Jump to content

கனடா தமிழ் பெண்ணிற்கு ஜோதிடரால் வந்த துயரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கனடா தமிழ் பெண்ணிற்கு ஜோதிடரால் வந்த துயரம்
Ca.Thamil Cathamil September 15, 2014 Canada
 
கனடா ரொரொன்ரோ நோத்ஜோக் பகுதியில் தனது கணவன் மற்றும் பிள்ளையின் ஜாதகங்களைக் கொண்டு சென்ற 38 வயதான தமிழ் குடும்பப் பெண் ஒருவரை கணவனுக்கு கண்டம் இருக்கின்றது எனத் தெரிவித்து பெண்ணைக் கண்டம் பண்ணியுள்ளான் ஜோதிடன்.
 
அப் பகுதி ஜோதிட நிலையத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. 30 வயதான ஜோதிடரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
 
இவனிடம் ஜோதிடம் பார்க்கச் சென்ற குடும்பப் பெண்ணை கணவா் 6 மாதத்துக்குள் மரணமடைந்து விடுவார் என பயமுறுத்தி அதற்கு பரிகாரமாக இன்னொருவருடன் உடலுறவு செய்தால் கணவா் தப்பிவிடுவார் எனத் தெரிவித்து குறித்த குடும்பப் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உறவு கொண்ட பின் பல தடவைகள் அப் பெண்ணை அழைத்து பரிகாரம் என்ற பெயரில் உடலுறவு கொள்ளவே சந்தேகப்பட்ட பெண் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.
 
இவரைக் கைது செய்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா். எதிர்வரும் 22ம் திகதி இவரை நீதிமன்றில் ஆயா்படுத்த நடவடிக்கை எடுத்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனா். குறித்த ஜோதிடா் மேலும் பல பெண்களை இவ்வாறு தெரிவித்து பாலியல் உறவு கொண்டதாகத் தெரியவருகின்றது.
 
Link to comment
Share on other sites

பெண் ரொம்ப லேட் பிக்கப்பா இருக்கிறாரே.. :o:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவுக்குப்பின்னர் எதுக்கு காவல்த்துறை....?? :(

Link to comment
Share on other sites

இது காவல்துறையிடம் சென்றது மிகவும் நல்ல விடயமே.   இப்படியெல்லாம் ஏமாறும் பெண்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது மிகவும் வெட்கமாக இருக்கிறது.   இப்படியான பரிகாரங்களை எல்லாம் நம்புவார்களா என்ன?  

 

இதற்குப் பின்னராவது இந்தியாவிலிருந்து படையெடுக்கும் ஜோசியர்களின் எண்ணிக்கை குறையட்டும்.   இந்தச் செய்தி மற்றையவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும் என்று நினைக்கிறேன்.   

Link to comment
Share on other sites

ஆஹா.... சூப்பர் ஐடியா..

 

'நிழலியானந்த சரஸ்வதி சாஸ்திர மகா நிலையம்' என்ற ஒரு சாத்திர மடம் ஒன்றை கட்டி விரைவில் பிசினஸ்சை ஆரம்பிக்க வேண்டியதுதான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.... சூப்பர் ஐடியா..

 

'நிழலியானந்த சரஸ்வதி சாஸ்திர மகா நிலையம்' என்ற ஒரு சாத்திர மடம் ஒன்றை கட்டி விரைவில் பிசினஸ்சை ஆரம்பிக்க வேண்டியதுதான்...

 

ஆகா, அஸ்க்கு பிஸ்க்கு....
 
நீண்ட விடுமுறையில் சென்று வந்தால், நல்ல செய்தி.
 
இமயம் சென்று சோதிட சாத்திரம் கசடறக் கற்று வந்துள்ள 'கண்டம் அறுப்பார்' சோதிடர் சிரோமணி 'நாதமுனி' என்று ஒக்கார வேண்டியது தான்.
 
அப்பெரசண்டிங்களா யாராச்சும் வர விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கப்பா.
 
10 வருடங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் இப்படி ஒரு ஒருத்தர் 'பாம்புச் சாமியார்' என்ற பெயரில் புகுந்து விளையாடி விட்டார்.
 
முட்டாள் தனமாக போலிஸ் அதிகாரி மனைவி மேல கையை வைக்க, கைது பண்ணி சாத்து படி போட்டார்கள். 
 
