Jump to content

தமிழ் மாணவர்களுக்காக தனியார் பல்கழைகழகம்


Dash

Recommended Posts

தமிழனுக்கு முக்கியமானது கல்வி, ஆனால் சுதந்திரம் காலம் தொட்டு தமிழனின் கல்வி வளம் அழிக்கப்பட்டது, ஒரு காலத்தில் 50% மாணவர்கள் தமிழராகவே இருந்தனர் ஆனால் இப்பொது இது நன்றாகவே குறைந்து விட்டது இதற்கு நாம் என்ன செய்யலாம், நிச்சயமாக  தமிழரின் கல்விக்கு சிங்களவன் துணை நிற்கப் போவதில்லை, தமிழ் மாணவர் எவ்வளவு படித்தாலும் அவர்கள் கல்வியில் தொழிலில் முன்னேறாமல் இருக்க சிங்கள தேசம் தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்ளும், அதானால் சிறீலங்காவில் இருக்கும் அரச கல்வி முறையில் இருந்து கொண்டு தமிழன் முன்னேற முடியாது, அதானால் நாம் இப்படி செய்தால் என்ன?

புலம் பெயர் தமிழர் எல்லாம் சேர்ந்து தமிழ் மாணவர்களுக்காக தனியார் பல்கழைகழகம் ஒன்றை தொடங்கினால் என்ன? புலம் பெய்ர்ந்தவர்களிடம் பண வசதி இருக்கின்றது, அதே போல் புலம்பெய்ர் நாடுகளில் இருக்கும் தொழில்னுட்ப அறிவும் இருக்கின்றது, எனவே இவற்றை பயன்படுத்தி ஒரு நிதியம் அமைத்து, சகல துறைகளிலும் கல்வி கற்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தால் என்ன ? சிங்கள அரசிடம் எமது கல்விக்காக கை ஏந்தாமல் எமது மாணவர்களை நாமே கற்பிக்கலாமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக செய்யவேண்டியது

 

எனது பங்களிப்பை  நான் உறுதிப்படுத்துகின்றேன்...

 

Link to comment
Share on other sites

நிச்சயமாக செய்யவேண்டியது

 

எனது பங்களிப்பை  நான் உறுதிப்படுத்துகின்றேன்...

 

விசுகு இதை நானும் நீங்களும் தனியாக செய்ய முடியாது, திட்டமிடலில் இருந்து அதை செயற்படுத்துவது வரை அது ஒரு பாரிய நடவடிக்கை, இதற்கு எல்லா தமிழர்களினதும் பங்களிப்பு முக்கியம், என்னுடைய விருப்பம் எல்லம் இந்த சிந்தனையை முதலில் எமது மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும் இதை நாம் செய்தோம் ஆனால் இது படிபடியாக வளர்ந்து பெரிய செயற்திட்டமாக உருவாகும், மற்றைய யாழ் கள உறுப்பினர்களும் தம்து எண்ணங்களையும் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

நாடு கடந்த தமிழீழ அரசின் கல்வித்துறை அமைச்சரின் செயற்பாடுகளில் ஒன்றாக அமைய வேண்டிய ஒன்று இந்த முயற்சி. தொழில்நுட்ப கல்வி தொழில்வாய்ப்புக்கும் மக்களுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை உருவாக்கி கொள்ளவும் தேவையானது. புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கை அரசின் ஆதரவின்றி உயர்கல்வி நிறுவனம் ஒன்றை இலங்கையில் இன்று நடத்த முடியாது. ஆனால் மொரிசியஸ் நாட்டில் உள்ள பல்கலைகழகத்தில் அல்லது தென் ஆபிரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் இலங்கை தமிழ் மாணவர்கள் கல்வி கற்க வசதி செய்து கொடுக்கலாம். தமிழ் நாட்டிலும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றிலும் இந்த மாணவர்கள் கல்வி கற்க ஏற்பாடுகளை செய்யலாம்.

Link to comment
Share on other sites

முதலாவது பிரச்சனை UGC  எனப்படும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி கொடுக்குமா என்பது.
 
அடுத்தது..
 
