Jump to content

ஐபோன் 6 & ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

-----

நான் ஒரு முறை என் Blackberry யை மூத்தா பெய்யும் போது கொமர்ட்டுக்குள் விழுத்தி விட்டேன். பிறகு வெளியே எடுத்து ஒரு பைக்குள் அரிசியை நிரப்பி அதனுள் போனைப் போட்டு காய வைத்து 24 மணி நேரத்தின் பின் வேலை செஞ்சது. :)

 

இந்த... ரெக்னிக்கை, உங்களுக்கு யார் காட்டித் தந்தது?

சொந்த கண்டுபிடிப்பு என்றால், உடனே.... இதை Copy Right ற்கு..... பதிவு செய்து விடுங்கள், நிழலி. :D

Link to comment
Share on other sites

இந்த... ரெக்னிக்கை, உங்களுக்கு யார் காட்டித் தந்தது?

சொந்த கண்டுபிடிப்பு என்றால், உடனே.... இதை Copy Right ற்கு..... பதிவு செய்து விடுங்கள், நிழலி. :D

 

என் மனைவி கூகிள் ஆண்டவரிடம் கேட்டுப் பெற்று எனக்குச் சொன்ன வழிமுறை இது.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மனைவி கூகிள் ஆண்டவரிடம் கேட்டுப் பெற்று எனக்குச் சொன்ன வழிமுறை இது.  :)

 

ஊரில்.... மார்கழி மாதம் போன்ற,  குளிர் காலங்களில் தலையில் தண்ணீர் வார்த்து முழுகும் போது,

துவாயால்... எவ்வளவு துடைத்தாலும் தலை முடியில் உள்ள ஈரம் காயாது. அது பெண்களுக்கு தலை இடியை கொண்டு வரும் என்பதால்.....

முழுகிய அன்று, இரவு...படுக்கும் போது, தலையணைக்கு மேல் துணிப் பையில் நிரப்பிய சிறிய அரிசி பை ஒன்றை, தலையில் வைத்து  பாட்டி, அம்மா ஆகியோர் நித்திரை கொள்வார்கள்.

 

அந்த அரிசி பக்கற்ரை, "ரீ சைக்கிளிங்" மாதிரி அடுத்த நாள் வெய்யிலில் காய வைத்து, பாவிக்கலாம். (கொஞ்ச நாள் பாவித்த பிறகு, அந்த அரிசியை கோழிக்கோ, காகத்துக்கோ தானமாக வழங்க்கலாம்) :lol:

 

இப்போ.... Hair Dryer வந்து விட்டதால், அரிசி மூட்டைக்கு வேலை இல்லாமல் போச்சு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை கேலக்ஸியோடு இன்னமும் பயன்படுத்துகிறேன், 2002 ஜனவரியில் வாங்கியது!

ஒலியும், வடிவமைப்பும் அந்த மாதிரி..

பாட்டரிதான் சரியாக கிடைக்க மாட்டேங்குது..!

 

no8890_00.jpg

 


கண்ணும், எண்ணமும் நோக்கியா...

நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு போன் வேலை விடயமாய் அடிக்கடி பாவிக்க வேண்டியிருக்கும் தமிழ்சிறி...!

 

 

கடந்த இரு வாரத்துக்கு முன் எனது மருமக்கள் வந்திருந்தபோது  அவவின் போன் தண்ணி வாளிக்குள்  விழுந்து விட்டது. அவர்கள் உடனே எடுத்து  பற்றறியை கழட்டி விட்டு ஹேர் ட்ரையரால் சூடு பிடித்து பின் அரிசிக்குள் புதைத்து வைத்திருந்தனர். அடுத்தநாள் அது கொஞ்சம் பிகு பண்ணிச்சுது. பின் சரியாகிட்டுது...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு போன் வேலை விடயமாய் அடிக்கடி பாவிக்க வேண்டியிருக்கும் தமிழ்சிறி...!

 

 

கடந்த இரு வாரத்துக்கு முன் எனது மருமக்கள் வந்திருந்தபோது  அவவின் போன் தண்ணி வாளிக்குள்  விழுந்து விட்டது. அவர்கள் உடனே எடுத்து  பற்றறியை கழட்டி விட்டு ஹேர் ட்ரையரால் சூடு பிடித்து பின் அரிசிக்குள் புதைத்து வைத்திருந்தனர். அடுத்தநாள் அது கொஞ்சம் பிகு பண்ணிச்சுது. பின் சரியாகிட்டுது...!

 

எந்த ஒரு, சிறிய இடை வெளியிலியிருந்தும், இருக்கும் ஈரப்பதனை உறிஞ்சி எடுக்கக் கூடிய தன்மை அரிசிக்கு உண்டு சுவி.

