Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள கூட்டமைப்பு என்ற பெயரில் அரசியல் கட்சி - பொது பல சேனா அமைப்பு அறிவிப்பு


Recommended Posts

தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகள் நாட்டில் இருக்கின்ற நிலையில், சிங்கள கூட்டமைப்பு என்ற பெயரிலான அரசியல் கட்சியொன்றை பொது பல சேனா அமைப்பு ஆரம்பிக்கவுள்ளதாக அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

மக்களை ஏமாற்றும் அரசியல் தலைவர்கள், இந்த நாட்டின் தலைவர்களாக மாற, பொது பல சேனா ஒருபோதும் இடமளிக்காது என்றும் இந்த நாட்டின் தலைவர்களை, பொது பல சேனாவே உருவாக்கும் என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்த தேரர், இந்த நாட்டின் தலைவர்கள் திருந்துவதற்காக இக்காலப்பகுதியை வழங்குகின்றேன். அவர்கள் திருந்தவில்லையாயின், அதற்குரிய நடவடிக்கையை தான் எடுப்பதாகவும் குறிப்பிட்டார். http://www.pathivu.com/news/34389/57//d,article_full.aspx

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: முதன்முறையாக வெளிவந்த வரலாற்று உண்மைகள்! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ஏழாம் நுாற்றாண்டில் செங்கல், சுண்ணாம்பால் கட்டப்பட்டது எனவும், 13ஆம் நுாற்றாண்டில் கருங்கற்களால் கட்டப்பட்டது எனவும் கோயில் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது. இக்கோயிலில் உள்ள 410 கல்வெட்டுகளைக் கொண்டு மதுரை பாண்டிய நாட்டு வரலாற்றுப் பேரவை தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு குறித்த ஆய்வினை மேற்கொள்ளுமாறு ஆலய நிர்வாகம் கேட்டுகொண்டதற்கு அமைவாக கடந்த ஓராண்டாக இப்பணி நடந்துவந்தமை குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஆய்வாளர் சாந்தலிங்கம் கூறுகையில், “ஏற்கனவே மத்திய தொல்லியல் துறை 60 கல்வெட்டு விபரங்களை மட்டும் ஆங்கில குறிப்புகளாக வெளியிட்டுள்ளது. இந்நிலையில் முழுமையான தகவல் கிடைக்காத நிலை இருந்தது. அந்தக் குறையைப் போக்கவே இந்த ஆய்வு நடந்தது. 410 கல்வெட்டுகளில் 80 கல்வெட்டுகள் முழுமையான செய்திகளுடன் மன்னர்களின் பெயர்களைக் கொண்டிருக்கின்றன. மற்றவை உருவங்கள் பதித்தவையாக உள்ளன. கோயில் கட்டுமானப் பணியின்போது இதன் முக்கியத்துவத்தை அறியாமல் துண்டுதுண்டு கற்களாக தலைகீழாக வைத்துப் பதித்துள்ளனர். இதேவேளை, முதல் கல்வெட்டு என்பது வைகைக் கரையில் கிடைத்தது. இது 1961இல் வைகையில் கண்டெடுக்கப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் பதிக்கப்பட்டது. கி.பி., 700ஐச் சேர்ந்த கூன்பாண்டியன் காலத்து கல்வெட்டு இது. வைகையில் தடுப்பணை அமைத்து திருச்சுழி, வீரச்சோழன் பகுதிக்கு தண்ணீர் கொண்டு சென்றது குறித்து அது விளக்குகிறது. தமிழ், கிரகந்த மொழியில் அந்தக் கல்வெட்டு உள்ளது. மீனாட்சி கோயில் தொடர்பான கல்வெட்டுகளைப் பார்க்கும்போது தேவாரப் பாடல்களில் இக்கோயில் இடம்பெற்றுள்ளது. அதில் ‘அங்கையற்கண்ணி உடன் ஆலவாய் அண்ணல்’ என்று இறைவனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஏழாம் நுாற்றாண்டில் இக்கோயில் செங்கல், சுண்ணாம்பால் கட்டப்பட்டிருக்க வேண்டும். பின்னர், ஏதோ காரணத்தால் இடிந்தபின் இப்போதைய கோயில் 13ஆம் நுாற்றாண்டில் கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்க வேண்டும். இதை கல்வெட்டுக்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றன. மேலும், முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் ( 1190 – 1216) கல்வெட்டே தற்போதுள்ள கோயில் கல்வெட்டுக்களில் முதலாவதாகும். இதன்பின்னர் அடுத்தடுத்து ஆட்சிபுரிந்த பாண்டிய மன்னர்களின் பெயர்களில் 60 கல்வெட்டுக்கள் உள்ளன. அவை கோயிலுக்காக பல்வேறு இடங்களில் நிலங்களைப் பெற்றுக் கொடுத்தது குறித்து தெரிவிக்கின்றன. கிழக்குக் கோபுரத்தின் இரண்டாம் தளத்தில் தூண்களில் பாடல்கள் கொண்ட கல்வெட்டுகள் உள்ளன. