Jump to content

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் 2014 செய்திகளும் கருத்துகளும்


Recommended Posts

பைனலுக்கு முன்னேறுமா சென்னை: இன்று பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை
அக்டோபர் 01, 2014.

 

ஐதராபாத்: சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடரில் இன்று நடக்கும் அரையிறுதியில், சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி பைனலுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

இந்தியாவில் 6வது சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. இதில் சென்னை, கோல்கட்டா, பெர்த் உள்ளிட்ட 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. லீக் சுற்றின் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடித்த கோல்கட்டா (ஏ1), சென்னை (ஏ2), பஞ்சாப் (பி1), ஹோபர்ட் ஹரிகேன்ஸ் (பி2) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.     

 

ரெய்னா பலம்: ஐதராபாத்தில் இன்று நடக்கவுள்ள அரையிறுதியில், ஐ.பி.எல்., அணிகளான சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றின் முதல் போட்டியில் கோல்கட்டாவிடம் தோல்வி அடைந்த சென்னை அணி, டால்பின்ஸ் (தென் ஆப்ரிக்கா) அணியை வீழ்த்தி எழுச்சி கண்டது. பின், லாகூர் லயன்ஸ் (பாகிஸ்தான்) அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட, 2 புள்ளி பெற்றது. கடைசி லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (ஆஸ்திரேலியா) அணியை வீழ்த்திய சென்னை அணி 10 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை பெற்றது.     

 

பேட்டிங்கில் சுரேஷ் ரெய்னா (119 ரன்கள்), ரவிந்திர ஜடேஜா (82), பிரண்டன் மெக்கலம் (82), கேப்டன் தோனி (70), டுவைன் பிராவோ (66) நம்பிக்கை அளிக்கின்றனர். டுவைன் ஸ்மித், டுபிளசி, மிதுன் மன்ஹாஸ் பேட்டிங்கில் எழுச்சி கண்டால் நல்லது. வேகப்பந்துவீச்சில் ஆஷிஸ் நெஹ்ரா (8 விக்கெட்), மோகித் சர்மா (6) அசத்துகின்றனர். கடைசி கட்டத்தில் டுவைன் பிராவோ கைகொடுப்பது வேகத்தின் பலத்தை அதிகரித்துள்ளது. ‘சுழலில்’ அஷ்வின், ரவிந்திர ஜடேஜா கூட்டணி மிரட்டலாம்.

மேக்ஸ்வெல் நம்பிக்கை: லீக் சுற்றில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் (ஆஸ்திரேலியா), பார்படாஸ் (வெஸ்ட் இண்டீஸ்), நார்த்தர்ன் நைட்ஸ் (நியூசிலாந்து), கேப் கோப்ராஸ் (தென் ஆப்ரிக்கா) அணிகளை வீழ்த்தி 100 சதவீத வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறிய உற்சாகத்தில் பஞ்சாப் அணி உள்ளது.     

 

பேட்டிங்கில், மனன் வோரா (133 ரன்கள்), சேவக் (106), டேவிட் மில்லர் (102), மேக்ஸ்வெல் (89), விரிதிமன் சகா (69), கேப்டன் ஜார்ஜ் பெய்லி (59) பலம் சேர்க்கின்றனர். ‘ஆல்–ரவுண்டராக’ திசாரா பெரேரா அசத்துகிறார். ‘வேகத்தில்’ அக்சர் படேல் (6 விக்கெட்), அனுரீத் சிங் (5), பர்விந்தர் அவானா (5) நம்பிக்கை அளிக்கின்றனர். சுழற்பந்துவீச்சில் கரண்வீர் சிங் (6) துல்லியமாக பந்துவீசுவது பலம்.     

 

முதன்முறை     

சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ அரங்கில், சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுவது இதுவே முதன்முறை. ஆனால், ஐ.பி.எல்., அரங்கில் இவ்விரு அணிகள் 15 முறை மோதின. இதில் சென்னை 8, பஞ்சாப் 6 போட்டிகளில் வெற்றி பெற்றன. ஒரு போட்டி ‘டை’ ஆனது. பின், ‘சூப்பர் ஓவரில்’ சென்னை அணி தோல்வி அடைந்தது.

 

சாதிக்குமா கோல்கட்டா

ஐதராபாத்தில் இன்று நடக்கவுள்ள மற்றொரு அரையிறுதியில், நடப்பு ஐ.பி.எல்., சாம்பியன் கோல்கட்டா, ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் சென்னை, லாகூர் லயன்ஸ் (பாகிஸ்தான்), பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (ஆஸ்திரேலியா), டால்பின்ஸ் (தென் ஆப்ரிக்கா) அணிகளை வீழ்த்தி, தொடர்ந்து 13வது வெற்றியை பதிவு செய்த நம்பிக்கையில் கோல்கட்டா அணி உள்ளது. கேப்டன் காம்பிர், ராபின் உத்தப்பா, காலிஸ், யூசுப் பதான், மணிஷ் பாண்டே, டஸ்காட்டே, ரசல் என பலமான பேட்டிங் வரிசை உள்ளது. ‘சுழலில்’ சுனில் நரைன், குல்தீப் யாதவ், பியுஸ் சாவ்லா, யூசுப் பதான் கைகொடுக்கலாம். உமேஷ் யாதவ், பட் கம்மின்ஸ், ரசல் வேகத்தில் அசத்தலாம்.     

