• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

அஞ்சரன்

சனிபகவான் தலம்.

Recommended Posts

மொக்குக்கூட்டம் என்று ஒதுங்கி இருக்கலாம்தான். ஆனால் மக்களின் நம்பிக்கைகளை வைத்தே வியாபாரம் செய்வதும், அதற்கு விஞ்ஞானத்தைக் காரணம் காட்டுவதும் ஏமாற்றும் செயல் என்பதைச் சொல்லும் சமூகப்பொறுப்பில்லாதவர்களாக இருக்கவேண்டும் என்று சொல்கின்றீர்களா? இப்படி எமது சமூகம் இருப்பதனால்தான் கனடாவில் சோதிடம் பார்க்க வந்த சாத்திரி புருஷனின் கண்டத்திற்கு பரிகாரம் செய்யவென்று ஒரு பெண்ணுடன் படுக்கின்ற நிலை வந்தது.

இறந்தகாலத்திற்கு செல்ல முடியாது  என்று தெளிவாக நிறுவிய பின்னும், விஞ்ஞான அடிப்படைகொண்டதாக விளம்பரப்படுத்தப்படும்  திரைப்படங்களில் இதை கருப்பொருளாக கொண்டு கதை அமைக்கப்பட்டு  பில்லியன் கணக்கில் உழைக்கிறார்களே அதை என்னவென்பதாம்? 
             விற்றமின்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகாலங்களில், இன்ன இன்ன விற்றமின்கள் இவ்வளவு  அளவுகளில் எடுத்தால் உணவு தேவைப்படாது என்று விஞ்ஞானரீதியாக நிறுவியபோதும், மொக்குகூட்டம் மட்டும் உணவை மட்டும் உள்ளெடுத்து  அந்தகருதுகொள் தவறு என்று நிரூபித்ததே.இப்போது  விற்றமின்கள்(மாத்திரைகள்) உள்ளெடுத்தல் அவ்வளவு நல்லபழக்கம் இல்லை என்றுவேறு சொல்கிறார்கள்.

Share this post

Link to post
Share on other sites

 இக் கட்டுரையில் நவக்கிரகங்கள் பற்றிய இன்னொரு பிழையான தகவல், சூரியனையும் சந்திரனையும் நவக் கிரகங்களுக்குள் சேர்த்துள்ளனர். இவை இரண்டும் கிரகங்கள் அல்ல.

புவியின் மீதான ஈர்ப்பு விசை 

by The Sun>moon>>>>other planets

இதை வைத்துப்பார்க்கும்போது சூரியனையும் சந்திரனையும் நவக்கிரகங்களுக்குள் அடக்குவதில் என்ன தப்பு? 

சந்திரன்  புவியின் பாதுகாப்பிற்கும் உயிரின உருவாக்கத்திற்கும் மிகப்பெரிய பங்கு வகிக்கும் உற்ற தோழன். 

planetary-formation.jpg

Share this post

Link to post
Share on other sites
நவீன உலகம் கணிப்பதற்கு முன்னரே, இந்து மதத்தில் கோள்கள் குறித்தும், சூரியனில் உள்ள 7 நிறங்களை அன்றைய மக்களுக்கு புரியக் கூடிய வகையில் சூரியன் வேறு வேறு வர்ணங்கள் கொண்ட 7 குதிரைகளினால் இழுக்கப்படும் தேர் ஒன்றில் வலம் வருகின்றார் என்று சொல்லி உள்ளனர்.
 
அதற்காக, 7 குதிரைகளாம், தேராம் என்று இன்று வாழும் ஒருவர் விதண்டாவாதம் செய்தால் என்ன பதில் சொல்வது? நகர்ந்து அப்பால் செல்வதை விடுத்து!
 
சொர்க்கம், நரகம் குறித்த இந்து மத நம்பிக்கைகள், பின்னர் வந்த பல மதங்களில் ஏற் கப்பட்டு உள்ளன.
 
கொடூரமாகக் கொல்லப் பட்ட ஜேசு மகான், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்து அவ்வுடலுடன் மேலுலகம் சென்றார் (எம்மதத்தில் கூட  ஔவையாரும், சேரமானும் இவ்வாறு சென்றார்கள் என்ற குறிப்பு உண்டே) என்று அறிவுலம் என்று சொல்லும் மேற்கு உலகம் ஈஸ்ட்டர் என இன்றும் கொண்டாடும் போது, இங்கே ஒரு சிலர் தாம் அறிவுக் கொழுந்துகளைப் போல் கருத்து எழுதுவது சிரிக்க வைக்கிறது.
 
இந்து மதம் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக நதி போல் ஓடி வருகிறது. அதில் ஒரு குறுகிய கால வழிப் போக்கர்கள் ஆகிய நாம் நதிமூலம், ரிஷிமூலம் பார்த்து ஆகப் போவது எதுவும் இல்லை.
 
பகுத்தறிவு என்ற பெயரில் பீத்திய பெரியார், கருணாநிதி போன்றோர் மதங்கள் வலியுறுத்துகின்றன என்பதினாலா தனி மனித ஒழுக்கத்தினைக் கடைப் பிடிக்கவில்லை? ஊருக்கு உபதேசம், உனக்கு இல்லையடி மனைவியே, துணைவியே என்று தனது இரு பெண்களையும் கோவில்களுக்கு அனுப்பினாரே கருணாநிதி? எப்படி ?
 
