Jump to content

வீடில்லா புத்தகங்கள்


Recommended Posts

வீடில்லாப் புத்தகங்கள் 45: எரியும் பசி!

pasi_2508416f.jpg

போரில் உயிரை விடுவது மட்டு மில்லை வீரம்; தேசத்துக்காக மனசாட்சியோடு நடந்து கொள்வதும், அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்து குரல் கொடுப்பதும்கூட வீரமே. பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் இதனை நினைவூட்டுகின்றன.

இரண்டாம் உலகப் போரின் விளைவு கள் குறித்து நிறையப் புத்தகங்கள் எழுதப் பட்டுள்ளன. அதில் பெரும்பான்மை யானது யூதர்களின் இனஅழிப்பு, நாஜி ராணுவத்தின் கொடுஞ்செயல்கள், உயிர் தப்பியவர்களின் நினைவலைகள் என எழுதப்பட்டவை.

ரஷ்யாவின் செஞ்சேனை எப்படி நாஜிப் படைகளை எதிர்த்துப் போரிட் டது என்பது குறித்து ரஷ்ய இலக்கியத் தில் நிறையப் படைப்புகள் வெளி வந்துள்ளன.

அந்த வரிசையில் வெளியாகியுள்ள புதிய நாவல் ‘எலிஸ் பிளாக்வெல்’ (Elise Blackwell) எழுதிய பசி. இந்தக் குறுநாவல் மிக முக்கிய வரலாற்று நிகழ்வான லெனின்கிராடு முற்றுகையின்போது உயிர் வாழ்வதற்காக மக்கள் எப்படி பசியோடு போராடினார்கள் என்பதை உணர்வுபூர்வமாக விவரிக்கிறது.

இந்நாவலின் இன்னொரு சிறப்பு லெனின்கிராடில் இயங்கி வந்த விதை கள் ஆய்வு மையத்தில் இருந்த 2 லட் சத்துக்கும் மேற்பட்ட அரிய விதைகளின் சேகரத்தை நாஜி ராணுவத்திடம் இருந்து பாதுகாக்க, இளம் விஞ்ஞானிகள் எப்படி செயல்பட்டார்கள்? மக்கள் அதற்கு எப்படி ஒத்துழைத்தார்கள் என்ற வரலாற்று உண்மையாகும்.

133 பக்கம் உள்ள இந்நூலை சிறப் பாக தமிழாக்கம் செய்திருப்பவர் ச.சுப்பாராவ். பாரதி புத்தகாலயம் இதனை வெளியிட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரின்போது ரஷ்யாவின் லெனின்கிராடு நகரம் ஜெர்மானிய ராணுவத்தால் முற்றுகை யிடப்பட்டது. 1941 செப்டம்பர் 8-ம் தேதி தொடங்கிய இந்த முற்றுகை 872 நாட்கள் தொடர்ந்து 1944 ஜனவரி 27 விலக்கப்பட்டது.

30 லட்சம் மக்கள் வசித்த லெனின் கிராடு நகரம் ராணுவ முற்றுகையின் காரணமாக முற்றிலும் ஒடுங்கிப்போனது. உணவு, உடை, எரிபொருள் என அடிப்படை தேவைகள் எதுவும் கிடைக்கவில்லை.

தாங்க முடியாத கடும் குளிரில், பசியில், எரிபொருள் இன்றி, உணவு இன்றி, குடிநீர் கிடைக்காமல் மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந் தார்கள். இரண்டரை ஆண்டு காலத்துக் குள் 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துபோனதாக கூறுகிறது ஓர் ஆய்வு.

ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு 125 கிராம் ரொட்டி ரேஷனில் வழங்கப்பட்டது. அதுவும் பல நாட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்தார்கள். இன்னொரு பக்கம் இடைவிடாத நாஜிக்களின் தொடர்ந்த குண்டுவீச்சும் செஞ்சேனையின் பதில் தாக்குதலும் நடந்து வந்தன. லெனின்கிராடு நகரம் கடுமையான நெருக்கடிக்குள்ளும் வீழ்ந்துவிடாமல் எப்படி இறுதிவரை போராடியது என்ற வீரவரலாற்றை நினைவுகூர்கிறார் எலிஸ் பிளாக்வெல்.

நாவலின் கதையைச் சொல்பவர் ஒரு விஞ்ஞானி. அவர் லெனின்கிராடு முற்றுகையின்போது விதைகள் ஆய்வு மையத்தில் வேலை செய்தவர். தற்போது நியூயார்க் நகரில் வசித்துவருகிறார். அவரது நினைவுகளின் வழியாகவும் அலெனாவின் அனுபவங்கள் வழியாக வும் நாவல் விவரிக்கப்படுகிறது.

உலகின் முதல் விதை சேமிப்பு வங்கி 1894-ல் ரஷ்யாவில் தொடங்கப்பட்டது. உலகெங்கும் தேடி அரிய வகை விதைகள் இங்கே சேமிக்கப்பட்டன. இந்த மையத்தின் இயக்குநராக செயல் பட்டவர் புகழ்பெற்ற உயிரியியலாளர் நிகோலாய் வாவிலோவ்.

இவர் 1920 முதல் 30 வரை 10 ஆண்டு கள் 65 நாடுகளில் சுற்றியலைந்து, அரிய விதைகளை எல்லாம் சேகரித்துவந்து மரபணு பரிசோதனைகளை மேற் கொண்டு வந்தார். இந்தப் பயணத்தில் இந்தியாவுக்கும் வந்து கோதுமை வகை களைச் சேகரித்துச் சென்றுள்ளார் வாவிலோவ்.

ஸ்டாலின் காலத்தில் விவசாயத்துறை யைத் தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த லைசென்கோவின் தூண்டுதல் காரணமாக, தேசத் துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்டு வாவிலோவ் கைது செய்யப் பட்டார். சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட வாவிலோவ் பட்டினிக் கொடுமை தாங்கமுடியாமல் இறந்துபோனார். அவரது உடல் சிறையிலேயே புதைக்கப்பட்டது.

அவரோடு வேலை பார்த்த பல இளம் விஞ்ஞானிகளும் ஊழியர்களும் கைது செய்யப்பட்டார்கள். சிலர் நாடு கடத்தப்பட்டார்கள். ஒருசிலர் கூட்டுப்பண்ணை வேலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். எஞ்சிய வர்கள் வாவிலோவின் விதை சேகரிப்பு களைக் காப்பாற்றப் போராடினார்கள். அந்தத் துயரம் தோய்ந்த நாட்களைத்தான் எலிஸ் தனது நாவலில் விவரிக்கிறார்.

பாபிலோனியர்கள் மருத்துவ மூலிகைகளையும் அபூர்வமான பழங் களையும் சேகரிக்க உலகம் முழுவதும் பயணித்ததை விவரிக்கிறார் கதை சொல்லி. உலகின் முதல் தாவரவியல் தோட்டத்தை உருவாக்கியது பாபிலோனி யர்களே. அவர்களின் விவசாயமுறை பொறாமைப்பட வைப்பதாகும்.

பாபிலோனியர் உணவில் பார்லிதான் முக்கிய தானியம். பார்லி மூட்டைகளை வைத்து எதை வேண்டுமானாலும் வாங்கலாம். அப்போது வெள்ளியை விடவும் பார்லிக்கு விலை அதிகம் இருந்தது. தாங்களும் பாபிலோனியர்கள் போலவே உலகெங்கும் தேடி விதைகளை சேகரித்து வருபவர்களே என்கிறார் கதை சொல்லி. இதுபோலவே பசி, பட்டினி காரணமாக லெனின்கிராடு எப்படி அவதிப்பட்டது என்பதை ஆவணப்படக் காட்சி போல எலிஸ் பிளாக்வெல் விவரிக்கிறார்:

ஜெர்மனிய குண்டுவீச்சுக்கு நடுவே தாவரவியலாளர்கள் நகரைப் பாதுகாப் பத்தில் களமிறங்கினர். பட்டினியை சமா ளிக்க உண்ணத் தகுந்த காளான்களை உற்பத்தி செய்தார்கள். கரிப் பாசி யில் இருந்து ஆன்டிசெப்டிக் மருந்து தயாரிக்கும் முறையைக் கண்டு பிடித்தார்கள்.

‘ஒரு துண்டு ரொட்டிக்கு மாற்றாக ஒரு பியானோவை பெறலாம்’ என ஒரு கடையில் அறிவிப்புப் பலகைக்கூட தொங்கியது. இன்னோர் இடத்தில் மக்கள் எரிபொருள் இல்லாமல் புத்தகங் கள், துண்டுபிரசுரங்களை எரித்து குளிர்காய ஆரம்பித்தார்கள். புத்திசாலிக் குழந்தை பிழைத்துக் கொள்ளட்டும் என மக்கு குழந்தையைப் பட்டினி போட்டாள் ஒரு தாய்.

ஒரு ரேஷன் அட்டைக்காக சொந்த சகோதரனை வெட்டி கொலை செய்தான் ஒருவன். மனிதர்களின் கை எட்டும் உயரத்தில் எந்த மரத் திலும் மரப் பட்டைகள் இல்லை. எல் லாம் உரிக்கப்பட்டு காய்ச்சி குடிக்கப் பட்டிருந்தது.

நாய், பூனை, காக்கை, எலி, பெருச் சாளி என்று எல்லா உயிரினங்களும் உண்ணப்பட்டன. தோல் ஆடைகள், பெல்ட்டுகள், தோல் காலுறைகள் போன்ற வற்றைக் கொண்டு சூப் தயாரித்துக் குடித்தார்கள். ஒரு துண்டு ரொட்டிக்காக பெண்கள் உடலை விற்பதும், பல நாட் களாக குழந்தைகளுக்கு உணவு கிடைக்க வில்லை என்பதற்காக அவர்களைக் கொன்று புதைப்பதும் சாதாரணமாக நடந்தேறியன.

இப்படி எல்லாம் உயிருக்குப் போரா டியச் சூழலில் கூட லெனின்கிராடு வாசிகள் விதைகள் ஆராய்ச்சி மையத் தில் இருந்த தானியங்களைத் திருட வில்லை. அவை தேசிய சொத்து. அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாக்க படும் இயற்கை செல்வம் என்பதை உணர்ந்திருந்தார்கள். ஆகவே விதை களைக் காப்பாற்ற போராடினார்கள்.

1942 நவம்பரில் தாங்க முடியாத கடுங் குளிர் அடித்தது. அப்போது குளிராலும் பட்டினியாலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துபோனார்கள். அவர்களை மொத்தமாக புதைக்க சறுக்கு வண்டியில் கொண்டுபோய் கல்லறையில் குவித்தார்கள். பள்ளம் தோண்ட ஆள் கிடைக்காமல் டைனமெட் வெடி உபயோகிக்கப்பட்டது. அந்தக் குழிகளுக்குள் உடல்களை அள்ளி போட்டு மூடினார்கள். நகரமே ஒரு பெரிய இடுகாடு போல உருமாறியிருந்தது என போரின் கொடுமையை நெகிழ்ச்சியோடு விவரிக்கிறார் எலிஸ்.

தன் உயிரை இழந்து அரிய விதைகளைக் காப்பாற்றிய ரஷ்ய இளம் விஞ்ஞானிகளின் கதை, பராம்பரிய விதைகள் களவு போய்க் கொண்டிருக்கும் இந்தியச் சூழலுக்கு ஓர் எச்சரிக்கை மணி போலவே ஒலிக்கிறது.

http://tamil.thehindu.com/general/literature/வீடில்லாப்-புத்தகங்கள்-45-எரியும்-பசி/article7534227.ece?ref=relatedNews

 

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

வீடில்லாப் புத்தகங்கள் 46: உருமாறும் கிராமங்கள்!

sra___2516954f.jpg

கிராமம் என்றாலே வறுமையான, படிக்காத, நாகரிகமற்ற மனிதர்கள் வாழுமிடம் என்றொரு பிம்பம் உள்ளது. இன்னொரு பக்கம் கிராமம் என்பது பசுமையான, எளிமையான, சூது வாது தெரியாத அற்புதமான மனிதர்கள் வாழுமிடம் என்ற பிம்பமும் நம்மிடம் இருக்கிறது. இந்த எதிர் எதிரான இரண்டு பிம்பங்களும் மனதில் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன. உண்மை யில் இவை இரண்டும் உருவாக்கப்பட்டு கட்டமைக்கபட்ட பிம்பங்களே.

இன்று கிராமத்தின் இயல்பும், வாழ்க்கை முறையும், பொருளாதார நிலையும் மாறியுள்ளது. பைக், டிராக்டர், செல்போன், இணையம், பேஸ்புக், கிரிக்கெட், நூடுல்ஸ், வீடியோ கேம் என சகலமும் கிராமத்துக்குள் வந்துவிட்டன. கிராமம் தன்னுடைய இயல்பான அடையாளத்தை உதறி, புதிய தோற்றம் கொண்டுவிட்டது. ஆனாலும் சாதியும் ஒடுக்குமுறையும் கிராமத்தைவிட்டு இன்னமும் விலகவே இல்லை.

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் 150 வருஷங்களுக்கு முன்பு எப்படி இருந்தது என்பது குறித்து, தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை ‘ஒரு இந்திய கிராமத்தின் கதை’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதப் பட்ட இந்த நூலை சரவணன் மொழி யாக்கம் செய்திருக்கிறார். சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

வட்டிக்கு விடுபவர், வைத்தியர், வாத்தியார், ஆசாரி, மாடு மேய்ப்பவர், விவசாயி என பல்வேறு மனிதர்கள் குறித்தும்; அவர்களின் வாழ்க்கைமுறை பற்றியும் இதில் ராமகிருஷ்ண பிள்ளை விவரித்திருக்கிறார். அத்தோடு கிராமத் துக்கு வரும் பாம்பாட்டி செய்யும் அற் புதங்கள், குறத்தியின் வருகை, குறி சொல் பவர்களின் வருகை, கிராமத்தில் நடை பெறுகிற கூத்து பற்றியெல்லாம் சுவா ரஸ்யமானத் தகவல்களைத் தருகிறார்.

மகாபாரத கதையை தமிழில் எழுதிய நல்லாப்பிள்ளையின் கொள்ளுப்பேரன் தான் இந்த தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை. ஆகவே, அவரது குடும்பத்தில் ஆயுதபூஜையையொட்டி, எப்படி பாரத ஏடுகளுக்கு பூஜை செய்து பாடுவார்கள் என்பதையும், பாரதம் படிக்கும் பழக்கம் எப்படி கிராமத்தில் வேரூன்றியிருந்தது என்பதையும் விவரித்துள்ளார்.

100 வருஷங்களுக்கு முந்தைய கிராம வாழ்க்கையை ‘ஒரு இந்திய கிராமத்தின் கதை’ விவரிக்கிறது என்றால், 50 வருஷங்களுக்கு முந்தைய தென்தமிழக கிராமம் ஒன்றின் வாழ்க் கையை விவரிக்கிறது ந.முருகேச பாண்டியன் எழுதிய ‘கிராமத்து தெருக்களின் வழியே’ என்ற புத்தகம்.

உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தில், முருகேச பாண்டி யன் தனது சொந்த ஊரான சமயநல்லூர் கடந்த 50 ஆண்டுகளில் அடைந்துள்ள அரசியல், பொருளாதார, பண்பாட்டு மாற்றங்கள் குறித்து விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

கடந்த காலம் என்பது மொழியின் வழியே நினைவுகளாக எல்லோருக் குள்ளும் பதிவாகியுள்ளது. மொழி என்பது முன்னர் எப்போதோ நடைபெற்ற சம்பங்கள் அல்லது அனுபவங்களின் நினைவாக இருப்பதனால்தான் ‘வர லாறு' சாத்தியப்படுகிறது. இன்று நம் கண் முன்னால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் யாவும் வரலாற்றின் தொடர்ச்சிகள். ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் மன அடுக்குகளில் பதிவாகியுள்ள அனு பவங்கள் ஏராளம். கொண்டாட்டங் களுக்கும் துயரங்களுக்கும் காரணமான மனம், காலப்போக்கில் சிலவற்றை மறந்துவிடுகிறது. சிலவற்றை விடாப் பிடியாகத் தக்க வைத்துக் கொள்கிறது என தனது முன்னுரையில் இந்நூலை எழுதிய காரணத்தைச் சொல்கிறார் முருகேச பாண்டியன்.

கிராமத்தின் 50 ஆண்டுகாலச் சாட்சியாக தன்னை உணரும் முருகேச பாண்டியன், ‘‘கிராமத்தில் சாதி, மதம், தொழில் என ஒவ்வொருவரின் அடையாளமும் எல்லையும் வரையறுக் கப்பட்டுள்ளது. உண்மையில் கிராமம் என்பது கண்காணிப்புக்கு உட்பட்ட இறுக்கமான அமைப்பு’’ என்கிறார்

‘பேய்களும் முனிகளும் உறைந் திடும் கிராமத்துவெளிகள்’ என்ற அத்தி யாயத்தில் கிராமத்தில் பேய் குறித்த பயம் எப்படி ஏற்படுகிறது? எதனால் பேயை நம்புகிறார்கள் என அதன் உள வியல், சமூகக் காரணங்களை ஆராய்கிறார்.

