Jump to content

உங்கள் கனவுகளுக்கு உளவியல் ரீதியான அர்த்தம் தெரியவேண்டுமா?


Recommended Posts

கனவு என்றால் என்ன? தூங்கும் போது நாம் காணும் காட்சிகள், ஓசைகள், உணர்வுகள் மற்றும் வேறு பல நிகழ்வுகளை கனவு என்று அழைக்கின்றோம். சில வேளைகளில் நமது கனவுகளுக்கு அர்த்தம் உள்ளதாக இருக்கும், வேறு சில வேளைகளில் அர்த்தமே இல்லாத கனவுகளாக அமைந்து விடுகின்றன. சில வேளைகளில் ஏதும் பயங்கரமான கனவு காணும் போது எப்படியாவது அந்தக் கனவை விட்டு எழுந்து விடவேண்டும் என்று இருக்கும், அதுவே சில சமயம் நல்ல கனவு காணும் போது எழும்பவே கூடாது என்று இருக்கும். ஆனால் எப்போதாவது உங்கள் கனவுகளுக்கு என்ன அர்த்தம் என்று சிந்தித்துப் பார்த்து இருக்கின்றீர்களா? இல்லையா…? இந்த அறிவு டோஸில் பொதுவாக காணப்படும் 6 விதமான கனவுகளுக்கு உளவியல் (psychological) ரீதியாக என்ன அர்த்தம் என்பதை அறியத்தருகின்றேன்.

 

பொது இடங்களில் நிர்வாணமாக இருப்பது போல் கனவு:

இந்த வகையான கனவு உங்களில் பலர் அனுபவித்து இருப்பீர்கள். பள்ளியில், வேலை செய்யும் இடத்தில் அல்லது பொதுவான ஓர் இடத்தில் நிற்பது போல் கனவு காணும் போழுது, திடீரென்று நீங்கள் முற்றிலும் நிர்வாணமாக நிற்கின்றீர்கள் என்பது தெரிய வந்து விடும். உளவியல் ரீதியாக இவ்வாறு கனவு காண்பதற்கு அர்த்தம் இது தான்: நமது மனதில் இருக்கும் ஏதோ ஒரு விடயத்தை நாம் மறைக்க விரும்புகின்றோம். அந்த விடயம் மற்றவர்களுக்குத் தெரிந்து விட்டது என்பது தான் இந்தக் கனவின் அர்த்தம். இதுவே அந்தக் கனவில் நாம் நிர்வாணமாக இருந்தும் வேறு ஒருவரும் நம்மை அவதானிக்கவில்லை என்றால், நாம் மறைக்கும் விடயத்தை இன்னும் ஒருவருக்கும் தெரிந்துவிடவில்லை என்று அர்த்தம்.

 

விழுவது போல் கனவு 

நீங்கள் எங்கேயோ இருந்து முடிவே இல்லாமல் விழுந்து கொண்டே இருப்பது போல் கனவு காண்பீர்கள். இது பலரால் காணப்படும் ஓர் பொதுவான கனவாகும். உளவியல் ரீதியாக இந்தக் கனவுக்கு அர்த்தம் உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு முக்கியமான விடயம் உங்கள் கட்டுப்பாட்டை மீறி விட்டு, நீங்கள் பாதுகாப்பற்ற, பயந்த நிலையில் இருக்கின்றீர்கள் என்பது தான். மேலும் நீங்கள் ஏதாவது ஒரு விடயத்தில் (உதாரணத்திற்கு பரீட்சையில்) தோற்றுவிட்டீர்கள் என்றாலும் இப்படியான கனவு வரக்கூடும்.

 

யாரோ துரத்துவது போல் கனவு

யாராவது உங்களைத் துரத்துவது போல் கனவு கண்டால் உங்களுக்கு இருக்கும் பிரச்சினை கண்டு ஓடிவிடுகின்றீர்கள் என்று உளவியல் அர்த்தம். நீங்கள் எந்தப் பிரச்சினையை பார்த்து ஓடி விடுகின்றீர்கள் என்பதைப் பொறுத்து, யார் அல்லது எது உங்களைத் துரத்துகின்றது என்பது தெரியவரும்.

