Jump to content

பாரிசில் நூல் வெளியீடும் திறனாய்வும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கறுப்பி, குமாரசாமிஆரத்தி, சுவி அண்ணா மற்றும் அனைத்து உறவுகளுக்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சேலை கட்டியிருப்பது நான் தான் கறுப்பி. கனடா சந்திப்பில் எங்கள் படங்கள் போட்டோமே. நீங்கள் பார்க்கவில்லையா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படங்களில் எழு  யாழ் உறவுகள் உள்ளனர். எல்லோரையும் கண்டுபிடித்தீர்களா ??? 

P1010942_zps070f874b.jpgP1010930_zpscc3cf143.jpg

முதல் படத்தில்....

மஞ்சள் காஞ்சிபுர சேலையுடன் நிற்பவர் சுமோ.

வெள்ளை அரைக் கை சேட்டுடன் கதிரையை பிடித்துக் கொண்டு நிற்பவர் கோமகன்.

இரண்டாவது படத்தில்.....

நாவல்பழ நிற சேட்டுடன்.... கையில், பெரிய வடையை வைத்திருப்பவர் அஞ்சரன்.

(உண்மையில்... இந்தப் பெரிய வடையை,  நான் இது வரை காணவில்லை :D )

கோடன் சட்டை போட்டிருப்பவர், நெற்கொழுதாசன்.

அதே வரிசையில்..... ஜாக்கெட் கொழுவும் இடத்துக்கு அருகில் இருப்பவர் சாத்திரியார்.

முதல் வரிசையில்... இணையவனின் முகம் பாதி தெரிகின்றது.

ஆறு பேரை சொல்லியுள்ளேன், எல்லாம் சரியா.... சுமோ. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் படத்தில் நீலச் செட்டுடன் இருப்பவரும் யாழுக்கு வருபவர் தான். இரண்டாவது படத்தில் நீங்கள் கூறியவர் அல்ல நேற்கொழுதாசன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேலை கட்டியிருப்பது நான் தான் கறுப்பி. கனடா சந்திப்பில் எங்கள் படங்கள் போட்டோமே. நீங்கள் பார்க்கவில்லையா ???

பார்த்தேன். இந்த படத்தில் மங்களமா இருக்கிறீங்கள்

P1010942_zps070f874b.jpgP1010930_zpscc3cf143.jpg

முதல் படத்தில்....

மஞ்சள் காஞ்சிபுர சேலையுடன் நிற்பவர் சுமோ.

வெள்ளை அரைக் கை சேட்டுடன் கதிரையை பிடித்துக் கொண்டு நிற்பவர் கோமகன்.

இரண்டாவது படத்தில்.....

நாவல்பழ நிற சேட்டுடன்.... கையில், பெரிய வடையை வைத்திருப்பவர் அஞ்சரன்.

(உண்மையில்... இந்தப் பெரிய வடையை,  நான் இது வரை காணவில்லை :D )

கோடன் சட்டை போட்டிருப்பவர், நெற்கொழுதாசன்.

அதே வரிசையில்..... ஜாக்கெட் கொழுவும் இடத்துக்கு அருகில் இருப்பவர் சாத்திரியார்.

முதல் வரிசையில்... இணையவனின் முகம் பாதி தெரிகின்றது.

ஆறு பேரை சொல்லியுள்ளேன், எல்லாம் சரியா.... சுமோ. :)

மற்ற பாதி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுமே. 

எனக்கு வரக்கூடிய   சூழ்நிலை  இருக்கவில்லை..

உங்களது துணிவின் ரசிகன் யான்....

தொடருங்கள்......

Link to comment
Share on other sites

இந்தப் படங்களில் என்னுடன் சேர்ந்து ஒன்பது  யாழ் உறவுகள் உள்ளனர். எல்லோரையும் கண்டுபிடித்தீர்களா ??? ஒரு பெண் தான் பதினைந்து ஆண்டுகளாக யாழ் இணையத்தைப் பார்ப்பதாகவும், இணையத்தில் நான் போட்டிருந்த விளம்பரத்திப் பார்த்துத்தான் தான்  நிகழ்வுக்கு வந்ததாகவும் கூறி என்னுடன் நன்றாக உரையாடினார். அவருடைய இணையப் பெயரைக் கூற மறுத்துவிட்டார். கேட்க மிகவும் மகிழ்வாக இருந்தது. யாரும் அழைக்காமலேயே கேள்விப்பட்டு வந்ததாகக் கூறினர் சிலர். நேரமின்மை எல்லோருடனும் நீண்ட நேரம் உரையாட முடியாது போய்விட்டது.

