Jump to content

ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு - ஜெ., ஜாமின் வழக்கில் ஆஜராவேன் : சுப்பிரமணியன் சாமி அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சரி... மேன்முறையீடு, உச்ச நீதி மன்றம், அதி உச்ச நீதிமன்றம்...என்றெல்லாம் இனி இழுத்தடிப்பு செய்ய முடியாதா? இந்திய அரசியல் வாதிகளில் இதில் கை தேர்ந்தவர்களாயிற்றே.......

 

அதெல்லாம் இல்லாமலா.

 

இப்பவே அம்மாவுக்கு மீன்.. ஜாமீன் வாங்க போயினம். அதுக்குள்ள.. கர்நாடகக் கோட்டுகளுக்கு லீவு விட்டிட்டாங்க.

 

அம்மாவும் கர்நாடகம்.. கோட்டும்.. கர்நாடகம்.. சிறையும் கர்நாடகம்.. அங்கினை ஒரு பிரச்சனையும் இல்ல.

 

ஆனால் பாதிக்கப்படுவது.. தமிழனும்.. அவனின் பூமியும்.. சொத்தும்.. வியாபாரமும்.. வாழ்க்கையும்..!!!

 

இதில சுப்பு வேற.. புலி வருகுது.. ஐஎஸ் வருகுது.. நக்ஸல் வருகுது என்று அளக்கிறார்.

 

சுப்புவை உள்ள தூக்கி வைச்சு.. ராஜீவ் கொலையில் இருந்து.. ஜெயலலிதா ஆட்சி கலைக்கப்படும் என்பது வரை எதிர்வுகூறிய காரணங்களுக்கான பின்னணியை ஆராய்ந்தால்.. நிறைய விசயங்கள் வெளில வரும் போலத் தெரியுது.

 

இந்தத் தீர்ப்பு இன்றைக்கு தான் வெளில வந்திருக்குது. சுப்புக்கு இது ஏலவே தெரியும் போல...????! அப்படித்தான் அவரின் ருவிட்டர் செயற்பாடுகள் சொல்கின்றன. அம்மா ஆட்சி கலையப் போகுதுன்னு ருவிட்டரில் ஏலவே ஆரூடம் சொன்னவர். எப்படி..??! அதேபோல்.. ராஜீவ் செத்திட்டாரான்னு.. சாக முதலே கேட்டவர்.. எப்படி..?????! :icon_idea::rolleyes::(

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எல்லாரும் அளவுக்கதிகமாக சந்தோசப்படுறமாதிரி இருக்கு :unsure: ......எனக்கெண்டால் ஒண்டும் விளங்கேல்லை  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிக்கு வெற்றி அப்படி என்று சொல்லிக் கொள்வதில் என்ன பிரியோசனமும் இல்லை. ஏனெனில் இதைவிடப் பல குற்றவாளிகள் வெளியில் உள்ளார்கள். அவர்கள் தண்டிக்கப்படவே இல்லை. ஜெயலலிதா மீதான தண்டனை என்பது மத்திய அரசோடு மோதல், கர்னாடகாவோடு கொண்டிருந்த மோதல், என்ற வகையில் அமைந்திருப்பதற்கான சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை. பாஜக கால் ஊன்ற முடியாது பெரும் வெற்றியைத் தமிழகத்தில் ஜெயலலிதா பெற்றிருப்பதால், அவரை உள்ளுக்கு வைத்திருக்க வேண்டிய தேவையை பாஜகவினர் கொண்டிருந்தனர். இந்த இடைவெளியை அவர்கள் பயன்படுத்த முயலக்கூடும். தமிழகச் சிறையில் ஜெயலலிதா இருப்பின் அவர் நிழல் ஆட்சியை நடத்தமுடியும். ஆனால் கர்னாடகா சிறை எனும்போது, அவரது கட்டுப்பாட்டில் அதிமுக எப்படி இயங்கும் என்பது கேள்விக்குறியே..

பிள்ளையானைத் தலைவராகப் போட்டுவிட்டு, கருணா வெளிநாடு சென்று வந்த பின்னர், கட்சியை பிள்ளையான் ஆட்டையைப் போட்டது போல, இவர் 4 வருடங்கள் சிறையில் இருப்பின் நடந்துவிடலாம். ஆனாலும், ஏதாவது வழக்குப் போட்டு, எப்படியாவது வந்துவிடுவார்.

கனிமொழிக்காகத் தமிழ் மொழியை விற்றவர் கருணாநிதி என்றார் சில நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதா. இவர் எதை விற்கப் போகின்றார் என்பதையும் பார்க்கலாம்....

