Jump to content

பாட்டொன்று கேட்போம்... (பாட்டல்ல)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
நோர்வேயில் வசிக்கும் ஈழத்து இசைக்கலைஞர்,எழுத்தாளர் நாவுக்கரசன் அவர்களின் பதிவுகளை இங்கு தொடர்ந்து இணைக்கிறேன்...
 
 
1) இளையராஜாவின் அகாலமான பியானோ " Riff " இல் தொடங்கும் இந்தப் "சின்ன புறா ஒன்று "பாடல் "அன்பே சங்கீதா " படத்தில் ஒரு காமடி நடிகரான தேங்காய் ஸ்ரீநிவாசன் அவரோட பிரிந்து போன தங்கையை நினைத்து பாடுவது போல வந்ததாலோ என்னவோ அதிகம் கவனிக்கப்படவில்லை! இந்தப் பாடலின் தொடக்க, இடையே வரும் "ஹம்மிங்கை " S .P .சைலயா பாட, அந்த "ஹம்மிங்" தான் இந்தப் பாடலின் பிரிவின் வதையைப் பிழிந்து பிழிந்து சொல்ல , இந்தப் பாடலில் இளையராஜா வயலின் ,பியானோ எல்லாம் வைத்து இசை அமைத்து அரிதாக Bass கிட்டார் ட்ரக் Fretless ஸ்டைலில் வரும்! பாடலின் interlude இல் bass கிடார் நோட்ஸ் ,லீட் இணைப்பில் வரும் அண்ணன் தங்கை பிரிவைச் சொல்லும் இந்தப் பாடலை S .B பாலசுப்பிரமணியமும் அவரின் தங்கை S .P .சைலயாவும் பாடியுளார்கள் என்பது ஒரு அழகு! இந்தப் படத்திலேயே p .ஜெயச்சந்திரன் "பெத்தாலும் பெத்தேனடா ஒரு போக்கிரி பையனடா " என்ற பாடல் இருக்குது! ஜென்சியும் ,ஜெயச்சந்திரனும் பாடும் "கீதா சங்கீத " என்ற கர்நாடக சங்கீத அடிப்படைப் பாடலும் இருக்கு! ..........நீட்டிமுழக்கி அறுக்காமல் சுருக்கமா சொல்வது என்றால் "சின்ன புறா ஒன்று " பாடல் எண்ணக்கனாவினில் வண்ணம் கெடாமல் இன்றும் என்றும் வாழ்கின்றது , அதை இசைஅமைத்த இளையராஜா ,நினவில் உலவும் நிழல் மேகம் , அவர் நூறாண்டுகள் வாழ்கவே நூறாண்டுகள் வாழ்கவே!...
 
 
 
 
நன்றி - நாவுக்கரசன்..

 
 
 
2)மலையோரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா, சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா!!! என்ற இந்த இளையராஜாவின் மனசோடு பாடும் பாடலைச் சம்பந்தம் இல்லாமல் கடலோரம் இருந்து பாடுவது போல படமாக்கி இருக்கிறார்கள் ,,,எஸ் பி பாலசுப்பிரமணியம் சோகத்தைப் பிழிந்து பாடிய பாடல் எங்கள் இதயம் வரை காதலாகியது எண்பதுகளில் பாடு நிலாவே படத்தில் ,நதியாவும் ,மோகனும் ரொமண்டிக் காதல் செய்யும் போதெல்லாம்...பிரிஸ்டோ வாசித்த கரோகியின் பிண்ணனியில் நான் கிடாரில் பாடல் வரிகளையும்,இணை இசையையும் வாசித்து உள்ளேன்,,,..80 களில் மோகன் இரவல் குரலில் பேசி நடித்த படங்கள் பாடல்களுக்காகவே பிரபலமாகியிருந்தன. அவருடன் ரசிகர்கள் மனதில் இதமாய் ஒளிர்ந்த தாரகை நதியா இணைந்து நடித்த இந்தப் பாடல், காட்சிகளைப் பின்தள்ளி விட்டு, அதன் இனிய இசையாலும் , இதமான வரிகளாலும் பிரபலமாகியிருந்தது. ஆயிரம் சொந்தங்கள் தேடினாலும் தாய் தந்தை ஆகாது. .... தாய் தந்த பாட்டை சிலவேளை தாரத்தின் குரல் தாய் மொழியில் இசைக்கலாம். அப்படி இதயம் தொட்ட பாடல் இது....
 
