Jump to content

ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு - ஜெ., ஜாமின் வழக்கில் ஆஜராவேன் : சுப்பிரமணியன் சாமி அறிவிப்பு


Recommended Posts

140926165435_jayalalitha_304x171_ap_nocr
 
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை சனிக்கிழமையன்று வழங்கப்படவிருக்கிறது.
கடந்த 18 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி முடிவடைந்தன.
 
செப்டம்பர் 20ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று இந்த வழக்கை விசாரித்துவந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கல் டி குன்ஹா முன்னர் அறிவித்திருந்தார்.
 
பின்னர், பாதுகாப்புக் காரணங்களுக்காக தீர்ப்பு வழங்கப்படும் இடமும் தேதியும் மாற்றப்பட்டன. தீர்ப்பு செப்டம்பர் 27ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
 
தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
 
அப்போது ஜனதாக் கட்சித் தலைவராக இருந்த சுப்ரமணியன் சுவாமி 1996ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதியன்று இந்த வழக்கைத் தொடர்ந்தார்.
தன்னுடைய வருமானத்திற்கு அதிகமாக சுமார் 66.5 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக் குவித்ததாக ஜெயலலிதா மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளியாகவும் அவரது தோழி சசிகலா இரண்டாவது குற்றவாளியாகவும் மூன்றாம் குற்றவாளியாக வி.என். சுதாகரனும் நான்காவது குற்றவாளியாக இளவரசி என்பவர் மீதும் குற்றம் சட்டப்பட்டது.
இதையடுத்து, 96ஆம் ஆண்டு டிசம்பரில் ஐந்து நாட்களுக்கு ஜெயலலிதாவின் வீடு, ஹைதராபாத் தோட்டம் ஆகியவை சோதனையிடப்பட்டன. பிறகு இந்த வழக்கிற்கென தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, 97ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது.
 
இதற்கிடையில், தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
உயர் நீதிமன்றம் 2003ஆம் ஆண்டு நவம்பரில் பெங்களூர் தனி நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றியது. பப்புசாரே, பி.ஏ. மல்லிகார்ஜுனைய்யா, பாலகிருஷ்ணா, முடிகவுடர் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்து இந்த வழக்கை விசாரித்தனர்.
இதற்கிடையில் 2011ஆம் ஆண்டில் ஜெயலலிதா பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
 
தீர்ப்பை முன்னிட்டு பெங்களூரில் பரபரப்பு
 
111219101216_sasikala_jayalalitha_pti304
இந்த வழக்கில் 160க்கும் மேற்பட்ட தடவைகள் வாய்தா வழங்கப்பட்டது
 
சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சார்யா 2013ஆம் ஆண்டுத் துவக்கத்தில் இந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்ளவே, அவருக்குப் பதிலாக பவானிசிங் என்பவர் அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்றார்.
 
கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் ஜான் மைக்கல் டி குன்ஹா தனிநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் பத்து மாதங்கள் விசாரணை நடத்திய பின்னர் தீர்ப்பு வழங்கும் தேதியை அறிவித்துள்ளார்.
 
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பும்அரசுத் தரப்பும் பல முறை வாய்தா வாங்கினர். இதில் அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது. 18ஆண்டுகளாக நடந்துவரும் இந்த வழக்கில் 160க்கும் மேற்பட்ட தடவைகள் வாய்தா வழங்கப்பட்டது.
ஜெயலலிதா மீதான இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கு தமிழகம் முழுவதும் கவனிக்கப்படும் வழக்காக இருப்பதால், செய்தி சேகரிப்பதற்காக 300க்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் பெங்களூரில் குவிந்துள்ளனர்.
 
அதேபோல தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் பெங்களூரில் முகாமிட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்களும் பெங்களூர் நகருக்கு வந்துள்ளனர்.
 
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தீர்ப்பு வழங்கப்படும்போது நேரில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், தமிழக முதலமைச்சரின் பாதுகாப்பிற்கென விரிவான ஏற்பாடுகளைக் கர்நாடக காவல்துறை செய்துள்ளது. தனி விமானம் மூலம் நாளை காலையில் ஜெயலலிதா சென்னையிலிருந்து பெங்களூர் வருவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, ஊழல் வழக்குகளில் நீதிமன்றங்களால் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுபவர்கள் உடனடியாக தங்கள் பதவிகளை இழப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
jaya9kk_2128807f.jpg
 

12.47 AM: தமிழக-கர்நாடக எல்லையில், ஓசூர் கூட்டு ரோடில், தடுப்பு வேலிகளை உடைத்து கர்நாடக எல்லைக்குள் நுழைய முயன்ற அதிமுகவினர் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

12.35 AM: தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில், கர்நாடக போலீஸார் 1000-க்கும் மேற்பட்டோரும், தமிழக போலீஸார் 500 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிமுக கொடி ஏந்திய கார்கள் கர்நாடக மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

12.30 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்திலும் இருந்து அவர் விடுபடுவார். தவிர, திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தன் மீது வழக்கு தொடரப்பட்டது என்ற ஜெயலலிதாவின் வாதமும் வலுப்பெறும்.

12.18 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், சென்னை அதிமுக தலைமை கழகத்தில் அக்கட்சித் தொண்டர்கள் இனிப்புகள், பட்டாசுகளுடன் குவிந்துள்ளனர். விடுதலை...விடுதலை... என்ற கோஷத்தை எழுப்பி வருகின்றனர்.

12.10 AM: பரப்பன அக்ரஹார நீதிமன்ற பகுதிக்குள் செல்ல போலீஸ் கெடுபிடி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிக்குள் அனுமதிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.

11.58 AM: நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் ஜேமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால் தொலைதொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது.

11.49 AM: நீதிமன்றத்திற்குள் இருந்து வெளியே வந்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியும் வெகு நேரமாக தொலைபேசியில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

11.46 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக முதல்வர் ஜெயலலிதாவின் உதவி வழக்கறிஞர் திவாகரன் நீதிமன்ற வளாகத்தில் இருந்த செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

11.40 AM: முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் உடனடியாக எம்.எல்.ஏ. தகுதியை இழப்பார். அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்படும்.

11.20 AM: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி டி குன்ஹா இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்க இருக்கிறார்.

11.05 AM: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நீதிமன்றத்திற்குள் சென்றார்.

11.02 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க நீதிபதி டி.குன்ஹா நீதிமன்றத்திற்குள் சென்றார். அவரைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி உள்ளிட்டோரும் ஆஜராகினர். நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கின.

11.00 AM: அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பா.மோகன் ஆகியோர் நீதிமன்ற வளாகத்திற்கு 1 கி.மீ தூரம் நடந்தே வந்தடைந்தனர்.

