Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

-- தமிழ்வாணன்

 

கரிசனம் என்பதற்குத் தமிழ் அகராதிகள் அன்பு, கனிவு, பாசம் என்று பொருள் கூறுகின்றன. இதற்கு அருமையான பலன்கள் உண்டு.

எங்கள் வீட்டிற்கு மளிகைப்பொருள் கொண்டுவந்து தரும் பையன், குரியர் கடிதத்தைத் தர வரும் நபர், தனியார் தொலைபேசிக் கட்டணத்தை வசூல் செய்ய வரும் ஆள், ஓரு புதுப்பொருளை வாங்கினால் அதை எங்கள் வீட்டிற்கு வந்து பொருத்தி தரும் தொழில்நுட்பக் கலைஞர் என்று எவர் வந்தாலும் இன்முகம் காட்டி “வாருங்கள்” என்பேன். முதலில் தண்ணீர் எடுத்து நீட்டுவேன். “டீ, காப்பி ஏதேனும் சாப்பிடுங்களேன்” என்பேன்.

‘தினமும் பல வீடுகளுக்குப் போகிறோம் ஒருவர்கூட இப்படி நம்மை உபசரிக்க(?)வில்லையே’ என்று அவர் எண்ண ஆரம்பிப்பார்.இது ஓர் அடிப்படை மனிதாபிமானம். ஆனால் எதிராளியின் மனத்திற்குள் சில இனம்புரியாத இரசாயனங்களைச் சுரந்து பல நன்மைகளைப் புரிய வைக்கும் நம்மைச் சார்ந்தும். நம்மை எதிர்பார்த்தும், நாம் கவனிப்புக் காட்டவேண்டிய அவசியம் இல்லை என்கிற எதிர்பார்ப்பு இல்லாத நிலையில் இருப்பவர்களுக்கும்கூட அது காட்டப்படுவதே கரிசனம்.

பொது இடங்களில், பயணங்களில் சந்திக்கும் நபர்களிடம் காட்டப்படும் சிறுசிறு அன்புச் செயல்கள் அந்த இடத்தில் அந்தப் பயணத்தில் இனிய அதிர்வலைகளை உருவாக்குகின்றன.

நாம் படித்து முடித்த செய்தித்தாள்களை வார இதழ்களை உடனே பெட்டிக்குள் போட்டு பூட்டாமல் “நீங்கள் படிக்கிறீர்களா?” என்று சகபயணிகளிடம் கேட்கும்போது (”இதெல்லாம் நான் படிப்பதில்லை” என்று அவர் மறுத்தாலும்கூட) அங்கே நம் உள்ளத்தின் பரப்பளவை நாம் எடுத்துச் சொல்லவிட்ட திருப்தியை நாம் அடையலாம்.

நம்மைப் பாதிக்காத பல சிறுசிறு செயல்கள் எதிராளியின் உள்ளத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்கிற உண்மையை உணர்ந்தவர்கள் நிச்சயம் கரிசனங்களில் நம்பிக்கை உள்ளவர்களாகவே இருப்பார்கள்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.