Jump to content

சனிபகவான் தலம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியில் விற்றமின்கள், கனிமங்கள் மட்டும் உணவாக என்று எங்கேயும் சொல்லவில்லை. ஆரம்பத்திலேயே macronutrients என்று குறிப்பிட்டு விட்டார்கள். Macronutrients என்பதன் அர்த்தம் மாச்சத்து, புரதம், கொழுப்பு என்பனவாகும். இப்படியான தண்ணிச் சாப்பாடு ஒன்றும் புதிய கண்டு பிடிப்பல்ல! தாமாக உணவருந்த முடியாத நோயாளிகளுக்கு மூக்கின் வழியாக குழாய் விட்டு வழங்கப் படுவதும் இப்படியான திரவ உணவுகள் தான். தவறான புரிதலால் எப்படி விஞ்ஞானத்தையே அடிப்படையற்ற மூட நம்பிக்கையாக மாற்ற முடியும் என்பதற்கு உங்கள் கருத்தும் இந்த செய்தியும் நல்ல உதாரணம்!

 

 

திரி 

நல்ல வழீயில் பயணிக்கிறது

தொடர்ந்து பேசுவோம்

அறிந்து கொள்வோம்

 

நன்றி  ஐயா

நேரத்துக்கும் விளக்கத்துக்கும்...

Link to post
Share on other sites
  • Replies 79
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரி முதல் ரிலீஸில் எதிர்பார்த்த வசூலை அள்ளவில்லை. இரண்டாவது ரிலீஸில் சில்வர் ஜுப்ளிதான் போங்கள்.

ஒருக்கால் எட்டிப் பாருங்கள்.. http://www.yarl.com/forum3/index.php?/topic/125444


நாதமுனி வேறு சீரியஸாகக் கதைக்கவேண்டாம் என்று சொல்லிக்கொண்டே "கன்னடப்" பெரியாரையும் ஜெயலலிதாவையும் வேறு சைக்கிள் காப்பில கிடா வெட்டுறார்! குட்டிச் சுவருக்கு அங்கால சும்மா "சிவனே" என்று பச்சை இறைச்சியோ, மொச்சை இறைச்சியோ என்று கிடைக்கிறதைத் திங்கற டெல்லி வெள்ளைப் புலியாட்டம் நாம் இருக்கிறம். சுவரைத் தாண்டி உள்ளே விழுந்தால் என்ன கதி ஆகும் என்றது தெரிந்ததுதானே! :icon_mrgreen:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியில் விற்றமின்கள், கனிமங்கள் மட்டும் உணவாக என்று எங்கேயும் சொல்லவில்லை. ஆரம்பத்திலேயே macronutrients என்று குறிப்பிட்டு விட்டார்கள். Macronutrients என்பதன் அர்த்தம் மாச்சத்து, புரதம், கொழுப்பு என்பனவாகும். இப்படியான தண்ணிச் சாப்பாடு ஒன்றும் புதிய கண்டு பிடிப்பல்ல! தாமாக உணவருந்த முடியாத நோயாளிகளுக்கு மூக்கின் வழியாக குழாய் விட்டு வழங்கப் படுவதும் இப்படியான திரவ உணவுகள் தான். தவறான புரிதலால் எப்படி விஞ்ஞானத்தையே அடிப்படையற்ற மூட நம்பிக்கையாக மாற்ற முடியும் என்பதற்கு உங்கள் கருத்தும் இந்த செய்தியும் நல்ல உதாரணம்!

 

நன்றி ஜஸ்டின். அருமை. உண்மையில் எழுதும்போது மற்றைய ஊட்டச்சத்துகளையும் சேர்த்து எழுதத்தான் நினைத்தேன், விட்டமின் மட்டும் எழுதி,(google  transliteration )அலுப்பில் மற்றயவற்றை விட்டுவிட்டேன்.அதை ஒரு உதாரணமாகத்தான் வைத்தேன்.என்னுடைய உண்மையான கருத்து "food  in  a  pill " 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

 

தவறு. பாம்பு பால் குடிக்காது. முட்டையை விரும்பிக் குடிக்கும். பால் பாம்புகளை ஈர்க்கும். அதற்கான காரணம் பாலை நோக்கி வரும் பிராணிகளை வேட்டையாடுவதாகும். பாம்புக்குப் பாலும் முட்டையும் வைப்பதில் ஏதும் தத்துவங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

நன்றி, இந்த பகுதியை இணைத்தது   தத்துவம் காரணமாக   இல்லை, பாம்பை கடவுளாக வணங்கிவிட்டு, பின்  சத்தியராஜ் பாணியில் மெதுவாக அவற்றை வேரறுக்கும்  குணத்திற்கு ஆதாரமாக அமையும் போல  இருந்தமையால். 

 

 

 

குட்டிச் சுவருக்கு அங்கால சும்மா "சிவனே" என்று பச்சை இறைச்சியோ, மொச்சை இறைச்சியோ என்று கிடைக்கிறதைத் திங்கற டெல்லி வெள்ளைப் புலியாட்டம் நாம் இருக்கிறம். சுவரைத் தாண்டி உள்ளே விழுந்தால் என்ன கதி ஆகும் என்றது தெரிந்ததுதானே! 

நவீன அறிவியல் மீதான உங்களின் காதலுக்கு உண்மையில் ஒரு சல்யூட்.

