Archived

This topic is now archived and is closed to further replies.

பெருமாள்

ஐ.நா. ராஜபக்சே பேச, கருப்புக்கொடி- கண்ணாடிய திருப்பினா எப்படிடா வண்டி ஓடும்?

Recommended Posts

ஐ.நா.சபைக் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர். சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.கருணாநிதி உள்ளிட்ட திமுகவினர் அனைவரும் கருப்புச்சட்டை அணிந்து தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருணாநிதி அறிக்கை மூலம் கருப்பு தினம் கொண்டாட அழைப்பு விடுத்திருந்தார்.
இதுல என்ன லாஜிக் இருக்குன்னே தெரியலை. இங்க இருந்து கருப்பு சட்டை போட்டு வீட்ல கறுப்புக் கொடி ஏத்தினா என்னவிதமான ஆக்கப்பூர்வமான விளைவை உண்டாக்கும்..? எதுக்காக இப்படி பண்ணனும்..? இதனால் ராஜபக்சேவுக்கு என்னவிதமான நெருக்குதலை ஏற்படுத்தும்..?? யார் என்ன கலர் சட்டை போட்டு இருக்காங்கன்னு கணக்கெடுத்தா ஐநாவுல பேசவைப்பாங்க..?உண்மையிலேயே தெரியாம கேக்குறேன்.


ஆட்டோ ஓடாததற்கு காரணம் கண்ணாடியை திருப்பி வச்சிருந்தது தான்.  அதை சரியா வச்சதும் பாருங்க பிரச்சினையில்லாம ஓடும்.