10.55 AM: ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகத்திற்கு வந்தடைந்தனர்.

10.54 AM: நீதிமன்ற வளாகத்துக்குள் ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவத்தை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால் அவர் போலீஸாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும் போலீஸார் அவரை அப்பகுதியில் இருந்து வெளியேற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

10.50 AM: சரியாக 10.42 மணியளவில் நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த முதல்வர் ஜெயலலிதா காரில் இருக்கிறார். அவருடன் சசிகலா, இளவரசியும் உள்ளனர். 10.55 மணிக்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

10.45 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், ஓசூர் சாலையில், போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

10: 38 AM: நீதிமன்றத்திற்கு வந்த முதல்வர் ஜெயலலிதா பச்சை நிற சேலை உடுத்தியிருந்தார். பச்சை நிறம் அவரது ராசியான நிறம் என்பது கவனிக்கத்தக்கது.

10.35 AM: வி.வி.ஐ.பி. பாஸ்கள் அளிக்கப்பட்ட அதிமுகவின் முக்கியப் பிரமுகர்கள், பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில் இருந்து 20 மீட்டர் தூரத்தில் நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.

10.29 AM: நீதிமன்றத்தில் ஆஜராக தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி ஆகிய மூவரும் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகம் வந்தடைந்தனர்.

10.24 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி ஆகிய மூவரும் ஒரே காரில் பரப்பன அக்ரஹார நீதிமன்றத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

10.15 AM: செய்தியாளர்கள் வாகனங்கள் 3 கி.மீ தூரத்திலேயே நிறுத்தப்பட்டன. செய்தி சேகரிப்பதற்காக நீதிமன்றத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் செய்தியாளர்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.

navanee_2128702a.jpg

10.10AM: நீதிமன்ற வளாகத்திற்குள், அதிமுகவினர் மதுரை ராஜன் செல்லப்பா, முத்துராமலிங்கம், சசிகலா புஷ்பா, செங்கோட்டையன், தம்பிதுரை, தளவாய் சுந்தரம் அமைச்சர்கள் செலூர் ராஜூ, மாதரவரம் மூர்த்தி, வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கோகுல இந்திரா, ரமணா, சின்னையா, ராஜேந்திர பாலாஜி, முன்னாள் எம்.பி.,சரோஜா, காஞ்சி பன்னீர் செல்வம் மற்றும் எம்.பி.நவநீதகிருஷ்ணன் ஆகியோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

10.05 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதால் பெங்களூரில் அதிமுகவினர் குவிந்துள்ளனர். அதேவேளையில், சென்னையில் அதிமுக தலைமைக் கழகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

10.00 AM: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்காக பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.குன்ஹா பலத்த பாதுகாப்புடன் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகத்திற்கு வந்தடைந்தார்.

9.58 AM: செய்தியாளர்கள் வாகனங்கள் 3 கி.மீ. தூரத்திற்கு முன்னதாகவே நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து செய்தியாளர்கள நடந்து செல்கின்றனர்.

9.54 AM: பரப்பன அக்ராஹாரா பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

shop_2128663a.jpg

பெங்களூர் நீதிமன்ற வளாகத்தை ஒட்டிய பகுதிகளில் கடைகள் மூடல்.

9.48 AM: முக்கியப் புள்ளிகள் வாகனங்கள் கூட ஒரு கி.மீ-க்கு முன்னதாகவே நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து அவர்கள் நடந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

9.45 AM: போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கிறது. அதிமுகவினர் மற்றும் அக்கட்சி வழக்கறிஞர்களுக்கு வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. அனைவரையும் நடந்து செல்லுமாறே போலீஸார் வலியுறுத்துகின்றனர்.

road_2128650a.jpg

பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் செல்லும் வழியில் ஓசூர் சாலையில் அதிமுக தொண்டர்கள் குவிந்ததால், கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

9.40 AM: பெங்களூர் மடிவாலா முதல் எலக்டரானிக் சிட்டி வரையிலான 5 கி.மீ. தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

9.08 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி முதல்வர் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதால், பெங்களூரில் அவர் வரும் வழி முழுவதும் கட்-அவுட், பேனர்களை அதிமுக-வினர் வைத்துள்ளனர்.

9.06 AM: பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறை வளாகத்திற்குள் தங்களை அனுமதிக்கக் கோரி 500-க்கும் மேற்பட்ட அதிமுக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கும் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

police_2128666a.jpg

பெங்களூர் நீதிமன்ற வளாகத்தின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு.

8.41 AM: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, சிறப்பு நீதிமன்ற கட்டிடம் அமைந்துள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறை வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

8.41 AM: சென்னை - போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஜெயலலிதா தனி விமானம் மூலம் பெங்களூர் செல்கிறார். முதல்வர் ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி ஆகியோரும் புறப்பட்டனர்.

jaya1_2128692a.jpg

பெங்களூர் புறப்பட்ட முதல்வர் ஜெயலலிதா. | படம்: கே.வீ.ஸ்ரீனிவாசன்

8.40 AM: தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று காலை 11 மணிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கில் இணைக்கப் பட்டுள்ள நமது எம்ஜிஆர், ஜெயா என்டர்பிரைசஸ் உள்ளிட்ட 32 தனியார் நிறுவனங்கள் மீதும் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. | படிக்க - ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கின் முழு பின்னணி

வரலாறு காணாத பாதுகாப்பு

சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெங்களூரில் குவிந்துள்ளதால் நகரில் உள்ள ஹோட்டல்கள், விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் ஆயிரக்கணக்கானோர் தமிழக எல்லையான ஓசூரில் தங்கியுள்ளனர். 6000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக எல்லையில் இருந்து பெங்களூர் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக் கப்படுகின்றன. பஸ், ரயில் மற்றும் விமானம் மூலமாக பெங்களூர் வரும் அனைத்து பயணிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

நீதிபதி டி'குன்ஹாவின் அசராத அணுகுமுறை

கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை நெருங்கியதற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவே மிக முக்கிய காரணம். இவ்வழக்கில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஓராண்டுக்குள் தீர்ப்பெழுதும் கட்டத்திற்கு நகர்த்தியதில் அவரது கடும் உழைப்பும், அசராத அணுகு முறையும் உள்ளது. 

 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6452074.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

முழு தீர்ப்பும் தமிழ், ஆங்கிலத்தில் படிக்கப்படுவதால் தீர்ப்பு வெளியாவதில் தாமதமாகவதாகவும் தகவல் 

Read more at: http://tamil.oneindia.in/news/india/jayalalitha-assets-case-verdict-bangalore-court-live-211770.html


கோர்ட்டுக்கு வெளியே வந்து காரில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு சென்றார் ஜெ.- தகவல்கள்

-ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் இன்னும் சில நிமிடங்களில் தீர்ப்பு அளிக்கப்படுகிறது

-முழு தீர்ப்பும் தமிழ், ஆங்கிலத்தில் படிக்கப்படுவதால் தீர்ப்பு வெளியாவதில் தாமதமாகவதாகவும் தகவல்

-தமிழகம் - கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தம்

-தமிழகம் வரும் அனைத்து கர்நாடக பேருந்துகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.