 

பரீட்சை செய்வது போல் கனவு

இந்தக் கனவும் பலருக்கு வருகின்ற பொதுவான கனவாகும். உங்கள் கனவில் திடீரென்று ஓர் பரீட்சை செய்ய வேண்டும் என்பது நினைவுக்கு வந்துவிடும். எனவே, நீங்கள் அந்தப் பரீட்சை நடக்கும் மண்டபத்தை நாடிப் போகின்றீர்கள், ஆனால், அந்த மண்டபத்தைத் தேடித் தேடிப் பார்த்தாலும் உங்களால் அதை சென்றடையவே முடியாது. இந்தக் கனவு பல வடிவங்களில் வரக்கூடும். உளவியல் ரீதியாக நீங்கள் ஏதோ ஒரு விதத்தில் உங்கள் வாழ்க்கையில் சோதனை செய்யப் படுகின்றீர்கள் என்று அர்த்தம். அந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்பதற்குத் தீர்வு தெரியாமல் அவதிப் படுகின்றீர்கள் என்று அர்த்தமாகும்.

 

நின்ற நிலையிலே ஓடுவது போல் கனவு:

உங்கள் கனவில் நீங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றீர்கள், இருந்தாலும் ஒரு அடி கூட முன்னே போகவில்லை. இதற்கு அர்த்தம் வேறு ஒன்றும் இல்லை: உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவை ஒன்றுமே தீர்ந்து போகவில்லை. அப்படி தீர்ந்தாலும் அடுத்த பிரச்சினை உங்களைத் தேடி வந்து விடுகிறது. ஒரே நேரத்தில் பல விடயங்களைச் செய்ய முயற்சிக்கும் நீங்கள், அது முடியாமல் அவதிப் படுகின்றீர்கள்.

 

பறப்பது போல் கனவு: 

சிலர் பறப்பது போல் கனவு காண்பார்கள். உளவியல் ரீதியாக உங்களுக்கு முக்கியம் எனப்படுகின்ற அனைத்து விடயங்களும் உங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது என்பது தான் அர்த்தம். உங்கள் தன்னம்பிக்கை மிகவும் பலமாக இருக்கிறது. உங்களால் எது என்றாலும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றீர்கள். அதே கனவில் உங்களுக்குப் பறப்பது கடினமாக இருந்தால், யாரோ ஒருவர் அல்லது ஏதோவொன்று உங்களுக்குத் தடங்கலாக இருக்கின்றது என்று தான் அர்த்தம். அப்படி பறக்கும் போது உங்களுக்கு பயமாக இருக்கின்றது என்றால் உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஓர் பிடிக்காத சவால் இருக்கின்றது என்பது தான் அர்த்தம்.

 

கனவுகளில் இந்த 6 வகைகளும் தான் இருக்கின்றன என்று இல்லை. இன்னும் எத்தனையோ வகையான கனவுகள் இருக்கின்றன. ஆனால், இந்த 6 வகைகளும் தான் பொதுவாகப் பலரால் காணப்படும் கனவுகள் ஆகும். எல்லாக் கனவுக்கும் அர்த்தம் இருக்கின்றது என்றும் எண்ணமுடியாது, ஆனால் பல விதமான கனவுகளுக்கு அர்த்தங்கள் இருக்கலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றார்கள்.

 

சரி, இனி நீங்கள் கூறுங்கள், நண்பர்களே! மேலே சொல்லப்பட்ட கனவு வகைகளில் நீங்கள் எந்த வகைக் கனவுகளைக் கண்டிருக்கின்றீர்கள்? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.

 

அடுத்த அறிவு டோஸ் உடன் இன்னும் ஒரு நாள் சந்திக்கிறேன்

-- Niroshan Thillainathan -- 

 

00212-480x480.jpg

 

http://www.arivu-dose.com/why-do-we-dream-and-interpretation-in-clinical-psychology/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளம் வயதில் நடிகைமார் கனவில வந்திச்சினம் இப்ப கடவுள் கனவில வாரார் என்ன காரணம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளம் வயதில் நடிகைமார் கனவில வந்திச்சினம் இப்ப கடவுள் கனவில வாரார் என்ன காரணம்?

