யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
ரதி

குழைச் சாதம்

Recommended Posts

சுவையான குழைச் சாதம் செய்வது எப்படி என்று யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் செய்முறை தந்து உதவும் படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

சுவையான குழைச் சாதம் செய்வது எப்படி என்று யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் செய்முறை தந்து உதவும் படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி

என் மகனுக்கு பிடிக்கும் என்று என் மனைவி அடிக்கடி செய்வார். மகன் பாடசாலைக்கு கூட எடுத்துச் சென்று சாப்பிடுவார். ஒருவரும் எழுதாவிடின் அவரிடம் கேட்டு இன்று மாலை அல்லது நாளை எழுதுகின்றேன் ( அல்லது தனிமடலில் தொலைபேசி இலக்கத்தினை அனுப்பி விடுகின்றேன் :rolleyes: )

Share this post

Link to post
Share on other sites
எனக்குத் தெரிந்த வகையில், குழைச் சாதம் என்பது, பழைய சாதம், பழைய கறிகள், ஊறுகாய் சேர்த்து குழைத்து, கையில் உருண்டையாக அம்மம்மா கையால், பூவரசம் இலையில், வாங்கி தின்பது.   :wub:
 
வீட்டில் விசேசம் நடந்த மறுநாள் காலை, மிஞ்சின சோறு கறிகளைப் பார்த்தால், உற்சாகமாகும் மனது.  :icon_idea:
 
ம்ம்..ம்ம்... அது ஒரு கனாக்காலம்!!!  :rolleyes:
Edited by Nathamuni

நன்றி நிழலி...உங்கள் மனைவியிடம் எப்படி செய்வது எனக் கேட்டு செய்முறையை இணைத்து விடுங்கள்[தொலைபேசியில் கதைப்பதற்கு இன்னும் நாள் இருக்கு:)]

Share this post

Link to post
Share on other sites

எனக்கும் ரெம்ப பிடிக்கும் இன்று வீட்டில் இதுதான்..

Share this post

Link to post
Share on other sites

சுபேஸ் எப்படி செய்வது என்று எனக்கும் சொல்லலாம் தானே!

Share this post

Link to post
Share on other sites

சுபேஸ் எப்படி செய்வது என்று எனக்கும் சொல்லலாம் தானே!

அதொண்டும் பெரிய வேலை இல்லை அக்கா.. எல்லா மரக்கறிகளையும் வெட்டி அரிசியை கழுவி அதுக்குள்ள போட்டு கொஞ்சம் பழபுளி மஞ்சள்தூள் உப்பு மிளகாய்தூள் எல்லாம் போட்டு மூடி அவிய வச்சு இறக்க வேண்டியதுதான்... நமக்கு தெரிஞ்சது அம்புட்டுதேன் அக்கா... :D

Edited by சுபேஸ்

Share this post

Link to post
Share on other sites

அதொண்டும் பெரிய வேலை இல்லை அக்கா.. எல்லா மரக்கறிகளையும் வெட்டி அரிசியை கழுவி அதுக்குள்ள போட்டு கொஞ்சம் பழபுளி மஞ்சள்தூள் உப்பு மிளகாய்தூள் எல்லாம் போட்டு மூடி அவிய வச்சு இறக்க வேண்டியதுதான்... நமக்கு தெரிஞ்சது அம்புட்டுதேன் அக்கா... :D

என்னுடைய பிடித்த உணவே அதுதான் அதில் மொட்டை கருப்பன் அரிசி சொல்லி வேலையில்லை.

Share this post

Link to post
Share on other sites

இதனை... தமிழ் நாட்டில், கட்டுச்சாதம் என்று சொல்வார்கள் என நினைக்கின்றேன்.
ஆனால்... இதுவரை சாப்பிட்டுப் பார்த்ததில்லை.
விரிவான செய்முறையை, அறிய... நானும் ஆவலாக உள்ளேன்.

Share this post

Link to post
Share on other sites

எனக்குத் தெரிந்த வகையில், குழைச் சாதம் என்பது, பழைய சாதம், பழைய கறிகள், ஊறுகாய் சேர்த்து குழைத்து, கையில் உருண்டையாக அம்மம்மா கையால், பூவரசம் இலையில், வாங்கி தின்பது.   :wub:
 
வீட்டில் விசேசம் நடந்த மறுநாள் காலை, மிஞ்சின சோறு கறிகளைப் பார்த்தால், உற்சாகமாகும் மனது.  :icon_idea:
 
ம்ம்..ம்ம்... அது ஒரு கனாக்காலம்!!!  :rolleyes:

நாதமுனி,

அதனை.... குழையல் சோறு என்று சொல்வோம்.