முன் யாழில் ஆரம்பித்த தனியார் மருத்துவக் கல்லூரியை யாழ் பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களே பலத்த எதிர்ப்பைக்காட்டி அதை மூட வைத்தார்கள். அங்கு எதிர்ப்புக்காட்டிய மாணவ‌ரில் மிகப் பெரும்பான்மை யாழில் படிப்பு முடித்ததும் ஊரை விட்டே ஓடிவிட்டார்கள். இத்தனைக்கும் தனியார் கல்லூரியின் பரீட்சைகள் யாழ் மருத்துவ பீடம் வைக்கும் அதே வினாத்தாள்களாக இருக்கும் வகையிலேயே இருந்ததது. அதாவது ஒரே வினாத்தாள்களை எழுதியே பட்டதாரிகளைத் தீர்மானித்தார்கள். அப்படி இருந்தும் இவர்கள் எதிர்த்தார்கள்.
அதற்கு இவர்கள் சொன்ன காரணம் க.பொ.த.உ.த. இல் புள்ளிகள் எடுக்காதவர்கள் மருத்துவர்களாக திறமையற்றவர்கள் என்பதாகும். ஆனால் கிழக்கும் மாகாணத்தில் இருந்து மிகவும் குறைந்த புள்ளிகளில் உள்ளிடும் மாணவர்கள் பின் இவர்களைவிட நல்ல புள்ளிகள் எடுத்து வெளிவருவது பல தடவை நிகழ்ந்துள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திட்டம் நல்லது அவசியமானது,

ஆனால் இது தற்போதைய அரசியல் சுழ்நிலையில் சாத்தியப்படாது காரணம் இதற்கு சிறிலங்கா அரசின் அனுமதியை பெறுவது கல்லில் நாா் உாிப்பது போலவே இருக்கும். சாதாரண தொழிநுட்பக்க கல்வி நிறுவனங்கள் நான்கை வன்னிப்பிரதேசத்தில் கனடிய தமிழ் அமைப்பு ஒன்று நடாத்தி வருகின்றது. அந்த சிறு நிறுவனங்களே சில பிரச்சினைகளை சந்திக்கின்றது. எனவே புலம்பெயா் தமிழா்களால் முன்னேடுக்கப்படும் எந்த திட்டங்களையும் சிறிலங்கா அரசு ஆதாிக்கும் என்று சொல்ல முடியாது. அதே வேளை உாிமை கேட்டு நிற்க்கும் நாம் சிறிலங்காவில் உருவாக்கும் திட்டங்கள் புலம்பெயா் நாடுகளில் வாழும் சிலரால் அரச சாா்பு கொள்கையாக பாா்க்கப்படும் நிலையே இன்றுவரை தொடா்கின்றது. 

ஒன்றில் நாம் எமது மக்களுக்கு உாிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும், அல்லது அந்த மக்களைப்பற்றி அக்கறைப்பட கூடாது என்ற மன நிலையில் பலா் இருப்பது கண்கூடு.... உாிமை மீட்பையும்.... அவா்களது வளா்ச்சியையும்  சம காலத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்ற யதாா்த்தம் இங்கு புறம்தள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டம் ஆரம்பிப்பதால் ஏற்ப்படும் நன்மைகள் பல இருப்பினும் யதாா்த்தமான பல சிக்கல்களை சந்திக்க நோிடும் என்பதைப்பற்றியும் ஆரய வேண்டும்.
 

Jude சொன்னது போல மாற்று வழிகளை தேடலாம். ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் பணமே கல்வியைத் தீா்மானிக்கும் சக்தியாக இருக்கும் போது இது எந்தளவுக்கு சாத்தியம் என்று தொியவில்லை.  மற்றும் நாடுகடந்த அரசையே தடை செய்துள்ள சிறிலங்காவில் அவா்களால் என்ற செய்ய முடியும்? 

இதை சாத்தியமாக தற்போது வியாபார ரீதியி்ல் சிறிலங்கா அரசோடு இணைந்து பயணிப்போாின் அணுசரனை உதவலாம்.