பெரிசா ஒண்டுமில்லை,வயசு போட்டுது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிசா ஒண்டுமில்லை,வயசு போட்டுது

 

உடம்புக்கு தான் வயசு போய்விட்டது மனசுக்கு இன்னும் வயசு போகவில்லை.... இல்லை ....இல்லை..இல்லை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளம் வயதில் நடிகைமார் கனவில வந்திச்சினம் இப்ப கடவுள் கனவில வாரார் என்ன காரணம்?

 

 

நீங்கள் கனவு கண்ட  நடிகைகள் தற்பொழுது  நடிப்பதில்லை ஐயா.. :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கனவு கண்ட  நடிகைகள் தற்பொழுது  நடிப்பதில்லை ஐயா.. :lol:  :D

 

பாட்டி ,ஆத்தா போன்ற வேடங்களில் நடிக்கின்றனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளம் வயதில் நடிகைமார் கனவில வந்திச்சினம் இப்ப கடவுள் கனவில வாரார் என்ன காரணம்?

அது அது அவர்களுடன் கூட கூடிய வயதில் வருகிறது ..............
நான் நினைக்கிறேன் இனி மேலே போய் கடவுளுடன் கூடும் காலம் வந்து விட்டது என்று. 
Link to comment
Share on other sites

யாரோ துரத்துவது போன்ற கனவும், நின்ற நிலையில் ஓடும் கனவும் முந்தி வந்த ஞாபகம் உள்ளது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ துரத்துவது போன்ற கனவும், நின்ற நிலையில் ஓடும் கனவும் முந்தி வந்த ஞாபகம் உள்ளது.. :D

 

 

துரத்துபவரை உங்களுக்கு பிடித்திருக்கு என்று பொருள்.... :wub:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

மரண வீடு திருமணவீடு போன்ற நிகழ்வுகளைக் கனவில் கண்டால்

என்ன பலன் கிடைக்கும் என்பதை அறியும் ஆவலில் உள்ளேன் ஐயா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இதில் எனக்கு எந்த நமிபிக்கையும் இல்லை ............... அல்லது இவர்கள் கொடுக்கும் விளக்கும் நம்பும் படியாக இல்லை.
 
என்னை பொருத்தவரை கம்ப்யூட்டர் ராம் (தற்காலிக மேமொரியின்) செயற்பாடு போன்று கனவு வரவே சாத்தியம் நிறைய இருக்கிறது. கனவுகளை நீங்கள் ஞாபகம் வைத்து அலசி ஆராய்ந்தால் அது கொஞ்சம் சரியாகவே தெரியும்.
 
நீங்கள் கொம்பியுட்டரில் இல்லாத ஒன்றை தேடினால் அல்லது தவறான ஒரு கமாண்டை கொடுத்தால் ... நீங்கள் கொம்பியுட்டரை மூடும்வரை அது திரை மறைவில் அதை தேடிக்கொண்டே இருக்கும்.
 
நீங்கள் ஒரு நாளில் எவளவோ காட்சிகளை கண்களால் காண்பீர்கள் .... சிலதை சிந்தித்துகொண்டு இருப்பீர்கள் எதிர்பாராத விதமாக அது தீடீரென நின்று விடும்.(குறிப்பாக போன் ரிங் ஆனால் உங்கள் கவனம் போனுக்கு போய்விடும்) முன்பு இருந்த சிந்தனையை நீங்கள் மறந்து வேறு ஒரு நிகழ்விற்கு போய்  விடுவீர்கள். இந்த சிறிய சிறிய பகுதிகளான சிந்தனை சிதறல்கள் .... நீங்கள் கண்ட காட்சிகள். 
எல்லாவற்றிற்கும் மூளை ஒரு விடை தேடிக்கொண்டு இருக்கும். நீங்கள் நித்திரை செய்யும்போது அவை ஒரு காட்சியாக இரைமீட்க படுகிறது. 
கனவு எல்லா நாளும் வருவது இல்லை. 
நித்திரையில் 2-3 மணி நேரம் ஆழ்ந்த நித்திரை இருக்கிறது (டீப் ஸ்லீப்) அடுத்த கட்டம் ஒரு அயர் நிலை 1 மணி நேரம் தையும் தொடர்ந்து தூங்கும்போதுதான் கனவு வருகிறது.
நீங்கள் 10-11 மணிக்கு இரவு தூங்கினால் கனவு அதிகாலை 4-5 போல்தான் வருகிறது.
நீங்கள் கொஞ்சம் விழிப்பாக கூட இருக்கிறீர்கள். அல்லது மூளை விழிப்பாக இருக்கிறது அந்த நேரத்தில்.
இது என்னுடைய தனிபட்ட எண்ணம்.
பல சைகலஜிட் களின் கரங்களை படித்து பார்த்தேன் ஒன்றும் நம்பும் படியாக இல்லை. 
Link to comment
Share on other sites

