• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
குமாரசாமி

கொலு எனும் நவராத்திரி திருவிழா.

Recommended Posts

g.jpg

 

கொலு எனும் நவராத்திரி திருவிழா.

 

golu.jpg

ஆன்மிக அர்த்தங்களுக்குள் நுழைந்து அதன் ஆதாரங்களைத் தேடாமல், புராணக் கதைகளுடன் அதை முடிச்சுப் போடாமல், வெறும் பொம்மை விளையாட்டாகவே கற்பித்துக் கொண்டாலும் கூடப் பரவாயில்லை.

நவராத்திரி ஓர் உன்னதமான திருவிழா தான்.

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் குழந்தைத்தனமான ஆர்வங்களை வெளியே கொண்டுவரும் ஓர் அற்புதத் தருணம்தான் இந்த நவராத்திரித் திருவிழா என்றால் அது மிகையாகாது.

பொம்மைகள் குழந்தைகளுக்கு மட்டும்தான் பிடிக்க வேண்டுமென்பதில்லை. பெரியவர்களுக்கும் பிடிக்கும். பிடித்துத்தான் தீர வேண்டும்.

ஆதி சங்கரரின் அன்புக்கு இலக்காகிய ஸ்ரீ மூகாம்பிகையும், ஸ்ரீ ராமானுஜரின் பாசத்திற்கு வசப்பட்ட ராமப்ரியனாகிய மேல்கோட்டை சம்பத்குமாரனும், சத்குரு ஸ்ரீ ராகவேந்திரரை வசப்படுத்திய ஸ்ரீ மூலராமரும், ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை இன்றும் கூட சூடிக்களிக்கின்ற ஸ்ரீ வேங்கடாசலபதியும், நாயன்மார்களும் இன்னும் பலரும் பாடிப்பரவிய தில்லை நடராஜரும் கூட அர்ர்ச்சாவதார மூர்த்திகளாய் விளங்கும் ஆன்மிக பொம்மைகள்தாம்.

இன்று திருமலையில் மட்டுமின்றி, தேசம் முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெறுகின்ற ஸ்ரீ ஸ்ரீநிவார் திருக்கல்யாணமும் கூட பக்தர்களின் மனம் கவரும் ஓர் உயர்தர ஆன்மீக பொம்மை விளையாட்டுத்தான்.

திருக்கோயில்களில் பிரம்மோத்வ காலங்களில் பல்வேறு பெரிய பொம்மைகளாகிய வாகனங்களிலும், பல்லக்குகளிலும், சிவிகைகளிலும், தேர்களிலும் தெய்வங்களின்  பஞ்சலோக உருவத்தை அமர்த்தி, அலங்கரித்து, வீதிவலம் செய்வித்து, அத்திருக்காட்சியை பக்தர்கள் வணங்கிப் பரவசம் அடைவதும் கூட ஓர் உன்னதமான பொம்மை விளையாட்டுத்தான்.

குழந்தைகள் சிறுவயதில் விளையாடும் பொம்மை விளையாட்டுதான், பெரியவர்களான பின்பு, திருக்கோயில்களில் வருடம் முழுவதும் திருவிழாக்களாகவும், வீடுகளில் வருடத்தில் ஒன்பது நாள் நவராத்திரி பொம்மைக்கொலுவாகவும் பரிணமித்திருக்கிறது என்று நம்புவதற்கு எல்லா நியாயமும் இருக்கின்றது.

பொம்மைக் கொலு வைக்கும் வழக்கம் உள்ள வீடுகளைப் பொறுத்தவரையில், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளைக்காட்டிலும் நீண்ட நாட்கள் கொண்டாடப் படுவதும், அந்தக்கொண்டாட்டத்திற்கென  அதிகமான முன் தயாரிப்புகள் செய்யப்படுவதும் இந்த நவராத்திரிக்கு மட்டும்தான்.

 

kolu_2-300x169.jpg

 

பொம்மைக் கொலு வைப்பதற்குச் சில நாட்கள் முன்பாகவே வீடுகளின் மூலை முடுக்களிலெல்லாம் ஒட்டடை அடிக்கப்படுவதும்,  பரணிலிருக்கும்  பெட்டிகளிலிருந்து பொம்மைகள் வெளியே எடுத்துத் துடைத்துச் சுத்தம் செய்யப்படுவதும், கொலுப்படிகள் நிறுவுவதற்கான திட்டமிடுதலும் ஏற்பாடுகளும் நடைபெறுவதும், வண்ணக் காகிதங்களால் தோரணங்கள் அமைத்து வீடு முழுவதும் அலங்கரிக்கப் படுவதும், வசதியிருந்தால் மின்விளக்குகள் கொண்டு அலங்கரிப்பதும் என, பொம்மைக்கொலு வைப்பது ஒரு திருமணத்துக்கு நிகரான உற்சாகச் செயல்பாடல்லவா

