Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசு விடவில்லை - முதலமைச்சர்! செய்யக்கூடியவற்றையும் செய்யவில்லை - அனந்தி!!


Recommended Posts

 

vikneswaran_and_ananthy.pngபாரிய கட்டிடங்களை கட்டி அபிவிருத்தி நடப்பதாக காண்பிப்பதற்கே இலங்கை அரசு பாடுபடுகின்றது. ஆனால் எமது மக்களது அன்றாட வாழ்விலோ எந்தவொரு முன்னேற்றமும் கண்டிருக்கவில்லையென தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன். வடக்கிற்கு விஜயமொன்றை நேற்று  வருகை தந்திருந்த அமெரிக்க இராஜங்க திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். வடமாகாண தேர்தலை சர்வதேச அழுத்தங்களையடுத்தே இலங்கை அரசு நடத்தியது. ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபையினை இயங்கவிடாது அதே இலங்கை அரசு தடுத்து வருகின்றதெனவும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கை அரசு வடமாகாணசபையினை இயங்கவிடாது முட்டுக்கட்டை போடுவது தொடர்கின்றது. ஆனால் மக்களிற்கு இயலுமான திட்டங்களை கூட முன்னெடுக்காது வடமாகாணசபை வேடிக்கை பார்ப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார் மற்றொரு மாகாணசபை உறுப்பினரான அனந்தி சசிதரன். வடமாகாணசபை அமைச்சர்களான ஜங்கரநேசன் மற்றும் குருகுலராஜா ஆகியோர் சகிதம் ஏனைய உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி மற்றும் ஆனோல்ட் ஆகியோரை அமெரிக்க குழு சந்தித்து பேசியது. அவ்வேளையில் வடமாகாணசபையும் மந்த கதியுடன் செயற்படுவதாக குற்றஞ்சாட்டிய அனந்தி கடந்த ஒரு வருடத்தினுள் இதுவரை இரண்டேயிரண்டு நியதிச்சட்டங்களை மட்டுமே கூட்டமைப்பினால் நிறைவேற்ற முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க குழுவினர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ்பிறேமச்சந்திரன் மற்றும் சரவணபவன் உள்ளிட்டவர்களையும் தனித்தனியாக சந்தித்து பேசியதாக தெரியவருகின்றது.http://www.pathivu.com/news/34421/57//d,article_full.aspx

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.