யாரோ துரத்துவது போன்ற கனவும், 

எனக்கும் இந்த அனுபவம்(?) உண்டு.எனினும் நித்திரை முறிந்து எழும்பும்போது படுக்கின்ற விதத்தில் தவறு இருப்பதை உணர்ந்து(கை, கால் தலை என்பன சிலவேளைகளில் எக்குத்தப்பாக மாட்டியிருக்கும்) அதை மாற்றியபின்பு    இப்படியான கனவுகள் இப்போது வருவதில்லை. 
     ஓடாத சைக்கிளும் ஓடாத காரும்(கனவில்) பின் அவற்றை பழகிய பின்பு ஓடத்தொடங்கியது. இப்போதும் நான் சுடும் துப்பாக்கி ரவைகள் யாரையும் கொல்வதில்லை. இசை இதற்கு தீர்வு என்ன?
Link to comment
Share on other sites

விழுவது போல் கனவு

 

 

இது அடிக்கடி வரும்.  :) பரவாயில்லை.

 

இன்னொன்று. யாரோ நாலைந்து பேர் என்னை அமுக்கிற மாதிரி அடிக்கடி வருது. சிலதடவை வாய்விட்டு ஆஆஆ என்று கத்த மனைவியும் என்ன நடந்தது என்று தெரியாமல் ஐயோ என்று கத்த, ஒரே களோபரமாயிருக்கு.

இதுக்கும் ஏதாவது பரிகாரம் உண்டா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது அடிக்கடி வரும். :) பரவாயில்லை.

இன்னொன்று. யாரோ நாலைந்து பேர் என்னை அமுக்கிற மாதிரி அடிக்கடி வருது. சிலதடவை வாய்விட்டு ஆஆஆ என்று கத்த மனைவியும் என்ன நடந்தது என்று தெரியாமல் ஐயோ என்று கத்த, ஒரே களோபரமாயிருக்கு.

இதுக்கும் ஏதாவது பரிகாரம் உண்டா ?

இது நிச்சயமா சாமி குத்தமாதான் இருக்கும். லாச்சப்பலிலுள்ள ஏதாவது ஒரு கோயிலுக்கு காவடி எடுங்க எல்லாம் சரியாபெோயிடும்
Link to comment
Share on other sites

இது அடிக்கடி வரும். :) பரவாயில்லை.

இன்னொன்று. யாரோ நாலைந்து பேர் என்னை அமுக்கிற மாதிரி அடிக்கடி வருது. சிலதடவை வாய்விட்டு ஆஆஆ என்று கத்த மனைவியும் என்ன நடந்தது என்று தெரியாமல் ஐயோ என்று கத்த, ஒரே களோபரமாயிருக்கு.

இதுக்கும் ஏதாவது பரிகாரம் உண்டா ?

ஏதோ ஒரு ஆவி போய்வாற வழியில் படுக்கிறீங்கள் போலை.. :D படுக்கிற இடத்தை மாத்துங்கோ.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது அடிக்கடி வரும்.  :) பரவாயில்லை.

