Sign in to follow this  
அஞ்சரன்

'முகடு' சஞ்சிகை வெளியீடு .

Recommended Posts

வணக்கம் உறவுகளே .

 

'முகடு' தனது முதலாவது ஓலையை எடுத்து வைக்கிறது இலக்கிய வீட்டுக்கு அது 'முகடு' வரை நிறைந்து நிக்க உங்கள் ஆதரவு வேண்டி நிக்கிறோம் ..

 

பாரீஸில் இருக்கும் உறவுகள் அனைவரையும் வருக வருக என வரவேற்ப்பதில் தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை மகிழ்ச்சி அடைகிறது ...

அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் .

 

நன்றி 

'முகடு' சஞ்சிகை குடும்பம் .

 

10342764_310996755771848_257499253004405

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் அஞ்சரன்....!

 

நானும் இளையவனாக இருப்பதால்... முகட்டின் வாழ்வில், வருங்காலத்தில் எனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்! 

 

முகடு தொட வளரட்டும்... உங்கள் முகடு!

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துகள் .ஆயிரம் பூக்கள் பூக்கட்டும் .

Share this post


Link to post
Share on other sites

முகடு சஞ்சிகை வெளியீடு மிக சிறப்பாக நடைபெற்றது மாலை நான்கு முப்பது அளவில் ஆரம்பமான நிகழ்வு விடுதலைக்கு உயிர் நீர்த்த அனைத்து மக்களுக்கும் போராளிகளுக்கும் ஆனா அகவணக்கம் செலுத்தபட்டு ஆரம்பமான நிகழ்வை முகடு குடும்ப உறுப்பினர் குமரன் தொகுத்து வழங்கினார் ..

 

மங்கள விளக்கினை இலக்கிய ஆவலர் திரு .திருஅவர்களும் ஈழ குறும்பட இயக்குனர் பாஸ்கி அவர்களும் ஏற்றி வைத்தனர் அதனை தொடர்த்து முகடு சஞ்சிகையின் நோக்கம் என்ன அதன் செயல்திறன் என்ன என்பது பற்றி குமரன் தெளிவுபடுத்தி சிறு விளக்கம் கொடுத்தார் அதனை தொடர்த்து சஞ்சிகை வெளியீடு இடம்பெற்றது ..

 

முகடு சஞ்சிகையின் முதல் பிரதியை சமூக ஆவலர் எழுத்தாளர் ஓவியர் என பன்முக தன்மை கொண்டு விளங்கும் ஐயா வாசுதேவன் வெளியீட பிரதியைஐயா  சிவா சின்னபெடி  அவர்கள் பெற்றுக்கொண்டார் ...

அதனை தொடர்த்து சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டன குறிப்பாக ஈழ திரைப்பட துறையை சார்த்த பலர் வருகைதந்து முகடு இதழுக்கு மிக பெரும் ஆதரவு தந்தனர் சதா பிரணவன் ...தமிழ்பிரியன் ..ஜெனா ..கேசவன் ....எழுத்தாளர் கோமகன் ...நிதி வணஜன் ...பார்த்திபன் ..கமல் ..ரொபின் ..என கலை இலக்கியம் சார்த்த முகங்கள் வருகை தந்ததில் முகடு குடும்பம் பெரு மகிழ்ச்சி அடைகிறது .

 

 

அதனை தொடர்த்து கருத்து கேட்ப்பு நடைபெற்றது இவ் சஞ்சிகை எவ்வாறு என்ன இலக்குடன் செயல்படவேணும் என்பது பற்றி பலர் தங்களின் கருத்துக்களை கூறினர் ஊக்கமான தட்டி கொடுக்கும் வார்த்தைகளால் ஆனா அவர்களின் கருத்துக்களில் இருந்து முகடு இன்னும் பல படிகள் தாண்டி செல்ல வேணும் என்னும் நிலையை உணர்த்தினர் ..

 

பின்னர் நன்றி உரையை அஞ்சரன் வழங்கினார் ..