நீதி மன்றில் இவ்வளவு பெண்களை நாசப் படுத்திப் போட்டாயே என்று கேட்ட போது  'ஐயா, பெண்ணுங்களா, இதுக, பிடாரிங்க ஒருமுறை வந்தால், ஆசையில திருப்பி வாறது, இப்ப நம்ள இங்க நிப்பாட்டி பிட்டாளுங்க' என்று போட்டாரே ஒரு போடு.
 
:wub:  :D  :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்களிலும் நிறையப் பிழைகள் இருப்பதனால் தான் இப்படியானவர்களின் சேட்டைகள் தொடர்கிறது.வீட்டில் ஒரு சின்னப் பிரச்சனை என்றதும் அதனை தீர்க்கத் தெரியாமல் தொடர வைக்கிறது.அது தொடர்ந்ததும் கோயில்,கோயிலா திரியனும் ஐயனுக்கு பணம்,பணமா அள்ளிக் கொட்டனும் அல்லது சாத்திரிக்கு கொட்டனும்.. சிலர் வளர் முக நாடுகளுக்கு வந்தும் முன்னேறாமல் இருப்பதற்கு இவர்கள் மனத்தில் இருக்கும் மனக் குறைகள் தான் காரணம் என்று சொல்லாம்..இப்போ எல்லாம் சில மோல்களுக்குள்  போனால் பின்னால் திரத்திக் கொண்டு வருகிறார்கள்....ஏன்  அவர்களுக்கு புரிகிறது  நம்மவர்களை இலகுவா ஏமாற்றலாம்.......

ஒரு பெண் வேறு ஒருவரதும் உதவியின்றி அந்த சாத்திரியிடம் எதற்காக போனார்....இப்படி எல்லாம் நடப்பதற்கு யாரு காரணியாக இருக்கிறோம் நாங்கள் தானே...வீட்டு பேஸ்மன்ற் சும்மா கிடக்கா ஆ... ஒரு கள்ளச் சாத்திரியைக் கூப்பிடால் போச்சு....கடையில ஒரு பகுதி சும்மா கிடக்குதா அதுக்கும் ஒரு சாத்திரியை கூப்பிட்டால் போச்சு..கூப்பிட்டு விடுகிறவர்களுக்கு காசு தொல்லை பாதியளவாவது குறைஞ்சுடும்...உலகத்தில் இல்லாத தோசம் எல்லாம் இருக்கு என்று சொல்லித் தான் சனத்தின்ட மண்டையைக் கழுவிறது. ஊரில் உள்ள விளப்பம் இல்லாததுகள் மாதிரி நடக்கிற சனத்தின்ட மண்டையைக் கழுவிட்டுத் தானே விடுகிறார்கள்...யார் என்றே தெரியாத ஒருவர்,எங்கயோ கிடந்து வந்த ஒருவர் சொல்வதற்கு எல்லாம் எப்படி அந்தப் பெண் சம்மதிப்பார்..முன் பின் தெரியாத ஆணுக்கு கிட்டப் போக எப்படி மனசு வரும்....

 

ஒரு வைத்தியத்தால் கடவுளுக்கு அடுத்த படியாக நம்பும் வைத்தியர்களால் காப்பாற்ற முடியாது போகும் உயிரை. எப்படி ஒரு சாத்திரியால் காப்பாற்ற முடியும்......நடை முறைக்கு சாத்தியமற்ற ஒரு செயல்பாட்டை தடுக்கும் சக்தி அவரிடம் இருந்திருக்குமாக இருந்தால் தான் தொழில் என்று தேடி நாடு,நாடாக அலையவேண்டியது இல்லயே..

 

சாத்திரிமார் உண்மையாக குடும்பங்களை ஒற்றுமையாக்கி வைக்கிறார்களா சீர் குலைக்கிறார்களா என்பதற்கு இந்த செயல்பாடு ஒரு எடுத்துக் காட்டு..

உண்மையாக சில பெண்களைப் பார்த்தால் அவர்களின் செயல்களைப் பார்த்தால் மிகவும் மனம் வருந்தக்கதாகவே இருக்கு...நான் எடுத்த உடன் எதுவும் எழுத,பேச முன் வருவதில்லை..ஆனால் இது உண்மை.கடைகளுக்கு போனால் கூட  தேவைப் பட்ட பொருளை எடுங்க,நடையைக் கட்டுங்கள்..அதை விடுத்து மணிக் கணக்காக பேசிக் கொண்டே நிற்க வெளிக்கிடாதீங்க...

