Jump to content

கொத்து புட்டு!


Recommended Posts

 

  • தேங்காய் கலந்த அரிசி மாவு புட்டு - ஒரு துண்டு (அல்லது) ஒரு கப்
  • வெங்காயம் - ஒன்று
  • மெல்லியதாக நறுக்கிய இஞ்சி - சிறிது
  • பச்சை மிளகாய் - 2
  • குழம்பு கிரேவி - அரை கப்
  • உப்பு - சிறிது
  • தாளிக்க:
  • எண்ணெய், கடுகு
  • மிளகாய் வற்றல் - ஒன்று
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து

 

 

 

 

A11903_01.jpg

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

 
A11903_02.jpg

அரிசி மாவு புட்டை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.

 
A11903_03.jpg

கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும். (உப்பு சிறிது சேர்த்தால் போதும்).

 
A11903_04.jpg

வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தீயைக் குறைத்து விட்டு உதிர்த்து வைத்துள்ள புட்டைச் சேர்த்துக் கலந்துவிடவும்.

 
A11903_05.jpg

அத்துடன் குழம்பு கிரேவியை சேர்க்கவும்.

 
A11903_06.jpg

அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.

மாலை நேர டீயுடன் சாப்பிட, சுவையான கொத்து புட்டு தயார். கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.
 
 

 

I don't guarantee the correctness of the recipe. Try at your own risk! 

 

- ஆரதி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.