Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தமிழர்களின் பிரச்சினைகள் பிரதான கட்சிகள் முன்வைக்கின்ற தீர்வுகளைப் பொறுத்தே ஆதரவு வழங்கப்படும் - சுரேஷ்


Recommended Posts

எதிர்வரும் தேசிய தேர்தல் ஒன்றில் எந்த கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானிப்பதற்கு, பிரதான கட்சிகள் தமிழ் மக்களுக்காக முன்வைக்கப்படுகின்ற தீர்வுத் திட்டங்கள் குறித்து ஒப்பு நோக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

சிறிலங்காவில் எந்த கட்சி ஆட்சி ஏறினாலும் அது தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் என்று நம்ப முடியாது.

ஆனால் சில மாற்றங்கள் ஏற்படலாம்.

எனவே அந்த கட்சிகள் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் முன்வைக்கின்ற தீர்வுகளை முழுமையாக ஆய்வு செய்து, அதன் அடிப்படையிலேயே எந்த கட்சிக்கு ஆதரவளிக்கலாம் என்று தீர்மானிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.http://www.pathivu.com/news/34442/57//d,article_full.aspx

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம், செல்வச் சந்நிதி கோயில் வளாகத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.     இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தியாகி திலீபனின் நினைவுகூரலை தடைசெய்யக்கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் திலீபனின் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு தடை விதித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், 10 தமிழ் அரசியல் கட்சிகள் தற்போது ஒன்றுகூடி ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தன. இதன்போது,  எவரும் 26ஆம் தினதி தியாகி திலீபனின் நினைவுகூரலை ஆலயங்களில் விசேட பூசைகள்  மற்றும் வீடுகளில் இருந்தவாறு மக்கள் தியாகி திலீபனை நினைவுகூறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கதவடைப்புப் போராட்டத்திற்கு, சமூக சிவல் அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும், தமிழ் மொழியை பேசும் முஸ்லிம் மக்களும் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும், மலையக அரசியல்வாதிகள், தொழிற்சங்கங்களும் ஆதரவு தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/90658
  • எமது விடுதலைக்கான அகிம்சை வழியிலான போரட்டங்களும், அரசியல் ரீதியிலான முன்னெடுப்புக்களும், கட்டாயப்படுத்தி முடித்துவைக்கப்பட்ட ஆயுத ரீதியிலான போராட்டமும் இதுவரையில் எமக்கு காத்திரமான விடுதலையினைப் பெற்றுத்தரவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் உருண்டோடிய 72 வருடங்களில் நாம் இதுவரை எதனையும் அடையவில்லை, மாறாக இருந்தவற்றையும் இழந்துவருகிறோம். 1977 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட தமிழ்த்தேசியத்தின் கோரிக்கைகளைப் போலவோ அல்லது அதனைக் காட்டிலும் வீரியமான கோரிக்கைகளை முன்வைக்கக் கூடிய மனோநிலையில் தமிழர்களோ அல்லது அதற்கான சூழ்நிலையோ இருப்பதாகத் தெரிகிறதா? 77 ஆம் ஆண்டிற்குப்பின்னரான சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தாயக விடுதலைப் போராட்ட எழுச்சியினைப் போன்று இன்னொரு எழுச்சியினை உருவாக்குதல் இப்போதைக்குச் சாத்தியமா?  கடந்த 72 ஆண்டுகளில் சிறுகச் சிறுக முடுக்கிவிடப்பட்ட எமது விடுதலைக்கான அரசியலை, மீண்டும் செய்வதென்பது இன்னும் எத்தனை தசாப்த்தங்களை தனக்குள் இழுத்துவிடப்போகிறது? நியாயமான தீர்வொன்றிற்காக தமிழினம் இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்கப்போகின்றது? தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் அரசியல்மயப்படுத்தல்களும், தேசிய ரீதியிலான முன்னெடுப்புக்களும் நிச்சயமாக ஒரு தீர்வினை கொண்டுவரும் என்றதற்கும் என்ன நம்பிக்கை இருக்கிறது?  எமது இனத்தையும், மொழியினையும், கலாசாரத் தொன்மையினையும், தாயகத்தினையும் முற்றாகக் கபளீகரம்செய்யக் காத்திருக்கும் சிங்களப் பேரினவாதத்திடமிருந்து காப்பதற்கு எமக்கான பலம் ஒன்று அவசியம். அது இன்றிருக்கும் அரசியல் செயற்பாடுகளாலோ அல்லது சமரசம் செய்யும் முயற்சிகளாலோ நிச்சயம் செய்ய முடியாதது. அப்படிப்பட்ட பலம் ஒன்றினை எப்படி உருவாக்கலாம் என்பதுபற்றியும் தமிழினம் சிந்திப்பது காலத்தின் கட்டாயம். 
  • எல்லாரும் ஏறிய குதிரையில் உடையார் ஏறி சறுக்கி விழப்போகிறார்.
  • பெருமாள், நீங்கள் உண்மையையும் கோத்தா மீதான கோபத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள் என நினைக்கிறேன்! இலங்கையில் கொரனா பரவாமல் ஆரம்பத்திலேயே எடுக்கப் பட்ட நடவடிக்கைகளால் பரவல் தடுக்கப் பட்டது உண்மையே! இது உலக அமைப்புகளாலேயே பாரட்டப் பட்ட ஒரு விடயம். இலங்கை ஒரு தீவு, ஒரேயொரு சர்வதேச விமான நிலையம், ஒரு சர்வதேச துறைமுகம், மக்கள் பொலிசுக்குப் பயம் ஆகிய விடயங்களால் பரவல் குறைக்கப் பட்டது உண்மை.  இலங்கை மட்டுமல்ல, தீவாக இல்லாத வியற்நாம் கூட அதிக உயிரிழப்புகள் இல்லாமல் கொரனாவைக் கட்டுப் படுத்த ஆரம்ப நடவடிக்கைகள் காரணம். இந்த நடவடிக்கைகளை பிரிட்டன் போன்ற நாடுகளில் இன்னும் எடுக்க முடியாமல் இருக்கிறது என்பதும் உண்மை! 
  • முறிந்த பனை எழுதி வெழியிட உதவியதற்காக தற்போது சிலவேளைகளில் வருத்தப்பட்டிருப்பார் போலும்.. 😂
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.