மனிதனின் அடிப்படை உணர்ச்சியான பயத்துக்கும், பேய் நம்பிக்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நீலி, பேய்ச்சி, முனியப்பன், காடமர் செல்வி எனப் பேய்களுக்குத் தமிழர்கள் சூட்டிய பெயர்கள் ஏராளம்.

தற்கொலை, அல்லது விபத்தில் அகால மரணம் அடைந்த மனித உயிர்கள் பேய்களாக உலாவும் என்பது கிராமத்தில் வலுவான நம்பிக்கையாக இருந்தது. முனிகள் என்பவை கொஞ்சம் நல்லது செய்பவை. ஆனால் அவை கோபம் மிக்கவை. உச்சிவேளைகளில் அல்லது நள்ளிரவுகளில் முனி உலா வரும்போது மனிதர்கள் எதிரில் வந்தால் அடித்துப் போட்டுவிடும் என்ற பயம் மக்களிடையே இருந்தது.

சிறுவர்களிடம் பேய் குறித்த பயத்தைப் பெரியவர்களின் பேச்சுகளே தூண்டிவிட்டன. இன்று அறிவியல் வளர்ச்சியின் காரணமாக மின்சாரம் வந்தபிறகு பேய்கள் இல்லை என மனம் நம்பியபோதும், இருட்டில் தனியே நடக்கும்போது பேய் பயம் விலகவில்லை என்பதுதான் உண்மை எனக் கூறுகிறார் முருகேச பாண்டியன்.

இது போலவே கிராமத்துக்கு வரும் மணியாட்டிகள் பற்றிய அவரது நினைவுக்குறிப்பு மிக முக்கியமானது.

அறுவடை நேரம் கிராமத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உட்கார நேரம் இருக்காது. அந்த மாதத்தில் மணியாட்டிக்காரர்கள் ஊருக்குள் நுழைவார்கள். அவர்களுக்கு நாழிக்காரர் என்று இன்னொரு பெயர் இருந்தது. வெள்ளையிலான நீள அங்கியை உடலில் அணிந்திருப்பார்கள். தலையில் வெள்ளைத் தலைப்பாகை. அதில் பித்தளைப் பிறை இருக்கும். பிறையின் நடுவில் மயிலிறகு செருகப்பட்டிருக்கும். வெண்கலத்தினால் ஆன பெரிய மணியை வைத்திருப்பார்கள். தோளில் நெல் வாங்குவதற்கு பெரிய பையைக் கோர்த்திருப்பார்கள். இன்னொரு கையில் கம்பு இருக்கும்.

இடது கையில் வைத்திருக்கும் மணியை ஆட்டிக்கொண்டே வீடு வீடாகப் போவார்கள். வீட்டு வாசலில் நின்று மணியை ஆட்டியவாறு பாடத் தொடங்குவார்கள். அந்தப் பாடல் வாழ்த்துவது போலிருக்கும். ‘‘பொலி பெருக… பட்டி பெருக… களம் பொலிக…’’ என்று வாழ்த்துவார்கள். இதனால் கேட்பவர்களுக்கு மன நிறைவு ஏற்படும்.

நெல் கொண்டுவந்தால் நாழி அளவு நெல் பிடிக்கும் மணியைக் கவிழ்த்துப் பிடித்து இரு தடவைகள் நெல்லை வாங்கிக்கொள்வார்கள். நெல் அல்லது பணம் வாங்கிய வீட்டுச் சுவரில் காவிக் கட்டியினால் ஏதோ கிறுக்கிவிட்டுப் போவார்கள்.

இந்தப் புத்தகத்தின் மிகச்சிறப்பான கட்டுரை கிராமத்தில் இருந்த சிறார் விளையாட்டுகள், நினைவில் இருந்து அதைத் துல்லியமாக ந.முருகேச பாண்டியன் விவரிக்கும் விதம் ஆச்சர்யமூட்டுகிறது.

வானத்தில் கொக்கு பறக்கும்போது கூடவே கைகளை உயர்த்திக்கொண்டு ‘கொக்கு பூ போடும்…’ என நம்பி “கொக்கு பற பற” என கத்திக் கொண்டு ஒடும் சிறார்களைப் பற்றி வாசிக்கும்போது நாமும் கொக்கின் பின்னால் ஓடுகிறோம்.

கிராமத்துக்கு வருகை தரும் குடுகுடுப்பைக்காரர், பூம் பூம் மாட்டுக் காரர், பந்தயம் கட்டி இரவு பகலாக சைக்கிள் ஒட்டும் சாகசகாரர் என கிராமத்துக்குள் வந்து போன மனிதர் களையும் மறக்காமல் பதிவு செய்திருக் கிறார்.

180 பக்கங்களுக்குள் ஒரு கிராமத்தின் 50 ஆண்டுகால மாற்றங்களை ஆவணப்படம் போல காட்சிப்படுத்திக் காட்டியுள்ளார் ந.முருகேச பாண்டியன். அவ்வகையில் இதை ஒரு முக்கிய சமூக ஆவணமாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

http://tamil.thehindu.com/general/literature/வீடில்லாப்-புத்தகங்கள்-46-உருமாறும்-கிராமங்கள்/article7560939.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

வீடில்லாப் புத்தகங்கள் 47: எண்ணியல் நாயகன்!

book_2525340f.jpg

எனது வீட்டின் அருகில் உள்ள சாலை யில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை ஒன்றை கண்டேன். 10 ரூபாய், 20 ரூபாய் தொடங்கி 200 ரூபாய் வரையில் விதவிதமான பொருட்கள்.

யார் எத்தனை பொருட்கள் எடுத்தா லும் நிமிஷத்துக்குள் கணக்குக் கூட்டித் தொகையைச் சொல்லிக் கொண்டிருந் தார் கடைக்காரப் பெண்மணி.

ஒரு தாயும் பள்ளி யூனிஃபார்ம் அணிந்த மகளும் பிளாஸ்டிக் தட்டுகள், வாட்டர் பாட்டில் என ஐந்தாறு பொருட் களை எடுத்துக்கொண்டு விலை கேட்டார்கள். 170 ரூபாய் என அந்தப் பெண்மணி சொல்லி முடித்தவுடன், கணக்கு சரிதானா என தன் மகளிடம் பார்க்க சொன்னார் அம்மா.

உடனே அந்தச் சிறுமி ‘‘கால்குலேட்டர் கொண்டுவரவில்லையே’’ என்றாள்.

‘‘சின்ன கணக்குதானே, இதுக்குக் கூடவா கால்குலேட்டர் வேணும்?’’ என அம்மா திட்டியதும், ‘‘உன் செல்போனைக் கொடு’’ என்று வாங்கி அதில் இருந்த கால் குலேட்டரைப் பயன்படுத்தி கணக்குப் போட்டுத் தொகையை சொன்னார் மகள்.

அம்மா 500 ரூபாயை எடுத்து நீட்டிய தும் கடைக்காரப் பெண் சிரித்தபடியே, ‘‘இதில் 170 போனால் மீதி எவ்வளவு?’’ என அந்தச் சிறுமியிடம் கேட்டார். அதற்கும் சிறுமி கால்குலேட்டரை அமுக்கினாள்.

மீதிப் பணத்தை நீட்டியபடியே கடைக் காரப் பெண்மணி ‘‘கணக்கை மனசுல போடணும். இப்படி செல்போன்ல போடக்கூடாது’’ என்றார்.

அவர் சொன்னது உண்மை. முன்பெல் லாம் பலசரக்குக் கடையில் இருந்து பெரிய ஜவுளிக் கடை வரைக்கும் துல்லிய மாக கணக்குப் போடுகிற கணக்காளர்கள் இருந்தார்கள். நிமிஷத்தில் கூட்டி, கழித்து பதில் சொல்லிவிடுவார்கள். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் ஒரு ரூபாய் கூடுதல், குறைவு வரவே வராது.

இப்போதெல்லாம் ஆண்டுக்கு ஆண்டு கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குகிற மாணவர் கள் கூடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், மனக்கணக்குப் போடும் திறன் குறைந்துகொண்டே வருகிறது.

‘‘இந்தியர்களுக்கு இயல்பிலேயே கணிதமூளை. அவர்களால் எவ்வளவு சிக்கலான கணக்கையும் எளிதாகப் போட்டுவிட முடியும்’’ என்கிறார் கணித அறிஞர் மார்விக். ராமானுஜத்தின் சாதனைகளை உலகமே கொண்டாடு கிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் ஞானராஜசேகரன் ‘ராமா னுஜம்’ என்ற சிறந்த படமாக உருவாக்கியிருக்கிறார்.

ராமானுஜத்தின் வாழ்க்கை வர லாற்றை விரிவாக அறிந்துகொள்ள துணைசெய்கிறது நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள ராபர்ட் கனிகல் எழுதிய ‘அனந்தத்தை அறிந்தவன்’ என்கிற புத்தகம். தமிழாக்கம் செய்திருப்பவர் பி.வாஞ்சிநாதன்.

ராமானுஜத்தின் 125-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்திய மொழிகள் அனைத்திலும் இந்நூலைக் கொண்டு வர வேண்டும் என ராமானுஜம் கணிதவியற் கழகம் முடிவு செய்து வெளியிட்டுள்ளது.

ராமானுஜத்தின் பிறப்பில் இருந்து அவரது இறுதிநாட்கள் வரை விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார் கனிகல். இதற்காக அவர் தமிழகத்துக்கு வந்து ஆய்வு செய்திருக்கிறார். ஊர் ஊராகச் சுற்றி ராமானுஜமுடன் தொடர்புள்ள அத்தனை மனிதர்களையும் சந்தித்திருக் கிறார். இந்நூலில் நிறைய புகைப்படங் களும் ஆவணங்களும் இணைக்க பட்டுள்ளன.

ராமானுஜத்தின் முக்கிய கணித சூத்திரங்களும் அதற்கான விளக்கங் களும் விவரிக்கப்பட்டுள்ளன. ராமானு ஜத்தின் வாழ்க்கையை விவரிப்பதுடன் அன்றைய கல்விமுறை, திருமணம், பண்பாட்டுச் சூழல், குடும்ப அமைப்பு, ஜாதி, பிரிட்டிஷ் அரசாட்சி ஆகியவற்றை கனிகல் நுட்பமாக எழுதியிருப்பது இந்நூலின் சிறப்பாகும்.

கணிதமேதை ராமானுஜம் தீவிரமான கடவுள் நம்பிக்கை கொண்டவர். ஆனால், அவரை ஆதரித்த இங்கிலாந்தைச் சேர்ந்த கணிதப் பேராசிரியர் ஹார்டி கடவுள் நம்பிக்கையற்றவர். பொதுவாக கணிதமேதைகள் பலரும் கடவுள் நம்பிக்கையற்றவர்களே. ஆகவே, அவர்களுக்கு ராமானுஜத்தின் கடவுள் நம்பிக்கையும் வழிபாடும் விசித்திரமாக தோன்றின என்கிறார் கனிகல்.

ராமானுஜத்தின் தந்தை னிவாச ஐயங்கார் பட்டுப் புடவைக் கடை ஒன்றில் கணக்கராக வேலை செய்தார். துணியின் தரத்தை மதிப்பீடு செய்வதில் அவர் தேர்ச்சி பெற்றவர். கடை, வீடு என அவரது உலகம் லெளகீக விஷயங்களுடன் மிகச் சுருங்கியது.

லண்டனில் இருந்து ராமானுஜம் தனது தந்தைக்கு எழுதிய கடிதங்களில் பெரும்பாலும் குடும்ப விஷயங்களும், வீட்டு சாக்கடை வழிந்து வராமல் இருக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் போன்ற சாதாரண விஷயங்களே இடம்பெற்றிருந்ந்தன. ஆனால், தனது அம்மாவுக்கு எழுதிய கடிதங்களில் ஐரோப்பாவில் உள்ள போர்ச் சூழல், போரில் விமானங்கள் பயன்படுத்தபட்ட விதம், ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இந்தியர்கள் பங்கேற்பது போன்ற உலக விஷயங்களை ராமானுஜம் எழுதியிருக்கிறார். காரணம், அவரு டைய அம்மாவுக்கு உலக விஷயங்களை அறிந்துகொள்வதில் அதிக ஆர்வம் இருந்ததுதான்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஜானகி என்ற பெண்ணை, ராமானுஜம் திருமணம் செய்துகொண்டபோது ஜானகிக்கு வயது 9. அவருடைய தந்தைக்கு இந்தத் திருமணத்தில் இஷ்டமில்லை என்பதால் அவர் திருமணத்துக்கே வரவில்லையாம்.

பிரான்சிஸ் ஸ்பிரிங் தலைமையில் இயங்கிய சென்னை துறைமுகத்தில் ராமானுஜத்துக்கு எழுத்தர் வேலை கிடைத்தது. அப்போது ஜார்ஜ் டவுனில் உள்ள முத்தையா முதலித் தெருவில் வசிக்கத் தொடங்கினார்.

துறைமுகத்தில் வேலை செய்த நாட்களிலும் கணித ஆய்வுகளில்தான் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டி ருந்தார் ராமனுஜம். 1913 ஜனவரி 16-ம் நாள், கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஜி.எச். ஹார்டிக்குத் தனது கணித ஆய்வுகள் குறித்து ஒரு கடிதம் எழுதினார். அதுதான் ராமானுஜத்தின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. ஹார்டி இல்லையேல் ராமானுஜனை உலகம் அறிந்திருக்கவே முடியாது. இந்நூல் ஹார்டின் வரலாற்றையும் விவரிக்கிறது.

கல்விப் பயில இங்கிலாந்து சென்ற ராமானுஜத்துக்கு சைவ உணவு பழக்கம் பெரும்பிரச்சினையாக இருந்தது. அவராகவே சமைத்து சாப்பிட்டுள்ளார். இங்கிலாந்தின் குளிரையும் அவரால் தாங்க முடியவில்லை. நோயுற்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். நடுங்கும் குளிரில், தனிமையில் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் தனது கணித ஆய்வுகளைத் தொடர்ந்திருக்கிறார் ராமானுஜம்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாண வர்கள் தினமும் 2 மணி நேரத்தை விளை யாட்டுக்கு எனவே ஒதுக்கிவிடுவார்கள். யாரும் அறைக்குள்ளேயே அடைந்து கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், ராமானுஜத்துக்கு விளையாட்டில் ஆர்வமே இல்லாமல் போனது. கணிதம் மட்டுமே அவரது உலகமாக இருந்தது.

உடல்நலக் குறைவு காரணமாக ராமானுஜம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்க ஹார்டி வாடகைக் காரில் வந்து இறங்கினார். அந்த காரின் எண்: 1729. அதை கண்ட ராமானுஜம் ‘‘1729 இது மிகவும் தனித்துவமான எண். இரண்டு கன சதுரங்களின் கூட்டுத் தொகையாக இருவேறு முறைகளில் சொல்லக் கூடிய மிகச் சிறிய எண்’’ என்று விளக்கினாராம். அதனால் ‘ராமானுஜம் எண்’ என்று 1729 அழைக்கப்படுகிறது.

சுடர்விடும் கணித அறிவு அவரை தீவிரமாக இயங்க வைத்தது. ஆனால் பிரிவும், தனிமையும், வறுமையும் அவரை முடக்கியது. நோயுற்ற நிலையில் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார் ராமானுஜம். சிகிச்சைக்காக கொடுமுடிக் குச் சென்றார். ஆனால், காசநோய் முற்றிய நிலையில் உடல் மேலும் நலிந்து போனது. 1920 ஏப்ரல் 26 அன்று சென்னையில் அவரது உயிர் பிரிந்தது.

நம்மிடையே இன்னும் எத்தனையோ ராமானுஜம்கள் அறியப்படாமல் இருக் கக்கூடும். அவர்களை அடையாளம் காணவும், வழிநடத்தவும், சாதனை செய்ய துணை நிற்கவும் ராமானுஜத்தின் வாழ்க்கை ஒரு பாடமாக அமைகிறது.

- இன்னும் வாசிக்கலாம்…

http://tamil.thehindu.com/general/literature/வீடில்லாப்-புத்தகங்கள்-47-எண்ணியல்-நாயகன்/article7586140.ece?ref=relatedNews

வீடில்லாப் புத்தகங்கள் 48: ரத்த சாட்சியம்!

sra_2533744f.jpg

இந்திய பாகிஸ்தான் பிரிவினை யின்போது ஏற்பட்ட வன்முறை, துயரங்கள், குரூரங்கள் குறித்து எழுதியவர்களில் சதத் ஹசன் மண்டோ வும் கர்த்தார் சிங் துக்கலும் முக்கிய மானவர்கள். உருது இலக்கியம் பிரிவினையின் துயர நிகழ்வுகள்குறித்த சிறப்பான படைப்புகளைக் கொண் டுள்ளது.