அவர்களால் மத நம்பிக்கைகளை குறைக்க முடிய வில்லையே. மாறாக முன்னரை விட கூடி அல்லவா உள்ளது. 
 
எல்லா மதங்களிலும் பலம் பலவீனம் உண்டு. எதனை தூக்கிப் பிடிக்கப் போகிறோம் என்பது தனி மனித விருப்பு, வெறுப்பு. ஆனால் நமது விருப்பு வெறுப்புகளை அடுத்தவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் போது தான் தவறு செய்கிறோம்.
 
நகைசுவை இருந்தால் பகிர்வோம். seriousness க்கு இடம் கொடாமல்...
 
Share this post

Link to post
Share on other sites

எல்லோரும் எதிர்க்கிறார்கள் நானும் சேர்த்து எதிர்த்தால் தான் என்னையும் அறிவாளியா நினைப்பார்கள் என்று எண்ண ஓட்டத்தில் கருத்து எழுதுவது தப்பு இல்லையா இவ்வாறான விவாதத்தில் சில அறிவியல் சார் விஷயங்கள் வரும்போது அதையும் நாம் படிக்க தெரிந்து கொள்ள உதவும் ..

ஆகா மதம் என்பதும் மெய்யானம் என்பதும் அவர் அவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இதை நீ பின்பற்ற கூடாது பேசக்கூடாது என்று எவரையும் எவரும் தடுக்க முடியாது .

எல்லா புகழும் இறைவனுக்கே  :D  :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

என்னைப் பொறுத்தவரையில் இயேசு, அல்லா, சிவன், ராமர் போன்ற கடவுளர்கள் எல்லோரும் டிம்பக்டூ பெரும் கடவுளின் சீடர் என்றே நம்புகிறேன். :huh: நீங்கள் கேட்கலாம்.. யாரப்பா இது புதுக்கடவுள் எண்டு.. ஆனால் டிம்பக்டூ கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் விளக்கம் எங்காவது இருக்கா? இருந்தால் அதைத் தரமுடியுமா? :D

ஒன்று உண்டு என்று சொல்பவர்கள்தான் அதை நிறுவ வேண்டுமே தவிர இல்லை என்பவர்கள் அல்ல. உதாரணமாக, செவ்வாய் கிரக மண்ணில் இன்ன தாதுப்பொருள் உள்ளது என்று நாசா சொன்னால் அதை அவர்கள்தான் பரிசோதனைகள்மூலம் நிறுவியிருக்க வேண்டும். மற்றவர்கள் பிறகு அந்தப் பரிசோதனைகள்பற்றி விவாதிக்கலாம். அதை விட்டுவிட்டு, செவ்வாய் மண்ணில் நிறைய தங்கம் இருக்கு என்று மேலோட்டமாக சொல்லிவிட்டுப் போய்விட முடியாது. அப்படிச் சொன்னால் அடுத்த கணமே நாசாவின்  நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும்.  :o  :blink:  

சந்திரனில் ஈர்ப்பு விசை இல்லை என்று சொன்ன நாசா அங்கு கொடி குற்றி படம் போட்டது அதை நம்பியவர்கள் நாம் அதைகூட அதே அமெரிக்கர் பலர் நாடகம் என்று சொல்கிறார்கள் ...

பிற மதத்தை என்றும் நாம் அறிவியல் ரீதியா விளக்கம் கேட்பது இல்லை ஏனெனில் அது வெள்ளைக்காரன் கடவுள் ஆகவே உண்மையா இருக்கும் இல்லை அண்ணே ..

போப் பாண்டவர் எல்லாம் சும்மா மூடநம்பிக்கை உரிய ஆள் அவரை எதுக்கு இந்த உலக தலைவர்கள் எல்லாம் தேடி போய் சந்திக்கினம் என்றுதான் இன்னும் புரியவில்லை .

பார்வையில் தப்பு இருந்தால் பார்ப்பது எல்லாம் குற்றமா தெரியும் இசை . :D

அறிவியல் ஆசான் அண்ணன் நெடுக்கு அவர்கள் இதுக்கு ஒரு சரியான தேடலுடன் ஒரு விளக்கம் எழுதவேணும் என்பது எனது ஆசை செய்யுங்கள் அண்ணே  :unsure:

Share this post

Link to post
Share on other sites

சந்திரனில் ஈர்ப்பு விசை இல்லை என்று சொன்ன நாசா அங்கு கொடி குற்றி படம் போட்டது அதை நம்பியவர்கள் நாம் அதைகூட அதே அமெரிக்கர் பலர் நாடகம் என்று சொல்கிறார்கள் ...

வழிமண்டலம் இல்லாத இடத்தில் எப்படி கொடி அசைந்தாடும்? :D ஆகவே கம்பி வைத்துக் கட்டியதாக ஒரு விளக்கம் கொடுத்ததாக ஞாபகம்.

பிற மதத்தை என்றும் நாம் அறிவியல் ரீதியா விளக்கம் கேட்பது இல்லை ஏனெனில் அது வெள்ளைக்காரன் கடவுள் ஆகவே உண்மையா இருக்கும் இல்லை அண்ணே ..

