Archived

This topic is now archived and is closed to further replies.

பிழம்பு

‘எது வேணும்னாலும் சாப்பிடலாமா டாக்டர்?’

Recommended Posts

- பொன்.விமலா

''முன்ன எல்லாம் காய்ச்சல்னு டாக்டர்கிட்ட போனா... மாத்திரை எழுதித் தர்றதோட, 'பால் குடிக்கக் கூடாது, காரம் கூடவே கூடாது, எண்ணெய்ப் பொருட்கள் வேண்டாம், கஞ்சி சாப்பிடலாம், பிரெட் சாப்பிடலாம்’னு இப்படி சாப்பாட்டைப் பற்றியும் மறக்காம சொல்லி அனுப்புவார். ஆனா, சமீபத்துல நான் இரண்டு வேறுபட்ட நோய் காரணமா டாக்டர்கிட்ட போனப்போ, நோய்க்கான மருந்தை பரிந்துரைத்தவர்கிட்ட, 'என்னவெல்லாம் சாப்பிடலாம், எதெல்லாம் கூடாது டாக்டர்?’னு நான் கேட்க, 'அப்படிஎல்லாம் எந்தக் கட்டுப்பாடும் தேவையில்ல, எதை வேணும்னாலும் சாப்பிடுங்க!’னு சொல்லி அனுப்பினார். உடல் நலக்குறைவால சிகிச்சை எடுத்துட்டு இருக்கும்போது, இப்படி எதை வேணும்னாலும் சாப்பிடறது சரியா இருக்குமா..?''

- இப்படி ஒரு கேள்வியை நம் வாசகி ஒருவர் கேட்க, இதை சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் எழிலன் முன் வைத்தோம்.

''பத்தியம் தேவையில்லை என்பதன் பொருள், கண்டிப்பாக விளக்கப்பட வேண்டும்'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்ன டாக்டர், ''முந்தைய காலங்களில் ஒரு நபருக்கு மஞ்சள்காமாலை இருந்தால் அவருக்கு செரிமானத் தன்மை குறைவாக இருக்கும். அதனால் வயிற்றை காலியாகப் போடுவது நல்லது என டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். அதோடு காய்ச்சலால் வாந்தி இருந்தால், வயிற்றுக்கு ஓய்வு கொடுக்கும்படியான ஆலோசனைகளை வழங்கினார்கள். இப்போதோ, நோயாளிக்கு குடல் பிரச்னை அல்லது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்தால் மட்டுமே வாய் வழியான உணவைத் தவிர்க்கச் சொல்கிறோம். வயிற்றைச் சுத்தமாக காலி செய்யச் சொல்லும் அறிவுரைகள் தற்போது இல்லை. ஒரு நோயாளி எவ்வளவு சீக்கிரம் வாய் வழியாக உணவு எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கிறாரோ, அவ்வளவு சீக்கிரம் அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன. எனவேதான் உணவுக் கட்டுப்பாட்டை கடுமையாகப் பரிந்துரைப்பதில்லை.

p76.jpg

அதற்காக, 'எதை வேணும்னாலும் சாப்பிடலாம்’ என்கிற பரிந்துரைக்கு, 'பிரியாணி சாப்பிடுங்க, பால் கோவா சாப்பிடுங்க, எண்ணெயில் மூழ்கிய பலகாரங்களைச் சாப்பிடுங்க’ என்பதல்ல அர்த்தம். பத்திய சாப்பாடு என்கிற பெயரில் சத்தில்லாத ஆகாரம் எடுத்துக்கொள்ள அவசியம் இல்லை. நோயின் தீவிரத்தைப் பொறுத்து செரிமானம் ஆகக்கூடிய ஆரோக்கியமான, சத்தான உணவை எடுத்துக்கொள்ளலாம் என்பதே இதன் பொருள். நோயைக் கட்டுக்குள் கொண்டுவரும் நல்ல உணவை சாப்பிட வேண்டும் என்பதையே டாக்டர்கள் சொல்கிறார்கள் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று தெளிவுபடுத்திய டாக்டர், தொடர்ந்தார்.

''ஒவ்வொரு நோயின் வெளிப்பாடும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். எனவே, எல்லோருக்கும் பொதுவான உணவு ஆலோசனைகள் வழங்குவது சரியாக இருக்காது. உதாரணத்துக்கு... மஞ்சள்காமாலையுடன் வரும் ஒருவருக்கு, நீரிழிவு நோயும் வரும் பட்சத்தில், அவருக்கு நீரிழிவு நோய்க் கட்டுப்பாட்டுக்கான உணவைத்தான் அறிவுறுத்துவோம். மண்ணீரல் சிதைவோ, குடல் பிரச்னையோ இருப்பவர்களுக்குத் தவிர்க்க வேண்டிய உணவுகளைக் கண்டிப்புடன் அறிவுறுத்துவோம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு, சக்தியைப் பெருக்குவதற்குத் தேவையான புரோட்டீன் சத்துக்கள் அடங்கிய உணவை எடுத்துக்கொள்ள அறிவுறுத்துவோம். பழங்கள், கீரைகள், வேகவைத்த முட்டையுடன் கூடிய சரிவிகித உணவை அனைவரும் எடுத்துக்கொள்ளலாம்.

