Jump to content

ஜெயலலிதா இன்று பிணையில் விடுதலை செய்யப்படுவாரா? சட்டத்தரணி ஆச்சர்யா


Recommended Posts

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிணை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் அரச சிறப்பு சட்டத்தரணி ஆச்சர்யா தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற வழக்குகளில் ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால் அந்த தண்டனையை நிறுத்தி வைத்து அவர்களை பிணையில் விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. அதன்படி, குற்றவாளிகளுக்கு பிணை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஆச்சார்யா கூறினார்.

தசரா விடுமுறை நேற்றுடன்  முடிவடைவதால் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று  திறக்கப்படுகின்றது. நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை நடைபெறும்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஜெயலலிதா சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை விசாரிக்க மறுத்துவிட்ட உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால நீதிபதி ரத்தினகலா அதன் மீதான விசாரணையை வழக்கமான அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு பிணை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சொத்து குவிப்பு வழக்கில் பவானிசிங்குக்கு முன்பு அரசு சார்பில் சிறப்பு சட்டத்தரணியாக ஆஜராகி வாதாடிய ஆச்சார்யா கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

சொத்து குவிப்பு வழக்கில் அரசு சார்பில் நான் ஆஜராகி வந்தேன். எனக்கு பல்வேறு இடங்களில் இருந்து நெருக்கடி அதிகமாக வந்தது. வேறு வழியில்லாமல் நான் அந்த பதவியில் இருந்து விலகினேன். தமிழ்நாட்டில் இந்த வழக்கு விசாரணை சரியாக நடைபெறவில்லை என்ற காரணத்தால் தான் உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றியது.

அரசு சட்டத்தரணியை நியமிக்கும் அதிகாரத்தையும் கர்நாடக அரசுக்கு வழங்கியது. ஆனால், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலுடன் நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அதன்படி, வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் எனக்கு முக்கிய பங்கு உள்ளது என்று நான் சொல்லமாட்டேன். சட்டப்படி அது நடைபெற்று முடிந்துள்ளது.

குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இதுபோன்ற வழக்குகளில் ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால் அந்த தண்டனையை நிறுத்திவைத்து அவர்களை பிணையில் விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. அதன்படி, குற்றவாளிகளுக்கு பிணை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஆச்சார்யா கூறினார்.http://www.pathivu.com/news/34380/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிணைகிடைக்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று, ஜெயா அம்மையாரின்... ராசியான எண் 7´ம் திகதி என்ற படியால்....
பிணை கிடைக்கும்.

Link to comment
Share on other sites

பிணை கிடைக்குமோ? கிடைக்காதோ? தமிழனுக்கு விடிவு இவர்களால் கிடைக்காது...! :(  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசிப்பிணிக்கு அமுதும், பேச்சுத் துணைக்கு இணையும், முற்பகல் வினையும் இருக்கையில் பிணையும் வருமா..? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசிப்பிணிக்கு அமுதும், பேச்சுத் துணைக்கு இணையும், முற்பகல் வினையும் இருக்கையில் பிணையும் வருமா..? :o

மதுரை யாரைச் சொல்லுறீங்கள் எண்டு யோசிச்சுப்பிடிக்க ஒரு ' பத்து நிமிடம்' வரையில் எடுத்தது!

 

அதைக் கண்டு பிடித்தபின்னர், சிரிப்பை நிப்பாட்டுவதற்கு இன்னுமொரு பத்து நிமிடம் வரை எடுத்தது! :D

Link to comment
Share on other sites

செவ்வாய் கிரகத்திலும் போராட்டம் உண்ணாவிரதம் தொடர்த்து நடக்காம் மாங்கலயன் செய்தி அனுப்பி இருக்கு அதலால் பிணை கிடைக்கும்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா உட்பட சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கைதான அனைவருக்கும் ஜாமீன் கிடைத்தது..!

 

ஆதாரம்: தட்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா உட்பட சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கைதான அனைவருக்கும் ஜாமீன் கிடைத்தது..!

 

ஆதாரம்: தட்ஸ்தமிழ்.

 

தமிழருக்கு  நல்ல  செய்தி.....

Link to comment
Share on other sites

இருபது வருடம் மேல் இருக்கும் நளினி அப்பாக்கு உடல்நிலை சரியில்லை என்று கேட்டு விடாத ஜெயாக்கு ஒரு கிழமையில் ஜாமீன் ....

 

இதுக்கு வாழ்த்து வேற மானம் இழந்த தமிழரா நாம் விளங்கிடும் .

Link to comment
Share on other sites

ஜெயலலிதா உட்பட சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கைதான அனைவருக்கும் ஜாமீன் கிடைத்தது..!

 

ஆதாரம்: தட்ஸ்தமிழ்.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் இல்லை - கர்நாடக உயர்நீதிமன்றம்

 

புதிய தலைமுறை செய்தி ..

 

ஐ மிக்க மகிழ்ச்சி உள்ளயே கிட ஆத்தா எங்க வலி என்னவென்று புரியும் வரை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாலி சொன்னாத் தப்பாது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.