Link to comment
Share on other sites

ஸ்தம்பித்தது தமிழகம்...

 

(யாழ் கள செய்திகளுக்காக தமிழகத்திலிருந்து விச்ச்சுவா)

 

 மேலும் படிக்க

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=146535#entry1045673

 

 

சசிகலா, இளவரசி சுதாகரனுக்கு 2 தண்டனை… கூட்டுச்சதிக்கு 6 மாதம் சிறை

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனையோடு கூட்டுச்சதியில் ஈடுபட்டதற்காக சசிகலா,இளவரசி சுதாகரனுக்கு 120 பிரிவின் கீழ் 6 மாதம் சிறைதண்டனை விதித்தார் நீதிபதி குன்ஹா.

 

கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

 

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா கூட்டு சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கூட்டுச்சதி என்பதை நீக்க கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலா மனுத் தாக்கல் செய்திருந்தனர். இறுதி தீர்ப்பின் போது கூட்டுச்சதி பற்றி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி குன்ஹா தெரிவித்திருந்தார்.

 

27-sasikala-ilavarasi756-600.jpg

 

 

4 ஆண்டுகள் தண்டனை

 

18 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளித்த நீதிபதி டி.குன்ஹா. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாகவும் அறிவித்தார். மேலும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

 

கூட்டுச்சதி தண்டனை

 

கூட்டுச்சதி குற்றத்திற்காக ரூ.10 ஆயிரம் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி. கூட்டுச்சதி குற்றத்தில் ஜெயலலிதாவிற்கு தண்டனை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

http://tamil.oneindia.in/news/india/jayalalitha-s-aide-sasikala-v-n-sudhakaran-j-ilavarasi-get-2-punishment-211849.html

Link to comment
Share on other sites

அம்மாவுக்கு நாலு வருசம் சிறை என்றால் கருணாநிதி குடும்பத்துக்கு நாப்பது வருடமும் போதாது. கருணாநிதி குடும்பம் சுருட்டியதில் நூறில் ஒரு பங்குதான் அம்மா சுருட்டியது.

 

இந்தத் தீர்ப்புகளால் தமிழக அரசியலோ அரசியல் தலைமைகளோ மக்களோ மாறப்போவதில்லை.

Link to comment
Share on other sites

நல்ல செய்தி..அப்படியே கருணாநிதி கும்பலையும் உள்ளுக்க போட்டால் தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம் வர உதவியாக இருக்கும். இந்த அரசியல் இடைவெளியை வைகோ பயன்படுத்த வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவுக்கு 4ஆண்டு சிறை, 100 கோடி ரூபா அபராதம், முதல்வர் பதவி பறிப்பு! - பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

[saturday 2014-09-27 17:00]
jeyalalitha-300-india.jpg

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கான தண்டனை விபரம் சற்று முன்னர் வெளியிடப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடைய எம்எல்ஏ., பதவியையும் பறிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் .தொடர்ந்து ஜெயலலிதா, பரப்பன அக்ரகாரம் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா விரும்பினால் தமிழக சிறைக்கு மாறிக் கொள்ளலாம்.

  

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் தலா 25 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கிடையில் கோர்ட் அறையிலிருந்து ஜெயலலிதா வெளியே வந்து அமைச்சர் பன்னீர் செல்வத்தை சந்தித்து சென்றார்.112 பக்க தீர்ப்பை நீதிபதி குன்கா படித்தார். தண்டனை முழு விவரம் அறிவிக்கப்படும் முன்பே, ஜெயலலிதாவை கோர்ட் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால், ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்கிறார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=117605&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து தமிழக கவர்னர் முக்கிய ஆலோசனை
 
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும், சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
 
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர் முதல்வர், எம்.எல்.ஏ., பதவிகளை இழந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அனைத்து அமைச்சர்களும் பதவி இழக்கின்றனர். இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழக கவர்னர் ரோசையா, தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
 
நக்கீரன்

6.jpg

 

 

ஜெயலலிதா உள்ளிட்டோரின் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளில் மதியம் 2-30 மணியளவில் மதுரையில் உள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அலுவலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட ர.ர.க்கள் குவிந்தனர். குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அலுவலகம் முன் கூடியிருந்தவர்கள் ஆவேசமானார்கள். 
 
பனகல் ரோடு வழியாக வந்த அரசுப் பேருந்து, கார் மற்றும் லாரிகள் மீது கற்களை வீசத் தொடங்கினார். பாதுகாப்புக்கு மதுரை சிட்டி போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் தலைமையில் குறைந்த அளவிலேயே காக்கிகளை குவித்திருந்தாலும், அவர்களை மீறி அப்பகுதியில் உள்ள கடைகள், இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர். 
 