வீட்டின் ஆகப்பெரிய வயதான உறுப்பினர்கள் அறிவுறை கூற, அடுத்தநிலை பெரியவர்கள் ஆலோசனை வழங்க, இளைய தலைமுறையினர் அதை நிறைவேற்றப் பாடுபடுவதுமாக, முன்னேற்பாடுகள் பரபரக்கும். விழா தொடங்கிய  பின்பு, அந்த ஒன்பது நாட்களும், உறவினர்களும், தெரிந்தவர்களும் சாரி சாரியாய் வந்து நம் வீட்டுக் கொலுவைப் பார்த்துவிட்டுப் பாராட்டுவதும், கொலு இன்னும் சிறப்பாக மிளிர்ந்திட ஆலோசனைகள் பலவும் சொல்வதுமாக, ஒவ்வொரு நாளும் சுவாரசியமாக நகரும்.

வித்தியாசமான கருத்தோட்டங்களைப் பிரதிபலிக்கும் புதிய பொம்மைகளை விலை கொடுத்து வாங்கிக் கொலுவில் வைப்பதும், வருபவர்களுக்கு அதைப் பற்றி விளக்குவதும் கூட ஓர் அற்புத அனுபவம்தான்.

கொலுவைப்பார்க்க வரும் வரும் குழந்தைகள் தங்களது விழிகள் விரிய வியப்பதும், அவர்களில் சிலர், பொம்மைகளைக் கையில் எடுத்துப்பார்க்கத் துடிப்பதும், பெரியவர்கள் அவர்களைத் தடுத்துச் சமாதானம் செய்வதும் பொம்மைக்கொலு வைத்துள்ள வீட்டில் அன்றாடம் அரங்கேறும் அழகிய காவியமாகும். கொலுவுடன் இசையும் சேருமானால் அவ்விடம் கந்தர்வலோகம் ஆகிவிடும்.

அவரவர் வசதிக்கேற்ப, கொலுவைக் காண வருபவர்களுக்குத் தாம்பூலத்துடன் ஏதாவது சிறு பரிசுப்பொருளை வழங்குவதும், குழந்தைகளுக்கு சுண்டல் அல்லது இனிப்புகளை வழங்கி அவர்களை முகம் மலர வைப்பதும், திருமணங்களைத் தவிர்த்து, நவராத்திரி நாட்களில்  மட்டுமே சாத்தியம்.

இதையெல்லாம் விடுங்கள்.

பொம்மைக் கொலுவுக்கென பரணிலிருந்து இறக்கிவைக்கப்படும் பொம்மைகளைப் பார்க்கும் போதே, பள்ளி விட்டவுடன் வீடு திரும்ப ஆவலாகக் குதித்தோடத் தயாராகும் குழந்தைகளைப் பார்ப்பது போல் இருக்கும்.

இது மட்டுமா.

நவராத்திரி முடிந்தவுடன் பழையபடி பொம்மைகளைப் பரணில் ஏற்றும் போது, நெருங்கிய உறவினர்களை வழியனுப்ப இரயிலடியில் நிற்பது போன்ற ஓர் உணர்வு நமக்குள் பீறிடுவதைத் தவிர்க்கவே முடியாது.

அடுத்த நவராத்திரி எப்போது வரும் என்று அந்த பொம்மைகள் நம்மைக் கேட்பது போலவே இருக்கும். ஆம்.பொம்மைகள் நம்முடன் பேசும். நம்பினால் நம்புங்கள். நமக்கும் அவற்றுடன் பேசவேண்டும் போல் இருக்கும். இதுதான் நவராத்திரி பொம்மைக்கொலுவின் சிறப்பு.

 

kolu_4-300x186.jpg

 

நம்மில் பலரது வீடுகளில் பொம்மைக்கொலு வைப்பதில்லை. வழக்கமில்லை, வசதியில்லை, இடமில்லை, நேரமில்லை. இப்படிப் பல காரணங்கள்.

காரணம் எதுவாக இருந்தாலும் சரி

கொஞ்சமே கொஞ்சம் ஆர்வம் மட்டும் இருந்தால் போதும். பொம்மை கொலு வைக்கப் பழகுங்கள். உங்கள் மனசு மகிழ்ச்சியால் நிறையும். உங்களின் உறவு வட்டம் பெரிதாகும். பொம்மைகள் உங்களின் விருந்தினர்கள் ஆகும். உங்களுக்குள்ளிருக்கும் கலையார்வம் மறுபிறவி எடுக்கும். நீங்களும் குழந்தைகளாவீர்கள்.