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் குறித்த தமிழ் பாடல்கள் வடிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுக்கள் திருஞானசம்பந்தர் மதுரை வந்து ஒரு மடத்தை உருவாக்கியது குறித்தும், அதன் நிர்வாகத்திற்காக சோழவந்தான் பகுதியில் நிலம் கொடுத்தது குறித்தும் தெரிவிக்கிறது. ஒய்சால மன்னர்கள் பாண்டிய மன்னர்களுடன் மண உறவு கொண்டிருந்தனர். சோழர்களிடத்தில் பெண் எடுத்திருந்தனர். இருவருக்கும் பொதுவான ஆட்சி பிரதிநிதியாக சமயபுரம் அருகில் கண்ணனுார் பகுதி உருவாக்கப்பட்டு ஆட்சிசெய்ய ஒதுக்கியமை அறியப்பட்டுள்ளது. அத்துடன், மதுரையில் தங்கியிருந்த விக்கிரசோழனை ‘மைத்துனன்’ என சுந்தரபாண்டியன் தன் கல்வெட்டில் குறிப்பிடுகிறார். ‘மீனாட்சி சுந்தரேஸ்வரர்’ என்ற பெயர் மிகவும் பிற்காலத்தில்தான் அழைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு இறைவனின் பெயர், ‘திருவாலவாய உடைய நாயனார்’, ‘நம்பி’, ‘சொக்கன்’ என்றும், அம்மன் பெயர் ‘திருக்காவகோட்டத்து ஆளுடைய நாச்சியார்’ என்றும் கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சொக்கநாதர்’ என்ற பெயர் 1700இல் மதுரை நாயக்கர் ஆட்சியில்தான் அழைக்கப்பட்டது. ‘மீனாட்சி சுந்தரேஸ்வரர்’ என்ற பெயரை 1898இல் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் உள்ள திருவாட்சி விளக்கில் சிவகங்கை மைனர் ஜமீன் ராஜா துரைசிங்கம் குறிப்பிட்டுள்ளார். இக்கோயில் 1750 காலக்கட்டத்தில் மிகப்பெரிய அழிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக இயற்கை காரணங்களால் கருவறை, நடராஜர் மண்டபம், எழு நிலை கோபுரமும் அழிந்தன. இதையெல்லாம் பழுதுநீக்கி புதிதாக கட்ட நிலங்கள் கொடுக்கப்பட்டன என்ற செய்தியையும் ஒரு கல்வெட்டு கூறுகிறது. திருவேடகத்தில் இக்கோயில் சார்பில் கோ சாலை மடம் உருவாக்கப்பட்டு, பராமரிக்க நிலங்கள் வழங்கிய விபரமும் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. இதேவேளை, முஸ்லிம் படையெடுப்பால் கோயிலில் 40 ஆண்டுகள் வழிபாடு தடைப்பட்டதாக அறியப்படுகிறது. இக்காலகட்டத்தில் எந்தவிதமான அழிவுகள் ஏற்பட்டன என்ற விபரம் கல்வெட்டுக்களில் இல்லை. கிழக்குக் கோபுரம் 1190இல் கட்டப்பட்டது. அதில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் மிகப்பெரிய கல்வெட்டு வடிக்கப்பட்டது. தான் பிறந்த புனர்பூஜ நட்சித்திரத்தில் சிறப்பான பூஜை செய்து அதற்கு எவ்வளவு பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்ற விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், திருமலை நாயக்கர் காலத்தில் பஞ்சகம்மாளர்களுக்கு கொடுத்த சலுகைகள் விபரமும் உள்ளது. அவரது பேரன் விஜயரங்க சொக்கநாதர் காலத்தில் 1710இல் சீர்பாதந்தாங்கும் 64 பேருக்கு மானியமாக கொடுக்கப்பட்ட சாமநத்தம் உட்பட நான்கு கிராமங்களை திரும்பப் பெற்றதால் போராட்டம் வெடித்தது. ஆண்டமுதலி மகன் சொக்கமுதலி கோபுரத்தில் ஏறி விழுத்து இறந்தான் என்ற விபரமும் இங்குள்ள கல்வெட்டில் அறிய முடிகிறது. காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார் 1842இல் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் ஒரு கல்வெட்டை நிறுவியுள்ளார். அதில் ஒரு இலட்சம் வராகன் கொடையளித்து அதன் வட்டியில் இருந்து தினப்பூஜை செய்ய ஏற்பாடு செய்துள்ளார். அத்துடன், பத்து வராகன் மாத ஊதியத்தில் ஆசிரியர் ஒருவரை நியமிக்கவும், ஒரு ஆசிரியருக்கு மாதம் 5 வராகன் ஊதியம் கொடுத்து அப்பகுதி சிறுவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கல்வெட்டு விபரங்களை நுாலாக தயார் செய்துள்ளோம்” என ஆய்வாளர்  சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார். http://athavannews.com/மதுரை-மீனாட்சி-அம்மன்-கோ/