 

அதாவது இணையத்தில் நட்புகொண்டு ஒரு கோட்டில் பயணிக்கும் இளையவர் ஒன்றிணைத்து இந்த சஞ்சிகை ஆரம்பிக்கபடுகிறது இதில் ஒரு குழுவா இருந்து ஆராய்ந்து எடுக்கப்படும் முடிவுகளே தவிர தனிமனித முடிவுகள் அல்ல இணையங்களில் கொட்டி கிடக்கும் எழுத்தாற்றல் நிறைந்த எதாவது என்னாலும் செய்ய முடியும் என்ன்று வேகம் கொண்டு நிக்கும் இலக்கிய ஆவலர்களை தனது முகட்டின் கீழ் கொண்டுவது சேர்ப்பதே முகடு சஞ்சிகையின் பிரதான நோக்கம் ஆகும் .

 

அரசியல் பக்க சார்பும் ...பிரபலத்தின் ஊடே பயணிப்பதை முகடு விருப்பாது  எங்களுடன் கைகுலுக்கி தோள்தட்டி போவர்களை அவர்களின்  ஆதங்கத்தை வார்த்தைகளை வடித்து எடுத்து சமூக விழிப்பு கொள்ளும் ஒரு சஞ்சிகையாக முகடு வலம்வர வேணும் என்பதே எங்கள் ஆசை .

1966797_10201879609631721_43867112252610

 

 

10426699_10201879612391790_3524686083984

 

 

 

1924903_10201879630232236_16936525462874

 

10426809_10201879632072282_3603024294915

1391458_10201879631672272_90643173800385

10394596_10201879631872277_6315643922880

10584029_10201879654672847_5719574133720

10606154_10201879653952829_4556322403969

10517518_10201879655792875_8534454196785

10689647_10201879656312888_6557342986852

10704008_10201879654192835_2858249394339

1011610_10201879705834126_65313976365602

 

 

 

 

 

 

 

10609470_10201879728434691_5773992556051

1497650_10201879728074682_51608486037158

10653597_10201879728034681_5416779601382

10460207_10201879754835351_7027278896398

 

 

 

 

 • Like 4

Share this post


Link to post
Share on other sites

நல்ல விடயம். வாழ்த்துக்கள்!

Share this post


Link to post
Share on other sites

ஆரம்பிப்பது சுலபம்!
தொடர்வது கடினம்!!

தடைகள் தாண்டி கொண்ட நோக்கம் நிறைவேற வாழ்த்துகள்!!

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் நண்பர்களே. 

 

வேலை காரணமாக கலந்துகொள்ளமுடியவில்லை மன்னிக்கவும் அஞ்சரன். 

 

இப்பவாவது விசுகு அண்ணைக்கு உத்தியோக பூர்வமாக  சொல்லிவிடுங்கப்பா நான் இல்லை என்று. :D

 

இதை சொல்ல எத்தனைநாள் நான் காத்திருப்பது. :icon_idea:  :icon_idea:

 

 

Share this post


Link to post
Share on other sites

"முகடு! விண்ணளவு உயர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்திய அனைத்து உள்ளங்கள் உறவுகளுக்கும் நன்றிகள் .

Share this post


Link to post
Share on other sites

முகடு சஞ்சிகை வரவிற்காக பாடு பட்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..!

Share this post


Link to post
Share on other sites

அட்டைப் படமும் அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

"முகடு! விண்ணளவு உயர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

வாழ்த்துக்கள் நண்பர்களே. 

 

வேலை காரணமாக கலந்துகொள்ளமுடியவில்லை மன்னிக்கவும் அஞ்சரன். 

 

இப்பவாவது விசுகு அண்ணைக்கு உத்தியோக பூர்வமாக  சொல்லிவிடுங்கப்பா நான் இல்லை என்று. :D

 

இதை சொல்ல எத்தனைநாள் நான் காத்திருப்பது. :icon_idea:  :icon_idea:

 

நான்  நிர்வாகிகள் யார் என்று தான் கேட்டிருந்தேன்

நீங்கள் அதிலிருந்தால் சந்தோசம் என்றே சொன்னேன்

 

இப்பொழுது கூட

மனவருத்தம் தருகிறது

நிர்வாகிகள்

ஆசிரியர்

ஆலோசகர் எவரது பெயரையும் காணவில்லை

எனக்கு இன்று தான் யாழில் பார்க்கக்கூடியதாக இருந்தது..

