Sign in to follow this  
வல்வை சகாறா

"வேங்கையன் பூங்கொடி" "காவியத்தூது" நூல்கள் தொடர்பான உரைகளும் விமர்சனங்களும்.

Recommended Posts

10295424_10152511843301551_8868079801116

 

 

 

http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-

 

 

அண்மையில் சென்னையிலும் கனடாவிலும் வெளியிடப்பட்ட என்னுடைய நூல்களான "வேங்கையன் பூங்கொடி" மற்றும் "காவியத்தூது" ஆகிய இரு நூல்களையும் தற்சமயம் சென்னையில் இரு விற்பனை நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

 

10620143_10152571678781551_822770976934710708619_10152571679121551_7778063824264

Edited by வல்வை சகாறா

Share this post


Link to post
Share on other sites

936693_762328013828588_62963879234961442

 

 

10648417_10152472526486551_9196065829707

 

10682233_10152472526896551_6972276702287


10647149_10152470753151551_1481512064538

 

 

ராஜன் விஷ்வா, on 11 Sept 2014 - 3:53 PM,

அன்பான உறவுகளுக்கு முதலில் மன்னிப்பு கோருகின்றேன். யாழ் கள உறவு சாகாறா அக்காவின் சரித்திர புகழ் வாய்ந்த விழாவில் பங்கெடுத்து விட்டு காணாமல் போனதற்காக... இது நாள் வரை யாழ் களத்தை தொலைபேசியினுடாகவே பாவித்து வந்தேன். தற்போது தமிழில் தட்டச்சு செய்யக்கூடிய வசதி தொலைபேசியில் இல்லாததால் களத்தில் பங்கெடுத்து கொள்ள இயலவில்லை.

(கொஞ்சம் பின்னோக்கி செல்வோம்)

காலம் : 2014 மாதம் மே

சாகாறா அக்கா நூல் வெளியீடு பற்றி தோராயமாக சொன்னார் ஒகஸ்ட் மாதம் இறுதியில் நிகழ வாய்ப்பிருக்காலாம் என்று. சரி தங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள் தமையன் வரவேற்க காத்திருக்கிறேன் என்டு. வருவதற்கு முன்பு அறிய கிடைத்தால் நானும் சந்திக்க திட்டங்களை உருவாக்கி கொள்ளலாம் அல்லவா. வரும் முன்னம் சொல்லுங்கோ என்டு சொல்லியிருந்தேன். பிறகு நானும் மறந்துவிட்டேன். இடையில் அவரிடம் கதைக்கவில்லை. அதுவரை அவரை பற்றி பெரிதாக ஒன்றும் அறிந்திருக்கவில்லை கனடாவை வசிப்பிடமாக கொண்டவர் அபாரமான கவிதை எழுதும் திறனுடையவர் ஒரு பெர்ர்ரிய்ய்ய குடும்பத்தின் தலைவி என்பதை தவிர.

ஒகஸ்ட் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் பாலக்காட்டில் இடைவிடாது கொட்டும் மழையின் ஈரலிப்பும், நீலகிரி மலைத்தொடரில் சறுக்கி வந்து நிலைகொண்ட மேகங்களும் குளிர்ச்சியுடைய கோயமுத்துரை மேலும் குளுமைபடுத்திக் கொண்டிருக்கும் முன்னிரவில் முகப்புத்தகம் பார்த்து கொண்டிருப்பதற்காக அம்மாவிடம் வசமாக வசை வாங்கி கொண்டிருந்த நேரத்தில் சென்னை வெயிலாக வந்து உட்பெட்டியில் விழுந்தது சாகாறா அக்காவின் தகவல். "தம்பியவை நான் இப்ப சென்னையில் நிக்கிறேன் என்டு, நான் இப்ப கோயமுத்தூரில் அம்மாவிடம் ஏச்சு வாங்கி கொண்டிருக்கிறேன் என்டு சொல்லி வேகமாக தொலைபேசி எண்ணை அனுப்பிவிட்டு பதிலுக்கு காத்திராமல் துண்டித்துவிட்டு அம்மா நான் தூங்கிட்டேன் என சொல்லவும் தலையனை முகத்தில் விழவும் சரியாய் இருந்தது.

அடுத்த நாள் தொலைபேசி அழைப்புவரும் என எதிர்பார்த்து காத்திருந்தேன். வரவில்லை இரண்டொரு நாள் கழித்து திண்ணையில் வணக்கம் வைத்தார். கொஞ்சம் யோசித்து வணக்கம் வைத்து திரும்ப திண்ணையில் குருநாதருடனும் விசகு தாத்தா ராசவன்னியன் மாமாகாருவுடனும் ஐக்கியமாகி கவிதாயினியை கண்டு கொள்ளவில்லை. நேரமிருப்பின் பேசுங்கள் என்று மறைமுகமாக சொல்லிவிட்டு சென்றேன்.

அடுத்தநாள் முகப்புத்தகத்தில் விழா அழைப்பிதழை பார்க்க சற்று கிலியானது. அதில் அழைக்கப்பட்டுள்ளவர்களெல்லாம் அடிக்கடி தலைப்பு செய்தியில் கேட்ககூடிய பெயர்கள். ஆகா எவ்வளவு பெரிய ஆளிடம் இப்படி பரோட்டா சூரி மாதிரி லொடலொட என்டு பேசிட்டமென்டு குற்ற உணர்வு குறுகுறுக்க அக்கா நீங்க யாரெண்டு தெரியாம அறியா சிறுவன் தெரியாமல் பேசிட்டன் மன்னிச்சுகோங்கனு மடல் அனுப்பி பார்த்திருந்தேன். பாவ மன்னிப்பு வழங்கபடவில்லை என்பது படித்தும் பதிலனுப்பாததில் இருந்தே விளங்கியது.

விழாவை தலைமையேற்க சொல்லி அழைப்பிதழில் அச்சடிக்காமல் புறக்கணித்த கோவம் ஒருபுறம் இருந்தாலும் அவரது மகள்கள் இருவரும் வரவிருப்பதாக ஒற்றுவர்கள் இரகசிய தகவலை தந்ததால் சாகாறா அத்தாச்சிக்கு அக்கணமே வருகையை அறிய தந்துவிட்டேன். தமிழ் என்னை தலைநகர் நோக்கி இழுத்தது... ஆனாலும் சென்னை செல்வதென்பதை உறுதிசெய்ய வேண்டுமென்றால் பிரம்மாக்களிடம் அனுமதி பெற வேண்டும். அது பற்றி நிச்சயமில்லாததால் யாழில் யாரிடமும் கதைக்கவில்லை. அனுமதி இல்லையென்றால் அவசர கால சிகிச்சை பிரிவில் அறைகுறை மயக்கத்தில் இருக்கிறேன் என்று சொல்லி சாமாளிக்க முடிவு செய்தாயிற்று.
புத்தக வெளியீடு சென்னை கனடாவில் வசிப்பவர் இணைய நண்பர் என்பதையெல்லாம் அழகாக விவரித்தால் என்ன நிகழும் என்பது ஒரளவு யூகித்திருந்ததால் திருமணம் நண்பனின் அண்ணன் சென்னை என்று எளிமையாக முடித்து கொண்டேன்.

காலை 6,15 ரயில் புறப்படும் நேரம் 5,30 நிலையத்தை அடைந்தேன். பயணச்சீட்டை வாங்கும்போது மணி 6,20. வாங்கிய சீட்டை வெறித்தபடி இருந்தேன் அடுத்தநாள் ஒணம் என்பதால் கேரள நாட்டிளம் பெண்டிரால் சுழ்ந்திருந்தாலும் மனம் ஜென் நிலைக்கு போயிருந்தது. சென்னை வழியாக மங்களூர் வரைசெல்லும் திருவனந்தபுரம் சிறப்புரயில் 6,40 மணிக்கு நடைமேடை நாலில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தானே காத்திருந்தாய் விச்ச்சு ஒடு ஒடு என்று அசிரிரீ உள்ளே ஒலித்தது. அருகில் நின்றிருந்த சிறிய மலையாள குட்டியிடம் "என்ட ஹிருதயம் நிறைஞ்ஞ ஒண அஷம்ஷகள்" என வாழ்த்திவிட்டு இரயில் பயணங்களில் மூழ்கியிருந்தேன்...

 

 

ரயிலை பிடித்தாயிற்று, கெளதம் மேனனின் படங்களை போல் அதிசயத்தக்க அழகிகள் இல்லாமால் பாலாவின் திரைப்படங்களை போல் பிச்சைகாரர்களும், வறியவர்களும், நாடோடிகளும், வித்தைகாரர்களுமாய் இயல்பாய் இருந்தது. மெல்ல சிந்தனையோடியது, ஒரு வாரத்திற்கு முன் வருவதாக சொல்லியதோடு சரி அதன்பின் பேசவில்லை, இன்னமும் படுபாவி புலவர் தொலைபேசி எண்ணை கொடுக்கவில்லை, எங்கே போய் யாரை சந்திப்பது என்ற அச்சம் வேறு புகுந்துகொண்டது. குமரனிருக்க இடமில்லையேல் குன்றிற்க்கு பெருமையில்லை, இசை இல்லையேல் பயணங்களுக்கு சிறப்பில்லை.

ஏதோ... மோகம்

ஏதோ... தாகம்

நேத்துவரை முளைக்களயே...

ஆசைவிதை விதைக்களயே...

சேதிதிதிதி....... என்னனன
.
.
.
.
.
.
வண்ணக் கிளியே

ராஜாவின் பாடல்களால் சலனமடைந்த மனம் ஒருநிலைக்கு வந்தது. சென்னை நண்பனை அழைத்து ஒரு நிகழ்ச்சிக்கு உடன்வரும்படியும், விலாசத்தை சொல்லி இணையத்தில் போக வேண்டிய இடம், பேருந்து பற்றிய தகவல்களை பார்த்து வைக்க சொன்னேன். ரயில் சமிஞ்சைக்காக ஒரு மணி நேரம் காத்திருந்தது சென்னையின் புறநகர் பகுதியில், கடந்து சென்று கொண்டிருந்த மாநகர் உள்ளூர் சேவை ரயிலின் படிக்கட்டுகளில் ஆண்களும், பெண்களும், காதலர்களும் அநாயசமாக பயணம் செய்து கொண்டிருந்தனர். அதற்கு முந்தைய நிலையத்தில் ஏறிய ஒருவர் மதியம் இரண்டு மணியளவில் எல்.ஆர்.ஈஸ்வரியை "செல்லாத்தா செல்ல மாரியாத்தா" என்று கத்த விட்டு கொண்டிருந்தார்.

ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு போக போகிறோம் என்றேன். மேலும் கிழும் பார்த்தான். தலைநகரின் சுற்றாடல் மிக மிக மோசமாக இருந்த்து மெட்ரோ ரயில் பணிகளினால். எங்கும் புகை தூசி. நண்பனுடன் பேருந்தில் பயணபட தொடங்கினேன். கையில் அழைப்பிதழ் இல்லை, தொலைபேசி எண்ணில்லை ஒருவேளை உள்ளே நுழைய தடை போட்டுவிட்டால் எண்ண செய்வதென மனம் தரிகெட்டு பாய்ந்தது. இடையிடையே இரவு உணவு இருக்கு தானே என்று கேட்டு கொண்டிருந்தான். கனடாகாரர் கனக்க கவனிப்பினம் என்டு மனதில் நினைத்து அவனிடன் ஒம் ஒம் எல்லாம் இருக்கு என்று நம்பிக்கையூட்டி கொண்டிருந்தேன். ஊரிலிருந்து வரும்போதே உடனொருவன் வருவதாக சொல்லியிருந்தேன் அம்மாவிடம். அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது அவனிடமே கொடுத்து பேச சொன்னேன். அவனும் சமாளித்தான் இனி கவலையில்லை.

குறிப்பிட்டிருந்த நேரத்திற்கு முன்னதாகவே நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு சென்றாயிற்று. வரவேற்பரையில் ஊழியரிடம் நிகழ்வை பற்றிய விடயத்தை சொன்னேன், மேலே முதல் மாடியில் என்றார். வரவேற்பரையிலேயே ஒரு சிறு வண்ணமயமான கூட்டம் அகமகிழந்து எதையோ குடித்தபடி இருந்தனர். அதில் இரண்டு சிறிய பெரிய சிறுவர்களும் இருந்தனர். என் பயணத்தின் இலக்கானவர் மெதுவாக திரும்பி பார்த்து மீண்டும் காகித குவளைக்குள் மூழ்கிவிட்டார். மேலே போகனுமடா என்று திரும்பினேன் ஆளை காணோம். மேலே போவதா அவனை தேடுவதா இல்லை தமிழிடம் போவதா என்று மனம் ஊசலாடியது பெண்டுலத்தின் துணையில்லாமல். சரியென்று மேலே படிக்கட்டிற்கு போவதுபோல் சென்று ஒரு அரைவட்டமடித்து அவர் முன்னேபோய் நின்றேன்.

நிமிர்ந்து பார்த்தவரிடம் ராஜன் விஷ்வா என்றேன். ஒ ஒ ராஜன் விஷ்வாஆஆஆ வாங்கோ வாங்கோ வணக்கம் என்று புன்னகைத்தார். நான் சுதாகரிப்பதற்குள் ஏவுகணை வேகத்தில் சில சொல்லாடலை முடித்திருந்தார் யாழ்பாண தமிழில், என்ன சொன்னார் என்று யோசிப்பதற்குள் மீண்டுமொரு பல்முனை ஏவுகணை தாக்குதலை முடித்திருந்தார். பிறகு பிள்ளைகளை அறிமுகம் செய்தார் கணவரிடம் அறிமுகம் செய்தார் இவர் தான் யாழ்கள இசையின் சிஷ்யபிள்ளை கோவயமுத்தூரிலிருந்து வந்திருக்கிக்கிறார். ராமனுக்கு அணிற்பிள்ளை உதவிசெய்து பெருமையடந்தை போல் குருநாதருக்கு சிறுதுளி பெருமை சேர்த்து இந்த சிஷ்யபிள்ளை பிறவிப்பயனைடைந்தது. என்னை பார்த்திருக்கிறீர்களா என்றவரிடம் ஒம் விவசாயி விக் அண்ணாவின் சந்திப்பில் களைத்துப் போயிருந்த கள உறவுகளுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் தந்த பாரியின் படங்களை பார்த்திருக்கிறேன் என்றேன். முதலில் நான் சாகாறாவின் அண்ணன் என்று குழப்படி செய்து பார்த்தார். எதிரிலிருந்து கண்ணை சுழற்று சுழற்றி வெருட்டினார் பிறகு சில நிமிடங்கள் கனத்த மவுனம்.

இருவரும் நகர்ந்து விட்ட பின் நானும் பெரிய மகனருகில் அமர்ந்து கொண்டேன். மெதுவாக அவதானித்தேன் அவர்களை. குடும்பமே தமிழர் உடையில் மிடுக்காய் இருந்தது. சாரம் உடுத்தியிருந்தார் தந்தை. பெரிய பிள்ளை தாவணி பாவாடையிலும், ஆண் பிள்ளைகள் குர்தா மாதிரியான உடையிலிருந்தனர். அவர்களுக்கும் அக்கா சாரம் கட்டிவிட்டிருந்தால் இன்னும் அழகாயிருந்திருக்கும். பெரிய மகள் கையில் போட வேண்டிய மருதாணியை தலைமுடிக்கு போட்டிருந்தார். சிறிய மகள் அனார்கலி வடிவ சுடிதாரில் கொள்ளை அழகில் துடுக்குடன் இருந்தாள். சிறிய மகன் அமைதியின் வடிவாய் சாந்தமாயிருந்தான் நல்ல பண்பான சிறுவன்போல் தோன்றியது. பெரிய மகன் என்னிடம் பேச முயன்றவர்போல் இருந்தது. முதலில் பெயர் கேட்டவர் பிறகு முகப்புத்தக முகவரி வாங்கி குறித்து வைத்து கொண்டவர் அத்திட்டத்தை இன்று வரை கிடப்பில் போட்டுவிட்டார். என்ன வேலை செய்கிறீர் என்றவரிடம் அது அதுவந்து அதாவது என்டு இழுக்க எளிதில் புரிந்து கொண்டார் வேலையில்லா பட்டதாரியென்டு, திடிரென்று அம்மா இவருக்கு இருபத்திமூன்று வயதாம் என்டு கத்திவிட்டார்.

