Jump to content

கந்தப்புவின் சிட்னிக் கண்ணோட்டம்


Recommended Posts

சிட்னித்தமிழர்களும் மற்றைய புலம் பெயர்ந்த தமிழர்களும்

அன்று சீலன் இலங்கைத் தேசியக்கொடி ஏற்றப்பட்டதினை பொறுக்க முடியாமல் எரித்த வரலாற்றினைப் படித்திருக்கிறோம். தேசியக்கொடியிலாவது அரசாங்கம் வேண்டா வெறுப்பாக பச்சை நிறத்தினை தமிழர்களுக்கு ஒதுக்கி விட்டிருக்கிறது. ஆனால் இலங்கை துடுப்பாட்டக்கொடியில் பச்சை நிறத்தினை பார்த்திருக்கிறீர்களா?. அதில் வாளை ஏந்திக் கொண்டிருக்கும் சிங்கம் மட்டுமே நிற்கிறது. அந்த வாள் யாரை வெட்ட நிக்கிறது?. தமிழனை என்று சின்னப்பிள்ளையினைக் கேட்டாலே தெரியும்.

நியூசிலாந்தில் சென்ற சனிக்கிழமை இலங்கை அணியும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 4 வது 50 ஒவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டியின் போது அங்குள்ள தமிழர்கள் விமானத்தின் உதவியுடன் இலங்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்கள். முன்பு மெல்பேர்ணிலும் தென்னாபிரிக்காவிலும் இவ்வாறு எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தார்கள்.

cricketnewzealandym1.jpg

சென்றவருடம் பிரித்தானியாவில் லண்டனில் நடைபெற்ற துடுப்பாட்டத்தின் போது இலங்கைக்கு எதிராக லண்டன் வாழ் மாணவர்கள் இவ்வாறு எதிர்ப்பினைத் தெரிவித்தார்கள்.

cricketlondonsi9.jpg

ஆனால் சிட்னி வாழ் தமிழர்கள் சென்ற 2006 ஆண்டில் நடைபெற்ற போட்டியில் சிங்கக்கொடியுடன் இலங்கை அணியின் ஆடை அணிந்து சிட்னி துடுப்பாட்ட மைதானத்தில் கலந்துகொண்டார்கள்.

p1220333so9.jpg

மற்றைய நாட்டில் வாழும் தமிழர்களைப் பார்த்தாவது இவர்கள் திருந்த மாட்டார்களா? இவ்வருட இறுதிப்பகுதியில் இலங்கை அணி அவுஸ்திரெலியாவுக்கு வர இருக்கிறது. அதிலும் சிங்கக் கொடியுடன் இத்தமிழர்கள் மானமிழந்து செல்வார்களா?. துடுப்பாட்டம் பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் எங்களைக் கொல்ல நினைப்பவனின் தேசியக்கொடி பதித்த உடையினை அணிந்து தான் செல்ல வேண்டுமா?. அவனது தேசியக்கொடிதான் அங்கு உங்களின் கைகளில் இருக்கவேண்டுமா?

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி டமிழ்ஸ், இந்தமுறை கட்டாயம் போவினம் .சிங்ககொடியுடன் மட்டும் அல்ல முடிந்தால் சிங்கத்தை உயிருடன் பிடித்துக்கொண்டும் போவினம்.கேட்டா சொல்லிவினம் விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று......................அது சரி கந்தப்பு சிரி லங்கா பொருட்களை பகிஸ்கரி என்று சொன்னமாதிரி இருக்கு ..................

Link to comment
Share on other sites

ஹிம்....யார் போறதென்று தெரிஞ்சா சொல்லுங்கோ புத்தன்..நானும் கந்தப்புவும் வீடு வீடா போய் போகவேணாம் என்று சொல்லிட்டு வாறம்... ;)

யோசிச்சு பார்த்தால் இது பெரிய விசயமாக தோன்றுகின்றது... ஏன் எனில் இங்கு பல விதமான மக்கள்...விவாதித்தால் இது ஒரு மெகா தொடராகிவிடும்..இல்லையா?

Link to comment
Share on other sites

காலம் காலமாக இலங்கை கிரிக்கெற் அணித் தெரிவின் போது தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளார்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. இலங்கை அணியில் உள்ள வீரர்களுக்கு சரிநிகராக விளையாடக்கூடிய எத்தனையோ துடுப்பாட்ட வீரர்கள் தாயக்தில் இருக்கின்றார்கள் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மிகவும் திறமையும், தகுதியும், அனுபவமும் உடைய பந்து வீச்சாளர்களும் துடுப்பாட்ட வீரர்களும் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். முன்னர் ஒரு காலத்தில் எமது வீரர்கள் எவரும் இலங்கை அணியில் இடம்பெறவில்லை என்ற ஆதங்கம் எல்லோரிடமும் இருந்தது ஆனால் இப்போது அந்த ஆதங்கம் யாரிடமும் இல்லை. இனிமேல் நாங்கள் வேறு இலங்கை வேறு அதனால் நாங்கள் இனிமேல் இலங்கை கிரிக்கெற் அணியை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை, காலம் காலமாக எம்மை புறக்கணித்து வந்தவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.