அடுத்து தேவர் சிலை வரைக்கும் முன்னேறிய ஆளும் கட்சியினர், அங்கிருந்த காவல் தடுப்புக்களை உதைத்து தள்ளினர். பெரிய பெரிய கற்களை தூக்கிப் போட்டனர். தேவர் சிலை முன் அமர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அம்மாவை விடுதலை செய் என்று கோஷமிட்டனர். அங்கிருந்து தல்லாகுளம் தலைமை தந்தி அலுவலகம் சென்று கற்களை வீசினர். 
 
தந்தி அலுவலகத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட முயன்ற ர.ர.க்களை மதுரை இணை கமிஷனர் ராஜராஜன் தடுக்க முயன்றார். அவரை அந்தக் கும்பல் தள்ளிவிட்டு முன்னேறியது. இதைப் பார்த்த சிட்டி கமிஷனர் சஞ்சய் மாத்தூர் ‘சார்ஜ்..’ என்று உத்தரவிட, ர.ர.க்கள் மீது தடியடி நடத்தி விரட்டினர். 34-வது வார்டு பெண் கவுன்சிலர் மீதும் அடி விழ, நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். 
 
மற்றொரு கும்பலோ மதுரை சொக்கிகுளத்தில் உள்ள சுப்பிரமணியசாமி வீட்டுக்குச் சென்று அங்கு கற்களை வீச முயன்றனர். தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையில் காலையிலிருந்தே பாதுகாப்பு பலப்படுத்தியிருந்த நிலையில், கும்பலால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 
 
அந்தக் கும்பலை போலீஸ் வேனில் ஏற்றி, ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு சென்று இறக்கி விட்டனர். ஆனாலும், தொடர்ந்து அண்ணா பஸ் ஸ்டாண்ட், கோரிப்பாளையம், தல்லாகுளம், நீதிமன்ற வளாகம் என மதுரையின் பல பகுதிகளிலும் கடைகளை அடைத்து விட்டனர். 
 
-முகில் & ராம்கி
படங்கள்: அண்ணல்

நக்கீரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே.... கருணாநிதி குடும்பத்தையும் தூக்கி உள்ளே... போட்டால் தான்,

பொதுச் சொத்தை கொள்ளையடிக்கும் அரசியல் வாதிகளுக்கு புத்தி வரும்.

Link to comment
Share on other sites

தமிழகத்தில் அ.தி.மு.க  பெற்ற அசுரத்தனமான வெற்றி, இந்திய வெளியுறவு கொள்கையுடன் முரண்படும் வகையில் தொடர்ந்து சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மாணங்கள்,  மத்திய அரசின் காவி மயமாக்கும் கொள்கை  இந்தி மயமாக்கும் கொள்கை போன்ற விடயங்களில் பெரும்பான்மை கொண்ட அ.தி.மு.க அச்சுறுத்தலாக இருக்க கூடிய வாய்ப்பு. மேற்கூறிய காரணங்களால் மத்திய அரசுக்கு தமிழக அரசை நிர்வாக ரீதியில் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியம்.

இரண்டாவது  அரசியல் ரீதியாக ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் உள்ளே தள்ளுவதால்,  தே.மு.க, பா.ம.க மற்றும் இதரக் கட்சிகளின் கூட்டணியோடு தமிழகத்தில் கால் பதிக்க முடியும். இதன் காரணமாக மோடியின் இனி வரும் திட்டங்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு வராமல் பார்த்துக் கொள்ள முடியும். தமிழ் சார்ந்த உணர்வுகளை மட்டுக்குள் வைத்து இந்திய தேசியம் என்ற சிந்தனையை கூட்ட முடியும்.  

தமிழகத்திற்கு இது பாதகமான விடயம்.

-----------------

 

மக்கள் பிரதிநிதத்துவ சட்டத்தின் படி ஜெயலலிதா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இந்த தீர்ப்பின் மூலம் இழக்கிறார். அதனால் அவரது அமைச்சரவையும் அதிகாரத்தை  இழக்கின்றன. அடுத்த முதல்வரை தேர்ந்தெடுத்து புதிய அமைச்சரவை அமைக்கும் வரை ஆளுநரே தமிழகத்தின் அனைத்து அதிகாரங்களையும் பார்த்துக் கொள்ளக் கூடியவர்.

 

இப்பொழுது ஜெயலலிதாவுக்கு வெளியே வர இரண்டு வாய்ப்புகள்
1. உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவது. இது கொஞ்ச கால தாமதமாகக் கூடும்
2. உடல் நிலையை காரணம் காட்டி, சிகிச்சை பெற மருத்துவமனை செல்வது. இரண்டாவது நடைபெறுவதற்கான  சாத்தியக் கூறுகள் அதிகம் உண்டு.