அருகில் வந்த அக்கா நலம் விசாரித்தவர். இந்த மடிக்கணினியால் படங்களையேற்ற முடியவில்லையென கவலைப்பட்டார். எனக்கும் தான் யாழில் படங்களை ஏற்ற தெரியாது என்டு வெகுளியாய் சொல்ல பிறகு இத்தனை நாள் என்ன அங்க குப்பையா கொட்டுறியள் என்று கடிந்தார். ( நியானி: கருத்துக்கள விதிகளை மீறி சக கள உறவை ஒருமையில் திட்டியதற்காக கள உறுப்பினர் வல்வை சகாறாவிற்கு மூன்று எச்சரிக்கை புள்ளிகளையும், ஒரு மாத தடையும் தாராளமாக வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ) தொலைபேசியில் தான் வருகிறேன் என தெரிந்ததும் வருத்தம் தெரிவித்தார். பிறகு கனாடாவிலும் நடைபெற உள்ள நிகழ்வு பற்றியும் பேசி கொண்டிருக்க ஆளை காணமென்று தேடப்பட்ட நண்பன் ஆளுடன் பேசி முடித்து வந்தான். அவனை அறிமுகப்படுத்த பிறகு ஒவியர் புகழேந்தி அங்கு நின்றிருந்தார் பின்னால், அவரை பற்றி சொன்னார் எனக்கு பிடிபடவில்லை. பல அரசு விருதுகளெல்லாம் வாங்கியவர் என்டு எனக்கு விளங்கவைக்க கடினமாக முயன்று தோற்றுவிட்டிருந்தார். ஞாபக மறதிக்கு அம்மா வாங்கி கொடுத்த ஞாபக சக்தி மாத்திரையையே சாப்பிட மறந்துவிடும் நினைவாற்றல் உடையவன் நான். வெகுநேரம் கழித்துதான் அவரது ஒவியங்களை யாழில் பார்த்தது நினைவுக்கு வந்தது. அவர்தான் புத்தக அட்டைப்பட ஒவியம் வரைந்துள்ளார். விழாவிற்கு வர போகிறவர்களில் உன்னை மட்டும் தான் தெரியும் என்றபோது ஒருவேளை வராமல் போயிருந்தால் அவரிற்கு தனிமையுணர்வு எற்பட்டிருக்கலாம், தம்பி என்ற நிலையிலும் சக யாழ் கள உறுப்பினர் என்ற வகையிலும் அவர் சார்பாக கலந்து கொண்டது மனநிறைவை தந்தது. நண்பனுக்கு சூழல் புதியதாக இருக்க அவனை அழைத்து மேலே நிகழ்விடத்துக்கு சென்றுவிட்டேன்.

விழா நிகழ்விடம் எளிமையாக இருந்தது. சாகறா அக்கா சிரித்து கொண்டிருப்பது போல் ஒரு விளம்பரதட்டி அறிமுக புத்தக அட்டைப் படத்துடன் மேடைக்கு பின்புறம் தொங்கவிட்டிருந்தது. ஒரு பெரியவர் அவசரத்துடன் வருவதும் போவதுமாக இலங்கை தமிழிலும் தமிழக தமிழிலும் பேசி கொண்டிருந்தார். நாற்பது இருக்கைகள் வரை போடப்பட்டிருந்தது. அக்காவின் கணவர் சற்று கலவரத்துடன் காணப்பட்டார். முன்பே என்னிடம் விழாவிற்கு ஒப்பனை எதுவும் செய்யபோவதில்லை என்டு அக்க சத்தியம் சொன்னவர், சத்தியத்தை அப்பட்டமாக மீறியிருந்தார். உள்ளே வந்த சிறியவனை அழைத்து அருகில் அமர்த்தி எனது அதியுயர் ஆங்கில புலமையால் அவனது தமிழ் புலமையை சோதித்து கொண்டிருந்தேன். தமிழ் பட கதாநாயகிகளை போல ஒரளவு பேசினான்.

முதலில் வந்த கொளத்தூர் மணி அவர்கள் அப்போது தான் புத்தகத்தை எடுத்து ஆராய்ந்தார். பிறகு உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தனும் ஒவியர் புகழேந்தியும் மற்றவர்களும் வர துவங்கினர். ஐய்யா பழ.நெடுமாறன் வந்ததும் அனைவரும் எழுந்து நின்றனர். நெடுமாறன் ஐய்யாவும் மணி அவர்களும் தங்களது புதல்விகளுடன் வந்திருந்தனர். விழா ஆரம்பிக்க முன் அனைவருக்கும் பிரட் சான்ட்விச் பரிமாறப்பட்டது.

இலங்கை தமிழிலும், தமிழக தமிழிலும் பேசி கொண்டிருந்தவர் விழாவின் துவக்க உரை வழங்கினார். அவர் சாகறா அக்காவின் தந்தையின் வகுப்பு தோழனாகிய கவிஞர் வல்வை.குமரன். பிறகு தந்தை பழ.நெடுமாறன் ஐய்யா அவர்களின் கரங்களால் வல்வை சாகறாவின் "காவியத் தூது" "வேங்கையன் பூங்கொடி" ஆகிய இரு நூல்களும் வெளியிடப்பட்டது. இது அவரது இலக்கிய வாழ்வின் ஒரு சிகரமாயிருக்கும் என்றும். மிகப்பெரும் சாதனையை சத்தமில்லாமல் செய்து தன் மண்ணுக்கு பெருமை தேடி தந்துள்ளார்.

ஐய்யா பழ.நெடுமாறன் முதல் சில நிமிடங்கள் பேச கடினப்பட்டது உடல் நலனில்லாமல் இருப்பதை உணர்த்தியது. அவரது குரலும் சற்று தழுதழுத்திருந்தது. தமிழ் உள்ளளவும் சாகறாவின் புகழ் நிலைத்திருக்கட்டும், தொடர்ந்து இலக்கியங்களை எழுத வேண்டுமென உளமாற வாழ்த்தினார். தொடர்ந்து ஒவியரும், உணர்ச்சி கவிஞரும், கொளத்தூர் மணி அவர்களும், பத்மாவதி என்ற விரிவுரையாளரும் பேசினர்.

நிகழ்ச்சியினூடே அந்த கட்டிடத்தின் மைதானத்தில் வெட்டவெளி திரையில் வேலையில்லா பட்டாதாரி ஒடிக் கொண்டிருந்ததால் அதன் ஒலி அவ்வப்போது இடையூறாக இருந்தது. சத்தம் அதிகமாக வரும் போதெல்லாம் முன்வரிசையில் அமர்ந்திருந்த சிறிய மகனும் மகளும் ஒன்றாக திரும்பி பார்ப்பதுமாக இருந்தனர். விழா முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த போது உணவு எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்ட நண்பன் கண்களால் கொலைமிரட்டல் விட்டு கொண்டிருந்தான். இடையிடையே நம்மைதான் பார்க்கிறார் அக்கா என்டு நான் அசட்டு சிரிப்பு சிரிப்பதும் முகத்தை அவா வேறுபக்கம் திருப்புவதும் வாடிக்கையாகிவிட்டிருந்தது. இறுதியில் நன்றியுரை சொல்ல வந்த நாயகி ஒரு அற்புதமான கவிதையொன்றை வாசித்தார். அதை பதிவிடும்படி தாழ்மையுடன் கேட்கிறேன். பிறகு புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். என்னை அழைத்து நீயும் எனக்கு மகன் மாதிரி தானே என்டு சொல்லி பிள்ளைகளுடன் சேர்த்து படமெடுத்துக் கொண்டார். அவசரத்தில் வாங்கிய அன்பளிப்பை கொடுப்பமா வேண்டாமா என்ற குழப்பத்திலே கொடுத்துவிட்டு நூல்களை அவரது கையெழுத்தில் பெற்றுகொண்டபின் அன்புகளை பரிமாறிக் கொண்டதும் விடைபெற்று பேருந்து நிலையம் நோக்கி நடக்க தொடங்கியபடி நினைவுகளில் மூழ்கினேன்....

யாழ் களம் தான் எத்தனை எத்தனை அன்பானவர்களை அறிமுகம் செய்துள்ளது. இவர் ஏன் நண்பர்கள் சொந்தங்களை
இலக்கிய உலக சாதனையாளர்களை விடுத்து யாழ் உறவுகளின் வாழ்த்துக்களை தன் நூலில் அச்சேற்ற வேண்டும் ? அதிலும் என்னைபோன்ற சிறுவனின் எழுத்துக்களையும் கூட அச்சேற வாய்ப்பளித்துள்ளாரே...! எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை...


பேருந்து நிலையத்தை அடைந்தபோது மழை பொழிந்தது.

நல்லார் ஒருவர் காணும் புவிதனில் பெய்திடும் பூ மழை...!

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

10641067_10152480259996551_2173615959317

 

 

புலவர் புகழ்ச்செல்வி பரணிப்பாவலன்

 

உயிர் எழுத்து

நாளும் பல நூல் பூக்கிறது பல நூல்கள் நூலாம்படையை மாறி பயன் இல்லா கிடக்கிறது சில நூல் மட்டும் வருங்காலம் நோக்கி பயணிக்கிறது,உயிர் மெய் ஆய்தம் என மூவகை எழுத்தால் நாம் கூட்டும் படை யானது பிறரை தட்டி எழுப்ப வேண்டும் அப்படி எழுப்பும் சொல்படை தான் மொழியை மண்ணை மீட்கவும் மாந்தனை மாந்தனாய் மாற்றவும் முடியும்.247 சொல்லால் கட்டும் சொற்றொடர் பல செய்தியை தாங்கி வரும் சொல்லாடல் தான் உலகினையே புரட்டி போடும்.புறநானுறு அகநானுறு பத்துப் பாட்டு எட்டுத் தொகை எல்லாம் இன்றும் நம்மிடம் வாழ்கிறது என்றால் தமிழின் சிறப்புதானே ,உலக மாந்தனை நல்வழி படுத்தும் திருக்குறள் மண்ணில் வாழ்கிறது என்றால் அந்த பாடல்களில் வரும் கருத்து சொல்வளம் தானே. ஆனால் இன்றைக்கு இதுபோல் நூல்கள் வருவதில்லை கரணியம் மொழி இனம் பற்றிய சிந்தனை பலருக்கு இல்லை. ஒரு போராட்டம் தொடங்க முதலில் தேவை எழுத்து எனும் படை தான் அந்த படை யால் கருத்தினை மக்களிடம் கொண்டு சென்று படைக்கு வீரனை திரட்ட முடியும் இது தான் பலவிடுதலை களத்தின் வரலாறு அவ்வகையில் அதே கருத்து செழுமையுடன் தமிழினத்திற்கு இருநூல் கிடைத்து உள்ளது.களத்தில் உள்ளவர்கள் எழுதும் இலக்கியம் புலத்தில் உள்ளவர்கள் படைக்கும் இலக்கியம் என இருவகையாய் பிரித்தாளும் இரண்டுமே விடுதலை தீயினை ஏந்தித்தான் வருகிறது. களத்தில் ஏற்பட்ட வலியுடன் கருத்தரிக்கும் எழுத்து வலிமை உடையதாய் இருக்கும் களத்திற்கு வெளியே உள்ளவர்களின் எழுத்தானது வலி இருக்கும் ஆனால் வலிமை இருக்காது என்பது பொதுவான கருத்து இதை முறியடிக்கும் நூலாகத்தான் அம்மா வல்வை சகாறா அவர்களின் நூலினை பார்க்கிறேன்.கடந்த 6.9,2014 இல் தமிழர் நாட்டில் உள்ள சென்னையில். அய்யா நெடுமாறன் தலைமை ஏற்க அண்ணன் கொளத்தூர் மணி உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன் ஓவியர் புகழேந்தி அம்மா பத்மாவதி விவேகனந் தான் போன்றேர் கருத்துரை நல்க அண்ணா வல்வை குமரன் அவர்கள் தொகுப்புரை செய்திட இறுதியாய் பாவலர் வல்வை சகாறா ஏற்புரை ஏற்றார். வேங்கையன் பூங்கொடி என்ற பா புதினமும் காவியத் தூதுஎனும் உரைவீச்சும் தமிழர்க்கு தமிழ்க்கு வலிமை சேர்க்கும் தமிழ்படைக்கு பெருமை கூட்டும் ----புகழ்ச்செல்வி பரணிப்பாவலன்
- See more at: http://www.tamilsguide.com/details.php?nid=6&catid=123560#sthash.Fcus1sSy.dpuf

Edited by வல்வை சகாறா

Share this post


Link to post
Share on other sites

கனடாவில் நடந்த வெளியீட்டு நிகழ்வு

 

 

10361964_10152478020516551_7257287064843

 

10653766_10152484147606551_2360040160445

Edited by வல்வை சகாறா

Share this post


Link to post
Share on other sites

10697169_10152486384936551_8066293942130

 

aekuruvi_valvai_sahara_20sep2014-133-XL.

 

ekuruvi_valvai_sahara_20sep2014-106-XL.j

 

ekuruvi_valvai_sahara_20sep2014-122-XL.j

 

 

 

ekuruvi_valvai_sahara_20sep2014-141-XL.j

 

ekuruvi_valvai_sahara_20sep2014-149-XL.j

 

ekuruvi_valvai_sahara_20sep2014-157-XL.j

 

 

எழுத்தாளர் தமிழ்நதியின் வேண்டுகோள் கருதி அவருடைய உரையை இங்கு இணைக்கவில்லை.

 

 

 


ekuruvi_valvai_sahara_20sep2014-118-XL.j

 

என் இனிய நண்பி சகாராவின் 'வேங்கையன் பூங்கொடி' காவியத் தொகுதி, 'காவியத் தூது' கவிதைத் தொகுதி, வெளியீட்டு விழாவின் இவ்இனிய மாலைப்பொழுதில் நட்புரைக்காக, இந் நல்ல நேரத்தை ஒதுக்கி என்னை அழைத்த விழா நாயகிக்கு நன்றி கூறும் இவ்வேளையில் அவையில் அமர்ந்திருக்கும் அறிவுசால் கவிஞர்கள், கலைஞர்கள், அறிஞர்கள், வித்துவத் திறமை கொண்ட அத்தனை அன்புறவுகளுக்கும், என் அன்பு வணக்கம்.