    • உலகின் மிக மதிப்பு மிக்க நோபல் பரிசை வெல்பவர்களுக்கான பணத் தொகை அதிகரிப்பு! உலகின் மிக மதிப்பு வாய்ந்த விருதான நோபல் பரிசு வெல்பவர்களுக்கு, நடப்பாண்டு முதல் 1 லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கூடுதலாக பரிசுத் தொகை வழங்கப்படும் என விருதுகளை மேற்பார்வையிடும் அறக்கட்டளை அறிவித்துள்ளது. நோர்வே நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் இந்த விருது அமைதி, இயற்பியல், பொருளாதாரம், இலக்கியம், மருத்துவம் மற்றும் வேதியியல் ஆகியத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நோபல் பரிசுகளை வெல்பவர்கள் கூடுதலாக 1 லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்களைக் பெறுவார்கள். இதற்கமைய பண பரிசு இந்த ஆண்டு 10 மில்லியன் க்ரோனர்களாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நோபல் அறக்கட்டளையின் தலைவர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் செலவுகள் மற்றும் மூலதனம் முன்பு இருந்ததை விட முற்றிலும் மாறுபட்ட வழியில் நிலையான உறவில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஊக்கமளிப்பதிலும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிப்பதிலும் பரிசு பெற்றவர்களின் சாதனைகளை கொண்டாடுவது இந்த ஆண்டு மிகவும் முக்கியமானது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோபல் அறக்கட்டளையின் நிதிநிலைமையைப் பொருத்து அவ்வப்போது பரிசுத்தொகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. 2012ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, அதன் முதலீட்டு மூலதனம் 3 பில்லியன் க்ரோனரிலிருந்து 4.6 பில்லியன் க்ரோனராக உயர்ந்துள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் 9 சதவீதம் அதிகரிப்புக்கு அருகில் உள்ளது. முன்னதாக நோபல் அறக்கட்டளையின் நிதிநிலையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடந்த 2011ஆம் ஆண்டில் நோபல் பரிசுத் தொகை குறைக்கப்பட்டிருந்தமை நினைவுக்கூறத்தக்கது. இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளுக்கான நோபல் பரிசு வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/உலகின்-மிக-மதிப்பு-மிக்க/
    • சீனாவில் சுமார் 16 ஆயிரம் மசூதிகள் தகர்ப்பு: அவுஸ்ரேலிய தன்னார்வ அமைப்பு தகவல்! சீனாவில் சுமார் 16 ஆயிரம் மசூதிகள் தகர்க்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியாவில் இயங்கும் தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவின் (ASPI) புள்ளியியல் தன்னார்வ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளில் 16,000 மசூதிகள் சீன அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று வருடங்களாக இந்த அழிப்பு நடவடிக்கைகளில் சீனா ஈடுப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின், வடமேற்கு மாகாணங்களில், உய்குர் மற்றும் டர்கிக் மொழிகள் பேசும், 10 இலட்சம் முஸ்லிம் மக்கள், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மதம் தொடர்பான தங்கள் சம்பிரதாயங்களை கைவிட மறுத்ததற்காக, இவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதாக, அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற சீனாவின் வடமேற்கில் உள்ள நிங்ஜியா மண்டலத்தில், டாங்ஜிங் கவுன்டியின் வெய்ஸு பகுதியில் ஹூய் இன முஸ்லிம்கள் அதிகமானோர் வாழ்கின்றனர். சீனாவின் ஜிங் ஜியாங் பகுதியில் உய்குர் இன முஸ்லிம்களுக்கு அடுத்த படியாக வெய்ஸு பகுதியில் ஹூய் இன முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இதனிடையே உய்குர் இன மக்களை, சீன மயமாக்க, ஆவணப்படுத்தப்பட்ட அதிகமாக முகாம் மற்றும் சிறைகளை சீனா இரகசியமாக வைத்துள்ளதாக அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயற்படும் கிழக்கு துர்கிஸ்தான் தேசிய விழிப்புணர்வு இயக்கம் கூறியுள்ளது. http://athavannews.com/சீனாவில்-சுமார்-16-ஆயிரம்-ம/
    • அசைவ சுவையில் ஒரு சைவக் கறி .......!   😁
    • வீட்டில் யாருக்காவது பிறந்தநாள் கொண்டாடும்போது எனக்கென்று தனியாக மனிசி செய்வது இதுதான். கனகாலமாக ஒரிஜினல் கேக்கின் ருசியே மறந்து போச்சு,அதனால் இது சுவையாக இருக்கும்......!  😁
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.