Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயக்குமாரி உள்ளிட்ட அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம் திட்டமிட்ட படி நடைபெறும்


Recommended Posts

வவுனியா மாவட்ட நீதிமன்றம் முன்பாக இன்று மேற்கொள்ளப்படவிருந்த கவனயீர்ப்புப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவர் கி.தேவராசா தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலேந்திரன் ஜெயக்குமாரி உள்ளிட்ட அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று போராட்டம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக தொடர்ந்தும் வைத்தியசாலையில் தான் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த போராட்டம் இன்று காலை 10 மணிக்கு திட்டமிட்ட படி இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நெடுங்கேணி பகுதியில் தேவராசா நேற்று முன்தினம் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போராட்டத்தை நிறுத்தும்நோக்கில் இராணுவ புலனாய்வாளர்களே இந்த தாக்குதலை நடாத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.pathivu.com/news/34458/57//d,article_full.aspx

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழீழ விடுதலைப்போரில் தமிழ் மக்கள் மிகவும் உணர்வு பூர்வமான ஒரு நிலையில் இருந்த காலம் தியாகி திலீபனின் உண்ணாவிரதமிருந்த காலகட்டம்தான், மக்கள் தம் கண் முன்னே ஒருவரின் மரணத்தின் சாட்சியாக இருந்து, தம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலையில் அவர்களிடமிருந்து ஏற்பட்ட இயலாமையினால் உருவான கோபம் ஒரு மக்கள் புரட்சியாக வெடித்து விடும் நிலையில் இருந்தது, தியாகப்பயணத்தில் திலீபனுடன் 12 நாட் கள் என்னும் நூலை (நூலின் தலைப்பு தவறாக இருக்கலாம்) மு வே யோ வாஞஞிநாதன் எழுதியநூலை கட்டாயம் ஒருதடவையாவது வாசித்தால் அந்த நேரம் மக்களின் மனநிலை எவ்வாறிருந்தது என்பதை உணரலாம்,தியாகி திலீபனை அன்று பெரியவர்கள் தமது மகனாகப்பார்த்தார்கள், இளையவர்கள் தமது சகோதரனாகப்பார்த்தார்கள், புலியாகவோ அல்லது போராளியாகவோ அல்ல. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீதான கொலை முயற்சி தியாகி திலீபனின் உண்ணாவிரதத்திற்கு முன்பாக ஒரு முறையும் (மற்றவர்கள் கூறகேட்டது) புலேந்திரன் குமரப்பா உட்பட 12 போராளிகளின் மரணத்தை தொடர்ந்து வடமராட்சிக்கு சென்ற புலிகளின் தலைவரை கொலை செய்ய இரண்ட்டாவது முறையாக முயற்சி செய்யப்பட்டது. தியாகி திலீபன் மரணம், பன்னிரு போராளிகள் மரணம் தமிழ் மக்களின் போராட்ட தலமைய அழிக்க முற்பட்ட நிலை அனைத்தும் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு இந்திய இராணுவத்திற்கெதிராக போரிட வேண்டும் என்றும் அதற்கு உடன்பாடில்லாதவர்கள் தாரளமாக விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகி செல்லலாம் என்று கூறப்பட்டதாம் அதில் பல போராளிகள் அமைப்பிலிருந்து விலகி சென்றார்களாம் அதில் பசீர் காகாவும் ஒருவர் (மற்றவர்கள் கூறகேட்டது). இங்கு பல கருத்தாளர்களின் உணர்வுகள் புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது அஞ்சலி செலுத்துவர்களின் மேல் சேறு பூசுவதினூடாக மறைமுகமாக தியாகி திலீபனை கொச்சைப்படுத்துவதாகவுள்ளது. 90 களில் (கால கட்டம் சரியாகநினைவில்லை)பிரித்தானியாவினால் மாகாத்மா காந்தி இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தில் பிரித்தானிய காலனித்துவ அரசிற்கு எழுதிய கடிதங்களை வெளியிடுவதற்கெதிராக அங்கு வாழ்ந்த இந்திய மக்களினால் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது ( பல சர்ச்சைக்குரிய கடிதங்கள்)  நேரடியாக தியாகி திலீபனின் மேல் சேறு பூசுவதற்கு ஒன்றுமில்லாவிட்டால் என்ன அவருக்கு அஞ்சலி செலுத்துபவர்கள் அயோக்கியர்கள் என்பதினூடாக கட்டுரையாளர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிகிறது, ஆனால் அதற்காக இவ்வளவு மோசமாக கீழ்த்தரமாக தரம்தாள வேண்டுமா?
    • இயற்கை காவலன் கடலோரப் பகுதியில் பனை விதைகள் நடுதல் நிகழ்வு! | தமிழ் திருநாடு  
    • அண்ணாவுக்கு திமுக செய்த துரோகங்கள்  
    • அடக்கி ஆள நினைக்கிறியே... மண்ட பத்திரம் | ஆந்தகுடி இளையராஜா  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.