வல்லை வெளி தாண்டி,  வானுயர்ந்த மலைதாண்டி,
எல்லையில்லா வயல் தாண்டி,  எத்தனையோ நிலம் தாண்டி,
பனைமரக் காடு தாண்டி,  பரந்த சாகரம் தாண்டி,
பனிவயலில் விழுந்த,  பகல் நிலவு இந்த கவிமலர்

தன் சோலைவனத்தின் பெயர் பாதி
ஒரு பாலைவனத்தின் பெயர் மீதி கொண்ட
வார்த்தையெனும் வாளேந்திய
வஞ்சினம் வல்வை சகாரா

இளமையிலேயே இறக்கை விரித்த
சின்னப் பறவை இவள்
ஆனாலும்
நீலப் பறவையல்ல
நெருப்புக் குயில் இவள்

கனடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானலையில்
முகமது தெரிந்திடா
உறவது தொடர்ந்தது
முடிவிலாத் தொடுவானமாய்

விரிந்திடும் நட்பிது

அத்துடன்
'யாழ்' இணைய மேடை
எம் எழுத்துக்களுக்கு அங்கீகாரம் அளித்தது
உறவுகளைப் பலப்படுத்தியது
ஊக்குவித்து உயிர்கொடுத்தது

எம் வீட்டுத் தொலைபேசிக்கு
வாயிருந்தால்
அது பேசும் எம் நேசம் பற்றி
மண்ணையும் மனிதத்தையும்
நேசிக்கும் எம் சுபாவம் பற்றி

நாம் தாராளமாகப் பேசியதில்
ஏராளம் எம் தாய்மண் பற்றி

அது தவிர

எம் வளமான வாழ்க்கை பற்றி
மனதில் வலி சுமந்த நேரம் பற்றி
எம் பெற்றவர் பரிவு பற்றி
உடன் பிறந்தவர் நேசம் பற்றி

நட்பு வட்டத்தின் திறமை பற்றி
கவிஞர்கள் மன ஆழம் பற்றி
கதைகளின் கருப்பொருள் பற்றி
பெண்களின் ஆளுமை பற்றி

இவை மட்டுமல்ல
இடம் பெயர்ந்த குயில்கள் நாம்
மீண்டும் வேடந்தாங்கலிலே
விதவிதமாய் கூவும் காலம் பற்றி

கந்தகத்து முட்களிலே
மீண்டும் எப்போ
குங்குமப் பூ பூக்கும் என்று

காத்திருக்கும் சூரியக் கனவு பற்றி

இவள் கனவுகளின் காலடித்தடங்கள்
காயம் பட்டுவிட்ட பொழுதுகளில்
இயலாமைக்குள் சிக்கி பல சமயம்
எழுத மறுத்திருக்கிறது

இவள் எழுத்தாணி

இவள் பேனா துப்பாக்கி
இவள் எழுத்து வெடிகுண்டு
இவள் உள்ளுக்குள் போராளி

உலகிற்கு கவிதாயினி

ஒப்பனைப் புன்னகை இவளிடம்
ஒரு பொழுதும் கண்டதில்லை
கற்பனையில் சந்தோசம்
கண்டு என்றும் மகிழ்ந்ததில்லை

நெத்தியடியாய் தொடரும்
நிழலையும் உடைத்திடுவாள்
மௌனம் கலைத்துவிடில்
மனதுக்குள் வானம்பாடி

உணர்வுகளை உலுக்கும் கவிவரிகள்

வாழ்வை ஊடுருவிப் பார்க்கும் தனிப்பார்வை
அழகியல் கலந்த ஆழமான சொல்லாடல்
மண்சார்ந்த மட்டற்ற ஏக்கம்

ஈழமண்ணின் வலி சுமந்து
வாழும் மண்ணில் கவிவடித்து
காவியத்தூது சொன்ன கவிதாயினியே
நீ விழிகளில் தீ மூட்டி
வெற்றிக் கொடிகட்டு

என் இனிய தோழி
எம் மறைகள் வேறாக துறைகள் வேறாக
எம் அகவை வேறாக இருந்தாலும்
நட்பென்ற வட்டத்துக்குள் உனக்கும் எனக்கும்
ஏற்றத்தாழ்வுகள் என்றுமே உணர்ந்ததில்லை

நீ தமிழோடு விளையாடும் கலைமகள்
அச்சமின்றி உச்சங்களைத் தொட
நிச்சயம் உன் தேடல் தொடரும்
எம் நட்புக் காலம்
நாம் வாழும் காலம் தாண்டி
பலகாலம் வாழும்

விரித்துவிட்ட சிறகுகளை
விண்ணளவு பறக்க விடு
விண்ணளவு பறந்த பின்னும்
விடியலுக்காய் கவி எழுது

மண்ணினது கனவோடு
மனம் முழுதும் நீராடு
எண்ணமதில் எழும் புரட்சிக்
கனலோடு போராடு

தண்ணிலவில் தமிழீழக்
கடலோரம் நடைபோடு
உன்னளவில் உனக்குள்ளே
ஓர் உலகை உருப்போடு

சிரமங்கள் பல வென்று
சிகரங்கள் பல கண்டு
இமயமாய் நிலைத்திட
என்றும் என் இனிய வாழ்த்துக்கள்

நன்றி

நட்புடன்

காவலூர் கண்மணி

Share this post


Link to post
Share on other sites

10671233_10154525551070012_4982954735547

 

நேற்று செப்டம்பர் 20, மாலை எனது அன்பு தோழிகளில் ஒருத்தியான சகாராவின் தமிழகத்தில் வெளியிடப்பட்ட இரு நூல்கள் கனடிய மண்ணில் வெளியிடப்பட்டன. பல்வேறு பணிகள் பல்வேறு நிகழ்வுகள்.. அனைத்திலும் முகம் கொடுக்க வேண்டிய சூழலில் ஆரம்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை. நிகழ்வின் இறுதிப் பாகத்தில் சென்று ஒரு சில உரைகள் குறிப்பாக நூல்களை எழுதிய சகாராவின் ஏற்புரை நூல் வெளியீடு போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது.

சகாரா, நெருப்பு வரிகளின் சொந்தக்காரி..வேண்டுமான போது அழகியலை அழகு மிளிர தனக்கே உரித்தான பாணியில் இலக்கிய சுவை சொட்டவும் தர வல்லவள்...அந்த இலக்கிய உயிர்ப்புகளில் அவள் எழுதிய நூல் 'வேங்கையன் காதலி' என்ற காப்பிய நூல். மற்றையது கவிதைத் தொகுப்பு.

நான் உருகிக் கரைந்து போற்றும் எங்கள் களத்துக் கவி புதுவை இரத்தினதுரை ஐயனின் பாசறை பயிலாமலே அவரோடு கொண்ட உற்ற தோழமையால் ஏகலைவியானவள்... அவர் தொனியிலும் அவ்வப்போது அவர் வலிமையின் சாயலிலும் வலிமை திரட்டி உண்மை வரிகளில் கவி படிப்பவள்... மரபுக் கவிக்கும் புதுமைக் கவிகளுக்கும் இடையில் கலப்புக் கவியாய் அனைவரையும் ஈர்க்கும் கவிதைகள் படைக்கும் கவிதை சிற்பி... சொல்லாடல் அரசி...

கால ஓட்டத்தின் வேகத்தில் கை கோர்த்த தோழமைகள் திசைக்கொன்றாய்...எங்கோ எங்கோ.. தூரமாக தொலைந்து போனாலும் தொலையாது எமக்குள் மூளும் தீயும்.. இலக்கழியா சிந்தைகளின் சீர்மைகளும்..

எம்மை கை கோர்க்க வைக்க எமக்காக ஏதேனும் ஒரு புள்ளி என்றுமே தயாராகி நிற்கும்.. நாங்கள் எம்மை தொலைக்காத வரையில் என்பதை இன்று கண்டுகொண்டேன்...

இவள் கவி நாடகங்களில் அவளது நெறியாள்கையில் நாம் நடித்து அரங்கேறிய அந்த கலைப்பயண நாட்கள்..நினைவுகளாய்...

இன்னமும் தோள் கொடுத்த பயண வெளிகளில் திசைகள் கடந்து பறந்த கூடிப் பயணித்த பயணங்கள்... வெற்றிகள்..தோல்விகள்.... உறவுகள்..பிரிவுகள்.. நீண்ட நினைவுகளில் திண்மையின் வார்ப்பாக பெண்ணிவள் என் தோழியாய்...

தூர சென்றாலும் நினைவுகள் தூரமாவதில்லை.... எந்த திக்கில் உன் பார்வைகள் இருந்தாலும் எங்கள் இலக்குகள் என்றும் ஒரே திசையே...!!!

சொல்லாடி தமிழ் களமாடும் இவள் கவிதை விளையாட்டில் கிறங்கிப் போகும் ரசிகை நான்..

எழுத்து இவள் வடமிழுக்கும் திசையில் வெள்ளிகள் உதிர்க்கும்.....வீரமும் பாய்ச்சும்...ஏதேதோ எழுதும் இலக்கியவாதியாய்.. இரு.. அதே போல் இலக்கு தொலைக்காமல் எழுதும் நெருப்பு சிந்தையையும் அணையாமல் காத்திடு...

எழுது... புதைந்து கிடக்கும் எம் வலிமைகள் மேலெழ எழுது...

பூவை பாடு.. அநீதி காண்கையில் பூகம்பமும் ஆகு! எல்லோர் சொல்லும் தமிழ் கேட்பதில்லை.. தமிழை உயிரில் சுமந்து அடிமையானவர்களுக்கு எங்கள் தமிழ் செல்ல குழந்தையாகும். உன் சொல் கேட்கும் தமிழை தாலாட்டு தேவை வந்தால்... அன்னைத் தமிழை கருவியாக்கு!

சிகரம் தொடும் உன் எழுத்துக்களுக்கு வாழ்த்துக்கள் தோழி..

 

வாழ்த்துக்களுடன்

செந்தமிழினி பிரபாகரன்

Share this post


Link to post
Share on other sites

Valvai%20Zagara%20Book%20Releases%20(40)

 

 

 

arjun, on 21 Sept 2014 - 10:11 PM,

 

    கிரிக்கெட் மாட்ச் ஒன்று பார்க்க போனதில் நேரம் ஆறை தாண்டிவிட்டது மாட்ச் முடியவில்லை ஆனால் எமது டீம் நிட்சயம் தோல்வி என்ற நிலை இரண்டு பியர் வேறு அடிதாச்சு அடித்துபிடித்து வீடு வந்து புத்தக வெளியீட்டிற்கு போவம் என்றால் மனுசி வாற மூட்டில் இல்லை ,

    நிகழ்வு நடக்கும் இடம் எனது வீட்டில் இருந்து ஐந்து நிமிட ஓட்டமும் இல்லை பாரதி கலாமன்றதிற்குள் புகுந்தாச்சு .சிறுவர்களின் மெல்லிசை போய்கொண்டிருக்கின்றது .அப்பாடா

    பூவும் பொட்டும் மல்லிகையும் கனகாம்பரமும் பட்டு சேலையும் மினுங்கல் சர்வாருமாக எங்கும் பெண்கள் மயம்.

    யாயினியும் தமிழச்சியும்  அருகருகில் இருக்க கண்டு காரில் வைத்திருந்த மேசொவினதும் காவலூர் கண்மணி அக்காவினதும் புத்தங்கள் நினைவுவர திரும்ப காருக்குள் போய் எடுத்துக்கொண்டு வந்து

    என்னை தெரியுமா என்று யாயினியிடம் கேட்டேன் ,சிரித்துக்கொண்டே அர்ஜுன் அண்ணா என்றார்.புத்தகத்தை அவரிடம் கொடுத்துவிட்டு தமிழசிக்கும் யாழ்வாணனுக்கும் ஒரு வணக்கம் வைத்தேன் .யாயினி அவர் தந்தையாரை காட்டினார் . அவரது தந்தையாரும் எனது தந்தையாரும் நல்ல நண்பர்கள் .

    அப்படியே நிழலி ,சகாரா ,அவர் கணவர் எல்லோருக்கும் ஒரு ஹலோ சொல்லிவிட்டு திரும்ப மீராபாரதி துணைவியார் சகிதம் வருவதை கண்டு அவர்களுடன் போய் அமர்ந்துவிட்டேன் .இருவரும் ஏற்கனவே பல வருட பழக்கம்.

    சிறிது நேரத்தில் சசி வந்து அருகில் இருந்தார் .சசிக்கும் மீரா அவர் மனைவி பழக்கம்.சசிக்கு தெரியாதவர்கள் எவரும் இல்லைபோல கிடக்கு .

    நிகழ்ச்சி தொடங்கியது  .முரளி தான் தொகுப்பாளர் .முதலில் கதிர் செல்வகுமார் அறிமுக உரை ,பின்னர் காவலூர் கண்மணி அக்கா கவிதை வடிவில் சகாறா தனது நட்பு பற்றி பேசி ஒரு விருதும் வழங்கினார்  .அடுத்து ஈழவேந்தன் மிக சுருக்கமாக பேசியது மிக ஆச்சர்யம் .இவர் அறிவும் ஆற்றலும் உலகு அறிந்தது ஆனால் காசுக்கு பாட்டெழுதும் புலவர் நிலை இவரது

    அடுத்து எமது நிழலி வந்து மேடை பேச்சு அனுபவம் இல்லை என்று சொல்லிவிட்டு வெளுத்துவாங்கினார் .உடல்மொழியில் சற்று நடுக்கம் தெரிந்தாலும் பேச்சிலும் சொன்ன கருத்திலும் மிக தெளிவு இருந்தது .யாழ் உறவுகளுக்கு தெரியாத ஒரு விடயத்தையும் அதில் போட்டு உடைத்தார்  அப்போது   சகாறா வெட்கி தலை குனிந்தது கண் கொள்ளாகாட்சி .

    பின்னர் ஆய்வுரை எனது மிக விருப்பத்திற்கு உரிய எழுத்தாளர் தமிழ்நதி (அரசியலில் நேர் எதிர் ) மிக நேர்மையான விமர்சனம் வைத்தார் .உண்மை சொல்லுகின்றேன் என்று சில சர்சைக்குரிய விடயங்களையும் சொன்னார் .

    அடுத்து கலாராஜன் குண்டலகேசி மணிமேகலை எல்லாம் இழுத்து இது ஒரு ஆறாம் காப்பியம் என்றார்.(பொட்டு கதை வேறு ).

    அடுத்து விஸ்ணு பாராட்டுரை  இவர் சகறாவை பாராட்டாமல் வல்வையின் சிறப்பு பற்றி மட்டும் பேசினார் .

    அடுத்து புத்தக வெளியீடு ,படங்களும் எடுத்தோம் .முடிவில் சகாரா நன்றியுரையும் விளக்கவுரையும் தந்தார் .புதுவையை பற்றி பேசும் போது கண்ணில் கண்ணீர் வேறு வந்தது .

    இனிதே நடந்ததது புத்தக வெளியீடு .

 

33nudjo.jpg

Share this post


Link to post
Share on other sites

கவிஞர்

வா.சி. ம.ப. த.ம.சரவணகுமார்

 

 

10256541_708753892519518_629546260006633

 

 

 

 

 

10574474_771085519619688_897536268067675

 

காவியத்தூது
எங்களுக்கான படைப்புக்களுள் ஒன்று காவியத்தூது.
இந்த இடத்தில் எங்களுக்கான படைப்பு என்பதை எதை வைத்து சொல்கிறோம்.எதன் அடிப்படையில் சொல்கிறோம்.எங்களுடைய வலிகளை,ஏக்கங்களை, எதிர்பார்ப்புக்களை ஒரு படைப்பில் வெளிவரும் போது அதை எங்களுக்கான படைப்பு என்கிறோம்.

தற்போதைய சூழ்நிலையில் எங்களுடைய வலிகளை,உணர்வுகளை, தியாகங்களை கொச்சைப்படுத்தும் விதமாக படைப்புகள் வெளியாகும் போது எதிர்த்து நின்று போராடுகிறோம்.அதே சமநேரத்தில் எங்களுக்கான படைப்பை கொண்டாடுவதிலும், மக்களிடம் எடுத்துச் செல்வதிலும் நாம் முறையான கவனத்தை பெரும்பாலும் செலுத்துவதில்லை.