லீக் சுற்றில் கோல்கட்டாவிடம் வீழ்ந்த ஹோபர்ட் அணி, பின் எழுச்சி கண்டு கேப் கோப்ராஸ், நார்த்தர்ன் நைட்ஸ், பார்படாஸ் அணிகளை வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பேட்டிங்கில் பிலிஜார்டு (188 ரன்), சோயப் மாலிக், பென் டங்க், டிம் பெய்ன், ஜோனாதன் வெல்ஸ் நம்பிக்கை அளிக்கின்றனர். வேகத்தில் ஹில்பெனாஸ் (8 விக்கெட்), போலிஞ்சர் (8) பலம் சேர்க்கின்றனர். ‘சுழலில்’ சேவியர் தோகர்டி (6)ஆறுதல் தருகிறார்.

 

 

 

 

http://sports.dinamalar.com/2014/10/1412182902/ChampionsLeagueT20CricketChennaiPunjabKolkataHobert.html

 

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply

பைனலுக்கு முன்னேறியது கோல்கட்டா
அக்டோபர் 02, 2014.

ஐதராபாத்: சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடரின் பைனலுக்கு கோல்கட்டா அணி முன்னேறியது. ஹோபர்ட் அணிக்கு எதிராக நேற்று நடந்த அரையிறுதியில், காலிஸ் அரைசதம் அடித்து கைகொடுக்க, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

 

இந்தியாவில், 6வது சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. ஐதராபாத்தில் நேற்று நடந்த முதல் அரையிறுதியில், நடப்பு ஐ.பி.எல்., சாம்பியன் கோல்கட்டா அணி, ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற ஹோபர்ட் அணி கேப்டன் தோகர்டி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

மாலிக் ஆறுதல்: ஹோபர்ட் அணிக்கு டாம் மைக்கேல் (0) மோசமான துவக்கம் கொடுத்தார். அடுத்து வந்த பிலிஜார்டு (0), யூசுப் பதானிடம் சிக்கினார். மற்றொரு துவக்க வீரர் பென் டங்க் (39) ஆறுதல் தந்தார். அபாரமாக ஆடிய சோயப் மாலிக், குல்தீப் வீசிய 19வது ஓவரில், 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்து அரைசதத்தை பதிவு செய்தார். ஹோபர்ட் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. மாலிக் (66) அவுட்டாகாமல் இருந்தார்.

 

காலிஸ் கலக்கல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு கேப்டன் காம்பிர் (4) ஏமாற்றினார். ராபின் உத்தப்பா (17) நிலைக்கவில்லை. பின் இணைந்த காலிஸ், மணிஷ் பாண்டே ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. மூன்றாவது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்த போது பாண்டே (40) அவுட்டானார். கோல்கட்டாவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டன. போலிஞ்சர் வீசிய 20வது ஓவரில் முதல் பந்தில் சிக்சர் அடித்த காலிஸ், அரைசதம் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். காலிஸ் (54), யூசுப் பதான் (14) அவுட்டாகாமல் இருந்தனர்.

கோல்கட்டா அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் சாம்பியன்ஸ் லீக் பைனலுக்கு கோல்கட்டா அணி முதன்முறையாக முன்னேறியது.

 

 

http://sports.dinamalar.com/2014/10/1412262749/GambhirKolkataChampionsLeagueHobartSemiFinal.html

Link to comment
Share on other sites

கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு 183 ரன்கள் இலக்கு

அக் 02,2014 20:24

ஐதராபாத்: சாம்பியன்ஸ் லீக் போட்டியின் இன்றயை இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் சென்னை அணியும்,பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இதில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது.

 

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1083582

Link to comment
Share on other sites

சனிக்கிழமை நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் சுனில் நரைன் பந்து வீச முடியாது.

இன்று நடந்த அரை இறுதி போட்டியிலும் அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருந்ததால் இறுதி போட்டியில் பந்து வீச தடை செய்யபட்டு உள்ளார்.

 

http://www.espncricinfo.com/champions-league-twenty20-2014/content/current/story/786857.html

Link to comment
Share on other sites

சரணடைந்தது பஞ்சாப்: சாம்பியன்ஸ் லீக் இறுதியில் ’அதிரடி’ சென்னை

 

 

சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், சென்னையிடம் 65 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் படுதோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம், சாம்பின்ஸ் லீக் தொடரில் இரண்டாவது முறையாக சென்னை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் சென்னை கொல்கத்தாவை சந்திக்கவுள்ளது.

சென்னை நிர்ணயித்த 183 ரன்கள் இலக்கை விரட்ட வந்த பஞ்சாப் அணி 2-வது ஓவரிலேயே சேவாக்கை இழந்தது. தொடர்ந்து சாஹா, மேக்ஸ்வெல், வோரா, பெய்லி, பெரேரா என அதிரடி ஆட்டக்காரட்கள் அனைவரும் வரிசையாக ஆட்டமிழக்க, 8-வது ஓவரின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்களை மட்டுமே பஞ்சாப் எடுத்திருந்தது.

மில்லர் பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்து நம்பிக்கை அளித்தாலும், கைவசம் விக்கெட் இல்லாததால் பஞ்சாபின் வெற்றி கேள்விக்குறியாகவே இருந்தது. மில்லரும் 22 ரன்களுக்கு அஸ்வின் பந்தில் ஆட்டமிழக்க சென்னை வெற்றி பெறுவது உறுதியானது.