https://www.youtube.com/watch?list=UUR7eTyBE5UQ89yuGRWANhlA&feature=player_embedded&v=FkY7nI4sUPc
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3) இளையராஜா அவர்கள் FUGUE எனும் வெஸ்டெர்ன் கிளாச்சிக்கில் உள்ள அற்புதமான நுட்பத்தைப் பல பாடல்களில் பயபடுதியிருக்கிறார். FUGUE என்றால் சுருக்கமாகத் தமிழில் இரு இசைக் கோர்வை ஒரு சுருதியில் வாசிக்கப்படும் எழும்பும் ஹார்மொனியின் பிரதிபலிப்பு என சொல்லலாம். உதாரணமாக இன்னும் எளிமையாகச் சொன்னால் இருவர் பாடிடுகையில், ஒரே வரிகளை ஒருவர் பின் மற்றொருவர் பாடிடும் வண்ணம் அமைந்ததாக இருக்கும், ஆனால் இருவர் பாடிடும் ஒரே வரிகள் வெவேறு விதமான சுருதியில் இருக்கும். அது போலவே இரண்டு இசை கருவிகள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரே இசையை வெவேறு பிட்சில் வாசிக்கவைக்கப்பட்டிருக்கும்.

16 ஆம் நூற்றாண்டிலேயே ஜொஹான்ஸ் செபஸ்தியான் பாச் என்ற ஜெர்மன் கிளாசிகல் கொம்போசர் அவர்கள் இந்த இசை நுட்பத்தை தனது சிம்பொனி இசையில் புகுத்தியிருக்கிறார் என்கிறார்கள் . இவர் செய்த வித்தியாசமான இந்த இசை நுட்பமே பிற்காலத்தில் FUGUE என்ற பெயரால் அழைக்கப்பட்டது என்றும் சொல்லுறார்கள் .
இளையராஜா அவர்களுக்கு ஜே.எஸ். BACH அவர்களின் இசை நிறைய உத்வேகத்தை தந்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக நிறைய பாடல்களை சொல்லிடலாம். ராஜாவின் “HOW TO NAME IT” ,திருவாசகம் சிம்பொனி போன்ற இசை அல்பம் காலம் எத்தனை கடந்தாலும் போற்றப்படும் ஒரு அரிய படைப்பு.
இன்னும் பல நூற்றாண்டு கழிந்தாலும் இந்த இசையை அன்று கேட்பவர்கள் ஆராட்சியில் இறங்குவார்கள் என்பதில் ஐய்யமில்லை.
 
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

4)

555779_10200793405738687_1168239742_n.jp

 

 

இந்த ஹொலண்ட் நாட்டு வெள்ளைப் பெண்மணி நின்கி (வர்யீனியா நிக்கொலோய்(?) ) இளையராஜாவின் ஒர்க்ஸ்றாவில் ஒரு காலத்தில் இதயம் வரை இறங்கி இசை தந்த ராஜாவின் ரேக்கொர்டிங்கில் புல்லாங்குழல் வாசித்தவா , 
 
இந்திய இசையில் மயங்கி இந்தியா வந்தவா,அந்த நேரத்தில் சுதாகர் என்பவரும்,பின் நாட்களில் அருண்மொழி என்ற நெப்போலியன் செல்வராச் ராஜாவுக்கு ஒர்க்ச்றாவில் புல்லங்குழல் வாசிதவர்கள் இருந்தும் , ராஜா நின்கிக்கும் பல பாடல்கள் வாசிக்க கொடுத்தார் ,
 
அதில் "அலைகள் ஓய்வதில்லை " படத்தில் வரும் "புத்தம் புது காலை" பாடல், "மூன்றாம் பிறை" படத்தில் சுதாகருடன் சேர்ந்து " பூங்காற்று " என்ற பாடலும் வேறு பல பாடல்களுக்கும் வாசித்து இருக்கின்றா ." ஜானி " படத்தில் வரும் ராஜாவின் "ஆசைய காதில தூதுவிட்டு " பாடலில் நின்கி ,ராஜா கொடுத்த நோட்ஸ்சோடா தன்னோட கொஞ்ச நோட்சையையும் இனைத்தாவாம், ராஜ சிரிச்சுப் போட்டு ,ஒண்டும் சொல்லவில்லையாம் . 
 