காத்திருங்கள் விரைவில் எங்கள் தலைவர் தமிழீழத்தை வென்றெடுத்து தமிழீழ துடுப்பாட்ட அணியை உருவாக்குவார் அப்போது நாங்கள் எல்லோரும் தமிழீழ தேசிய சின்னம் பொறித்த ஆடை அணிந்து கைகளில் புலிக்கொடியை ஏந்தியவாறு மைதானத்தில் ஒன்றுகூடி எங்களுடைய தமிழீழ துடுப்பாட்ட அணியினருக்கு ஆதரவு கொடுக்கலாம், அவர்களை உற்சாகப்படுத்தலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிம்....யார் போறதென்று தெரிஞ்சா சொல்லுங்கோ புத்தன்..நானும் கந்தப்புவும் வீடு வீடா போய் போகவேணாம் என்று சொல்லிட்டு வாறம்... ;)

யோசிச்சு பார்த்தால் இது பெரிய விசயமாக தோன்றுகின்றது... ஏன் எனில் இங்கு பல விதமான மக்கள்...விவாதித்தால் இது ஒரு மெகா தொடராகிவிடும்..இல்லையா?

பினலோங் பார்க் துங்காபியில்,எதிர்வரும் ஜனவரி 26 ம் திகதி தமிழர் ஒன்று கூடல் நடைபெறும் இங்கு வந்து பார்த்தீர்கள் ஆனாலே சிறிலங்கா டீசர்ட் போட்டு விளையாடும் எம்மவர்களை காணலாம்.

:):lol::lol:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அவுஸ்திரெலியர்கள் ஜனவரி மாதம் 26 ம் திகதி அவுஸ்திரெலியா தினத்தினை கொண்டாடுவார்கள். அன்று அவுஸ்திரெலியாவில் அரசவிடுமுறை. அதே நாளில் சிட்னித் தமிழர்கள் தமிழர் திரு நாளை பினலோங் பூங்காவில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவார்கள். தாயகத்துக்கு உதவி செய்யும் அமைப்புக்களினால் ஒழுங்கு படுத்தி வெகுசிறப்பாக நடைபெறும் இன்னிகழ்வில் இந்திய அரசின் சதியினால் வீர மரணம் அடைந்த தளபதி கிட்டுவின் நினைவாக நடைபெறும் போட்டிகளும் அங்கே நடைபெறும். தளபதி கிட்டுவின் உருவப்படம் அவ் பூங்காவில் வைக்கப்பட்டு, அவுஸ்திரெலியாத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகும்.

australiaday12zf8.jpg

ஒடியல் கூழ் தொடங்கி கொத்து ரொட்டி வரை ஈழத்தில் உண்ணப்படும் பெரும்பான்மையான உணவுகள் அங்கே சமைத்து விற்பனைக்கு விடப்படும். ஒலிபெருக்கியில் தமிழீழ கானங்கள் ஒலிக்க, தமிழீழ இறுவெட்டுக்கள், பதிவுகள் விற்பனை செய்யப்பட்டு கொண்டு இருக்கும். இம்முறையும் வழமை போல நானும் இங்கு சென்று உண்டு, இறுவெட்டுக்கள் வாங்கிக் கொண்டு தெரிந்தவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். ஒலிபெருக்கியில் தாயகப் பாடலினைக் கேட்கும் போது ஈழத்தில் இருப்பது போல ஒரு உணர்வு ஏற்பட்டது. ஆனால் தளபதி கிட்டு ஞாபகர்த்த போட்டிகளில் பங்கு பெற்றும் வீரர்களில் சிலரைக் கண்டதும் நெஞ்சம் கொதித்தது(சென்ற வருடத்திலும் இப்படி சிலர் வந்தார்கள்). துடுப்பாட்டப் போட்டியில் பங்கேற்ற அவர்கள் சிறிலங்கா துடுப்பாட்ட வீரர்கள் அணியும் வாளை ஏந்தும் சிங்கத்தின் ஆடையினை அணிந்திருந்தார்கள். ஒட்டப்போட்டி ஒன்றில் ஒரு சிறுவனும் இவ்வாடை அணிந்து போட்டியில் கலந்து கொண்டார். இன்னிகழ்ச்சிக்கு அவுஸ்திரெலியாவில் எதிர்க்கட்சியும், நீயூசவுத் வேல்ஸ் மானிலத்தில் ஆட்சிசெய்யும் தொழிற்கட்சிப் பாரளுமன்ற உருப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இவர்கள் சிங்கள அரசுக்கு எதிராக சிட்னியில் நடைபெரும் நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்கள். அவர்கள் இதனைப்பார்த்து தமிழீழம் வேணும் என்று கேட்கிறாங்கள், ஆனால் சிறிலங்கா அணியின் ஆடை அணிந்து வருகிறார்களே என்று குழம்பம் அடைய மாட்டார்களா?.

