Jump to content

மஹிந்த இராசா வடக்கு விஜயம்! தூக்கம் மறந்த அதிகாரிகள்!


Recommended Posts

இலங்கை ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவின் வடக்கிற்கான வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வீதிகளில் இராணுவத்தினர் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு வீதி சோதனைகளும் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் அவர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் பங்கெடுக்கவுள்ளோர் பெயர் விபரங்கள் பாதுகாப்பு தரப்பினால் திரட்டப்பட்டுள்ளது. குறிப்பாக அவரது பாடசாலை விஜயத்தின் போது அவருக்கு சிற்றுண்டி தயாரிக்கும் பணியினில் ஈடுபடுத்தப்படவுள்ள ஆசிரியைகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

தாம் தேவையற்று கல்வி திணைக்கள அதிகாரிகளால் அழுத்தங்களை எதிர்கொண்டிருப்பதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ஜனாதிபதியின் மைத்துனரான நடேசன் வட்டுக்கோட்டையில் தனது பலத்தை காண்பிக்க பெருமெடுப்பில் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்.
அதேவேளையில் அவசர அவசரமான புனரமைப்பு வேலைகள் ஏ-9 வீதியிலும் மறுபுறம் நடைபெற்று வருகின்றது.

எதிர்வரும் 12,13, ஆம் திகதிகளில் மஹிந்த ராஐபக்ஷ வடக்கிற்கு விஐயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது ரயில் சேவை ஆரம்பித்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் யாழ்ப்பாணத்தில் கலந்து கொள்ளவுள்ளார். இதற்குரிய ஏற்பாடுகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக ரயில்வே பாதை மற்றும் ரயில்வே நிலைய புனரமைப்புப் பணிகள் தற்போதும் நடைபெற்று வருகின்றன. அத்துடன் ஏ-9 வீதியும் அழகூட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரயில்வே கடவைச் சந்திகள் மற்றும் தண்டவாளங்களின் பாதுகாப்புக்காக ஆங்காங்கே இரானுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளையில் ஐனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வுகள் இடம்பெறும் பிரதேசங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஐனாதிபதி செல்லும் வீதிகள் உள்ளிட்ட பிரதான மற்றும் சிறு சிறு குறுக்கு வீதிகளிலும் இரானுவத்தினரும் காவல்துறையினரும்; பாதுகாப்புப் பணிகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நிகழ்வுகள் இடம்பெறுகின்ற பகுதிகளுக்கு அருகில் இருக்கின்ற வீடுகள், வர்த்தக நிலையங்கள் என்பவற்றில் உள்ளவர்களின் பெயர் விவரங்களும் திரட்டப்படுவருகின்றது. http://www.pathivu.com/news/34447/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.