kannaadi.png

10599541_560157774114989_448207308520586
 

Share this post


Link to post
Share on other sites

திமுகவில் காணாமல் போனவற்றுள் முதன்மையானது பகுத்தறிவு!! :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • 60,330 have signed. Let’s get to 75,000       https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-hugh-mcdermott-sustain-his-support-for-the-australian-tamil-community
    • நீங்கள் சொல்வதனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் கிருபன் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன். ஈழத்தில், பெரும்பான்மை சிங்கள இனவாதத்தினால் பாதிக்கப்பட்ட கிருபன், தமிழகத்தில் சிறுபான்மை தெலுங்கர்கள், அரசியல் அதிகாரத்தில் இருந்து கொண்டு, பெரும்பாண்மை தமிழர்களை ஆள்வதை என்ன கோணத்தில் நோக்குகிறார் என்கிற கேள்வி எழுகின்றது. எமது நாட்டின் அரசியல் அனுபவத்தினால் பயம் கொள்வதாக கூட இருக்கலாம். பண்டாரநாயக்க (தெலுங்கர்) சிங்கள தேசியவாதம் பேசி, சிங்கள மட்டும் சட்டம் கொண்டுவருவேன் என்று என்று பேசி பதவிக்கு வந்தார், சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டனர். இன்றும் அவர்கள் அதேயே பேசி அரசியலுக்கு வருகின்றனர். தமிழகத்தில், நாம் தமிழர் நிலைப்பாடும் அதேபோல அமையுமோ என்று அவர் கவலை கொள்வது நியாயம். ஆயினும் பெரும்பான்மையினமாக அங்கே தமிழர் இருந்தாலும், ஆளும் சிறுபான்மையினர், ஊழல் இல்லாத, நேர்மையான ஆட்சி செய்தால், சீமானுக்கு அங்கே இடமில்லை என்பதும் உண்மைதானே. 350 கோடி பிரசாந்த் கிசோருக்கு கொடுத்து, வாக்குக்கு காசும் கொடுத்து பதவிக்கு வருபவர்கள், அந்த செலவழித்த பணத்தினை எடுக்க, இன்னும் ஊழல் செய்வார்களே. அதுக்கு மிச்சம் இருக்கும் மணலையும், மலையினையும் வித்து துளைப்பார்களே என்பதே என்போன்றவர்கள் பலர் அச்சம்.  சீமான் வேண்டாம் என்று சொன்னால், அப்படியானால் இந்த ஊழல் முதலைகளின் கையில் தமிழகம் என்னாகும் என்றும் சொல்லவேண்டும். அதிமுகவின் ஊழல் விபரம், மோடி கையில் இருப்பதால் தான் நீட், gst போன்ற எதிலுமே மத்திய அரசின் மூக்கு நுழைத்தலை தடுக்க முடியவில்லை. இதே நிலை தான் திமுக வந்தாலும். இதனால் தான் சீமான் திமுகவால் கடுமையாக எதிர்க்கப்படுகின்றார்.  சீமான் எதிர்ப்பு வேறு, அதுக்காக திமுக ஆதரவு நிலைப்பாடு எடுப்பது, ஊழலை ஆதரிப்பது ஆகிவிடும் என்று அவர் நினைக்கவில்லை என்று ஆதங்கம் இருந்தது. அதனால் தான் திமுக விடீயோக்களை கிருபன் இணைத்தபோது, கடுமையாக எதிரித்தேன்.   
    • சம்மந்தன் அவர்கள் தனது நண்பராக தனிப்பட்ட ரீதியில் வாழ்த்து கூறலாம்.  சம்மந்தரின் தனிப்பட்ட வாழ்த்து அவரது கட்சியோ அல்லது அவரது மக்களோ ஏற்றுக்கொள்ளும் கருத்தாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. தமிழ் அரசியல்வாதிகள் காலையில் பாராளுமன்றத்தில் அனல் பறக்க சிங்கள அரசியல்வாதிகளுடன் வாதம் செய்துவிட்டு மாலையில் ஒன்றாக அமர்ந்து தண்ணி அடித்து மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆக மொத்தத்தில் சம்மந்தரின் இந்த வாழ்த்து செய்தியில் எமக்கு செய்தி ஏதும் இல்லை? 