 

Link to comment
Share on other sites

dsc_4159.jpg

 

இதுதான் நான் முதன்முதலில் வாங்கிய அலைபேசி.. :D கனநேரம் கதைத்தால் காது சூடாகிவிடும்.. :wub:

Link to comment
Share on other sites

dsc_4159.jpg

 

இதுதான் நான் முதன்முதலில் வாங்கிய அலைபேசி.. :D கனநேரம் கதைத்தால் காது சூடாகிவிடும்.. :wub:

 

இது அலைபேசியா???? அல்லது Cordless phone ஆ? :unsure:  :D  வடிவா யோசிச்சு சொல்லுங்கோ இசை அண்ணா :icon_idea:

 

Link to comment
Share on other sites

இது அலைபேசியா???? அல்லது Cordless phone ஆ? :unsure:  :D  வடிவா யோசிச்சு சொல்லுங்கோ இசை அண்ணா :icon_idea:

 

 

சார்ஜ் பண்ணும்போது cordless phone மாதிரிதான் cradle இல் வைக்க வேணும் என நினைக்கிறன்.. :D ஆனாலும் அவ்வளவு பெரிய அலைபேசி இல்லை..  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

dsc_4159.jpg

இதுதான் நான் முதன்முதலில் வாங்கிய அலைபேசி.. :D கனநேரம் கதைத்தால் காது சூடாகிவிடும்.. :wub:

இந்த போன் தான் நானும் முதன்முதலா லண்டனில வாங்கியது1999,ஒரு கிழமையால ஏமலாந்திக்கொண்டு பறிகொடுத்தது இன்னும் சோகமான கதை
Link to comment
Share on other sites

https://imageshack.com/i/f0hvynRNj

 

நான் முதல் முதலில் வைத்திருந்த இரவல் போன்.

 

https://imageshack.com/i/iqyi5aeej

 

அப்போது நான் ஆசைப்பட்ட போன்.  அப்போது இதன் விலை ஐநூறு டொலர்கள்.   :icon_mrgreen:

 

 

இப்போது அப்பிள் போன் பழுதாகிவிட்டதால் தற்காலிகமாக LG  பயன்படுத்துகிறேன்.   கிறிஸ்மசோடு புது அப்பிள் வாங்குவதாகத் திட்டம்.   :icon_idea:  :icon_idea:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விதத்தில் பார்க்கப் போனால் வாடிக்கையாளர்களை அடிக்கடி வங்கு ரோத்துக் கொண்டு வருவதில் இப்படியான தொலைபேசி நிறுவனங்களுக்கும் பங்கு உண்டு என்று தான் சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

இப்போது அப்பிள் போன் பழுதாகிவிட்டதால் தற்காலிகமாக LG பயன்படுத்துகிறேன். கிறிஸ்மசோடு புது அப்பிள் வாங்குவதாகத் திட்டம். :icon_idea::icon_idea::icon_idea:

போன் பழுதானால் கரன்டி இருந்தால் இலவசமாக புதிய போன் மாற்றி தருவார்கள்.

எனக்கு தெரிந்த ஒருவர் கரன்டி முடிந்த பின்னரும் தனது பழுதான போனை அப்பிள் கம்பெனியில் கொடுத்து சாதாரண விலை அல்லாமல் குறைந்த பணம் செலுத்தி (கிட்டத்தட்ட அரைவிலையில்) புதிய போன் பெற்றார்.

இவ்வாறு பெறுவதற்கு ஏதும் விதிமுறை உள்ளதோ தெரியவில்லை.

ஆனாலும் விசாரித்து பாருங்கள்.

புதிய மொடெல் வாங்குவதானால் முழுப்பணமும் செலுத்தி தான் வாங்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன் பழுதானால் கரன்டி இருந்தால் இலவசமாக புதிய போன் மாற்றி தருவார்கள்.

எனக்கு தெரிந்த ஒருவர் கரன்டி முடிந்த பின்னரும் தனது பழுதான போனை அப்பிள் கம்பெனியில் கொடுத்து சாதாரண விலை அல்லாமல் குறைந்த பணம் செலுத்தி (கிட்டத்தட்ட அரைவிலையில்) புதிய போன் பெற்றார்.

இவ்வாறு பெறுவதற்கு ஏதும் விதிமுறை உள்ளதோ தெரியவில்லை.

ஆனாலும் விசாரித்து பாருங்கள்.

புதிய மொடெல் வாங்குவதானால் முழுப்பணமும் செலுத்தி தான் வாங்க வேண்டும்

 

ஒரு முறை ஈபேயில்.. ஒரு ஐபொட் வாங்கினது. அது வாங்கி வீட்ட வந்து கணணியில் கொழுவ.. சிங் ஆகமாட்டன் என்றிட்டுது. வாங்கினது 60 பவுனுக்கு. விற்றவனிடம் தொடர்பு கொண்டு விடயத்தைச் சொல்ல.. அவன் இன்னும் 1 மாதம் உற்பத்தி அங்கீகாரம் (வொரண்டி) உள்ளது.. அப்பிளிடம் கொண்டு போய் மாத்து என்று அப்பிளில் ஒரு கேஸ் ஐடி திறந்து அந்த இலக்கத்தையும் அனுப்பி இருந்தான்.