எந்த மதத்தையும் குறிப்பிட்டு நான் எழுதவில்லை.. இல்லை என்று சொல்பவர்கள்தான் ஆதாரம் கொடுக்க வேண்டும் என்கிற உங்களது கருத்திற்கே பதிலளித்திருந்தேன் அண்ணே.. :D

போப் பாண்டவர் எல்லாம் சும்மா மூடநம்பிக்கை உரிய ஆள் அவரை எதுக்கு இந்த உலக தலைவர்கள் எல்லாம் தேடி போய் சந்திக்கினம் என்றுதான் இன்னும் புரியவில்லை .

அதை நீங்கள்தான் கண்டறியவேணும்.. :huh:

Share this post

Link to post
Share on other sites

இவ்வளவு நாளும் பேசாமல் இருந்து போட்டு, எனக்குச் சனி முடியிற நேரத்தில, சனி பகவானைக் குழப்பாதீங்கப்பா!

மனுசன் ஓடி ஒளிக்கிறதுக்குப் பின்பக்கத்தால ஓடி, என்ர ராசிக்குள்ளேயே திரும்பவும் வந்திரும்! :o

றிவேர்சிலும் அவர் ஒரு மூன்றுமாதம் சஞ்சரிக்கலாம்.. :D வக்கிரமடைதல் என்று பெயர்..  :lol:

அண்ணா கவலையை விடுங்க .அவர் இப்ப என் கூட தான்  இருக்கார் ........இப்போதைக்கு எங்கும் போற நோக்கமில்லைப்போல தெரியுது ....... :o   :D

Share this post

Link to post
Share on other sites

kssson, பூமியில் ஆதிக்கம் செலுத்துபவை மட்டும்தான் 7 கிரகங்கள் என்ற உங்களது கருத்து நவகிரகங்கள் என்ற கோட்பாட்டையே கேள்விக்குறியாக்கும். 

நாதமுனி, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஓடும் இந்து மதம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் என்று தெளிவாகச் சொன்னால் கிரகங்கள் குதிரைகள் என்ற நகைச்சுவை இல்லாமல் சீரியசாகக் கதைக்கலாம். இதற்குள் பெரியார் கருணாநிதி போன்றவர்களை இழுத்து மேலும் நகைச்சுவையைக் கூட்ட வேண்டியதில்லை. 

Share this post

Link to post
Share on other sites

கொடூரமாகக் கொல்லப் பட்ட ஜேசு மகான், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்து அவ்வுடலுடன் மேலுலகம் சென்றார் (எம்மதத்தில் கூட  ஔவையாரும், சேரமானும் இவ்வாறு சென்றார்கள் என்ற குறிப்பு உண்டே) என்று அறிவுலம் என்று சொல்லும் மேற்கு உலகம் ஈஸ்ட்டர் என இன்றும் கொண்டாடும் போது, இங்கே ஒரு சிலர் தாம் அறிவுக் கொழுந்துகளைப் போல் கருத்து எழுதுவது சிரிக்க வைக்கிறது.
 
ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தைப் பிண்பற்றும் முக்கிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் உயிர்த்தெழுந்த ஞாயிறுக்கு அடுத்த தினமான திங்கள் விடுமுறை தொடர்பாக கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இங்கு ஏற்கனவே பல நூறு ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்ட கிறிஸ்தவ பெருநாள் விடுமுறை சட்ட ரீதியாகக் கைவிடப்பட்டுள்ளது.

எங்கள் பழக்க வழக்கத்திற்கு விளக்கம் கேட்டால் அடுத்த வீட்டுக்காரனின் கேவலத்தைக் காட்டி எங்களதும் இப்படிப்பட்டதுதான் என்பதும் நகைச்சுவையானதே.

Share this post

Link to post
Share on other sites

kssson, பூமியில் ஆதிக்கம் செலுத்துபவை மட்டும்தான் 7 கிரகங்கள் என்ற உங்களது கருத்து நவகிரகங்கள் என்ற கோட்பாட்டையே கேள்விக்குறியாக்கும். 

நாதமுனி, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஓடும் இந்து மதம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் என்று தெளிவாகச் சொன்னால் கிரகங்கள் குதிரைகள் என்ற நகைச்சுவை இல்லாமல் சீரியசாகக் கதைக்கலாம். இதற்குள் பெரியார் கருணாநிதி போன்றவர்களை இழுத்து மேலும் நகைச்சுவையைக் கூட்ட வேண்டியதில்லை. 

சீரியஸ் வேண்டாம் என்று தான் ஐயா, தலையில் அடித்துக் கொள்கிறேன்.
 
அனைத்துக்கும் மேலாக, இங்கே நாம் விவாத்திப்பதனை ஒரு பொழுது போக்காக எடுத்து கொள்ளுமாறும், தனி பட்ட ரீதியாக எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
 
இந்து மதம் எபோது தோன்றியது என்பது குறித்த ஆய்வுகள் முடியா நிலையில் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் என்று தெளிவாகச் சொல்ல எனக்கு அறிவு போதவில்லை.
 
பெரியார், கருணாநிதியில் இருந்த அவர்களது போலித்தனமே நகைப்புக்கிடமானது.
 