 

 

 

மொக்குக்கூட்டம் என்று ஒதுங்கி இருக்கலாம்தான். ஆனால் மக்களின் நம்பிக்கைகளை வைத்தே வியாபாரம் செய்வதும், அதற்கு விஞ்ஞானத்தைக் காரணம் காட்டுவதும் ஏமாற்றும் செயல் என்பதைச் சொல்லும் சமூகப்பொறுப்பில்லாதவர்களாக இருக்கவேண்டும் என்று சொல்கின்றீர்களா? இப்படி எமது சமூகம் இருப்பதனால்தான் கனடாவில் சோதிடம் பார்க்க வந்த சாத்திரி புருஷனின் கண்டத்திற்கு பரிகாரம் செய்யவென்று ஒரு பெண்ணுடன் படுக்கின்ற நிலை வந்தது. 

 

http://youtu.be/ndQf0SInB4k?t=48s

 

சமயங்கள் நீண்டகாலம் மக்களின் வாழ்க்கையை தீர்மானித்து வந்தது. இப்போது  அது கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டு வருகிறது. அதனால் அதன் முதன்மைத்தன்மையை நிருபிக்க இப்படியான குழந்தைதனமான சேட்டைகள் தேவைப்படுவதாக நினைக்கிறேன்.

 

சாத்திரம் பார்க்க வந்த பெண்ணை மடக்கியது அந்த நபரின் தனிப்பட்ட தவறு.

 

 

 

இந்த செய்தியில் விற்றமின்கள், கனிமங்கள் மட்டும் உணவாக என்று எங்கேயும் சொல்லவில்லை. ஆரம்பத்திலேயே macronutrients என்று குறிப்பிட்டு விட்டார்கள். 

 

"இந்த விளம்பரத்தை பாருங்கள். என்ன சொல்ல வருகிறார்கள்" இந்த வாக்கியம் மேலே போடப்பட்ட படத்திற்கானது.அதை ஒரு vitamin supplement இணையத்தளத்தில் விளம்பரமாக போட்டிருந்தார்கள்.  

 

1926-Sept-19-Ogden-Standard-Examiner-tha

 

 

 

தவறான புரிதலால் எப்படி விஞ்ஞானத்தையே அடிப்படையற்ற மூட நம்பிக்கையாக மாற்ற முடியும் என்பதற்கு உங்கள் கருத்தும் இந்த செய்தியும் நல்ல உதாரணம்!

கீழே போடப்படிருந்த லிங்கில் என்னை கவர்ந்த ஒரேவிடயம்  "meals in a pill"தான்.என்னைப்போன்ற விக்கிபீடியா,யுடியுப் ஆராச்சியாளர்கள் எப்படி விஞ்ஞானத்தை மூடநம்பிக்கையாக கொள்ளமுடியும்.   எமது அடிமடியில் கைவைக்கிறீர்கள் . :). இல்லை,விஞ்ஞானமும் பலதவறுகளை செய்தது, செய்துவருகின்றது என்பதை தெரிவிப்பதுதான் எனது நோக்கம்.

 

 

 

 

 

Just as US President Herbert Hoover had won the election in 1928 on a promise of “a chicken in every pot”, the promise of the 1960s seemed to be “a meal pill in every pocket”. BBC

 

 

There's also the fact, which has stymied more than one dieter, that people have two different signals for hunger. One is a chemical signal that you've consumed enough calories and nutrients. The other is from the stomach and relates more directly to "feeling full". Food pills won't work unless they can mimic this feeling.-----The future      ஆசை தோசை 

 

 

ஆதிகாலத்திற்குச் செல்லும் கற்பனையான படங்கள், விஞ்ஞானத்தை ஆதாரமாகக் காட்டுவதில்லை. இவை லொஜிக்காக அமைக்கப்படும் கற்பனையைத் தூண்டும் படங்கள். கற்பனையின் வீச்சை ரசிப்பது மனித இயல்பு. அதையும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முனையும் மூடநம்பிக்கைகளயும் ஒன்றாகப் போட்டுக் குழப்பக்கூடாது.

WIKI QUOTE " Robert A. Heinlein, "a handy short definition of almost all science fiction might read: realistic speculation about possible future events, based solidly on adequate knowledge of the real world, past and present, and on a thorough understanding of the nature and significance of the scientific method." 

1890கள் விட்டமின்கள் கண்டுபிடிக்க ஆரம்பிக்கப்பட்ட காலம், அதனால் தான் "MEAL IN A PILL" அந்த காலகட்டத்தில் எதிர்வு கூற ஆரம்பித்தார்கள். இவை வெறுமனே கற்பனைகள் என்றுசொல்ல முடியாது.ஏனெனில்  பலவிஞ்ஞானிகள்  இதை நனவாக்க முயற்சித்தார்கள் (விசேடமாக நாசா )

 

மக்களுக்கான விளம்பரங்கள் (சில டிராமா வடிவில்)

 

 

 

 

 

தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்ள தயார். மூடநம்பிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதாக தயவுசெய்து குற்றம் சாட்டாதீர்கள்.
 
அதுவரை  நன்றி.நமக்கு இனி இதுதான் சரி வரும்போல.
 
 

 

creativity_504x428.jpg

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

போலி அறிவியல் (Pseudoscience) என்று ஒன்று உலகில் பரவலாக உள்ளது. அமெரிக்கா, கனடா, ஏன் பிரித்தானியாவில்கூட இதனைச் சில இறுக்கமான சமய நம்பிக்கையாளர்கள் கற்பிக்கின்றார்கள். எனவே எதையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும். அறிவியல் முறைகொண்டு கூறப்படும் விடய்களை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் ஏற்றுக்கொண்டுள்ளனவா என்று பார்க்கவேண்டும்.

எதையும் கண்மூடி நம்பினால், மண்டையைக் கழுவித்தான் விடுவார்கள்!

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.