உண்மைதான் அக்கா ஆனால் அவருக்கு நாங்கள் யார் யார் என்று எல்லாம் தெரிந்திருக்கு என்னிடம் வந்து கூட கதைத்தார் தான் யாழில் நீண்டகாலம் உறுப்பினர் என்று ஆனால் தனது பெயரை மட்டும் சொல்லவில்லை  :(  :(

Link to comment
Share on other sites

உண்மைதான் அக்கா ஆனால் அவருக்கு நாங்கள் யார் யார் என்று எல்லாம் தெரிந்திருக்கு என்னிடம் வந்து கூட கதைத்தார் தான் யாழில் நீண்டகாலம் உறுப்பினர் என்று ஆனால் தனது பெயரை மட்டும் சொல்லவில்லை  :(  :(

அவர் கடைசியாக என்னை தனியாக அழைத்து ஒரு விடயத்தை சொல்லிவிட்டுப் போனார் அப்போது தான் அவரை யார் என்று அடையாளம் காண முடிந்தது   :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாக் கதை விடுங்கோ சாத்திரி. மற்றவைக்குச் சொல்ல வேண்டாம் எண்டும் சொன்னாரோ?!!!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படங்களில் என்னுடன் சேர்ந்து ஒன்பது  யாழ் உறவுகள் உள்ளனர். எல்லோரையும் கண்டுபிடித்தீர்களா ??? ஒரு பெண் தான் பதினைந்து ஆண்டுகளாக யாழ் இணையத்தைப் பார்ப்பதாகவும், அவருடைய இணையப் பெயரைக் கூற மறுத்துவிட்டார். கேட்க மிகவும் மகிழ்வாக இருந்தது. யாரும் அழைக்காமலேயே கேள்விப்பட்டு வந்ததாகக் கூறினர் சிலர். நேரமின்மை எல்லோருடனும் நீண்ட நேரம் உரையாட முடியாது போய்விட்டது.

உண்மைதான் அக்கா ஆனால் அவருக்கு நாங்கள் யார் யார் என்று எல்லாம் தெரிந்திருக்கு என்னிடம் வந்து கூட கதைத்தார் தான் யாழில் நீண்டகாலம் உறுப்பினர் என்று ஆனால் தனது பெயரை மட்டும் சொல்லவில்லை  :(  :(

அவர் கடைசியாக என்னை தனியாக அழைத்து ஒரு விடயத்தை சொல்லிவிட்டுப் போனார் அப்போது தான் அவரை யார் என்று அடையாளம் காண முடிந்தது   :)

அவர் தான்..... துளசி.

இதை கண்டுபிடிக்க... ஏன் இவ்வளவு சிரமப் பட்டீர்கள்.

இங்கு தான்..... சாத்திரியாரின், புலனாய்வு மூளை வேலை செய்திருக்கு.  :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசியா ????? அப்பிடியும் இருக்குமோ ?????? இருக்காது துளசிக்கு வயது அதிகம்  இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசியா ????? அப்பிடியும் இருக்குமோ ?????? இருக்காது துளசிக்கு வயது அதிகம்  இல்லை

அவர், மேக்கப் போட்டுக் கொண்டு வந்திருந்தால்..... கண்டு பிடிப்பது கடினம். சுமோ...

கமலகாசன், ரசனிகாந் எல்லாம்..... தங்களது உருவத்தை எப்படி மாற்றுவார்கள்.

அதே போல்... துளசியும் வந்திருக்கலாம் என்று, நம்புகின்றேன்.

அத்துடன்... பிரான்ஸ் தான்....  உலகில், முதன் முதலில்.... சினிமா படம் தயாரித்தது..

அதில் மேக்கப் இல்லாமல்... இருந்திருக்குமா?  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் கண்ணில் உந்த மேக்கப் எல்லாம் தப்பாது.  அவர் துளசி அல்ல. ஆனால் துளசியும் வந்திருக்கலாம் யார் கண்டது. இரண்டு மூன்றுபேர் யாருடனும் கதைக்காமல் இருந்தார்கள். அவர்களுள் துளசியும் இருந்தாரோ என்னவோ  :lol: 

வாழ்த்துக்கள் சுமே. 

எனக்கு வரக்கூடிய   சூழ்நிலை  இருக்கவில்லை..

உங்களது துணிவின் ரசிகன் யான்....

தொடருங்கள்......