-தமிழக பேருந்துகள் ஓசூர் வரை மட்டுமே செல்கின்றன.

-தமிழகம் முழுக்க மின்தடை மாலை வரை நீடிக்கும் என தகவல்.

-தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசுக்கள்,இனிப்புகளோடு ,கடும் டென்சனோடும் காத்திருப்பு.

-தமிழகம் முழுவதும் போலீசார் ஆங்காங்கே குவிப்பு

-சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிப்பு: கன்னட சேனல்கள்

-கோர்ட் வட்டார தகவல்கள் தெரிவித்ததாக கன்னட டிவி சேனல்களில் செய்தி ஒளிபரப்பு

-சட்டப் பிரிவு 13 (1) இ படி ஜெயலலிதாவை குற்றவாளி என நீதிபதி அறிவித்ததாக கன்னட சேனல்களில் செய்தி ஒளிபரப்பு

-தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கன்னட சேனல்களில் விவாதம் ஆரம்பம்

-வழக்கு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை -மதியம் 1 மணிக்கு தீர்ப்பு விவரம் வெளியே வரும்

-ஜெ. வழக்கு தீர்ப்பு அறிவாலயம் வாசலில் திமுகவினர் வெடியோடு காத்திருப்பு

-பெங்களூர் நீதிமன்றத்திற்கு வெளியே டென்ஷனில் அங்கும் இங்குமாக நடக்கும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சென்னை மேயர் சைதை துரைசாமி

-தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மின்தடை -ஜெ. வழக்கு தீர்ப்பு செய்தியை இருட்டடிக்க திட்டமா?

Read more at: http://tamil.oneindia.in/news/india/jayalalitha-assets-case-verdict-bangalore-court-live-211770.html


ஜெ. வழக்கில் தீர்ப்பு கூறும் நேரத்தில் தமிழகத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் முற்றாக "கட்"

Read more at: http://tamil.oneindia.in/news/india/jayalalitha-assets-case-verdict-bangalore-court-live-211770.html

Link to comment
Share on other sites

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு 3 மணிக்கு தள்ளி வைப்பு

சுப்ரமணியசுவாமி படத்திற்கு செருப்படி அதிமுக தொண்டர்கள் ஆவேசம்

-கட்சி நிர்வாகிகளுடன் கருணாநிதி அவசர ஆலோசனை

-பெங்களூர் கோர்ட் முன்பு அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி மீது தடியடி

-நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார்

 

Link to comment
Share on other sites

அதிமுக தலைமையகம் வெறிச்சோடியது!

-பெங்களுர் நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

-தமிழகம் முழுவதும் தனியாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற உத்தரவு

-தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சில தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு தெரியவில்லை

-ஜெ வழக்கு தீர்ப்பு மதியம் 2.30 மணிக்கு - நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவிப்பு

-நீதிமன்ற வளாகத்தில் காத்து இருக்கிறார் ஜெ. ஓசூரில் சுப்பிரமணிய சுவாமி, கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் கொடும்பாவிகள் எரிப்பு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ 

இறுதி  ஆயுதமாக புலிகளையும் பாவித்துப்பார்த்தார்

எனவே ஈழத்தமிழருக்கு இந்த தீர்ப்பு மூலம் ஒரு புதிய  ஒளி  தெரியலாம்...

 

நன்றி  பகலவன்  தகவல்களுக்கும் நேரத்திற்கும்...

Link to comment
Share on other sites

https://twitter.com/Swamy39 :

Jail for Jayalalitha=JJ @ Subramanian Swamy


-நீதிமன்றத்தை சுற்றி பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

-3 ஆம்புலன்ஸ் வாகனங்களும் நீதிமன்ற வளாகத்திற்குள் சென்றுள்ளன.

 


பெங்களூர்நீதிமன்ற வளாகத்திற்குள் கூடுதலாக 500 போலீசார் விரைந்தனர்

 

Link to comment
Share on other sites

அதிமுக தலைமையகம் வெறிச்சோடியது!

 

ஜெயலலிதா குற்றவாளி என அறிவிப்பு

 

தண்டனை விவரத்தை 3 மணிக்கு அறிவிக்கிறார் நீதிபதி

 

 

உடனடியாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்
ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றம் என்றும் தகவல்

 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சட்டம் 13(2), 13 (1) (E) பிரிவின் கீழ் குற்றவாளி என அறிவிப்பு

 

 

http://tamil.oneindia.in/

Link to comment
Share on other sites

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு: சுப்ரமணியசுவாமி படத்தை செருப்பால் அடித்த அதிமுகவினர்

 

சென்னை: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட உள்ளது. நேரம் செல்ல செல்ல அதிமுகவினர் கொதிப்படைந்துள்ளனர். வழக்கின் காரணகர்த்தாவான சுப்ரமணியசுவாமியின் படத்தை செருப்பால் அடித்து ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு அறிவிக்கும் வரை திக் திக் நிமிடங்களாக நகர்ந்து வருகிறது.

 

கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரையில் முதலமைச்சர் பதவியில் இருந்த ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி, 1996ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது.

 

குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, பரப்பன அக்ரஹாரம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை வெளியிடுகிறார். இதற்காக, சென்னையில் இருந்து பெங்களூருவின் பரப்பன அக்ரஹாரம் நீதிமன்றத்திற்கு சென்றுள்ள ஜெயலலிதாவுக்கு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

மேலும் பரப்பன அக்ரஹாராவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் 48 மணி நேரத்திற்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தீர்ப்பு காலை 11 மணிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் 1 மணி என கூறப்பட்டது. நேரம் செல்லச் செல்ல அதிமுகவினர் மத்தியில் ஒருவித அசாதாரணமான சூழ்நிலை நிலவி வருகிறது. சென்னையில் விரக்தி மனநிலையில் காணப்படும் அதிமுகவினர் சுப்ரமணிசுவாமியின் உருவப்படத்தை செருப்பால் அடித்தனர். சுப்ரமணியசுவாமிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் பல்வேறு முழக்கங்களையும் எழுப்பினர்.

 

 

http://tamil.oneindia.in/news/tamilnadu/jayalalithaa-asset-case-protest-against-subramanian-swamy-in-chennai-211807.html


ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு!

-வருமானத்துக்கு அதிகமாக சொத்து சட்டம் 13(2), 13 (1) (E) பிரிவின் கீழ் குற்றவாளி என அறிவிப்பு

-விமானத்தில் சென்னை கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்

-ஜெயலலிதா குற்றவாளி என அறிவிப்பு

-குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்கிறார்

http://tamil.oneindia.in/news/india/jayalalitha-assets-case-verdict-bangalore-court-live-2-211803.html


ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றம் என்றும் தகவல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்ற செயற்பாடுகள்.. தீர்ப்புகள் அரசியல் மயமாவதும்.. அதனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்படுவதும்.. ஜனநாயகத்தின் தன்மையாகத் தெரியவில்லை.

