Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலையத்தில் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணிகளை ஆரம்பித்தது இராணுவம்!!


Recommended Posts

வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் தடுப்புச் சுவர்கள் (மதில்) கட்டும் பணிகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளதாக உள்ளிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயம் என்ற வகையில் இராணுவத்தினரினால் சுமார் ஆறாயிரத்தி எழுநூறு ஏக்கர் தனியார் காணிகளுக்கு மேல் பிடிக்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட காணிகளின் உரிமையாளர்களான பொது மக்கள் உயர் நீதிமன்றத்தில் தமது காணிகளை இராணுவத்தினர் மீள வழங்க வேண்டும் எனக்கோரி வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே உயர் பாதுகாப்பு வலயம் சம்பந்தமாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தாக்கல் செய்த வழங்கில் உயர் நீதிமன்றம் பொது மக்களுக்குச் சாதகமான முறையில் தீர்ப்பளித்த போதிலும் அதனை மீறி தொடர்ந்தும் இராணுவத்தினர் இத்தகைய செயலை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகப் பொது மக்கள் மத்தியிலிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இத்தகைய நிலையில் இராணுவத்தினர் தம்வசம் உயர் பாதுகாப்பு வலயம் என பிடித்த வைத்திருக்கும் காணிகளை உள்ளடக்கிய பகுதிகளில் மதில் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மிகவும் மனக்கிலேசம் அடைந்துள்ளதுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளையிட்டும் சிந்திக்க தொடங்கியுள்ளார்கள்.

குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக வலி வடக்கு பிரதேச சபையின் உறுப்பினாகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது இத்தகைய நடவடிக்கைகள் இடம் பெறுவதாக உறுதிப்படுத்தியதுடன் கட்சியின் மேலிடத்திற்கும் அறிவித்தள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

 

http://www.pathivu.com/news/34392/57//d,article_full.aspx

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் காரன் எல்லையில் செய்வதை.. சிங்களவனை உள்ள விட்டதால உள் வீட்டுக்க செய்யுறான். சிங்களவனோடு கூடி நின்று அவனை உள் வீட்டுக்க கூட்டி வந்த துரோகிகளே இதற்கு முற்றிலும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள்..!! :icon_idea:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.