பிரிவினை குறித்து காந்தியடிகள் ‘‘என் பிரேதத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்பட வேண்டும்” எனக் கூறினார். ஆனால், அவரது வேண்டு கோள் யாராலும் கண்டுகொள்ளப்படவே இல்லை.

பிரிவினையின்போது ஏற்பட்ட மதக் கலவரங்களால் அதிகம் பாதிக்கப்பட்டது லாகூர், அமிர்தசரஸ், பஞ்சாப் பகுதி களே. லட்சக்கணக்கில் மக்கள் தங்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேறினார்கள். எல்லையைக் கடந்துசெல்ல மாட்டுவண்டிகளிலும், கால்நடையாகவும் கையில் கிடைத்த வற்றைத் தூக்கிக்கொண்டு நடந்தார்கள். பிரிவினையின்போது கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்தில் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமாக கணக்கிடப்பட்டன. சுமார் 1 கோடியே 40 லட்சம் பேர் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கோட்டைக் கடந்து இருபுறமும் சென்றார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

மதக் கலவரத்தின்போது பெண் களுக்கு மிக மோசமான வன்கொடுமை கள் இழைக்கப்பட்டன. தங்கள் வீட்டுப் பெண்களைப் பிற மதத் தினர் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காக, தாங்களே கொன்று குவித்தத் துயர நிகழ்வுகளும் நிறைய நடந்துள்ளன.

ரத்தக் கறைப் படிந்த இந்த வர லாற்றை இலக்கியம் மிக துல்லிய மாகப் பதிவுசெய்துள்ளது. உருது எழுத்தாளரான சதத் ஹசன் மண்டோ வின் ‘டோபா டேக் சிங்’ என்ற சிறுகதை இதற்கு ஓர் உதாரணம்.

பிரிவினைக்குப் பிறகு இந்தியா வுக்கும் பாகிஸ்தானுக்கும் தங்கள் வசமுள்ள பைத்தியக்காரர்களையும் இடம் மாற்றிக் கொள்ளவேண்டும் என்று ஓர் எண்ணம் ஏற்பட்டது.

அதாவது இந்தியாவில் உள்ள பைத்தியக்கார விடுதிகளில் உள்ள முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு அனுப் பப்படவேண்டும். பாகிஸ்தானில் உள்ள இந்து மற்றும் சீக்கியப் பைத்தியக்காரர்களை இந்தியா வசம் ஒப்படைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு நாள் குறிக்கப் பட்டது.

லாகூரில் இருந்த ஒரு பைத்தியக்கார விடுதியில் ஒரு சீக்கியர் மனநலம் குன்றியிருந்தார். அவரது உண்மையான பெயர் ‘பிஷன் சிங்’. ஆனால், அவரை ‘டோபா டேக் சிங்’ என்று கேலியாக அழைத்தார்கள். அதற்குக் காரணம் ‘டோபா டேக் சிங்’ என்பது அவரது சொந்த ஊர். அது பஞ்சாப் மாநிலத்தின் சின்னஞ்சிறிய கிராமம்.

பிரிவினையின்போது அந்தக் கிரா மம் இந்தியாவில் உள்ளதா அல்லது பாகிஸ்தானில் உள்ளதா என்று அந்த மனநல விடுதியில் உள்ள யாருக்கும் தெரியவில்லை.

15 ஆண்டுகளாக ‘டோபா டேக் சிங்’ ஒருநாள்கூட தூங்கியதே இல்லை. சதா நின்று கொண்டு தனக்குத் தானே புலம்பிக்கொண்டிருப்பார். பைத்தியங் களைப் பரிமாற்றிக் கொள்ளும் நாளில், இரண்டு தேசங்களும் அவரை ‘தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் இல்லை’ என வெளியே அனுப்ப முயன்றன. எங்கே போவது எனப் தெரியாமல் அவர் அலறினார். செய்வது அறியாமல் இரவெல்லாம் எல்லையிலேயே நின்று கொண்டிருந்தார்.

விடிகாலையில் அவர் தரையில் தலைகுப்புற சரிந்து விழுந்து கிடந்தார். அவரது தலை இந்தியாவை நோக்கியும் பாதங்கள் பாகிஸ்தான் அமைந்த திசையிலும் அசையாது கிடந்தன. அவரது முகம் புதைந்திருந்த துண்டு நிலத்துக்கு எந்தப் பெயரும் இல்லை என கதை முடிகிறது.

பஞ்சாபி இலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளர் கர்த்தார் சிங் துக்கல் (Kartar Singh Duggal). சாகித்ய அகாடமி பரிசுப் பெற்றவர். இந்தியப் பிரிவினைக் குறித்து முக்கியமான கதை களை எழுதியிருக்கிற இவரது குறிப்பிடத் தகுந்த நாவல் ‘இருமுறை பிறந்து, இரு முறை இறந்து’ என்பதாகும்.

துக்கலின் ‘பவுர்ணமி இரவு’ மற்றும் சில கதைத் தொகுப்பினை சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ளது. லதா ராமகிருஷ்ணன் இந்தக் கதை களை சிறப்பாக மொழியாக்கம் செய் திருக்கிறார்.

இவற்றில் ‘குல்ஸீம்’ என்ற துக்கலின் சிறுகதை மறக்க முடியாதது.

மதக் கலவரத்தின்போது கிடைத்த ஓர் இளம்பெண்ணைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறான் ஒரு கிழவன். அந்தப் பெண்ணை பள்ளி ஆசிரியராக உள்ள தனது எஜமானனுக்குப் பரிசாகத் தருகிறான்.

தூக்கிவரப்பட்டப் பெண்ணின் பெயர் குல்ஸீம். பள்ளி ஆசிரியன் ஓர் இளைஞன். தூக்கிவரப்பட்டப் பெண்ணை அனு பவித்துக்கொள்ளும்படி அந்தக் கிழவன் ஆசிரியரின் குடிசைக்குள் விட்டுச் சென்றவுடன், அந்த ஆசிரிய னுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

தயக்கத்துடன் அவளை அணுகு கிறான். அவளோ கைகூப்பியபடியே தன்னை விட்டுவிடும்படிக் கெஞ்சுகிறாள். இளைஞனின் காமம் அவனை மூர்க்கமடைய செய்கிறது.

அவள் நடுங்கியபடியே, ‘‘என்னை அடைய வேண்டுமானால் என்னை திருமணம் செய்துகொள். நான் உன் குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருப்பேன்…’’ என்று மன்றாடுகிறாள்.

ஆனாலும் அந்த இளைஞன் அவளது கையைப் பிடித்து பலவந்தமாக இழுக்கிறான்.

அவள் கண்ணீர் மல்க, ‘‘எனக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருந்தது. உன் வயதையொத்த ஒருவன்தான் மாப்பிள்ளை. ஆனால் மதக் கல வரத்தின்போது ஒரு கும்பல் அவனை சுற்றிவளைத்து வெட்டிக் கொன்று விட்டது. என்னுடைய பெற் றோரும் கொல்லப்பட்டுவிட்டார்கள். நான் மட்டும் உயிர் பிழைத்து தப்பியோடியபோதுதான் இந்தக் கிழவன் கையில் மாட்டிக்கொண்டேன். நான் என்னை உனக்குத் தருகிறேன். எனக்கு வாழ்க்கைக் கொடு’’ என்று கெஞ்சுகிறாள்.

பள்ளி ஆசிரியன் குழம்பிப் போய் விடுகிறான். கண்ணீர்விடும் இவளை எப்படி அடைவது எனப் புரியாமல் வெறுத்துப் போய், அந்த குடிசையை விட்டு வெளியே வருகிறான்.

வாசலில் சணல்கயிறு திரித்துக் கொண்டிருந்த கிழவன் ஆத்திரத்துடன் உள்ளே போகிறான். கதவை அறைந்து சாத்துகிறான்.

‘‘கல்யாணம் கேட்கிறதா சிறுக்கி உனக்கு?’’ எனக் கத்தியபடியே அவளை அடித்து வீழ்த்துகிறான். உடைகளைக் கிழிக்கிறான். அவளை வன்புணர்ச்சி செய்கிறான். பிறகு தனது லுங்கியை கட்டிக்கொண்டு குடிசைக்கு வெளியே வந்து நின்று, ‘‘எஜமான்… இனிமேல் அவள் உங்களுக்கு ஒத்துழைப்பாள்’’ என்கிறான்.

பள்ளி ஆசிரியன் உள்ளே போகிறான். கூந்தல் கலைந்து, நெற்றியிலும் கன்னத்திலும் வியர்வை வழிந்தோட அந்தப் பெண் கட்டிலில் கிடக்கிறாள். அவளது மேலாடை நழுவி கிடக்கிறது.

‘குஸ்லீம்’ என்று அவள் பெயரை சொல்லி அழைக்கிறான் பள்ளி ஆசிரியன்.

மூன்று நிமிஷம் முன்பு வரை அன்புக்காக அவனிடம் மன்றாடியவள், இப்போது எதுவும் கூறவில்லை. கல்லைப் போல அசைவற்று கிடந்தாள்.

இனி அவனுக்கு எதிர்ப் பில்லை. அந்தக் குடிசையை இருள் சூழ்ந்தது என்பதுடன் கதை நிறைவு பெறுகிறது.

இந்தியப் பிரிவினையின்போது இப்படி எத்தனையோ ஆயிரம் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டார்கள். அதனால் ஏற்பட்ட கர்ப்பத்தை சுமந் தார்கள். கருக்கலைப்பு செய்து கொண்டார்கள். இந்தியப் பிரிவினையின் ரத்த சாட்சியமாக அமைந்துள்ளது இச்சிறுகதை.

துக்கலின் சாகித்ய அகாடமி பரிசுப் பெற்ற இந்தச் சிறுகதை தொகுப்பு இளம்வாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்றாகும்.

- இன்னும் வாசிக்கலாம்…

http://tamil.thehindu.com/general/literature/வீடில்லாப்-புத்தகங்கள்-48-ரத்த-சாட்சியம்/article7610853.ece?ref=relatedNews

வீடில்லாப் புத்தகங்கள் 49: ஒளி வட்டம்!

sra_2542054f.jpg

சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களைத் தவிர சிறுநகரங்களில் நவீன நாடகங்கள் அதிகம் நிகழ்த்தப்படுவது இல்லை. சென்னையிலும்கூட இதற் கான பார்வையாளர்கள் குறைவு. பொரு ளாதாரரீதியான உதவிகளும் கிடைப்பது இல்லை. ஆனாலும், கடந்த 30 ஆண்டு களுக்கும் மேலாக தீவிரமான கருப் பொருட்களை முன்வைத்து, தமிழ் நவீன நாடகங்கள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

சினிமாவுக்கு யார் ஒளிப்பதிவு செய் கிறார்கள் என நம் அனைவருக்கும் தெரியும். முன்னணி ஒளிப்பதிவாளர்கள் பெயர் திரையில் தோன்றியவுடன் பார்வையாளர்கள் கைதட்டிக் கொண் டாடுகிறார்கள். ஆனால், நாடகங்களுக்கு யார் ஒளியமைப்பு செய்கிறார்? எவ்வாறு ஒளி பயன்படுத்த படுகிறது? எந்த வகை தொழில்நுட்பங்களைக் கையாள்கிறார்கள்? நாடக மேடை ஒளியமைப்பின் சிறப்புகள் எவை என நாம் அறிந்துகொள்வதே இல்லை. அரங்கச் செயல்பாட்டில் ஒளியின் பங்கு மிக மிக முக்கியமானது ஆகும்.

பேராசிரியர் செ.ரவீந்திரன், புது டெல்லியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன நாடகங்களுக்கு ஒளியமைப்பு செய் வதில், அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருபவர். நாடக ஒளியமைப்பு குறித்த விவரங்களை ஒன்றுதிரட்டி அவர் தொகுத்த ‘ஒளியின் வெளி’ என்ற புத்தகம் மிகவும் குறிப்பிடத்தக்கது. நான் அறிந்தவரை நாடகத்தின் ஒளியமைப்பு குறித்து தமிழில் வெளியாகியுள்ள ஒரே புத்தகம் இது மட்டுமே!

இந்நூலை ‘மாற்று வெளியீட்டகம்’ 2009-ல் வெளியிட்டுள்ளது. இதில் அரங்க ஒளியமைப்பு குறித்து மு.நடேஷ், சா.வேலாயுதம், ஞா.கோபி, கோவி. கனகவிநாயகம் ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அத் துடன் செ.ரவீந்திரனின் உரையாடலும் இடம்பெற்றுள்ளது.

சிறுகதை எழுத்தாளரான ந.முத்து சாமி அயானஸ்கோவின் அபத்த நாடகத் தில் உத்வேகம் பெற்று ‘நாற்காலிக்காரர்’, ‘காலங்காலமாக’, ‘அப்பாவும் பிள்ளை யும்’, ‘சுவரொட்டிகள்’ போன்ற நவீன நாடகங்களை எழுதி நிகழ்த்தினார். 1977-ம் ஆண்டு ந.முத்துசாமியால் நவீன நாடகப் பயிற்சிப் பள்ளியான ‘கூத்துப்பட்டறை’ உருவாக்கப்பட்டது. அது நவீன நாடகத்துக்கான மையப் புள்ளிகளில் ஒன்றாக உருமாறியது.

இதுபோலவே புதுடெல்லி தேசிய நாடகப் பள்ளியில் பயின்ற பேராசிரியர் ராமானுஜம், தமிழ்நாட்டுக்கு வந்து 1977-ல் அவர் காந்தி கிராமத்தில் நடத்திய 45 நாள் நாடகப் பட்டறையும் தமிழ் நாடகத்துக்குப் புதிய வாசலை திறந்துவிட்டது. வங்க நாடக ஆசிரியர் பாதல் சர்க்கார் மூலம் தமிழகத்துக்கு அறிமுகமான வீதி நாடகங்கள் ‘மூன்றாம் அரங்கு’ என்ற புதிய நாடக இயக்கத்தை உருவாக்கியது. இதுபோலவே நவீன நாடகத்துக்கு என்றே வெளி ரங்கராஜன் ‘நாடகவெளி’ என்ற இதழை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

நவீன நாடகங்களின் மேடை அமைப்பு, நடிப்பு முறை, காட்சி அமைப்பு, வசனங்கள் யாவும் மரபு நாடகங்களில் இருந்து பெரிதும் மாறுபட்டவை. நாட்டார் கதைகள், புராணங்கள், இதிகாசங்கள், வரலாற்று உண்மைகளைப் புதிய கண்ணோட்டத்தில் மறுஉருவாக்கம் செய்வது, சமூக அரசியல் பிரச்சினை களை விமர்சனம் செய்வது, காலனிய மயமாக்கம், சுற்றுச்சூழல், நீதி, கல்விச் சூழல், பண்பாட்டு மாற்றங்கள், பாலின அரசியல் ஆகியவற்றைச் சார்ந்து நவீன நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

ந.முத்துசாமி, பேராசிரியர் ராமானு ஜம், மு.ராமசாமி, மங்கை, பிரளயன், கே.ஏ.குணசேகரன், பேராசிரியர் ராஜு, ஆறுமுகம், பென்னேஸ்வரன், வெளி ரங்கராஜன், சண்முகராஜன், ஆடுகளம் ராமானுஜம், கே.எஸ்.ராஜேந்திரன். பாரதி மணி, ஞாநி, கருணாபிரசாத், பார்த்திப ராஜா, முருகபூபதி, பிரவீண், ஜெயக் குமார், குமரவேல், ஜெயராவ், வேலு சரவணன், சுந்தர்காளி, ஆ.ராமசாமி, ப்ரஸன்னா ராமசாமி, குமரன் வளவன், ஜித் என பல்வேறு நாடக இயக்குநர் கள் தனித்துவத்துடன் பல புதிய நாடகங்களை நிகழ்த்தி வருகிறார்கள். இந்த நாடகங்களில் சில இந்திய அளவில் கவனம் பெற்றதோடு, சர்வதேச நாடக விழாவிலும் பங்கேற்றுள்ளன.