ரசிகன் என்கிறீர்கள் ஆனால் இருவருக்கும் பார்க்க இன்னும் விதியில்லை :lol:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் கண்ணில் உந்த மேக்கப் எல்லாம் தப்பாது.  அவர் துளசி அல்ல. ஆனால் துளசியும் வந்திருக்கலாம் யார் கண்டது. இரண்டு மூன்றுபேர் யாருடனும் கதைக்காமல் இருந்தார்கள். அவர்களுள் துளசியும் இருந்தாரோ என்னவோ  :lol:

சுமோ..... 

நீங்கள்.... நம்பினாலும், நம்பாவிட்டாலும்...

அங்கு... வந்தது  துளசி தான்... :D

http://www.youtube.com/watch?v=13TvdT68liI

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்னால ஆள் அனுப்பியிருந்தாலும் துளசி ஒத்துக்கொள்ளாமல் நாங்கள் எப்பிடி துளசிதான் எண்டு நம்பிறது சிறி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதின் நான்காம் திகதி மாலை நான்கு மணிக்கு எனது நூல் வெளியீடு லாசப்பலில் நடைபெற ஏற்பாடாகி இருந்தது. மதியம் பன்னிரண்டே முக்காலுக்குத்தான் நான் கோமகனின் வீட்டை அடைந்தேன். சிறிது நேர நலன் விசாரிப்புகளுக்குப் பின்னர் சுசீலா சுவையாகச் சமைத்து வைத்த உணவின் வாசனை மூக்கைத் துளைக்க கதைத்துக் கதைத்து ஒரு பிடி பிடித்ததில் அரை மணி நேரம் கடந்திருந்தது. நான் வெள்ளனவே சென்று ஒழுங்குகளைக் கவனிக்க வேண்டும் என்று கூறி இரண்டு மணிக்கு கோ இறங்கிவிட, அதிகம் உண்ட களைப்பு எனக்குக் கண்ணைக் கட்டியது.

இங்கிருந்து மண்டபத்துக்குப் போக எவ்வளவு நேரம் என்று சுசீலாவைக் கேட்டேன். எப்படியும் ஒரு மணி நேரம் வேண்டும் என்றார். சரி அரை மணி நேரம் தூங்குகிறேன். மறக்காமல் எழுப்புங்கள் என்றுவிட்டுச் சரிந்தால், எதோ சத்தம் வர எழுந்தால் இரண்டே முக்கால் ஆகியிருந்தது. நேரம் சென்றுவிட்டது என்று கூற கவலை வேண்டாம் சுமே எப்படியும் நாலுக்குத் தொடங்காது கெதியா வெளிக்கிடுங்கோ என்றவுடன் சேலை கட்டி நானும் தயாரானேன்.

ஓட்டமும் நடையுமாக தொடருந்து நிலையத்துக்குச் சென்று ஒருவாறு நான்கு மணிக்கு மண்டபத்தை அடைந்துவிட்டோம். எமக்கு முதலே நன்கு பேர் வந்திருந்தனர். விமர்சகர் திருமதி ஜெயா பத்மநாதனிடம் என்னை அறிமுகம் செய்துவிட்டு நிற்க நான் உள்ளதை உள்ளபடி விமர்சிப்பேன். குறை நினைக்கக் கூடாது என்றார். என்னைப் பார்த்துப் பயந்து நீங்கள் சொள்ளவந்ததைச் சொல்லாமல் விடாதீர்கள், எந்த விமர்சனமும் என்னை ஒன்றும் செய்துவிடாது என்று பகிடியாக அவரிடம் கூறிக்கொண்டு நிற்க நாலே காலுக்கு இணையவன் வணக்கம் அக்கா என்றபடி வந்தார். அவர் பின்னாலேயே அஞ்சரனும் நண்பர்களும் வந்தனர். அஞ்சரண் நான் நினைத்ததை விட உயரமாக இருந்தார். இவ்வளவு நகைச்சுவையாகவெல்லாம் எழுதுபவர் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் நின்றார். பின்னர் அவரும் நேர்கொளுதாசனும் சென்று குடிபானங்களும் சிற்றுண்டிகளையும் வாங்கிவந்து ஒழுங்குகளைச் செய்துவிட்டு வந்திருந்தோருக்கு சிறிய தண்ணீர்ப் போத்தலை வழங்கினர்.

அதன் பின்னர் விமர்சகர்கள் வி.ரி. இளங்கோவன், வாசுதேவன், தில்லை நடேசன் ஆகியோரும் மற்றவர்களும் வந்து  சேர்ந்தனர்.