 

ஆனால் நிச்சயமாக இது ஒரு ஆரோக்கியமான விடயம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு இதை நானும் நீங்களும் தனியாக செய்ய முடியாது, திட்டமிடலில் இருந்து அதை செயற்படுத்துவது வரை அது ஒரு பாரிய நடவடிக்கை, இதற்கு எல்லா தமிழர்களினதும் பங்களிப்பு முக்கியம், என்னுடைய விருப்பம் எல்லம் இந்த சிந்தனையை முதலில் எமது மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும் இதை நாம் செய்தோம் ஆனால் இது படிபடியாக வளர்ந்து பெரிய செயற்திட்டமாக உருவாகும், மற்றைய யாழ் கள உறுப்பினர்களும் தம்து எண்ணங்களையும் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

 

 

எனக்கு

2009க்கு முன்னமே  இப்படியொரு நோக்கம் இருந்தது

 

தேசியத்தின் பால் ஈடுபாடு  கொண்ட சிலரை இணைத்து (1000 பேர்)

இலாப நோக்கமற்றமுறையில்

ஒரு குறிப்பிட்ட தொகையை (ஆளுக்கு 1000 ஈரோக்கள்) வங்கியிலிட்டு..

அதை வைத்துக்கொண்டு

 

அறிவுயீவிகளான  எமது மூத்த

எமது மற்றும் அடுத்த தலைமுறையை  உள்வாங்கி  நிர்வாகத்தை ஒப்படைத்து

ஏதாவது ஒன்றைச்செய்யணும் என....

 

அதற்கான முயற்சிகளை சிலர் மேற்கொண்டபோது

அவர்களுடனும் என்னையும் பதிவு செய்திருந்தேன்..

 

ஆனால் முள்ளிவாய்க்காலுடன் எல்லாம் ஆறப்போடப்பட்டுவிட்டது.......

 

ஆனாலும் எனது மனதில் என்றுமே அந்த எண்ணம் உண்டு

 

எவர் செய்தாலும்  நானும் அதில் பங்காளியாவேன்

எனது பிள்ளையும் பணம்  மற்றும் நிர்வாகத்தில் பங்கெடுக்கும்..

 

அதையே நான் இங்கு  முதன்முதலில் பதிந்தேன்

எல்லாவற்றிற்கும் தேவை  

பணம்..

ஆட்கள்......

 

அதற்கு நாம் ஒவ்வொருவரும் தயாராகாமல்..

வெறும்  எழுத்துக்களிலும் வர்ணனைகளைச்செய்வதிலும்

எந்த வித முன்னேற்றத்தையும் காணமுடியாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியாதது என்று எதுவுமில்லை. முயற்சி செய்யலாம்.

 

பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கு முதலில் ஒரு இடம் தேவை.
எங்கே எந்த மொழியில் என்பது முக்கியம். அதற்கு அந்த நாட்டின் அனுமதி தேவை.

இலங்கை அரசாங்கத்தின் அனுமதி தேவையில்லை. கல்வி நிறுவனம் அமைக்கப்படும்

நாட்டின் அரச அனுமதி தேவை.
அதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்படல் வேண்டும்.

பல பேராசிரியர்கள் தேவை. அவர்களின் பெயர்களும் சம்மதமும் தேவை.
உபகரணங்களுக்கும் ஊதியத்திற்குமான நிதி முன் வைக்கப்பட வேண்டும்.

முக்கியமானது மாணவர்கள் எப்படி எங்கேயிருந்து வருகின்றனர்.
தாயகத்திலிருந்து வருவதென்றால் அவர்களுக்கு விசா கிடைப்பது எவ்வாறு?

இலங்கை அரசு இதற்கு ஒத்துழைக்குமா? விஷயம் வெளியே வரும்போது அரசு முட்டுக்கட்டை போடலாம்.
இப்படிப் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிவரும்.