நாடகங்களுக்கான ஒளியமைப்பு செய்வதில் பேராசிரியர் ரவீந்திரனின் தனித்துவத்தையும், நவீன ஓவியர்களான கிருஷ்ணமூர்த்தி, மருது, மற்றும் மு.நடேஷ் ஆகியோர் தமிழ் நாடக உலகோடு கொண்டிருந்த உறவைப் பற்றியும், புதுச்சேரி சங்கரதாஸ் சுவாமி கள் நிகழ்கலைப் பள்ளி மாணவர்கள் அரங்க ஒளியமைப்பில் எப்படி தம்மை ஆட்படுத்திக் கொண்டனர் என்பதையும் இந்நூல் விவரிக்கிறது என முன்னுரையில் டாக்டர் வீ. அரசு சுட்டிக்காட்டுகிறார்

18-ம் நூற்றாண்டுவரை அரங்க நிகழ்வுகள் எல்லாம் மெழுகுவத்தியின் ஒளியில், காஸ் லைட்டுகளின் பின் புலத்தே நிகழ்த்தப்பட்டன. மின்சாரத்தின் வருகைக்குப் பிறகு அரங்க நிகழ்வுகளில் ஒளியின் பயன்பாடு மாறியது. வெளிச்சத்தை கூட்டவோ, குறைக்கவோ செய்யக்கூடிய டிம்மர்களின் தேவை உருவானது. அதிலிருந்து இன்று கம்ப்யூட்டர் வழியாக முப்பரிமாண ஒளியமைப்பு செய்வது வரை அரங்கச் செயல்பாட்டில் ஒளியின் பங்கு பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. புதுவைப் பல்கலைக்கழக நிகழ்கலைத் துறையில் ஒளியமைப்பு ஒரு பாடமாகவே வைக்கப்பட்டுள்ளது.

நேர் ஒளி மற்றும் நிரப்பொளி எனும் இரு தடங்கள் நாடகத்தைத் தீர்மானிக் கின்றன. நடிகன் மேல் வீசப்படும் ஒளியை மெதுவாக வீசுவதா, அல்லது கோணங்களை மாற்றுவதா, நிறத்தை மாற்றுவதா என தீர்மானிப்பது முற்றிலும் மனம் சார்ந்த கணக்கு. கதை சொல்லுதலின் வடிவமாக ஒளியை மாற்ற வேண்டும். நிறங்களும் அர்த்தமும் சில சமயம் சேர்ந்து பயணிக்கும். சில சமயம் முரண்படும். இவை அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு அன்றைய நாடகத்தின் கதை, ஆழம், அர்த்த வீச்சுக்கு ஏற்றது போல ஒளிக் கலைஞன் பயணிக்க வேண்டும். கதையம்சத்தில் மூழ்கும்போது, ஒளி ஒரு சக நடிகனைப் போலவே பணிபுரியும் வாய்ப்பு உள்ளது என்கிறார் ஓவியரும் அரங்க ஒளியமைப்பாளருமான மு.நடேஷ்.

நாடகவெளியில் ஒளிவண்ணங்கள் உருவாக்கும் மாற்றம் பாத்திரத்தின் உணர்வு வெளிப்பாட்டுடன் நெருங்கிய தொடர்புகொண்டது. மகிழ்வு உணர்ச்சி யின் அடிப்படை கதகதப்பான ஆரஞ்சு நிற வண்ணமாகும். இளம் ஊதா வண்ண ஒளி சுறுசுறுப்பு மற்றும் மலர்ச்சி யின் வண்ண வெளிப்படாகும். ஊதா ஒருவித மனசோகத்தை வெளிப் படுத்தக்கூடியது என்கிறார் கோவி.கனகவிநாயகம்.

செ.ரவீந்திரன் தனது உரையாடலில் 1972-ம் ஆண்டு புதுடெல்லியில் பார்த்த அல்காசி இயக்கிய ஐயனெஸ்கோவின் நாடகம் தன்னை மிகவும் பாதித்ததாகவும், அந்த தேடலே தன்னை ஒளியமைப்பு செய்பவராக உருமாற்றியது. ந.முத்து சாமியோடு இணைந்து நாடகங்களில் பணியாற்றியது புதிய சாத்தியங்களை மேற்கொள்ள முக்கிய காரணமாக இருந்தது என நினைவுகூர்கிறார்.

தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நவீன நாடகங்கள் நிகழ்த்தப் பட்டு வந்தபோதும் நாடகத்துக்கு என பிரத்யேகமான அரங்கு சென்னையில் இல்லை. நவீன நாடகக் குழுவினர் ஒத்திகை நடத்த இடமின்றி பெரிதும் சிரமப்படுகிறார்கள். அதிலும் சிறிய நாடகக் குழுக்களுக்கு நாடகம் நடத்து வதற்கே இடம் கிடைப்பதில்லை. நாடக நூல்களை வாசகர்கள் கண்டுகொள் வதே இல்லை.

‘அறிவொளி’ இயக்கம் வீதி நாடக வடி வத்தை சிறப்பாக மக்களிடம் கொண்டு சென்றது. கோமல் சுவாமி நாதன் முயற்சி யால் ‘சுபமங்களா’ நாடக விழா மதுரை, கோவை, திருச்சி, சென்னை என பல இடங்களில் சிறப் பாக நடைபெற்றது. அது போன்ற முன்னெடுப்புகள் இன்று அவசியமான தேவையாக உள்ளது.

- இன்னும் வாசிப்போம்…

http://tamil.thehindu.com/general/literature/வீடில்லாப்-புத்தகங்கள்-49-ஒளி-வட்டம்/article7636362.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

வீடில்லாப் புத்தகங்கள் 50: வான் தொடும் குரல்!

sra_jpg1_2558751h.jpg

நோபல் பரிசு பெற்ற நாவல் களில் ஒரு சிலவே தமிழில் மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளன. அதில் சுவீடன் நாவ லாசிரியை செல்மா லாகர்லெவ் எழுதிய ‘மதகுரு’ என்ற நாவல் மகத்தானது.

1909-ல் செல்மா லாகர்லெவ்வுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. கெஸ்டா பெரிலிங் ஸாகா என்ற இந்தப் புகழ்பெற்ற நாவலை ‘மதகுரு’ எனத் தமிழில் க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார். மருதா பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. ‘கெஸ்டா பெரிலிங் ஸாகா’ ஹாலிவுட் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது.

உலக இலக்கியத்தில் ஷேக்ஸ் பியருக்கும் கிரேக்க காவியங்களான ‘இலியட் ஒடிஸி’க்கும் இணையாக ‘மதகுரு’ நாவலைச் சொல்வேன் என்கிறார் க.நா.சு. இதன் பூரணத்துவம் நாவலை தனியொரு சிகரமாக உயர்த்துகிறது. தஸ்தாயேவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலை இலக்கியத்தின் சிகரம் என்பார்கள். அதற்கு நிகரானது ‘மதகுரு’. ‘இதுபோன்ற காவியத்தன்மை கொண்ட நாவல் இதுநாள் வரை எழுதப்படவில்லை’ என வியந்து சொல்கிறார் க.நா.சு.

மதகுருவான கெஸ்டா பெரிலிங்கின் கதையை விவரிக்கிறது நாவல். அளவுக்கு மீறி குடித்துவிட்டு தேவா லயத்தில் முறையாக பிரசங்கம் செய்யாமல், நடத்தை கெட்டுத் திரியும் கெஸ்டா பெரிலிங்கை விசாரணை செய் வதற்காக தலைமை மதகுருவும் மதிப்புக் குரிய மற்ற குருமார்களும் வருவதில் இருந்து நாவல் தொடங்குகிறது.

‘தன்னை விசாரணை செய்ய அவர் கள் யார்?’ எனக் கோபம் கொள்ளும் கெஸ்டா பெரிலிங் அன்று மிக அற்புதமாக தேவாலயத்தில் பிரசங்கம் செய்கிறான். ‘இவ்வளவு திறமை வாய்ந்தவன் மீது எதற்காக இத்தனை குற்றச்சாட்டுகள்?’ என தலைமை மதகுரு குழம்பிப் போய்விடுகிறார். பாவம் அவரும் மனிதன்தானே என மன்னித்து விடுகிறார்கள். அவர்கள் ஊர் திரும்பும்போது வண்டியைக் குடை சாய வைத்து துரத்துகிறான் கெஸ்டா பெரிலிங். இப்படி ஒரு பக்கம் அன்பின் வெளிச்சத்தையும், மறுபக்கம் தீமையின் இருட்டையும் ஒன் றாகக் கொண்டவனாக கெஸ்டா பெரிலிங் அறிமுகமாகிறான். நாவல் இலக்கியத் தில் கெஸ்டா பெரிலிங் மறக்கமுடியாத கதாபாத்திரம். ஸிண்ட்ராம் என்ற கதாபாத் திரத்தை சைத்தானின் பிரதிநிதி போலவே செல்மா உருவாக்கியிருக்கிறார்.

‘தன்னை குடிகாரன் எனக் குற்றம் சாட்டும் திருச்சபை, மதகுருவின் வீடு பாசி பிடித்து ஒழுகுவதையோ, தனிமையில் வறுமையில் வாடுவதைப் பற்றியோ அறிய ஏன் ஆர்வம் காட்டவே யில்லை?’ என கெஸ்டா தனக்குள் குமுறுகிறான்.

‘‘குடிகார மக்களுக்குக் குடிகார மதகுரு இருப்பதில் என்ன தவறு?’’ என்று கேட்கிறான். ஆனால், விசாரணை குருமார்கள் வந்த நாளில் இதுதான் தனது கடைசிப் பிரசங்கம் என உணர்ந்த வுடன் அவன் மனம் மாறிவிடுகிறது.

மனிதனுடன் பழகிய புறாக்களைப் போல உயர்ந்த சிந்தனைகள் அவன் வார்த்தைகளில் தானே வந்து சிக்கிக் கொண்டன. உள்ளத்தில் எரியும் உணர்ச்சிகளை அழகிய வார்த்தைகளாக உருமாற்றினான். கண்ணில் நீர் மல்க கடவுளிடம் பிரார்த்தனை செய்தான். அவனது உரையைக் கண்டு சபை வியந்துபோகிறது.

தேவாலயத்தில் இருந்து வெளி யேறும் கெஸ்டா ஒரு சிறுமியை ஏமாற்றி மாவு வண்டியைக் கைப்பற்றுகிறான். அதை விற்றுக் குடிக்கிறான். வாம்லேண் டின் பணக்காரியான ஏக்பி சீமாட்டியின் ‘உல்லாசப் புருஷர்கள்’ குழுவில் இணைந்து செயல்படுகிறான். அங்கே நடைபெறும் கிறிஸ்துமஸ் விருந்து மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது.

மேரியான் ஸிங்க்ளேர், அன்னா ஸ்டார்ண்யாக் என்ற இரண்டு பெண்கள் அவனைக் காதலிக்கிறார்கள். ஆனால் அவன் எலிசபெத் டோனா என்பவளைத் திருமணம் செய்துகொள்கிறான்.

குடிகாரன் என்று விரட்டப்பட்ட கெஸ்டா மெல்ல மனமாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறான். துறவியைப் போல எதற்கும் ஆசைப்படாமல் வாழ தொடங்குகிறான். ‘நான் இறந்த பிறகு என்னை இரண்டு ஏழைகள் நினைவில் வைத்திருந்தால்கூட போதும். நான் ஏதாவது ஒரு தோட்டத்தில் இரண்டு ஆப்பிள் மரங்களை நட்டு வளர்த்துவிட்டு போனால் போதும்; வயலின் வாசிப் பவனுக்கு இரண்டு புதுப் பாட்டுகள் கற்றுக்கொடுத்துவிட்டால்கூட போதும். மற்றபடியே புகழோ, பெருமைகளோ எதையும் நான் வேண்டவில்லை’ என நாவலின் முடிவில் கெஸ்டா சொல்லும்போது, அவன் காவிய நாயகன் போல உருமாறுகிறான்.

பைபிள் கதைகளின் சாயலில் எழுதப்பட்ட ‘மதகுரு’ நாவல் அதன் கவித்துவ வர்ணனைகளுக்காகவும் சிறந்த கதை சொல்லும் முறைக்காகவும் மிகவும் புகழ்பெற்றது.

‘டோவர் சூனியக்காரி’ என்ற அத்தியாயத்தில் மாமிசம் கேட்டு வரும் சூனியக்காரியை விரட்டும் சீமாட்டி மார்பா, ‘உனக்குத் தருவதைவிடவும் மாக்பைப் பறவைகளுக்குத் தந்து விடுவேன்’ எனக் கத்துகிறாள். இதைக் கேட்டு கோபம் அடைந்த சூனியக் காரி ‘மாக்பைப் பறவைகள் உன்னைக் கொத்திக் கொல்லட்டும்’ என சாபமிடு கிறாள். மறுநிமிஷம் ஆயிரக்கணக்கானப் பறவைகள் அவளை கொல்லப் பறந்துவருகின்றன.

வானமே மூடிவிட்டது போல பறவை கள் ஒன்றுகூடுகின்றன. பறந்து தாக்கி அவளது முகத்தையும் தோள் பட்டையையும் பிறாண்டுகின்றன. அவள் அலறியபடியே ஓடிப் போய் கதவை மூடிக்கொள்கிறாள். அன்று முதல் அவளால் வீட்டை விட்டு வெளியே போக முடியவில்லை. வீட்டின் இண்டு இடுக்கு விடாமல் மூடியிருக்க வேண்டிய கட்டாயம் உருவானது. பறவைகளின் தாக்குதலில் இருந்து தப்ப முடியாத தனது விதியை எண்ணி அவள் அழுதாள். ‘தற்பெருமைக்கானத் தண்டனை இப்படித்தான் அமையும்’ என முடிகிறது அந்த அத்தியாயம். இதை வாசிக்கும்போது ஆல்ஃப்ரட் ஹிட்ச் காக்கின் ‘பேர்ட்ஸ்’ படம் நினைவில் வந்துபோனது. இந்தப் படம் வெளிவருவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டுள்ளது இந்த நாவல்.

செல்மா லாகர்லெவ் 1958-ம் ஆண்டு வாம்லேண்ட் என்கிற இடத்தில் பிறந்தார். இளம்பிள்ளை வாதம் தாக்கியவர் என்பதால் சிறுவயது முழுவதும் வீட்டுக்குள்ளும் மருத்துவமனைகளிலும் அடைந்து கிடந்தார். பின்பு ஆசிரியர் பயிற்சி பெற்று, பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். அவரது ‘மதகுரு’ நாவ லுக்கு அடிப்படை வாம்லேண்ட் பகுதியில் அரை நூற்றாண்டுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவமே. அவருடைய பாட்டி அதைப் பற்றி சொல்லியதில் இருந்து, தான் உத்வேகம் பெற்று எழுதியதாக கூறுகிறார் செல்மா லாகர்லெவ்.

‘மதகுரு’ பைபிளின் மொழி போல கவித்துவமாக எழுதப்பட்ட நாவல். அதில் நாடோடி கதைகளும் புராணீகத்தன்மையும் ஊடுகலந்துள்ளன என்கிறார் விமர்சகர் பிராங்.

கெஸ்டாவைப் பற்றி விவரிக்கும் சம்பவக் கோவைப் போலவே நாவல் வடிவம் கொண்டிருக்கிறது. 38 கதைகள் ஒன்றுசேர்த்து ஒரே சரடில் கோக்க பட்டிருப்பது போலவே நாவல் உருவாக்க பட்டுள்ளது. ஒரு பிரசங்கத்தில் தொடங் கும் நாவல் ஏக்பி சீமாட்டியின் ‘உல்லாச புருஷர்’களுக்கு கெஸ்டா செய்யும் பிரசங்கத்துடன் நிறைவுபெறுகிறது. இதன் ஊடே வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறான் கெஸ்டா.

‘கெஸ்டா பெரிலிங் ஸாகாவைப் படித்து அனுபவிப்பவர்கள் பாக்கியசாலி கள்’ என முன்னுரையில் க.நா.சு கூறு கிறார். அது மறுக்கமுடியாத உண்மை!

இன்னும் வாசிப்போம்…

http://tamil.thehindu.com/general/literature/வீடில்லாப்-புத்தகங்கள்-50-வான்-தொடும்-குரல்/article7684618.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வீடில்லாப் புத்தகங்கள் 51: கனவில் துரத்தும் புத்தகம்!

 

http://www.yarl.com/forum3/topic/164438-வீடில்லாப்-புத்தகங்கள்-51-கனவில்-துரத்தும்-புத்தகம்/

Link to comment
Share on other sites

வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!

puthumai_2567464f.jpg
 

புதுமைப்பித்தனைப் பற்றிய அவரது மனைவி கமலா புதுமைபித்தன் எழுதிய கட்டுரைகளை வே.மு.பொதியவெற்பன் தொகுத்து ‘புதுமைப் பித்தனின் சம்சார பந்தம்’ என்ற சிறு நூலாக வெளியிட்டிருக்கிறார். இதனை ‘பரிசல்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

எழுத்தில் காணப்படும் அதே நக்கல், நையாண்டி, கிண்டல் பேச்சு, உணர்ச்சி பூர்வமான மனநிலை. இளகிய மனது புதுமைப்பித்தனின் அன்றாட வாழ்க்கை யிலும் அமைந்திருந்தது என்பதை கமலா புதுமைபித்தன் மிக அழகாக எடுத்துக் காட்டுகிறார். ‘உமா’, ‘காதல்’ இதழ்களில் வெளியாகியிருந்த இந்த அரிய கட்டுரை களை தேடித் தொகுத்திருக்கிறார் பொதியவெற்பன்.

புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை தொ.மு.சி. ரகுநாதன் தனி நூலாக எழுதியிருக்கிறார். ஆனால், அது முழுமையானது இல்லை. நிறைய தகவல்கள், விவரங்கள் விடுபட்டுள்ளன. புதுமைபித்தன் குறித்த விரிவான வாழ்க்கை வரலாற்று புத்தகம் எழுதப்பட வேண்டும்.

‘கண்மணி கமலாவுக்கு’ என்ற புதுமை பித்தனின் கடிதங்கள் மிக முக்கியமான ஆவணத் தொகுப்பாகும். இதனை இளையபாரதி தொகுத்திருக்கிறார். தனக்கு எழுதப்பட்ட கடிதங்களைப் பொதுவெளியில் பகிர்ந்துகொண்டது கமலா அம்மாவின் தார்மீக அறவுணர் வின் வெளிப்பாடாகும். அந்த மனவெளிப் பாட்டின் இன்னொரு வடிவமே அவர் தனது கணவர் குறித்து எழுதிய கட்டுரைகள். அதில் புதுமைபித்தனின் குடும்ப வாழ்க்கை பற்றிய அரிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

தங்கள் வாழ்வில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை நெகிழ்ச்சியுடன் கமலா விவரித்துள்ளார்.

வாழ்வில் தனக்கு ஒரு நியதி, மனை விக்கு ஒரு நியதி என்பதே அவரிடம் கிடை யாது. அவர் உயிரோடு இருந்த காலங் களில் அனுபவித்த துன்பங்களுக்கு அளவே கிடையாது. பேச்சென்றால் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். சில நாட்கள் இரவு 2 மணி வரையிலும் பேசிக் கொண்டிருப்போம். புத்தகங்கள், எழுத்தாளர்கள், இலக்கியம், கவிதை, கதை, குடும்ப விஷயம் என பல விவரங்கள் பேச்சில் வந்து போகும். எதைப் பற்றிப் பேசினாலும் சுவைபடப் பேசுவார். கதை எழுத உட்கார்ந்தால் ஒரே மூச்சில் எழுதி முடித்த பிறகே வேறு வேலையில் கவனம் செலுத்துவார்.

என்னையும் ஏதாவது கதை எழுது என்று சொல்லிக்கொண்டே இருப்பார். நல்ல நிஜமான, சாகாத கதைகளை உன் னால் எழுத முடியும். நீயும் எழுத்தில் என் கூடத் தொடர்ந்து வர வேண்டும் என்பதே எனது ஆசை என்பார்.

திருமணமாகி 6 ஆண்டுகளுக்குப் பிறகு எங்களுக்கு முதல் குழந்தை பிறந் தது. ஆனால், அது உடனே இறந்து விட்டது. பின்பு 2 ஆண்டுகள் சென்றபின்பு ஒரு பெண் குழந்தை பிறந்து, அதுவும் 3 மாதங்களில் இறந்துபோனது. அந்தக் குழந்தை உடல்நலமற்று இருந்தபோது, அதற்கு மருந்து வாங்க கையில் காசு இல்லாமல் திண்டாடினோம். இறந்த குழந்தையை அடக்கம் செய்யக்கூட எங்களிடம் பணம் இல்லை. இவற்றை நினைத்து அவரது உள்ளம் மிகவும் வேதனை கொண்டது.

அதன் பிறகு 6 ஆண்டுகளுக்குப் பிறகே தினகரி பிறந்தாள். குழந்தை பிறந் திருக்கிறது என்ற தகவல் கிடைத்தவுடனே சென்னையில் இருந்து புறப்பட்டு வந்து சேர்ந்துவிட்டார். அவருக்குக் குழந்தைகள் மீது மிகுந்த பிரியம்.

அதிலும் பெண் குழந்தை என்றால் மிக மிக ஆசை. ஆனால், குழந்தை பிறந்த நாலாவது மாதம் திரைப்பட வேலையாக புனே நகருக்குச் சென்றார். நோயாளியாக திரும்பி வந்து இறந்து போனார். குழந்தையைக் கொஞ்சிக் குலாவ கொடுத்து வைக்கவில்லை அவருக்கு. கமலா தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும்போது நம் மனது கனத்துப் போய்விடுகிறது.

புதுமைபித்தன் எப்படி எழுதுவார்? கமலாவின் கட்டுரை அந்த காட்சியை கண்முன்னே படம் பிடித்துக் காட்டுகிறது.

சுவர் ஒரமாக விரிக்கப்பட்ட ஒரு தாழம் பாய், இரு தலையணைகள், பக்கத்தில் ஒரு கூஜா நிறைய தண்ணீர், திறத்து வைக்கப்பட்ட வெற்றிலை செல்லம், கையில் எழுதும் பலகையும் பேப்பரும் பேனாவும், ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டி தலையணையில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு எழுதுவார். காற்றி னால் பஞ்சு போன்ற தலைமுடி நெற்றியில் பறந்து விழுவதை இடை இடையே கையால் ஒதுக்கிவிட்டுக் கொள்வார். வாய் நிறைய வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே அவர் கிடுகிடுவென எழுதுகிற வேகத்தைக் கண்டால் வியப்பாக இருக் கும். எழுதும்போது யாரும் பக்கத்தில் வந்து பேசிவிடக் கூடாது. குறைந்தது 30 பக்கம் எழுதி முடித்தபிறகே வெற்றிலை எச்சிலைத் துப்ப எழுந்திருப்பார்.

இப்படி எழுத்து, படிப்பு என ஒயாமல் இயங்கிக் கொண்டிருப்பவர் திடீரென மாதக்கணக்கில் சோம்பலில் பேனாவை கையால் தொடாமலே இருந்துவிடுவார். அவரது கதை வெளிவருவதாக அறிவித்த பத்திரிகைகள் நெருக்கடி கொடுக்கும் போது, ‘இதோ 4 மணிக்கு ரெடியாகி விடும்’ என சமாளிப்பார். ஆனால், அது நடக்காது என எனக்குத் தெரியும். அவருக் காக மனம் கூடினால்தான் எழுதுவார்.

அவர் ஒரு புத்தகப் பைத்தியம். சம் பளம் வாங்கியதும் நேராக புத்தகக் கடைக்குப் போய் புதுப் புத்தகங்கள் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேருவார். சம்பளக் கணக்கு கேட்டால் மீதி பணத் தைத் தந்துவிட்டு இவ்வளவுதான் மிச்சம் என சிரிப்பார். அதனால் எங்களிடையே சண்டை வருவதும் உண்டு. அவரால் புத்த கம் வாங்காமல் இருக்கவே முடியாது.

தமிழ் இலக்கியத்தை ஒர் உன்னத நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என் பதே அவரது ஆசை என பசுமையான நினைவுகளைக் பகிர்ந்து கொள்கிறார் கமலா.

இத்தொகுப்பில் நான்காவதாக இடம் பெற்றுள்ள கட்டுரையில் நோயாளியாக கையில் கம்பை ஊன்றிக் கொண்டு நடக்க முடியாத நிலையில் ரயிலை விட்டு இறங்கி, தன் மனைவியைத் தேடி வரும் புதுமைப்பித்தனின் அந்திம நிலை பதிவாகியுள்ளது. இதை கண்ணீர் கசியாமல் வாசிக்க முடியாது.

‘கமலா கவலைப்படாதே. தைரி யத்தை கைவிடாதே. மனதைத் தளர விடாதே… உன்னை நல்லநிலையில் வைக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட் டேன். ஆனால், விதி என்னை இப்படிக் கொண்டுவந்துவிட்டது. ஆறுதல் சொல் வதைத் தவிர என்னால் வேறு ஒன்றும் செய்ய இயலாது’ என புதுமைபித்தன் சொன்ன கடைசி வார்த்தைகளைக் கண்ணீருடன் பகிர்ந்துகொள்கிறார் கமலா புதுமைபித்தன்.

தன் எழுத்தால், சிந்தனையால் தமிழ் இலக்கியத்தை மேன்மையுறச் செய்த ஒரு மகத்தான கலைஞன், தான் வாழும் காலத்தால் புறக்கணிக்கபட்டு, வறுமை யில், நெருக்கடியில், தனிமையில், நோயுற்று இறந்து போனது காலக் கொடுமை. அந்தத் துயரத்தின் அழியாச் சித்திரமாக திகழ்கிறது இந்தப் புத்தகம்.

இத்தனைக்கும் மேலே

‘இனி ஒன்று;

ஐயா நான்

செத்ததற்குப் பின்னால்

நிதிகள் திரட்டாதீர்.

நினைவை விளிம்புகட்டி

கல்லில் வடித்து

வையாதீர்;

‘வானத்து அமரன்

வந்தான் காண்...

வந்தது போல்

போனான் காண்’ என்று

புலம்பாதீர்;

அத்தனையும் வேண்டாம்

அடியேனை விட்டுவிடும்’

- என கவிதை எழுதியிருக்கிறார் புதுமைப்பித்தன்.

வாழும் காலத்திலே எழுத்தாளர்கள் கொண்டாடப்படவும் உரிய முறையில் கவுரவப்படுத்தப்படவும் வேண்டும். அதுவே எழுத்துக்கு நாம் செய்யும் மரியாதை. புத்தகங்கள் நமக்கு கற்றுக் கொடுக்கும் முதல் பாடமும் இதுவே!

http://tamil.thehindu.com/general/literature/வீடில்லாப்-புத்தகங்கள்-52-வானத்து-அமரன்/article7710804.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

வீடில்லாப் புத்தகங்கள் 53: எழுத்து மட்டும் போதாது!

sra_2576121f.jpg
 

கர்நாடகாவின் பெல்லாரி பகுதியைச் சேர்ந்த ரமணஜெயா பொம்ம லாட்டக் குழு நடத்திய மகாத்மா காந்தி பற்றிய பொம்மலாட்ட நிகழ்ச் சியை சில ஆண்டுகளுக்கு முன்பாக பார்த்திருக்கிறேன். ஆள் உயர தோல் பாவைகளைக் கொண்டு காந்தியின் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை அற்புதமாக நிகழ்த்திக் காட்டுகிறார்கள்.

இந்தக் குழு கிராமம் கிராமமாகச் சென்று காந்தியின் வாழ்க்கை வர லாற்றை நிகழ்த்திக் காட்டுவதுடன் ஜெர்மனிக்குச் சென்று இந்திய கலை விழாவிலும் காந்தியின் கதையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.

மரபான பொம்மலாட்டம் முதல் இன் றைய மாங்கா காமிக்ஸ் வரை காந்தியை குறித்து பல்வேறுவிதங்களில் படைப் புகள் வெளியாகியுள்ளன. ஆனாலும் காந்தியைப் புரிந்துகொள்ளாமல் அவரைத் தவறாக விமர்சிப்பவர்களும் அவதூறு பேசுபவர்களும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

காந்தியின் பேச்சுகள், எழுத்துகள், கடிதங்கள் யாவும் முறையாகத் தொகுக் கப்பட்டுள்ளன. பண்டித நேருதான் இவற்றைத் தொகுக்கும்படி ஏற்பாடு செய்தார். 38 ஆண்டுகள் இந்தப் பணி நடைபெற்று, ஒரு தொகுதி 500 பக்கங் கள் வீதம் 98 தொகுதிகள் வெளியிடப் பட்டுள்ளன. அத்துடன் 2 தொகுதிகள், பெயர்கள் மற்றும் பொருள்வரிசை கொண்டதாக உருவாக்கபட்டுள்ளன. மொத்தம் 50 ஆயிரம் பக்கங்கள். இவற்றை இணையத்திலும் பதிவேற்றி யிருக்கிறார்கள்.

முழுநேர எழுத்தாளர்களால் கூட இவ்வளவு பக்கங்கள் எழுதியிருக்க முடியுமா என்பது சந்தேகமே. காந்தி தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள் வதற்குப் பத்திரிகை, கடிதம், கேள்வி - பதில், உரைகள், கட்டுரை, தந்தி, ரேடியோ என கிடைத்த எல்லா வழிகளை யும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மகாத்மா 2 கைகளாலும் எழுதக்கூடி யவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோம் நகரில் உள்ள சலேஷியன் பான்ட்டிஃபிகல் பல்கலைக்கழகத்தில் சமூகத் தகவல் தொடர்பு விஞ்ஞானத் துறையில் பணியாற்றி வரும் பீட்டர் கன்சால்வஸ் மகாத்மாவைப் பற்றி சிறிய நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். ‘காந்தியின் ஆடை தந்த விடுதலை’ என்று அந்த நூல் தமிழில் வெளியாகியுள்ளது. சாருகேசி மொழியாக்கம் செய்துள்ள இந்த நூலை ‘விகடன் பிரசுரம்’ வெளி யிட்டுள்ளது. அதில், காந்தியின் உடை இந்திய விடுதலைப் போரில் ஏற்படுத் திய தாக்கத்தைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

காந்தியின் எழுத்து நடை தெளிவா னது, எளிமையானது, அளவானது. அதில் அலங்காரங்களே கிடையாது. சின்னஞ் சிறு வாக்கியங்களைத்தான் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். நேருவின் ஆங்கிலத்துடன் காந்தியின் ஆங்கி லத்தை ஒப்பிடும்போது, இந்த வித்தி யாசத்தைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். காந்தி குஜராத்தியில் எழுதி யதில் சமஸ்கிருத கலப்பே கிடையாது. தன் தாய்மொழியில்தான் அவர் சுயசரிதையை எழுதினார்.

மக்களின் மனசாட்சியைத் தூண்டி விட்டு விடுதலை இயக்கத்தில் பங்கு பெற வைக்க எந்த உத்தியையும் காந்திஜி விட்டுவைக்கவில்லை. கிராமிய ஆடல்பாடல் தொடங்கி நாடகம், மேடைப் பேச்சு, சேர்ந்திசை, துண்டுப் பிரசுரம், சுவரொட்டி என அத்தனையையும் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார். உண்மை யைத் தேடும் போரில் ஊடகம் ஒரு துடிப்பான தோழனாக இருக்க வேண் டும் என காந்தி எதிர்பார்த்தார். ஆகவே, அவரே பத்திரிகைகள் தொடங்கி நடத்தினார்.

தந்தியை ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்திக்கொண்டவர் காந்திஜி. 1896 மே 7-ம் தேதி காலனி ஆதிக்கச் செயலர் ஜோசப் சேம்பர்லினுக்கு, இந்தியருக்கு எதிரான மசோதாவை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என டர்பனில் இருந்து அனுப்பிய தந்திதான் காந்திஜி அனுப்பிய முதல் தந்தி என்கிறார்கள்.

இந்திய வரலாற்றிலே பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் தந்தியை அதிக பட்சம் உபயோகித்தது உப்பு சத்தியா கிரக யாத்திரையின்போதுதான். சர்வ தேச ஊடகங்களின் கவனம் உப்பு சத்தியா கிரகத்தின் மீது குவிய காந்திஜி அதை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்.

உலகம் முழுவதும் இருந்து அவருக் குக் கடிதங்கள் வந்து குவிந்தன. அத் தனைக்கும் அவரே நேரடியாக பதில் எழுதினார். அரிதாகவே உதவியாளர் களைப் பயன்படுத்திக் கொண்டிருக் கிறார்.

‘கடிதங்களைப் படித்துப் புரிந்து கொண்டு பதில் எழுதுவது எனக்குப் பாட மாக அமைவதுண்டு. இக்கடிதங்கள் வழியே சமுதாயம் என்னிடம் உரையாடு வதாகவே கருதினேன். பதில் அளிக்க வேண்டியது எனது கடமை என உணர்ந் தேன்’ என காந்தி தனது குறிப்பில் எழுதியிருக்கிறார்.

படிக்காத பாமர மக்கள் அதிகம் உள்ள நாட்டில் எழுத்து மட்டும் போதாது, ஆகவே வாய் வார்த்தைகளாக தனது கருத்துகளை மக்களிடம் கொண்டு செல் லும் தொண்டர் குழுக்களை காந்தி உரு வாக்கினார். அதன் விளைவு குக்கிராமம் வரை காந்திய சிந்தனைகள் போய் சேர்ந்தன.

இந்திய சமூகத்தில் ஒரு மனிதன் எந்த நிலையில் இருக்கிறான் என்பதை காட்டும் அடையாளமாகவே உடை விளங்கியது. அத்துடன் எந்த விதமாக உடை அணிவது? எந்தத் துணியை அணிவது என்பது அப் போது ஜாதியுடன் தொடர்புகொண்டு இருந்தது.