நன்கே முக்காலுக்கு கோமகன் தலைமையில் அகவணக்கத்தோடு நிகழ்வு ஆரம்பமாக கோமகன் தனது கன்னி உரையை கன கச்சிதமாக எவ்விதப் பதட்டமுமின்றி நிகழ்த்தியது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

முதலாவதாக விமர்சனம் செய்த திருமதி ஜெயா பத்மநாதன் கதைகளை விரிவாக விமர்சித்ததோடு, கதைகளில் மற்றவர்களுக்கான தீர்வையும் சொல்லவேண்டும் என்றும் சீரழிந்த சமுதாயத்தை சீர்திருத்த நினைப்பதுதான் எழுத்தாளர் கடமை என்றார். எழுத்தாளர் தீர்வைச் சொன்னால் வைத்தியர் எதற்கு என்றார் கோமகன்.

அதன் பின் விமர்சிக்க எழுந்த வி.ரி. இளங்கோவன், யாரும் எழுத்தாளர்களுக்குக் கட்டளை இட முடியாது. எழுத்தாளன் தன் உணர்வை வார்த்தைகளால் வடிக்கிறான். அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்றதும் சிறிது சலசலப்பு எழுந்தது. விமர்சனம் முடிந்தபின் கேள்வி நேரத்தில் பேசலாம் என்று கோ சொல்ல அமைதி ஏற்பட்டது. இளங்கோவன் காரசாரமாக தன் விமர்சனத்தை வைத்து மூட்டைப் பூச்சி கதை மற்றும் முதலாவது கடிதம் என்பன கதைகளுள் அடங்காது. அவை டயரிக் குறிப்பு என்று வேண்டுமானால் கூறலாம். நீங்கள் புதிது என்பதால் அதிகம் சொல்லவில்லை என்றார்.

சுமேரியர் பற்றிய விமர்சனம் வாசுதேவன் அவர்களால் முதலில் வைக்கப்பட்டது. நிறைய வரலாறு பற்றிய தகவல்களைத் திரட்டி வந்து என்னைப் பிரமிக்க வைத்தார். தில்லை நடேசனும் கூட சுமேரியர் பற்றிய என் எழுத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் நான் இன்னும் தேடலைச் செய்யவேண்டும் என்றார். அவர்களின் விமர்சனத்தில் எனக்கு சுமேரியர் பற்றிய ஆய்வே அரைவாசி மறந்தது போல் வந்துவிட்டது.

ஏற்புரையில் கதைகளுக்கான பதில்களை நன்றாகவே தந்தேன் என நினைக்கிறேன். என்னை நான் திருத்திக்கொள்ள முயல்கிறேன் என்றேன். சுமேரியர் பற்றியது நேரம் போதாமையினால் முழுமையான விவாதமாக இராது இடையிலேயே நின்றது வருத்தம் தான்.

கோமகனும் நானும் ஆரம்பத்திலேயே யாழ் இணையத்தில் என் வளர்ச்சி பற்றிக் கூறத் தவறவில்லை. அத்துடன் தோழர் அழகிரி ஆரம்பகாலப் போராட்டங்களில் தன்னை இணை த்திருந்தவர். அவர் நூலை வெளியிட இணையவனை முதல் நூலினைப் பெற்றுக்கொள்ள அழைத்தபோது அவர் அதை எதிர்பார்க்காததால் சிறிது தடுமாறிவிட்டார். ஆளைக் கதிரையில் காணவில்லை. என்ன பெயர் கூப்பிட்டதும் வெளியே ஓடிவிட்டாரோ என்று நான் நினைத்துக்கொண்டு பார்த்தால் கதிரையில் வைத்து எதோ எழுதிக்கொண்டிருந்தார். மீண்டும் வாருங்கள் என்று அழைத்ததும்  வந்தார். அதன்பின் ஆஞ்சரன், சாத்திரி, நேர்கொழு, நவம் அண்ணா, தர்மினி, புஷ்பராணி ஆகியோர் நூல்களைப் பெற்றுக்கொள்ள அழைக்கப்பட்டனர்.

நாம் யாரும் கூப்பிடாமலே ரயாகரன், லக்மி போன்ற எழுத்தாளர்கள் வந்திருந்தனர். நேரம் போதாமையால் அதிக நேரம் எல்லோருடனும் கதைக்க முடியாமல் போனது கவலை. எல்லோருடனும் படங்கள் எடுக்க முடியாது மண்டபப் பொறுப்பாளர் வந்துவிட மனமின்றி வெளியே வந்தோம்.      