    • அக்கருத்து இத்திரியின் போக்கு குறித்த பொதுவான கருத்தேயன்றி உங்களை குறிப்பிட்டு எழுதப்படவில்லை.        ஈழத் தமிழரின் போராட்டம் தோற்றதிலும் இனப்படுகொலையிலும் இந்திய மததிய அரசின் துரோகங்கள் திராவிடக் கட்சிகளின் துரோகஙகளின் எதிரவினை தான் நாம தமிழர் என்ற தமிழ் தேசீய எழுசசி. பின்னர் அரசியல் அதிகாரம் அவசியம் என்ற அடிப்படையில் அரசியல் கட்சியாக வளர்கின்றது. ஈழப்போரின் முடிவின் நீட்சிதான் இந்த இனத் தேசீய எழுச்சி. ஒரு விடுதலைப்போராட்டம் எபபொழுதும் முற்று முழுதாக முடிவதிலலை. ஈழ விடுதலைப் போராட்டம்  புலிகள் தலைவர் ஈழத்தமிழர்கள்  அவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளும் தான் இந்த எழுச்சியின் அடிப்படை - பின்னர் அது தமிழகத்தின் பல்வேறு தள அரசியல் சமூக பிரச்சனைகளோடு விரிவடைகின்றது. இந்தக் காலத்தில் சீமான் ஈழத்தமிழரின் போராட்ட அடயாளங்களை தக்கவைக்கின்றார், பின்னர் வேறுரொவர் தககவைக்கலாம். புலம்பெயர் தமிழர்களாகிய நாம் போராட்டம்  தியாகஙகள் இனப்படுகொலை நிகழ்வுகளை உயிரப்புடன் வைத்திருக்க தவறுகின்றோம்.. அதற்கு பதிலாக சீமானை தூற்ற முற்படுகின்றோம்?   இந்த தலைமுறைக்கும் அடுத்த தலைறைக்கும் உள்ள கால இடைவெளியில் ஈழ விடுதலைபபோரும் இனப்படுகொலையும் உயிர்புடன் இருக்கவேண்டும்.. உயிர்புடன் இல்லாத பட்சத்தில் எதிர்காலத் தலமுறை புதிதாக உணர்வுபெற்று எழுச்சி பெற வாய்ப்பில்லை. உயிர்புடன் வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் பணியை ஈழத்தமிழராகிய நாம் எதிர்க்க தேவையில்லை. புலம் பெயர்ந்தவர்கள் தங்களாலனவரை மாவீரர் தினங்கள் இனப்படுகொலை தினைங்களை  எழுச்சியுடனும் உணர்வுடனும் தொடரவேணும். அதை விடுத்து நாம தமிழர் கட்சியை எதிர்ப்பதும் ஈழவிடுதலைப்போர் இனப்படுகொலை பற்றி பேசக் கூடாது என்பதால் என்ன நன்மை நிகழப்போகின்றது. ? இவைகள் தவிர்க்க முடியாதவை. நாயக்கர் கால ஆட்சியின் பின்னர் தமிழராக அடயாளப்படுத்துகின்றவர்கள்  கைகளில் தான் தமிழக அரசியலின் பொரும்பான்மை  அதிகாரம் உள்ளது . சிறு வணிகங்கள பெரு வணிகங்கள் அரசு துறை பணிகள் , சினிமாத் துறை , தலை நகர் சென்னையின் வர்த்தகம் என இந்த அதிகாரம் விரிவடைந்துள்ளது. இவைகள் பற்றி பேசாமல் தமிழ்த் தேசீய எழுச்சி சாத்தியமில்லை. திராவிடமா தமிழ்த்தேசீயமா என்று வரும்போது  பெரும்பாலான திராவிட கொள்கை ஈர்பாளர்கள் திராவிடத்தின் பக்கமே செல்கினறார்கள். இதன் அரசியல் தள விழைவு ஸ்டாலினையோ அவரின் மகன் உதயநிதியையோ அவரின் மகனையோ தமிழகத்தின் அரசியல் அதிகாரத்தில் அமர்த்துவது என்பது தெரிந்தும் அதை செய்கின்றார்கள், இதற்கு சுபவி வைககோ  மதி மாறன் என பலரை எடுத்துக்காட்டலாம். ஆனால் மஞ்சள் பையுடன் ரெயிலுக்கு ஐம்பது பைசா இல்லாமல் அரசியல் தொடங்கிய கருணாநிதியின் ஊளல்கள் சொத்துக் குவிப்புகள்  குடும்ப அரசியல் தொடக்கம் காங்கிரஸ் பிஜேபி கூட்டணிகள் இறுதியாக திரும்ப ஆட்சியை பிடிப்பதற்கு பிரசாந் கிஷே◌ார் என்கிற பார்பனரின் கார்பரேட்  கம்பனியுடன் 350 கோடிக்கு ஒப்பந்தம் செய்து வேலை செய்வது தெரிந்தும் தமிழ்த்தேசீயத்தை விட திராவிடத்தின் பக்கம் நிற்கின்றனர்..  பெரியார் கொள்கைகளின் பற்றாளர் சுபவி ஸ்டாலினை தளபதி என்று துதிபாடுகின்றார், ஈழப்போராட்டம் முடிந்துபோன கதை என்கின்றார். வைகோ தமிழ்த்தேசீயம் என்று கிழம்பியிருக்கிறாங்கள் அவங்களை நம்பக் கூடாது என்று நாம் தமிழரை சாடி ஸ்டாலினுக்கு துதிபாடுகின்றார் ஸ்டாலின் பிரசாந் கிஸோர் என்கிற பர்பனர் ஆலோசனையில் நடக்கின்றார். இங்கே திராவிடக் கொள்கைகள் அரசியல் அதிகாரம் பார்பானியம் கார்பரேட் என அனைத்தும் கைகோர்த்து நிற்கின்றது. திராவிடக் கட்சித் தலமைகளின் பூர்வீகம் தமிழராக அடயாளப்படுத்துபவர்களிடமே உள்ளது. கடந்த ஐம்பதாண்டுகால தமிழகத்தின் அரசியல் அதிகாரம் திராவிடக் கட்சிகளிடமே உள்ளது.  பிரிவினை அரசியல் இந்த அதிகர குவிப்பின் சிதைவுக்கு அவசியமாகின்றது.