இந்தியர்கள் ஐரோப்பிய உடை களை அணியும்போது சகோதர இந்தியரை விட, தாங்கள் ஒருபடி மேல் என நம்பினார்கள். ஐரோப்பியருக்குச் சமமாக, ஆங்கிலேயருடன் ஒரே நிலை யில் உறவாடக் கூடியவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டார்கள்.

ஆகவே, உடை விஷயத்தில் ஒரு மாற்று தேவை என்பதை காந்தி உணர்ந் தார். கண்மூடித்தனமாக ஆங்கில உடை களைப் பின்பற்றுவதை மாற்ற வேண்டும் என்பதற்காகவே அவர் எளிய ஒற்றை வேஷ்டியுடன் உலா வரத் தொடங்கி னார். உடையில் ஏற்படுத்திய மாற்றம் அவரை அரசியல் ஞானியாக அடையாளப் படுத்தியது.

ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட மன நிலையின் அடையாளமாக கதர் உடை விளங்கியது. ராட்டையில் நூல் நூற்பதை காந்திஜி ஓர் ஒழுக்கமாகவும், ஆன்மிகப் பயிற்சியாகவும், ஒரு யாகமாகவும் அறிமுகம் செய்தார். எங்கோ ஒரு சிறுகிராமத்தில் தனது வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு ஒரு பெண் ராட்டை சுற்றுவது என்பது பிரம்மாண்டமான பிரிட்டிஷ் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் செயலாகவே கருதப்பட்டது.

தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞ ராக பணியாற்றியபோது பிரிட்டிஷ் பாரிஸ்டர்கள் அணிந்த தொழில்முறை ஆடையை காந்தியும் பயன்படுத்தினார். இந்திய வம்சாவளி தொழிலாளர்களைத் தென்னாப்பிரிக்க அரசு வன்மையாக தாக்கியபோது அதற்கு வருத்தம் தெரி விக்கும் வகையில் வெள்ளை வேஷ்டி யும் சட்டையும் அணிந்து சத்தியாகிரகத் தைத் தொடங்கி வைத்தார். இந்தியா திரும்பிய பிறகு, மேற்கத்திய உடைகள் அணிவதை முற்றிலும் கைவிட்டுவிட்டார். காந்தியின் உடை மாற்றம் ஏழை எளிய மக்களிடம் அவர் மீது அழுத்தமான நம்பிக்கையை உருவாக்கியது.

‘என் வாழ்க்கையில் நான் மேற் கொண்ட முடிவுகள் எல்லாம் திடீரென்று எடுக்கப்பட்டவைதான். அவற்றை ஆழ்ந்த விவாதங்களுக்குப் பிறகே எடுத்ததால் அதன் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அப்படி செய்யாமல் இருக்க முடியாது என்ற நிலையில்தான் முடிவு களை எடுத்திருக்கிறேன்’ என காந்தி தனது உடை மாற்றம் பற்றி குறிப்பிடுகிறார்.

அரசியலிலும் பொருளாதாரத்திலும் இந்தியா பெரும் வீழ்ச்சியை சந்தித்து வரும் இன்றைய சூழலில் காந்தியத்தின் தேவை மிக அதிகமாக உள்ளது. அதற் காக நாம் மீண்டும் மீண்டும் காந்தியைப் புரிந்துகொள்வதும் பின்பற்றுவதும் அவசியமாகிறது.

- இன்னும் வாசிப்போம்…

 

http://tamil.thehindu.com/general/literature/வீடில்லாப்-புத்தகங்கள்-53-எழுத்து-மட்டும்-போதாது/article7738064.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

வீடில்லாப் புத்தகங்கள் 54: நடந்து பாருங்கள்!

book_2585176f.jpg
 

திருச்செந்தூருக்கும், பழநிக்கும், வேளாங் கண்ணிக்கும் பாதயாத்திரை போகிறவர்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

பாதயாத்திரையின் நோக்கம் வழிபாடு என்றாலும் அதன் வழியே அடையும் அனுப வம் உடலையும் மனதையும் மாற்றிவிடக் கூடியது. கிடைத்ததை உண்டு, சூழ்நிலைக்கு ஏற்ப கிடைத்த இடத்தில் படுத்து உறங்கி, பலதரப்பட்ட மக்களையும் ஊர்களையும் கடந்து செல்வது அபூர்வமான அனுபவம்!

பெங்களுரு தேசிய விமான ஆய்வுக் கூடத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆ.பெருமாள். இவர் காட்டி சுப்ரமண்யா, திருப்பதி, மந்திராலயா போன்ற கோயில் களுக்கு பாதயாத்திரையாகப் போய் வந்த அனுபவத்தை சுவைபட எழுதியிருக்கிறார்.

‘காலச்சுவடு’ பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘பாதயாத்திரை’ என்ற நூல் வித்தியாசமான பயண நூலாகும். சுவாச ஒவ்வாமை நோயில் அவஸ்தை பட்டுவந்த பெருமாள், தனது பாதயாத்திரையின் மூலம் எப்படி நோய் நீங்கினார் என்பதை வாசிக்கும்போது வியப்பாக இருக்கிறது.

தனது பயணம் பற்றி விளக்கிக் கூறும் பெருமாள், ‘நடப்பது ஒரு சுகம். அதை நடந்து பார்த்தவர்கள் மட்டுமே உணர முடியும் பாதயாத்திரையின்போது கிடைப்பதை உண்ண வேண்டும். சூழ்நிலையையொட்டி உறங்க வேண்டும். வழியில் சந்திக்கும் மனிதர்கள் உங்களுக்கு சந்தோஷமும் தரலாம், சங்கடமும் தரலாம். ஆகவே, இதற்கெல்லாம் உடலும் உள்ளமும் பக்குவப் பட வேண்டும். பயணம் செய்பவர்களுக்கு ஒரே அறிவுரை நடங்கள் சுகப் படுங்கள்’ என்பதே என்கி றார்.

இவரது முதல் பயணம் எப்படி தொடங்கியது? பெருமாளின் நண்பரான நாகராஜ் 1994-ம் ஆண்டு பெங்களுருவில் இருந்து தர்மஸ்தலா வரை 330 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டு திரும்பினார்.

அந்த ஆசை பெருமாளுக்கும் தொற்றிக் கொண்டது. ஆனால், சுவாச ஒவ்வாமையால் எப்படி நீண்ட தூரம் நடக்க முடியும் என உள்ளூற பயம். இதற்காக முதல் நடைப்பயணமாக பெங்களுருவில் இருந்து 60 கிலோ மீட்டரில் உள்ள காட்டி சுப்ரமண்யா கோயிலுக்குப் போய்வருவது என முடிவு செய்துகொண்டார். திடீரென ஒருநாளில் மிக நீண்ட தூரம் நடக்க முடியாது என்பதால் பயணத்தின் முன்பாகவே தினமும் சில மைல்கள் நடந்து போய்வரத் தொடங்கினார். இதனால் நடப்பது எளிதாக மாறியது.

தன்னைப் போலவே கோயிலுக்குப் பாத யாத்திரை மேற்கொள்ளும் குழு ஒன்றுடன் இணைந்துகொண்டார் பெருமாள். நீண்ட தூரம் நடந்து பழக்கம் இல்லாததால் பயணம் தொடங்கிய முதல் நாளிலேயே உடல் சோர்ந்துவிட்டது. ஆனாலும் மனஉறுதியோடு நடந்து கொண்டேயிருந்திருக்கிறார்.

இரவு ஒரு வீட்டில் ராத்தங்கல். அங்கே ராகிக் களியும் குழம்பும் சாப்பிடத் தந்தார்கள். அதை சிரமத்தோடு சாப்பிட்டு முடித்து மொட்டை மாடியில் காற்றாட உறங்கினார். மறுநாள் அதிகாலையிலே நடைப்பயணம் தொடங்கியது.

அதிகாலையில் நல்ல காற்றையும் காலை வெயிலையும் அனுபவித்துக் கொண்டு நடந்தார். ஆனால், பலரும் வேகமாக அவரை தனியே விட்டு நடந்து போய்விட்டார்கள். மாலையில் அயர்ந்துபோய் கோயிலைப் போய்சேர்ந் தார். அவருக்காககாத்தி ருந்தவர்களுடன் வழிபாட் டுக்காக சென்றார்.

அடுத்தது திருப்பதி பாத யாத்திரை. முந்தைய பயண அனுபவம் இந்த முறை நடப்பதில் சிரமம் ஏற்படுத் தவில்லை. ஒவ்வொரு ஊராகத் தங்கி கிடைத்த உணவை உண்டு நடந்தார். மணிக்கு 6 கிலோ மீட்டர் நடப்பவர்கள் வழியில் எங்காவது இடம் கிடைத்தால் உறங்கி ஓய்வு எடுப்பார்கள். ஆனால், பெருமாள் மணிக்கு 4 கிலோ மீட்டர் நடக்க கூடியவர் என்பதால் ஆங்காங்கே சில நிமிடங்கள் ஒய்வு எடுத்துக்கொண்டு அசதியோடு நடந்து கொண்டேயிருந்தார்.

தசைப் பிடிப்புதான் நடைப்பயணத்தின் பெரிய பிரச்சினை. உணவு ஒத்துக்கொள் ளாமல் போவதால் ஏற்படும் வயிற்றுப் பிரச்சினைகளும் காய்ச்சலும் வராமல் பார்த்துக்கொண்டார்,

கால்வலி அதிகமாகவே ஒரு இடத்தில் அரை மணி நேரம் ஒய்வு எடுத்தார். ஆனால், மீண்டும் நடப்பதற்கு எழுந்து கொள்ள முயன்றபோது கால்களை அசைக்க முடிய வில்லை. தசைகள் பிடித்துக் கொண்டு விட்டன. லேசான காய்ச்சல் உண்டாகியிருந்தது. துணைக்கு யாருமில்லை. வேறுவழியின்றி அந்த வழியே வந்த இரண்டு இளைஞர்களிடம் உதவி கேட்டு சிரமப்பட்டு நாங்கலி என்ற ஊரை அடைந்தார். அன்றிரவு நன்றாக உறங்கி எழுந்தார். மறுநாள் காலையில் உடல் நலம் ஒரளவு தேறியிருந்தது. மனஉறுதியோடு மீண்டும் நடைப்பயணத்தை மேற்கொண்டார்.

அதிகாலை பயணமும் மலையேற்றமும் அவரது நுரையீரலை வலுப்படுத்தியது. பல ஆண்டுகளாக அவருக்கு இருந்துவந்த சுவாச ஒவ்வாமையின் தீவிரம் மிகவும் குறைந்துபோனது. தனது பயணத்தின் வழியே மனமும் உடலும் பண்பட்டுவிட்டன என்கிறார் பெருமாள்.

இரண்டு நடைப்பயணங்கள் தந்த உத்வேகம் காரணமாக பெங்களுருவில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரம் உள்ள மந்திராலயா நோக்கிய பாதயாத்திரைக்கு அடுத்து திட்டமிட்டார்.

இந்தப் பயணத்தில் தங்களைப் போலவே ஆயிரக்கணக்கான குழுக்கள் நடந்து போய்க் கொண்டேயிருப்பதை கண்டார். ஆகவே, எங்கேயும் உணவுக்கும் உறங்கும் இடத்துக்கும் பிரச்சினை வரவேயில்லை. பொதுமக்களும் குடிநீரும், பழங்களும் தந்து உதவி செய்தார்கள்.

தனது நடைப்பயணத்தில் தங்கிய வீடுகள், சந்தித்த மனிதர்களை சுவைபட விவரிப்ப தோடு பாதயாத்திரை குழுக்களுக்குள் நடக்கும் சண்டைகள், குருவாக வழிநடத்து பவர் செய்யும் அட்டூழியங்கள் என யாவற் றையும் வெளிப்படையாக பகிர்ந்துகொண்டி ருக்கிறார் பெருமாள்.

வயது வேறுபாடுகளைக் கடந்து கூட்டம் கூட்டமாக மனிதர்கள் புனித யாத்திரையாக நடந்து கொண்டேயிருப்பது நூற்றாண்டு களாக தொடர்ந்து வருகிறது. நடையால் மனிதர்கள் ஒன்று சேருகிறார்கள், வலுப்பெறு கிறார்கள் என்பது சந்தோஷம் அளிக்கவே செய்கிறது.

http://tamil.thehindu.com/general/literature/வீடில்லாப்-புத்தகங்கள்-54-நடந்து-பாருங்கள்/article7764622.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

வீடில்லாப் புத்தகங்கள் 55: மௌனி பேசுகிறார்!

mouniyin_marupakka_2593503f.jpg
 

மௌனியின் சிறுகதைகளைப் படிப்பது எப்போதுமே புதுவகை அனுபவமாக அமைகிறது. அவரது மொழி ஆளுமையும் கதை சொல்லும் முறையும் வியக்க வைக்கிறது. 24 சிறுகதைகள் மட்டுமே எழுதி ‘சிறுகதைத் திருமூலர்’ எனக் கொண்டாடப்படும் ஆளுமையாக விளங்குகிறார் மௌனி!

1907-ல் தஞ்சாவூர் மாவட்டத்தின் செம்மங்குடியில் பிறந்தவர் மௌனி. 1929-ல் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். சில ஆண்டுகள் கும்பகோணத்திலும் பிறகு சிதம்பரத்திலும் வசித்தார். இசையிலும் தத்துவத்திலும் தீவிர ஈடுபாடு கொண்ட மௌனி மணிக்கொடியில் எழுதியவர். எஸ்.மணி என்ற இயற்பெயரை ‘மௌனி’ ஆக்கியவர் எழுத்தாளர் பி.எஸ்.ராமையா. கல்லூரி காலத்தில் மௌனியை நண்பர்கள் ‘மைல்மணி’ என்று அழைப்பார்களாம். காரணம், ரன்னிங் ரேஸில் நன்றாக ஒடுவார்.

‘மௌனியோடு கொஞ்ச தூரம்’ என்று எழுத்தாளர் திலீப்குமார் இலக்கியச் சிந்தனைக்காக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது மௌனியின் புனைக் கதைகளைப் புரிந்துகொள்ளத் துணை செய்கிறது என்றால், ஜே.வி.நாதன் எழுதியுள்ள ‘மௌனியின் மறுபக்கம்’ அவரது வாழ்க்கையை, இலக்கிய ரசனையை, சிறுகதைகள் எழுதிய விதத்தைப் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவுகிறது. இந்நூலை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது.

மௌனியோடு 16 வருடங்கள் நெருங்கிப் பழகியவர் எழுத்தாளர் ஜே.வி.நாதன். ஆகவே இந்த நூலின் மூலம் மௌனியின் வாழ்க்கையையும் படைப்பு அனுபவத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

மௌனியின் ‘தவறு’, ‘அத்துவான வெளி’ ஆகிய சிறுகதைகளும் ஜே.வி.நாதனுக்கு மௌனி எழுதிய கடிதங்களும், இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

மௌனிக்கும் தனக்குமான நட்பு எப்படித் தொடங்கியது என்பதை நினைவுகொள்ளும் ஜேவிநாதன், அந்த நட்பு நாளடைவில் மிகவும் நெருக்கமாகி தினமும் மௌனியைத் தேடிப் போய்ச் சந்தித்து வந்ததையும், சில நாட்கள் மௌனியே அவரைத் தேடி வந்து உரையாடியதையும் நெகிழ்வோடு விவரித்துள்ளார்.

மௌனி அன்றாடம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்றுவரக்கூடியவர். ஆனால், கோயிலில் அவர் சாமி கும்பிடுவதில்லை. இது பற்றி ஜே.வி.நாதன் கேட்டதற்கு மௌனி சொன்ன பதில்:

“நான் ஒருநாள் வரலேன்னாலும் நடராஜரும் மத்த சாமிகளும் ‘ஏன் இன்னிக்கு வரலே’ன்னு கேட்டுக் கோவிச்சுப்பாங்கப்பா. அதனாலதான் நான் நாள் தவறாம அட்டெண்டன்ஸ் கொடுக்கறேன்!”

கடவுளையும் நண்பனாகக் கருதிய மனதே மௌனியிடம் இருந்தது. மௌனி தான் எழுதும் கதைகள் எதற்கும் தலைப்பு வைத்ததில்லை. ஒவ்வொரு கதையையும் திரும்பத் திரும்பப் பலமுறை எழுதக்கூடியவர்.

இந்தப் புத்தகத்தில் அப்படி ஒரு சம்பவத்தை விவரிக்கிறார் ஜே.வி.நாதன்:

‘மௌனியின் சிறுகதை ஒன்றை படியெடுக்க உதவியபோது, ஒவ்வொரு பக்கத்தையும் மௌனி மீண்டும் மீண்டும் திருத்திக் கொண்டேயிருந்தார். இரவெல்லாம் கண்விழித்துப் படி எடுத்தேன். அவரோ திருத்திய பக்கங்களில் மீண்டும் புதிதாகத் திருத்தம் போட்டுக் கொண்டேயிருந்தார். இதனால் எனக்கு எரிச்சலாக வந்தது. எனக்கு வயது அப்போது 22; மௌனிக்கு 64 வயது. அவர் மீதுள்ள மரியாதையால் கதையைப் பிரதியெடுத்துக் கொண்டிருந்தேன்.