ராஜாவின் ஆஸ்த்தான புல்லாங்குழல் ஆர்ட்டிஸ்ட் களில் ஒருவரான முதல் மரியாதை புகழ் சுதாகர் பல வெஸ்டர்ன் டெக்னிக்குகள் அவாவிடம் இருந்து கற்றதா ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார், 
 
அந்த " நின்கி என்ற female classical flautists வெள்ளைக்கார அம்மணிக்கு எப்பவுமே நான் நன்றியுடையவன் " எண்டு ஒரு TV பேட்டியில் சொன்னார் . நின்கி "one of the top 10 Flutists at that time" என்ற "லெவலில் " தமிழ் கலாசார அடையாள வாத்தியமான புல்லாங்குழல் இல் தமிழ்நாட்டில் கலக்கி இருக்குறா ! 
 
நின்கி மிகவும் திறமை சாலி , பாடல் இசை அமைத்து, ரெக்கார்டிங் தொடங்கமுன் ,மற்ற ஒர்க்ஸ்டிரா வாத்தியகாரர்கள் இளையராஜா எழுதிக்கொடுத்த "நோட்ஸ்" களை வைத்து இசை அமைப்பில் நேரம் எடுத்து பிரக்டிஸ்ட் பண்ணிக்கொண்டு இருந்தபோது, நின்கி அவாவோட புல்லாங்குழல் " ஸ்கோர் நோட்ஸ்" ஐ இளையராஜவுக்கு உடனையே,அழுத்தம் திருத்தமாக,வாசித்துக் காட்டிப்போட்டு பேசாம,ஒரு ஓரமாக இருந்து ஆங்கில நாவல் வாசிப்பாவாம், சிலநேரம்" ரெகார்டிங் ஸ்டுடியோ"வுக்கு வெளியபோய் ,சின்னப் பையன்களுடன் "பல்லாங்குழி" விளையாடுவாவாம். 
 
நின்கி ஹொலண்ட் நாட்டுகாரகளுக்கே உரிய மெலிந்த தோற்றம் உடைய,உயரமான பெண்மணி, மசால் தோசை , சட்னி சாம்பாருடன் விரும்பி சாப்பிடுவாவாம் ,இந்திய தமிழ் கலாச்சாரப்படியே இளையராஜாவின் ரெகார்டிங் ஸ்டுடியோவுக்கு சேலை கட்டி , சாந்துப் போட்டு வைத்து கொண்டுதான் ரெகார்டிங்குக்கு வருவாவாம் ! 
 
நின்கி "தான் போன பிறப்பில இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும் " எண்டு அவாவோட இளையராஜாவின் ஆர்கிஸ்ராவில் வாசித்த இசைகலைஞ்ர்களுக்கு சொல்லி சிரிப்பாவாம் ,
 
நின்கி ஒரு கட்டத்தில ராஜாவின் ஒர்க்ஸ்டிராவில் இருந்து விலத்தி,பழையபடி ஹொலண்ட் போயிட்டா ,காரணம் ஒரு சக தமிழ் இசைகலைஞரை காதலித்ததாகவும் , ஏற்கனவே திருமணமான அவர், நின்கிங்கு பொய் சொல்லி அவாவை "பயன்படுத்தியதாகவும்" சொல்கிறார்கள்(?), சரியா தெரியாது! 
 