அந்தவகையில் காவியத்தூது எங்களுக்கான படைப்புக்களுள் ஒன்று.மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவேண்டிய படைப்பு.குறிப்பாக தமிழக தேசிய மக்களிடமும், புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழீழ தேசிய மக்களிடமும் சேரவேண்டும்.

இனி சற்று நாம் கவிதை தொகுப்பிற்குள் செல்லலாம்.இந்த கவிதை தொகுப்பை வாசிக்கத் தொடங்கி முடிக்கும் வரை வாசிப்பின் பிண்ணனிக்குரல் என்பது தமிழீழத் தேசியக் கவிஞன் புதுவை இரத்தினத்துரையின் குரலாகவே இருந்தது.அதன் காரணம் பின்பு நாம் தொடர்ந்து சொல்லலாம்.

”தூரதேசத்திலிருந்து துருப்பிடிக்கா மடல் தந்தேன்
தாயகக் கவிஞனவன் உலைக்களப்புலவனிடம்
உரியபடி சேர்த்து விடு -இல்லாவிடின் அவன்
உக்கிரத் தமிழ் செப்பி உன்னையும் எரித்திடுவான்”

தமிழர் எங்கு வாழ்ந்தாலும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் தங்களால் இயன்ற பங்களிப்பினை செய்ய வேண்டும்.புலம்பெயர் தமிழர்கள் சிலர் தங்களது முந்தைய வரலாற்றின் வலியினை மறந்துவிட்டு வாழ்கின்றனர். விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய பேச்செடுத்தால் “இனி கதைச்சு ஒண்டும் ஆகப்போறதில்ல.எல்லாம் முடிஞ்சு போட்டுது” என்று விரக்தியில் சலிப்பு கொள்வதும், பழைய நினைவுகளை தூண்டிவிடும் போது “அப்படியெல்லாம் வாழ்ந்தனாங்கள்” என்று பெருமை கொள்வதும் சிலரிடம் நாம் காணக்கூடியதாக இருந்திருக்கிறது.

மேலும் விடுதலைப் போராட்டம் என்பது அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட வேண்டும்.புலத்தில் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து செயற்படுக்கின்றவர்களின் பிள்ளைகளிடம் விடுதலைப் போராட்டத்தைப்பற்றி பேசும் போது “அதுகள் சின்ன பிள்ளைகள்.அதுகள்ட்டயெல்லாம் இந்த பிரச்சனைய கதைக்க வேணாம்” என்று சொல்வதை சிலரிடம் கண்டு இருக்கிறோம்.இப்படி நாம் குறிப்பிடுவது ஒருசிலர் என்பதை மட்டுமே என்று கவனத்தில் கொள்க. இதை கவிஞர் பதிவு செய்து இருக்கிறார்.

”தாயகப் பேச்செடுத்தால் தேவையில்லாச் சங்கதியாய்
தூயதொண்டர்களைத் தூசிக்கும் வாசகத்தால்
மாயமான் வலை வீழந்த மதிகெட்ட மாக்களுமாய்
தூரதேசத்திலிங்கே தமிழர் மாசடைந்து கிடக்கின்றார்

நாளாந்தம் இலவச நாளிதழ்கள்
நேரிய இலக்கற்ற நிலைமாறும் எழுதுகோல்கள்
பேருக்குப் பதவிகள்,பிரத்தியேக விருதுகள்
வெள்ளித்திரை மின்மினிகள் வீதியுலா வருவதற்கும்
அள்ளி வழங்க ஆயிரமாய் இளையவர்கள்
எங்கே போகிறது? என்னினமோ தெரியவில்லை

ஒண்ட வந்த இடம் ஒய்யாரப்புலமென்று
பண்டை மறந்த சிலர் பரிவட்டம் கட்டுகிறார்
வெள்ளைக் கொக்கின் புலத்தில்
காக்கைக்கு என்ன வேலை?
காலம் மாறும் போது கண்ணீர்தான் மிச்சமாகும்”

15.09.1987 அன்று உண்ணாவிரதம் தொடங்கி 26.09.1987 அன்று திலீபன் அண்ணன் உயிர்நீத்தது என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.காந்தியின் அகிம்சை கொள்கையால் ஆளுமைப் புதல்வனை நாம் இழந்தோம். அன்று அண்ணன் திலீபன் கிழித்த இந்திய அகிம்சை முகத்திரையால் இதுவரை இந்தியம் அம்மணமாகித்தான் நிற்கிறது. 27 ஆண்டுகள் ஓடிவிட்டது.ஆனால் அதன் பிறகு பிறந்தோர்கள் திலீபன் வரலாற்றை அறிந்து திலீபனை ஆழமாக நேசிக்கிறார்கள்.என்றோ ஒருநாள் இறந்தவனுக்காய் இன்றமர்ந்து தேம்பி அழுகிறார்கள்.இதற்கு நானே உதாரணமாகிறேன்.வரலாற்றுப் படைப்புகள் என்பது தான் ஒரு விடுதலைப் போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு நகர்த்துகிறது.

“இந்தியப்பூதத்தின் பொம்மலாட்டம்,புனைவெல்லாம்
விடுதலைத் தழலில் வெந்து போயின.

சத்திய வேள்வி சாகாவரம் பெற்றது.
இந்தியத்தை விட்டு
காந்தீயம் கப்பலேறிக் காணாமல்போனது”

இந்த இடத்தில் புதுவையும்,காசி ஐயாவும் அன்று திலீபனுக்காய் எழுதிய கவிதைகளும்,மு.வே.யோ வாஞ்சி ஐயாவின் பன்னிரண்டு நாட்களின் குறிப்புகளும் மனதில் வந்து போகின்றது.

பல இடங்களில் வரலாற்றின் வலியினைச் சொல்லி கண்களில் கண்ணீர் வெள்ளத்தை பெருகச்செய்யும் அதேவேளையில் கவிஞர் வல்வை சகாறா நம்பிக்கை ஊட்டவும் தவறவில்லை.இதை நாம் புதுவையில் கவிதைகளில் காணலாம்.சோகத்தைச் சொல்லும் கவிதைகளே இறுதியில் ஆறுதலையும் சொல்லி நம்பிக்கை ஊட்டும்.இதற்கு புதுவையின் நினைவலைகள்,தாய்மடி போன்றவை சில சாட்சி.

அந்தவகையில் பல நம்பிக்கை தரும் வரிகள் பல இக்கவிதை தொகுப்பில் இருப்பினும் “குப்புறக்கிடந்தால் சுவாசமே சுமைதான்” என்ற தலைப்பின் கீழான வரிகள் அனைத்தும் நம்பிக்கை ஊட்டக் கூடியவை.அவற்றில் சிலவற்றை மட்டும் நாம் இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.

”படுக்கையில் கிடந்தபடி பாதை கேட்காதே
எழு....உடல் முறித்து, பத்தடி நட.. பாதை தெரியும்
குப்புறக் கிடந்தால் சுவாசமே சுமைதான்.

களத்திலேயே மீண்டெழுந்த உனக்கு புலத்திலேன் தடுமாற்றம்?
போராட்டக்களம் மாறியிருக்கிறது
இப்போது சூறாவளி அவ்வளவே”

தற்போது சர்வதேச போர்குற்ற விசாரணைக்கான சாட்சியங்கள் கோரப்படுகிறது. எமது மக்கள் இந்த பணியில் மந்த நிலையிலேயே செயல்படுகின்றனர்.இது நாம் எதிர்பார்த்த விசாரணை அல்ல.ஆயினும் ஒரு 10 வருடங்களுக்கு பிறகு இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை வரும் போது, இயற்கை சாவு போன்றவற்றால் கூட நாம் பல சாட்சியங்களை இழந்து நிற்போம்.இந்த இடத்தில் கவிஞரின் வரிகளைக் குறிப்பிடலாம்

”ஒட்டுமொத்த இன அழிப்பை உலகம் கணக்கெடுக்கிறது.துயர்
கொல்லுதென்று நீ முடங்கிவிட்டால்
இழப்புகள் கூட மெளனித்துப் போகும்.

அழுவதாகிலும்....அம்பலத்தில் நின்று அழு.
இது உனக்கு மட்டுமான வலியில்ல
நம் இனத்திற்குத் திணிக்கப்பட்ட பெருநோ

நீட்டிப் படுத்திருந்தால் நீதி கிடைக்காது.
எத்தனை பெரிய துயரில் இருக்க
இரக்கமில்லாமல் எழுகிறாய் இழந்திருந்தாலே உனக்குத்
தெரியுமென்பாய்.”

இக்கவிதைத் தொகுப்பை வாசிக்கும் போது வாசிப்பின் குரல் புதுவையின் குரலாகவே இருந்தது என்று நாம் சொல்லி இருந்தோம்.

“உலகமெல்லாம் தாவரம்,பறவை,விலங்கு என்று
எல்லாவற்றையும் பாதுகாக்க திரளுங்கள்
மனிதர்களை அதுவும் ஈழத்தமிழர்களை சீ விட்டுவிடுங்கள்
எங்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டாம்
சரி எங்களை அழிக்கச் சிங்கள அரசுக்கு போர் ஆயுதங்களையாவது
வழங்காமல் விடலாம் அல்லவா?”

என்ற கவிஞர் வல்வை சகாறாவின் வரிகளை படிக்கும் போது புதுவையில் வரிகள் நினைவுக்கு வருகிறது.அதையும் இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்

மரங்களைத் தறிக்காதே
சூழலை மாசு செய்யாதே
மிருங்களை வதையாதே
பூக்களை கிள்ளாதே
என்றெல்லாம் குரல்கள் கேட்கின்றனவே
ஈழத்தமிழனை எரித்து முடிக்காதே என்று
உலக முகட்டை இடிக்கும் குரல்
எப்போது எழும்
அவலக்குரலை எப்போது இந்த உலகம் அறியும்

பொதுவாக புதுவையின் கவிதைகள் நான்கை நோக்கியதாக இருக்கும்.ஒன்று தமிழீழ மக்களை நோக்கி,இரண்டாவதாக புலம்பெயர் மக்களை நோக்கி,மூன்று தமிழக மக்களை நோக்கி,நான்காவது சர்வதேசத்தை நோக்கியதாக இருக்கும்.அவ்வாறே வல்வை சகாறாவின் கவிதைகளும் அமைந்துள்ளன.அந்தவகையில் தமிழகத்தை நோக்கியதாக அமைந்துள்ள சிலவரிகளை இங்கு நாம் பகிர்ந்து கொள்ளலாம்.

”கண்ணீர் பெருக்கெடுக்க
உப்புக் காற்றின் உறவோடு தனித்தபடி
கூப்பிடு தொலைவில் தானே
எம்தேசம் கும்மிருட்டில் கிடக்கிறது

ஆற்ற ஒரு நாதியின்றி -எம்மினத்தின்
அவலத்தைத் தேற்ற ஒரு தேசமின்றி
அம்மா......உன் கையணைக்கும் தூரத்திலல்லவா...
எம்பூமி காயம்பட்டுச் சிதைகிறது

.........
எப்படித் தனிக்க விட்டாய்?
ஏதிலியாய் தவிக்கவிட்டாய்?
சாவின் விளிம்பினிலே,
கூவிக் குளறி எம்தேசம் அழுகையிலே
ஆவி துடித்தெழுந்து
தாவி அணைக்கும் தாய்மடி நீதானே

வாரியணைத்தெம் புவியின் வண்ணமுகம் பார் தாயே -எவ்
வல்லமையும் உடைக்க முடியாத் தாய்மைவேதம் நீதானே!
தாயே!

குமுறும் எம் உள்ளக் கோபுரத்தை வருடி எப்போது ஆற்றுவாய்?
தனித்த எம் வேர்மடிக்குத் தாங்கும் வலுவாய் தோற்றுவாய்? அம்மா!
இது குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே
பாராமுகம் வேண்டாம்
வா....!பக்கத்துணையாய் இரு!

வேற்று மருத்துவச்சி வேண்டவே வேண்டாம்
எம்புவியின் பேற்று மருத்துவச்சியாய்
நீயே பிள்ளைக் கொடி அறு!

எங்களுக்கான படைப்புகளில் ஒன்று காவியத்தூது..வேற்றின மக்கள் நமது வலிகளை அறிய இந்த படைப்பு மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

நன்றி
வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்
தமிழ்நாடு
05-10-2014

 

Edited by வல்வை சகாறா

Share this post


Link to post
Share on other sites

தளிர் காலாண்டு சஞ்சிகையின் முகநூலில் இருந்து

 

ஸ்காபுரோவில் அண்மையில் வல்வை சகாறாவின் காவியத்தூது , வேங்கையன் பூங்கொடி நூல் வெளியீட்டு விழா மிகவும் சிறப்பானதொரு நிகழ்வாக அமைந்திருந்தது.
தமிழ் இலக்கியத்துக்கு புதியதொரு பாதையில் வல்வை சகாறா எழுது கோல் கொண்டு எழுதிச் சென்ற தமிழ் வரிகள் ஈழத்து வாசனையும் எமது உறவுகளின் தணியாத தாகத்தினையும் நெஞ்சத்திரையில் படம்பிடித்து காட்டுகிறது
வளரட்டும் அவர் இலக்கியப்பணி அது எம் தமிழ்ப்பணி.
தொடரும் என்றும் தளிர் பணி.

 

1039620_1502855776621075_439494366822105

 

10669230_1502856176621035_57415763827791

 

10560462_1502857746620878_20691186491745

 

 

 

https://www.facebook.com/thalir.thalir/posts/1502864983286821

Share this post


Link to post
Share on other sites

காற்றாய் வாழி!

தென்னகத்துப் பெண்மகளீர் தீட்டும் நூல்கள்
திரைகடலைக் கடந்திங்கே வரும்போ தெல்லாம்
என்னகத்து பெண்ணொருத்தி வீர வேங்கை
எதிரிகளை எழுத்தாலே சாய்க்கும் நோக்கைத்
தன்னகத்துப் புதைத்துவைத்து வளர்ந்த பாவை
தமிழீழ விடுதலையைக் கருவாய்க் கொண்டாள்
முன்னகர்ந்து வாராளோ புலத்தில்! எழுத்தின்
முத்தாலே தொடுக்காளோ நூல்கள் என்று
கன்னமதில் கைவைத்து இருந்த வேளை
கனவுகளை நனவாக்க சகாறா என்று
புன்னகைத்து வருமகளே வாழி! நீயும்
பொறிநெருப்பை மடிசுமக்கும் காற்றாய் வாழி!!!

 

 

 

10339589_10203907090384592_2300225235333

- இரா.சம்பந்தன்

Share this post


Link to post
Share on other sites

கவியாடு களத்தில் அறிமுகம்....!!
கருத்தாடு புலத்தில் ஒருமுகம்...!!
உரித்தோடு தமிழாயும் பொறிமுகம்..!!
வரி பிளந்த வலிகளின் கருமுகம்..!!
கவிதைதான் கற்பனை இல்லை...
புவியில் எம் வலிசுமந்த
அப் பனைகளின்....
குவிவும் குன்றெடுத்து....குகையுடைத்த....
பொருவில் திறல்வீரத்தழும்பும்......
ஆங்காங்கே....அதிர்ந்து நிற்கும்......
நெருப்பு விழுங்கிய ....பீனிக்ஸ் பறவைகளாய்......
சகோதரி சகாறா.......
உங்கள் வரிகளின் வீச்சுக்கண்டவன் யான்.....
அதன் கூர்மையும் ...குறியும் எனக்கும் தெரியும்
""வேங்"கையன் பூங்கொடி.....
""கா""வியத்தூது.........காலத்தை
எமக்கு கற்பித்து.......
நிற்கும்....!!
உங்கள்....கவிதைகள்..
காலத்தை வென்று நிற்கும்...!!
வாழ்த்துக்கள்..!!