Link to comment
Share on other sites

ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு: அடுத்து என்ன?

 

Jaya_21_2129156f.jpg

 

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அடுத்து என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. வாசகர்கள் கேள்வி எழுப்ப தி இந்து (ஆங்கிலம்) இதழின் கே.வெங்கடராமன் பதில் அளித்துள்ளார்.

மேல்முறையீடு செய்யலாமா? அல்லது இதோடு அனைத்தும் முடிந்ததா?

அவர் மேல்முறையீடு செய்யலாம். ஏனெனில் தீர்ப்பளித்தது சிறப்பு நீதிமன்றமே.

அடுத்த முதல்வர் யார்?


இதனை யார் வேண்டுமானாலும் ஊகிக்கலாம். இதே போன்ற ஒரு சூழலில் முன்பு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றார். இப்போது விசாலாட்சி நெடுஞ்செழியன் பெயர் பட்டியலில் முதலில் இருக்கிறது.

ஜெயலலிதா உடனடியாக காவலில் வைக்கப்படுவாரா?

தண்டனை 3 ஆண்டுகள் வரை கிடைத்தால், தீர்ப்பளித்த நீதிமன்றமே குற்றவாளி மேல்முறையீடு செய்வதை அனுமதிக்கும் விதமாக சிறையில் தள்ளப்படுவதை சற்றே ஒத்திவைக்க வாய்ப்புண்டு. ஆனாலும் இது நீதிமன்றத்தின் முழு விருப்பம் சார்ந்ததே. 3 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை என்று தீர்ப்பளிக்கப்படுமெனில் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஜாமீன் அளிக்கும் அதிகாரம் கிடையாது. குற்றவாளி உச்சநீதிமன்றத்தை அணுகவேண்டும். இப்படியொரு நிலை ஏற்பட்டால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.

ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படலாம்?

சட்டப்படி ஓராண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெறலாம்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் குற்றவாளிகள் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி.யாக இருக்கத் தடை விதிக்கிறது. ஆனால் முதல்வர்/பிரதமர்/அமைச்சர் ஆகிய பதவிகளிலிருந்து நீக்கப்படும் சட்டப்பிரிவு எது? ஜெயலலிதா எம்.எல்.ஏ.பதவியை இழந்தாலும் முதல்வராகத் தொடர வாய்ப்பிருக்கிறதா?

1951, மக்கள் பிரதிநித்துவச் சட்டம், எந்த ஒருவரையும் முதல்வர்/பிரதமர்/அமைச்சர் ஆவதை தடை செய்யவில்லை. இது அரசியல் சாசனத்தில் உள்ள பிரிவாகும். ஒருவர் எம்.எல்.ஏ. ஆக இல்லை என்றால் கூட 6 மாதங்களுக்கு முதல்வராகலாம். இப்படியிருந்தாலும், 2001ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத போதிலும் முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அவரது பதவியை தகுதி இழப்பு செய்தது. தற்போது தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தே தகுதி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது சொத்துக்கள் என்ன செய்யப்படும்?

வருவாய்க்கு அதிகமாகக் குவிக்கப்பட்ட சொத்துக்களை அடையாளம் கண்டு அவற்றை ஏலம் விடலாம். ஆனால் இதற்கெல்லாம் நீண்டகாலமாகும். காரணம் மேல்முறையீடு என்ற நடைமுறையெல்லாம் இருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை என்ன ஆகும்?

சட்டப் பேரவை தொந்தரவு செய்யப்படமாட்டாது.

அடுத்த தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியுமா?

தகுதி இழப்பு ஏற்பட்டது தொடர்ந்தால் அவரால் போட்டியிட முடியாது. இந்தத் தீர்ப்பு மேல்முறையீட்டில் மாற்றப்பட்டாலோ அல்லது குற்றவாளி என்ற தீர்ப்பு இடைநீக்கம் செய்யப்பட்டாலோ அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம்.

ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு என்ற போதிலும் தற்போதைய அமைச்சர்கள் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?

அமைச்சரவை என்பது முதல்வரின் பரிந்துரையின் பேரில் அமைக்கப்படுவது. இப்போது அவர் முதல்வர் இல்லை. முதல்வர் இல்லாத அமைச்சரவை கிடையாது. ஆகவே அடுத்த முதல்வர் ஆளுநரிடம் அமைச்சர்கள் பற்றி தெரிவிக்க வேண்டும்.