Link to comment
Share on other sites

இந்தச் சம்பவத்தைக் கேட்டபோது, எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.  ஒரு பெண்ணால் எப்படி இப்படி நடந்துகொள்ள முடியும்?  பெண்கள் விருப்பப்பட்டுச் செய்வது என்பது வேறு.  ஆனால், இந்த நாட்டில் இருந்து கொண்டு ஒரு அந்நிய ஆணுடன் இப்படி நடந்து கொள்ள முடியுமா?  மிகவும் ஆச்சரியமாகவே உள்ளது.  

 

நீங்கள் குறிப்பிட்டது போல, இங்கு ஒரே கடைத்தொகுதியிலேயே பல ஜோதிடர்கள் முகாம் போட்டுள்ளார்கள்.   அவர்களோடு அவர்களது மனைவிமார் வேறு வந்திருப்பார்கள்.   கடைக்குள் போய் உடன் வருவதற்குள்ளேயே காரில் அட்டை வைத்திருக்கப்பட்டிருக்கும்.   :)

 

யாயினி, தமிழ்க் குடும்பங்களுக்குள் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்க முடியுமா என்ன?  என்னதான் நாம் முயற்சி செய்தாலும் சில விடயங்கள் நமது கைகளில் இல்லை.  குடும்பம் என்ற அமைப்புக்குள் பெரியவர்களின் கையே இன்றும் ஓங்கியிருக்கிறது.  நாம் என்னதான் அவர்களைவிட அதிகமாகப் படித்திருந்தாலும், அறிவாளிகளாக இருந்தாலும் ஒரு சிலரின் கைகள் மட்டுமே எப்போதும் ஓங்கியிருக்கும்.  நாம் என்ன சொன்னாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்குதான்.   இதற்குள் பாரபட்சம் வேறு.   :(  :(    அடுத்த தலைமுறையோடாவது இது அழிந்து போகவேண்டும்.   :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவமே! :(

Link to comment
Share on other sites

என்னைக் கேட்டால் அந்த சோதிடர் தான் பாவம் என்பேன்.  இன்றுள்ள நிலையில், அதுவும் ரொரன்டோவில் இருக்கும் ஒரு பெண்மணி இப்படியான பரிகாரங்களைக் கேட்டு ஏமாறக் கூடிய நிலையில் இல்லை. ஆயிரத்தெட்டு கோவில்கள் இருக்கும் இடத்தில் ஒரு சோதிடர் சொன்ன மிக வில்லங்கமான ஒரு பரிகாரத்தினை முழுமையாக நம்பி ஏமாறக் கூடிய நிலையில் எவரும் இல்லை. ஒரு சாத்திரியை நம்பாமல் பல சாத்திரிமார்களிடம் ஓடும் பழக்கம் தான் இப்போதுள்ளது. ஒரு சோதிடர் இப்படி பரிகாரம் செய்யச் சொன்னால், அதனை விரும்பாத ஒருவர் இன்னொரு சோதிடரிடம் போய் விசாரித்தே இருப்பார். சொன்ன பரிகாரத்தினை உவப்புடன் ஏற்பவர் மட்டுமே வேறு ஒருவரிடமும் செல்லாமல் அதனை அப்படியே ஏற்பர்.

 

இந்தச் செய்தி எழுதப்பட்ட விதத்தில் நிகழ்வுகள் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் இல்லை. ஏதோ செய்யப் போய், கணவரிடமோ அல்லது குடும்பத்தினருடனோ மாட்டுப்பட்டு பின் தன்னில் இரக்கம் வருவதற்காக கணவன் இறந்துவிடுவார் என்றுதான் செய்தனான் என்று விளக்கம் கொடுப்பது மாதிரி இருக்கு. அல்லது ஒரு சின்ன விடயத்தினை ஊடகம் தன் கற்பனையை கலந்து கொடுத்து இருக்கலாம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சி சொல்லி இருப்பது போல் நாங்க கிடந்து கத்தோ,கத்து என்று கத்த வேண்டியது தான் நடப்பது எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கிறது..நான் கூட எத்தனையோ தரம் சாத்திரர்களின் மனைவிமார் தந்த விசிட்டிங்கார்ட்டை அவர்கள் முன்னாடியே கிளித்து எறிந்தும் இருக்கிறன்..ஒருவர்,இருவர் அப்படி நடந்தால் போல் எல்லாரும் அப்படி செய்யிறார்கள்,செய்வார்கள் என்று இல்லை..ஓரளவுக்காவது அனியாயங்களை கட்டுப்படுத்தனும் என்றால் முகத்துக்கு முன்னாடியே பதில் அடி கொடுத்தால் அன்றி எந்த வழியும் கிடையாது..