 

பொறுமையாக ஆடிய பஞ்சாபின் அக்‌ஷர் படேல், அணியை கவுரவமான ஸ்கோரை நோக்கி வழிநடத்தினார். 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தபோது ரெய்னாவின் பந்தில் படேலும் ஆட்டமிழந்தார். மேலும் சிறிது தாக்குபிடித்த பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சென்னையின் நேஹ்ரா, மோஹித் சர்மா, நெகி, ரெய்னா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகனாக பிராவோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் அணி சென்னையை பேட்டிங் செய்ய அழைத்தது. பவர்ப்ளே முடியும் முன்னரே சென்னை அணி 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. 4-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ப்ளேஸ்ஸி மற்றும் பிராவோ ஜோடி மெதுவாக ஆட்டத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

33 பந்துகளில் 46 ரன்கள் குவித்திருந்த ப்ளெஸ்ஸி படேல் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் பிராவோ தனது அதிரடியைத் தொடர்ந்தார். 29 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸருடன் பிராவோ அரைசதத்தைக் கடந்தார். 17-வது ஓவரில், நெகி மற்றும் தோனி அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க அந்த ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை எடுத்திருந்தது.

பிராவோ 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜடேஜா தன் பங்கிற்கு 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாச சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்களைக் குவித்தது.

 

யாரும் கவனிக்காத அவானாவின் ஹாட்ரிக்

பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் அவானா தனது இரண்டாது ஓவரின் இரண்டாவது பந்தில் டேவோன் ஸ்மித்தை வெளியேற்றினார். தொடர்ந்த பந்துவீசிய அவானா, தனது மூன்றாவது ஓவரின் கடைசி பந்தில் ரெய்னாவை ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்தடுத்து பந்துவீச்சாளர்கள் மாற்றப்பட சென்னை தனது அதிரடி ஆட்டத்தை துவங்கியது.தனக்கு மீதமிருந்த ஒரு ஓவரை, ஆட்டத்தின் 17-வது ஓவரில் வீசி முடிக்க அவானா மீண்டும் வந்தார். முதல் பந்தில் நெகி பவுல்டாக, அடுத்த பந்தை சந்தித்த சென்னையின் கேப்டன் தோனி கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தனது முந்தைய ஓவரின் கடைசி பந்தில் ஒரு விக்கெட்டையும், தொடர்ந்த அடுத்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியதால் அவானா ஹாட் ட்ரிக் சாதனை படைத்தார். ஆனால் மைதானத்தில் இருந்த யாரும் இதை கவனித்ததாகத் தெரியவில்லை.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/article6468745.ece

Link to comment
Share on other sites

கோப்பை வெல்லுமா சென்னை அணி: இன்று கோல்கட்டாவுடன் மோதல்
அக்டோபர் 03, 2014.
 

பெங்களூரு: சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில், 6வது சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று நடக்கவுள்ள பைனலில், ஐ.பி.எல்., அணிகளான சென்னை, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன.

 

பைனல் வாய்ப்பு:

கோல்கட்டாவுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் தோல்வி அடைந்த சென்னை அணி, 2வது லீக் போட்டியில் டால்பின்ஸ் (தென் ஆப்ரிக்கா) அணியை வீழ்த்தி எழுச்சி கண்டது. லாகூர் லயன்ஸ் (பாகிஸ்தான்) அணிக்கு எதிரான 3வது லீக் போட்டி மழையால் ரத்தாக தலா 2 புள்ளிகள் வழங்கப்பட்டது. பின், கடைசி லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (ஆஸ்திரேலியா) அணியை வீழ்த்திய சென்னை அணி 10 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பஞ்சாப் அணிக்கு எதிரான அரையிறுதியில், பேட்டிங், பவுலிங்கில் அசத்திய சென்னை அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக (2010, 2014) பைனலுக்கு முன்னேறியது.

பிராவோ நம்பிக்கை:

சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் ஜோடி சிறந்த துவக்கம் கொடுக்க முயற்சிக்க வேண்டும். அரையிறுதியில் ஏமாற்றிய ரெய்னா எழுச்சி கண்டால் நல்லது. பஞ்சாப் அணிக்கு எதிரான அரையிறுதியில் ‘ஆல்–ரவுண்டராக’ அசத்திய டுவைன் பிராவோ, மீண்டும் கைகொடுக்கலாம். ‘மிடில்–ஆர்டரில்’ டுபிளசி, கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா அதிரடி காட்டும் பட்சத்தில், வலுவான இலக்கை பதிவு செய்யலாம். வேகப்பந்துவீச்சில் ஆஷிஸ் நெஹ்ரா (10 விக்கெட்), மோகித் சர்மா (8) நம்பிக்கை அளிக்கின்றனர். ‘சுழலில்’ அஷ்வின், ரவிந்திர ஜடேஜா கூட்டணி அசத்தலாம்.