சிறைத்தண்டனை என்றால் அவர் எந்த மாநில சிறையில் அடைக்கப்படுவார்?

இப்போதைக்கு கர்நாடகா. ஆனால் தமிழகச் சிறைக்கு மாற்றுமாறு அவர் கோரிக்கை வைக்க உரிமை உண்டு.

நெருக்கடி நிலை பிரகடனம் செய்து தொடர்ந்து முதல்வராக நீடிக்க முடியுமா?

மாநில அளவில் நெருக்கடி நிலை பிரகடனத்திற்கு அரசியல் சாசனத்தில் இடமில்லை.

இந்த வழக்கின் தீர்ப்பு வெளிவர 18 ஆண்டுகள் ஏன்?

2000ஆம் ஆண்டிலேயே விசாரணை முடிவடையும் நிலையை எட்டியது. ஆனால் 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியைப் பிடித்த பிறகு அனைத்து சாட்சிகளும் தங்கள் வாக்குமூலங்களை மாற்ற வைத்தது. இதனையடுத்த் உச்ச நீதிமன்றத் தலையீட்டின் பேரில் கர்நாடகாவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. அங்கு இந்த வழக்கு மீண்டும் புதிதாகத் தொடங்கியது. பல மனுக்கள், ஏகப்பட்ட ஆவணங்களை மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் மாற்றங்கள் ஆகியவற்றால் காலதாமதம் ஆனது.

 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article6452817.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

தாக்குதல் அச்சம்: சுப்பிரமணியன் சுவாமி வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு

 

newPic_1768_jpg_2129093h.jpg

சுப்பிரமணியன் சுவாமி| கோப்புப் படம்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் சென்னை, மதுரை வீடுகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

தீர்ப்பு வெளியானவுடன் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும், சுப்பிரமணியன் சுவாமியின் உருவபொம்மை, உருவப்படங்களி எரித்து அதிமுகவினர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி வீட்டின் மீதும், மதுரையில் உள்ள அவரது வீட்டின் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து கூடுதல் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 சொத்து குவித்ததாக அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 14-6-1996 அன்று சென்னை மாநகர‌ அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6452772.ece?widget-art=four-rel

 

 

Link to comment
Share on other sites

சிறையில் அடைக்கப்பட்ட ஜெ.க்கு இரவு உணவு, சிறை நம்பர் வழங்கப்பட்டது

Tamil_News_254951119423.jpg

 

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு இரவு உணவாக ஒரு களி உருண்டை, 200 கிராம் அரிசி, 200 கிராம் சாம்பார் வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு சிறையில் 7402 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.

 

 
 
 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=111258

Link to comment
Share on other sites

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை தீர்ப்பு நிரூபித்துவிட்டது: விஜயகாந்த் கருத்து

சென்னை,

சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிரூபித்துவிட்டதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கை சமாளிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம்தான். தீர்ப்பு வெளியான பிறகு அதிமுகவினர் அரங்கேற்றிய வன்முறை செயல்கள் கண்டனத்திற்குரியது. தவறு செய்தவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு நல்ல பாடம் என்று கூறப்பட்டுள்ளது.

http://www.dailythanthi.com/News/State/2014/09/27190058/Verdict-establishes-equality-before-law.vpf

Link to comment
Share on other sites

ஜெ. சொத்துக்குவிப்பு தீர்ப்பு எதிரொலி: அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் நாளை ஆலோசனை

சென்னை:

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த முதல்வர் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=111256

Link to comment
Share on other sites

100 கோடி ரூபாய் வெள்ளையாக ஜெயலலிதாவிடம் இருக்க வாய்ப்பில்லை. அதனால், 100 கோடி கட்ட இயலாது என்று தனியாக ஒரு மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆக இந்த இடத்திலும் ஒரு பெரிய ஆப்பை வைத்திருக்கிறார் குன்ஹா.
குறைந்தது, ஜெயலலிதா சிறையில் இருந்து வெளி வர, 20 நாட்களுக்கு மேல் ஆகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மங்கள்யான் செவ்வாயிக்கு போன தோசம் ஜெ க்கு பிடித்துவிட்டது

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் எப்போது கிடைக்கும்?

 

jaya_1953432h.jpg

 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அளிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஜாமீன் எப்போது கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவருக்கு முன்பாக ஊழல் தடுப்பு சட்டத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இந்திய தேசிய லோக் தளம் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா, ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் ஆகியோரின் வழக்குகள் எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகின்றன.