கொலு வைக்க வசதியோ, வாய்ப்போ இல்லாதவர்கள் நிச்சயம் ஒவ்வொரு நவராத்திரி பண்டிகை அன்றும், ஒவ்வொரு இடங்களில் வைக்கப்படும் கொலுவுக்குச் சென்று பார்த்து ரசிக்கலாம். நிச்சயமாக முக்கியக் கோயில்களில் கொலு வைக்கப்பட்டிருக்கும் என்பது நினைவில் கொள்ள வேண்டியது.

 

http://www.dinamani.com

 

 

 

 

  • Like 6

Share this post


Link to post
Share on other sites

நான் இருக்கும் இடத்தில் சைவக் கோவில்கள் கிடையாது , அதுக்கு பாரிஸ்தான் வர வேனும். அதனால் சாமியறையில் நவக்கிரகங்கள்  உட்பட அத்தனை தெய்வ சொரூபங்களும் இருக்கின்றன. எமக்கு ஒரு மனச்சுமை ஏற்படும் போது சிறிது நேரம் அங்கே உட்கார்ந்து இருந்தால் போதும் இலையை ஈரமாக்காது தாமரை இலையில் இருந்து தவழ்ந்து விழும் திவலை நீர் போல் கன்னத்தில் உறுளும் கண்ணீர்த் துளியில் அத்தனை சுமையும் கரைந்து போயிடும்...!

 

இணைப்புக்கு நன்றி கு . சா...!

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நவராத்திரி விழவின் போது... ஈழத்தில் கொலு வைப்பதை அறியவில்லை.
தமிழ் நாட்டில், கொலு இல்லாத நவராத்திரி விழாவை... நினைத்துக் கூட பார்க்க முடியாது.
நல்ல தகவல்களுக்கு, நன்றி குமாரசாமி அண்ணா.

Share this post


Link to post
Share on other sites

பள்ளிக்கூடங்களில் கொலு வைக்கிறவை. யாழ் இந்துவில் எல்லாம் கொலு வைச்சு.. 9 நாளும் கால் கடுக்க.. நிற்க வைச்சு..சகல கலாவல்லிமாலை பாடித்தான் வகுப்புக்கே போக விடுவாங்க..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

நான் இருக்கும் இடத்தில் சைவக் கோவில்கள் கிடையாது , அதுக்கு பாரிஸ்தான் வர வேனும். அதனால் சாமியறையில் நவக்கிரகங்கள்  உட்பட அத்தனை தெய்வ சொரூபங்களும் இருக்கின்றன. எமக்கு ஒரு மனச்சுமை ஏற்படும் போது சிறிது நேரம் அங்கே உட்கார்ந்து இருந்தால் போதும் இலையை ஈரமாக்காது தாமரை இலையில் இருந்து தவழ்ந்து விழும் திவலை நீர் போல் கன்னத்தில் உறுளும் கண்ணீர்த் துளியில் அத்தனை சுமையும் கரைந்து போயிடும்...!

 

இணைப்புக்கு நன்றி கு . சா...!

 

உண்மைதான் சுவி! மனப்பாரம் குறைய சிலநிமிடம் கண்ணை மூடிக்கொண்டு சிவனேயென்றால் பாரங்கள் குறைந்துவிடும்.

நவராத்திரி விழவின் போது... ஈழத்தில் கொலு வைப்பதை அறியவில்லை.

தமிழ் நாட்டில், கொலு இல்லாத நவராத்திரி விழாவை... நினைத்துக் கூட பார்க்க முடியாது.

நல்ல தகவல்களுக்கு, நன்றி குமாரசாமி அண்ணா.

 

ஒரு சில வீடுகளில் பார்த்திருக்கின்றேன்.நம்ம வீட்டில் அதெல்லாம் கிடையாது.அவல்,வடை பொங்கலோடை சரி... :D

பள்ளிக்கூடங்களில் கொலு வைக்கிறவை. யாழ் இந்துவில் எல்லாம் கொலு வைச்சு.. 9 நாளும் கால் கடுக்க.. நிற்க வைச்சு..சகல கலாவல்லிமாலை பாடித்தான் வகுப்புக்கே போக விடுவாங்க..! :icon_idea::)

 

எனக்கு எட்டுநாளும் விசர்தான் வரும்....ஆனால் ஒன்பதாவதுநாள் ஒரு இனம்புரியாத சந்தோசம்... :D

Share this post


Link to post
Share on other sites

சுவியண்ணா வீட்டில நவக்கிரகத்தை எல்லாம் வைச்சு கும்பிடுவாங்களா

Share this post


Link to post
Share on other sites

நவக்கிரகம் , ஆஞ்சநேயர் , சிவன் (தட்சனாமூர்த்தம் , இலிங்கம்) ,துளசி , துர்க்காதேவி... போன்றவைகள் வீடுகளில் வைத்து வணங்குவதில்லை. காரணம் மிகவும் சுத்தபத்தமாய் இருக்க வேண்டும். எனது வீட்டில் வைத்திருக்கின்றோம் சகோதரி...!