 உதாரணத்திற்கு  பிரித்தானியாவில் ஏற்கனவே    இயங்கும் ஒரு கல்வி நிறுவனத்தை விலைக்கு வாங்க முடியாதா? அப்படி முடிந்தால் அங்கு சடுதியான மாற்றங்களை ஏற்படுத்தாமல் சிறிது சிறிதாக  தாயகத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை உள்வாங்க வேண்டும். அதற்குப் பிரித்தானிய அதிகாரிகளின் உறுதுணை தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிாித்தானியாவிற்க்கு தாயக மாணவா்களை அழைப்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. விசா அனுமதி மற்றும் வெளிநாட்டு மாணவா்களுக்கான கட்டணங்கள் உள்நாட்டவா்களிலும் பாா்க்க அதிகம் என்று நினைக்கின்றேன். (கனடாவில் அப்படித்தான்) செலவீனங்கள் அதிகமாக இருக்கும். சில காலத்திற்க்கு பின் எம்மால் தாயகத்திலிருந்து மாணவா்களை அழைக்க முடியாத சந்தா்ப்பம் உருவாகலாம். மாணவா் விசாவில் வருவோா் அங்கேயே குடியிருக்கவே விரும்புவாா்கள் அதனால் பல்கலைக்கழகம் பிரச்சினைகளை எதிா் நோக்கலாம்.

ஆனால் ஆசிய ஆபிாிக்க நாடுகளில் எமக்கான நிறுவனத்தை உருவாக்கினால் எமக்கு சாதகமான பல விடயங்கள் அமையலாம். அதற்க்கு துறை சாா்ந்த அறிவாளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். 

 

தமிழ் சமூகத்திற்கு பணம் சோ்ப்பது என்பது பொிய விடயமாக இருக்காது ஆனால் அதன் பின்னால் ஏற்படும் நிா்வாக பிரச்சினைகளும் ஒற்றுமையுமே எப்போதும் பிரச்சினையாக உருவெடுக்கும்.

 

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அதல் பங்காளியாக (பொருளாதார ரீதியில்) இருக்க நான் தயாா்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழகக் கல்வியை.. சமூக அந்தஸ்து.. குடும்பப் பெருமை.. தனித்தலைக்கணம் என்று பார்க்கும் குறுகிய மனப்பான்மையில் இருந்து எமது சமூகம் முதலில் விடுபட்டு.. பல்கலைக்கழகக் கல்வியின் ஆழமும் அவசியமும் 21ம் நூற்றாண்டில் அத்தியாவசியம் என்பதை உணரத் தலைப்படனும் முதலில்.

 

இன்றைய பல்கலைக்கழக பாடங்கள்.. பட்டங்கள்.. வேர்ச்சுவள் யுனிவேர்சிட்டிகள் மூலம்.. ஆன்லைன் மூலம்.. உலகில் எங்கோ ஒரு மூலையில் உள்ளவரை சென்றடைய முடிகிறது.

 

தமிழர்கள் ஒன்றிணைந்து.. உலகின் பிரபல்ய பல்கலைக்கழகங்களின் வலையமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வேர்ச்சுவள் யுனிவேர்சிட்டியை ஆரம்பித்து.. ஆன்லைன் மூலம்.. பட்டப்படிப்புகளை.. தொழில்சார் கல்விகளை.. சமூக.. தேச தேவைக்கேற்ப வினைத்திறனுடன் வழங்கினாலே போதும்.

 

இன்று வகையான..கொன்வென்சனல்.. பல்கலைக்கழகங்களே.. ஆன்லைனுக்கு தமது பாடங்களை நகர்த்துவதும்.. உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள் கூட்டிணைந்து.. வேர்ச்சுவள் பல்கலைக்கழக பட்டங்களை நோக்கி மாணவர்களை தயார் செய்வதும்.. அதன் மூலம்.. பெரும் வருமானத்தை ஈட்ட விளைவதும் நடந்து வரும் இன்றைய இணைய உலகில்.. நாங்கள் பழைய முறைக்குள்.. சிங்களவனின் கட்டமைப்புக்குள்.. அனுமதி வாங்கி பல்கலைக்கழகம் அமைச்சு.. தமிழனைப் படிப்பிக்கனும் என்று நினைப்பது என்னவோ பிற்போக்கான சிந்தனை போன்றே எண்ணத் தோன்றுகிறது.