 

முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகனான ஓம் பிரகாஷ் சவுதாலா, ஹரியானாவின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். 1999-ம் ஆண்டில் முதல்வராக இருந்தபோது ஹரியானாவின் 18 மாவட்ட பள்ளிகளுக்காக 3206 பேர் ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஊழல் நடந்ததாக கடந்த ஜூன் 2003-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி தண்டனை வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சிங் சவுதாலா எம்.எல்.ஏ., இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 55 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இவர்களில் ஓம் பிரகாஷ் சவுதாலா, மகன் அஜய் சிங், ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 10 பேருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பு வெளியான நாளில் கைது செய்யப்பட்ட ஓம் பிரகாஷ் சவுதாலாவும் அவரது மகன் அஜய் சிங்கும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப் பட்டனர். அந்த வழக்கில் இருவருக்கும் தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது.

 

கடைசியாக கடந்த ஜூன் 3-ம் தேதி சகோதரரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இது பிறகு சவுதாலாவின் உடல்நிலையைக் கருதி செப்டம்பர் 26-ம் தேதி வரை ஜாமீன் நீட்டிக்கப்பட்டது. கடந்த 25-ம் தேதி ஹரியானா சட்டசபை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இதையடுத்து அக்டோபர் 17-ம் தேதி அவர் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிடப்பட்டுள்ளது.

 

லாலு பிரசாத் வழக்கு

பிஹார் முதல்வராக இருந்தபோது ரூ.900 கோடி கால்நடைதீவன ஊழல் வழக்கில் சிக்கிய லாலுவுக்கு ஜார்க்கண்ட் மாநில சிபிஐ நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கோரியபோது மறுக்கப்பட்டது. இதே வழக்கு தொடர்பாக மற்றொருவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதன் அடிப்படையில் லாலு பிரசாத்தும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2013 டிசம்பரில் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

 

ஜெயலலிதாவுக்கு ஜாமீன்?

தசரா விடுமுறைக்குப் பிறகு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது. அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை எனில் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்வார்.

இந்த நடைமுறைகளின்படி ஜாமீன் கிடைக்க சுமார் ஒரு மாதம் வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது. இடையில் தசரா விடுமுறை வருவதே தாமதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் என்று சட்டநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article6454382.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
லஞ்சத்தையும் ஊழலையும் இந்தியாவில் இருந்து ஒழிக்க இன்னும் ஆயிரம் வருடம் வேண்டும்.
 
ஊழல் செய்தது குற்றம் என்றால் ............. இந்தியாவில் வெளியில் இருக்க கூடிய தகுதி எந்த ரசியல் வாதிக்கும் இல்லை. எங்காவது ஒரு சிலர் இருந்தால் அவர்களை மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
 
இந்தியாவில் பிரதமர் தொடங்கி பஞ்சாயத்து தலைவர் வரை ஊழல் செய்யும்போது .......
தமிழக அரசியல் வாதிகள் மட்டும் தண்டனை பெற்று சிறை செல்வது சரியாக படவில்லை.
இதில் நீதி வெல்வதாகவொ குற்ற வாளிகள் தண்டிக்க படுவதாகவோ நினைத்து சந்தோஷ பட ஏதும் இல்லை.
 
இந்த வழக்கு இதனுடன் முடியுமா?
தொடருமா? ??  ஜெயா அக்கா வெளியில் வருவாரா? ஆட்சி தொடருமா?
என்பது இன்னமும் தெளிவாக இல்லை.
 
அம்மா என்று விழுந்து கும்பிட பழகினார்களே  தவிர அ தி மு கா வினர் அரசியல் பழகவில்லை. அம்மா உள்ளே போனால்  இவர்கள் உண்மையான முகத்தை வெளியில் காட்ட தொடங்கினால். கத்தியும்  குத்தும்தான்  நடக்கும்.
 
தமிழர் மீதான போர் ஈழத்தோடு முடியாது தமிழகத்தில் தொடர்வதாகவே நான் நினைக்கிறேன். பார்ப்பனின் கையில்தான்  "றோ" இருக்கிறது.
 
தமிழ் உணர்வாளர்கள் யாரும் தலை தூக்க முடியாது. தமிழகத்தில் அதிமுக  திமுக இரண்டும் தள்ளாடி போனாலும்  இந்த இடைவெளியை ஒரு தமிழ் உணர்வாளர் நிரப்ப முடியாது.
ஒரு காரணத்தை காட்டி அவரை உள்ளே போட்டு விடுவார்கள்.
 
