Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மோடியை சந்திக்கப் போகும் பவுத்தசிங்கள இனவாத பொதுபல சேனா!


Recommended Posts

13ஆவது திருத்தத்தின் உள்ளடக்கம் தெரியாததன் காரணமாக அதனை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்கின்றார் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பரவலாக்கலை ஆதரிக்கின்றோம். ஆனால், இந்தியாவினால் பலாத்காரமாகத் திணிக்கப்பட்ட 13ஆவது திருத்தி எதிர்க்கின்றோம். இதனால் இலங்கைக்கும் மக்களுக்கும் எதுவிதமான நன்மையும் கிடைக்கவில்லை.

இன்று நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து பெரிய குழப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக எதிர்க்கட்சிகள் தமது வேட்பாளர் யார் என்பது குறித்தே இன்னும் முடிவு செய்யாமல் இருக்கின்றன.

ஐக்கியத் தேசியக் கட்சியை எடுத்துக்கொண்டால் அதன் தலைவர் ரணில் என்றும் பிறகு சோபித தேரர் என்றும் மாறி மாறி ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எம்மைப் பொறுத்தவரை நாம் எந்தக் கட்சிக்கும் இதுவிடயத்தில் ஆதரவளிக்கப் போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஏனெனில், எமக்கு நாட்டில் வாழுகின்ற சிங்கள - பெளத்த மக்களில் இருப்பே முக்கியமாகும்.

இவர்களைப் பாதுகாத்து இவர்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதே எமது ஒரே நோக்கமாகும்.என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தொடர்பிலான ஆரோக்கியமான அணுகுமுறையைக் கையாள்கிறார். இதனை வரவேற்கின்றோம்.

ஆனால், தமிழ் நாட்டின் அழுத்தம் காரணமாகவும் 13ஆவது திருத்தத்தின் உள்ளடக்கம் தெரியாததன் காரணமாகவும் அதனை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்கின்றார்.

எனவே, விரைவில் மோடியை நாம் சந்திக்கவுள்ளோம். இதன்போது பயனற்ற 13ஆவது திருத்தம் தொடர்பில் தெளிவுபடுத்துவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.http://www.pathivu.com/news/34404/57//d,article_full.aspx

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • விசுகுவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்   
  • பெண்ணொருவரிடம்.. பாலியல் இலஞ்சம் கேட்ட, முத்தரிப்பு துறை மேற்கு கிராம சேவகர் கைது மன்னார்- முசலி பிரதேச செயலக பிரிவிலுள்ள முத்தரிப்புத்துரையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆவணம் ஒன்றை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரிய, கிராம சேவகர் ஒருவர்  சிலாபத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முத்தரிப்பு துறை மேற்கு கிராம அலுவலராக கடமையாற்றும் கிராம அலுவலகரே இவ்வாறு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை, கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முத்தரிப்பு துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், ஆவணம் ஒன்றை கிராம சேவகரிடம் கோரியிருந்த நிலையில் அவர், பிரதேச செயலகத்தில் நாளைய தினம் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பெண்ணை கஸ்டப்படுத்த கூடாது என்பதற்காக தான் வீட்டிலேயே கொண்டுவந்து தருவதாக தெரிவித்ததுடன் ஆவணத்துடன் முத்தம் ஒன்றும் தருவதாக தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை உடனடியாக முசலி பொலிஸாருக்கு பெண் கொண்டு சென்றதை தொடர்ந்து, குறித்த கிராம சேவையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கிராம அலுவலர், ஆவணம் ஒன்றை உறுதிப்படுத்துவதற்காக பாலியல் இலஞ்சம் கோரியதாக மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து நேற்று, சிலாவத்துறை  பொலிஸாரால்  குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மேலதிக விசாரணைகளை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் http://athavannews.com/பெண்ணொருவரிடம்-பாலியல்-இ/
  • துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா! இந்திய துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துணைக் குடியரசு  தலைவரான வெங்கையா நாயுடு  வழக்கமான கொவிட் 19 வைரஸ் பரிசோதனையை நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை செய்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு  வைரஸ் அறிகுறியே இல்லாம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டிலேயே சுயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வைத்தியர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார். http://athavannews.com/துணைக்-குடியரசு-தலைவர்-வ/
  • கலாநிதி தமிழ் விடுதலை புலிகளையும் சிங்கள பிக்கிகளையும் பற்றி கதைத்து விட்டு  தனது இனம் எப்படி எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம் ,ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என்று ஜரூராக இருந்துவிட்டு இப்போது வைத்த சூனியம் திரும்பத்தொடங்கியதும்  கதறுவதையும் வசதியாக தவிர்த்து செல்கிறார், பாவம் கலாநிதி 70% வீதமும் சேர்ந்து கலாநிதியின் Kith and kin  களுக்கும் ஆப்பு வைக்கத்தான் கோத்தாவை கொண்டுவந்தவர் என்று தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலைமை   
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.