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கடந்த வாரம் 14/09/14/ பாரிசில் நிவேதா உதயராயனின் இரண்டு புத்தக வெளியீடு நடந்தது அந்த வெளியீட்டுக்கு தலைமை தாங்கிய கோமகன் என்னை கட்டாயம் வரும்படி கேட்டிருந்தார் அதே நேரம் பாரிசில் எனக்கு வேறு ஒரு நிகழ்வுக்கும் போக வேண்டியிருந்தது ..இரண்டு தேங்காயையும் ஒரே தடவையில் புடுங்கி விடலாம் என நினைத்து பாரிசுக்கு புறப்பட்டு விட்டிருந்தேன்.நூல் வெளியீடு லா சப்பலில் உள்ள தேவாலயத்துக்கு பக்கத்தில் ஒரு மண்டபம் என்று கோமகன் சொல்லியிருந்ததோடு விலாசம் எஸ் எம் எஸ் சில் போடவா என்றும் கேட்டிருந்தார்.அதைவிட மண்டப விலாசம் யாழ் இணையம் மற்றும் முகப்புதகங்களிலும் விளம்பரங்களில் பகிரப்பட்டிருந்தது.எனக்குத் தெரியாத லா.. சப்பலா?என்கிற எகத்தாளத்தில் விலாசத்தை நான் கவனத்தில் எடுக்காமல் சுரங்க ரயிலில் போய் ஒரு நிலையத்தில் இறங்கி வெளியே வந்து அண்ணாந்து பார்த்தால் வலம், இடமென இரண்டு தேவாலயத்தின் கோபுரங்கள் தெரிந்தது.

அடடா எனக்கு சொல்லாமல் இன்னொரு தேவாலயத்தை கட்டிட்டான்களே என்று நினைத்தபடி கோமகனுக்கு போனடிதேன்.ரயில் நிலையத்திலிருந்து நேரே வரவும் முதலாவது இடப்பக்க வீதில் உள்ள தேவாலயம் அதுக்குப் பக்கத்தில் மண்டபம் என்றார் .நானும் நடந்துபோய் இடப்பக்கம் திரும்பி தேவாலயத்தை அண்மித்ததும் நிறைய தமிழர்கள் அலங்கார உடைகளில்.அது மட்டுமில்லை வித விதமான வாகனங்கள் றிபன் ரோஜா பூக்கள் எல்லாம் கட்டி அழகு படுத்தி வரிசையாய் நின்றிருந்தது.இப்ப புத்தக வெளியீட்டுக்கும் இப்பிடி வாகனம் எல்லாம் சோடனை செய்து அலங்காரமாய் பட்டுச் சேலை பட்டுவேட்டி கட்டி எங்கடை ஆக்கள் வந்திருப்பது ஆச்சரியமாய் இருந்தது.மண்டபத்தினுள் நுழையும்போது ஐயர் ஒருவர் " நேரமாயிட்டுது எல்லாரும் உள்ளை வாங்கோ" என்றபடி வேகமாக போய்க்கொண்டிருந்தார்.

ஆகா ...புத்தகத்துக்கு பூஜை வேறை போடுறாங்களா என்று நினைத்தபடி உள்ளே நுழைய்ந்து விட்டேன்.மணவறையில் ஒருவர் அமர்த்திருந்தார்.நிச்சயமாக அது கோமகன் இல்லை .விடயம் புரிந்தது மண்டபம் மாறிவிட்டதா அல்லது நான் மாறி வந்து விட்டேனா என யோசித்துக்கொண்டிருக்கும்போது...டேய் எப்பிடி வந்தனி மச்சான் நீ தூரத்தில்லை இருக்கிற படியாலை வரமாட்டாய் எண்டு நினச்சு உனக்கு சொல்லேல்லை மன்னிச்சிடு யார் உனக்கு சொன்னது என்று எனக்கு தெரிந்த ஒருவர் கையைப் பிடித்தார்.