தமிழகத்தையும் சிதைக்கும் ஒரு நீண்ட கால தந்திரோபயாம் திரை மறைவில் நடந்து கொண்டிருக்கலாம்.
இதை சரியாக புரிந்துகொள்ளும் எந்த புறநிலை காரணிகளும் தமிழக மக்களிடம் இல்லை.
ஈழம் போல சுடலை ஞானம் பெறும் சாத்திய கூறுகள்தான் அதிகம்.  
Link to comment
Share on other sites

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மாண்புமிகு முதல்வர் அவர்கள் தடைகளைத் தகர்த்தெறிந்து தமிழகத்தின் நல்லாட்சியை தொடருவார்!

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மீதான வழக்கின் தீர்ப்பு என்பது தற்போதைய நிலையில் கீழ் நீதிமன்றத்தால் ஒரு மாவட்ட நீதிபதியால் கொடுக்கப்பட்ட தீர்ப்புதானே தவிர இறுதித் தீர்ப்பு அல்ல.

இந்த தீர்ப்பை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே சட்டத்தையும் நீதித்துறையையும் மதித்து ஏற்றுக் கொண்டும் இருக்கிறார். நமது நாட்டின் நீதித்துறை அமைப்பில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவையும் இருக்கின்றன.

உரிய சட்ட நடைமுறைகள் மூலம் நிச்சயமாக தமக்கான தடைகளை தகர்த்தெறிவார் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள். பொய்வழக்கு சதிகளைத் தகர்த்து புரட்டல்காரர்களுக்கு தக்கதோர் பாடத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் புகட்டுகின்ற நாள் வெகுதொலைவில் இல்லை.

தற்போது நீதித்துறை அளித்த தீர்ப்பை ஏற்றுள்ள நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் மக்களுக்கான நல்லாட்சியை தொடர்ந்தும் வழங்கும்.

எப்படி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆட்சி உலகத் தமிழர்களுக்கான நல்லரசாக முன்னுதாரணமிக்க மக்களுக்கான அரசாக திகழ்ந்ததோ அதுபோலவே அவரது தொடர் வழிகாட்டுதலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசும் தமிழினத்துக்கான மக்களுக்கான போற்றுதலுக்குறிய நல்லரசாகவே தொடரும்.

தமிழ்ச் சமூகம் எதிர்கொண்டிருக்கும் உரிமை மீட்பு பிரச்சனைகள், ஈழத் தமிழர் மற்றும் மீனவர் விவகாரங்களில் தமிழர் நலனுக்கான ஒரே அரசாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசும் தொடர்ந்தும் செயல்பட்டு இன எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாகவே திகழும்.

https://m.facebook.com/story.php?story_fbid=324872741028591&id=152515898264277&refid=8

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை: நீதிபதி குன்ஹாவுக்கு ராம்ஜெத்மலானி கண்டனம்

புதுடெல்லி, செப்.28

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபாரதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி கூறும்போது, ‘

‘ஜெயலலிதாவுக்கு இந்த தீர்ப்பை வழங்கியதன் நீதிபதி குன்ஹா நீதித்துறையில் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார். சட்டப்படி இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. அபாராதம் விதித்ததில் குன்ஹா நீதிக் கோட்பாடுகளை மீறிவிட்டார்.

ஊழல் தடுப்பு சட்ட விதிகளின்படி இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள் வேண்டுமானால் இந்த தீர்ப்பை ஏற்கலாம். ஆனால், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வழக்கறிஞர் என்ற முறையில் இந்த தீர்ப்பை எதிர்க்கிறேன்.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா? என்று ஆழமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது’’ என்று கூறினார்.

http://www.maalaimalar.com/2014/09/28125910/Ramjetmalani-condemn-to-jayala.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார். அதன் பிறகு மாலை 5 மணியளவில் தண்டனை அறிவிக்கப்பட்டது
நீதிபதி கிறிஸ்தவர் போல கிடக்கு.....சிலசமயம் நீதிபதி இந்துவாக இருந்திருந்தால் ஜெயலலிதா தப்பி பிழைத்திருப்பார் :D

ஜெயலலிதாவுக்கு இந்த தீர்ப்பை வழங்கியதன் நீதிபதி குன்ஹா நீதித்துறையில் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார். சட்டப்படி இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. அபாராதம் விதித்ததில் குன்ஹா நீதிக் கோட்பாடுகளை மீறிவிட்டார்
Link to comment
Share on other sites

பெங்களூரு நீதிமன்றத் தீர்ப்பு

வைகோ கருத்து!

ஊழல் அரசியலுக்கு எச்சரிக்கை மணி;

நேர்மை அரசியலுக்கு நம்பிக்கை வெளிச்சம்!

நீதித்துறையின் நம்பகத்தன்மையை இமயத்தின் உச்சிக்குக் கொண்டு சென்ற தீர்ப்பு!