தமிழ் குடும்பங்களில் நடக்கும் குளறுபடிகளும் தெரியும்.சில வயது போனவர்கள் இருக்கும் குடும்பங்கள் என்றால் என்ன விதமான றாமா எல்லாம் போடுவார்கள் மற்றவர்களை எப்படி எல்லாம் நோகடிப்பார்கள்,குளப்பி விட்டு கூத்துப் பார்ப்பார்கள் என்பதும் தெரியும்..உங்கள் வீட்டில், என் வீட்டில்,பழகிய இடங்களில்  என்று நிறையவே பிரச்சனைகள் இருக்கலாம். அதற்காக நாங்கள் போஸ்ட்டர் அடிச்சு சொல்லிக் கொண்டும் திரிய ஏலாது...காதில் வாங்கியும்,வாங்காமலும்,கண்டும்,காணமலும் தான் காலத்தை இழுத்துக் கொண்டு போக வேண்டியவர்களாக இருக்கிறம்..

ஏதாச்சும் ஊண்டிக் கதைச்சுட்டால் பெண் என்ற ஒன்றை தூக்கி போட்டு வாய் திறக்கப் பண்ணாது தங்கள் நாடகத்தை தொடரும் உலகம் இது....இந்த எழுத்துக்களை எழுதும் போதும் கூட சில விடையங்களால்  மனம் பாதிக்கபட்டு கொண்டு இருக்கலாம்..ஆனால் என்ன செய்ய முடியும்...

 

செய்திகளைப் பரப்புவதில் பெரும் பங்கு வகிப்பது ஊடகங்கள் அந்த வகையில் நேற்றைய தினம் சி.பி 24ல் கூட இந்த செய்தியை எழுத்தோட்டத்தில் போட்டுக் கொண்டு இருந்தார்கள்...யாராவது பார்த்தீர்களா....??

Link to comment
Share on other sites

astrologer-473x315.jpg

Bhaskar Muniyappa, 30, is accused of sexually assaulting his astrology client on Sept. 11, 2014. HANDOUT/Toronto Police Service

 

Police have arrested an astrologer accused of sexually assaulting a 38-year-old woman in North York this week.

The woman said it happened on Thursday, when she went to the Sri Vinayaka Astrologer on Keele Street, south of Lawrence Avenue West.

Officers arrested Bhaskar Muniyappa, 30, and charged him with sexual assault.

He’s due in court on Oct. 22.

Police believe there may be more victims and are asking anyone with information to call them.

 

http://www.citynews.ca/2014/09/13/astrologer-accused-of-sexually-assaulting-client/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

astrologer-473x315.jpg

 

முனியாப்பாவின் முகத்தை பார்க்க, அப்பாவியாய் இருக்கிறார் :lol: . 

அப்படிச் செய்யக் கூடியவர் மாதிரி தெரியவில்லை :D .
சாத்திரம் பார்த்த, சோதிடர் எக்கச்சக்கமாக மாட்டுப் பட்டுப் போனார். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே நிழலி அண்ணா சொல்வது சரிபோல்தான் இருக்குது. வழக்கு விசாரணைக்கு வரும்போது வண்டவாளங்கள் எல்லாம் வெளிவரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30 வயதிலேயே..... சோதிடக் கலையை கற்று.
இப்படி, ஆட்டையை.... போடத் தெரிந்த முனியப்பா ஒரு திறமைசாலிதான்.  :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகல் இரவு வீட்ல என்ன நடக்கிது எண்டு தெரியாம டபுள் அடிச்சால் ஆட்டையைப் போடுவாங்கள்தானே!

இன்னும் நெடுக்கர் இந்தப் பக்கம் வரேல்லைப் போல கிடக்கு. இல்லாட்டி சார் அடங்கீட்டாரோ தெரியேல்லை! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பெண்கள் கனடாவில் இப்படியும் டேட்டிங் போறாய்களா.!!!