 

நுாறு சதவீத வெற்றி:

லீக் சுற்றில் சென்னை, லாகூர் லயன்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், டால்பின்ஸ் அணிகளை வீழ்த்திய கோல்கட்டா அணி, அரையிறுதியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 100 சதவீத வெற்றியுடன் முதன்முறையாக சாம்பியன்ஸ் லீக் பைனலுக்கு முன்னேறியது. சமீபத்திய ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கோல்கட்டா அணி, தொடர்ச்சியாக 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

பேட்டிங்கில் கேப்டன் காம்பிர், ராபின் உத்தப்பா, மணிஷ் பாண்டே, காலிஸ் ஆகியோர் நல்ல ‘பார்மில்’ இருப்பது பலம். ‘மிடில்–ஆர்டரில்’ யூசுப் பதான், டஸ்காட்டே, ரசல், சூர்யகுமார் யாதவ் கைகொடுக்கும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம். இம்முறை அதிக விக்கெட் கைப்பற்றியுள்ள சுனில் நரைனுக்கு (12 விக்கெட்) இன்றைய பைனலில் பந்துவீச தடை விதிக்கப்பட்டிருப்பது சுழலின் பலத்தை குறைத்துள்ளது. எனவே குல்தீப் யாதவ், யூசுப் பதான், பியுஸ் சாவ்லா ‘சுழலில்’ அசத்தலாம். வேகப்பந்துவீச்சில் ரசல், உமேஷ் யாதவ் கைகொடுக்கலாம்.

 

இரண்டாவது முறை

சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ அரங்கில், சென்னை–கோல்கட்டா அணிகள் இரண்டாவது முறையாக மோதவுள்ளன. இம்முறை, இவ்விரு அணிகள் மோதிய லீக் போட்டியில், கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை தோற்கடித்தது. இதற்கு பதிலடி கொடுக்க சென்னை அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

* ஐ.பி.எல்., அரங்கில் இவ்விரு அணிகள் 14 முறை மோதின. இதில் சென்னை 9, கோல்கட்டா 5 போட்டிகளில் வெற்றி பெற்றன.

 

 

http://sports.dinamalar.com/2014/10/1412352262/dhonigambhir.html

Link to comment
Share on other sites

 கோல்கட்டாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் பைனலில் ரெய்னா சதம் அடித்து கைகொடுக்க சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கோப்பை வென்று அசத்தியது. 

இந்தியாவில், 6வது சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று நடந்த பைனலில், ஐ.பி.எல்., அணிகளான சென்னை, கோல்கட்டா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி  ‘பவுலிங்’ தேர்வு செய்தார். கோல்கட்டா அணியில் நரைனுக்குப்பதில் கம்மின்ஸ் இடம்பெற்றார். சென்னை அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

காம்பிர் அரை சதம்:

கோல்கட்டா அணிக்கு கேப்டன் காம்பிர், உத்தப்பா அசத்தல் துவக்கம் தந்தனர். உத்தப்பா 39 ரன்களில் அவுட்டானார். பின் வந்த காலிஸ் (1) நிலைக்கவில்லை. பவுண்டரிகளாக விளாசிய காம்பிர் 80 ரன்கள் குவித்தார். இதன் பின் சுழல் வீரர்  நேகி அசத்தலாக பந்துவீசினார். இவரிடம் மனிஷ் பாண்டே (32), டஸ்காட்டே (0), சூர்யகுமார் (0) அடுத்தடுத்து சிக்கினர். முடிவில், கோல்கட்டா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது. யூசுப் பதான் (20), ரசல் (2) அவுட்டாகாமல் இருந்தனர். 

ரெய்னா சதம் :

சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித் (8) ஏமாற்றினார். பிரண்டன் மெக்கலம், ரெய்னா ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. மெக்கலம் 39 ரன்களில் அவுட்டானார். இதன் பின் எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்த ரெய்னா சதம் விளாசினார். முடிவில், சென்னை அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரெய்னா (109), தோனி (23) அவுட்டாகாமல் இருந்தனர். 

http://sports.dinamalar.com/2014/10/1412352262/dhonigambhir.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுனில் நரன் இல்லாதது சென்னைக்கு சாதகமாய் போச்சு , 180 நல்ல ஸ்கோர் , கொல்கத்தாவின் வந்து வீச்சு கொஞ்சமும் எடு பட வில்லை............. எல்லா புகழும் சுனில் நரனுக்கே...................

Link to comment
Share on other sites

ரெய்னா அதிரடி சதம்: சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்

 

பெங்களூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் சுரேஷ் ரெய்னாவின் அதிரடி சதத்தினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.

 

வெற்றிபெறத் தேவையான ரன்களை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எடுத்து சாம்பியன் ஆனது சென்னை சூப்பர் கிங்ஸ். 19வது ஓவரை பேட் கமின்ஸ் வீச முதல் பந்தை ஹெலிகாப்டர் ஷாட்டில் மிட்விக்கெட்டில் ஃபிளாட் சிக்ஸ் அடித்த தோனி, 3வது பந்தை லாங் ஆன் திசையில் உயரமாக, நீளமாக சிக்ஸ் அடித்து வெற்றிக்கான ரன்களை எடுக்க 185/2 என்று வெற்றி பெற்றது சென்னை.

சுரேஷ் ரெய்னா 59 பந்துகளில் அதிரடி சதம் எடுத்து கடைசியில் 62 பந்துகளில் 6 பவுண்டரி 8 சிக்சருடன் 109 நாட் அவுட் என்று சிறப்புற்றார். மேலும் இந்தத் தொடரில் அவர் அதிக ரன்களை அடித்து கோல்டன் பேட் விருது சிறப்பையும் பெற்றார்.