வந்திருக்கும் ஆட்களின்  தொகையை பார்க்கும்  போது

போதிய  விளம்பரப்படுத்துதல் இல்லை என்பது புரிகிறது

வந்திருப்பவர்கள் அனைவரையும்   தெரிந்ததனால்

இவர்கள் மட்டும்  ஒரு பத்திரிகைக்கு போதாது

இவர்கள் ஊக்கம் மட்டுமே தருவார்கள்

பத்திரிகைத்துறை அனுபவசாலிகள்

முக்கியமாக விளம்பரம் தரும் வர்த்தகர்கள் தேவை...

 

ஈழமுரசு மூடப்பட்ட வேதனையில் இருந்த என்போன்றவர்களுக்கு

ஒரு ஆறுதல் தரும் செய்தியாக இது இருக்கு.

 

தொடர வாழ்த்துக்கள்

 

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

அட்டைப் படமும் அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

இதன் அட்டை படத்தை ஈழத்து சிநேகிதி என்னும் ஒரு பிள்ளை  இணையம ஊடாகவே  அனுப்பியது அக்கா .

Share this post


Link to post
Share on other sites

 

 

 

நான்  நிர்வாகிகள் யார் என்று தான் கேட்டிருந்தேன்

நீங்கள் அதிலிருந்தால் சந்தோசம் என்றே சொன்னேன்

 

 

 

ஓ நன்றி அண்ணை. 

 

உங்களின் சந்தோசமோ, சந்தேகமோ எதுவென்றாலும் பதில் தரக் காலம் கனியவேண்டுமே. 

அதற்காகவே காத்திருந்தேன். மற்றபடி எதுவுமில்லை அண்ணை. 

 

எப்போதும் உங்களின் சமூக இலக்கில்  நான் வைத்திருக்கும் மதிப்புகள் மாறாதது.

 

அன்புகள் விசுகு அண்ணை.

Share this post


Link to post
Share on other sites

இதன் அட்டை படத்தை ஈழத்து சிநேகிதி என்னும் ஒரு பிள்ளை இணையம ஊடாகவே அனுப்பியது அக்கா .

என்னது ஈழத்து சிநேகிதியா,சுகம் கேட்டதாய் சொல்லுங்கோ

Share this post


Link to post
Share on other sites

முகடு சஞ்சிகை அதி உச்சத்துக்கு செல்ல மனமாற  வாழ்த்துகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

இணைய இதழ்கள் அதிகமாக உலவும் இக்காலத்தில் முகடு அச்சு இதழாக வருவது நல்லதோர் முயற்சி. பல்லாண்டுகளுக்குத் தொடரக்கூடிய ஆதரவை எழுத்தாளர்களிடமும் இருந்தும் வணிக நிறுவனங்களிடம் இருந்து திரட்டி இலக்கிய சேவை செய்ய வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

"முகடு" சஞ்சிகை, வெற்றி நடை போட வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

இன்றுடன்  ஒருவருட  பூர்த்தி  மிக்க  மகிழ்ச்சியாக  உள்ளது முகடு  பயணத்தில் இருப்பதில் .