ஒரு நள்ளிரவில் என்னிடம் வந்து நீ கரெக் ஷன் செய்து முடிச்சதும், அப்படியே என்கிட்ட காட்டமாக் கிளம்பி போய்த் தபாலில் சேர்த்துடு. இல்லாவிட்டால் நான் மறுபடியும் கரெக் ஷன் போட ஆரம்பிச்சிடுவேன் என்றார்’. மௌனியின் கதைகள் வடிவரீதியாகவும் மொழியிலும் கச்சிதமாக உருப்பெற்றதற்கு இதுவே காரணம்.

‘‘மௌனி தான் எழுதிய கதைகளைக் காப்பாற்றி வைத்துக் கொள்வதில் ஆர்வம் இல்லாதவர். நிறையப் படிப்பார். அவர் படித்த புத்தகங்களில் தத்துவம் குறித்த நூல்கள் அதிகமாக இருந்தன. அவரது உறவினர்களுக்குக் கூட அவர் ஓர் எழுத்தாளர் என்பது தெரியவே தெரியாது’’ என்கிறார் மௌனியின் சிறுகதைகளைத் தேடித் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டுவந்த எழுத்தாளர் கி.அ.சச்சிதானந்தம்.

மௌனிக்கு வயலின் வாசிக்கத் தெரியும். அவரது வீட்டில் ஒரு வயலின் வைத்திருந்தார். அதில் ஒரு அதிசயம் உண்டு. இசை எழுப்பும் கம்பிகளுக்குப் பதிலாகத் தேங்காய் நாரைப் பதப்படுத்தி, பழுப்பு சணல் போன்ற மெலிதான இழைக் கயிறுகளை அதில் இழுத்துக் கட்டியிருப்பார். வில்லை அந்த நரம்பு போன்ற இழைக் கயிற்றின் மீது வைத்து இழுத்தால் இசை மிகவும் சன்னமாகக் கீச்சுக் குரல் போல வெளிவரும். வீட்டுக்குள்ளிருக்கும் மனைவிக்குத் தன் வயலின் இசை தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்கு அவர் கண்டுபிடித்த ஐடியா அது.

மௌனிக்கு நான்கு மகன்கள் ஒரு மகள். முதல் மகன் சென்னையில் டிராம் விபத்தில் உயிரிழந்து போனார். இன்ஜினீயராகப் பணியாற்றிய இரண்டாவது மகனும் எதிர்பாராதபடி குளியல் அறையில் மின்சாரம் தாக்கி இளவயதில் இறந்து போனார். மூன்றாவது மகன் தத்துவம் படித்தவர். ஆனால், மனநிலை சரியற்று வீட்டிலேயே இருந்தார். அந்த மகனைப் பற்றிய கவலை மௌனிக்கு வாழ்நாள் முழுவதும் இருந்து வந்ததாம். நான்காவது மகன் அமெரிக்காவில் வசிக்கிறார்.

‘‘அனுபவ வெளியீட்டை அழகாகச் செய்தால் கலை ஆகும். அனுபவம் என்பது வார்த்தையற்றது. உணர்வால் பெறப்படுவது. உண்மையான கலைஞனுக்கு அனுபவம் வெளியீடு ஆகும்போது வார்த்தைகள் தாமாகவே வந்து விழுகின்றன. நாயைக் கட்டி இழுப்பதைப் போல வார்த்தைகளைக் கட்டி இழுப்பதெல்லாம் காலத்தில் அடிபட்டு போய்விடக்கூடியவை. ஒர் எழுத்தாளனுக்கு எதை எழுத வேண்டும் என்று தெரிந்திருப்பதை விட எதை எழுதக்கூடாது என்று அவசியம் தெரிந்திருக்க வேண்டும். வார்த்தைகளை வலிந்து அடுக்கி சுழற்றி மேற்பூச்சு நகாசு வேலை செய்பவன் ஒருபோதும் சிறந்த கலைஞன் ஆக மாட்டான்’’ எனக் கூறுகிறார் மௌனி.

ஆல்ப்ர்ட் பிராங்க்ளின் என்ற அமெரிக்க அறிஞர் மௌனியிடம் ‘‘நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள்?’’ எனக் கேட்டபோது, ‘‘என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை; அதனால் எழுதுகிறேன்’’ எனப் பதில் சொன்னார் மௌனி.

பெயரவில்தான் அவர் மௌனி. ஆனால், நிறையப் பேசக்கூடியவர். ‘‘பேசுவது என்பது வார்த்தைகள் மூலமாகத் தன்னைத்தானே தெளிவு படுத்திக் கொள்வது. ஆகவே, நிறையப் பேசுகிறேன். நான் பேசுவது எதிரில் இருப்பவர்களுக்காக அல்ல’’ என்கிறார் மௌனி.

எது நல்ல சிறுகதை என்ற கேள்விக்கு ‘‘நல்ல சிறுகதை என்பது ஒரு கவிதை. என் சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒரு கவிதையே’’ எனப் பதில் அளித்திருக்கிறார் அவர்.

டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, இப்சன், அனடோல் பிரான்ஸ், ஆன்டன் செகாவ் இவர்களின் படைப்புகளைத் தனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறும் மௌனி, ராபர்ட் ம்யூசில் எழுதிய ‘The Man Without Qualities’ நாவலை தனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறியிருக்கிறார்.

ஜே.வி.நாதன் தனது எழுத்தின் வழியே மௌனியை நம் கண்முன்னே கொண்டுவந்து காட்டுகிறார். நாமும் மௌனி அருகே அமர்ந்து உரையாடுவது போலவும் உடன் நடந்து செல்வது போலவும் நெருக்கமாக எழுதப்பட்டிருப்பதே இந்த நூலின் சிறப்பு.

‘மௌனியின் கதைகள் புரிவதில்லை’ என்பவர்கள் ஒருமுறை இதைப் படித்தால் மௌனியைப் புரிந்துகொள்வதோடு, அவரது கதைகளையும் புரிந்துகொள்ள முடியும்.

- அடுத்த வாரம் நிறைவுபெறும்...

http://tamil.thehindu.com/general/literature/வீடில்லாப்-புத்தகங்கள்-55-மௌனி-பேசுகிறார்/article7792245.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

வீடில்லாப் புத்தகங்கள் 56: நினைவூட்டும் காற்று!

book_2601121f.jpg
 

சோவியத் இலக்கியங்கள் தமிழுக்கு மிக முக்கியமான பங் களிப்பை செய்திருக்கின்றன. அதன் வழியே உருவானவர்களில் நானும் ஒருவன். எனது கல்லூரி நாட்களில் ரஷ்ய இலக்கியத்துக்குள்ளாகவே மூழ் கிக் கிடந்தேன். அப்போது வாசித்த ஒரு நாவல் இன்றுவரை என் விருப்பத் துக்குரிய நாவலாக இருக்கிறது.

பாஸூ அலீயெவா எழுதிய ‘மண் கட்டி யைக் காற்று அடித்துப் போகாது’ என்ற நாவல் ஒரு பெண்ணின் துயர நினைவு களை விவரிக்கிறது. மண்ணின் மணத் துடன் உயிர்த் துடிப்புள்ள கதாபாத்திரங் களுடன், கவித்துவமான வர்ணனைகளு டன் கூடிய இந்த நாவலை எத்தனை தடவை வாசித்தாலும் அலுப்பதே இல்லை.

‘ராதுகா பதிப்பகம்’ வெளியிட்ட இந்நூலை தற்போது ‘நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்’ மறுபதிப்பு செய்துள்ளது. தமிழில் இந்த நாவலை மொழியாக்கம் செய்திருப்பவர்: பூ.சோமசுந்தரம்.

தெற்கு ரஷ்யாவின் காஸ்பியன் கடல் பிரதேசத்தில் உள்ள தாஜிக்ஸ் தான் மலைகிராமம் ஒன்றில் பிறந்தவர் அலீயெவா. அவரது தாய் மொழி அவார். அதற்கு வரி வடிவம் கிடையாது. 1930-களில்தான் இதற்கு என புது வரி வடிவம் உருவாக்கப்பட்டது. ஆகவே, எழுத்து மரபு இம்மொழிக்கு கிடையது.

வாய்மொழி மரபைச் சேர்ந்த பாடல் களும், கதைகளும் மட்டுமே அவார் மக்களிடம் இருந்தன. பள்ளி வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்து, பின்பு ரஷ்யாவின் மிகமுக்கிய கவிஞர்களில் ஒருவராக உயர்ந்தார் அலீயெவா.

அவார் மொழியின் மகத்தான கவி ரசூல் கம்சுதேவ்.

‘நாளை அவார் மொழி மடியுமானால்

இன்றைக்கே நான்

இறந்து போவேன்’

- எனப் பாடியவர் ரசூல்.

ஒருமுறை ரசூல் கம்சுதேவ் இத்தா லியப் பயணத்தின்போது ஒரு வணிகர் வீட்டுக்கு விருந்துக்குச் சென்று இருந்தார்.

அந்த வணிக நண்பர் இனிமையாகப் பேசி, உபசரித்து பரிசுகள் எல்லாம் கொடுத்து அனுப்பி வைத்தார். ஊர் திரும்பியதும் வணிகரின் தாயைச் சந்தித்து அவரது மகனைச் சந்தித்த நிகழ்வைப் பற்றி எடுத்துக் கூறி விருந் தோம்பலுக்கு நன்றி கூறினார் ரசூல்.

வணிகரின் தாய் ரசூலிடம் ‘‘என் மகன் உங்களோடு அவார் மொழியில் பேசினானா?’’ என்று ஒரே கேள்வியை மட்டுமே கேட்டார்.

‘‘இல்லை…’’ என்று ரசூல் சொன் னதும், ‘‘அப்படியானால் அவன் என் பிள்ளை கிடையாது. அவன் பிணம். தாய் மொழியை மறந்தவன் பிணத்துக்கு சமம்’’ என்று சொல்லிவிட்டு அந்தத் தாய் கோபித்துக் கொண்டு போய்விட்டார் என ரசூல் கம்சுதேவ் குறிப்பிடுகிறார். அவார் இன மக்கள் அந்த அளவுக்குத் தாய் மொழியை நேசித்தார்கள்.

தான் எப்படி எழுத்தாளராக உருவானேன் என்பதை முன்னுரையில் அலீயெவா சுவைபட விவரித்திருக்கிறார்.

உராஷ் பைராம் பெருநாள் அன்று அதி காலையில் ஒரு கன்னிப் பெண் புல் வெளிக்குச் சென்று, தூய பீங்கான் கிண்ணத்தில் பனித் துளிகளைத் திரட்டிச் சேர்த்து, அந்தப் பனிநீரால் முகத்தை கழுவிக் கொண்டால்… அவள் பேரழகி ஆகிவிடுவாள் என்ற நம்பிக்கையிருந்தது.

அதிகாலையில் அலீயெவா பனித் துளிகளைச் சேகரிக்க புல்வெளிக்கு சிறுகிண்ணத்தை மறைத்து எடுத்துக் கொண்டு சென்றார். எங்கு பார்த்தாலும் அழகான பூக்கள். ஒவ்வொன்றிலும் ததும்பும் பனிநீர். திடீரென அவருக்கு கவலை உண்டானது. பனித் துளிகளை நாம் வடித்து எடுத்துக் கொண்டால் பூக்களுக்கு வனப்பும் தளதளப்பும் போய்விடுமே… என்ன செய்வது? ஆனால், அழகி ஆகவேண்டும் என்ற விருப்பம் அவரை உந்தித் தள்ளியது. ஒரு நீலமலருக்கு முன்பாக மண்டியிட்டு அதில் இருந்த பனிநீரைக் கிண்ணத்தில் வடித்துக் கொண்டார்.

பக்கத்தில் இன்னொரு பூச்செடி இருந் தது. அது கோணலாக வளைந்திருந்தது. அந்தச் செடியை தழைக்கவிடாமல் ஒரு பெரிய பாறாங்கல் அழுத்திக் கொண்டிருந்தது. அந்த வேதனையில் கண்ணீர் விடுவது போல பூச்செடியில் பனித் துளிகள் சிந்திக் கொண்டிருந்தன.

இதைக் கண்ட அலீயெவா கல்லை முழுபலத்துடன் அசைத்து பெயர்த்துத் தள்ளியபோது, திடீரென குபுக் குபுக் என்ற சத்தத்துடன் ஊற்று பெருகிவரத் தொடங்கியது. புதிய மலை ஊற்று பொங்கி வந்ததைப் பற்றி அம்மாவிடம் சொன்னபோது அம்மா உற்சாகத்துடன் சொன்னார்:

‘‘புது ஊற்று பெருகும்போது அதன் முன்பாக நின்று வணங்கி எதை வேண்டிக் கொண்டாலும் அது நிச்சயம் நிறைவேறும்’’.

அம்மாவும் அலீயெவாவும் ஊற்றைத் தேடிப் போனார்கள். அலீயெவாவுக்கு என்ன வேண்டிக் கொள்வது எனப் புரிய வில்லை. மனதில் எத்தனையோ ஆசை கள் இருந்தன. ஆனால், ஊற்றருகே மண்டியிட்டு மெலிந்த கைகளை வானை நோக்கி உயர்த்தி, மெதுவான குரலில் தனது தந்தை வீட்டுக்குத் திரும்பி வர வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தார்.

‘‘இறந்தவர்கள் உயிர்த்து எழுவது இல்லை’’ என்று சொல்லிவிட்டு, அம்மா ஊற்றின் முன்பாக ‘‘இந்த உலகில் போர் மூள விடாதே. எங்கள் ஆண்களைக் காப்பாற்று’’ என இறைஞ்சினார். அவரது கண்ணீர்த் துளிகள் ஊற்றில் கலந்தன. புல்வெட்டுபவனின் அரிவாளுக்கு முன்பு இளம்புல் நடுங்குவது போல ‘போர்’ என்ற பயங்கர சொல்லுக்கு முன்பு அம்மா பயந்து நடுங்கினார்.

அந்த சம்பவம் அலீயெவாவை மிக வும் பாதித்தது. அன்றுதான் தனது முதல் கவிதையை அவர் எழுதினார். ‘சமாதானப் பதாகை’ என்ற அந்தக் கவிதையை அம்மாவுக்குப் படித்துக் காட்டினார் அலீயெவா. அந்தக் கவிதை பள்ளியின் சுவரொட்டி பத்திரிகையில் வெளியிடப் பட்டது. அப்படித்தான் அலீயெவா எழுத்தாளராக உருவானார். அவரது சொந்த வாழ்வின் அனுபவத்தில் இருந்தே ‘மண்கட்டியைக் காற்று அடித் துப் போகாது’ நாவல் உருவாக்கப் பட்டிருக்கிறது.

மூன்று பெண் குழந்தைகளையும் வைத்துக்கொண்டு அகமதின் மனைவி பரீஹான் மிகுந்த கஷ்டத்தில் குடும்பம் நடத்துகிறாள். அவர்களுக்கு உதவுகிறார் கள் உமர்தாதா - ஹலூன் தம்பதிகள்; பரீஹானை அடைய இச்சைக் கொண்டு அலையும் ஜமால்; அவனுடைய மகனுக்கும் பாத்திமாவுக்கும் ஏற்படும் காதல்; உமர்தாதாவின் மகனுக்கு பாத் திமாவை மணம் முடிக்க பெரியவர்கள் கொள்ளும் விருப்பம்; பரீஹான் மீது விழும் கொலைப் பழி; நீதி விசாரணை; போரின் விளைவால் முறிந்து போகும் காதல்… எனப் பட்டுநெசவைப் போல வண்ண இழைகளால் இந்த நாவலை நெய்திருக்கிறார் அலீயெவா.

இதில் உமர்தாதா மறக்க முடியாத கதாபாத்திரம். அந்தக் கிழவன் மண்ணை நேசிப்பது போல இன்னொருவர் நேசிக்க முடியுமா என்பது சந்தேகமே. அவரது கருணையும், துணிவும், உழைப்பும், மன உறுதியும் வியப்பளிக்கிறது. பேச்சுக்குப் பேச்சு அவர் பழமொழிகளை உதிர்க் கிறார். அதில் ஒன்றுதான் ‘மண்கட்டியைக் காற்று அடித்துப் போகாது’ என்பது. இதுபோல நிறைய பழமொழிகள் அவர் பேச்சில் வெளிப்படுகின்றன.

அவார் இன மக்கள் மண்ணை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதற்கு இந்த நாவல் சிறந்த உதாரணம்.

