Jump to content

யாரிடமும் சொல்லாதே!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1794604_607705492618560_666761830_n.jpg?

 

சாது ஒருவர் மாலைநேரம் நகரத்தை நோக்கி காட்டுவழியாக குதிரையில் போனார். வழியில் ஒருவன் மயங்கி விழுந்து கிடந்தான்! அவனை தூக்கி தன் குதிரைமீது ஏத்தினார். உடனே அவன் கடிவாளத்தை உலுக்கி குதிரையோடு பறந்தோடி மறைந்தான். அப்போதுதான் அவன் திருடன் என்பதை சாது உணர்ந்தார்.

மெல்ல நடந்து மறுநாள்காலை நகரசந்தைக்கு போனார். அங்கே குதிரை விற்கும் இடத்தில் அந்த திருடனை கண்டார்! அவன் சாதுவை கண்டதும் பயத்தில் மிரண்டான்! சாது மெல்ல சிரித்து அவன் அருகே சென்று,
"குதிரையை நீயே வைத்துக்கொள். ஆனால் அதை அடைந்த விதத்தை யாரிடமும் சொல்லாதே. ஏன் என்றால் சாலையில் யாராவது உண்மையில் மயங்கி விழுந்தாலும் எவரும் உதவமுன் வரமாட்டார்கள். புரிந்ததா..?" என்று சாது கூறிவிட்டு போக, திருடனின் கண்களில் கண்ணீர் துளிகள் மெதுவாக விழத்துவங்கின..!

குறுகிய லாபங்களுக்காக நல்ல கோட்பாடுகளை ஒருபோதும் சிதைக்ககூடாது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தத்துவம்...! என்டாலும் குதிரை இப்பவும் திருடன் கையில்தானே உள்ளது...!

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.