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஊரில் இருக்கும் போது குரக்கன் ஒடியல் புட்டுகள் நீத்துப்பெட்டியில் அவித்து பல நாட்களுக்கு வைத்து சாப்பிடுவோம். மதியம் சோறு சாப்பிடும் போது அல்லது இரவு உணவின் போது நீத்துப்பெட்டி உருவில் இருக்கும் புட்டை எடுத்து திருவுவலையில் தேங்காய் திருவுவது போல ஆளாளுக்கு தேவையான அளவு திருவி சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடுவோம். இதில் எனக்கு ஒடியல் புட்டு மிகவும் விரும்பி சாப்பிவேன்.மீன்கறியுடன் நல்ல சுவையாக இருக்கும். இணைப்பு நன்றி.
  • மன்னர் தற்காலிகமாக தான் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தார், ஷேக் அப்துல்லாவின் ஒப்புதலோடு. பொது வாக்கெடுப்பு நடத்தி மக்களின் கருத்தை அறிந்த பின்பே நிரந்தரமாக இணைக்கப்படுவது பற்றி முடிவெடுக்கப்படும் என கூறினார். நேருவும் மக்களிடையே வாக்கெடுப்பு நடத்திய பின் தான் நிரந்தரமாக இணைக்கப்படும் என கூறினார். பின் அதே நேரு பொதுவாக்கெடுப்பு மேற்கொள்ளாமல் காஷ்மீரை தன்னிச்சையாக இந்தியாவுடன் இணைக்கும் வேலையில் ஈடுபட்டார். சட்டங்களையும் இந்தியாவுக்கு சார்பாக மாற்றியமைத்தார்.  நேரு ஒரு காஷ்மீர் பண்டிட் என்பதால் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என கருதியவர். காஷ்மீரை இந்தியா உரிமை கோருவதற்கு காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல. பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தியா காஷ்மீரை ஏமாற்றியது, காஷ்மீர் சட்டதிட்டங்களை மாற்றியது, காஷ்மீரில் பொம்மை அரசை நிறுவியது, இந்திய இராணுவத்தின் அடாவடி போன்றன காரணமாக தான் அங்கு ஆயுதக்குழுக்கள் உருவாகின. இப்பொழுது 370 ஐ நீக்கி காஷ்மீரை இரு யூனியன் பகுதியாக பிரித்து அவற்றை இந்தியாவின் பகுதிகளாக்கி காஷ்மீருக்கு இருந்த மிச்ச சொச்ச உரிமையும் நீக்கியுள்ளது. காஷ்மீர் பண்டிட்கள் என்பவர்கள் பிராமணர்கள் என்பதால் அவர்களை இது பெரிதாக பாதிக்கப்போவதில்லை. முஸ்லிம்களை இந்தியா தொடர்ந்து கொன்று குவிக்கும். பிஜேபி ஆதரவு மனநிலையை விட்டு வெளியில் வந்து பார்த்தால் பல விடயங்கள் புரியும்.
  • Police have charged a New Zealand man with five counts of murder following the mysterious “witchcraft” deaths of a Fijian family last month. Husband and wife Nirmal Kumar, 63, and Usha Devi, 54, their daughter Nileshni Kajal, 34, and Kajal’s daughters Sana, 11, and Samara, eight, were all found dead in the Nausori Highlands in August. According to reports and police testimony, a one-year-old baby was found alive among the bodies. The case has shocked Fijians. With no visible injuries present on the bodies of the five family members, police suspected poisoning as their cause of death. The father of the two dead children told the Fiji Sun that his father-in-law, also among the deceased, was interested in witchcraft. “I never saw anyone or any family so much into witchcraft than my in-laws,” he said. “I used to see my in-laws and other witchdoctors making a doll from dough and poking needles in it. I always took my daughters away into the bedroom. My wife and daughters were obviously also dragged into it.” On Monday, three weeks after the bodies were found and after toxicology reports were ordered, police laid charges. The suspect, who has permanent residency status in New Zealand, and his wife had been questioned by police last month, with court order issued to prevent the pair leaving Fiji. He will appear in a Nadi court later on Monday charged with five murders and one attempted murder. The child found at the scene, referred to in Fijian media as the “miracle baby”, has since been released from hospital. https://www.google.com.au/amp/s/amp.theguardian.com/world/2019/sep/16/new-zealand-man-charged-over-witchcraft-deaths-that-shocked-fiji எனது அலுவலக நண்பர் ஒரு Fiji Indian .. அவர் மூலம் இந்த செய்தியை கேள்விப்பட்டேன்..  இன்னமும் இந்த மூடத்தனமான கொள்கைகளை நம்பும் மனிதர்கள் இருப்பதை நம்ப முடியவில்லை..
  • இது காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஒருவர் படம். நேரடியாக இணைக்காமல் இணைப்பை தருகிறேன். பார்க்க தைரியமுள்ளவர்கள் மட்டும் சென்று பாருங்கள்.  https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2016/08/kashmiri-struggle-against-indian-oppression-3.jpg  இந்திய இராணுவம் காஷ்மீரில் தங்கியிருந்து அங்குள்ள மக்களை கொல்வதும் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதும் காஷ்மீரை இந்தியா தனது மாநிலமாக்கியதும் காஷ்மீரில் இடம்பெற்ற தேர்தல்களில் குளறுபடிகள் செய்ததும் என இந்தியா தான் அங்கு பிரச்சினையே.