 

அவன் சொன்னபடி.. அப்பிள் மெயின் ஸ்ரோரில் போய் விடயத்தைச் சொல்ல... அதெல்லாம் சிங் ஆகும்.. இப்ப பார் சிங் ஆக்கிக் காட்டிறம் என்று அவர்களின் கணணியில் போட்டு குடைந்தார்கள். இறுதிவரை அது சிங் ஆகவே இல்லை. (இப்படித்தான் சிங் ஆகாத கேர்ள் பிரண்ட் இருந்தாலும் நல்லதுக்கேன்னு நினைச்சுக்கனும்.)  :lol: . அப்புறம் வேறு வழியில்லாமல்.. புத்தம் புதிய.. பெட்டி உடைக்காத ஐபொட் தந்தார்கள். மேலதிகமாக எதுவும் கட்டச் சொல்லி சொல்லவில்லை..!

 

60 பவுனில்.. புது ஐபொட். அதன் புதியதன்  விலை.. சுமார் 220 பவுன்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சார் அதுக்குத்தான் சொல்லுறது சீல் உடையாத பெட்டியாகப் பார்த்து வாங்க வேணும் எண்டு :D

Link to comment
Share on other sites

ஆப்பிள் ஐபோன் 6 இந்தியாவில் விற்கப்படும் விலை  65k

ஒரு ஐபோன் 6 வாங்குவதற்கு பதில் கீழே உள்ள எல்லாவற்றையும் செய்யலாம்

பாங்காக் போய்வர விமானச் செலவு -->21k
தங்குவதற்கு -->10k
மசாஜ் -->3k
ஷாப்பிங் -->14k

மீதம் உங்கள் கையில் 17k இருக்கும். அதில்
Xiaomi mi3,
MOTO G,
Asus Zenfone,
Micromax Ntro,
Sony C,
Nokia 720 இவை எல்லாம் வாங்கி முடித்த பிறகு 4k மீதமிருக்கும் அதில் 2 போதல் ஜாக் டேனியல் விஸ்கி வாங்கலாம் :)

 

விருப்பம் உங்களது !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது, இந்த பழைய நீல போன் எத்தனை முறை கீழே விழுந்தாழும் உடையாமல் அசராமல் நிற்கும். தூக்கி எறிஞ்சு விளையாடக் கூட முடியும்.

இப்ப வரும் போன்கள் கீழே விழுந்தால் அவ்வளவு தான்.

 

நான் ஒரு முறை என் Blackberry யை மூத்தா பெய்யும் போது கொமர்ட்டுக்குள் விழுத்தி விட்டேன். பிறகு வெளியே எடுத்து ஒரு பைக்குள் அரிசியை நிரப்பி அதனுள் போனைப் போட்டு காய வைத்து 24 மணி நேரத்தின் பின் வேலை செஞ்சது. :)

 

மூத்தா போகேக்கை என்ன கோதாரிக்கு கான்போனை வெளியிலை/கையிலை எடுத்தனீங்கள்?  :D
 
எனக்கு உப்பிடியான விசயம் நடந்திருக்குமெண்டால் வீட்டிலை ஒருகிழமைக்கு  "சரவணன் மீனாட்சி" சீரியல் சீரியசாய் நடந்திருக்கும்.  :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முன்பதிவு சாதனை படைத்துள்ள புதிய iPhone 6.0
Mohanay September 15, 2014 Canada
 
நியு யோர்க்- திங்கள்கிழமை அப்பிள் நிறுவனம் 4-மில்லியன்களிற்கும் மேலான புதிய iPhone 6.களை 24-மணித்தியாலங்களிற்குள் விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இவற்றிற்கான முன்-பதிவு விநியோக ஆடர்களும் அதிகரித்து சாதனை படைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களிற்கான விநியோகம் வெள்ளிக்கிழமை தொடக்கம் செப்ரம்பர் மாதம் பூராகவும் செய்யப்படுமெனவும் ஆனால் அதிகமானவர்களிற்கு ஒக்டோபர் மாதம் வரையில் விநியோகம் செய்யப்பட மாட்டாதெனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முன்னறிவிப்பு அற்ற வாடிக்கையாளர்கள் வெள்ளிக்கிழமை தொடக்கம் அப்பிள் சில்லறை விற்பனை நிலையங்களிலிருந்து இந்த போன்களை பெறக்கூடியதாக இருக்கும். AT&T, Sprint, T-Mobile, Verizon Wireless ஆகிய இடங்களில் இருந்தும் அங்கீகரிக்கப்பட்ட அப்பிள் மறுவிற்பனையாளர்களிடம் இருந்தும் பெறக்கூடியதாக இருக்கும்.
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட இப்புதிய போன்கள் பெரிய திரைகள் ,விரைவான செயல் திறன் கொண்டவைகளாகவும் ஒரு தொடர்பற்ற கட்டண சேவை உடையதாகவும் உள்ளது. 199டொலர்கள் விலையில் இருந்து ஆரம்பமாகின்றது.
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.