பகுத்தறிவு என்ற போர்வையில் அரசியலுக்குள் நுழைந்து 'திராவிடம்' என்று சொல்லி கன்னட பெரியாரும், தெலுங்கு கருணாநிதியும், கன்னட ஜெயலலிதாவும் எம்தமிழன் தலையில் மிளகாய் அரைத்து, காதில் பெரிய பூ வைத்து கொள்ளை அடித்தது தான் மிச்சம். பெரியார் அரசியலுக்கு வரவில்லை ஆனால் வழி சமைத்தார்.
 
பகுத்தறிவு ஒரு பக்கம் இருக்கட்டும், அதை போதிக்க, இளிச்ச வாயன் தமிழன் தான் இந்த கூட்டத்துக்கு கிடைத்தார்களா?
 
ஏன் திராவிடம் என்று சொல்லி பெரியார் தனது கன்னடர்களுக்கு பகுத்தறிவு போதிக்கவில்லை?

Share this post

Link to post
Share on other sites

ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தைப் பிண்பற்றும் முக்கிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் உயிர்த்தெழுந்த ஞாயிறுக்கு அடுத்த தினமான திங்கள் விடுமுறை தொடர்பாக கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இங்கு ஏற்கனவே பல நூறு ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்ட கிறிஸ்தவ பெருநாள் விடுமுறை சட்ட ரீதியாகக் கைவிடப்பட்டுள்ளது.

எங்கள் பழக்க வழக்கத்திற்கு விளக்கம் கேட்டால் அடுத்த வீட்டுக்காரனின் கேவலத்தைக் காட்டி எங்களதும் இப்படிப்பட்டதுதான் என்பதும் நகைச்சுவையானதே.

நான் சொல்வது மத நம்பிக்கைகள், நீங்கள் சொல்வது விடுமுறைகள் குறித்த நவீன வியாபார உலக நிலைப்பாடு.

எங்களது பழங்கால பழக்க வழக்கங்களுக்கு விளக்கம் தரும் பேரறிவு என்னிடம் இல்லை நண்பரே. அதற்காக அதனை இகழும் 'சித்தறிவும்' இல்லை.  :D

Share this post

Link to post
Share on other sites

றிவேர்சிலும் அவர் ஒரு மூன்றுமாதம் சஞ்சரிக்கலாம்.. :D வக்கிரமடைதல் என்று பெயர்..  :lol:

ஓஹோ, அப்படியும் இருக்கோ?  :o  

இன்னுமொரு மூண்டு மாதத்துக்குக் கையைக் காலை, மடக்கி வச்சிருப்பம்! :D

Share this post

Link to post
Share on other sites

அண்ணா கவலையை விடுங்க .அவர் இப்ப என் கூட தான்  இருக்கார் ........இப்போதைக்கு எங்கும் போற நோக்கமில்லைப்போல தெரியுது ....... :o   :D

பயப்பிடாதையுங்கோ, தானாச் சூனா !

நவக்கிரகங்களுக்குள்ளேயே மிகவும் ' அறிவாளியான கிரகம்' சனீஸ்வரன் என்று கூறுவாரும் உண்டு! அத்துடன் நினைத்த காரியத்தைச் சாதித்து முடிப்பதிலும், மிகவும் பிடிவாதம் பிடித்தவர் என்று கேள்வி!

இராவணனின் மகன் இந்திரஜித் பிறந்தபோது... அவன் எல்லா நவக்கிரகங்களையும் சிறைப்பிடித்து வந்து.. ஒரே நேர் வரிசையில் நிறுத்தி வைத்திருந்தான் !

எல்லோரும் கை கட்டி வாய் பொத்தி நிற்க, குழந்தை பிறந்த சரியான நேரத்தில், சனிபகவான் ஒரு காலைத் தூக்க ' வரிசை' பிறழ்ந்து விட்டது!

கோபமடைந்த இராவணேசன், சனியினது ஒரு காலைத் துண்டாட அவர் முடமானார் என்பது ஐதீகம்!

பாடம்......: நீங்கள் எத்தனை லீற்றர் எள்ளெண்ணை எரித்தாலும், நடப்பது நடந்தே தீரும்!

எனவே பாயும் குதிரையாக... நெஞ்சை நிமிர்த்தி.... வணக்கம்... சனிபகவான் என்று அவரை எதிர்கொள்வதே உசிதமானது! :D

பிற்குறிப்பு:   மங்கலா அல்லது பொங்கலா? :D

Share this post

Link to post
Share on other sites

கடவுள் இல்லை என்பதுக்கு அறிவியல் விளக்கம் எங்காவது இருந்தா சொல்லுங்க ...இருக்கிறார் என்று சொன்னால் ஆதாரம் கேட்கும் நீங்கள் இல்லை என்பதுக்கு என்ன ஆதாரம் இருக்கு உங்களிடம் ..

15000 இருபது ஆயிரம் ஆண்டுகளாக பூமிக்கு வராத இவர் ஏன் இருக்கிறார்?
 
அவர் இருக்கிறாரா இல்லையா என்ற வாதத்தை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு.
 
அவருக்கும் பூமியில் இருக்கும் மனிதருக்கும் ஏதும் தொடர்பு இருக்கா ? 
என்ற வாதம் சரியானது.
 