அப்போதுதான் விடயம் முழுவதுமாய் புரிந்தது அது அவரது மகளின் திருமணம். நான்தான் மாறி வந்து விட்டேன் ஆனாலும் அவரிடம் உண்மையான அன்பிருந்தால் சொல்லாமலும் வருவம் தூரம் எல்லாம் ஒரு பிரச்சனையா என்று சமாளித்ததும் நெகிழ்த்து போனவர் என்னை அழைத்துப் போய் முன் வரிசையில் இருத்தி கையில் வடையையும் கோலாவைம் தந்து மீண்டும் மன்னிப்பு கேட்டுவிட்டு பிறகு வாரன் என்று வேலையில் பரபரப்பாகிவிட
வடையை ஒரு கடி ..கோலாவில் ஒரு குடி ..மிகுதியை அப்பிடியே வைத்து விட்டு மெதுவாய் மண்டபத்தை விட்டு வெளியேறி பிரதான வீதிக்கு வந்து மீண்டும் கோமகனுக்கு போன்.அப்போ கோமகன் வரவேற்புரையை தொடங்கியிருக்கவேண்டும் போன் கை மாறியது "அந்த இடத்திலேயே அசையாமல் நிக்கவும் ஐந்து நிமிடத்தில் வருகிறேன்" என்றது கோமகனின் மனைவியின் குரல்.பின்னாலே பிள்ளை வண்டிலை தள்ளிய படி ஒரு பெண் பார்த்தோம் (parden) என்றாள் நான் அசையவில்லை. சிறிது தூரத்தில்எதிர்ப்பக்கம் இருந்த வீதியில் இருந்து கோவின் மனைவி கையசைத்தார். நான் ரயில் நிலையத்தில் இருந்து கோமகன் சொன்ன திசைக்கு எதிர் திசையில் இருந்துவந்து இடப்பக்கம் திரும்பி விட்டேன் அது கோமகனுக்கு வலப்பக்கம்.இப்போ எனக்கு வலப்பக்கம் அவருக்கு இடப்பக்கம்..ஆகவே நான் வலப்பக்கம் திரும்பவேண்டும்..எதாவது புரிகிறதா ??லூசுப் பயலே பேசாமல் வீதியின் பெயரை கேட்டுவிட்டு தேடிப்போயிருக்கலமே இதுதானே நீங்கள் நினைப்பது ....

சரி இப்போ மண்டபத்துக்குள் நுழைந்தாகி விட்டது நிவேதாவின் நிறம் மாறும் உறவு புத்தகம் பற்றியதிறனாய்வை ஜெயா பதமநாதன் வாசித்துக்கொண்டிருந்தார்.பாதியில் போனதால் மீதி விளங்கவில்லை எழுத்தாளர்கள் சமூகப்பிரச்சனைகளை ,சம்பவங்களை வெறும் பதிவுகளாக மட்டும் எழுதிவிட்டுப் போகாமல் அதுக்கான தீர்வுகளையும் சொல்லவேண்டும் என்றார் ..."எழுத்தாளர்கள் சொன்னா நாங்கள் அப்பிடியே கேட்பமாக்கும்"....அடுத்ததாக வி. ரி இளங்கோவன் பேசும்போது ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் அதுவும் பெண்கள் மிக குறைவாகவே எழுதுகிறார்கள் அவர்களை விமர் சனம் என்கிற பெயரில் அடித்துத் துவைத்து கிழித்து இனிமேல் அவர்கள் எழுதவே பயப்பிடும் நிலைக்கு தள்ளக்கூடாது.தட்டிக்கொடுக்கவேண்டும் என்பது போன்றதொரு திறனாய்வை செய்து டயரிக்குறிப்பில் எழுத வேண்டியவைகளை தயவு செய்து சிறுகதை தொகுப்பில் சேர்க்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டார் .அவரது பேச்சில் அவரின் அனுபவம் தெரிந்தது.

அடுத்ததாக தில்லை நடேசன் வரலாற்றை தொலைத்த தமிழர் பற்றி பேசும்போது ஆதிக்க சக்திகள், ஆரியம், மேலைத்தேயம் என்பன தமிழர் வரலாற்றை மறைக்கிறார்கள் அல்லது அழிக்கிறார்கள் என்பது போல கருத்தை வைத்தார்.அவர் சொன்னதில் சில உண்மை இருந்தாலும் அப்படியே என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது அது விவததுக்குரியதே ..அடுத்ததாக வேசுதேவன்.. பிரபஞ்சத்தின் தோற்றத்தில் இருந்து தொடங்கினான்.அது தில்லை நடேசன் ,சுமேரியர் மற்றும் தமிழர் வரலாறு அழிந்தது பற்றி வைத்த குற்றச்சாட்டுக்கள் அல்லது கேள்விகளுக்கு பதில் கொடுப்பதாகவும் இருந்ததோடு தமிழர்களின் வழித்தோன்றல்கள் சுமேரியர் தான் என்பது அகழ்வாராய்சிகள் மூலமாகவோ அறிவியல்பூர்வமாகவோ நிருபிக்கப்படவில்லை என்று அடர் தாடிக்கும் மீசைக்கும் இடையில் இருந்து குரல் ஒலித்தது.