 

அதிமுக.. திமுக.. தமிழகத்தில் வளர்த்த அசிங்க அரசியல் நாகரிகத்தை இது தெட்டத்தெளிவாக உலகிற்கு இனங்காட்டி நிற்கிறது.

 

தீர்ப்பு எதுவானாலும்.. அதனை அரசியல் கடந்து ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை அவசியம். மக்கள் அதனை நீதி மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்ந்த விடயமாக நோக்குவதோடு.. மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு நீதி சரியான பதில் அளிக்கிறதா என்பதை கண்காணிக்கவும் வேண்டும். அதைவிடுத்து.. அரசியலை.. மக்களின் இயல்பு வாழ்வை.. பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவது.. கீழ்த்தரமான கட்சி அரசியலாகும்..!!! :icon_idea:

Link to comment
Share on other sites

சொத்துக் குவிப்பு வழக்கு: தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி- பெங்களூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 

பெங்களூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரம் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது.

 

கடந்த 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

 

இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, பரப்பன அக்ரஹாரம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். இதனால் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகம் மற்றும் தமிழக-கர்நாடக எல்லையில் சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

 

மேலும் தமிழக-கர்நாடக எல்லை மற்றும் பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட இடங்களில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பரப்பன அக்ரஹார பகுதியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகினர். ஆனால் 11 மணிக்கு தீர்ப்பளிக்கப்படவில்லை.

 

பின்னர் பிற்பகல் 2.15 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய அரசு வழக்கறிஞர் பவானிசிங், இந்தவழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்ததாக தெரிவித்தார். ஜெயலலிதா உள்ளிட்டோருக்கான தண்டனைக்காலம் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது.

http://tamil.oneindia.in/news/india/verdict-expected-today-on-jayalalithaa-s-assets-case-211768.html

Link to comment
Share on other sites

ஜெயலலிதா குற்றவாளி என அறிவிப்பு

நமக்கு நல்ல காலம் இல்லை...............
Link to comment
Share on other sites

ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ.பதவியும் பறிபோகிறது

-18 ஆண்டுகளாக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு

-சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றவாளிகள் என நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார் -

-குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்கிறார்

 


-தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ்? விசாலாட்சி நெடுஞ்செழியன்? செந்தில் பாலாஜி

 


ஜெயலலிதாவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

-தமிழகத்தின் அடுத்த முதல்வர் பட்டியலில் நவநீத கிருஷ்ணன், ஷீலா பாலகிருஷ்ணன் பெயரும் அடிபடுகிறது

 


இந்த தண்டனைக்காக ஜெ. மகிழ்ச்சியடைய வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

 

சென்னை: ஜெயலலிதாவுக்கு சிறைதான் என்று சுப்பிரமணிய சாமி டிவிட் செய்துள்ளார். டிவிட்டரில் சில நாட்களுக்கு முன்பே, ஜெயலலிதாவுக்கு சிறை என்று டிவிட் செய்தவர் பாஜகவில் சமீபத்தில் இணைந்த சுப்பிரமணியன் சுவாமி. இதற்காக அவர் மீது அவதூறு வழக்கு ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

 

ஏற்கனவே பத்திரிகைகளில் அளித்த பேட்டிக்காகவும் சுப்பிரமணியன் சுவாமி மீது ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்குகள் சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று மதியம் 1.46 மணியளவில், சுப்பிரமணியன் சுவாமி ஒரு டிவிட் செய்துள்ளார். அதிலும் ஜெயில் ஃபார் ஜெயலலிதா=ஜெ.ஜெ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தீர்ப்பு குறித்த தகவல் வெளிவராத அந்த நேரத்தில் இதுபோன்ற ஒரு டிவிட்டை வெளியிட்டு அதிமுகவினரை சீண்டி பார்த்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. மற்ற சில டிவிட்டுகளில், 14.06.1996ம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்தேன். அதன்பிறகு கருணாநிதி முதல்வராக இருந்தபோது அதை அரசு சார்பில் நடத்த அனுமதி கேட்டார். நானும் அனுமதியளித்தேன். இப்போது வழக்கு தீர்ப்பால் கிடைக்கும் பெயரை கருணாநிதி பெற முயலுவார்.

 

2ஜி வழக்கில் எனது வழக்கு வெற்றி பெற்றால் அப்போது ஜெயலலிதா மகிழ்ச்சியடைவார். அதேபோல, சொத்துக்குவிப்பு வழக்கில் நான் வென்றுள்ளதையும் பார்த்து ஜெயலலிதா மகிழ்ச்சியடைய வேண்டும். இவ்வாறு டிவிட் செய்துள்ளார்.

 

http://tamil.oneindia.in/news/tamilnadu/jail-jayalalitha-tweet-subramaniyan-swamy-211811.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவை தங்கள் பொறுப்பில் எடுத்தது பெங்களூர் போலீஸ்

 

  உடல்நிலை சரியில்லை என்று ஜெயலலிதா நீதிபதியிடம் கூறியதாக தகவல்

 

http://tamil.oneindia.in/

Link to comment
Share on other sites

சாமி போட்ட முடிச்சு.. சிக்கிக் கொண்ட ஜெயலலிதா...!

 

 

சென்னை: கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக கருதலாம். அவரது இந்த பெரும் தோல்விக்கு முக்கியக் காரணம், சுப்பிரமணியம் சாமிதான். காரணம், இவர்தான் ஜெயலலிதா மீதான சொத்துக் குவி்ப்பு வழக்கை முதலில் தொடர்ந்தவர் ஆவார். இந்திய அரசியலில் மிகவும் வித்தியாசமான, வில்லங்கமான ஒரு அரசியல்வாதி சாமி. இவர் ஆக்கப்பூர்வமான செயல்களை விட பலரைப் பாதிக்கும் வகையிலான அரசியலைத்தான் இவர் பெரும்பாலும் நடத்தி வந்திருக்கிறார். அத்தி பூத்தாற் போல இவரால் சில நல்ல விஷயங்களும் நடந்துள்ளன - முல்லைப் பெரியாறு அணை வழக்கை உதாரணமாகச் சொல்லலாம்.

 

அதி பயங்கர அரசியல்வாதி

 

நிச்சயம் சாமியை யாருமே குறைத்து எடை போட முடியாது. காரணம், இவர் போட்ட வழக்குளில் பெரும்பாலானவற்றில் இவருக்கே வெற்றி கிடைத்துள்ளது. அதனால்தான் யார் மீதாவது இவர் வழக்குப் போட்டால் சம்பந்தப்பட்டவர்கள் பெரும் பீதியடைந்து போகிறார்கள்.

 

ஜெயலலிதாவை கடுமையாக பாதித்தவர்

 

யாருக்கு எப்படியோ ஆனால் ஜெயலிதாவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியவர் சாமிதான்.

