Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

எம்முள் வாழ்ந்த பெரியார்கள்!


Recommended Posts

பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை

யாழ் தென்மராட்சியின் மட்டுவில் கிராமத்தில் 1899 ஆம் ஆண்டு ஆணிமாதம் 27ம் திகதி சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளுக்கு மகனாகப்பிறந்தார் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள். தயாரின் தனங்கிளப்பு ஊரிலுள்ள காரைத்தூவிநாயகர் குலதெய்வமான படியால் இவருக்கு கணபதிப்பிள்ளை என்று பெயர் சூட்டப்பெற்றது.

மட்டுவில் அமெரிக்கமிசன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை கற்றார். அதன் பின்னர் தனது 17ஆவது வயதில் நம்பிக்கை, தெய்வமயம் இலக்கிய, இலக்கண அறிவு நிரம்பப் பெற்ற மட்டுவில் க.வேற்பிள்ளையிடம் பாடம் கற்று வந்த பொழுது நாவலர் காவியப் பாடசாலையைப் பற்றி கேள்விப்பட்டு அங்கு சென்று கல்விபயின்றார். வண்ணார்பண்ணை காவியப்பாடசாலை பெரிதும் அவரை விருப்பத்தோடு கல்வி கற்க வைத்தது. சுண்ணாகம் அ.குமாரசுவாமிபுலவர்,

த.கைலாசப்பிள்ளை, வித்துவான் ந.சுப்பையாபிள்ளை, ஆகியோரிடம் இலக்கண, இலங்கியங்களை குருசீட முறையில் கற்றார். பழமையில் பற்று வைக்கும் பணிகளை இவர் காவியப் பாடசாலையில் கற்றுக் கொண்டார். மதுரைச் தமிழ்ச் சங்க பண்டிதர் பரீட்சையில் சித்தி பெற்றார்.

தனது 3 ஆவது வயதில் தாயை இழந்த பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் சிறந்த கல்வி மானாக வளர வேண்டும் என்பதில் பண்டிதமனியின் தந்தை சின்னத்தம்பி ஆர்வமுடன் செயற்பட்டார்.

திருநெல்வேலி சிவன் கோயிலுக்கு அருகில் கல்வியில் துறைபோன பலரும் ஒன்று கூடி நாட்டு நடப்புகள் பற்றி அலசுவார்கள் ஆங்கிய இலக்கியம், விஞ்ஞானம், கணிதம் போன்ற துறைகளில் தங்கள் கருத்துக்களை எடுத்துக்கூறி விவாதிப்பார்கள். அந்த கலந்துரையாடல்களில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையும் கலந்து கொள்வார். இதனால் பண்டித மணிக்கு ஆங்கில இலங்கியங்களில் நாட்டம் ஏற்பட்டது.

யாழ்.மத்திய கல்லூரி ஆசிரியராக விளங்கிய கலைப்புலவர் நவரட்ணம் என்பவர் 1931 ஆண்டு திருநெல்வேலியில் கலா நிலையம் ஒன்றினை ஆரம்பித்து வைத்தார். அதில் உறுப்பினராகவும் பண்டிதமணி அவர்கள் இருந்தார். பண்டிதமணி ஆசிரிய கலாசாலையில் பயிற்சியை முடித்துக் கொண்டு திருநெல்வேலியில் சைவ ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் 1929ஆம் ஆண்டு தமிழ் விரிவுரையாளராக இருந்ததனால் கலா நிலையத்திற்கு அடிக்கடி வந்து பல தொண்டுகள் புரியத்தொடங்கினார். மக்களின் பார்வைக்காக இலக்கண, இலக்கிய புத்தகங்களையும் தருவித்தார். எந்நேரமும் கலாநிலையம் மக்களால் சூழப்பட்ட ஒரு இடமாகத் திகழ வைத்தார்.

நகைச்சுவை ததும்ப உரையாற்றும் அவர் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார். இந்தியாவில் இருந்து அறிஞர்களை வரவழைத்து சமய சொற் பொழிவுகள் நிகழத்தினார்.