 

அன்று வர்த்தக.. சமூக..முகாமைத்துவ கல்வியை ஆன்லைனில் வழங்கி வந்த பல்கலைக்கழகங்கள் இன்று மருத்துவம்..விஞ்ஞானம்.. பொறியியல் கல்விகளைக் கூட ஆன்லைனில் திறம்பட நடத்தி வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் மூலம்.. பிரயாணங்கள் மட்டுப்படுத்தப்படுகின்றன. மக்களின் நாளாந்த வாழ்வியல் மாற்றப்பட வேண்டி ஏற்படுவதில்லை. குறைந்த செலவில்.. தேவைக்கு நிறைவான கல்வி.. என்பது இன்றைய தொலைக்கல்வி முறையின் தாரக மந்திரமாக மாறி உள்ளது.

 

பிரிட்டனின் கேம்பிரிச்.. ஆக்ஸ்பேட்.. மற்றும் சில முன்னணிப் பல்கலைக்கழகங்கள் கூட கூட்டிணைந்து..  இன்று வேர்ச்சுவள் யுனிவேர்சிட்டி என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த ஆரம்பித்து அதனூடாக சர்வதேச அளவில் பெருமளவு மாணவர்களைக் கவர்ந்து.. வருவாயையும் ஈட்ட ஆரம்பித்துவிட்டார்கள்..!!!!  அமெரிக்க முன்னணிப் பல்கலைக்கழகங்களும் இதே வழிமுறையை தசாப்தத்துக்கு முதல் ஆரம்பித்துவிட்டன. இன்று விரிவுபடுத்தி நிற்கின்றன. :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Virtual university.

http://en.wikipedia.org/wiki/Virtual_university

How universities will compete: appeal to elites, move online.

http://www.theglobeandmail.com/news/national/education/how-universities-will-compete-appeal-to-elites-move-online/article10942610/

மேலும் தலைப்பில்.. பல்கலைக்கழகம்.. என்பதை பல்கழைகழகம் என்று எழுதி இருக்கிறார்கள். யாழ் அதனை திருத்தவும் விரும்பவில்லை.. ஏனோ..????! :lol::o:icon_idea:

Link to comment
Share on other sites

நெடுக்கின். கருத்துடன் நான் உடன்படுகிறேன். முதலில் நடைமுறைச் சாத்தியமான முறையில் இம்முயற்சி ஆரம்பிக்கப்பட்டு பின்னர் விரிவாக்கம் செய்யப்படலாம். மிகப் பெரிய முதலீடு அவசியம். தனியே சமூக நோக்குடன் இயங்கும் நிறுவனங்களால் இதன் பளுவை சுமக்க முடியாது. சமுக நிறுவனங்களும் தனியாரும் இணைந்த நிறுவனமாகவே இருக்க முடியும். இவ்வாறு அமைக்கப்படும் போதும் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். பல கருத்து முரண்பாடுகளும் எழும். அவ்வாறான பிரச்சனைகளை சமாளிப்பதற்கு சிறந்த ஆளுமை மிக்க இயக்குனர் சபை அவசியம்.

Link to comment
Share on other sites

எங்களுக்குள் பணம் சேர்த்து பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிக்கவோ நடத்தவோ முடியாது. வெளிநாட்டு அரசாங்களின் உதவி மற்றும் பாரிய தொண்டு நிறுவனங்களின் பண உதவி ஆகியன தேவைப்படும். வெறும் சமூக நோக்குடன் இதனை நடத்தவும் முடியாது. 

 

நேற்று பிரெஞ்சுத் தொலைக்காட்டியில் இங்குள்ள பெரும் பணக்காரர் ஒருவர் இலவசமாக ஒரு தனியார் பல்கலைக்கழகத்தினை உருவாக்கி நடத்துவதை பற்றிக் காட்டினார்கள். அரச உதவி எதுவு இல்லாமல் இது ஆரம்பிக்கப்பட்டு 2 வருடங்கள்தான் ஆகிறது. இதில் படிப்பதற்கு மாணவர்கள் போட்டி போடுகின்றனர். 5 கோடி ஈரோ (50 மில்லியன் ஈரோ) பணத்தில் உருவாக்கப்பட்ட இப் பல்கலைக் கழகம் 10 வருடங்கள் இயங்குவதற்கு மேலும் 2 முதல் 5 கோடி ஈரோக்கள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்ணணியில் இந்தக் கோடீஸ்வரர் பெறப்போகும் ஆராயங்கள் பல. 