அவனருளாலே அவன் தாள் வணங்கி...! :)

Share this post


Link to post
Share on other sites

சக்திக்கு உகந்த நவராத்திரி

BAE0BC10BAA0BCD0BAA0BC60BB00BBF0BAE0BCD0
ஆற்­றல்கள் அனைத்­தையும் அருள்­பவள் அன்னை பரா­சக்தி. சக்தி என்னும் சொல் ஆற்றல், வல்­லமை எனப் பொருள் தரு­கின்­றது. உலக இயக்கம் சக்­தியின் ஆற்­றலால் நிகழ்­கின்­றது. உலக சக்­தி­க­ளுக்­கெல்லாம் ஊற்றாய் விளங்­கு­வது சக்­தியே. பூவின் நறு­ம­ண­மா­கவும் சூரிய சந்­தி­ரரின் ஒளி­யா­கவும் நீரின் தன்­மை­யா­கவும் விளங்­கு­பவள் அன்னை பரா­சக்தி.

சக்தி வழி­பாடு மிகத்­தொன்­மை­யா­னது. இற்­றைக்கு ஐயா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட வழி­பா­டென சிந்து வெளிப் பிர­தே­சத்தில் அகழ்­வா­ராய்ச்­சி­யினை மேற்­கொண்ட சேர் ஜோன் மார்ஷல் குறிப்­பிட்­டுள்ளார். சங்க காலத் தமிழர் தம் போர்த் தெய்­வ­மாக வழி­பட்ட கொற்­றவை வழி­பாடே பிற்­கா­லத்தில் சக்தி வழி­பா­டா­யிற்று. ஆதி சங்­கரர் காலத்தில் சக்­தியை முழு முத­லாகக் கொண்டு வழி­படும் சாக்தர் காணப்­பட்­டனர். இன்று வங்­கா­ளத்­திலும் அசா­மிலும் தனிச் சக்தி வழி­பாட்­டா­ளர்கள் காணப்­ப­டு­கின்­றனர். ஆனால் சைவ மக்கள் சிவத்­தி­னின்றும் சக்­தியை வேறாகக் கொள்­ளாது சிவ­னுக்குக் கொடுக்கும் முக்­கி­யத்­து­வத்­தினை சக்­திக்கும் கொடுக்­க­லா­யினர். இத­னையே சக்தி பின்­ன­மிலான் எங்கள் பிரான் என்ற திரு­வருட் பயன்­பா­டலும் தெளிவு படுத்­து­கின்­றது.

எல்லாம் வல்ல பரம்­பொ­ருளை தந்­தை­யா­கவும் தாயா­கவும் கும­ர­னா­கவும் கொண்டு வழி­ப­டு­வது எமது சமய மரபு. அந்த வகையில் இறை­வ­னு­டைய திரு­வ­ருளைத் தாயாகக் கொண்டு வழி­ப­டு­தலே சக்தி வழி­பா­டாகும். அன்பு, தூய்மை, பொறுமை, தன்­ன­ல­மின்மை, மன்­னிக்கும் சுபாவம் என்­ப­வற்றில் சிறந்­தவள் தாய். தாயை அணுகக் குழந்தை ஒரு­போதும் தயங்­காது. அடியார் தம் குறை­களை முன்­னின்று நீக்­கு­பவள் அன்னை பரா­சக்தி.உலகில் வாழும் மக்­க­ளுக்கு சகல சம்­பத்­துக்­களும் கிடைக்கும் வண்ணம் அருள் புரி­பவள் அன்னை பரா சக்­தி­யாகும். சக்தி பல்­வேறு வடிவ பேதங்கள் கொண்டு வெவ்­வேறு தொழில்­களைப் புரிந்து ஆன்­மாக்­க­ளுக்கு நலன் புரி­பவள். அம்­பி­கையின் திரு­வு­ருவம் அரு­ளாற்­றலின் வடி­வமே. ஐந்­தொ­ழில்­களும் அவள் ஆற்­ற­லாலே நிகழ்­கின்­றன. அம்­பி­கையின் கருணை பொழியும் திரு நய­னங்­களின் நோக்­கினால் உலகில் குடும்ப நலமும் ஆட்சி நலமும் சிறப்­புற்­றோங்­கு­கின்­றன.

இன்­றைய நிலையில் சக்தி வழி­பாடு சிறப்­புற்­றுள்­ளது என்­ப­தற்கு மதுரை மீனாட்­சி­யம்மன், காசி விசா­லாட்­சி­யம்மன், காஞ்சி காமாட்­சி­யம்மன், நயினை நாக­பூ­ச­ணி­யம்மன், மாத்­தளை ஸ்ரீ முத்­து­மா­ரி­யம்மன், தெல்­லிப்­பளை துர்க்­கை­யம்மன் போன்ற ஆல­யங்கள் சான்று பகர்­கின்­றன.