பண்டிதமணி அவர்கள் ஆசிரிய கலாசாலையில் கற்பிக்கும் முறை வித்தியாசமானது. மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் கல்வி புகட்டுவார். இதனால் மாணவர்கள் மத்தியில் விருப்புடையவராக விளங்கினார். இவரின் பாடத்தை மாணவர்கள் வாஞ்சையுடன் கற்றனர்.

இவரது நவபாரதம் என்ற உருவக்கத்தை 1938ஆம் ஆண்டு மலரில் வெளிவந்துள்ளதை அறிந்த பலரும் தேடித் தேடி படித்தார்கள். இவ்வாறு 30 வருடங்கள் சைவாசிரியப் பணியை தொடர்ந்து செய்தார் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள். இவரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் பெரும் புலவர்களாக விளங்கியதுடன் சிலர் சமய பண்பாட்டினை பரப்புவர்களாகவும் இருந்துள்ளார்கள்.

பணிவும் அடக்கமும் மிகுந்த பண்டிதமணி அவர்கள் சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளரும் ஆவார். இவரது படைப்புகள், மாணவர்களின் உயர்தர வகுப்பு பாடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. 'கம்பன் ஒரு வம்பன்' 'அவையடக்கம்' போன்றவை க.பொ.த சாதாரண தரம் மாணவர்களுக்கென பாடநூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இவர் எழுதிய கந்தபுராண தக்ஷண காண்ட உரை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் யானைமேல் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்ற சிறப்பும் பெற்றது. சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல், தமிழர் பண்பாடு ஆகிய துறைகளில் இவர் ஆற்றிய உரைகளும், எழுதிய கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு 23 நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.

1978 ஆம் ஆண்டு இலங்கை பல்கலைக்கழகம் பண்டிதமணிக்கு 'இலக்கிய கலாநிதி' பட்டத்தை வழங்கி கௌரவித்தது. யாழ்ப்பாணத்து மக்களை மனிதர்களாக வாழச் செய்வது புராண படனமாகும் கந்த புராண கலாச்சாரம் தான். அந்திய நாட்டவரின் ஆசை வார்த்தையில் மயங்காது மக்களை காத்து வந்தது. தமிழ், சைவம் இரண்டையும் இரு கண்களாக போற்றிய பண்டிதமணி அவர்கள் 86 ஆண்டுகள் நைட்டிக பிரமச்சரியாக வாழ்ந்து 1986 ஆண்டு பங்குனி மாதம் 13 திகதி இறைவனடி சேர்ந்தார். அவரது பூதவுடல் திருநெல்வேலி கலா நிலையத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு திருநெல்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் நூற்றாண்டு விழா 1999 ஆம் ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