 

10574444_1479847225611016_55240836494405

Kiruba Kurukal (கவிஞர் விசுவாமித்திரர்)

Share this post


Link to post
Share on other sites

"வேங்கையன் பூங்கொடி", "காவியத்தூது" நூல்கள் வெளியீட்டுக்குப்பின்னாக...... சென்ற வாரம் ஒக்டோபர் 11-2014 அன்று (ITR)சர்வதேச தமிழ் வானொலியில் இடம்பெற்ற வல்வை சகாறாவின் நேர்காணல்

 

 

http://www.itr.fm/webplayer-guest.php?id=6979#.VEJ4ZsmVao1

Edited by வல்வை சகாறா

Share this post


Link to post
Share on other sites

கவிஞர்.வா.சி. ம.ப. த.ம.சரவணகுமார்

 

வேங்கையின் பூங்கொடி நூல் விமர்சனம் (சற்று பெரிதாகவே இருப்பதால் கடந்து போகாமல் உறவுகள் நேரம் ஒதுக்கி வாசிக்குமாறு கேட்டுகொள்கிறேன்)

பொதுவாக நான் காதல் காவியங்களை வாசித்து நாட்கள் ஆகிறது.நிறைய நாட்களுக்குப் பிறகு மனத்திருப்தியுடன் விரும்பி வாசித்த காதல் காவியம் வேங்கையின் பூங்கொடி.இதை வெறும் காதலோடு மட்டும் அடைக்க விரும்பவில்லை.அப்படி சொல்லவும் முடியாது.காதலோடு வீரமும் பகிரப்பட்டுள்ளது இக்காப்பியத்தில்.
”காதலும் வீரமும் தமிழர் உடமை”

இந்த வரிகளை பெரும்பாலும் தமது இலக்கியப் படைப்புக்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்கிறோம்.சிலருக்கு அது மிக வசதியாகவும் உள்ளது.தமிழ்நாட்டில் பெரும்பான்மையான படைப்புகள் வெறும் காதலை மையப்படுத்தியே வெளிவருகின்றன.காதல் என்பது பல இடங்களில் வெறும் காம நுகர்வுக் கருவியாக மட்டுமே சுட்டிக்காட்டப்பட்டுகிறது.

எட்டுக்கோடி தமிழினம் இங்கே இருக்கிறோம் என்று வாய்ச்சவடால் மட்டுமே அடிக்கிறோம்.அதில் எத்தனை பேருக்கு போராட்டக்குணம் இருக்கிறது.இப்படி தமிழ்நாட்டுத்தமிழன் போராட்டக்குணத்தை மறந்து போதையில் திரிய இங்கு சமகாலத்தில் உருவாக்கப்படும் படைப்புக்களும் காரணமாக இருக்கின்றன என்பது எனது தனிப்பட்ட கருத்து.ஆனால் தமிழீழப் படைப்பு என்பது வேறுவிதமாக உள்ளது.அந்தப்படைப்புக்களை வாசிக்கும் போதே காதலும் வீரமும் தமிழர் உடமை என்று மனதார எண்ணத் தோன்றுகிறது.
சரி இனி நூலிற்குள் செல்லலாம் என்று நினைக்கிறேன்.

தமிழீழ விடுதலைப் புலிகள் வாழ்க்கையையும் உறவுகளையும் வெறுத்து சாக முன்வரவில்லை.அவர்களுக்கும் உறவுகள் இருந்தது.காதல் இருந்தது.ஏக்கம் இருந்தது.ஆனால் அதை விட அவர்கள் மக்களையும்,தாய்மண்ணையும்,தமது உயிரினும் மேலான இலட்சியத்தையும் நேசித்தார்கள்.இந்த இடத்தில் கவிஞரின் வரிகளை பதிவு செய்யலாம்.

"உயிர் பிரியும் கணத்தை எதிர் நோக்கும்
இந்த இளைய புலி வீரர்கள்
ஆண்டு, அநுபவித்து உறவுக்குள் முகிழ்த்து
போதுமடா சாமி என பற்றறுத்த துறவிகளா?

இல்லையே!
ஆளுமையும்,அநுபவிப்பும் உறவுகள் சங்கமிப்பும்
உணர்வாலே அறியாத-இருந்தும்
பற்றுகள் நிறைந்த பாசத்துறவிகள்
தாயகப் பற்றினால்
அனைத்தையும் ஒதுக்கிய இளைய ஞானிகள்”

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்களது பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர்களும் விடுதலைப் போராட்டத்துடன் ஒன்றியே இருந்தார்கள்.தான் பெற்ற ஐந்து மகன்களில் நான்கு மகன்களை இயக்கத்திற்கு கொடுத்துவிட்டு,தன்னிடம் உள்ள ஒரே மகனையும் கைபிடித்து அழைத்து வந்து, இயக்கத்திடம் ஒப்படைத்து இவனும் நாட்டுக்காக சண்டை பிடிக்கட்டும் என்று சொன்ன புறநானூற்றுத் தாய் சங்க காலத்தில் இடம்பெறவில்லை.நாம் வாழ்கின்ற சமகாலத்தில் தான் இடம்பெற்றது.

தாக்குதல் நடவடிக்கைக்கு முன் விடுப்பில் வீடு சென்று அம்மாவை பார்க்கும் போராளிகளின் அந்த மகிழ்வை, உள்ளப் பூரிப்பை வார்த்தையால் எழுதுவிட முடியாது.எனை ஈன்றவளை நிரந்தரமாக இழந்தவன் என்ற முறையில் அதன் வலியை, தாய்பாசத்தின் தவிப்பை என்னால் உண்மையில் புரிந்து கொள்ள முடியும்.பிடித்தவை இல்லாது போனால் அதன் ஏக்கம் புரியும்.இழந்தவனுக்கு அதன் முழு வலி தெரியும்.

இக்காவியத்தில் “அண்டத்தை கடந்தவன்” “மெளன வலிகள்” ஆகிய இரு பகுதிகள் கண்களில் கண்ணீர் வெள்ளத்தைப் பெறுகச் செய்தது. அவற்றுள் சில வரிகளை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

“அம்மா!....அன்புக்குச் சொர்க்கம்.
அம்மா!....பண்பெல்லாம் அவள் பக்கம்.
அம்மா!....அகிலத்தை அடக்கும் தாய்மை.
அம்மா!...வார்த்தைக்குள் அடங்காப் பாசத்தீ

கையிடுக்கில் தூக்கி, கதகதப்பாய் அணைத்து
சின்ன அதரங்களில் -தாய்மை
பூரித்த கிண்ணத்துப் பாலூட்டி இவள் வளர்த்த பிள்ளை

உடலில் எண்ணெய் பூசி, உருவி ஊறவிட்டு
உல்லாசக் களிப்புடனே,உந்தியவன் நீந்தி வர
உளம் களித்து இரசித்தபிள்ளை

வாய்மூடும் மெளனம் தாய்மைக்குப் பூட்டிடுமா?
அன்னை உள்ளத்தை அறியாத பிள்ளையா?
தாயிற்கு இவனென்ன புரியாத தனயனா?
வாயும், வயிறும் வேறு வேறானாலும்
வலியும், வேதனையும் ஒன்றுதானே!

தலைமுடி கோதி,தன்மடியில் தலைசாய்த்த
சேய்முகம் பார்த்தாள் அன்னை
பார்வையில் நிம்மதி பரவசத்தின் சன்னதி
வீரத்தில் வாகை சூடி வெற்றிகளை ஆள்பவன்
தாய்மையெனும் களத்தினுள் சரணடைந்து நின்றான்

தாய்மை
உலகை மேவும் தத்துவம்
இவன் அடங்குதல் இயல்புதானே

ஈருந்தி எடுத்து,இயல்பு நிலை சோதித்து
ஈன்றவள் விடைக்காய் இளையவன் நிமிர்ந்தான்
தாய்மை
நெஞ்சுக்குள் தவிப்பு
நஞ்சணிந்த நெஞ்சம்
காணக் காண கருவறை கலங்கியது.

ஏக்கத்துடன் தாயும்
நாடு மீட்கும் நோக்கத்துடன் சேயும்”

சேது காதல்வயப்பட்டதை தன் போராளித் தோழன் இனியவன் அறிந்து கொள்கிறான்,சேது ஒப்புக்கொள்ள மறுக்கிறான்.பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறான்.தடுமாறுகிறான்

“இழுத்துப் பூட்டிய இதயம் திறக்கும்
அப்போது பார்க்கிறேன் நண்பா!
வாய்க்குள் வளர்ந்ததை - மனப்
பாய்க்குள் சுருட்டினான்”

வேவுப் புலிகளால் எதிரி முகாமின் தரவுகள் எடுக்கப்படுகிறது.அந்த தரவுகளுக்கு பின்னால் மிகப்பெரிய தியாகங்கள் நிறைந்திருக்கிறது.இரவு தளபதிகள் மாதிரிகளை வைத்து தாக்குதல் திட்டத்தை விவரிக்கிறார்கள்.பின் தாக்குதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.போராளிகள் களத்தை நோக்கி விரைகின்றனர்.சேது கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருக்கிறான்.திட்டப்படி எதிரியின் தகவல் கோபுரத்தை தகர்க்க முடியவில்லை.

”சூரிய விளக்குகள் சுடர் இழந்திட
எதிரிப் படைகளின் பிடரிகள் கலங்கின

துயின்றவரோடு -புலி
வந்தாச்சென அரண்டவன் பாதி!
கையில் கிடைத்த ஆயுத பலத்தால்
தம்மை காக்க விழைந்தனர் மீதி!

தகவல் கோபுரம் தலை சாயாததனால்
அரச படைகள் தகவல் செப்பின

பலாலியில் இருந்து கெலிகள் பறந்தன.
வாரணப் படைகளுக்கு வானலை சேதிசெப்ப
உடனடி நடவடிக்கை கடலில் எழுந்தது”

களத்தின் நிலைமை புலிகளுக்கு சாதகமாக இல்லை.அதை உணர்ந்த தளபதிகள் போராளிகளை பின்வாங்க கட்டளையிடுகின்றனர்.இந்த நடவடிக்கையில் சேது காயமடைகிறான்.அவன் நிலை அறிந்த காதலியானவள் வேதனையில் தவிக்கிறாள்

“இரவிரவாக வெடிகளின் ஓசை
இதயத்தை கிழித்து வதைத்தது
உறவை எண்ணி இருந்தவள் உள்ளம்
உவகை இழந்து தவித்தது”

காயம்பட்ட காதலனைப் பார்க்க செல்வி துடிக்கிறாள்.அதற்காய் போரில் சேதமடைந்த ஊரில் தொண்டர் பணியாற்ற வேண்டுமென்று தாயிடம் அனுமதி கேட்கிறாள்.அரைமனதோடு தாயும் ஏற்று அனுமதி வழங்குகிறாள்.தோழி குழலியோடு புறப்படுகிறாள்.தன் காதலன் எங்கு வைக்கப்பட்டுள்ளான் என்பதை அறிந்து கொள்கிறாள்.புலிகளின் மருத்துவப்பாசறைக்கு விரைகிறாள்.அங்கு சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை.பின்பு அழுது அழுது அனுமதியைப் பெறுகிறாள்.

காயமடைந்து மயக்க நிலையில் இருக்கும் சேதுவின் அருகில் சென்று அமர்கிறாள்.அருகில் உள்ளோர் உறவறிந்து தனிமையை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.இவள் விழிநீர் அவன் மீது சிந்துகிறது.சேது விழித்துக் கொள்கிறான் தன்னவளின் விழிநீரால்.அவன் கரத்தை பாசத்தோடு இருகப்பிடிக்கிறாள்.அவனோ தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறான்.போலி வெறுப்பை வீசுகிறான்.

”சினத்தை முகத்தில் பூசிக் கொண்டான்
செல்வியை அந்நியம் ஆக்கிக் கொண்டான்
வெறுப்பை விழிகளில் தேக்கிக் கொண்டான்
விரும்பாப் பார்வையை வீசி வைத்தான்

செல்வி மேலும் வேதனையில் துடிக்கிறாள்

“அன்பே இல்லா அவன் இயல்பா?
அவனை வரித்தது அவள் பிழையா?
ஆயிரம் ஊசிகள் அகம் ஏற
ஏந்திழை இதயக் காயம் பட்டாள்

கண்கள் மூடிய காளை
நேரம் ஆகிறது
எனும் சொல்வலி கேட்டு
அகத்தினில் துடித்துப் புறத்தினில் விழித்தான்

அந்நேரம்
சேயிழை அவளும் வாயிலா மடந்தையாய்
ஓம் அசைவில் அவசரம் காட்ட
இன்னல் இடியாய் இவனுள் விழுந்தது

வஞ்சியர் இருவரும் வந்த வழி ஏகினர்
கொஞ்சுதமிழ் கோதையின்
கெஞ்சும் விழிகளில் விஞ்சி நின்றது
ஒரே ஒரு வினா
மிஞ்சி மேவப் பதிலது இருந்தும்-இவன்
பகிர மறுத்தான்
விரும்பாதவன் போல் விறைப்பாய் இருந்தான்”

செல்வி தன் மகனின் அருகில் இருப்பதை தன் மகன் காயம்பட்டுக் கிடப்பதை பார்க்க வந்த தாய் பார்த்து விடுகிறாள்.உணர்ந்து கொள்கிறாள்.

“சின்னவன் நடப்பை
பார்த்த தாயின் இதழ்களில் மென்னகை

எத்தனை நாடகம் பார்த்தவள் இத்தாய்
தந்தையை விஞ்சியா தனயன் இருப்பான்?

பெற்றவள் உணர்ந்தாள்-பெரும்
கனம் கொண்டாள்
இன்னொரு பக்கம் இன்னலுள் மாண்டாள்

ஒவ்வாத உறவுகள் பிரிவிலே விலகும்
ஒருமித்த உறவுகள் பிரிவிலே இறுகும்
புரியாத அன்னையா இவள்?

புத்திரச் செல்வனைப் புரிந்தவள் அணைத்தாள்
தாய்மையின் அன்பிலே தனயனும் கரைந்தான்”

பின் நாட்கள் நகருகிறது.

“காணும் தருணம்
(அவன்) இறுகியும், (இவள்) உருகியும்
இளநெஞ்சங்கள் துடித்தன”

அதே சமயம் சிங்கள பேரினவாத அரசானது மிகப்பெரிய போருக்கு ஆயுத்தமாகிக் கொண்டிருக்கிறது.அதனோடு சர்வதேச நாடுகளும் கூட்டுச் சேர்கின்றனர்.

“பேரினவாதப் புல்லர்களோடு
அமெரிக்காவின் செல்லர்கள் பறந்தனர்
பயிற்சி பல வழங்கினர்.
கெரில்லாப் போரதை அடக்கி ஒடுக்கி
வேண்டிய அனைத்தும் வல்லரசுகள்
மாபெரும் பாரியாய் வாரி வழங்கின.

