மட்டக்களப்புப்பைச் சேர்ந்த ஜி.நடேசன் அவர்கள் தொடர்ச்சியாக வீரகேசரி வார இதழில் கட்டுரைகளை எழுதிவந்தார். மட்டு மண்ணிலிருந்து இராணுவ ஆக்கிரமிப்புக் கெதிராக கிளம்பிய அவரது எழுத்துக்கள் இவரைப் பலியெடுத்துவிடடடன. இவருடைய இழப்பும் தமிழ் ஊடகத்துறைக்கு ஏற்பட்ட இழப்பாகும். 

ஊடக ஜாம்பவான் டி.சிவராம் அவர்களைப் பற்றி சொல்ல நிறையவே உண்டு. ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மும்மொழிகளும் தெரிந்த ஒரு ஊடகவியலாளர் குறிப்பாக இனப்பிரச்சனை, யுத்தம், இராணுவ ஆய்வு முதலான துறைகள் சார்ந்து இலங்கையில் முத்திரை பதித்த முதலாவது எழுத்தாளராக தராக்கி அவர்களைத்தான் குறிப்பிடலாம். இவர் ஆயுதப்போராட்ட இயக்க உறுப்பினராக இருந்தவர் என்ற வகையில் தமிழர் தரப்போடு மட்டுமன்றி ஆயுதம் தாங்கிய சிங்கள இளைஞர்களோடும் உறவையும் கொண்டிருந்த இவார் இராணுவம் சம்பந்தமான ஆய்வுகளை துல்லியமாக எழுதக்கூடிய ஆற்றலும், வாய்ப்பும் இருந்தது.

இவர் அனைத்து நாட்டு இராஜதந்திரிகளோடும் நல்லுறவைப் பேணினார். இந்தப்பின்னணியில் இவருக்கு நிகராக தமிழ் ஊடகத்துறையில் இதுவரை மட்டுமல்ல இனியும் யாரையும் காண்பது அரிது. இப்படிப்பட்டு ஒரு ஜாம்பவானின் படுகொலை ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல உலகம் தழுவிய ஊடகத்துறைக்கே ஒரு மாபெரும் இழப்பாகும். 

அடுத்து சுடரொளிப்பத்திரிகையின் திருகோணமலைச் செய்தியாளராக இருந்த கல்முனையைச் சேர்ந்த சுகிர்தராஜன் 2006 இல் படுகொலை செய்யப்பட்டார். இவர் 2006 தை மாதம் திருமலை கடற்கரையில் ஐந்து மாணவர்கள் படுகொலையை இராணுவம் கொலையல்ல என மறைத்தபோது அம்மாணவர்களது உடலில் காயங்கள் இருந்த படங்களை வெளிப்படுத்தில் அவை இராணுவத்தினால் செய்யப்பட்ட படுகொலை தான் என புகைப்பட ஆதாரங்களுடன் சுடரொளி பத்திரிகையில் எழுதி வெளியிட்டார். இதுவே அம்மாணவர்கள் படுகொலைக்கு ஆதாரமாக அமைந்தது. இதன்காரணமாக சுகிர்தராஜன் கொல்லப்பட்டார். 

பு.சத்தியமூர்த்தியை நோக்கில் மட்டக்களப்பைச் சேர்ந்த இவர் ஈழநாதம், ஈழமுரசு, ஆதாரம் சஞ்சிகை, வெளிச்சம் ஆகிய ஊடகங்களில் தொடர்ச்சியாக எழுதிவந்த இவர் உறுதியாக, நிதானமாக பரபரப்பின்றி ஊடகப்பணியை செய்தவராவார். இறுதி யுத்தத்தில் தேவிபுரத்தில் செல்வீச்சினால் கொல்லப்பட்டார். 

இதன் பின்னர் புலிகளின் குரல் வானொலியில் புகழ் பெற்றிருந்த தவபாலன் அவர்கள் அயராத உழைப்பாளி அறிவியல் ஆர்வம் உடையவர். எந்த வேளையிலும் செய்தியே தொழிலாக இருந்தார்.