அத்­துணைச் சிறப்­பு­டைய அன்னை பரா­சக்­தியின் பெருங்­க­ரு­ணையை எதிர்­பார்த்து வெள்­ளிக்­கி­ழமை விரதம் (உமா சுக்­கிர வார விரதம்) சாவித்­திரி விரதம், சுவர்ண கௌரி விரதம், கார­டையா நோன்பு, வர­லட்­சுமி விரதம், நவ­ராத்­திரி விரதம் போன்ற விர­தங்கள் விசே­ட­மாக அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றன.

சிவ­னுக்கு எவ்­வாறு சிவ­ராத்­திரி சிறப்­பா­னதோ அதே போன்று சக்­திக்கு உகந்­தது நவ­ராத்­திரி என்பர். அது மட்­டு­மன்றி சக்­திக்குப் பிரீ­தி­யா­னதும் அது­வே­யாகும். அனைத்தும் தேவி மயம் என்­ப­தையும் அன்னை எல்­லோ­ரி­டத்தும் சமத்­து­வ­மான அன்பு கொண்­டவள் என்ற உண்­மை­யையும் விளக்­கு­வது நவ­ராத்­திரி.

நவ­ராத்­தி­யா­னது வசந்த நவ­ராத்­திரி, சாரத நவ­ராத்­திரி என இரு வகைப்­படும். வசந்த காலத்தில் அனுஷ்­டிக்­கப்­ப­டு­வது வசந்த நவ­ராத்­திரி. சரத் காலத்தில் அனுஷ்­டிக்­கப்­ப­டு­வது சாரத நவ­ராத்­திரி. இதில் சாரத நவ­ராத்­திரி சிறப்­பா­னது. அதா­வது சூரியன் கன்னி ராசியில் செல்லும் மாதம் புரட்­டாதி. எனவே அது அம்­ம­னுக்கு உகந்­த­தாகக் கொண்டு சாரத நவ­ராத்­தி­ரியைப் புரட்­டாதி மாதம் வளர்­பிறை முதல் ஒன்­பது தினங்கள் முப்­பெ­ருந்­தே­வி­யரை நோக்கி விர­த­மி­ருப்பர். பத்தாம் நாள் விஜய தசமித் திரு­விழா. முதல் மூன்று இர­வு­களும் துர்க்கை வழி­பாட்­டுக்­கா­னது. அடுத்த மூன்று இர­வு­களும் இலட்­சுமி வழி­பாட்­டுக்­கா­னது.

இறுதி மூன்று இர­வு­களும் சரஸ்­வதி வழி­பாட்­டுக்­கா­னது. இந்த ஒன்­பது நாளும் சக்­தியே பலப்­பல வடி­வங்­களில் வந்து அருள் பாலிக்­கின்றாள் என்ற உண்­மையை அரு­ணந்தி சிவாச்­சா­ரி­யாரின்
''சக்­தியாய் விந்து சக்­தியாய் மனோன்­மணி தானாகி ஒத்­துறு மகே­சை­யாகி யுமை­திரு வாணி­யாகி வைத்துஞ் சிவா­திக்­கிங்ஙன் வருஞ்­சக்தி யொருத்­தி­யாகும் எத்­திறம் ஈசன் நின்றான் அத்­திறம் அவளும் நிற்பாள்'' எனும் பாடல் மெய்ப்­பித்து நிற்­பதைக் காணலாம்.

