Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

நீதான் கட்டப்பட்டுள்ளாய்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1555333_602521726470270_1377794627_n.jpg

 

 

 

ஞானி தெருவில் வந்து கொண்டிருந்தார். எதிரே ஒரு குடியானவன் வயலில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தான். அவன் தன கையில் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நடந்து வர கயிற்றால் கட்டப்பட்ட மாடு அவனுடன் கூட வந்து கொண்டிருந்தது. ஞானி சிரித்தார். வினோதமான அந்தச் சிரிப்பு அவனை ஈர்க்கவே என்ன என்று கேட்டான்.

ஞானி கேட்டார். "நீ பசுவுடன் வருகிறாயா? அல்லது பசு உன்னுடன் வருகிறதா?"

இதைக்கேட்டு குழம்பிப்போன குடியானவன், "இது என்ன பைத்தியக்காரத்தனம்? பசுதான் என்னுடன் வருகிறது."

"அப்படியானால் கயிறு எதற்கு? விட்டு விடு.!"

"கயிற்றை விட்டுவிட்டால் பசு ஓடிவிடுமே!" என்றான் குடியானவன்.

"அப்படியானால் அது தான் உன்னைப் பிணைத்துள்ளது. நீ அதைப் பிணைக்கவில்லை!" என்றார் ஞானி.

ஏதும் புரியாமல் விழித்தான் குடியானவன்.

"பசு உன்னுடன் வருவதாயிருந்தால் நீ கட்டை அவிழ்த்து விட்டாலும் அது உன்னுடன் வர வேண்டும். ஆனால் அது அப்படி இல்லை நிலைமை. கட்டை அவிழ்த்தால் அது ஓடிவிடும். அது ஓடினால் அதைத் துரத்திக் கொண்டு நீ ஓடுவாய். நீ ஓடினால் உன்னை விரட்டிக் கொண்டு அது வராது. ஆகவே நீ அதை கட்டி இழுத்து வருவாய். உண்மையில் அதனுடன் நீதான் கட்டப்பட்டுள்ளாய்..!" என்றார் ஞானி.

எவை எவற்றையெல்லாம் இது என்னுடையது என்று பிணைக்கிறோமோ, உண்மையில் பார்த்தால் அவற்றுடன் நாம்தான் கட்டுப்பட்டிருக்கிறோம்.
 
 
 
 
 
Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.