 

அவனும் பதமா (பதம் - வார்த்தை என்றும் அர்த்தம் பெறும்) தடவிக் கொடுக்க.. இவா இதமா விட்டுக் கொடுத்து வாழ்ந்திருக்கா. இதில.. சாஸ்திரம்.. கணவன்.. மரணம்.. 6 மாதம் எல்லாம்.. உதவிக்காரணிகள்.

 

கடைசியில.. பத்தினி வேசத்துக்கு பொலிஸ்...! கனடா எங்கையோ போய்க்கிட்டு இருக்கு. :lol:

 

(திருப்தியா வாலி. நாங்க அவசரப்பட்டு வந்து கருத்துச் சொல்லி இருந்தா.. அவன் அப்படித்தான் என்றிட்டு போயிருப்பாங்க. ஆனானப்பட்ட நிழலியே வந்து சொன்னதுக்கு அப்புறம் எனி என்ன சொல்ல வேண்டி இருக்கு..!) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சாத்திரியால் தன் காண்டத்தை காண்ட மூலம் பார்க்க முடியவில்லை :D

 

ஏமாறும் கூட்டமிருக்கும் வரை இவர்கள் பாடு கொண்டாட்டம்தான். இவரின் கணவனில்தான் பிழை, குடும்பத்தையும் கவனித்திருக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் ஊரில கொஞ்சமேனும் பள்ளிக்கூடத்துக்குப் போ என அப்பன் ஆத்தை சொல்லுறது பாத்துச் சூதானமா நடக்கத் தெரியவேணும். எல்லாவிசையத்திலையும்.

 

இதில் பெண்ணில்தான் பிழை இருக்கின்றது. உள்ளூர் நபர்களுடன் தொடர்புகள் இருந்தால் கொஞ்சம் அரசல்புரசலாகத் தெரிந்தாலும் முதலுக்கு மோசம், இப்படியெண்டால் சமாளிக்கலாம் எனவும் யோசிக்கலாம்.

 

இதுதான் நேரங்கெட்ட நேரத்தில எல்லாம் உணவகங்களில் கழுவப்போகப்படாது ஒண்டுக்கு இரண்டாக மோட்கேஜில வாங்கின சாமான்களுக்கு பட்டையடி அடிக்கவேண்டும் சாமத்தியவீடு "அந்தமாதிரிச்" செய்யவேண்டும். அப்போ யாராவது லவட்டிக்கொண்டுபோவான்கள்தானே.

 

உங்களுக்கு இன்னும் இருக்கு ஆப்பு.

 

எங்கட ஊரில இருந்தும் ஒருவர் சாத்திரியிண்டை சொல்கேட்டு கனடாவுக்குப் போயிருக்கிறார் எதுக்கும் வந்தாப்பிறகுதான் தெரியும்.

Link to comment
Share on other sites

இங்கு தமிழ்பெண்கள் கன காசு செலவளித்து ஃபேஷியல் செய்வதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். காட்டுப்பண்டி கானக மயில் ஆகமுடியுமா ?
 
மோட்டுக் கூட்டங்கள். 
 
 
ஆண் பொன்ஸாக இருந்தால் இப்படித்தான் முடியும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சாத்திரியால் தன் கண்டத்தை காண்டம் மூலம் பார்க்க முடியவில்லை :D

 

ஏமாறும் கூட்டமிருக்கும் வரை இவர்கள் பாடு கொண்டாட்டம்தான். இவரின் கணவனில்தான் பிழை, குடும்பத்தையும் கவனித்திருக்க வேண்டும்

 

அதுதானே அவர் எல்லாத்தையும் கொண்டம் மூலம் கண்டுவிட்டாரே. எனி காண்டம் என்ன கண்டம் என்ன.. வேண்டிக் கிடக்கு. காண வேண்டியதை எல்லாம் கண்டுவிட்டார் சாத்திரி. எனி உள்ள போனாலும் கவலை இல்ல. :D:lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இதில் கேஸ் எதுவுமே கிடையாதே. பிணையில் வெளியில் வருவார் முனியப்பா.
 
போலீஸ் காரங்களுக்கு புரியவில்லை போல் தெரிகிறது. சாத்திரம், நம்பிக்கைகள் குறித்து நீதிமன்றம் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. அது தேவையில்லா விடயம். 
 
நீதிமன்றில், பலாத்காரம் எதுவும் இல்லை, பெண் சுஜமாக ஒரு இணக்கப் பாட்டுக்கு (Barter Negotiation) வந்தே தொடர்பினை வைத்து இருக்கிறார். அதுவும் முனியப்பாவின் இடத்துக்கே சுஜமாக வந்தே தொடர்பினை தொடர்ந்து இருக்கிறார் என்று வாதாடி வெளியே வருவார்.
 