பயங்கரவாதம் அழிப்பதாய் பகல் வேசம் போட்டு
பாரெங்கும் அரசு பல்லிளித்து நடித்தது”

உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க பேச்சளவில் மட்டுமே நாங்கள் இருக்கிறோம்.ஆனால் தமிழீழத்தில் செயலில் காட்டியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.

“ஆரியத்தால் உட்புகுந்த கூரிய இழிவுகள்
குலை தெறிக்க ஓடின.சாதியம் மறைந்தது.
உயர்ந்தவர், தாழ்ந்தவர் பேதங்கள் ஒழிந்தது
தமிழர் மட்டும் தனித்து நின்றனர்.
மதங்கள் ஆண்ட மனங்கள் அழிந்தன
மனிதம் பூண்ட சிந்தைகள் நிறைந்தன.”

இதன் பின் போர் ஏற்படுகிறது.சிங்கள காடையர்கள் தமிழர் தேசத்தில் கால் பதிக்கிறார்கள்.மக்கள் முழுவதும் பின்வாங்கி இடம்பெயர்வை தாங்கிக் கொள்கிறார்கள்.இதனை முழுமையாக நான் இங்கு பதிவு செய்யவில்லை.இந்தக் காவியத்தை வாசிக்ககூடிய வாசகர்கள் இக்கதை நடைபெற்ற காலகட்டத்தை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் இக்காவியத்தில் வரக்கூடிய சேது, செல்வி காதல் என்ன ஆனது என்பதை என்னால் முழுமையாக சொல்ல முடியாது.காரணம் இக்காவியத்தில் ஏதும் சொல்லாமலே முற்றுப் பெறுகிறது.இது இரண்டாவது தொகுதியாக தொடர வேண்டும் என்பதே எமது அவா.

இக்காவியமானது வெறு காதலை உள்ளடக்கியதாக மட்டும் நகரவில்லை.மாறாக விடுதலைப் போராட்டத்துடன் சேர்ந்து விடுதலைப் புலிகளையும்,தமிழீழ மக்களின் வலிகளையும் இணைத்தே கதை நகருகிறது.இது உண்மையில் தமிழ் தேசிய இனங்களை சேர்ந்த மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய படைப்பு.

ஒரு கதையை எழுதும் போது வாசகன் கதாப்பாத்திரத்தை உள்வாங்கி தானாக அக்கதாபாத்திரத்தை வரித்துக் கொள்வது என்பது வாசகனை மட்டும் பொறுத்தல்ல.மாறாக அது எழுத்தாளார் கையிலும் இருக்கிறது.அப்பணியை வல்வை சகாறா மிகச்சிறப்பாக செய்துள்ளார்.இக்கதையில் நானே சேதுவாக உணர்ந்தேன்.நானே செல்வியாக உணர்ந்தேன்.இப்படைப்பை முழுவதும் வாசித்தப் பின் என்னுள் ஒரு குயில் கூவும்
குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

குரலெடுத்தது அக்குயில்
இசைதொடுத்தது அக்குயில்
கண்மூடி ரசித்து
காதல் தேன் மட்டும் பாய்ச்சவில்லை-அக்
கானகத்துக் குயிலின் குரல்

சோகத்தை உள்ளிழுத்து
வெப்பத்தை வெளியேற்றுகிறது
சோக கீதம் மனதைப் பிளக்கிறது
விடுதலை நெருப்பு பற்றி
வீச்சோடு எரிகிறது

இரைதேடி பசியாறி
இன்புற்று மகிழ்வாய்
இருக்க வேண்டிய
இக்குயிலுக்கு என்ன ஆனது?

வேலியில்லா வானில் பறந்து
வேதனைகள் ஏதுமில்லா
சுதந்திரமான இக்குயிலானது
எவர் துன்பத்திற்காய்
எவர் விடுதலைக்காய்
இப்படி விடுதலைப்பாடல் பாடுகிறது?

வித்தியாசமான குயிலே
சற்றே காரணத்தைச் சொல் என்றதும்
சற்றும் தயக்கமின்றி
தெளிவாய் சொல்கிறது அக்குயில்
அடிமைப்பட்ட தமிழர்தேசத்தில்
நான் பிறந்தேனென்று

நன்றி
வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்
29-10-2014

 

10734113_783742038354036_762137282860883

 

மூலம் :- https://www.facebook.com/permalink.php?story_fbid=783742295020677&id=100001547401457&substory_index=0

Edited by வல்வை சகாறா
 • Like 4

Share this post


Link to post
Share on other sites

அண்மையில் சென்னையிலும் கனடாவிலும் வெளியிடப்பட்ட என்னுடைய நூல்களான "வேங்கையன் பூங்கொடி" மற்றும் "காவியத்தூது" ஆகிய இரு நூல்களையும் தற்சமயம் சென்னையில் இரு விற்பனை நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

 

10620143_10152571678781551_822770976934710708619_10152571679121551_7778063824264

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள்.

ஏம்மா.., 'டப்பு' செலுத்தி தரவிறக்கம் செய்யும் இணையப் பதிப்பு என ஒன்றும் இல்லையா? :o

(கவிதைகளில் ஆர்வம் இல்லாவிட்டாலும், நம்ம யாழ் உறவாச்சே! என்ற வகையில் கேட்டேன்) :)

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள்.

ஏம்மா.., 'டப்பு' செலுத்தி தரவிறக்கம் செய்யும் இணையப் பதிப்பு என ஒன்றும் இல்லையா? :o

(கவிதைகளில் ஆர்வம் இல்லாவிட்டாலும், நம்ம யாழ் உறவாச்சே! என்ற வகையில் கேட்டேன்) :)

 

ராசவன்னியன் நானும் இதுபற்றி சிந்தித்தேன் எதிர்வரும் நாட்களில் சற்று ஓய்வுகள் கிடைக்கும் நாட்களில் இதனை செய்ய எண்ணியிருக்கிறேன்.... பார்க்கலாம்

Share this post


Link to post
Share on other sites

தமிழகத்தில் இருக்கும் அன்புத்தம்பி கனல் மைந்தன், 

சென்னையில் எனது நூல் வெளியீட்டின் இறுதிக்கணங்களில் பல பொது வேலைகளின் மத்தியிலும் பிடிவாதமாக எனது நூல் வெளியீட்டுக்கு சமூகம் தரவேண்டும் என்று வந்து கலந்து கொண்டு சிறப்பளித்ததை என்னால் மறக்கமுடியாது. தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினன் மனோதத்துவ வைத்தியகல்வியின் படடதாரி பார்வைக்கு சுமாராகத் தெரியும் ஆழமானவன். சில நிமிடங்களே அவனுடன் பேசும் சந்தர்ப்பம் கிட்டியது இச்சில நிமிடங்களிற்குள்ளாகவே பல விடயங்களை பகிர்ந்து மறக்க முடியாதவனாக மனதில் நிலைத்து நிற்கும் சகோதரன் என்னுடைய நூல்கள் பற்றிய அவனுடைய பார்வையை முகநூலில் பதிவிட்டுள்ளான் அப்பதிவு உங்களுடனும் பேசட்டும்......

 

 

 

 

அன்புக்கும் மதிப்புக்குரிய அக்காவுக்கு
புத்தகம் பேசுகிறது ===வேங்கையின் -பூங்கொடி & காவியத் தூது நூல் விமர்ச்சன மடல்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(வரிகள் நீளமானதுதான் நம் இன வரலாறுபோல பொறுமையாக படியுங்கள் )

அன்புத்தம்பி கனல்மைந்தனுக்கு என்றும் அன்புடன் --வல்வை சகாறா என்று எழுதி 2 நுல்களை கொடுத்துவிட்டு போனீர்கள், அந்நூலின் ஒவ்வொரு பக்கத்தை திருப்பும்போதும் -என்கன்னதில் அறை விழுகிறது, சிலநேரம் வெட்கி தலைகுனிகிறேன், சிலநேரம் மௌனித்து போகிறேன் இருப்பினும் முயன்று எழுதுகிறேன் வாழ்த்து சொல்ல அல்ல, ஒருநாள் விடியும் என்ற நம்பிக்கையில். உங்கள் படைப்பு உலகெங்கும் மனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ள மனிதனுக்கு மட்டுமல்ல யாவருக்கும் நம்பிக்கையும், விழிப்பும் , வெளிச்சத்தையூட்டும் உத்தியாக பார்கிறேன்.

உடைக்கப்பட்ட ஒவ்வொரு கண்ணாடி துண்டுகளும் தனித்து ஒளிப்பதுபோல், சிங்களவன் சிதைக்க சிதைக்க, எம் மக்கள் எழுந்து கொண்டே இருக்கிறார்கள் இருப்பினும் எம்வீரர்கள் மட்டுமல்ல எம் தாய், உடன்பிறப்புகள், காதல் இப்படி எத்தனை எத்தனை தாயக விடுதலைக்காக விட்டு கொடுத்திருப்பார்கள் -வாசிக்க வாசிக்க அவல காட்சியாகி சாட்சியம் சொல்கிறது இந்த நூல்கள்.

"இவர்கள் வாழ்ந்தது என்ன
வசந்தமாளிகையா ? இல்லை... இல்லை
பாதிவாழ்க்கை -பதுங்கு குழிக்குள்ளே தான் கழிந்தது"
இது ஒரு நாள் அல்ல அரை நூற்றாண்டு --இப்போதும் அதே அவலநிலைதான் நிச்சயமாக இந்நிலை நீடிக்காமல் துண்டாட படவேண்டும்.

எம்மக்கள் கடவுளை கூப்பிடுகிறார்கள் என்ன செய்வது ? -(இப்படி பதிவு செய்கிறீர்கள்) --அவர்கள் பார்ப்பன ஆரிய -பவுத்தவ (எல்லா கடவுள் உட்பட) கடவுள்கள் இருக்குமென நம்பினார்கள், எல்லாம் பொய்யாய் போனது. இனபடுகொலையில் மாண்டுபோன எம்மக்களை -ஈழ தாய்மட்டும் தூக்கி எறியாமல் விதையாக்கி அடைகாத்து வைத்திருக்கிறாள் நாளை எழுவார்கள் என்ற நம்பிக்கையில்.

"ஈழ மண்ணில்
எப்போதும் இருட்டே இல்லை
எப்பவேனாலும் -எரிகணைகள் வெடிக்கும்
எம்மக்கள் கண்மூடி தூங்கியிருக்க வாய்ப்பில்லை"

அக்கா நினைவில் கொள்க காலம் மாற்றத்திற்குரியது எரிகணை வெடிக்காமல் கூட ஒருநாள் ஈழம் விடியும், இன்று பாஸ்பரஸ் நச்சு காற்றை அடக்குமுறையால் வன்மத்தால் நுகர்ந்து மாண்டார்கள், நாளை விடுதலை உயிர் காற்றை சுவாசித்துக்கொண்டே எம் தலைமுறை பிறக்கும்.

"காதலுக்கு மறுப்பில்லை
காலம் வாய்ப்பளிக்கவில்லை
காதலும் வீரமும் தமிழர் உடமை” –
உண்மைதான் அக்கா இப்படி அழுத்தமாக சொல்ல மட்டும் அல்ல நெறிக்கொண்டு இப்படி வாழ்ந்து காட்டவும் எம்மினத்திற்கு நிகர் யார்? இருப்பினும் விடுதலைமீது காதல் கொண்ட புலிவீரனுக்கு தான் தெரியும் எம்மினத்தின் அடிமைத்தனத்தின் கொடுமை.

அவர்கள் ---
அந்த அழகிய வன்னித்தீவில்
வண்ணத்து பூச்சிகள் பார்க்க வாய்ப்பிருந்தும்
எதிரியின் வான்தாக்குதலை
நோக்கம் மட்டுமே ......"

என்ன செய்வது ? அக்கா ....
வான் படை கொண்ட புலிக்கு
வானம் அவன் வசமாகிவிட்டது நிரந்திரமாக.

தேசக்கவியை மறக்காமல் நேசத்துடன் மதிப்புடன் பதிவு செய்து அக்கா உயர்ந்து நிற்கின்றாள் நிச்சயமாக அந்த மகா கவிக்கு நாளைய தமிழ் ஈழ அரசு பல்கலைகழகம் நிறுவும்.

"அடுத்த தலைமுறையாவது
தாய்மண்ணில் ஒரு நாள் அமைதியாக துங்கமுடியுமா ?"
இந்த கனத்த ஏக்கம் மனதை ரணமாக்கிவிடுகிறது,
எம் உறவுகள் கட்டாயத்தில் புலம்பெயர்ந்தாலும், ஈழ தாய் எப்படி இருப்பாளோ, தனிமை சிறையில் எப்படி துடிப்பாளோ உங்கள் பதிவில் -- ஆழ்மனத்தின் ஓசை படிக்கும் போது தாலாட்டு கேக்கிறது.

"ஆழ்கடல் நாயகனின் அன்னையே என் அன்னையே
அமைதியாய் தூங்கம்மா –இது ஆனந்த தூக்கமம்மா"
இப்படி தன்வரிகளால் தாலாட்டி தாய்க்கும் தாயாக தனித்தன்மையாக படைப்புக்கும் அப்பால் சாராசரி மனிசியாகிவி டுகிறார் வல்வை சகாறா.

எம்மினத்தின் அத்தனை சிதைவுகளையும் அப்படியே அடைகாத்து மனிதம் இழந்த, மானம்கெட்ட உலகிற்கு சாட்சியங்களாய் தன்படைப்புகளை பொதுவுடைமையாக்கியிருக்கிறாள் அக்கா "காயாத பாலைவனம்" -வல்வை சகாறா அவர்கள்.

தனக்கான முகவரியை தேடாமல் தன்னினத்தின் அவலமே இவரின் அழியா முகவரியாகிவிட்டது, அந்த முகவரிக்கு --கடிதம் எழுதினால் யார் படிப்பார்? அந்த ஈழ சுடுகாட்டில்.

இருப்பினும் விதைக்கப்பட்டவர்கள் எழுவார்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். அடக்கமுடியாத கோபம் யார்மீது காட்டுவது - அறிவாயுதம் ஏந்தி நீதி கேட்டு தெருதெருவாய் ஓடுகிறோம் -இதயமில்லா இந்திய ஏகதிபத்தியத்தினிடம் என்னகிடைக்கும் எங்களை சிறையில் அடைப்பதை தவிர.

காவியத் தூது , வேங்கையின் பூங்கொடி ---ஈழமண்ணின் இனபடுகொலையின் அவலங்களை சொல்வதொடு நின்றுவிடாமல் மீண்டும் எழு ....எழு ..என்கிறது, அது வாழ்வு சிதைந்துபோன சூழலிலும் போராட்ட உத்தியை காலத்துக்கு ஏற்றாற்போல் அறிவாயுதம் ஏந்தி நம்முடன் நிற்கிறது என்பதை காட்டுகிறது இப்படி......

"தொப்பிள்கொடி உறவு துணைவந்து நிற்கிறது
தொய்வின்றி எம் பயணம் விடுதலைக்காய் தொடரும்."

இதை தாய் தமிழன் நாம் கட்டாயம் கடமையுணர்ந்து களத்தில் நிற்கவேண்டும்.