நவ­ராத்­திரி காலத்தில் முதல் 3 இர­வு­களும் மனி­த­னுக்கு வேண்­டிய ஆத்­ம­பலம் மட்­டு­மன்றி மனத் தைரி­யத்­தையும் உடல் தைரி­யத்­தையும் அளிக்­கும்­படி துர்க்கா தேவியை இரந்து நிற்பர்.பொன்னும் பொருளும் இருந்தால் தான் இவ்­வு­லக வாழ்வு இனிக்கும். அதா­வது ''பொரு­ளில்­லார்க்கு இவ்­வு­ல­கில்லை'' என்ற வள்­ளுவன் தமி­ழுக்­கேற்ப மகா­லட்­சு­மியின் அருளால் இவ்­வு­லக வாழ்வு சிறந்­தோங்க அடுத்த மூன்று இர­வு­களும் வேண்டி நிற்பர். மகா­லட்­சு­மியின் அருளால் தனம், தானியம், அன்னம், வஸ்­திரம் முத­லிய சம்­பத்­துக்கள் கிடைக்க வழி­வ­குக்­கின்­றது.
இதனைத் தொடர்ந்து வரும் இறுதி மூன்று நாட்­களும் வித்­தி­யா­தா­னத்தை அளிப்­ப­வ­ளா­கிய தர­ம­ரையில் வீற்­றி­ருக்கும் சரஸ்­வதி தேவியை கலைத்­தெய்­வ­மா­கிய கலை­வா­ணியை நாவினில் நர்த்­த­ன­மிடும் நவ­ராத்­திரி நாய­கியை எழுந்­தேற்றம் செய்து வழி­பாடு செய்யும் தினங்­க­ளாகும்.
ஆய கலைகள் அறு­பத்து நான்­கி­னையும் வழங்­கு­பவள் கலை­வாணி. கல்வி கற்­ப­தற்குத் தூய்­மை­யான உள்ளம் வேண்டும் என்­பதைச் சுட்­டு­கின்­றது சரஸ்­வதி தேவியின் வெண்­தா­ம­ரையும் வெள்ளை ஆடையும். கல்வி வேள்­வி­களில் சிறந்து விளங்க கல்வித் தெய்­வத்தின் பூர­ண­மான அருட்­க­டாட்­சத்தைப் பெற வேண்டும். எனவே இந் நவ­ராத்­திரி காலங்­களில் லலிதா சகஸ்ர நாமம்,
சக­ல­க­லா­வல்லி மாலை, அபி­ராமி அந்­தாதி, மீனாட்­சி­யம்மை பிள்­ளைத்­தமிழ் ஆகிய சரஸ்­வதி தோத்­தி­ரங்­களைப் பாரா­யணம் செய்தல் வேண்டும்.

இவ்­வொன்­பது தினங்­களில் இறுதி மூன்று தினங்­க­ளுமே கலை­யம்­சத்திற் சிறந்­தவை. ஒன்­பதாம் நாள் மஹா நவமி எனப்­படும். இவ்­வி­ரவு ஆயுத பூசை நிகழும். இது செய்யும் தொழிலே தெய்வம் என்னும் தத்­து­வத்தை உணர்த்தி நிற்­கின்­றது. அதா­வது ஒவ்­வொ­ரு­வரும் தத்­த­மது தொழி­லுக்குப் பயன்­படும் உப­க­ர­ணங்­களைப் பூசையில் வைத்து வழி­பாடு செய்து சக்­தியின் அருளைப் பெறு­வ­தையே ஆயுத பூசை குறிக்­கின்­றது. ஏட்டுப் படிப்­புக்கு மட்­டு­மன்றி உழவுத் தொழில், கைத்­தொழில் அனைத்­துக்கும் அருள் பாலிப்­பவள் கலை­மகள். இத­னையே கவி­மணி தேசிக விநா­யகம் பிள்ளை.......
'' நாடிப் புலங்கள் உழுவார் கரமும் நய­வு­ரைகள்
தேடிக்­கொ­ழிக்கும் கவி­வாணர் நாவும் செழுங் கருணை
ஓடிப் பெருகும் அறி­வாளர் நெஞ்சும் உவந்து நடம்
ஆடிக் களிக்கும் மயிலே உன்­பாதம் அடைக்­க­லமே''
என்று பாடி­யுள்ளார்.

நவ­ராத்­தி­ரியை அடுத்து வரும் பத்தாம் நாள் விஜ­ய­த­ச­மி­யாகும். இந்­தி­யாவில் விஜ­ய­த­ச­மி­யையும் சேர்த்து நவ­ராத்­திரி விழாவை ''தசரா விழா'' என்றே குறிப்­பி­டு­கின்­றனர்.
விஜய தசமி அன்று ஏடு தொடக்­குதல், வித்­தி­யா­ரம்பம், (அட்­ச­ராப்­பி­யாசம்) புதிய தொழில்­களைத் தொடங்­குதல் என்­பன நடை­பெறும். பண்­டைய காலங்­களில் விஜ­ய­த­சமி அன்று மன்­னர்கள், கவி­ஞர்கள், கல்வி மான்கள், வித்­து­வான்கள் முத­லி­யோரை அழைத்துக் கௌர­விப்பர். அத்­துடன் நாட்­டிய நிகழ்ச்சி, மல்­யுத்தம், வான வேடிக்கை, இர­தங்­க­ளி­னதும் குதி­ரை­க­ளி­னதும் அணி வகுப்பு என்­ப­வற்­றையும் மிகவும் கோலா­க­ல­மாகச் செய்­வது வழக்கம். விஜ­ய­ந­கர மன்­னரும் மைசூர் மன்­னரும் விஜ­ய­த­ச­மியை மிகவும் விமர்­சை­யாக கொண்­டா­டினர் என்­பது வர­லாறு கூறும் உண்­மை­யாகும்.