 

p76a.jpgமுன்பு கூட்டுக் குடும்பங்களாக இருந்தபோது, ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், கஞ்சி, சூப், பத்தியம் என்று உறவினர்கள் அவர் உடல்நிலை தேறும்வரை அருகிலிருந்து கவனித்துக்கொண்டார்கள். ஆனால், தற்போதுள்ள தனிக்குடித்தன சூழலில், அதிலும் தம்பதி இருவரும் பணிக்குச் செல்ல நேரும்போது, ஒருவருக்கு நோய் என்றால், அதை அவரே சரிப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம். இந்நிலையில், உணவுக் கட்டுப்பாடு என்பதைவிட, சத்தான உணவின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக்கொண்டு அதிலிருந்து நிவாரணம் பெறுவதே சிறந்தது. அதைத்தான் மருத்துவர் களும் வலியுறுத்துகிறார்கள்.

 

இந்தத் தலைமுறையினருக்கு சுத்தமான காற்று, குடிநீர், இயற்கை உணவு இவையெல்லாம் கிடைப்பதில்லை. ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்தில் யாருக்கும் இங்கே நின்று நிதானமாக உணவு சாப்பிடக்கூட நேரமில்லை. நேரம் தவறிச் சாப்பிடுவதையும், அவசரமாகச் சாப்பிடுவதையும்தான் அனைவரும் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், செரித்த பின் உண்பதும், சரியான நேரத்தில் சாப்பிடுவதுமே நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் என்பதை உணருங்கள்'' என்று முக்கியமான ஆலோசனையுடன் முடித்தார் டாக்டர் எழிலன்!

 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=31492

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • விடுதலைப் போராட்ட முடிவில் புலிகளே “கசப்பான முடிவு” - bitter end  என்றே தமது தோல்வியை குறிப்பிட்டார்கள்.  அந்த கசப்பான முடிவின் பின்னர் இப்போதுள்ள தலைமுறையால் இதை குறுகிய காலத்தில் நிவர்ததி செய்ய  நிவர்த்தி செய்ய முடியாத அளவுக்கு மைனஸ்க்கு கீழே பல இலக்கங்களில்  எமது நிலைமை மோசமாக உள்ளது.   செய்யக் கூடியதெல்லாம் தமிழர்கள் தமது  கல்வியையும் பொருளாதாரத்தையும் வளர்தது கொள்வதோடு புலம்  பெயர் புதிய தலைமுறைக்கும் தாயகத்தில் வாழும் தலைமுறைக்கும் நெருங்கிய உறவை வளர்கக கூடிய திட்டங்களை வளர்தது முடியுமான அளவுக்கு தாயகத்தில் முதலீடுகளை செய்து  தொழில் நுட்ப அறிவை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் நிலையை ஏற்படுத்தவேண்டும். அதன் மூலம் இலங்கைத்தீவில் தமிழரது நிலையை நீண்ட காலத்தில் reinforce பண்ண முடியும்.     அத்துடன்  எமது போராட்ட வரலாற்றை நேர்மையுடன் உண்மையுடனும்  உள்ளதை உள்ளபடியே  புதிய தலைமுறைக்கு கடத்தவேண்டும். எமது பக்கத்தில் போராளிகளின் அர்பணிப்பால்  எவ்வாறு தேசம் கட்டியெழுப்பப் பட்டதென்பதையும்,  அதே வேளை எமது பக்க  அரசியல்   தவறுகளால்  அது எப்படி அழிக்கப்பட்டதென்பதையும் உண்மையுடன் கூறவேண்டும். அதை விடுத்து உண்மையை மறைப்பதற்காக  தனக்கு  பிடிக்காதவனெயெல்லாம் தினசரி துரோகி என்று  பொய்க்கதைகளை உருவாக்கி திட்டி தீர்த்து  அவன்தான் அழித்தான்,  இவன்தான் அழித்தான் என்று வெறுப்பு அரசியலை புதிய தலைமுறைக்கும் சொல்லி கொடுப்பதால் பயனும் ஏற்படாது. இன்னும்  பாதகமான விளைவைதான் ஏற்படும். 
    • சூரியன், போராளி என்கின்ற காரணத்தால் விரும்பியவாறு கதைக்கலாம் என்றில்லை. சுமந்திரன் தொடர்பாக அவர் தனது கருத்தை வெளிப்படுத்துவதில் எவரும் குறை காண முடியாது. ஆனால் சுமந்திரனுக்கு வாக்களிப்பவர்கள் இனத் துரோகிகள் என்று கூறுவது மிக மிகப் பொறுப்பற்ற செயல். அதற்குள் தலைவரை வேறு இழுத்துவிடுவது மகா மட்டமான செயல்.  அதுவும் போராளியாக இருந்துகொண்டு......😡 கண்ணைத் திறந்து பாருங்கள். அதென்ன உங்கள் எசமான் ? 😏    
    • இதுவும் "ல கரம்" கவிஞர்  கண்ணதாசன்,   m . s . விஸ்வநாதன், s . b . பாலசுப்பிரமணியம்........! வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீயிலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா   வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா   தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா அவள் காட்டும் அன்பிலா   இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா தீதிலா காதலா ஊடலா கூடலா அவள் மீட்டும் பண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா   சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன் அதைச் சொல்வாய் வெண்ணிலா   வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா........!    
    • போராளி என்கின்ற தகுதியை காக்கவேண்டியது போராளிக்குரிய கடமை. அதிலிருந்து தவறும்போது விமரிசனங்களை எதிர் கொள்ளத்தான் வேண்டும். ☹️ ஐயா பூச்சி, முதலில் அந்தரத்தில் தொங்குவதிலிருந்து இறங்கி வாரும். அப்போதுதான் யதார்த்தம் புரியும். 😏