நிச்சயமாக ஒருநாள்
ஐ.நா. அம்மணமாக நிற்கும்
தன்மானம் காக்க ஆடைகேட்டும்
அந்நாளில் வட-கிழக்கு மட்டுமல்ல
தெற்கின் மாந்தர்களும்
இந்த கொடியவன் வேண்டாமென - தூக்கி எறிவார்கள்
அந்த நாள் இருண்டுபோன -உலக மானிடம்
ஈழ வெளிச்சத்தில் விழி திறக்கும்
எமக்கு துரோகிகளாய் நின்றவர்கள்
அனாதையாக நிற்பார்கள்
அவனையும் சமத்துவமாக ஏற்று
உலகம் போற்றும் .........
ஈழம் மீண்டும் புத்துயிர் பெரும்.
எம் உறவுகளே ஈழம் மீட்க வருக ---!.
---------------------------------------------------------------------------------------------------------
அக்கா பாசமிகு வல்வை சகாறா
கண்ணீiராயிருந்தாலும்
அதை சுடுநீராக்கி
சிந்தி .....சிந்தி..... தள்ளு
எதிரிகள் வெந்து சாகுட்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------
அய்யா காசியானந்தனின் படைப்புகள் அடுத்து 2 வது நான் வாசித்த ஈழத்து நூல்கள் உங்களுடையதுதான். இந்த புத்தகம் ஈரமுள்ள மனிதன் மட்டுமல்ல யாவரும் படித்து அந்த மக்களுக்காக நீதி கேக்க துணை நிற்கலாம். முள்ளிவாய்க்கால் முடிவல்ல தொடரட்டும் உங்கள் படைப்பு பயணம் -ஈழம் எழ.
சிதையுண்டு விதையாய்யான அனைவருக்கும் வீரவணக்கம்.

நன்றி
தோழமையுடன் -கனல்மைந்தன் 8/11/14

Edited by வல்வை சகாறா
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இன்றைய ஈழத்து படைப்புலகில் தனக்கென ஒரு பிரத்தியேக தன்மையை உருவாக்கி எழுதிவரும் இளைய எழுத்தாளன் அஞ்சரன்.,

இவன் மிகத்துடுக்கான சகோதரன் எப்போது எங்கே எதை எழுதுவான் என்று யாருக்கும் தெரியாது வேகம், துடுக்கு, குறும்பு இப்படியான கலவைதான் இவன் இலகுதமிழ் கவிதையை இவனிடம் கற்கவேண்டும். அண்மைக்கால முகநூல் பதிவுகளிலும் யாழ் இணைய வெளியிலும் நான் தேடி வாசிக்கும் இடக்கு முடக்கான பதிவுகளுக்குச் சொந்தக்காரன். இலகுவான இயல்பான பேச்சுவழக்கில் இவன் தன்பாட்டில் எதையாவது எழுதித்தள்ளிவிட்டுப் போய்விடுவான்.... ஒற்றை வரி இரட்டை வரிகளாக சில சமயம் நறுக்கென்றும் சில சமயம் விறுக்கென்றும் பல சமயம் சிரித்தோய முடியாமலும் இவன் பாணி...சரி இவன் நம்ம வேங்கையன் பூங்கொடியை வாசித்து ஒரு வழி பண்ணிவிட்டதாக அறிந்தபோது உவகையாக இருந்தது சரி இவன் அந்த நூலை எவ்வளவு தூரம் உணர்வால் இலயித்து படித்திருக்கிறான் என்று அறிய விரும்பி உணர்ந்ததை எழுதும்படி கேட்டேன் தம்பி எழுதியிருக்கிறான் உங்களுக்குக் காட்டாமலா....

 

 

 

1094687_4600128621068_1469634348_o.jpg

 

 

கடந்த பகலில்
புதிதாய் முளைத்த இரவு சூரியன்கள்
வேவு புலிகளை ஏமாற்றி சிரித்தன
தற்காப்பு எடுக்க முடியா இக்கட்டு நிலை
''விளக்கை அடியடா''
என்னும் ஆணை எழமுன்
வீரியத்தோடு சுடுகலன் சுழன்றன ..

('வேங்கையன் பூங்கொடி' கவிதை தொகுப்பில் இருந்து.)

கவிதையின் சொல்களை இலக்கிய நயத்தை எல்லாம் கொட்டி ஒரு கவிதை படிக்க முடியாதவன் நான் ஏனெனில் எனக்கு தமிழ் எத்தினை எழுத்து என்பதுகூட சிலவேளை சந்தேகமே .

ஒரு பாமர மனிதனின் சுயத்தில் இருந்து அவன் பார்க்கும் அயலட்டம் போல. ஓடும் மாட்டின் பின்னால் துள்ளி ஓடும் கன்றுபோல் நான் பல எழுத்துக்கள் கவிதைகளை படிப்பது உண்டு ..

எனக்கு விளங்கும் தமிழ் என் சிறிய அறிவில் 'வேங்கையன் பூங்கொடி' இருப்பது மகிழ்வை கொடுத்தது ..

வல்வை சகாறா அக்காவின் இந்த கவிதை தொகுதி தன் வழி பிடித்து ஓடும் காட்டாற்று வெள்ளம் போல் என்னை அள்ளி சென்றது மேடு பள்ளம் எல்லாம் ..
ஒரு போரியல் வாழ்வில் இருத்து நகரும் ஒவ்வெரு மனிதனிடமும் அவன் கடந்த வாழ்வியல் என்ன என்று சொல்லி போகும் கவிதைகள் முழுமையா தன்னை விடுதலைக்கு அர்ப்பணித்த ஒருவராலே எழுத முடியும் எனலாம் ..

மாற்றுக்கள் ஏதும் இன்றி சகோதரி சகாறா கொண்டுசொல்லும் சொல்நடை என் கைபிடித்து அழைத்துபோகிறது அடுத்த பக்கங்களுக்கு என்றால் மிகையாகாது .

உதாரணமா நான் மேலே இட்டு இருக்கும் கவிதை வரிகள் ஒரு பானையின் ஒரு சோறு மட்டுமே வேவு போராளிகளின் அந்த நொடி செயலை இவ்வளவு அழகா கண்களில் கொண்டுவர அவர் நேசித்த மண் பற்றே காரணம் போல் .

சாதாரணமானவன் கடந்து வந்த நடந்து வந்த பாதையை கூட்டி அள்ளி ஒரு தொட்டியில் இட்டு அழகு பார்த்த சகோதரி வல்வை சகாறாவை பாராட்டி இன்னும் படைப்புக்களை அதீத வீரியத்துடன் படைக்க வேண்டி நிற்கிறேன் இளையவன் ஆகிய நான் ..

கவிதையின் ஆழத்தில் மூழ்கையில் முத்துக்கள் நடுவில் சில கற்களும் வருவது போல் சில சொல் நயங்கள் என்னை மூச்சடைக்க வைத்தது நான் இன்னும் வளரனோம் என்று சிலவேளை சொல்லி போகுது என்னமோ ..

''சொல்லுக்குள் அடங்காத சங்கடம் நெளிந்தது
செல்விக்கு தன்னிலை சஞ்சலம் மிகுந்தது'' .

இங்கு என் நிலையும் அதுவே சகோதரி சகாறா ஏனெனில் நான் எல்லாம் உங்கள் நூல் பற்றி எழுதுவதால் .
மேலும் உங்கள் படைப்புக்கள் பேசட்டும் உணர்வுகளை என்று வாழ்த்துகிறேன்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

முகநூல் மூலமாக கிடைத்த நண்பன் பிரான்சில் நண்பர்களிடையே பகிரப்பட்ட நூல்களைப்பற்றிய விமர்சனம் அறிந்து நூல்களை வைத்திருக்கும் நண்பனிடம் நேற்று அறிந்தான் உடனேயே அதனை பெற்று வாசித்து முடித்து அதனைப்பற்றிய தன்னுடைய பார்வையை இட்டுள்ள இவனும் ஒரு கவிஞன் சின்னச் சின்னவரிகளில் அவ்வப்போது முகநூல் வெளிகளில் தன்னுடைய எண்ணங்களை விதைத்திருக்கிறான் நான் அதிகமாக பரிச்சயப்படாததால் அவனுடையவற்றை வாசித்துவிட்டு மெல்லிய புன்னகையுடன் தொடர்ந்து மற்றவர்களினதை வாசிக்க போய்விடுவேன். இன்று என்னுடைய கவிதைத் தொகுதியான " காவியத்தூது " நூலை வாசித்துவிட்டு அவன் இட்டிருக்கும் பதிவு அவனுடைய வாசிப்பின் ஆர்வத்தினையும், உடனே பதிவிடும் துரிதத்தினையும் புலப்படுத்துகிறது. ஒரு படைப்பாளிக்கு அகம் மகிழ்வது என்பது அப்படைப்பாளியின் ஆக்கங்களை நன்றோ தீதோ மற்றவர்களால் அவற்றை அறியும்போதுதான்.

 

 

 

நன்றி பார்தீபன் பத்மநாதன்.

 

400225_4433676754587_696835384_n.jpg?oh=

 

 

 

10384761_10204239666446378_3782224825377

 

ஒரு இனத்தின் அழிவின் எச்சங்கள் ஒருபோதும் தம் இனத்தின் அழிவின் பாதையை மறந்ததில்லை.அதன் வடுக்களில் வலியை சுமந்துகொண்டே பயணிக்கும் ஓர் அடையாளத்தைகாட்டும் கவித்தொகுப்பு இது.ஊருக்கும் புலத்திற்கும் இடையில் உருவாகும் ஏக்கங்கள் சமுதாயத்தின் மாற்றங்களின் மீதான கோபங்கள் இதில் கொட்டிக்கிடக்கின்றது.தூரத்தில் இருந்து எழுதியதாலோ என்னவோ ஊர்வாசம் என்பார்வைக்குச் சற்றுக் கவித்துவமாகவே இருந்தது.
அருமையான பதிவுத் தொகுப்பு

Edited by வல்வை சகாறா

Share this post


Link to post
Share on other sites

சென்னையில் (09 - 01-2015)இன்று நடைபெறும் புத்தகத்திருவிழாக் கண்காட்சியில் என்னுடைய நூல்களான "வேங்கையன் பூங்கொடி" மற்றும் "காவியத்தூது " ஆகிய இரு நூல்களும் கிடைக்கும் கடை இலக்கம் 473

10828108_1580353248866068_35405816536553

Edited by வல்வை சகாறா

Share this post


Link to post
Share on other sites

முல்லை அமுதன் அவர்களின் "காற்றுவெளி" எனும் இணையவெளி இலக்கிய 2015 மாசி மாத இதழில் முகநூல் தோழி கவிதாயினி வி. அல்விற் என்னுடைய "வேங்கையன் பூங்கொடி" காப்பியத்தைப்பற்றி தன் கருத்தை வெளியிட்டுள்ளார் அவரின் பார்வையில் "வேங்கையன் பூங்கொடி" எப்படி உள்ளாள் என்பதை நீங்களும் வாசித்துப்பாருங்கள். அன்புத்தோழியின் கருத்தை இணையவெளியில் பகர்ந்து எங்கள் அனைவரையும் பார்க்க ஆவன செய்த முல்லை அமுதன் அவர்களுக்கும் "காற்று வெளி" இணையவெளி இதழிற்கும் மனமுவந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளும் கணத்தில் முகமறியாமல் முகநூல் மூலம் அறிமுகமாகிய அன்புத்தோழி கவிதாயினி அல்விற்றிற்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்

 

http://kaatruveli-ithazh.blogspot.co.uk/

 

10671353_887474151286040_766372970078236

 

"கவிதாயினி" வி. அல்விற்

 

10974538_10152785204731551_1034608162638

 

11021464_10152785204691551_4827852468152

Share this post


Link to post
Share on other sites

கனடா படைப்பிலக்கியத்துறையில் முன்னணியில் கவனத்திற்குரிய எழுத்தாளர்களாக இருப்பவர்களுள் திரு குரு அரவிந்தன் அவர்களும் ஒருவர். சிறுகதை, நாவல், நாடகம், திரைக்கதைவசனம் என்று விரிந்த எல்லைகளை கொண்டவை அவருடைய எழுத்துக்கள். கனடா , ஈழம் என்று குறுகாமல் தென்னிந்திய சஞ்சிகைகளிலும் தனது முத்திரைகளைப் பதித்திருப்பவர். இவருடைய எழுத்துக்கள் கண்டங்கள் கடந்தும் வெற்றிவாகைகள் சூடுபவை. அண்மையில் ரொரன்ரோ தமிழ் சங்கத்தினரால் சிறுகதைகள் பற்றிய ஆய்வுகளும், ஐயந்தெளிதலும் என்ற நிகழ்வுக்குச் சென்றிருந்த வேளையில் திரு குரு அரவிந்தனை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியிருந்தது. அவ்விடத்தில் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள என்வசம் என்னுடைய நூல்களான "வேங்கையன் பூங்கொடி" காவியத்தூது"   மாத்திரமே கைகொடுத்தன. அவ்வகையில் திரு குரு அரவிந்தனிடம் என்னுடைய நூல்களை கொடுத்தேன். அந்நூல்களை வாங்கிச் சென்றவர் எம்மைப்போன்றவர்களையும் கவனத்தில் எடுத்து அதனைப்பற்றிய தனது கருத்தை முன்வைத்து மதிப்பளித்துள்ளார். அவருக்கு மிகவும் நன்றி உரைக்க கடமைப்பட்டுள்ளேன். நன்றி அண்ணா.

 

 

நூல் விமர்சனம்

 

குரு அரவிந்தன்

kuruaravindan.jpg

வல்வை சகாறாவின்
1. வேங்கையன் பூங்கொடி
2. காவியத் தூது

வணக்கம்.

ரொறன்ரோ தமிழ் சங்கத்தின் ஆதரவில் 28-03-2015 அன்று நடந்த சிறுகதைப் பட்டறைக்குச் சென்றிருந்தேன். கனடிய தமிழ் சிறுகதைகளின் கருப்பொருட்கள் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றைத் தயாரித்து அங்கே வாசிக்கும்படி கேட்டிருந்தார்கள். மிகவும் கடினமான கட்டுரை என்றாலும் கனடிய இலக்கிய முயற்சிகளை ஆவணப்படுத்த வேண்டும் என்ற பெருவிருப்பின் காரணமாகவே இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டு முடிந்த அளவு தகவல்களைத் திரட்டிக் கொடுத்திருந்தேன். ஒரு சிறுகதை எழுதியவர்களே தங்களைச் சிறுகதை எழுத்தாளர் என்று சொல்லும் இலக்கிய உலகில் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாததாலும், சிறுகதையா அல்லது கட்டுரையா என்ற விவாதம் கனடாவில் தொடர்ந்து கொண்டிருந்ததாலும், ‘நான் வாசித்த கனடிய சிறுகதைகள’ என்று தலைப்பில் சிறு திருத்தம் செய்து கொண்டேன். பல இலக்கிய நண்பர்களும் ஆர்வலர்களும் வந்திருந்தனர். எழுத்தாளர் அ.முத்துலிங்கம், பேராசிரியர் பசுபதி, பேராசிரியர் அமுது யோசவ்வாஸ் சந்திரகாந்தன், வைத்திய கலாநிதி லம்போதரன், எழுத்தாளர் அகில், சின்னையா சிவநேசன், திருமதி. கனனேஸ்வரி நடராஜா, அனலை இராஜேந்திரம், இராஜலிங்கம், அருள் சுப்ரமணியம், அகணி சுரேஸ் போன்றவர்களை அப்போது அங்கே சந்தித்து உரையாட முடிந்தது. கட்டுரை சிறப்பாக, பாரபட்சம் அற்றதாக அமைந்ததாக வாழ்த்தினார்கள். பட்டறை முடிவுற்றபின் சகோதரி வல்வை சகாறா அவர்கள் அருகே வந்து ‘அரவிந்தனண்ணா இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்’ என்று அழகான அட்டைப் படங்களைக் கொண்ட இரண்டு புத்தகங்களை என்னிடம் கொடுத்தார்.