கடவுள் இருந்து எல்லாத்தையும் படைச்சார் ............. எல்லாத்தையும் படைபதட்கு முதல் நாள் கடவுள் எப்படி தோன்றினார் ??
எவளவு பெரிய பால்வீதியை படைக்கும் சக்தி உள்ள ஒருவரே தானாக தோன்ற சாத்தியம் இருக்கும்போது ....
ஒரு பால் வீதி தோன்ற எவளவு சத்தியம் இருக்கிறது ??? 

Share this post

Link to post
Share on other sites

சந்திரனில் ஈர்ப்பு விசை இல்லை என்று சொன்ன நாசா அங்கு கொடி குற்றி படம் போட்டது அதை நம்பியவர்கள் நாம் அதைகூட அதே அமெரிக்கர் பலர் நாடகம் என்று சொல்கிறார்கள் ...

பிற மதத்தை என்றும் நாம் அறிவியல் ரீதியா விளக்கம் கேட்பது இல்லை ஏனெனில் அது வெள்ளைக்காரன் கடவுள் ஆகவே உண்மையா இருக்கும் இல்லை அண்ணே ..

சந்திரனில் காற்று இல்லை .......
நீல் ஆம்ஸ்ட்ராங் ஏற்றிய கொடி காற்றில் பறந்து கொண்டு இருக்கிறது.
அதனால்தான் அதை நம்ப மறுக்கிறார்கள்.
ஈர்ப்பு விசை இல்லை என்றால் ? எப்படி சந்திரன் இருக்க முடியும் ? எல்லா மண்ணும் கழண்டு போய்விடுமே ?? 
 
பிற மதங்களில் பித்ததலாட்டம் குறைவு.
ஒரு கடவுள் 
ஒரு தத்துவம் 
என்று இருக்கிறார்கள் .............
முடிந்த அளவில் இறைவனின் குணங்களை பின்பற்றுகிறார்கள் (குறிபிட்ட பகுதியினர் என்றாலும்).
ஆப்ரிக்காவில் வரட்சி என்று ஏதாவது ஒரு இந்து நாடு மக்கள் ஆப்ரிக்கவிட்கு உதவுகிறார்களா ?
 
சுனாமி புயல் என்று எங்கு தாக்கினாலும் கிறிஸ்தவத்தை பின்பற்றும் நாட்டு மக்கள் நன்கொடையாக எவளவோ பணம் கொடுக்கிறார்கள்.
 
பில் கேட்ஸ் இறக்கும்போது அவருடைய சொத்து அனைத்தும் நன்கொடையாக போகிறது ..... அம்பானி செத்தால் ஒரு சல்லி காசு ஏழை வீட்டை தேடி நகருமா?
 
(இதை ஒரு வாதமாகவோ அதற்கு ஆதாரமாகவோ கொள்ள முடியாது. ஆனால் உலகில் நடைமுறையில் இருக்கிறது)
 
வெறும்கையோடு இந்தியா வந்த அன்னை தெரேசா இன்று இறந்தும் 2 லட்சம் குழந்தைகள் வரை பாதுகாக்கிறார். இத்தனைக்கும் இந்தியாவில் உள்ள கோவில் உண்டியல்கள் மலை போல பணத்தை குவிக்கின்றன  .............. 
அடிப்படை தத்துவம் பிழையாக இருப்பதுதான் இதன் மூல காரணம்.
 
இன்னொருவனை எய்த்து பிழைப்பதற்கு இன்னொரு பெயர் இந்து என்றுதான் என்னால் விளங்கி கொள்ள முடிகிறது. இந்து என்று பெருமை பட்டு சொல்ல என்ன இருக்கிறது ? இன்னொருவனை வதைப்பதை தவிர.
 
முஸ்லிம் நபிகளை தூதர் என்றுதான் சொல்கிறான் 
கிறிஸ்தவன் ஜேசுவை தூதர் என்றுதான் சொல்கிறான். கொஞ்சம் என்றாலும் ஏற்க கூடியதாக இருக்கிறது 
 
இந்துமடும்தான் பாம்பு முதற்கொண்டு சாயிபாபா வரை கடவுள் என்கிறான். எல்லாம் இங்கு இருக்கும்போது  
கடவுள் மேலே இருக்கிறார் என்று வேற சொல்கிறான். சுத்த வெறியில் இருப்பவனே இப்படி உளற மாட்டான்  
கொஞ்சம் என்றாலும் தெளிவு இருக்கும். 

Share this post

Link to post
Share on other sites

இறந்தகாலத்திற்கு செல்ல முடியாது  என்று தெளிவாக நிறுவிய பின்னும், விஞ்ஞான அடிப்படைகொண்டதாக விளம்பரப்படுத்தப்படும்  திரைப்படங்களில் இதை கருப்பொருளாக கொண்டு கதை அமைக்கப்பட்டு  பில்லியன் கணக்கில் உழைக்கிறார்களே அதை என்னவென்பதாம்? 

             விற்றமின்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகாலங்களில், இன்ன இன்ன விற்றமின்கள் இவ்வளவு  அளவுகளில் எடுத்தால் உணவு தேவைப்படாது என்று விஞ்ஞானரீதியாக நிறுவியபோதும், மொக்குகூட்டம் மட்டும் உணவை மட்டும் உள்ளெடுத்து  அந்தகருதுகொள் தவறு என்று நிரூபித்ததே.இப்போது  விற்றமின்கள்(மாத்திரைகள்) உள்ளெடுத்தல் அவ்வளவு நல்லபழக்கம் இல்லை என்றுவேறு சொல்கிறார்கள்.