துரத்தலைத் தொடங்கிய போது பேட் கமின்ஸை 2 பவுண்டரிகள் அடித்த டிவைன் ஸ்மித் அதே ஓவரில் அபாரமான ஸ்பின் வகை யார்க்கருக்கு பவுல்டு ஆனார்.

அப்போது இறங்கினார் ரெய்னா, வந்த முதல் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு அதிர்ஷ்ட பவுண்டரி கிடைத்தது. ஆனால் அதன் பிறகு மைதானம் நெடுக சிதற அடித்தார்

 

ரெய்னா.

முதலில் ஆந்த்ரே ரசல் பந்தை ஒதுங்கிக் கொண்டு கவர் திசையில் அற்புதமான சிக்ஸரை அடித்து தன் சிக்சர் கணக்கைத் தொடங்கிய ரெய்னா அதன் பிறகு பியூஷ் சாவ்லாவை 4 சிக்சர்களும், இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட குல்தீப் யாதவ் என்ற ‘சைனமன்’ பவுலரை 3 சிக்சர்களும் விளாசினார். 27 பந்துகளில் அரைசதம் கடந்தார் ரெய்னா.

ஒரு முறை குல்தீப் பந்தில் அருமையான ஸ்டம்பிங் வாய்ப்பை உத்தப்பா தவறவிட்டார். கடைசியில் சதம் எடுப்பதற்கு முன்னால் யூசுப் பத்தானிடம் ஒரு கேட்ச் கொடுத்தார். கடினமான வாய்ப்பு யூசுப் பாய்ந்தும் பயனில்லை.

ரெய்னா ஒவ்வொரு முறை மேலேறி வரும் போதும் பந்து சிக்சருக்குப் பறந்தது ஒரு சிக்சர் லாங் ஆனில் 96மீ சென்றது. மேலேறி வந்து மட்டையைக் கொண்டு வந்து தூக்கி அடித்து ஷாட்டை பினிஷ் செய்யும்போதும் அவர் இடது கை சச்சின் டெண்டுல்கர் போலவே தெரிந்தார்.

 

மெக்கல்லமும் இவரும் இணைந்து 12.2 ஓவர்களில் 118 ரன்களைச் சேர்த்தனர். அதில் ரெய்னாவின் ஆதிக்கப் பங்களிப்பு 78, மெக்கல்லம் 39. மெக்கல்லம் 30 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 39 எடுத்து அவுட் ஆனார். 127/2 என்ற நிலையில் தோனி களமிறங்கினார். இருவரும் வெற்றிக்கு இட்டுச் சென்றனர். கேப்டன் தோனி 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 14 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை. அவர் அடித்த 1 பவுண்டரி 2 சிக்சர்களுமே ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கமின்ஸ் பந்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பவன் நேகி 5விக். கம்பீர் அபாரம்: கொல்கத்தா 180 ரன்கள் குவிப்பு

.முன்னதாக, டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய அழைத்தார். ஸ்கோர் 180 ரன்கள் என்பது மட்டுப்படுத்தப்பட்ட ஸ்கோர் என்றே கூறவேண்டும். காரணம் சென்னை சூப்பர் கிங்ஸின் டெல்லி இடது கை சுழற்பந்து வீச்சாளர் பவன் நேகி 19வது ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த ஓவரில் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுக்க கொல்கத்தா மட்டுப்படுத்தப்பட்டது.

பவன் நேகி 4 ஓவர்கள் வீசி 22 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 19வது ஓவர் முடிவில் கொல்கத்தா ஸ்கோர் 161/6 என்று இருந்தது.

ஆனால் கடைசி ஓவரை நெஹ்ரா வீசினார். அதிரடி வீரர் யூசுப் பத்தான் முதல் 2 அபாரமான யார்க்கர் லெந்த் ஓவர் பிட்ச் பந்துகளை ஸ்கொயர் லெக் மற்றும் ஃபைன் லெக்கில் பவுண்டரி அடித்தார். பிறகு ஓவர் த விக்கெட் வீசிய நெஹ்ரா லெந்த்தை மாற்றாததால் அடுத்த பந்து மிட்விக்கெட்டில் சிக்சருக்குப் பறந்தது. கடைசி ஓவரில் நெஹ்ரா 19 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

 

முன்னதாக 18வது ஓவரில் மணீஷ் பாண்டேயிடம் சிக்கினார் ஆஷிஷ் நெஹ்ரா, முதல் பந்தே உயர்ந்து வந்த புல்டாசை பாண்டே பவுண்டரிக்கு விரட்டினார், அது நோபாலாகவும் ஆனது. அடுத்த பந்து லெந்த்தில் சற்றே வாகாக எழும்பி வர லாங் ஆனில் பெரிய சிக்சரை அடித்தார் பாண்டே. அடுத்த பந்து மோசமான புல்டாஸ், இம்முறை மிட்விக்கெட்டில் பந்து சிக்சருக்குப் பறந்தது. 18வது ஓவரிலும் 20 ரன்களைக் கொடுத்த நெஹ்ரா படுமோசமாக வீசி 4 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

முன்னதாக தொடக்கத்தில் (இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்ட) கம்பீர், ராபின் உத்தப்பா மிக அருமையாக விளையாடி 10.5 ஓவர்களில் தொடக்க விக்கெட்டுக்காக 91 ரன்களைச் சேர்த்தனர். உத்தப்பா, நெஹ்ராவின் பந்தை நேராக ஒரு கவாஸ்கர் பாணி டிரைவ் பவுண்டரியுடன் தொடங்கினார்.