இறுதியாக நிவேதா உதயராயன் அனைவருக்கும்,யாழ் இணையத்திற்கும் நன்றி சொல்லிவிட்டுஏற்புரையை தொடங்கினர்.இவை தனது முதலாவது வெளியீடு எனவே இனிவரும் காலங்களில் இன்றைய விமர்சனங்களை ஏற்று செயல்ப்படுவதாக சொன்னாலும் விமர்சகர்கள் பலர் சொன்ன விடயங்களுக்கு பதில் கொடுக்கும்போது மேலைத்தேயத்தவர்களால் எமது வரலாறு மறைக்கப் படுகிறது என்கிற கருத்தில் உறுதியாக இருந்தார்.அதற்கிடையில் பக்கத்துக்கு மண்டபத்தில் ஆபிரிக்கர்களின் நிகழ்வு ஒன்றும் நடந்து கொண்டிருந்தது அங்கிருந்த ஒரு பெண் எங்கள் மண்டப வாசலில் வந்து நின்று பெருத்த சத்தத்தில் அவரது மொழியில் எதோ சொல்ல இடுகட்டான் போய் மண்டப கதவை சாத்திவிட்டார் .அந்தப் பெண் நிவேதாவுக்கு வாழ்த்துச்சொல்லியிருக்கலாம் ஏனெனில் அவரின் புத்தகத்தில் எழுதியிருந்த கதைகளை விட அவர் அங்கு கதைத்த கதைதான் பலரையும் கவர்ந்திருந்தது....அதிகளவான யாழ்கள உறவுகளும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் எனக்கு மேலும் புதியவர்களின் அறிமுகங்கள் கிடைத்ததோடு கோமகனின் முதலாவது நிகழ்வு என்று சொல்ல முயாத அளவுக்கு சிறப்பாக தலைமை தாங்கி தொகுத்து வழங்கியிருந்தார் ..தொகுத்து வழங்கியிருந்தார் ..

10301494_10201765277813432_8819233576434

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகளவான யாழ்கள உறவுகளும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் எனக்கு மேலும் புதியவர்களின் அறிமுகங்கள் கிடைத்ததோடு கோமகனின் முதலாவது நிகழ்வு என்று சொல்ல முயாத அளவுக்கு சிறப்பாக தலைமை தாங்கி தொகுத்து வழங்கியிருந்தார் ..தொகுத்து வழங்கியிருந்தார் ..

10301494_10201765277813432_8819233576434

சகலருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.....குரு எப்ப உங்களுடைய புத்தக வெளியீடு.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய "வரலாற்றைத் தொலைத்த தமிழர்" நூல் எப்படிப் பெற்றுக் கொள்ளலாம்? விமர்சனம் எழுதத் தான்! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு  சுமேயின் புத்தகங்கள் 2 வேண்டும்

எவரிடம் பெற்றுக்கொள்ளலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வாரம் 14/09/14/ பாரிசில் நிவேதா உதயராயனின் இரண்டு புத்தக வெளியீடு நடந்தது அந்த வெளியீட்டுக்கு தலைமை தாங்கிய கோமகன் என்னை கட்டாயம் வரும்படி கேட்டிருந்தார் அதே நேரம் பாரிசில் எனக்கு வேறு ஒரு நிகழ்வுக்கும் போக வேண்டியிருந்தது ..இரண்டு தேங்காயையும் ஒரே தடவையில் புடுங்கி விடலாம் என நினைத்து பாரிசுக்கு புறப்பட்டு விட்டிருந்தேன்.நூல் வெளியீடு லா சப்பலில் உள்ள தேவாலயத்துக்கு பக்கத்தில் ஒரு மண்டபம் என்று கோமகன் சொல்லியிருந்ததோடு விலாசம் எஸ் எம் எஸ் சில் போடவா என்றும் கேட்டிருந்தார்.அதைவிட மண்டப விலாசம் யாழ் இணையம் மற்றும் முகப்புதகங்களிலும் விளம்பரங்களில் பகிரப்பட்டிருந்தது.எனக்குத் தெரியாத லா.. சப்பலா?என்கிற எகத்தாளத்தில் விலாசத்தை நான் கவனத்தில் எடுக்காமல் சுரங்க ரயிலில் போய் ஒரு நிலையத்தில் இறங்கி வெளியே வந்து அண்ணாந்து பார்த்தால் வலம், இடமென இரண்டு தேவாலயத்தின் கோபுரங்கள் தெரிந்தது.