Valvai-2015.JPG

உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கூட நான் பார்க்கவில்லை, ஆனாலும் அந்த அன்பான வேண்டுகோளைத் தட்டமுடியாமல் ஏற்றுக் கொண்டேன்.
வளர்ந்து வரும் இலக்கிய ஆர்வலர்களைப், படைப்பாளிகளைப் பாராட்ட நான் என்றும் பின் நின்றதில்லை. எனவே தொழில் விடையமாகப் பயணம் மேற்கொண்ட போது இந்த இரண்டு புத்தகங்களையும் பயணத்தின்போது வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. ‘காவியத்தூது,(கவிதை)’ ‘வேங்கையன் பூங்கொடி, (காப்பியம்)’ ஆகிய இரண்டு நூல்களுமே கவிதைத் தொகுப்புகளாக இருந்தன. ஊரையும் உறவுகளையும் பிரிந்த ஏக்கமும் துயரமும் கவிதைகளில் பளிச்சென்று தெரிகின்றது. மனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி சிதைகளை மூட்டிய வரலாறு கவிதையில் தெறிக்கின்றது. அழுவதற்கும் மறுக்கப்பட்டவர்கள் என்ற விரக்தியின் உச்சத்தைச் சகோதரி சகாறா வார்த்தைகளால் கொட்டியிருக்கின்றார். ‘விழுகை என்பது விதிப்படியும் எழுகை என்பது வினைப்படியும் நிகழ்ந்தே ஆகவேண்டும்’ என்று அவர் ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார். விழுவது ஒன்றும் தோல்வி அல்ல, விழுந்தபின் எழும்பாது இருப்பதுதான் தோல்வி என்பதைச் சகோதரி சகாறா புரிந்து கொண்டிருப்பார் என நினைக்கின்றேன்.

 


வேங்கையன் பூங்கொடி, காவியத்தூது ஆகிய இரண்டு நூல்களும் 2014 ஆண்டு செப்டெம்பர் மாதம் பானு வெளியீடாக வெளிவந்திருக்கின்றன. சென்னையில் உள்ள அம்மன் பிரிண்டிங் ஒர்க்ஸ் என்ற அச்சகத்தினர் இந்த நூல்களை அச்சேற்றி இருக்கின்றார்கள். காவியத்தூது என்ற நூலின் அட்டைப்படத்திற்கு ஓவியர் புகழேந்தி ஓவியம் வரைந்திருக்கின்றார்.

பெயரில் சகாராவைக் கொண்டதாலோ என்னவே ‘பாலைவனக் குயிலே நீ சோலைவனம் சேர்ந்ததனால் மாலைகளெல்லாம் உந்தன் தோளில்’ என்று காவலூர் கண்மணி பாராட்டியிருந்தார். ‘ஆண்டுக்கொருமுறை வந்து உங்களை ஏக்கக் கூண்டுக்குள் அடைக்க இனியும் எம்மால் முடியாது. உங்கள் தாகம் தீர்க்காது ஊமைக் காயங்களுடன் உமைவிட்டுச் செல்வது இதுவே இறுதியாகட்டும்.’ எனும் கவிதையை மீண்டும் மீண்டும் கண்ணீருடன் சகோதரி சகாறா வாசித்ததை நிழலி என்ற வாசகர் குறிப்பிட்டிருந்தது மனதைத் தொட்டது. இன்னுமொரு வாசகர் குறிப்பிட்டதுபோல, ஆர்ப்பரித்த சுமைசுமந்த காலமதை வென்ற நொந்த கணங்களின் பிரதிபலிப்புத்தான் இந்த நூலின் பதிப்பு என்பதால், சகோதரி சகாறாவின் நீண்ட நாளாசை இன்று நிறைவேறி இருக்கின்றது. வாசகர்களே குறுகிய வட்டத்திற்குள் நின்று பிசைந்த மாவையே பிசைந்து கொண்டிராமல், உங்கள் தேடல்களை விரிவு படுத்திக் கொள்ளுங்கள். வல்வை சகாறா போன்ற படைப்பாளிகளைத் தேடிப் பாராட்டி ஊக்குவிப்பதால் எங்கள் தமிழ் இலக்கியம் வளர்ச்சி அடையப் பெரிதும் உதவியவர்களாக இருப்பீர்கள்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இன்றுடன் கனடாவிலும் நூல் வெளியிட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. மீளப்பார்க்க முடிகிறதே தவிர உவகை அடைய முடியவில்லை. வாசிப்பு என்பது அருகிவிட்ட நிலையில் எழுதும் ஆக்கத்திறன் அடிபட்டுப்போவது யதார்த்தம் அதற்கு நானும் விதிவிலக்கல்ல. பரபரப்பும், முறைகெட்ட விளம்பரங்களும் தாறுமாறான விமர்சனங்களும் இருந்திருந்தால் உச்சத்தை தொடும் வாய்ப்புகள் அதிகம். அமைதியாக ஊடக பிரபலங்களுக்கு முதுகு சொறியாமல் பண்டிதமணிகளுக்கு அரங்கம் தராமல் நூல் வெளியிட்டால் படைப்பாளியின் வீட்டில் நூல்கள் விடைபெறாத விருந்தாளியாக இருந்துவிடும் என்பது அனுபவஞானம். இதுவரை  என்னுடைய நூல்களை என் நூல்வெளியீடு தாண்டி என்கைகளால் பெற்றதை விட எத்'தனைபேர் வாங்கி வாசித்தார்கள் என்றால் வெறும் பூச்சியமே. அட அதை விடுவோம்.... நூல்களைப் பெற்றவர்கள்தன்னும் அதனை வாசித்து முடித்தார்களா என்றால் தமிழகம் தவிர்ந்து புலம் பெயர்ந்த தேசத்தில் உள்ள எவரும் இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை என்பது கவலை அளிப்பதை என்னால் மறுக்க முடியாது..... நேரமின்மை ஒரு காரணமாகவும் என் எழுத்தை புரிதல் கடினமாக உள்ளது ஒரு காரணமாகவும் இருக்கிறது. மாற்றுக்கருத்தாளர்கள் என பீற்றிக் கொள்வோர் இது புலிகள் சார்பான எழுத்து என்று இன்றைய இலக்கியத்தின்  நடைமுறைப்பக்கத்தை வாசிக்காமலே விமர்சிக்கும் பாங்கு என்பதாக பல்வேறு காரணங்கள் பலவழிகளாலும் என் காதுகளில் நுழையாமல் இல்லை. கவிப்பேரரசு தண்ணீர் தேசத்தையும் , கருவாச்சி காவியத்தையும் எழுதினால் பெருமையோடு கிலாகிக்கும் ஈழத்து உறவுகள் வேங்கையன் பூங்கொடி காப்பியத்தை ஏறெடுத்துப் பார்த்து வாசிக்க மறுப்பதை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை. இந்த மனவருத்தம் என்னுடைய நூலிக்கான ஆதரவு ஈழத்து உறவுகளிடம் கிடைக்கவில்லை என்பதற்காக மட்டுமல்ல என் போன்ற ஆர்வம் உள்ளவர்கள் இத்தகைய வகையில் எதிர்காலத்தில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும். கனடாவில் மட்டுமே நூல் வெளியீடுகளுக்கு சென்று பழக்கமில்லாத பலரையும் உற்சாகப்படுத்தியிருந்தேன் அதில் ஒருவரேனும் என்னுடைய நூல் வெளியீட்டுக்கோ அல்லது என்னுடைய நூல்களை பெற்றோ எனக்கு ஆதரவைத் தரவில்லை என்பது மிகவும் வேதனையான விடயம். ஆக நாங்கள் எங்களை வளர்க்கவேண்டும் என்பது சொல்லுப்பல்லக்கு தம்பி கால்நடை

 

சரி  மற்றவர்களை விடுவோம் ஏம்பா யாழ்நண்பர்களே நீங்கள் கூடவா வாசித்து முடிக்கவில்லை.........தாங்காது மக்களே அழுதிடுவேன்.560669001.gif560669001.gif560669001.gif

 

 

 

10522637_10152478761276551_1732882539569

10653766_10152484147606551_2360040160445

 

 

 

 

 

10688226_10152485074656551_2855827959604

 

10582920_10152485075541551_6950952506349

Edited by வல்வை சகாறா

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பிய மத குருமார்கள், தொற்று நோயைப் பரப்பியதாக தமிழகம் முழுவதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அப்படி இதுவரை 129 பேர் வரை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் இன்று புதிதாக 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்திருக்கிறது. வீட்டுக் கண்காணிப்பில் 59,918 பேரும், அரசின் கண்காணிப்பில் 213 பேரும் இருப்பதாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.   மேலும், இதுவரை 7,267 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை அனுப்பப்பட்டதில் 485 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல், தமிழகத்தில் கொரோனாவில் பாதிப்பில் இருந்து 27 பேர் குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தநிலையில், டெல்லி மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 1,480 பேர் கலந்துகொண்டதாகவும் அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இதில், 554 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் மீதமுள்ள 926 பேருக்கு தொற்று இல்லை என்பதும் சோதனை மூலம் உறுதியாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதேபோல், இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 188 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பி மத பிரசாரத்தில் ஈடுபட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த குருமார்கள் மீது தமிழகம் முழுவதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வருகிறார்கள். சுற்றுலா விசாவில் வந்து மத பிரசாரத்தில் ஈடுபட்டது, 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அதை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டது மற்றும் அவர்களில் சிலர் தங்களுக்குக் கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரிந்தும் பிரசாரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக, ஈரோட்டில் தாய்லாந்தைச் சேர்ந்த மதகுருமார்கள் 6 பேர், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 4 பெண்கள் உள்பட 8 பேர், சேலம் மாவட்டம் கிச்சிபாளையத்தில் 11 இந்தோனேசிய மதகுருமார்கள் உள்ளிட்ட 16 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதேபோல், மதுரை மலைப்பட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த 8 பேர் உள்ளிட்ட 10 பேர் மீதும், மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் பிரான்ஸ், கேமரூன், காங்கோ மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மத குருமார்கள் 12 பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. திண்டுக்கல்லில் விசாகாலம் முடிந்தும் தங்கியிருந்த 11 மதகுருமார்கள் கைது செய்யப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேர், குஜராத்தைச் சேர்ந்த 29 பேர் என 40க்கும் மேற்பட்டோர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில், தமிழகம் முழுவதும் 129 பேர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. அவர்கள் பலர் சிகிச்சையில் இருப்பதால், சிகிச்சை முடிந்தபிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில். தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்தவர்கள் கைது செய்யப்படவில்லை என்றும் அரசுக்கு ஒத்துழைப்பு தராமல் பதுங்கி இருந்தவர்களை மட்டுமே கைது செய்துள்ளதாகவும் போலீஸார் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.   https://www.vikatan.com/news/tamilnadu/tn-police-books-129-related-delhi-religious-event?artfrm=v3    
  • இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இதை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஏனையவர்கள் குறித்த 80 பேருடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி இவ்வாறு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 19ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 19ம் திகதி வரையில் நாட்டில் மக்கள் நடமாட்டம் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், 30 நாட்களில் நோய் அறிகுறிகளை கண்டறிய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19ம் திகதி வரையில் அரசாங்கம் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/140909?ref=imp-news
  • உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்! முடிந்தால் உங்கள் காணியின் ஒரு பகுதியை வலைகளால் அடைத்து அதனுள் பயிர்களை பயிரிடுவது கூடிய பலனைத் தரும். அணில், கோழி, முதலிய ஏனைய விலங்கினங்களிடமிருந்து பயிர்களை பாதுகாக்கலாம். சிறிது செலவானாலும் துருப்பிடிக்காத கம்பிவலைகளை அமைப்பது பயனுள்ளது. நூல் வலை எனின் அணில், எலி அவற்றை அறுத்துவிடும். வலைகளை சுற்றிவரவும் மேலும் அமைத்தல் சிறப்பானது. சிறுபகுதியில் ஆரம்பித்து பிறகு விரிவு படுத்தலாம். வீட்டு தோட்டங்களுக்கு இந்த முறை கூடிய பயனைத் தரும். தொடர்ச்சியாக செய்தால் கணிசமான இலாபம் கிடைக்கும் (செலவு குறையும்).
  • சந்தையில் எப்போதும் தேவை இருந்துகொண்டே இருக்கும் பழங்களில் முக்கியமானது வாழைப்பழம். இதில், பல ரகங்கள் இருந்தாலும் ரஸ்தாளி, மொந்தன், கதலி, பூவன், நாடன் ஆகிய ரகங்கள்தான் அதிகமாக விற்பனையாகின்றன. அதனால், வாழை விவசாயிகள் பலரும் இந்த ரகங்களை விரும்பிச் சாகுபடி செய்துவருகிறார்கள். அந்தவகையில், கதலி, நேந்திரன், நாடன் வாழையைத் தென்னைக்கு ஊடுபயிராகப் பயிரிட்டு லாபம் ஈட்டிவருகிறார், கோயம்புத்தூர் மாவட்டம், வரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி.   வாழைத்தோட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கிறது ராமசாமி வாத்தியார் தோட்டம். அரசுத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்குப் பிறகு முழு நேர விவசாயியாக மாறிவிட்டார். 80 வயதிலும் தனது ஆறு ஏக்கர் பூமியில் நேந்திரன், கதலி, நாடன் வாழைகளையும், தென்னை, பாக்கு போன்றவற்றையும் பயிரிட்டுவருகிறார் ராமசாமி. தோட்டத்துக்குள் நடந்தபடியே ராமசாமியிடம் பேசினோம். “நாங்க பாரம்பர்யமா விவசாயக் குடும்பம். நான் படிச்சு முடிச்சு ஆசிரியர் வேலைக்குப் போயிட்டேன். வேலையில இருக்கும்போதே விவசாயம் பார்த்துக்கிட்டுத்தான் இருந்தேன். அப்போ ரசாயன விவசாயம்தான். வேலையிலிருந்து ஓய்வு கிடைச்ச பிறகு, முழு நேரமா விவசாயத்தைப் பார்த்துக்கிட்டிருந்தேன். அப்போ கிடைச்ச நேரங்கள்ல அரசு நடத்துற வேளாண் விழாக்கள்ல கலந்துகிட்டேன். அதுபோக, நம்மாழ்வார் ஐயாவோட பேச்சுகளைக் கேட்டேன்; அவரோட கட்டுரைகளைப் படிக்க ஆரம்பிச்சேன். அது மூலமாத்தான் மண்ணை எவ்வளவு பாழாக்கி வெச்சிருக்கோம்னு புரிஞ்சுது. அதனால ரசாயன உரங்களைத் தவிர்த்துட்டு இயற்கை விவசாயம் பக்கம் என்னோட கவனம் திரும்ப ஆரம்பிச்சுது. அதுக்குப் பிறகு, இயற்கை விவசாயக் கூட்டங்கள்ல கலந்துக்கிட்டு அதிகமா தெரிஞ்சுக்கிட்டேன். 2013-ம் வருஷம் முழுமையா இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். அப்போதிருந்து இப்போவரைக்கும் இயற்கை விவசாயம்தான். 2015-ம் வருஷம் சான்றளிப்புத்துறையில இருந்து இயற்கை விவசாயச் சான்றிதழ்கூட வாங்கிட்டேன். இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்ச பிறகுதான் ஒரு விஷயம் தெரிய ஆரம்பிச்சுது. இயற்கை தானாவே சரி பண்ணிக்கிற விஷயத்தை, நாம் ரசாயனம் போட்டுச் சரிசெய்ய முயற்சி செஞ்சிருக்கோம்னு புரிஞ்சுது.