-சூரியன் இணையம்-

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நான் சாரம் கட்டுவதில்லை. பல வருடங்களுக்கு முன்பு வீடியோ/டெக் இருந்த காலத்தில் மாதவி/ஸ்ரிதேவி/சில்க் ஸ்மிதா போன்றவர்கள்  நடித்த படங்களை இரவு பார்த்துவிட்டு சில தடவைகள் சாரம் கட்டி தூங்க முயற்சி செய்தேன் காலையில் கண்விழித்து பார்த்தால் சாரம் எல்லாம் நனைந்து இருக்கும் எனோ தெரியவில்லை.
  • நினைவுக் கல்லை கொண்டுவந்தவர்களை கேள்வி கேட்கவும், நினைவு முற்றத்தில் யாரும் நுழையக்கூடாது என்று சுற்றி நின்று காவல் காக்கவும் தேவையென்ன வந்தது இராணுவத்துக்கு? இறந்தவர்களை நினைவு கூர தடையில்லை ஆனால் கொரோனாவால் கூட முடியாது என்று போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா என்றுமில்லாதவாறு பெருந்தன்மை வாய்ச்சவாடல் விடேக்கையே நினைச்சேன் ஏதோ விபரீதம் நடக்கபோகுதென்று. இதென்ன புதுசா இதுகளுக்கு? கடந்த காலத்தில்  மாவீரரின் கல்லறைகளை உழுவதற்கு என்ன தேவை வந்தது இராணுவத்துக்கு? அதுக்கு பித்து தலைக்கேறி நின்று சதிராடுது.  
  • வணக்கம் வாத்தியார்...........! கருவக்காட்டு கருவாயா கூட காலமெல்லாம் வருவாயா முத்தம் கொடுக்கும் திருவாயா என்ன மூச்சு முட்ட விடுவாயா கால் வளந்த மன்னவனே வா காவலுக்கு நின்னவனே வா வா நான் வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு உன் வேட்டி எடுத்து வேலி கட்டு உன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டு என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு   தன்னந்தனி மானு இவன் தண்ணியில்லா மீனு மஞ்ச தாலி போட்ட நீ மட்டும்தானே ஆணு குத்தம் இல்லா பொண்ணு நீ குத்த வெச்ச தேனு கண்ணுக்குள்ள வெச்சு உன்ன காப்பதுவேன் நானு தொடுத்த பூவுக்கு நார் பொறுப்பு என் துவந்த சேலைக்கு நீ பொறுப்பு இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு என் இடுப்பு வழிக்கு நீ பொறுப்பு நட்சத்திரம் எத்தனையோ எண்ணிக்க தெரிஞ்சது எனக்கு மச்சம் மட்டும் எத்தனையோ இன்னும் எடுக்கல கணக்கு........! ---கருவக்காட்டு கருவாயா---
  • பூரான் கடிச்சு பூச்சி புழு உண்டாகட்டும் என்றுதான் மூஞ்சி வரைக்கும் இழுத்து மூடிக்கொண்டு படுகிறது......!  😎
  • தமிழகம்: இன்று முதல் கடுமையான முழு ஊரடங்கு! மின்னம்பலம் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், மக்கள் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   இந்த நிலையில் நேற்று (மே 13) மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சட்டப்பேரவை அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர், தொழில் மற்றும் வர்த்தகம் பாதிக்கக் கூடாது என்பதற்காக சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுகிறார்கள். எனவே ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது அதில் மாற்றங்கள் செய்யலாமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். முதல்வர் உரையுடன் தொடங்கிய கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். பின்னர் கூட்டத்தில், ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துவது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் உரிய நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் இக்காலகட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பொதுக் கூட்டங்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சி நிகழ்வுகள் போன்றவற்றை முற்றிலுமாக நிறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதால், கள அளவில் அனைத்துக் கட்சியினரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்திடுமாறு மக்களை அறிவுறுத்தி, வழிகாட்டிகளாக நடப்பது என்றும், மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளில் அனைவரும் முழு மனதோடு ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.   நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கச் சட்டமன்றக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஓர் ஆலோசனைக் குழு அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் மக்களின் உயிர் காக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதைக் கருத்தில்கொண்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அனைத்து சட்டமன்றக் கட்சி தலைவர்கள் என்ற முறையில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, அதிமுக சார்பில் டி.ஜெயக்குமார், டாக்டர் வெ.பரமசிவம், காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயதரணி, முனிரத்தினம், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், எம்.என்.ராஜா, பாமக சார்பில் ஜி.கே.மணி, மதிமுக சார்பில் எம்.பூமிநாதன், கு.சின்னப்பா, விசிக சார்பில் சிந்தனை செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் நாகைமாலி, சின்னதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமச்சந்திரன், மாரிமுத்து, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வேல்முருகன், புரட்சி பாரதம் கட்சி சார்பில் பூவை.ஜெகன் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.   ஊரடங்கைத் தீவிரப்படுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், “இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் வரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தமிழக டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசின் அறிவுரைகளைப் பின்பற்றி கொரோனா தீவிரமாகப் பரவி வரும் இக்காலகட்டத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து பொதுமக்கள் தங்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.   https://minnambalam.com/politics/2021/05/14/19/5-resolution-made-in-all-party-meet-headed-by-cm-stalin      
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.