மேலும் விஜ­ய­த­ச­மி­யன்று ஆல­யங்­களில் மகி­டா­சுர சங்­காரம் அல்­லது மானம்புத் திரு­விழா நடை­பெறும். அதா­வது தேவர்­க­ளுக்கும் மனி­த­ருக்கும் இன்­னல்­களை விளை­வித்த காட்­டெ­ருமை வடி­வி­லான மகி­டா­சுரன் என்னும் அசு­ரனை அன்னை பரா­சக்தி சங்­காரம் செய்து மகிழ்ச்­சியைக் கொடுத்த தினம் விஜ­ய­த­ச­மி­யாகும்.

எனவே அந்தப் பாவ­னையில் இந்து ஆல­யங்­களில் இது நிகழ்த்­தப்­ப­டு­கின்­றது எனலாம். இச் சம்­பவம் உண்­மையில் ஆன்­மாக்­களைப் பீடித்துக் கொழுத்து வரும் ஆணவ மலம், அறி­யாமை, மிரு­கத்­தன்மை ஆகி­ய­வற்றை ஒன்­பது தினங்­களும் தேவியைப் பூஜித்துப் பெற்ற அரு­ளினால் அழித்­தொ­ழிப்­ப­தையே உணர்த்­து­கின்­றது என்றால் மிகை­யா­காது.

நவராத்திரி விரத நாட்களில் முதல் எட்டுத்தினங்களும் பகலில் உணவை விடுத்து இரவுப் பூசையின் பின்னர் பால் பழம் உண்டு ஒன்பதாம் நாள் உபவாசம் இருந்து பத்தாம் நாட் காலை பாறணை செய்து அனுட்டிக்கப்பட வேண்டும் எனத் தேவி பாகவதம் என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.வருடா வருடம் புரட்டாதி மாதத்தில் வரும் இந் நவராத்திரியானது இவ்வாண்டு இன்று புதன்கிழமை ஆரம்பமாகி 03.10.2014 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவு பெறவுள்ளது.இந்துப் பெருமக்கள் அனைவரும் ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவியடங்க காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கைச் சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுது - அன்னையின் அருளைப் பெறுவோம்.

 

 

http://www.virakesari.lk/articles/2014/09/24/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

https://www.facebook.com/video/video.php?v=1649057669600

சகலகலா வல்லி மாலை

பாடல் 1

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்

தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்

துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்

கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.

பாடல் 2

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்

பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்

கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன்றும் ஐம்பால்

காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே

பாடல் 3

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்

குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்

தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு

களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே!

பாடல் 4

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்

வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்

தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று

காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!

பாடல் 5

பஞ்சு அப்பு இதம் தரும் செய்ய பொற் பாத பங்கேருகம் என்

நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து

அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்

கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய் சகலகலாவல்லியே

பாடல் 6

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்

எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் எழுதா மறையும்

விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்

கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே

பாடல் 7

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்

கூட்டும் படி நின் கடைக்கண் நல்காய் உளம் கொண்டு தொண்டர்

தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்

காட்டும் வெள் ஓதிமப் பேடே சகலகலாவல்லியே!

பாடல் 8

சொல்விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல

நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம் சேர்

செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்

கல்விப் பெரும் செல்வப் பேறே சகலகலாவல்லியே

பாடல் 9

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன

நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலம்தோய் புழைக்கை

நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை

கற்கும் பதாம்புயத்தாயே சகலகலாவல்லியே

பாடல் 10

மண்கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்

பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்

விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்

கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!

 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

மிகவும் அருமையான பாடல். 

என்னக்கு என்ன வருகிறது எது போகிறது என்பதே தெரியவில்லை .............. சரஸ்வதி பூஜை முடிந்து விட்டதா ?

Share this post


Link to post
Share on other sites

மிகவும் அருமையான பாடல். 

என்னக்கு என்ன வருகிறது எது போகிறது என்பதே தெரியவில்லை .............. சரஸ்வதி பூஜை முடிந்து விட்டதா ?

 

கடைசி பந்திக்கு வந்துருக்கிறியள்......எல்லாம் முடிஞ்சுது....நாவல்பழம் மட்டும் மிஞ்சிட்டுது....

 

novel_fruit_001-300x160.jpg

 

வெட்கத்தை பாராமல் வாயிலை எடுத்து போடுங்கோ......நத்தார் பண்டிகைக்கு தென்பாய் குத்தியாட்டம் போடோணுமெல்லே...

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

கடைசி பந்திக்கு வந்துருக்கிறியள்......எல்லாம் முடிஞ்சுது....நாவல்பழம் மட்டும் மிஞ்சிட்டுது....