பிறகு 4 பவுண்டரிகள் ஒரு சிக்சர் எடுத்த நிலையில் 32 பந்துகளில் 39 ரன்களை எடுத்திருந்த போது நேகி வீசிய பந்தை மேலேறி வந்து சிக்ஸ் அடிக்க நினைத்து ஸ்டம்ப்டு ஆனார். கம்பீர் முதலில் ஜடேஜாவை லாங் ஆனில் சிக்ஸ் அடித்தார் அப்போது பவுண்டரியில் பிராவோ எம்பிப் பந்தை பிடிக்க முயன்று சிக்சருக்குள் தள்ளி விட்டார்.

இரண்டாவது முறை பவன் நேகியை அதே பாணியில் அடிக்க பவுண்டரியில் டுபிளேசிஸ் கேட்சைப் பிடித்து விட்டார். ஆனால் பேலன்ஸ் தவறி ஒரு காலால் பவுண்டரியை மிதித்தார் அதுவும் சிக்ஸ் ஆனது. 52 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சர்கள் அடித்து 80 ரன்களை எடுத்த கம்பீர் ஜடேஜாவிடம் ஆட்டமிழந்தார்.

இடையே காலிஸ் விக்கெட்டை 1 ரன்னில் வீழ்த்தினார் பவன் நேகி. மணீஷ் பாண்டே 19 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யூசுப் பத்தான் 9 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 20 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

பவன் நேகியின் 5 விக்கெட்டுகள் இல்லையெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் 200 ரன்களை துரத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். தற்போது இலக்கு 181 ரன்கள்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/article6471599.ece

Link to comment
Share on other sites

சென்னை கிங்ஸ் சாம்பியன்: ரெய்னா அதிரடி சதம்
அக்டோபர் 03, 2014.

பெங்களூரு: சாம்பியன்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது சென்னை கிங்ஸ் அணி. நேற்று நடந்த பைனலில், ரெய்னாவின் அதிரடி சதம் கைகொடுக்க, 8 விக்கெட் வித்தியாசத்தில் ‘சூப்பர்’ வெற்றி பெற்றது.

ஆறாவது சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடர் இந்தியாவில் நடந்தது. இதன் பைனலில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

chennai-team-cup-3000_zpsb5b9c7eb.jpg

கோல்கட்டா அணியில் தடை விதிக்கப்பட்ட சுனில் நரைனுக்குப் பதில், கம்மின்ஸ் இடம்பெற்றார்.

நல்ல துவக்கம்:

கோல்கட்டா அணிக்கு காம்பிர், உத்தப்பா இணைந்து அசத்தல் துவக்கம் தந்தனர். நெஹ்ரா, மோகித் சர்மா பந்துகளில் பவுண்டரி அடித்த உத்தப்பா, அஷ்வின் பந்தை சிக்சருக்கு விரட்டினார். மறுமுனையில் ஜடேஜா பந்தில், காம்பிர் சிக்சர் விளாசினார். சென்னை அணியின் பீல்டிங்கும் சற்று சொதப்ப, 10 ஓவர்களில் கோல்கட்டா அணி விக்கெட் இழப்பின்றி, 89 ரன்கள் எடுத்தது.

 

காம்பிர் அரைசதம்:

இந்நிலையில் நேகி சுழலில் உத்தப்பா (39) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய இவர், ‘அபாய’ காலிசை (1) வெளியேற்றினார். மனம் தளராத கேப்டன் காம்பிர், நேகி பந்தில் சிக்சர் அடித்தார். அரைசதம் கடந்த இவர், 52 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து, ஜடேஜாவிடம் சிக்கினார்.

 

சபாஷ் நேகி:

போட்டியின் 19வது ஓவரில் அசத்திய நேகி, மணிஷ் பாண்டே (32), டஸ்காட்டே (0), சூர்ய குமார் (0) என, மூவரை திருப்பி அனுப்பினார். நெஹ்ராவின் கடைசி ஓவரில் யூசுப் பதான் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, கோல்கட்டா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது.

சென்னை சார்பில் சுழற்பந்து வீச்சாளர் பவான் நேகி, 5 விக்கெட் கைப்பற்றினார்.

 

ஸ்மித் ‘அவுட்’:

கடின இலக்கைத் துரத்திய சென்னை அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரில் இரு பவுண்டரி அடித்த ஸ்மித் (8), 5வது பந்தில் போல்டானார்.

ரெய்னா சதம்:

பின் மெக்கலத்துடன் இணைந்த ரெய்னா, வந்த வேகத்தில் பவுண்டரி அடித்து, ரன் கணக்கைத் துவங்கினார்.

ரசல் பந்தில் சிக்சர் அடித்த இவர், பியுஸ் சாவ்லா ஓவரில் 2 சிக்சர் விளாசினார். தொடர்ந்து உமேஷ் யாதவ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ரெய்னா, 27 வது பந்தில் அரைசதம் கடந்தார்.

இவருக்கு ‘கம்பெனி’ கொடுத்த மெக்கலம், தன் பங்கிற்கு யூசுப் பதான் பந்தில் சிக்சர் அடிக்க, 11 ஓவரில் சென்னை அணியின் ஸ்கோர் 100 ஐ எட்டியது.