அவார் இனப் பெண்கள் தங்களுக் குள் சண்டையிடும்போது, கோபத்தில் ‘‘உன் குழந்தைக்குத் தாய்மொழி மறந்து போகட்டும்; தாய்மொழியைச் சொல்லித் தர வாத்தியார் கிடைக்காமல் போகட்டும்’’ என சாபம் கொடுப்பார்கள் என்று படித்திருக்கிறேன்.

எவரது சாபமோ தெரியவில்லை, தமிழ்மொழி அந்த நிலையில்தான் இன்று வாழ்கிறது. அலீயெவாவைப் போல ரசூல் கம்சுதேவைப் போல தாய் மொழியின் பெருமைகளை உலகறிய செய்யவும், மொழியை நேசிக்கவும், வளர்த்தெடுக்கவும் வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

- நிறைந்தது

தேடித் தேடிப் படிப்பதும்; படித்ததைப் பகிர்ந்துகொள்வதுமே எனது வாழ்க்கை. பழைய புத்தகக் கடையில் கிடைத்த சில அரிய புத்தகங்களைப் பற்றி எழுதத் தொடங்கி, அதிகம் கவனம் பெறாத புத்தகங்களை அறிமுகம் செய்யும் தொடராக நீண்டது ‘வீடில்லாப் புத்தகங்கள்’.

ஓராண்டுக்கும் மேலாக வாசகர்களுடன் நான் படித்த புத்தகங்களைப் பற்றிப் பகிர்ந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இத்தொடர் வெளிவரக் காரணமாக இருந்த ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், ஆசிரியர் குழுவினருக்கும், வாசகர்களுக்கும் என் மனம் நிரம்பிய நன்றி!

esra_2113525a.jpg

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-55-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/article7817658.ece?ref=relatedNews

 

நிறைந்தது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடில்லாப் புத்தகங்கள்  எம் மன வீடுகளில் நிறைந்து விட்டது...!

Link to comment
Share on other sites

வீடில்லாப் புத்தகங்கள் தொடர்: புத்தகத்தின் பின்பக்கம்

book_2609623f.jpg
 

பழைய புத்தகக் கடைகளில் பல அரிய நூல்களை வாங்கியிருக்கிறேன். அவற்றில் சில, ஆண்டுக்கணக்கில் மறுபதிப்பு காணாதவை. இதுபோன்ற புத்தகங்களை அறிமுகம் செய்யலாமே என்றுதான் ‘வீடில்லாப் புத்தகங்கள்’ தொடரை வியாழன்தோறும் எழுத ஆரம்பித்தேன்.

புத்தகங்களைப் பற்றி மட்டுமின்றி சாலையோர புத்தகக் கடைக்காரர்களின் பிரச்சினைகள், பல்வேறுவிதமான வாடிக்கையாளர்கள் பற்றியும் எழுத வேண்டும் எனத் திட்டமிட்டேன். அப்படித்தான் இத்தொடர் வெளியாகத் தொடங்கியது.

ஊர் ஊராகப் புத்தகக் கடைகளைத் தேடி அலைந்திருக்கிறேன். தனிநபர் நூலகங்கள், பொது நூலகங்கள், தூதரக நூலகங்கள் என பல்வேறுவிதமான நூல கங்களுக்கு சென்று வந்திருக்கிறேன். புத்தகங்களை அடுக்கி வைத்து பெரிய நூலகம் வைக்குமளவு வீட்டில் இட மில்லை. ஆகவே, மூன்று நான்கு அல மாரிகளில் தேவையானதை வைத்து விட்டு மற்ற புத்தகங்களை அட்டைப் பெட்டிகளில் அடைத்து பரணில் போட்டு வைத்திருக்கிறேன்.

புத்தகங்களைத் தேடித் தேடி சுவாச ஒவ்வாமை வந்துவிட்டது. மருத்துவர்கள் பழைய புத்தகக் கடை பக்கமே போகக்கூடாது, புத்தகத் தூசிதான் ஒவ்வாமைக்கு முக்கிய காரணம் என அறிவுரை சொன்னார்கள். ஆனால், அப்படி வாழ என்னால் முடியாது. புத்தகங்கள்தான் எனக்கு மருந்து என ஒவ்வாமையை சமாளித்த படியே இன்றும் புத்தகங்களைத் தேடி அலைந்துகொண்டுதான் இருக் கிறேன்.

தொடர் வெளியாக ஆரம்பித்த 2 வாரங்களுக்குப் பிறகு ஒரு வியாழன் காலை எனக்கு ஒரு பெரியவர் தொலை பேசியில் அழைத்து, ‘‘சென்னை திருவல்லிக்கேணியில் தான் 40 வருஷங் களாக பழைய புத்தகக் கடை நடத்தி வருகிறேன். என் அனுபவத்தில் எங்களை கவுரவப்படுத்தி முதன்முறையாக நீங்கள்தான் எழுதியிருக்கிறீர்கள், வாழ்த் துகள்’’ எனச் சொன்னார். அவரது கடையிலும் நான் புத்தகங்கள் வாங்கி யிருக்கிறேன் என்றேன்.

இது நடந்த அடுத்தவாரம், கோவை யில் உள்ள பழைய புத்தகக் கடை வாசலில் ‘வீடில்லாப் புத்தகங்கள்’ தொடரை ஜெராக்ஸ் எடுத்து பெரியதாக ஒட்டி வைத்திருக்கிறார்கள் என போட்டோ எடுத்து ஒரு நண்பர் வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தார்.

பழைய புத்தக கடை நடத்துபவர் கள், வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப் பாளர்கள், நூலகர்கள், பேராசிரியர்கள், திரைத்துறை கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் இந்தத் தொடரைப் பாராட்டி என்னோடு பேச ஆரம்பித்தார்கள்.

வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ சிறுகதை தொகுப்பைப் பற்றி எழுதிய வாரத்தில், ஓவியர் அமுதோன் தொலைபேசியில் அழைத்து நன்றியோடு பாராட்டி ‘‘இத்தனை வருஷங்களுக்குப் பிறகு நூலின் முகப்பு ஒவியத்தை பாராட்டி எழுதியிருக்கிறீர்கள், மிகுந்த சந்தோஷ மாக இருக்கிறது’’ என நெகிழ்ந்துபோய் சொன்னார்.

ஒவ்வொரு வாரமும் இத்தொடரை வாசித்து முடித்த கையோடு என்னை தொலைபேசியில் அழைத்து பேசுபவர் வேலூர் லிங்கன். அவரைப் போல சிறந்த வாசகரை காணமுடியாது. நெ.து.சுந்தர வடிவேலு அவர்களின் நினைவலைகள் நூலைப் பற்றி எழுதியபோது அவரது சகோதரர் குடும்பத்தைச் சேர்ந்த லெனின் என்னை அழைத்து பாராட்டினார். கல்வி யாளர் ராஜகோபாலன், துளசிதாசன் உள்ளிட்ட பல ஆசிரியர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதியதற்காக நன்றி தெரிவித்தார்கள். இந்த நூல் எங்கே கிடைக்கும் எனக் கேட்டு அறிந்த தாமோதரன் என்ற ஆசிரியர் 50 பிரதிகள் வாங்கி தனக்குத் தெரிந்த ஆசிரியர்களுக்குப் பரிசளித்தார். இது போலவே பெரம்பலூர் அருகேயுள்ள சிறுமலர் பள்ளியில் இந்தத் தொடரை பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வாரா வாரம் அறிமுகம் செய்து வைத்தார்கள்.

‘ராஜராஜ சோழன்’ திரைப் படம் உருவான விதம் பற்றிய புத்தக அறி முகத்தை படித்துவிட்டு, அந்தப் புத்தகம் தனக்கு வேண்டும், ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு தந்துவிடுகிறேன் என இதை வாங்கிப் போவதற்காக மயிலாடுதுறை யில் இருந்து மூர்த்தி என்பவர் வந்து போனது நினைவில் பசுமையாக இருக்கிறது.

இது போலவே 'மஞ்சள் பிசாசு' என்ற புத்தகம் பற்றி நீங்கள் எழுத வேண்டும் என அந்த நூலை கூரியரில் அனுப்பி வைத்தவர் நகைத்தொழிலாளி அண்ணாமலை.

தோழர் நல்லகண்ணு, தோழர் ஜி.ராம கிருஷ்ணன், தோழர் நன்மாறன், டி.லட்சு மணன், தோழர் எஸ்.ஏ.பெருமாள். தமிழருவி மணியன், இறையன்பு ஐஏஎஸ், டாக்டர் கே.எஸ், திருப்பூர் எம்.எல்.ஏ. தங்கவேலு, மருத்துவர் சிவராமன், பாரதி கிருஷ்ணகுமார், துளசிதாசன், எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன், சா.தேவதாஸ், ச.தமிழ்செல்வன், பவா செல்லதுரை, கவிஞர்கள் தேவதச்சன், மனுஷ்யபுத்திரன், தங்கம் மூர்த்தி, இயக்குநர்கள் லிங்குசாமி, தங்கர் பச்சான், ஏ.ஆர்.முருகதாஸ், வசந்த பாலன், சசி, ‘சமரசம்’ ஆசிரியர் அமீன், பேரா. சிவசுப்ரமணியன். டாக்டர் வீ.அரசு, டாக்டர் ராமகுருநாதன், திருப்பூர் ஈஸ்வரன், விமர்சகர் முருகேச பாண்டியன், நாடகக் கலைஞர் கருணா பிரசாத், விஜயா வேலாயுதம், காந்தி கண்ணதாசன், அன்னம் கதிர், சந்தியா நடராஜன், காவல்துறை உயரதிகாரி செந்தில்குமார், மருத்துவர் எஸ்.வெங் கடாசலம், ’புதியதலைமுறை’ ஜென்ராம், சிவகாசி தொழிலதிபர் சந்திரமோகன் போன்ற பலரும் இந்தத் தொடரில் வந்த கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து பாராட்டு தெரிவித்தார்கள்.

பல்லாயிரக்கணக்கான வாச கர்கள் இந்தத் தொடரை வாசித்து பாராட்டியதோடு, நான் குறிப்பிட்ட புத்தகங்களை வாங்கி சேகரித்துக் கொண்டது எனது எழுத்துக்குக் கிடைத்த கவுரவமாக கருதுகிறேன். அவர்களுக்கு எனது அன்பும் நன்றியும். சிறிய இளைப்பாறுதலுக்குப் பிறகு மீண்டும் எழுதுவேன்.

‘வீடில்லாப் புத்தகங்கள்’ கட்டுரைகள் ‘தி இந்து’ வெளியீடாக விரைவில் புத்தகமாக வெளியாகும்.

இந்தத் தொடரை சாத்தியப்படுத்திய ‘தி இந்து' ஆசிரியர் குழுவினருக்கு எனது மனம் நிரம்பிய நன்றி.

esra_2113525a.jpg

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

 

http://tamil.thehindu.com/general/literature/%

 

Link to comment
Share on other sites

  • 5 months later...

புத்தகம் 'பழைய' புத்தகமே...

கோவை உக்கடத்தில் இறங்கி 'ஒல்டு புக் மார்கெட்' எது என்று கேட்டால் எல்லோருக்கும் தெரிகிறது, கையை பிடித்து கூப்பிட்டு போகாத குறையாக வழி சொல்கிறார்கள்.
தரைத்தளத்தில் சுமார் 31 புத்தககடைகள் உள்ளன, ஒவ்வொரு கடையிலும் விற்பவர் நிற்பதற்கு மட்டும் இடம் விட்டு மற்ற சகல இடங்களிலும் புத்தகங்கள் புத்தகங்கள் புத்தகங்களாக அடுக்கிவைத்துள்ளனர்.

gallerye_17435474_1500787.jpg

gallerye_174345500_1500787.jpg

gallerye_174337664_1500787.jpg


எல்லாமே பழைய புத்தகங்கள்தான் என்றாலும் துாசு தட்டி சுத்தம் செய்து முடிந்தவரை புது புத்தகமாக்கி வைத்துள்ளனர்.
தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் புத்தகங்கள் உள்ளன. ஆங்கில புத்தகங்களை பொறுத்தவரை தொழில் நுட்பம் படிக்கும் பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கான புத்தகங்கள்தான் பெரும்பாலும் இருக்கிறது.

மருத்துவம் மற்றும் என்ஜீனியரிங் தொடர்பான எங்கும் கிடைக்காத பல புத்தகங்கள் இங்கு கிடைக்கின்றன. இந்த புத்தககடைக்காரர்கள் வெளியூரில் இருந்து வரும் போனில் கேட்கப்படும் தொழில்நுட்பம் தொடர்பான புத்தகங்களை எளிதில் தேடி எடுத்து தருவதும்,அந்த புத்தகம் இல்லை அதே ஆசிரியர் எழுதிய இன்னோரு புத்தகம் இருக்கிறது அதை அனுப்பலாமா? என்று கேட்டு அனுப்புவதும் ஒரு ஆச்சர்யம் என்றால், அந்த புத்தககடலில் எந்த புத்தகம் எங்கு இருக்கிறது என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு கேட்ட சில நிமிடங்களில் எடுத்து தருவது இன்னோரு ஆச்சர்யம்.
எந்த புத்தகம் என்றாலும் புத்தகத்தில் போட்டுள்ள விலையில் இருந்து நாற்பது சதவீதம் கழித்துக்கொண்டு அறுபது சதவீதத்திற்கு விற்கிறார்கள். நீங்கள் எந்த பழைய புத்தகம் கொடுத்தாலும் அதை நாற்பது சதவீதத்திற்கு வாங்கிக்கொள்கிறார்கள். இடைப்பட்ட இருபது சதவீதத்தில்தான் இவர்களது வாழ்க்கை ஒடிக்கொண்டு இருக்கிறது.இவர்களது சமீபத்திய பிரச்னை ஆன் லைனில் புத்தகங்களை விற்பதுதான், இதை தடை செய்தால் போதும் எங்களைப் போன்றவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்கின்றனர்.


தமிழ் புத்தகங்களை பொறுத்தவரை நுாறு வருடத்திற்கு முந்திய கையால் எழுதப்பட்ட மைசூரு வைத்தியக்குறிப்பு உள்ளீட்ட பல அபூர்வ புத்தகங்கள் இங்கு வந்து விற்பனையாகி உள்ளது. புத்தகத்தை வாங்குபவர்கள் இது எவ்வளவு அபூர்வமானது பழமையானது தெரியுமா? இதை இவ்வளவு குறைந்த விலைக்கு விற்கிறீர்களே! பத்திரப்படுத்தி பாதுகாத்து வைத்தால் பிற்காலத்தில் இந்த புத்தகம் உங்களுக்கு ஒரு பொக்கிஷம் போல பெரும் பணம் கொடுக்கும் என்பார்கள் ஆனால் நாங்கள் அப்படி எல்லாம் எந்த புத்தகத்தையும் பாதுகாத்து வைத்துக் கொள்வது இல்லை நீங்களே பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி பழைய புத்தக விலைக்கே விற்றுவிடுவோம்.
வழக்கமாக வாடிக்கையாளர்கள் கோவை மற்றும் ஈரோடு பகுதிகளில் இருந்து நிறைய பேர் வருவர், இப்போது வெளியூரில் இருந்தும் கொஞ்சம் பேர் வருகின்றனர், ஒரு முறை வந்து பழகிவிட்டால் போதும் பிறகு போனிலேயே அவர்கள் கேட்கும் புத்தகத்தை அனுப்பிவிடுவோம், எங்களிடம் இல்லை என்றாலும் வாங்கியாவது அனுப்பிவைப்போம்.

பெரிதாக வருமானம் இல்லாவிட்டாலும் அப்பா அண்ணன் காலத்தில் இருந்து இதே தொழிலில் இருந்துவிட்டோம் மேலும் மாணவர்கள் படிப்பிற்கு உதவுகிறோம் என்பதில் கிடைக்கும் மனநிறைவு பணத்திற்கும் மேலானது.
இத்தனை சிரமத்திற்கு நடுவிலும் இந்த பழைய புத்தகக்கடைகாரர்கள் ஒன்று சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு ஒரு அறக்கட்டளை நடத்திவருகின்றனர். இதில் சேரும் பணத்தை மருத்துவம் பார்க்க பணமில்லாமல் தவிக்கும் ஏழை நோயாளிகளை கண்டறிந்து உதவி வருகின்றனர்.அந்த வகையில் இதுவரை இருபது லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர் என்பதை கேட்கும் போது அவர்கள் விற்கும் பழைய புத்தகங்களின் மீது புதிய மரியாதை ஏற்படுகிறது.

உக்கடம் ஒல்டு புக் மார்கெட் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் இவர்களது மருத்துவ சேவையை பாராட்ட நினைப்பவர்களும் ஒருங்கிணைப்பாளர் ஹபீப்பிடம் பேசலாம் எண்: 9843337388.
-எல்.முருகராஜ்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1500787

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.