ஆதிகாலத்திற்குச் செல்லும் கற்பனையான படங்கள், விஞ்ஞானத்தை ஆதாரமாகக் காட்டுவதில்லை. இவை லொஜிக்காக அமைக்கப்படும் கற்பனையைத் தூண்டும் படங்கள். கற்பனையின் வீச்சை ரசிப்பது மனித இயல்பு. அதையும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முனையும் மூடநம்பிக்கைகளயும் ஒன்றாகப் போட்டுக் குழப்பக்கூடாது.

எந்த ஒரு விஞ்ஞான ஆய்வும் விற்றமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ள மாத்திரைகளைச் சாப்பிடுவதன்மூலம் எமக்குத் தேவையான சக்தியை எடுத்துக்கொள்ளலாம்; எனவே உணவு தேவைப்படாது என்று சொல்லியிருக்கமாட்டாது. உண்மையில் இயற்கையான உணவுகளை உட்கொள்வதன்மூலமே இந்த ஊட்டச்சத்துக்களைப் பெற்றுக்கொள்வது நல்லது என்பதுதான் வைத்தியர்களினதும் விஞ்ஞானிகளினதும் ஆலோசனை.

முன்னோர்கள் முட்டாள்களாக இருந்ததில்லை. அந்தக் காலத்தில் அவர்களுக்குத் தெரிந்த அறிவியலை வைத்துப் பல விடயங்களை ஆராய்ந்திருக்கின்றார்கள். அறிவுபூர்வமாக விளக்கமுடியாதவைக்கு கடவுளைத் துணைக்கிழுத்திருக்கின்றார்கள். அல்லது எளிய மக்களுக்கு விளங்கப்படுத்த கடவுளையும் அது சார்ந்த புராணக்கதைகளையும் உருவாக்கியிருக்கின்றார்கள். ஆனால் விஞ்ஞான முன்னேற்றத்தின் பின்னர் முன்னைய நம்பிக்கைகளின் அடிப்படைகள் கேள்விக்கு உட்படுத்தப்படும்போது அவற்றினைச் சரி என்று வாதிடுவது மூடத்தனமானது.

தற்போதைய நவீன விஞ்ஞான யுகத்திலும் தெரிந்தது அணுவளவு, தெரியாதது மலையளவு.இந்த உண்மையைப் புரிந்து தேடல்களைத் தொடரவேண்டும்.

Share this post

Link to post
Share on other sites

kssson, பூமியில் ஆதிக்கம் செலுத்துபவை மட்டும்தான் 7 கிரகங்கள் என்ற உங்களது கருத்து நவகிரகங்கள் என்ற கோட்பாட்டையே கேள்விக்குறியாக்கும்.

நான் அப்படி வரவில்லை, அவர்கள் வெற்றுக்கண்ணுக்கு தெரிந்த சூரியன் ,சந்திரன் மற்றும் புதன் ,வெள்ளி ,செவ்வாய்,வியாழன், சனி  இவற்றை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டார்கள்.( யுரேனஸ் ,நெப்டியூன் இரண்டும் அப்போது அறியப்படவில்லை)இராகு ,கேது இரண்டும் கிரகணநிலைகள்.இவையிரண்டும்  அரக்கர்கள் என்றும் மிகுதி கடவுள்கள் என்றும் கூறுகிறார்கள்.   யுரேனஸ் ,நெப்டியூன்    இரண்டையும் சேர்த்தால் நல்லதுதான்.    யுரேனஸ் ,நெப்டியூன்    இரண்டையும்   விட கிரகண நிலையில் ஈர்ப்பு வலு கூட என்பதால் தவிர்த்துவிடலாம்.

இந்துமடும்தான் பாம்பு முதற்கொண்டு சாயிபாபா வரை கடவுள் என்கிறான். எல்லாம் இங்கு இருக்கும்போது  

கடவுள் மேலே இருக்கிறார் என்று வேற சொல்கிறான். சுத்த வெறியில் இருப்பவனே இப்படி உளற மாட்டான்  
கொஞ்சம் என்றாலும் தெளிவு இருக்கும்.
இந்த பத்தியை முகநூலில் ஒருவர் இணைத்திருந்தார், இதன் உண்மைத்தன்மையை நெடுக்கு போன்றவர்கள் தான் தெளிவுபடுத்தவேண்டும்.இது தவறு என்றால் நீக்கிவிடவும்.

பாம்பிற்கு பால் ஊற்றுவதன் காரணம் என்ன?

இந்திய நாட்டில் முட்டைடையும், பாலையும் வைத்து பாம்பினை வழிபடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனால் விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயம் என்னவென்றால் முட்டையையும், பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு. மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது.

ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.

பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால், முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது. ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. இந்த காரணத்தையே அறிவியல் ரீதியான கருத்தாக நமக்கு முன்வைக்கின்றார்கள்.