‘தாயகம்’ வைகோ

சென்னை - 8 பொதுச் செயலாளர்,

27.09.2014 மறுமலர்ச்சி தி.மு.க

https://m.facebook.com/story.php?story_fbid=756921077701174&id=145371905522764

ஆளும் கட்சியினர் அராஜக வன்முறை. வைகோ கண்டனம்; தமிழக அரசு நிவாரணம் வழங்கக் கோரிக்கை!

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல்-டி-குன்கா வரலாறு போற்றும் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கின்றார்.

தண்டனை பெற்றவர் மேல்நீதிமன்றத்தில் முறையீடு செய்து கொள்ளலாம். ஆனால், நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் ஆளும்கட்சியான அண்ணா தி.மு.க.வினர் அராஜக வன்முறையில் இறங்கினர், கடைகளை உடைத்து நொறுக்கினர், பேருந்துகள்- வாகனங்களைத் தாக்கித் தீவைத்துக் கொளுத்தினர். வணிக நிறுவனங்கள் கற்களை வீசிப் பொருள் சேதம் ஏற்படுத்தினர். ஒரு பாவமும் அறியாத பொதுமக்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகினர்.

இவை அனைத்தையும் காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்த அநீதியும் நிகழ்ந்தது. குற்றங்களுக்குத் துணைபோனது.

முதல் அமைச்சர்தான் சிறை சென்றாரே தவிர, அரசு நிர்வாகம் என்பது அதிகாரிகளால் இயக்கப்படுவதாகும். காவல்துறையினர் சட்டத்தின் பணியாளர்கள், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியவர்கள். 2001 ஆம் ஆண்டில் இதுபோல ஜெயலலிதாவுக்குத் தண்டனைத் தீர்ப்பு வந்தபோது, தர்மபுரியில் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிகள் மூவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர்.

அன்று நடந்த வன்முறைக் கொடுமையைக் கருத்தில் கொண்டு அண்ணா தி.மு.க.வினர் பாடம் கற்றார்களா? இல்லை. கட்சித் தலைமை அவர்களை நெறிப்படுத்தியதா? என்றால் அதுவும் இல்லை.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பில் இருந்த முதல் அமைச்சர், ‘பெங்களூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்விதமாக இருப்பினும் தமிழகத்தில் அமைதி காக்க வேண்டும்’ என்று தன் கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டிய கடமையைச் செய்யத் தவறினார். அதற்கு மாறாக, அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பெங்களூரில் வந்து குவிவதற்கு, அவருக்குத் தெரிந்தே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இன்றைக்கும் தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் பேருந்துப் போக்குவரத்து இல்லை. ஞாயிற்றுக் கிழமையில் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் திறக்கப்படும் கடைகளும் அச்சத்தால் மூடிக் கிடக்கின்றன.

பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்புத் தரவேண்டியது அரசு நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை ஆகும். ஆனால், நேற்று அரசு இயந்திரம் முற்றிலும் செயலற்றுக் கிடந்தது. ஆளுங்கட்சி அராஜகத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டது. அதனால்தான் நேற்று பகலில் தமிழகம் முழுவதிலும் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டது. பொதுமக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாமல், தொலைக்காட்சி ஊடகங்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தான சூழல் ஆகும்.

இதற்கு முன்பு இப்படி நடைபெற்ற அராஜகச் சம்பவங்களின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நீதிமன்றமே ஆணையிட்டது. இதனை மனதில் கொண்டு, நேற்றைய அராஜகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் அச்சத்தைப் போக்குகின்ற விதத்தில் வன்முறையாளர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நேற்று வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன்.

‘தாயகம்’ வைகோ

சென்னை - 8 பொதுச் செயலாளர்,

28.09.2014 மறுமலர்ச்சி தி.மு.க

https://m.facebook.com/TheVaiko/photos/a.237676642958956.61633.145371905522764/757249111001704/?type=1&source=46

Link to comment
Share on other sites

தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=146564&p=1045923

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
    • 🤣என்ன தாலிகட்டி கலியாணம் செய்து குடும்பம்  நடத்தி பிள்ளை குட்டி பெற்று குடும்பம் நடத்தவா கூப்பிட்டார்? கண்ணியம் பற்றி ஓவர் பில்டப்பு குடுக்கிறியள்?🤣
    • கொழும்பு(Colombo) - முல்லேரியா பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையின் கடற்படை(sri lanka Navy) உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் முல்லேரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் 2 லெப்டினன்ட் கொமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://tamilwin.com/article/4people-including-member-sl-navy-arrested-colombo-1713558435
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு  எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.