Jump to content

நான்காம் பங்கு


Recommended Posts

நான்காம் பங்கு!

 

farmer2.jpg

 

 

நாட்டில் மக்கள் எப்படி இருக்கிறார்கள்..?” என்று அறிந்து கொள்வதற்காக அரசர் மாறுவேடத்தில் வந்தார்.

ஒரு தோட்டத்தில் விவசாயி உற்சாகமாக வேலை செய்து கொண்டிருந்தான்.

அரசர் அவனிடம், “உன் உழைப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தோட்டத்தில் உற்சாகமாக வேலை செய்து கொண்டிருக்கிறாயே.. என்ன காரணம்?” என்று கேட்டார்.

”இந்த விவசாயத்தின் மூலம் நான்கு பங்குக்குத் தேவையான வருமானம் வேண்டியிருக்கிறது”

“அதென்ன நான்கு பங்கு?” என அரசர் கேட்டார்.

“ஆமாம்.முதல் பங்கு கடன் அடைப்பதற்குத் தேவை. இரண்டாவது பங்கு வட்டிக்குத் தேவை. மூன்றாவது பங்கு தருமம் செய்யத் தேவை. நான்காவது பங்கு என் கடமைக்காகத் தேவை” என்றான் விவசாயி.

அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. அவனிடமே கேட்டார்.

“என் பெற்றோரை மனம் நோகாமல் காப்பது என் கடன். இதற்கு என் முதல் பங்கு.

 

பிற்காலத்தில் என்னைக் காப்பாற்றுவார்கள் என்கிற நம்பிக்கையில் என் குழந்தைகளை வளர்க்கிறேன்.

இது பின்னால் வரும் என்கிற நினைப்பில் செலுத்தப்படும் வட்டி.இதற்கு என் இரண்டாம் பங்கு.

 

என் உறவினர்கள் சிலர் என்னுடைய ஆதரவு வேண்டி நிற்கிறார்கள். இது என் தருமம். இதற்கு என் மூன்றாம் பங்கு.

என் மனைவியைக் கடைசி வரைக் காப்பாற்ற வேண்டியது என் கடமை. இதற்கு என் நான்காம் பங்கு” என்றான் விவசாயி.

அரசர் அவனுடைய பங்குக் கணக்கைக் கேட்டு வியந்து போனார்! :o

 

 

-இணையத்தில் வாசித்தது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நாமும்.... இணையத்தை வாசிக்கின்றோம்,

இப்படியான நல்ல விடயங்கள் கண்ணில் படவே மாட்டேன் என்கிறது. :rolleyes: 
பகிர்விற்கு, நன்றி வன்னியன். :)

Link to post
Share on other sites

ஐந்தாவது பங்கை விட்டுவிட்டார்.. வருமானவரி கட்ட வேண்டும்.. :o:D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாருமே இல்லாதவர்களுக்கு அனைத்துப்பங்குகளும் சொந்தம்

இருந்தாலும் இந்த விவசாயி தனக்கெனெ எந்தப்பங்கையும் கோரவில்லை

Link to post
Share on other sites

 

நான்காம் பங்கு!

 

farmer2.jpg

 

 

நாட்டில் மக்கள் எப்படி இருக்கிறார்கள்..?” என்று அறிந்து கொள்வதற்காக அரசர் மாறுவேடத்தில் வந்தார்.

ஒரு தோட்டத்தில் விவசாயி உற்சாகமாக வேலை செய்து கொண்டிருந்தான்.

அரசர் அவனிடம், “உன் உழைப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தோட்டத்தில் உற்சாகமாக வேலை செய்து கொண்டிருக்கிறாயே.. என்ன காரணம்?” என்று கேட்டார்.

”இந்த விவசாயத்தின் மூலம் நான்கு பங்குக்குத் தேவையான வருமானம் வேண்டியிருக்கிறது”

“அதென்ன நான்கு பங்கு?” என அரசர் கேட்டார்.

“ஆமாம்.முதல் பங்கு கடன் அடைப்பதற்குத் தேவை. இரண்டாவது பங்கு வட்டிக்குத் தேவை. மூன்றாவது பங்கு தருமம் செய்யத் தேவை. நான்காவது பங்கு என் கடமைக்காகத் தேவை” என்றான் விவசாயி.

அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. அவனிடமே கேட்டார்.

“என் பெற்றோரை மனம் நோகாமல் காப்பது என் கடன். இதற்கு என் முதல் பங்கு.

 

பிற்காலத்தில் என்னைக் காப்பாற்றுவார்கள் என்கிற நம்பிக்கையில் என் குழந்தைகளை வளர்க்கிறேன்.

இது பின்னால் வரும் என்கிற நினைப்பில் செலுத்தப்படும் வட்டி.இதற்கு என் இரண்டாம் பங்கு.

 

என் உறவினர்கள் சிலர் என்னுடைய ஆதரவு வேண்டி நிற்கிறார்கள். இது என் தருமம். இதற்கு என் மூன்றாம் பங்கு.

என் மனைவியைக் கடைசி வரைக் காப்பாற்ற வேண்டியது என் கடமை. இதற்கு என் நான்காம் பங்கு” என்றான் விவசாயி.

அரசர் அவனுடைய பங்குக் கணக்கைக் கேட்டு வியந்து போனார்! :o

 

 

-இணையத்தில் வாசித்தது.

 

 

பகிர்வுக்கு மிக்க நன்றி..

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.