இங்கே நெடுக்கர் சொன்ன வாதம், வீட்டில் மாட்டுப் பட்டவுடன், பத்தினி வேடம் போடுகிறார் என்பது  சரியானது.  :wub:
Link to comment
Share on other sites

நிழலி குறிப்பிட்டது போல, உண்மையில் நடந்தது என்னவென்று தெரியவில்லை.   காவல்துறையிடம் முறையிட்டதால் கைது செய்யப்பட்டதாகவும் ஒக்டோபர் 22இல் கோர்ட்டிக்குச் செல்லவுள்ளதாகவும் மட்டுமே ஆங்கில ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.  தமிழ் ஊடகங்கள் செய்தியைத் திரித்து எழுதியிருக்கின்றன.  நிழலி சுட்டிக்காட்டிய பின்புதான், ஒரு பெண் இத்தனை பெரிய தவறைச் செய்துவிட்டு அவரே காவல்துறையிடம் சென்றிருப்பாரா என்பது கேள்விக்குறியே.  எது எப்படியோ, கனடாவில், பரிகாரம் என்று சாத்திரிகளின் பின் செல்லும் பெண்களுக்கு இது நல்லதொரு பாடம்.  

 

இந்தச் சாத்திரிக்கு அவரின் சாத்திரமே அவருக்குத் தெரியவில்லை.   :lol:  :lol:  :lol:   

 

 

Link to comment
Share on other sites

 

இதில் கேஸ் எதுவுமே கிடையாதே. பிணையில் வெளியில் வருவார் முனியப்பா.
 
போலீஸ் காரங்களுக்கு புரியவில்லை போல் தெரிகிறது. சாத்திரம், நம்பிக்கைகள் குறித்து நீதிமன்றம் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. அது தேவையில்லா விடயம். 
 
நீதிமன்றில், பலாத்காரம் எதுவும் இல்லை, பெண் சுஜமாக ஒரு இணக்கப் பாட்டுக்கு (Barter Negotiation) வந்தே தொடர்பினை வைத்து இருக்கிறார். அதுவும் முனியப்பாவின் இடத்துக்கே சுஜமாக வந்தே தொடர்பினை தொடர்ந்து இருக்கிறார் என்று வாதாடி வெளியே வருவார்.
 
இங்கே நெடுக்கர் சொன்ன வாதம், வீட்டில் மாட்டுப் பட்டவுடன், பத்தினி வேடம் போடுகிறார் என்பது  சரியானது.  :wub:

 

 

அவர் இந்தியாவிலிருந்து விசாவில் வந்து சாத்திரம் பார்ப்பவர்.  இவரை யார் பிணையில் எடுப்பார்கள்?  அப்படியே எடுப்பதாக இருந்தாலும் அவர்களால் அத்தனை பணம் செலுத்தி எடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

 

இங்கு காதலனாக இருந்தாலும் பெண்ணின் விருப்பமின்றித் தொட்டாலே அது குற்றம்.  ஆகவே, இந்த வாதம் இங்கு எடுபடாது.  இவரால் வேறு பெண்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களையும் முன்வந்து காவல்துறையிடம் முறையிடுமாறும் காவல்துறை கேட்டுள்ளது.  ஆகவே, இது அவரைச் சிக்க வைப்பதற்காக நடத்தப்பட்ட நாடகமாகக்கூட இருக்கலாம்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சப்பா.. சப்பைக் கட்டு.. தாங்க.. முடியல்ல.

 

சும்மா சிவனேன்னு.. இந்தியாவில கிடந்தவனை.. கூப்பிட்டு வைச்சு.. தேடிப் போய்.. பரிசும் கொடுத்து.. உடம்பையும் கொடுத்திட்டு.... இப்ப கேசும் கொடுக்கிறதும்.. ஒரு பெண் தான்.

 

விபச்சாரிகளும்.. கேசு கொடுக்கலாம். வாடிக்கையாளர் தன்னை சரியா கையாளவில்லை.. காசு கொடுக்கல்ல என்று. மேற்படி.. சம்பவமும் அப்படி ஒன்று தான். இதுங்களுக்கு விபச்சாரிங்க எவ்வளவோ திறம். வெளிப்படையா நடத்துக்குதுங்க..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.