-
Topics
-
Posts
-
By ஜெகதா துரை · Posted
பாரட்டுக்கள் புரட்சி. யாழ் களத்துடனான எழுத்துப் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். -
அமெரிக்க அரசுக்கும் ரில்லியன்களில் கடன் இருக்கிறது. பெருமளவிலான கடனை சீனா கொடுத்திருக்கிறது. மைக்றோ சொவ்ற் நிறுவனத்துக்கு நானே கடன் கொடுத்து வட்டியுடன் திரும்ப பெற்றிருக்கிறேன். கடன் வாங்காமல் இயங்கும் அரசுகளும், நிறுவனங்களும் வளர்ச்சி அடைவதில்லை. இந்த அரசுகளினதும், நிறுவனங்களினதும் நிகர மதிப்பை (net worth) வைத்தே அவற்றின் செல்வந்த நிலையை தீர்மானிக்க வேண்டும். இந்த அரசுகளும், நிறுவனங்களும் பணம் தேவைப்படும் போது சொத்துக்களை விற்றோ அல்லது முதலீடுகளை திரும்பப் பெற்றோ பணத்தை திரட்டுவதில்லை. மாறாக, கடன்படுகின்றன. நீங்கள் உருவாக்கிய தமிழா ‘வாக்கப்பட்ட’? அல்லது ‘வாழ்க்கைப்பட்ட’ என்ற தமிழ் வசனத்தை குதறி, கோரமாக ‘வாக்கப்பட்ட’ ஆனதா?
-
ரதி, கருணா போன்ற அரசியல்வாதிகளின் செயல்களை இப்படி ஜோக்காக விமர்சிப்பது இயல்பானதே. சும்மா சிரித்துவிட்டு நகரவேண்டிய எனது ஜோக்கை இவ்வளவு சீரியசாக நீங்கள் எடுத்திருக்க தேவையில்லை என்பது எனது எண்ணம். போராட்டதை அதன் சரியான தவறான முடிவுகளை வி மர்சிக்கும் நான் போராளிகளை விமர்சிப்பதில்லை. மற்றப்படி கருணா 10 பொண்டாட்டி வைத்திருப்பது அவரது சுதந்திரம். அதைப்பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை( எண்டாலும் லைற்றா எனக்கு பொறாமை தான். நம்ம வீட்ட எண்டா செருப்பு பிஞ்சுடுமே அந்த பொறாமை.) 😂
-
By nedukkalapoovan · Posted
இதையே தேசிய தலைவர் தனது பிள்ளைகளையும் மனைவியையும் வெளிநாட்டுக்கு அனுப்பி பாதுகாத்திருந்தால்.. துரோகி என்றிருப்பார்கள். பக்கம் பக்கமா எழுதிக் கிழித்திருப்பார்கள். அதை இந்த குள்ளநரி செய்திருப்பதால்.. புத்திசாலி என்பார்கள். ஆனால்.. பிரபாகரன்.. இவர் அளவுக்கு சுயநலப் புத்திசாதுரியமாக இருக்கவில்லை.. இனம்.. மண் எப்படிப் போனால் என்ன நானும் என் குடும்பமும் சிறக்கனும் என்ற அந்த சுயநலப் புத்தி இந்தக் குள்ள நரியிடம் தான் கற்றுக் கொள்ளப்பட வேண்டும். காலம் பதில் சொல்லும். கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் கொண்ணர் இப்போ அரசியல் அனாதையாகிட்டார். முதலில் தனிக்கட்சி.. பிறகு சிங்களத் தேசியக் கட்சியில் ஐக்கியம்.. பின்னர் பிரதி அமைச்சர்.. இப்ப.. மீண்டும்.. தனிக்கட்சி. இன்னும் இவர் மக்களையும் சந்திக்கவில்லை.. மக்களின் வாக்குகளையும் பெறவில்லை. ஆனால்... தனக்குப் பின்னால்.. ஒரு மக்கள் படை இருக்கென்ற.. மாயை காட்டிக்கொண்டு.. பணம் பார்த்துவிட்டார். அது எனி அதிகாலம் எடுபடாது. அதனால்.. இன்று பலவிதமாக ஊளையிட ஆரம்பித்துவிட்டார். செய்வினை.. தன்னைச் சுடும்.. ஓட்டப்பம் வீட்டைச் சுடும். -
By தமிழ் சிறி · Posted
அங்கொடை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி! மனநல பரிசோதனைகளுக்காக அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் இன்று(திங்கட்கிழமை) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகியிருந்தார். இந்தநிலையில் மனநல பரிசோதனைகளுக்காக அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஆதவனின் அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார். சுவிஸ் தூதரக பெண் அதிகாரியை சிறப்பு மனநல வைத்திய குழு முன்பாக சோதனைக்குட்படுத்த, நீதிமன்றத்திடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் கடந்த தவணையில் அனுமதி கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அங்கொடை-மனநல-மருத்துவமனை/
-