ஆனால் இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே மக்கள் பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

Share this post

Link to post
Share on other sites

சந்திரனில் காற்று இல்லை .......
நீல் ஆம்ஸ்ட்ராங் ஏற்றிய கொடி காற்றில் பறந்து கொண்டு இருக்கிறது.
அதனால்தான் அதை நம்ப மறுக்கிறார்கள்.
ஈர்ப்பு விசை இல்லை என்றால் ? எப்படி சந்திரன் இருக்க முடியும் ? எல்லா மண்ணும் கழண்டு போய்விடுமே ?? 
 
பிற மதங்களில் பித்ததலாட்டம் குறைவு.
ஒரு கடவுள் 
ஒரு தத்துவம் 
என்று இருக்கிறார்கள் .............
முடிந்த அளவில் இறைவனின் குணங்களை பின்பற்றுகிறார்கள் (குறிபிட்ட பகுதியினர் என்றாலும்).
ஆப்ரிக்காவில் வரட்சி என்று ஏதாவது ஒரு இந்து நாடு மக்கள் ஆப்ரிக்கவிட்கு உதவுகிறார்களா ?
 
சுனாமி புயல் என்று எங்கு தாக்கினாலும் கிறிஸ்தவத்தை பின்பற்றும் நாட்டு மக்கள் நன்கொடையாக எவளவோ பணம் கொடுக்கிறார்கள்.
 
பில் கேட்ஸ் இறக்கும்போது அவருடைய சொத்து அனைத்தும் நன்கொடையாக போகிறது ..... அம்பானி செத்தால் ஒரு சல்லி காசு ஏழை வீட்டை தேடி நகருமா?
 
(இதை ஒரு வாதமாகவோ அதற்கு ஆதாரமாகவோ கொள்ள முடியாது. ஆனால் உலகில் நடைமுறையில் இருக்கிறது)
 
வெறும்கையோடு இந்தியா வந்த அன்னை தெரேசா இன்று இறந்தும் 2 லட்சம் குழந்தைகள் வரை பாதுகாக்கிறார். இத்தனைக்கும் இந்தியாவில் உள்ள கோவில் உண்டியல்கள் மலை போல பணத்தை குவிக்கின்றன  .............. 
அடிப்படை தத்துவம் பிழையாக இருப்பதுதான் இதன் மூல காரணம்.
 
இன்னொருவனை எய்த்து பிழைப்பதற்கு இன்னொரு பெயர் இந்து என்றுதான் என்னால் விளங்கி கொள்ள முடிகிறது. இந்து என்று பெருமை பட்டு சொல்ல என்ன இருக்கிறது ? இன்னொருவனை வதைப்பதை தவிர.
 
முஸ்லிம் நபிகளை தூதர் என்றுதான் சொல்கிறான் 
கிறிஸ்தவன் ஜேசுவை தூதர் என்றுதான் சொல்கிறான். கொஞ்சம் என்றாலும் ஏற்க கூடியதாக இருக்கிறது 
 
இந்துமடும்தான் பாம்பு முதற்கொண்டு சாயிபாபா வரை கடவுள் என்கிறான். எல்லாம் இங்கு இருக்கும்போது  
கடவுள் மேலே இருக்கிறார் என்று வேற சொல்கிறான். சுத்த வெறியில் இருப்பவனே இப்படி உளற மாட்டான்  
கொஞ்சம் என்றாலும் தெளிவு இருக்கும். 

சரிதான் மருதர், நம்ம பார்ட்டி போலக் கிடக்குது. 
 
உங்களுக்கு தான் இரண்டு மூண்டு தரம் சொல்லிப் போட்டிணமே. 
 
இதுக்குள்ள திருப்பி திரும்பி வந்து பொல்லை கொடுத்து அடியை வாங்காம, வாருங்கோ அங்கால போய் ****வா பத்தி கதைக்கலாம்.  :icon_mrgreen:

Share this post

Link to post
Share on other sites
ஆதிகாலத்திற்குச் செல்லும் கற்பனையான படங்கள், விஞ்ஞானத்தை ஆதாரமாகக் காட்டுவதில்லை. இவை லொஜிக்காக அமைக்கப்படும் கற்பனையைத் தூண்டும் படங்கள். கற்பனையின் வீச்சை ரசிப்பது மனித இயல்பு. அதையும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முனையும் மூடநம்பிக்கைகளயும் ஒன்றாகப் போட்டுக் குழப்பக்கூடாது.

தனது தளத்திற்கான வரவை அதிகரிப்பதற்கு சில உண்மைகளையும் பலகற்பனைகளையும் கலந்துவிட்டு எழுதப்பட்ட நல்ல ஒரு புனை கட்டுரை.ஹாலிவுட் போல மிகச்சரியான போர்முலா. 

       இப்படியொரு விண்கலத்தில் 007 போவதாக வைத்து கற்பனை பண்ணினால், இந்தியாவில் உள்ள கொடும்வில்லனை அழிக்க நல்ல ஒருகதை தயார்.  :D

Share this post

Link to post
Share on other sites

ஆதிகாலத்திற்குச் செல்லும் கற்பனையான படங்கள், விஞ்ஞானத்தை ஆதாரமாகக் காட்டுவதில்லை. இவை லொஜிக்காக அமைக்கப்படும் கற்பனையைத் தூண்டும் படங்கள். கற்பனையின் வீச்சை ரசிப்பது மனித இயல்பு. அதையும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முனையும் மூடநம்பிக்கைகளயும் ஒன்றாகப் போட்டுக் குழப்பக்கூடாது.