இரண்டாவது விக்கெட்டுக்கு 74 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்த நிலையில், யூசுப் பதான் சுழலில் மெக்கலம் (39) வீழ்ந்தார். குல்தீப் ஓவரில் 2 சிக்சர் அடித்த ரெய்னா, 78, 88வது ரன்களில் ‘கண்டம்’ தப்பினார். வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரெய்னா, 59வது பந்தில் சதம் அடித்தார்.

கடைசியில் தோனி இரண்டு சிக்சர் அடிக்க, சென்னை அணி 18.3 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘சூப்பர்’ வெற்றியுடன், கோப்பை தட்டிச் சென்றது. ரெய்னா (109), தோனி (23) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்டநாயகன் விருது நேகிக்கு கிடைத்தது. இத்தொடரில் அதிக சிக்சர் (16) அடித்த வீரர் மற்றும் தொடர் நாயகன் விருதை ரெய்னா தட்டிச் சென்றார்.

 

ரூ. 15.37 கோடி பரிசு

வெற்றி பெற்ற சென்னை அணிக்கு கோப்பையுடன் ரூ. 15.37 கோடி பரிசு வழங்கப்பட்டது. தோல்வியடைந்த கோல்கட்டா அணிக்கு ரூ. 8 கோடி கிடைத்தது.

‘முதல்வன்’

கடந்த 2010ல் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் முதல் சதம் (101) அடித்த ரெய்னா, 2013ல் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியில் சதம் (100) விளாசினார்.

தொடர்ந்து, நேற்று சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் 109 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, சர்வதேச ‘டுவென்டி–20’, ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன்ஸ் லீக் என, மூன்று தொடரிலும் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் ரெய்னா.

* தவிர, ஆறாவது சாம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை பெற்ற ரெய்னாவுக்கு (5 போட்டி, 234 ரன்கள்) ‘கோல்டன் பேட்’ விருது கிடைத்தது.

 

* இதுவரை நடந்த ஐ.பி.எல்., (115 போட்டி, 3,325 ரன்), சாம்பியன்ஸ் லீக் (24ல் 842 ரன்) தொடர்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் முதலிடமும் இவருக்குத் தான்.

நரைன் ‘டாப்’

இத்தொடரில் அதிக விக்கெட் (5 போட்டி, 12 விக்.,) சாய்த்த பவுலர் என்ற பெருமை பெற்றார் கோல்கட்டா வீரர் சுனில் நரைன். இவருக்கு ‘கோல்டன்’ பந்து விருது கிடைத்தது. அடுத்த இரு இடத்தில் சென்னையின் நெஹ்ரா (10), ஹோபர்ட்டின் போலிஞ்சர் (9), பஞ்சாப்பின் அவானா (9) உள்ளனர்.

 

இரண்டாவது முறை

சாம்பியன்ஸ் லீக் தொடரில் இதுவரை மும்பை அணி இரு முறை (2011, 2013), நியூ சவுத்வேல்ஸ் (2009), சென்னை (2010), சிட்னி (2012) அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றன. நேற்று வென்றதை அடுத்து, சென்னை அணி இரண்டாவது முறையாக கோப்பை வென்று அசத்தியது.

பழி தீர்த்தது

கடந்த 2012 ஐ.பி.எல்., பைனல் சென்னையில் நடந்தது. இதில் சென்னை அணி நிர்ணயித்த 191 ரன்கள் இலக்கை, அனாசயமாக எட்டி, முதன் முறையாக சாம்பியன் ஆனது கோல்கட்டா.

நேற்று நடந்த சாம்பியன்ஸ் லீக் பைனலில், கோல்கட்டா நிர்ணயித்த 181 ரன்கள் இலக்கை எட்டி, கோப்பை வென்று பழிதீர்த்துக் கொண்டது சென்னை.

முதலும், முடிவும்

ஆறாவது சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் போட்டியில் கோல்கட்டா, சென்னை அணிகள் மோதின. இதில் கோல்கட்டா வென்றது.

இத்தொடரின் கடைசி போட்டியில் (பைனல்), இந்த இரு அணிகள் மீண்டும் மோதின. இதில் சென்னை அணி வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.

வெற்றிக்கு முற்றுப்புள்ளி

கோல்கட்டா அணி ஐ.பி.எல்., தொடரில் 9, இந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில் 5 என, தொடர்ச்சியாக 14 வெற்றிகளை பெற்று வந்தது. நேற்று சென்னையிடம் வீழ்ந்ததை அடுத்து, கோல்கட்டா அணியின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது.

dhoni-cup-500_zps79127f82.jpg

 

 

http://sports.dinamalar.com/2014/10/1412352262/dhonigambhir.html

 

Link to comment
Share on other sites

ரெய்னா அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது சென்னை

சாம்பியன்ஸ் லீக் இருபது-20 இறுதிப் போட்டியில் ரெய்னாவின் சதத்தின் உதவியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தாவை தோற்கடித்து சாம்பியன்ஸ் கிண்ணத்தைச் தட்டிச் சென்றது.

