• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • செய்தியை இணைக்கும்போது தலைப்பை மாற்ற யோசித்தேன். ஆனால் களவிதி அனுமதிக்காது என்பதால் அப்படியே விட்டுவிட்டேன். 
    • உண்மை. இங்கே எங்கள் அடையாளங்களை அழிக்க முனைவது வெறும் மிருகமே ! அங்கே அடையாள அழிப்பையும் தாண்டி இருப்பையே கேள்விக்குறியாக்கும் சாத்தான்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை. இவ்வேறுபாட்டை வெகு நிதானமாக எடுத்துரைத்தமைக்கு நன்றியும் பாராட்டும்.
    • ரஜினி தர்பார் படத்தையே பார்க்கிறார்கள் முக்கியமான பொங்கலை கொண்டாடுவது பெரிசு இல்லை.   ஈழத் தமிழ் மக்கள் எந்த ஆண்டில் தைப்பொங்கலை தமிழ் புத்தாண்டாக கொண்டாடினார்கள்? ஈழத் தமிழ் மக்கள் சித்திரை மாதத்திலேயே தமிழ் புது வருடம் கொண்டாடுகிறார்கள்.
    • அப்படி ஏதாவது தூவல் நடக்குமானால் இப்படியாவது தமிழர் அடையாளங்கள் இலங்கையில் காப்பாற்றப்படுகிறதே என்று சிறு நிம்மதியடையலாம். நீங்கள் இன்றைய இந்திய அரசியலுடன் ஒப்பிட்டு  ஈழதமிழர் நிலையை பார்க்கிறீர்கள், இலங்கை நிலமை அப்படியல்ல. எத்தனை தலைமுறை கடந்த பின்னும் இந்தியாவில் தமிழனுக்கென்றொரு மாநிலமும் கலாச்சாரமும் அடையாளமும்,மத்திய அரசையே தீர்மானிக்கும் சக்தியும் இருக்கும். இலங்கையில் இன்னும் சில தசாப்தங்களில் ஈழ தமிழருக்கென்று தனி ஒரு மாகாணமோ அவர்களுக்கென்றொரு தனித்துவமோ இருக்கபோவதில்லை. 2009ன் பின்னர், இலங்கையின் மத்திய அரசுடன் ஒரு பேரம்பேச இலங்கை   தமிழருக்கென்று இருந்த ஒரே துருப்புசீட்டு,  சிங்கள ஆட்சியாளரை தீர்மானிக்கும் எமது வாக்கு பலம், அதுகூட கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் செல்லாகாசு ஆகிவிட்டது. தனி சிங்கள வாக்கு பெரும்பான்மையினால் இலங்கையின் ஆட்சி தலைவரை தேர்ந்தெடுத்த சிங்கள தேசத்துக்கு இனி எந்த வகையிலும் நாம் அவர்களுக்கு தேவை படபோவதில்லை. தாங்கள் கூறியதுபோல் இலங்கையில் பெளத்ததிற்கும், இஸ்லாத்திற்கும் எதிராக இந்துதுவம் என்பது எப்போதுமே எழுந்து நிற்காது, ஏனெனில் அவர்கள் இருவரும் சேர்ந்து   எங்கள் இனத்தையே  கறையான் அரித்ததுபோல் கொஞ்சம் கொஞ்சமாக ஏறக்குறைய தின்று முடிக்கும் நிலைக்கு மிக அருகில் நிற்கிறார்கள். இன அடையாளமே இல்லாமல் போகுதே, மத அடையளத்தை எங்கிருந்து கொண்டு வருவது? என்னமோ இலங்கை தமிழர்களுக்கு எல்லாமே கிடைத்துவிட்டமாதிரியும் , மதம் மட்டுமே இனிமேல் அவர்கள் வாழ்வை கெடுக்கபோகிறது என்பதுபோலும் சிந்திக்கிறீர்கள், உலகின் சக உயிரினங்கள்போலவே தமிழனையும் ஒரு மனிதனாக கருதாத சிங்கள தேசத்தில் வாழும் தமிழர்களுக்கு ஆர்.எஸ்/எஸ் சும்,பார்ப்பனியமும்பற்றி அக்கறை செலுத்த ஏதுமில்லை. அப்படி ஏதாவது நடந்தால்,சரியோ தவறோ  இப்படியாவது சிங்களவனுக்கெதிராக  இலங்கையில் ஒரு அடையாளம் வருதே என்றுதான் சிறு நிம்மதி அடைவார்கள். நான் மேலே சொன்னதுதான், மொழியாலும்,கலாச்சாரத்தாலும்,,ஒருவருக்கு ஒன்றென்றால் கவலையும் கோபமும் கொள்ளும் ரத்த உணர்வாலும் நாம் எப்போதுமே பின்னி பிணைந்திருந்தாலும்  இலங்கை தமிழர் அரசியலும்,இந்திய தமிழர்கள் அரசியலும் முழுக்க முழுக்க வேறானாது, இரண்டும் ஒரேமாதிரியானது என்று நீங்கள் கருத நினைத்தால் அது மட்டுமே அதீத கற்பனையானது. வேண்டுமென்றால் இரண்டு தேச தமிழ் அரசியல்வாதிகளின் குணங்களும் ஒன்றென்று சொல்லி கொள்ளலாம், அது மட்டுமே 100% உண்மையானது.
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...