australiaday05vz4.jpg

இந்தச் சிறுவனின் பெற்றோர்களுக்கு எங்கே அறிவு போனது?

australiaday02yg7.jpg

பிரிஸ்பனிலும் நடைபெற்ற கிட்டு ஞாபகர்த்தப் போட்டியில் எம்மைக் கொல்லும் சிங்களவனின் ஆடையினை அணிந்த இன்னொரு மானம் இழந்த தமிழன்

img0831rb0.jpg

நிகழ்ச்சிகளை நடாத்துபவர்கள், சிறிலங்கா அணி பதித்த ஆடைகளை அணிபவர்கள் கிட்டு ஞாபகார்த்தப் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று கட்டாயம் அறிவித்தல் செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

ம்ம்ம் இதை சொல்லி செய்யலாம்...... வேதனை தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் இதை சொல்லி செய்யலாம்...... வேதனை தான்..

நான் ஜனவரி 11 ம் திகதி சொன்னேன் எப்படி என்ற தீர்கதரிசனம் என்னத்தை சொன்னாலும் எங்கன்ட டமிழ்ஸ் நைஸ் பீப்பிள் அப்பா

:D:D:(

Link to comment
Share on other sites

  • 2 months later...

இவர்களுக்கு எப்படி விளங்கப் படுத்துவது?

நேற்று ஈழத்தில் பிறந்த ஒருவரைச் சந்தித்தேன். இவர் தனது பிள்ளைகளை இந்தியா சுதந்திர தின நிகழ்ச்சிக்கு பங்கு பெற அனுப்புபவர். ஆனால் மாவீரர் நிகழ்ச்சிகளுக்கு செல்லமாட்டார். நேற்று சந்திக்கும் போது தொலைக்காட்சியில் வான் புலிகளின் தாக்குதல் பற்றிய சில செய்திகள் போனது. இவங்கள் புலிகள், தேவையில்லாமல் பலாலிக்கு குண்டு போட்டுட்டார்கள், இனி ஆமி விடாது தமிழரைக் கொல்லப் போகுது என்றார். மேலும் இந்தப் போராட்டத்தினால் தான் தமிழர்கள் அனேகப் பேர் சிங்களப் படையினால் கொல்லப்பட்டதாகவும், அகவே இப்போராட்டம் தேவையில்லை. இந்தியாவில் எத்தனை மொழிகள் ஒற்றிமையாக இருக்கவில்லையா என்று கேட்டார். இது போல சிங்களவருடன் சேர்ந்து வாழலாமே என்றார். வெளி நாட்டில் இருப்பவர்கள் பங்கெளிப்புச் செய்வதினால் தான், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், கண்டனக்கூட்டங்களில் கலந்து கொள்வதினால் தான் புலிகளும் இராணுவத்துடன் போரிட விரும்புகிறார்கள். பங்களிப்புச் செய்பவர்கள் சுய நலவாதிகள், ஊரில போய் சண்டை பிடிக்கலாமே என்றார். தான் தனது பிள்ளைகளை மாவீரர் தினத்துக்கும், இப்படியான கண்டனக்கூட்டங்களுக்கும் செல்ல அனுமதிக்க மாட்டேன் என்றார். இப்படியானவர்களும் எமது சமுகத்தில் இருக்கிறார்களே என்பது எனக்கு வேதனையாக இருக்கிறது. எவ்வளவு உதாரணங்கள் காட்டி விளங்கப்படுத்தினாலும் போராடுபவர்களையும், புலத்தில் பங்களிப்பு செய்பவர்களையும் சுய நலவாதிகள் என்று சொல்கிறரே என்பதை நினைக்க வேதனையாக இருக்கிறது. இப்படியானவர்களுக்கு எப்படி நாங்கள் எமது போராட்டத்தை விளங்கப் படுத்துவது?. அல்லது இவர்களுடன் கதைப்பதினால் நேரம் வீரயம் என்று விட்டு விடுவதா?.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.