 

தமிழக அரசியல்வாதிகளின் கடும் எதிரி

 

கிட்டத்தட்ட தமிழக அரசியல்வாதிகள் அத்தனை பேருக்குமே இவர் சிம்ம சொப்பனாக திகழ்ந்து வருகிறார். திமுக தொடங்கி அதிமுக வரை யாரையும் இவர் விட்டு வைக்கவில்லை.

 

சொத்துக் குவிப்பு வழக்குக்கு பிள்ளையார் சுழி போட்டவர்

 

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை 1996ம் ஆண்டு திமுக அரசுதான் போட்டது என்றாலும் கூட அதற்கான பிள்ளையார் சுழியைப் போட்டவர் இந்த சாமிதான்.

 

ஆளுநரிடம் கொடுத்த புள்ளிவிவரங்கள்

 

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே அவரது சொத்து குவிப்பு தொடர்பான அத்தனை ஆதாரங்களையும் கோப்புகளாக்கி அப்போதைய ஆளுநரிடம் வழங்கி ஜெயலலிதா மீது வழக்குத் தொடர அனுமதி கோரியிருந்தார் சாமி.

 

வலுவான ஆதாரங்கள்

 

உண்மையில் சாமி சேர்த்துக் கொடுத்த அத்தனை ஆதாரங்களுமே வலுவானவை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

திமுகவுக்குக் கை கொடுத்த சாமி

 

இந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் பின்னர் வந்த திமுக அரசு வழக்கைப் போட்டது. அந்த வகையில் சாமிக்குத்தான் திமுக நன்றி சொல்ல வேண்டும். அவர் சேகரித்து வைத்திருந்த அத்தனை ஆதாரங்களுமே ஜெயலலிதா வழக்கை மேலும் சிக்கலாக்கி விட்டது என்பதே உண்மை.

 

மற்ற வழக்குகளில் சாமிக்குத் தொடர்பில்லை

 

உண்மையில் ஜெயலலிதா மீதான பிற வழக்குகளை திமுக அரசுதான் போட்டது. அதை சாமி போடவில்லை. எனவே அந்த வழக்குகளில் ஜெயலலிதா எளிதாக வந்து விட்டார். ஆனால் சாமி போட்ட முடிச்சை அவிழ்க்கத்தான் அவரால் முடியாமல் போய் விட்டது.

 

ஒரு காலத்தில் பாசம் காட்டியவர்தான்

 

ஒரு காலத்தில் ஜெயலலிதா மீது நட்பாகத்தான் இருந்தார் சாமி. ஜெயலலிதாவும் கூட திமுகவுக்கு எதிராக சாமியைத்தான் பயன்படுத்தி வந்தார்.

 

சென்னா ரெட்டி மூலம் ஜெ.வை வீழ்த்திய சாமி

 

ஆனால் பின்னர் திடீரென எதிரியாகி விட்டனர் இருவரும். டான்சி ஊழல் விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குத் தொடர அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டி மூலம் அனுமதி வாங்கிய சாமியைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் நின்றனர். அதுதான் சாமிக்கும் பெரிய ஹைலைட்டான அரசியல் வெற்றியாகும்.

 

அதே வேகத்தில் பல்டி

 

ஆனால் அதன் பின்னர் அதே வேகத்தில் பல்டி அடித்து மீண்டும் ஜெயலலிதாவுடன் நட்பானார் சாமி. அதுவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசிய அரசியலில் ஜெயலலிதாவின் தூதராகவும் மாறினார் சாமி. வாஜ்பாய் அரசில் ஜெயலலிதா இணைய சாமிதான் முக்கியக் காரணமும் கூட.

 

கார் கொடுத்த ஜெயலலிதா

 

தனக்கு எதிராக செயல்பட்டவர் என்பதையும் பாராமல், சாமியின் பிறந்த நாளன்று அவரது கட்சி அலுவலகத்துக்கே நேரில் போய் வாழ்த்தியவர் ஜெயலலிதா. சாமிக்கு போர்ட் ஐகான் காரைப் பரிசாகவும் கொடுத்தார்.

 

மதுரையின் எம்.பியாக்கி அழகு பார்த்தவர் ஜெ.

 

அதேபோல நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் அதிமுக சார்பில் சாமியை நிறுத்தி வெற்றி பெறவும் வைத்தவர் ஜெயலலிதா. இதன் மூலம் போயஸ் தோட்டத்தின் ராஜகுரு என்ற அந்தஸ்துக்கும் உயர்ந்தவர் சாமி. உண்மையில் சாமியை அரசியல் ரீதியாக வளர்த்து விட்டவர் ஜெயலலிதா என்பதில் சந்தேகமே இல்லை.

 

வாஜ்பாய் கவிழ்ந்த கையோடு

 

ஆனால் வாஜ்பாய் ஆட்சியை மிகக் குறுகிய காலத்தில் கவிழ்த்த ஜெயலலிதா மீது கோபம் கொண்டார் சாமி. மீண்டும் இருவரும் எலியும் புலியுமாக மாறினர்.

 

கோர்ட்டில் வைத்து அதிமுக மகளிர் கொடுத்த வரவேற்பு

 

ஜெயலலிதாவுக்கு எதிராக அதன் பின்னர் தீவிரமாக செயல்பட்ட சாமியை, அதிமுகவினர் போகும் இடமெல்லாம் தூற்றி தாக்க முற்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த சாமியை, அதிமுக மகளிர் அணியினர் புடவையைத் தூக்கி கொடுத்த வரவேற்பு அப்போது அந்த இடத்தில் இருந்தவர்களால் இன்றைக்கும் மறக்க முடியாது.

 

தப்பிக்க முடியாது... சாமி கருத்து

 

இந்த வழக்கு குறித்து தீர்ப்புக்கு முன்பு ஏஎன்ஐக்கு சாமி அளித்த பேட்டியில், இந்த வழக்கிலிருந்து நிச்சயம் ஜெயலலிதா தப்ப முடியாது. காரணம், இதில் வலுவான ஆதாரங்கள் உள்ளன. முதல்வர் ஜெயலலிதா தவறு செய்திருப்பது உண்மை. இந்த வழக்கில் எல்லாமே தெளிவாக உள்ளன. எதையும் மூடி மறைக்க முடியாது. அவரால் இனியும் யாரையும் ஏமாற்ற முடியாது என்று கூறியிருந்தார் சாமி. மொத்தத்தில் மீண்டும் ஒருமுறை தமிழக அரசியலில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்த சாமி காரணமாகி விட்டார்.