அடடா எனக்கு சொல்லாமல் இன்னொரு தேவாலயத்தை கட்டிட்டான்களே என்று நினைத்தபடி கோமகனுக்கு போனடிதேன்.ரயில் நிலையத்திலிருந்து நேரே வரவும் முதலாவது இடப்பக்க வீதில் உள்ள தேவாலயம் அதுக்குப் பக்கத்தில் மண்டபம் என்றார் .நானும் நடந்துபோய் இடப்பக்கம் திரும்பி தேவாலயத்தை அண்மித்ததும் நிறைய தமிழர்கள் அலங்கார உடைகளில்.அது மட்டுமில்லை வித விதமான வாகனங்கள் றிபன் ரோஜா பூக்கள் எல்லாம் கட்டி அழகு படுத்தி வரிசையாய் நின்றிருந்தது.இப்ப புத்தக வெளியீட்டுக்கும் இப்பிடி வாகனம் எல்லாம் சோடனை செய்து அலங்காரமாய் பட்டுச் சேலை பட்டுவேட்டி கட்டி எங்கடை ஆக்கள் வந்திருப்பது ஆச்சரியமாய் இருந்தது.மண்டபத்தினுள் நுழையும்போது ஐயர் ஒருவர் " நேரமாயிட்டுது எல்லாரும் உள்ளை வாங்கோ" என்றபடி வேகமாக போய்க்கொண்டிருந்தார்.

ஆகா ...புத்தகத்துக்கு பூஜை வேறை போடுறாங்களா என்று நினைத்தபடி உள்ளே நுழைய்ந்து விட்டேன்.மணவறையில் ஒருவர் அமர்த்திருந்தார்.நிச்சயமாக அது கோமகன் இல்லை .விடயம் புரிந்தது மண்டபம் மாறிவிட்டதா அல்லது நான் மாறி வந்து விட்டேனா என யோசித்துக்கொண்டிருக்கும்போது...டேய் எப்பிடி வந்தனி மச்சான் நீ தூரத்தில்லை இருக்கிற படியாலை வரமாட்டாய் எண்டு நினச்சு உனக்கு சொல்லேல்லை மன்னிச்சிடு யார் உனக்கு சொன்னது என்று எனக்கு தெரிந்த ஒருவர் கையைப் பிடித்தார்.

அப்போதுதான் விடயம் முழுவதுமாய் புரிந்தது அது அவரது மகளின் திருமணம். நான்தான் மாறி வந்து விட்டேன் ஆனாலும் அவரிடம் உண்மையான அன்பிருந்தால் சொல்லாமலும் வருவம் தூரம் எல்லாம் ஒரு பிரச்சனையா என்று சமாளித்ததும் நெகிழ்த்து போனவர் என்னை அழைத்துப் போய் முன் வரிசையில் இருத்தி கையில் வடையையும் கோலாவைம் தந்து மீண்டும் மன்னிப்பு கேட்டுவிட்டு பிறகு வாரன் என்று வேலையில் பரபரப்பாகிவிட

வடையை ஒரு கடி ..கோலாவில் ஒரு குடி ..மிகுதியை அப்பிடியே வைத்து விட்டு மெதுவாய் மண்டபத்தை விட்டு வெளியேறி .....

-------

முன் வரிசையிலிருந்து...... வடையையும், கோலாவையும் குடித்து விட்டு,

மொய் எழுதாமல் போக... கூச்சமாக இருக்கவில்லையா? :D

சாத்திரியார்... நீங்கள் அரசியல் எழுதுவதை விட்டுவிட்டு... இப்படியான நகைச்சுவைகளில்.... உங்கள் முத்திரையை, பதிக்கலாமே.

வர்ணனை நன்றாக இருந்தது. சிரித்து, ரசித்தேன்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு  சுமேயின் புத்தகங்கள் 2 வேண்டும்

எவரிடம் பெற்றுக்கொள்ளலாம்..

லா சப்பலில், உள்ள புத்தகக் கடைகளில் நிச்சயம் இருக்கும் விசுகு.

அங்கு... விசாரித்துப் பாருங்களேன்.

அப்படி இருக்கா விட்டால், இதற்கான ஒழுங்கை.. பிரான்ஸ் உறவுகள் ஏற்பாடு செய்வது, நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய "வரலாற்றைத் தொலைத்த தமிழர்" நூல் எப்படிப் பெற்றுக் கொள்ளலாம்? விமர்சனம் எழுதத் தான்! :icon_mrgreen:

யஸ்டின் உங்கள் முகவரியை தனிமடலில் போட்டால் அனுப்பிவிடுகிறேன் :lol:

எனக்கு  சுமேயின் புத்தகங்கள் 2 வேண்டும்

எவரிடம் பெற்றுக்கொள்ளலாம்..

லாசெப்பல் புத்தகக் கடையில் இருக்கிறதண்ணா

படத்தில் எனது பள்ளித் தோழனும் இருக்கிறார்.

தோழனின் பெயர் மறந்துவிட்டதோ ???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.