எப்போதுமே செய்தி சேகரிப்பது, செய்தி தயாரிப்பது, செய்தியை வாசிப்பது, நேரடி வர்ணணை செய்தல் முதலாக செய்தி தொடர்பான பல்பரிமாண பக்கங்கங்களை உடையவர். முள்ளிவாய்க்கால் குரல்கள் நசிக்கப்படும் வரை தமிழர் குரலாக ஓங்கி ஒலித்தவர் தவபாலன் ஆவர் முள்ளிவாய்க்காலில் கொலை செய்யப்பட்டார். 

இவர்போல் ஊடகத்துறையில் பணியாற்றிய பல ஊடகவியலாளர்களின் குரல்கள் முள்ளிவாய்காலுடன் நசுக்கப்பட்டன.

ஆண் ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல ரேலங்கி செல்வராஜா, இசைப்பிரியா, சுபாஜினி முதலான பெண் ஊடகவியலாளர்களும் கொலை செய்யப்பட்டனர். குறிப்பாக 2000 ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டுவரை 43 தமிழ் ஊடகவியலாளர்களை ஈழத்தமிழ் ஊடகத்துறை இழந்துள்ளது என்பது ஈடு செய்ய முடியாத இழப்பாகும். 

இலங்கையில் இனப்பிரச்சனை ஊடகவியலாளர்களின் கண்களைக் கட்டித்தான் முடிவடைந்தது. இறுதிக்கட்ட யுத்தத்தில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு ஒரு சிறு இடைவெளிகூட இல்லாமல் அரசின் ஊடகத்தின் மீதான இரும்புப்பிடி இராணுவத்தின் இரும்புச் சப்பாத்தின்கீழ் கொண்டுவரப்பட்டிருந்து.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களை ஊடகவியலாளர்களாகிய நாம் ஒருபோதும் நினைவுகூரத் தவறக்கூடாது. ஊடகங்களுக்கிடையிலும், ஊடகவியலாளர்களுக்கிடையிலும் அவ்வப்போது எழும் அதிகாரப் போட்டிகளும், ஊடகப்போட்டிகளும் மென்மேலும் ஊடகவியலாளர்களின் படுகொலைகளை ஊக்கிவிக்காது பாதுகாத்துக் கொள்வது நம் கடமையாகும் 

நன்றி
தினக்குரல் 
16.16.2016

Majura Amb's photo.
Majura Amb's photo.
Majura Amb's photo.
Majura Amb's photo.
Majura Amb's photo.
+2

ஊடகவியலாளர்கள் ஒக்ரோபர் 19 ஐ தமிழ் ஊடகவியலாளர் படுகொலை தினம்Tamil Journalists' Assassination Day என பிரகடணப்படுத்தி நினைவு கூருகின்றனர்

Image may contain: 4 people
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

புத்தகங்கள் வாசிக்கப்படும்வரை 
மீட்டப்படாத வீணைகளே !!!

 

Image may contain: night and fireworks
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர்சிலை மீது கால் வைத்த பிரபல வீரர்..! கோபத்தில் இலங்கை ரசிகர்கள்

625.0.560.320.160.600.053.800.668.160.90போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ புத்தர் சிலை ஒன்றின் மீது கால்வைத்த நிலையில் புகைப்படம் ஒன்றை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார்.

புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ள தொட்டியொன்றில் தனது காலை வைத்திருப்பது போன்ற புகைப்படமொன்றை தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இலங்கையில் உள்ள பெரும்பான்மை இனத்தவர்களாகிய சிங்களவர்களின் மதமான பௌத்த மதத்தின் கடவுளாக வழிபாடும் இந்த வேளையில் இவரின் பதிவானது, சிங்களவர்கள் மத்தியில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.

குறித்த செயலினை கடுமையாக கண்டிப்பதாக வெளிநாட்டு செய்திப்பிரிவுகள் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த செய்தியால் இலங்கையில் உள்ள ரொனால்டோவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.668.160.90

 
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.