எந்த ஒரு விஞ்ஞான ஆய்வும் விற்றமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ள மாத்திரைகளைச் சாப்பிடுவதன்மூலம் எமக்குத் தேவையான சக்தியை எடுத்துக்கொள்ளலாம்; எனவே உணவு தேவைப்படாது என்று சொல்லியிருக்கமாட்டாது. உண்மையில் இயற்கையான உணவுகளை உட்கொள்வதன்மூலமே இந்த ஊட்டச்சத்துக்களைப் பெற்றுக்கொள்வது நல்லது என்பதுதான் வைத்தியர்களினதும் விஞ்ஞானிகளினதும் ஆலோசனை.

முன்னோர்கள் முட்டாள்களாக இருந்ததில்லை. அந்தக் காலத்தில் அவர்களுக்குத் தெரிந்த அறிவியலை வைத்துப் பல விடயங்களை ஆராய்ந்திருக்கின்றார்கள். அறிவுபூர்வமாக விளக்கமுடியாதவைக்கு கடவுளைத் துணைக்கிழுத்திருக்கின்றார்கள். அல்லது எளிய மக்களுக்கு விளங்கப்படுத்த கடவுளையும் அது சார்ந்த புராணக்கதைகளையும் உருவாக்கியிருக்கின்றார்கள். ஆனால் விஞ்ஞான முன்னேற்றத்தின் பின்னர் முன்னைய நம்பிக்கைகளின் அடிப்படைகள் கேள்விக்கு உட்படுத்தப்படும்போது அவற்றினைச் சரி என்று வாதிடுவது மூடத்தனமானது.

தற்போதைய நவீன விஞ்ஞான யுகத்திலும் தெரிந்தது அணுவளவு, தெரியாதது மலையளவு.இந்த உண்மையைப் புரிந்து தேடல்களைத் தொடரவேண்டும்.

ஒரு அருமையான விளக்கம் அண்ணே இவ்வாறான விவாதம் தான் இங்கு முக்கியமா வேணும் நன்றி கிருபன் அண்ணே .

Share this post

Link to post
Share on other sites

எந்த ஒரு விஞ்ஞான ஆய்வும் விற்றமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ள மாத்திரைகளைச் சாப்பிடுவதன்மூலம் எமக்குத் தேவையான சக்தியை எடுத்துக்கொள்ளலாம்; எனவே உணவு தேவைப்படாது என்று சொல்லியிருக்கமாட்டாது. உண்மையில் இயற்கையான உணவுகளை உட்கொள்வதன்மூலமே இந்த ஊட்டச்சத்துக்களைப் பெற்றுக்கொள்வது நல்லது என்பதுதான் வைத்தியர்களினதும் விஞ்ஞானிகளினதும் ஆலோசனை.

4545435967_409x271.png

இந்த விளம்பரத்தை பாருங்கள். என்ன சொல்ல வருகிறார்கள்.

http://cooks.ndtv.com/article/show/before-soylent-a-brief-history-of-food-replacements-479905

Share this post

Link to post
Share on other sites

பாம்பிற்கு பால் ஊற்றுவதன் காரணம் என்ன?

இந்திய நாட்டில் முட்டைடையும், பாலையும் வைத்து பாம்பினை வழிபடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனால் விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயம் என்னவென்றால் முட்டையையும், பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு. மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது.

ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.

பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால், முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது. ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. இந்த காரணத்தையே அறிவியல் ரீதியான கருத்தாக நமக்கு முன்வைக்கின்றார்கள்.

ஆனால் இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே மக்கள் பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தவறு. பாம்பு பால் குடிக்காது. முட்டையை விரும்பிக் குடிக்கும். பால் பாம்புகளை ஈர்க்கும். அதற்கான காரணம் பாலை நோக்கி வரும் பிராணிகளை வேட்டையாடுவதாகும். பாம்புக்குப் பாலும் முட்டையும் வைப்பதில் ஏதும் தத்துவங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

Share this post

Link to post
Share on other sites

4545435967_409x271.png

இந்த விளம்பரத்தை பாருங்கள். என்ன சொல்ல வருகிறார்கள்.

http://cooks.ndtv.com/article/show/before-soylent-a-brief-history-of-food-replacements-479905

இந்த செய்தியில் விற்றமின்கள், கனிமங்கள் மட்டும் உணவாக என்று எங்கேயும் சொல்லவில்லை. ஆரம்பத்திலேயே macronutrients என்று குறிப்பிட்டு விட்டார்கள். Macronutrients என்பதன் அர்த்தம் மாச்சத்து, புரதம், கொழுப்பு என்பனவாகும். இப்படியான தண்ணிச் சாப்பாடு ஒன்றும் புதிய கண்டு பிடிப்பல்ல! தாமாக உணவருந்த முடியாத நோயாளிகளுக்கு மூக்கின் வழியாக குழாய் விட்டு வழங்கப் படுவதும் இப்படியான திரவ உணவுகள் தான். தவறான புரிதலால் எப்படி விஞ்ஞானத்தையே அடிப்படையற்ற மூட நம்பிக்கையாக மாற்ற முடியும் என்பதற்கு உங்கள் கருத்தும் இந்த செய்தியும் நல்ல உதாரணம்!

Share this post

Link to post
Share on other sites