இறுதி ஆட்டம்

6ஆவது சாம்பியன்ஸ் இருபது-20  கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி ஆட்டம் பெங்களூர் சின்னசாமி அரங்கில் நேற்றிரவு நடந்தது. இதில் சாம்பியன் மகுடத்திற்கு சென்னை சூப்பர் கிங்சும், ஐ.பி.எல். சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும் பலப்பரீட்சையில் இறங்கின. பந்தை எறிவதாக சர்ச்சையில் சிக்கிய கொல்கத்தாவின் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேனுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு பதிலாக பேட் கம்மின்ஸ் இடம் பெற்றார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணித் தலைவர் டோனி முதலில் கொல்கத்தாவை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். இதன்படி ரொபின் உத்தப்பாவும்,  கவுதம் கம்பீரும் கொல்கத்தாவின் இன்னிங்சை தொடங்கினர். நிலைத்து நின்று ஆடிய இவர்கள் ஓட்ட வீதத்தை சீரான வேகத்தில் உயர்த்தினர். ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் 54  ஓட்டங்களை சேகரித்தனர். கம்பீர் 32 ஓட்டங்களுன் ஆடிக்கொண்டிருந்த போது, எளிதான ரன்-அவுட் முறையில் இருந்து தப்பினார்.

181 ரன் இலக்கு

கொல்கத்தாவின் அதிரடி ஓட்டவேகத்தை  சென்னையின் சுழற்பந்து வீச்சாளர்கள் வெகுவாக கட்டுப்படுத்தினர். குறிப்பாக பவான் நெகி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சுழலில் ஓட்டங்கள் எடுக்க முடியாமல் தடுமாறினார்கள்.

தொடக்க ஜோடி இணைப்பாட்டமாக 91 ஓட்டங்களை (10.5 ஓவர்) எட்டிய போது பிரிந்தது. உத்தப்பா 39 ஓட்டங்களுடன்(32 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து இறங்கிய கலிஸ் (1 ஓட்டம்) சிக்சர் அடிக்க முயற்சித்து ஏமாற்றமளித்தார். 11 முதல் 15 ஓவர்களில் அந்த அணி இரண்டு முறை மட்டுமே பந்தை எல்லைக்கோட்டிற்கு விரட்டியிருந்தது. மறுமுனையில் அபாரமாக ஆடிய கவுதம் கம்பீர் 80 ஓட்டங்களுடன் (52 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.

சுழலில் தடுமாறிய கொல்கத்தா துடுப்பாட்ட வீரர்கள் வேகப்பந்து வீச்சுக்கு அதிரடியாக துடுப்பெடுத்தாடினர்.  ஆட்டத்தின் 18-வது ஓவரை வீசிய நெஹரா அந்த ஓவரில் 2 சிச்சர் உள்பட 20 ஓட்டங்களை வாரி இறைத்தார். இதன் பிறகு 19-வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் பவான் நெகி 3 விக்கெட்டுகளை கபளீகரம் செய்த போதிலும், கடைசி ஓவரை வீசிய நெஹரா 19 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து, கொல்கத்தாவுக்கு மீண்டும் ‘கருணை’ காட்டினார். இதனால் கொல்கத்தாவின் ஓட்ட வீதம 9 ஓட்டங்களை தொட்டது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்களை குவித்தது. சென்னை தரப்பில் பவான் நெகி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சென்னை அணி சாம்பியன்

அடுத்து 181 ஓட்டங்கள் இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் வெய்ன் சுமித் (8 ஓட்டங்கள், 2 பவுண்டரி) முதல் ஓவரிலேயே பிடியெடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் பிரன்டன் மெக்கல்லமும், சுரேஷ் ரெய்னாவும் கைகோர்த்து மிரட்டினர். ரெய்னாவின் துடுப்பாட்டம் மின்னல் வேகத்தில் சுழன்றது. சிக்சரும், பவுண்டரியுமாக ஓடவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் நனைய வைத்தார்.

ஓட்ட எண்ணிக்கை 127 ஓட்டங்களாக உயர்ந்த போது மெக்கல்லம் 39 ஓட்டங்களுடன் (30 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து  டோனி களம் புகுந்தார். மறுபக்கம் அpதிரடியாக ஓட்டங்களை விளாசிய ரெய்னா, இந்திய அணிக்கு புதிதாக தேர்வாகியிருக்கும் குல்தீப் யாதவின் ஓவர்களில் 3 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். 88 ஓட்டங்களுடன் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த ரெய்னா, சாம்பியன்ஸ் லீக்கில் தனது முதலாவது சதத்தையும் எட்டினார்.

இறுதியில் டோனி, யூசுப்பதானின் ஓவரில் இரண்டு சிக்சர் அடித்து ஆட்டத்தை தித்திப்புடன் முடித்து வைத்தார். சென்னை அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 185 ஓட்டங்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரெய்னா 109 ஓட்டங்களுடனும் (62 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்), டோனி 23 ஓட்டங்களுடனும் (14 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் நின்றனர்.

ரூ.15 கோடி பரிசு

சாம்பியன்ஸ் லீக்கில் கிண்ணத்தை சென்னை அணி வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2010-ம் ஆண்டில் கிண்ணத்தை வென்றிருந்தது. வாகை சூடிய சென்னை அணிக்கு ரூ.15 கோடியும், 2-வது இடத்தை பிடித்த கொல்கத்தாவுக்கு ரூ. 8 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இந்த தொடரில் 16 சிக்சருடன் மொத்தம் 234 ஓட்டங்கள் குவித்த ரெய்னா தொடர்நாயகனாகவும், பவான் நெகி ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

 

 

http://www.virakesari.lk/articles/2014/10/05/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.