 

novel_fruit_001-300x160.jpg

 

வெட்கத்தை பாராமல் வாயிலை எடுத்து போடுங்கோ......நத்தார் பண்டிகைக்கு தென்பாய் குத்தியாட்டம் போடோணுமெல்லே...

 

என் வயித்தெரிச்சலை கிளப்புகின்றா ஆட்களில் நீங்களும் ஒருவர்.

 

எங்கள் ஊரில் பல நாவல் மரங்கள் நின்றன, மரத்தில் ஏறி அப்படியே அதிலிருந்து பறித்து சாப்பிட்டுவிட்டு நண்பர்களுடன் விளையாடுவது எல்லாம் இனி எப்பவோ?

 

ஒவ்வொரு மர பழுங்களும் வேறு வேறான சுவைகள். சின்னில் பள்ளிகூட காச்சடைக்குள் பழங்களை பறித்து பொக்கடுக்குள் போட்டு வீடுவரை சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்குள் வர நல்ல பூசைவிழும் கறைகளை பார்த்து, அதுகனாக்காலம்.

Share this post


Link to post
Share on other sites

கடைசி பந்திக்கு வந்துருக்கிறியள்......எல்லாம் முடிஞ்சுது....நாவல்பழம் மட்டும் மிஞ்சிட்டுது....

 

novel_fruit_001-300x160.jpg

 

வெட்கத்தை பாராமல் வாயிலை எடுத்து போடுங்கோ......நத்தார் பண்டிகைக்கு தென்பாய் குத்தியாட்டம் போடோணுமெல்லே...

என்ன முடிஞ்சால் என்ன ............... நாவல் பலம் இருந்தால் போதும். விடுமுறையில் கூட நாடு போகும் எண்ணம் இல்லை. அதனால் கிடைக்காமல் போவதில் இதுவும் ஒன்று ..... ஈச்சம் பழம்  நாவல் பழத்திற்கு இணையாக ஏதும் இல்லை .

என் வயித்தெரிச்சலை கிளப்புகின்றா ஆட்களில் நீங்களும் ஒருவர்.

 

எங்கள் ஊரில் பல நாவல் மரங்கள் நின்றன, மரத்தில் ஏறி அப்படியே அதிலிருந்து பறித்து சாப்பிட்டுவிட்டு நண்பர்களுடன் விளையாடுவது எல்லாம் இனி எப்பவோ?

 

ஒவ்வொரு மர பழுங்களும் வேறு வேறான சுவைகள். சின்னில் பள்ளிகூட காச்சடைக்குள் பழங்களை பறித்து பொக்கடுக்குள் போட்டு வீடுவரை சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்குள் வர நல்ல பூசைவிழும் கறைகளை பார்த்து, அதுகனாக்காலம்.

எந்த மரம் புளிக்கும் எது இனிக்கும் என்று எல்லாம் அத்துபடியாக தெரிந்திருப்பதால் புளி  மரங்களில் நின்று நேரம் செலவிடுவதில்லை. நேரா இனிப்பான மரத்தில் போய்  ஏறி இருப்பதுதான். அருமையான நாட்கள் 

Share this post


Link to post
Share on other sites

என்ன முடிஞ்சால் என்ன ............... நாவல் பலம் இருந்தால் போதும். விடுமுறையில் கூட நாடு போகும் எண்ணம் இல்லை. அதனால் கிடைக்காமல் போவதில் இதுவும் ஒன்று ..... ஈச்சம் பழம்  நாவல் பழத்திற்கு இணையாக ஏதும் இல்லை .

எந்த மரம் புளிக்கும் எது இனிக்கும் என்று எல்லாம் அத்துபடியாக தெரிந்திருப்பதால் புளி  மரங்களில் நின்று நேரம் செலவிடுவதில்லை. நேரா இனிப்பான மரத்தில் போய்  ஏறி இருப்பதுதான். அருமையான நாட்கள் 

 

 

முன்னோர்களுக்கு நன்றிகள்.... :lol:  :D

Share this post


Link to post
Share on other sites

 

எந்த மரம் புளிக்கும் எது இனிக்கும் என்று எல்லாம் அத்துபடியாக தெரிந்திருப்பதால் புளி  மரங்களில் நின்று நேரம் செலவிடுவதில்லை. நேரா இனிப்பான மரத்தில் போய்  ஏறி இருப்பதுதான். அருமையான நாட்கள் 

 

எமக்குப்   பிடிக்காதவர்களுக்குச் சுட்ட பழம் பிடித்தவர்களுக்குச்  சுடாத பழம்

நாவல் மரத்தின் நாயகர்களே நாங்கள் தானே :D

Share this post


Link to post
Share on other sites

நவராத்திரியில் என்ன செய்ய வேண்டும் | நவராத்திரி பூஜை செய்யும் முறை....

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this