 

http://tamil.oneindia.in/news/tamilnadu/swamy-the-real-reason-behind-the-fall-jayalalitha-211810.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமியை வெறும் வெத்து வேட்டு என்று கொஞ்சப் பேர் யாழில் சொல்லிச்சினம்

Link to comment
Share on other sites

-செங்கோட்டையில் கருணாநிதி உருவபொம்மை எரிப்பு

-ஆலங்குளத்தில் பஸ் மறியல் -தமிழகம் முழுவதும் போராட்டங்களில் குதித்த அதிமுகவினர்

-எனக்கு உடல் நிலை சரியில்லை.. தண்டனையை குறையுங்கள்- நீதிபதியிடம் ஜெ

-2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது

-சிறை தண்டனை காலம் + 6 வருடத்துக்கு என 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை வரும்

-ஓராண்டுக்குக் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை வராது

 


திருத்த முடியாத தீர்ப்புக்களை தந்த நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா

 

பெங்களூர்: கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கு தீர்ப்பினை நெருங்கியதற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவே மிக முக்கிய காரணம். வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கி நீதிபதியாக உயர்ந்தது வரை நேர்மையானவராகவே இருந்து வந்துள்ள நீதிபதி குன்ஹா அளித்துள்ள தீர்ப்புக்கள் சரியானதாகவே இருந்துள்ளதாம்.

 

6 நீதிமன்றங்கள்

 

1996-ம் ஆண்டு ஜூலையில் சென்னை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிய ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை சிங்கார வேலர் சிறப்பு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் என கடந்த 18 ஆண்டுகளில் 6 நீதிமன்றங்களின் படிகளை ஏறி இருக்கிறது.

 

90 நீதிபதிகள் விசாரணை

 

சென்னை நீதிமன்ற நீதிபதி சம்பந்தம் என்பவரில் ஆரம்பித்து நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வரை ஏராளமான நீதிபதிகள் இவ்வழக்கை விசாரித்துனர். இவ்வழக்கில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஓராண்டுக்குள் தீர்ப்பெழுதும் கட்டத்திற்கு நகர்த்தியதில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவின் கடும் உழைப்பும், அசராத அணுகுமுறையுமே முக்கிய காரணம்.

 

வழக்கறிஞர் டூ நீதிபதி

 

மங்களுர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய நீதிபதி குன்ஹா 2002ல் நீதிபதி தேர்வு எழுதி பெல்காம் மாவட்ட நீதிபதியாக பதவியேற்றார்.

 

உமாபாரதிக்கு எதிராக

 

1994ஆம் ஆண்டு இஸ்லாமியர்கள் மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றியதனால் ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து உமாபாரதி மீது கலவரத்தை தூண்டுதல், கொலை முயற்சி வழக்கு போடப்பட்டது.

 

திருப்ப பெற முயற்சி

 

2002ஆம் ஆண்டு இந்த வழக்கினை திரும்ப பெற அப்போதய அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்கு மாவட்ட நீதிமன்றமும் அனுமதி வழங்கியது. ஆனால் 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி உமாபாரதி எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஹூப்ளி மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.குன்ஹா, நோட்டீஸ் அனுப்பினார்.

 

சரணடைந்த உமாபாரதி

 

இதனையடுத்து ஹூப்ளி நீதிமன்றத்தில் உமாபாரதி சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் குன்ஹா.

 

லோக் ஆயுக்தா

 

லோக் ஆயுக்தா நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். அதன் பிறகு ஹார்வா மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின், பெங்களூரு குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். அங்கிருந்து பெங்களூரு புறநகர் கோர்ட் நீதிபதியாக மாற்றப்பட்டார்.

 

ஊழலுக்கு எதிரானவர்

 

ஊழலுக்கு எதிராக செயல்படுபவர் என்று பெயரெடுத்தவர். அதனால்தான் இவரை கர்நாடக அரசு விஜிலென்ஸ் துறையில் பதிவாளராக நியமித்தது. இந்த வழக்கை விசாரிக்க குன்ஹாதான் சரியான நபராக இருப்பார் என்று கர்நாடக அரசே இவரைப் பரிந்துரைத்தது.

 

14 வது நீதிபதி குன்ஹா

 

1997-ல் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு ஜான் மைக்கேல் டி'குன்ஹா 14-வது சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக கடந்த 31-10-2013 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

 

11 மாதங்களில் தீர்ப்பு

 

பெங்களூர் சிபிஐ நீதிமன்றத்தின் நீதிபதியாகவும்,பெங்களூர் மாவட்ட நீதிமன்ற பதிவாளராகவும் பணியாற்றிய இவர் கடந்த 11 மாதங்களில் வழக்கை தீர்ப்பை நோக்கி நகர்த்தியுள்ளார்.அதற்கு காரணம் அவருடைய கடினமான உழைப்பும், கண்டிப்பான அணுகு முறையும்தான் காரணம்.

 

கண்டிப்பான நீதிபதி

 

மேலும் மனு மேல் மனு போட்டு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த தனியார் நிறுவனங்களின் மனுக்களை மிகச்சரியாக கையாண்டார். முதல் முறையாக அவர்களுக்கு அபராதம் விதித்தார். அரசு வழக்கறிஞருக்கும் அபராதம் விதித்த கண்டிப்பான நீதிபதி இவர்.

 

18 மணிநேர வேலை

 

டி'குன்ஹா சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க ஆரம்பித்ததும் வாரத்தின் 5 நாட்களும் விசாரணையை தொடர்ந்து நடத்தினார். இதற்காக தினமும் 18 மணி நேரம் ஒதுக்கி வேலை செய்தார். தீர்ப்புக்கு ஆயத்தம் அதுவும் தீர்ப்பு தேதியை குறித்த பிறகு, நீதிமன்றத்தை சுத்தம் செய்பவர்கள் வருவதற்கு முன்பாக தனது இருக்கையில் வந்து அமர்ந்து விடுவார். வழக்கு குறித்த அனைத்து ஆவணங்களையும் படித்து, அவ்வப்போது குறிப் பெடுத்துக்கொள்வார் என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற ஊழியர்கள் நீதிபதி டி'குன்ஹாவின் பாணி குறித்து விவரிக்கின்றனர்.

 

இரவு வரை பணி

 

காலை 8.18 மணிக்கு தனது இருக்கையில் அமர்ந்த நீதிபதி குன்ஹா மாலை 7.30 மணி வரை பணியில் மூழ்கினார்.இன்று வழங்கவிருக்கும் தீர்ப்பின் பக்கங்களுக்கு இறுதிவடிவம் கொடுத்துக் கொண்டிருந்தார். அதுவும் தீர்ப்பின் இறுதி வடிவத்தை தனது கைப்படவே கடந்த 4 தினங்களாக திருத்தி, தட்டச்சு செய்துள்ளார். திருத்த முடியாத தீர்ப்புக்கள் நீதிபதி டி'குன்ஹாவை பொறுத்தவரை அவர் ஒரு முறை தீர்ப்பு அளித்தால், அந்த வழக்கு அடுத்தடுத்து உயர்நீதி மன்றங் களை அணுகினாலும் தோல்வியே அடையும்.அந்த அளவுக்கு தீர்ப்பு வழங்குவதில் கெட்டிக்காரர் என கர்நாடக நீதித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

http://tamil.oneindia.in/news/india/jayalalithaa-s-asset-case-judge-michael-d-cunha-211814.html


ஜெயலலிதாவுக்கு வழங்கிய தீர்ப்பை பட்டாசு வெடித்து கொண்டாடக்கூடாது -திமுகவினருக்கு கருணாநிதி வேண்டுகோள்

Read more at: http://tamil.oneindia.in/news/india/jayalalitha-assets-case-verdict-bangalore-court-live-2-211803.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணியம் சாமி தனது அரசியல் அனாதை தனத்தை போக்க.. போட்ட வழக்கே இது. தமிழக மக்கள் மீதான அக்கறையில் போட்ட வழக்கே அல்ல.