 

இன்னொன்று. யாரோ நாலைந்து பேர் என்னை அமுக்கிற மாதிரி அடிக்கடி வருது. சிலதடவை வாய்விட்டு ஆஆஆ என்று கத்த மனைவியும் என்ன நடந்தது என்று தெரியாமல் ஐயோ என்று கத்த, ஒரே களோபரமாயிருக்கு.

இதுக்கும் ஏதாவது பரிகாரம் உண்டா ? 

 

யாழ்களத்திலை வெட்டுறதை கொஞ்சம் விட்டுப்புடிச்சு, யோசிச்சு வெட்டினால்..... நாலைஞ்சு பேர்  சேர்ந்து அமுக்கிற கனவெல்லாம் வராது... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்திலை வெட்டுறதை கொஞ்சம் விட்டுப்புடிச்சு, யோசிச்சு வெட்டினால்..... நாலைஞ்சு பேர்  சேர்ந்து அமுக்கிற கனவெல்லாம் வராது... :icon_mrgreen:

 

இணையவன் இப்ப... குட் போய். :rolleyes: (நல்ல பையன்)

முந்தி மாதிரி... வெட்டுவதில்லை.

அவருக்கு.... சனி பகவானின், பார்வை பட்டிருக்கு என்று....நினைக்கின்றேன்.  :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது அடிக்கடி வரும்.  :) பரவாயில்லை.

 

இன்னொன்று. யாரோ நாலைந்து பேர் என்னை அமுக்கிற மாதிரி அடிக்கடி வருது. சிலதடவை வாய்விட்டு ஆஆஆ என்று கத்த மனைவியும் என்ன நடந்தது என்று தெரியாமல் ஐயோ என்று கத்த, ஒரே களோபரமாயிருக்கு.

இதுக்கும் ஏதாவது பரிகாரம் உண்டா ? 

 

ஏன்  இணையவன்  ரொம்ப அமைதியாக இருக்கிறார்

அதிகம்   பேசுவதில்லை என்று பல நாட்கள் தலையை  உடைத்துண்டு

இன்றைக்கு பதில் கிடைத்தது.... :lol:  :D

காலையிலிருந்து   மதியம்வரை இரவு  நடந்ததையும்

மதியத்திலிருந்து

இன்றிரவு இரவு நடக்கப்போவதையும் நினைத்தால்.....?? :lol:  :D  :D

Link to comment
Share on other sites

இரண்டு கிழமைக்கு முதல் ஒரு சிறிய தீவில் தனியே இருப்பதுபோலவும் உயரமாக கடல் அலைகள் எழும்பி எழும்பி வந்ததுபோலவும் ஒரு கனவு கண்டேன் . காலையில் மனைவியிடம்  கூறினேன் .பணம் வரப்போகுது என்று சொன்னார் ..
 
[ஆனால் நடந்தது 5000 ஐரோ பணத்தை இழந்தது  ,ஒரு சிறிய தனி முயற்சி ஒன்றை ஆரம்பித்து ,, ஏமாத்திட்டாங்க :(   ] ...............அப்புறம்தான் தெரிந்தது உண்மையான கனவின் அர்த்தம்  :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இன்னொன்று. யாரோ நாலைந்து பேர் என்னை அமுக்கிற மாதிரி அடிக்கடி வருது. சிலதடவை வாய்விட்டு ஆஆஆ என்று கத்த மனைவியும் என்ன நடந்தது என்று தெரியாமல் ஐயோ என்று கத்த, ஒரே களோபரமாயிருக்கு.

இதுக்கும் ஏதாவது பரிகாரம் உண்டா ? 

 

நித்திரையின்போது தலையை உயர்த்தும் அளவிற்குத் தலையணைகளைப் பாவிப்பதுண்டா?

மூச்சுக்குழாய் தடைப்படுவதால் மூச்சு விடக் கஷ்டப்படுவதால் இப்படியான அமுக்கம் ஏற்படலாம்.  அதிலிருந்து விடுபடுவதற்காகக் கத்தியிருக்கலாம்

இது வைத்தியர்கள் விளக்க வேண்டிய கேள்வி

நெடுக்ஸ் வந்தால் கட்டாயம் விளக்கம் அளிப்பார் என நினைக்கின்றேன் இனியவன்

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.