 

எதுவுமே பேரம் பேசுவதிலிருந்துதான் ஆரம்பமகும். எமது பேரம் பேசும் திறன் என்ன ? ஆதாயங்கள் என்ன ? என்பதை முதலில் ஆராய வேண்டும். 

Link to comment
Share on other sites

1960 களில் தமிழ்ப் பல்கலைக்கழகம் துவங்கவேண்டுமென்று அமைப்பு தொடங்கப்பட்டு அதற்காக திருகோணமலையில் காணிகள் பெறப்பட்டன .தற்போதும் அக்காணிகள் உப்புவெளியிலும் ,உள்துரைமுகவீதியிலும் தமிழ்ப் பல்கலைக்கழக அமைப்பின் பெயரில் தான் உள்ளது .உப்புவெளி காணியில் ஒரு பகுதி E P D P யின் ஆதரவுடன் பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது .

சிறிய பகுதி விலைக்கு வாங்கப்பட்டு (கல்வித் தேவைகளுக்காக மட்டும்தான் விற்கமுடியும் ) தொழில் நுட்பக்கல்லுரி கட்டப்பட்டு கத்தோலிக்க திருச்சபையினரால் நடத்தப்படுகிறது .

Link to comment
Share on other sites

பல்கலைக்கழகக் கல்வியை.. சமூக அந்தஸ்து.. குடும்பப் பெருமை.. தனித்தலைக்கணம் என்று பார்க்கும் குறுகிய மனப்பான்மையில் இருந்து எமது சமூகம் முதலில் விடுபட்டு.. பல்கலைக்கழகக் கல்வியின் ஆழமும் அவசியமும் 21ம் நூற்றாண்டில் அத்தியாவசியம் என்பதை உணரத் தலைப்படனும் முதலில்.

 

இன்றைய பல்கலைக்கழக பாடங்கள்.. பட்டங்கள்.. வேர்ச்சுவள் யுனிவேர்சிட்டிகள் மூலம்.. ஆன்லைன் மூலம்.. உலகில் எங்கோ ஒரு மூலையில் உள்ளவரை சென்றடைய முடிகிறது.

 

தமிழர்கள் ஒன்றிணைந்து.. உலகின் பிரபல்ய பல்கலைக்கழகங்களின் வலையமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வேர்ச்சுவள் யுனிவேர்சிட்டியை ஆரம்பித்து.. ஆன்லைன் மூலம்.. பட்டப்படிப்புகளை.. தொழில்சார் கல்விகளை.. சமூக.. தேச தேவைக்கேற்ப வினைத்திறனுடன் வழங்கினாலே போதும்.

 

இன்று வகையான..கொன்வென்சனல்.. பல்கலைக்கழகங்களே.. ஆன்லைனுக்கு தமது பாடங்களை நகர்த்துவதும்.. உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள் கூட்டிணைந்து.. வேர்ச்சுவள் பல்கலைக்கழக பட்டங்களை நோக்கி மாணவர்களை தயார் செய்வதும்.. அதன் மூலம்.. பெரும் வருமானத்தை ஈட்ட விளைவதும் நடந்து வரும் இன்றைய இணைய உலகில்.. நாங்கள் பழைய முறைக்குள்.. சிங்களவனின் கட்டமைப்புக்குள்.. அனுமதி வாங்கி பல்கலைக்கழகம் அமைச்சு.. தமிழனைப் படிப்பிக்கனும் என்று நினைப்பது என்னவோ பிற்போக்கான சிந்தனை போன்றே எண்ணத் தோன்றுகிறது.

 

அன்று வர்த்தக.. சமூக..முகாமைத்துவ கல்வியை ஆன்லைனில் வழங்கி வந்த பல்கலைக்கழகங்கள் இன்று மருத்துவம்..விஞ்ஞானம்.. பொறியியல் கல்விகளைக் கூட ஆன்லைனில் திறம்பட நடத்தி வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் மூலம்.. பிரயாணங்கள் மட்டுப்படுத்தப்படுகின்றன. மக்களின் நாளாந்த வாழ்வியல் மாற்றப்பட வேண்டி ஏற்படுவதில்லை. குறைந்த செலவில்.. தேவைக்கு நிறைவான கல்வி.. என்பது இன்றைய தொலைக்கல்வி முறையின் தாரக மந்திரமாக மாறி உள்ளது.