 

அதில் வசமாக ஆதாரங்களோடு சிக்கிக் கொண்டு.. 18 வருசமா சில்லெடுப்பு பட்டார் ஜெ. இப்போது அதற்கு முடிவு வந்தாச்சு..! ஜெ.. உள்ள போய் வெளிய வரும்.. காலம் வரும் போது.. சாமி...????! சின்னாபின்னமாகி நிற்குதோ.. இல்ல இருக்குதோ.. யார் அறிவார். :lol::D

Link to comment
Share on other sites

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் சூத்திரதாரிகள்!

 

 

பெங்களூர்: ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதே அவர் மீது முதன் முதல்ல் ஊழல் புகார் சொன்னவர் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிதான். அன்றைய கவர்னர் சென்னா ரெட்டியைச் சந்தித்து தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க, வாழப்பாடி ராமமூர்த்தி ஆகிய அனைவருமே மனு கொடுத்தார்கள். அதன் தொடர்ச்சிதான் இந்த வழக்கு! இந்த வழக்கின் சூத்திரதாரிகளாக பலர் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

 

சுப்ரமணிய சுவாமி

 

ஜெயலலிதா முதன் முறையாக 1.7.1991 முதல் 30.4.1996 வரை தமிழகத்தின் முதல்வராக இருந்தார். இந்த ஐந்து ஆண்டுகளில் அவர் தன் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைச் சேர்த்துள்ளதாக ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி அப்போதைய தமிழக ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அனுமதி பெற்று, பிறகு 14.6.1996-ல் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

 

லத்திகா சரண்

 

அந்த மனுவை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராமமூர்த்தி, தமிழ்நாடு ஊழல் மற்றும் கண்காணிப்பு துறையின் டி.ஐ.ஜியாக இருந்த லத்திகா சரணை விசாரணை செய்ய ஆணையிட்டார்.

 

வி.சி.பெருமாள்

 

அதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு மனுத் தாக்கல் செய்தார்கள். அதையடுத்து சென்னை அமர்வு நீதிமன்றம் அந்த விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. ஆனால், இந்த வழக்கை துறைரீதியாக தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறையின் ஐ.ஜி-யாக இருந்த வி.சி.பெருமாள் விசாரணை நடத்தி வந்தார்.

 

நல்லம்ம நாயுடு

 

வி.சி.பெருமாள் முதல் நிலை விசாரணையை முடித்து, குற்றச்சாட்டுகளுக்குத் தேவையான பூர்வாங்க ஆதாரங்கள் இருந்ததால், விரிவான விசாரணையை மேற்கொள்ளலாம் என்றும், விரிவான விசாரணை அதிகாரியாக நல்லம்ம நாயுடுவை நியமனம் செய்தும் 7-9-1996 அன்று உத்தரவிட்டார். அதன்படி 18-9-1996 அன்று முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்தார். தொடர் விசாரணையை மேற்கொள்ள நல்லம்ம நாயுடுவுக்கு உதவியாக, 16 இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்யப்பட்டனர்.

 

நீதிமன்றம் ஒப்புதல்

 

குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதோடு, அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்கள். ஜெயலலிதா தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வாங்கிய அசையா சொத்துக்களின் விவரங்களை நேரில் சென்று ஆய்வு செய்து தேவையான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக அமர்வு நீதிமன்றத்திடம் ஒப்புதலும் பெறப்பட்டது.

 

புழல் சிறையில் ஜெயலலிதா

 

இந்த நிலையில் டான்சி நில வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஜெயலலிதாவை 7.12.1996-ல் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அப்போது நல்லம நாயுடு தலைமையிலான ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் 7.12.96 முதல் 12.12.96 வரை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், ஹைதாராபாத் திராட்சை தோட்டம் ஆகிய இடங்களில் சோதனையிட்டார். ஏராளமான நகைகள், நகைகள்- பட்டு சேலைகளில் ஜொலித்த ஜெயலலிதா- சசிகலா புகைப்படங்கள், நூற்றுக்கணக்கான செருப்புகள், ஆயிரக்கணக்கான பட்டு சேலைகள் வெளியில் காட்டப்பட்டன.

 

259 சாட்சியங்கள்

 

அதன் பிறகு வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அந்த தனி நீதிமன்றத்தில் 4.6.1997-ஆம் நாள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 21.10.1997-ல் ஜெயலலிதா, சசிகலா, சுகாதரன், இளவரசி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. பிறகு 259 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

 

பல்டியடித்த சாட்சிகள்

 

மீண்டும் 2001-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதல்வரானார். அதையடுத்து சாட்சிகள் மறு விசாரணை செய்யப்பட்டனர். அதில் பல சாட்சிகள் ஏற்கெனவே சொன்ன வாக்குமூலத்தை மாற்றி பிறழ் சாட்சியாக மாறினார்கள். இதனை அரசு வழக்கறிஞர் தடுக்கவில்லை.

 

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்

 

இதையடுத்து தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில், 'வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா முதல்வராக இருப்பதால், இந்த வழக்கை வேறு ஒரு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்'' என்று மனுத் தாக்கல் செய்தார். அதையடுத்து உச்ச நீதிமன்றம் வழக்கை பெங்களூருக்கு மாற்ற 18.11.2003-ல் உத்தரவிட்டது. 10.9.2004-ல் அதிகாரபூர்வமாக வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது.

 

அட்டாகாச ஆச்சார்யா

 

பெங்களூருவில் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, துணை வழக்கறிஞர் சந்தேஷ் சௌட்டா ஆகியோர் ஆஜராயினர். ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் இதுவரை வழக்கை இழுத்தடிக்க மட்டும் நூறு மனுக்களை பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றத்தை அவமதிக்கும் கிரிமினல் நடவடிக்கையாகும் இது, ஆகையால் சட்ட விதி 15(2)-ன் கீழ் ஜெயலலிதா, சசிகலா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு இந்த நீதிமன்றம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் வழக்கறிஞர் ஆச்சாரியா. சாமூண்டீஸ்வரி கோயிலுக்கு வர முடியும். கோர்ட்டுக்கு வரமுடியாதா?' என்று கேள்வி கேட்டு, ஜெயலலிதா தரப்பை திணறடித்தவர்.

