Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா சிவில் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா சபையில் நிபுணர்கள் ஆய்வு!


Recommended Posts

சிறிலங்காவின் சிவில் மற்றும் மனித உரிமைகளின் நிலவரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிபுணர்கள் முழுமையாக ஆய்வு செய்யவுள்ளனர்.

இன்றும் நாளையும் இது தொடர்பான கூட்டம் ஜெனீவாவில் நடைபெறுகிறது.

இதில் சர்வதேசமன்னிப்பு சபை உள்ளிட்ட 18க்கும் அதிகமான அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் முன்வைத்துள்ள சிறிலங்கா தொடர்பான அறிக்கைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.

இறுதியாக கடந்த 2003ம் ஆண்டு இவ்வாறான கூட்டம் ஒன்றில் சிறிலங்காவின் மனித உரிமைகள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டிருந்தன.

10 வருடங்களின் பின்னர் மீண்டும் இந்த ஆய்வு நடத்தப்படுகின்றமையானது, சிறிலங்காவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்காவில் தீர்க்கப்படாதுள்ள மனித உரிமை மீறல் சம்வங்கள், பேச்சு சுதந்திரம் இன்மை, ஒன்று கூடும் சுதந்திரம் இன்மை, ஊடகங்களுக்கு எதிரான அடக்கு முறைகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது ஆய்வு செய்யப்படவுள்ளன.

அத்துடன் சர்வதேசத்துக்கு சிறிலங்கா வழங்கிய உறுதி மொழிகள் நிறைவேற்றப்படாதிருக்கின்றமை தொடர்பிலும் இதன் போது சிறிலங்காவிடம் விளக்கம் கோரப்படவுள்ளது.http://www.pathivu.com/news/34385/57//d,article_full.aspx

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.