 

பிரிட்டனின் கேம்பிரிச்.. ஆக்ஸ்பேட்.. மற்றும் சில முன்னணிப் பல்கலைக்கழகங்கள் கூட கூட்டிணைந்து..  இன்று வேர்ச்சுவள் யுனிவேர்சிட்டி என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த ஆரம்பித்து அதனூடாக சர்வதேச அளவில் பெருமளவு மாணவர்களைக் கவர்ந்து.. வருவாயையும் ஈட்ட ஆரம்பித்துவிட்டார்கள்..!!!!  அமெரிக்க முன்னணிப் பல்கலைக்கழகங்களும் இதே வழிமுறையை தசாப்தத்துக்கு முதல் ஆரம்பித்துவிட்டன. இன்று விரிவுபடுத்தி நிற்கின்றன. :icon_idea::)

 

online இல் படிப்பதற்கும் இணைய வசதி இருக்க வேண்டுமே நெடுக்ஸ் அண்ணா. :rolleyes:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

online இல் படிப்பதற்கும் இணைய வசதி இருக்க வேண்டுமே நெடுக்ஸ் அண்ணா. :rolleyes:

 

 

வீடுகளில் இணைய வசதி இல்லாத இடங்களில்.. பாடசாலை ஐ சி ரி மற்றும் ஏலவே நிறுவப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களோடு பேசி அவற்றின் ஐ சி ரி வசதிகளை பயன்படுத்தலாம். அதேபோல் தனியார் கணனி பயிற்று நிலையங்களோடு ஒப்பந்த அடிப்படையில் இந்த வசதிகளை செய்து கொடுத்தால்.. இணைய வசதி அற்றவர்களும் அது கிடைக்கும் வரை கல்வி பயில முடியும்.

 

பிரிட்டனில் கூட..  பல தனியார் கல்வி நிறுவனங்கள் பெரிய பல்கலைக்கழகங்களின் கணனி மற்றும் நூலக வசதிகளை பயன்படுத்தித் தான் இயங்கி வருகின்றன. தனியான ஐ சி ரி வசதியை விட இப்படியான ஒப்பந்த அடிப்படையில் அமைவது செலவு குறைவானது..!! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசின் கல்வித்துறை அமைச்சரின் செயற்பாடுகளில் ஒன்றாக அமைய வேண்டிய ஒன்று இந்த முயற்சி. தொழில்நுட்ப கல்வி தொழில்வாய்ப்புக்கும் மக்களுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை உருவாக்கி கொள்ளவும் தேவையானது. புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கை அரசின் ஆதரவின்றி உயர்கல்வி நிறுவனம் ஒன்றை இலங்கையில் இன்று நடத்த முடியாது. ஆனால் மொரிசியஸ் நாட்டில் உள்ள பல்கலைகழகத்தில் அல்லது தென் ஆபிரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் இலங்கை தமிழ் மாணவர்கள் கல்வி கற்க வசதி செய்து கொடுக்கலாம். தமிழ் நாட்டிலும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றிலும் இந்த மாணவர்கள் கல்வி கற்க ஏற்பாடுகளை செய்யலாம்.

 

எனக்கும் இது   போன்றதொரு

கருத்து நாடு கடந்த அரசு ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் இருந்தது..

ஆனால் அதன் செயற்திறன்  இன்று மிகமிகக்குறைந்து

மக்களின் நம்பிக்கை  இழந்து நிற்பதாக தெரிகிறது.

(அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்பதல்ல எனது நிலை)

 

என்னைப்பொறுத்தவரை

நெடுக்கின் கருத்து கவனிக்கத்தக்கது

 

அத்துடன் எந்த அரசுடனும்

அமைப்புடனும் முரண்படாதவர்களை  நிர்வாகத்தில் இருத்துவதே படிப்பு என்று வரும்   போது சிறந்தது......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டிகள் சேர்ந்து பூனைக்கு மணியைக் கட்ட  எலிகள் சேர்ந்து ஆண்டிகளுக்கு மடத்தைக் கட்ட வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.