 

வழக்கறிஞருக்கு எதிராக மனு

 

கர்நாடகா அரசின் அட்வகேட் ஜெனரலாக இருப்பவர், சிறப்பு அரசு வழக்கறிஞராகவும் இருக்கக்கூடாது என்று ஜெயலலிதா தரப்பு ஒரு பிரச்னையைக் கிளப்பியது. இதனையடுத்து உடனடியாக எனக்கு அரசின் அட்வகேட் ஜெனரல் பதவி தேவையில்லை என்று ராஜினாமா செய்துவிட்டு சொத்துக் குவிப்பு வழக்கில் கவனம் செலுத்தினார் ஆச்சார்யா.

 

விலகிய ஆச்சாரியா

 

ஆனால், ஜெயலலிதா தரப்பு இவரை இந்த வழக்கில் இருந்து நீக்குவதற்காக, கவர்னர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்குத் தொடர்ந்து அவதூறு மனுக்களை போட்டனர். இதுபோன்ற காரியங்களால் மன உளைச்சலுக்கு ஆளான ஆச்சாரியா, தன்னுடைய மீதி வாழ்நாளை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் கழிக்க விரும்புகிறேன் என்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். ஆகஸ்ட் 14, 2012 அன்று தன்னுடைய பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.

 

மைக்கேல் டி.குன்ஹா

 

பெங்களூரு தனி நீதிமன்றத்தில் வழக்கு கடந்த 10 ஆண்டுகளாகப் பல நீதிபதிகளால் விசாரணை செய்தாலும் 31.10.2013-ல் வழக்கின் புதிய நீதிபதியாகப் பொறுப்பேற்ற ஜான் மைக்கேல் டி.குன்ஹா, தான் இன்றைய தினம் தீர்ப்பினை வாசிக்க இருக்கிறார்.

 

கூண்டில் நிற்கவைத்த நீதிபதி

 

26.5.2014-ம் தேதி நீதிமன்றத்துக்கு வந்திருந்த சசிகலா, சுதாகரன், இளவரசி மூன்று பேரையும் ஒருநாள் முழுக்க கூண்டில் நிற்க வைத்தார். இப்படி ஒவ்வொரு நாளும் கண்டிப்பு காட்டி தீர்ப்பின் தேதியை நோக்கியே வழக்கை நகர்த்திக்கொண்டு வந்தார்.

 

சு.சாமி டூ டி.குன்ஹா 

 

கடந்த 28.8.2014-ம் தேதி ஒரே நாளில் ஜெயலலிதா தரப்பு, அரசு தரப்பு என இரு தரப்பு இறுதிவாதத்தின் நிறைவுத் தொகுப்பு வாதத்தை முடித்து எழுத்துபூர்வமான வாதத்தையும் பெற்ற அவர், 18 வருடமாக நடைபெற்று வந்த இந்த வழக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் வழக்கின் இறுதித் தீர்ப்பு தேதியை அறிவித்தார் மைக்கேல் டி.குன்ஹா. சுப்ரமணிய சுவாமி சென்னையில் தொடங்கிய வழக்கினை பெங்களூருவில் முடித்து வைத்தார் மைக்கேல் டி.குன்ஹா

 

http://tamil.oneindia.in/news/india/disproportionate-assets-case-swamy-cunha-211815.html


ஜெ.வுக்கு எதிராக தீர்ப்பு- காஞ்சிபுரம் அருகே அரசு பஸ்ஸை தீ வைத்து எரித்த அதிமுகவினர்

-சென்னை சுப்ரமணியசுவாமி வீட்டில் அதிமுகவினர் கல்வீச்சு

-கோவை, மதுரையில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் கல்வீச்சு

 


உடல்நலம் சரியில்லை: குறைந்தபட்ச தண்டனை அளிக்க நீதிபதியிடம் ஜெ. கோரிக்கை

 

 

பெங்களூர்: தனக்கு உடல் நலம் சரியில்லாததால் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு முதல்வர் ஜெயலலிதா நீதிபதி குன்ஹாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் ஜெயலலிதா நீதிபதியிடம் கூறுகையில், இந்த வழக்கு என்னை அரசியலில் இருந்தே ஒழித்துக் கட்ட செய்யப்பட்ட கூட்டு சதி. மேலும் எனக்கு உடல் நிலை சரியில்லை. அதனால் எனக்கு குறைந்தபட்ச தண்டனை அளியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உடன் ஜெயலலிதாவை பெங்களூர் போலீசார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர். இதனால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழப்பதுடன் அவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

http://tamil.oneindia.in/news/india/jaya-s-request-juge-cunha-211818.html

Link to comment
Share on other sites

இவா ஆட்சியில் இல்லாமல் இருக்கும் போது யாரும் கண்டுக்காமல் இருந்த போது கூட்டணியில் போய் சேர்ந்து இவாவுக்காக மேடை தோறும் பேசிட்டு இருந்த வைக்கோவை கடைசி நேரம் கழட்டிவிட்ட இந்த அம்மாக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Top India politician Jayalalitha guilty of corruption
_51606573_fa1d16c0-9c6c-4f82-b0b8-ab66dd

 

One of India's most colourful and controversial politicians, Jayaram Jayalalitha, has been found guilty of corruption charges in a high-profile case which has lasted for 18 years.

 

The chief minister of the southern state of Tamil Nadu was found guilty of amassing wealth of more than $10m (£6.1m) which was unaccounted for.

She will now have to resign as chief minister with her career in jeopardy.

 

A former actress, her life has been marked by a series of high and lows. The verdict was delivered by a special court in Bangalore amid tight security.

 

http://www.bbc.co.uk/news/world-asia-india-29390682

Link to comment
Share on other sites

கோபாலபுரத்தில் கருணாநிதி வீட்டின் வெளியே திமுக தொண்டர்கள் மீது தாக்குதல் -

 

ஒருவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் -100 பேர் கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு ஓட்டம்

 

http://tamil.oneindia.in/news/india/jayalalitha-assets-case-verdict-bangalore-court-live-2-211803.html


ஜெ.வுக்கு சிறை - தமிழகம் முழுக்க அதிமுகவினர் போராட்டத்தில் குவிப்பு

 

 

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். பஸ் மறியல், கடையடைப்பு, கல்வீச்சு, கொடும்பாவி எரிப்பு என பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

 

சென்னையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டப் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியம் சாமி உள்ளிட்டோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. சென்னையின் பல பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதலும் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கருணாநிதியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

 

 

 

கடைகளை அடைக்க்ச சொல்லி ஒரு கும்பல் வலியுறுத்தியதால் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஆலங்குள்தில் பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சங்கரன்கோவிலில் 2 பஸ்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டன. மதுரை, கோவை, திருச்சி உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சிறிய அளவிலான வன்முறைகள் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

 

 

http://tamil.oneindia.in/news/tamilnadu/admk-indulges-violence-after-da-case-verdict-211819.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலவரம் ஆரம்பம்.........

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவுக்கு தண்டனை... இனிப்பு வழங்கிக் கொண்டாடிய விஜய் ரசிகர்கள்!

 

http://tamil.oneindia.in/news/india/jayalalitha-assets-case-verdict-bangalore-court-live-2-211803.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.