நின்கி என்ற வர்ஜினியா நிகொலோய் என்ற இந்த ஹோலந்த் ( நெதர்லாந்து ) நாட்டு வெள்ளைக்காரி தமிழாநாடு வந்து ,தமிழ் சினிமாவில், இளையறாஜாவின் இசையிற்கு புல்லாங்குழல் வாசித்தது அந்த மூங்கில்கள் தவம் இருந்து செய்த புண்ணியத்தின் பலன் ,வேற என்ன?............
 
ஒரு கட்டத்தில் யாருக்குமே தன் அடையாளத்தை சொல்லாமல் ,தமிழ் சினிமா இசையில் தன் பங்களிப்பை பதிவு செய்த நின்கி என்ற வர்யீனியா நிக்கொலோய் ஒரு தடயமே இல்லாமல் ஐரோப்பா போய் ,தன் தாய் நாடு ஹொலண்டில் நோய் வாய்ப்பட்டு இறந்துபோய் விட்டதாகவும் சொல்கிறார்கள் !
 
நன்றி - நாவுக் அரசன் 
ஒஸ்லோ ..
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5)இது வாசிக்க மிகவும் கடினமான பாடல்,,இயன்றளவு வாசித்தேன்,,சின்ன சின்ன பிழைகள் இருக்கு ,,இந்தப் பாடல் இசை அமைத்த மெஸ்ட்ரோ இளையராஜா தமிழில் "இன்னிசை " என்ற பலவிதமான இசைக்கருவிகளையும் ஒரே "real time" இல் இணைத்து வாசித்து உருவாக்கிய இசையை கொண்டுவந்தவர் ,அதால வருடக்கக்கில நின்று பிடித்தார் !
கிராமத்தில பிறந்த ராஜா ,சின்னவயசில் அவரோட அம்மா சின்னத்தாயி பாடிய நாட்டார் இசை பாடல்களை கேட்டு வளர்ந்தவர்,பின்னர் அவரோட அண்ணன் பாவலர் வரதராஜனுடன் ,முற்போக்கு நாடகங்களுக்கு ஆர்மோனியம் வாசித்தவர், மெட்ராசுக்கு வந்தபின் வெஸ்டேர்ன் இசையில் கிட்டார் ,பியானோ படித்தவர், அவர் கர்நாடக சங்கீதமும் படித்தாராம்
 
இந்த எல்லா அனுபவமும் அவரோட இசையில இருக்குது ! கர்நாடக சங்கீத அடிபடையில் இசை அமைக்க முடியும் எண்டு "சிந்து பைரவி" படத்தில நிருபிக்க, அதில அவருக்கு தேசிய விருது கிடைத்தது, "அன்னக்கிழி " தொடக்கம் அவரோட எல்லா சினிமா ஆரம்பப் பாடல்களும் கிராமிய மெட்டிலதான் இருந்தது .அவரோட தேனீ மாவடத்து வட்டார வழக்கில இருந்த ,தாரை,தப்பட்டை,,உடுக்கு உறுமி மேளம் எல்லாத்தையும் போட்டு முழங்கி வெள்ளித்திரையில் வழியவிட்டார்! புல்லாங்குழல் வாத்தியத்தை அவர் அளவுக்கு வேறு யாருமே சினிமா பாடலில் பயன்படுத்தவில்லை !
மெஸ்ட்ரோ இளையராஜா பல பாடல்களில் வெஸ்டேர்ன் கிளாசிக்கல் இசையை சத்தமில்லாமல் நுழைத்து அசத்தி இருக்குறார் ! ராஜாவின் "இன்னிசை " சிக்கலே இல்லாத எளிமையான இசைவடிவம், அதாலதான் அது பட்டி ,தொட்டி ,சேரி ,நகரம் என்று வஞ்சகம் இல்லாமல் எல்லா இடமும் சுற்றி சுழண்டது !
இந்த உலகத்தில ஒரு இசைக்கருவிய யாரும் வாசிக்கலாம்,ஆனால் இசையானி இளையராஜா போன்ற இசையின் கோலங்களை மனத்தால நினைபவர்களுக்குதான் இசை அமைக்கமுடியும் ..!.
 
 
 
நன்றி - நாவுக் அரசன் 
ஒஸ்லோ ..

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.