நீங்க குறிப்பிட்ட மாதிரி... தான், சாப்பிட்டுள்ளேன்.

எங்களது வீட்டுக்கு,  50 மீற்றர் தொலைவில் தான் எனது, பெரியம்மா வீடு உள்ளது.

அவவின் கையால்... கதை சொல்லி, உருட்டி சாப்பிடத் தரும்,

அந்த குழையல் சோறு.... இன்னும் வாயில், பசுமையாக இருக்கு.

ஆகா....  அந்த ருசி, மறக்க முடியாது. :)

Share this post

Link to post
Share on other sites

என்னுடைய பிடித்த உணவே அதுதான் அதில் மொட்டை கருப்பன் அரிசி சொல்லி வேலையில்லை.

ம்.. எனக்கு தயிரோட சாப்பிட பிடிக்கும் எக்ஸ்ராவ அப்பளம் மிளகாய் பொரியலும்.. :D

Share this post

Link to post
Share on other sites

கனடாவில் கோவில்களில் குழைசாதத்தினைத் தான் அன்னதானமாக தருவார்கள். சில கோயில்களில் சுப்பராக இருக்கும்.  முக்கியமாக Middlefield இல் இருக்கும் ஐயப்பன் கோவில், கனடா செல்வ சந்நிதி கோயில் ஆகியவற்றில் தரும் சாப்பாடு அருமை.

சாமியை கும்பிட போகாட்டியும் மனைவி மக்களுடன் அந்தப் பக்கம் போகும் போது அடியேன் வரிசையில் நின்று அன்னதானம் வாங்கிச் சாப்பிடுவது வழமையாக்கும்.

Share this post

Link to post
Share on other sites

குழை சாதம் வீட்டில் அம்மா அடிக்கடி செய்வார்.தனிய,தனிய கறியோடு சாப்பிடுவதை விட, இப்படி சாப்பிடுவது பிடித்த விடையம். ஒவ்வொருக்காக சமைக்கும் போதும் ஒவ்வொரு விதமாக இருப்பதனால் இப்போ வீட்டில் செய்யும் குழை சாதம் எனக்கு விருப்பம் இல்லாது போய்டு..சில கோயில் சாதங்கள் உண்மையாக ஜம்மி தான்... :)

Edited by யாயினி
  • Like 1

Share this post

Link to post
Share on other sites

கனடாவில் கோவில்களில் குழைசாதத்தினைத் தான் அன்னதானமாக தருவார்கள். சில கோயில்களில் சுப்பராக இருக்கும்.  முக்கியமாக Middlefield இல் இருக்கும் ஐயப்பன் கோவில், கனடா செல்வ சந்நிதி கோயில் ஆகியவற்றில் தரும் சாப்பாடு அருமை.

சாமியை கும்பிட போகாட்டியும் மனைவி மக்களுடன் அந்தப் பக்கம் போகும் போது அடியேன் வரிசையில் நின்று அன்னதானம் வாங்கிச் சாப்பிடுவது வழமையாக்கும்.

ஜேர்மனியிலும் பெரும்பாலானா ஆலயங்களில் குழை சாதம்தான் அன்னதானம்.

இதிலே முக்கியமாக பூசணி.. மரவள்ளி.. கத்தரிக்காய் ஆகியவற்றின் பங்களிப்பு முக்கியம்.

எனினும் ஆலயங்களில் வரிசையில் காத்திருந்து வாங்கி உண்ணும் சாதத்தின் சுவை, வீட்டுத் தயாரிப்பில் கிடைப்பதில்லை! 

சிலவேளை நளபாகம் என்பதாலோ?!!  :o  :lol:

Share this post

Link to post
Share on other sites

எல்லாரும் நல்லாய் இருக்கும் என்று சொல்லினமே தவிர ஒருத்தரும் ஒழுங்கான செய்முறை தருகீனம் இல்லை:lol:

Share this post

Link to post
Share on other sites

குழைசாதம் மிக இலகுவாகச் செய்யக் கூடிய சத்தான  சுவையான உணவு.

தேவையான பொருட்கள்

அரிசி - உங்களுக்குப் பிடித்த அரிசி - ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு சுவை வரும்.

வெங்காயம் -இதற்கு சின்ன வெங்காயம் சுவையாக இருக்கும். பெரிதும் போடலாம்.

பச்சை மிளகாய் - 2 அல்லது உங்கள் உறைப்புக்கேற்றபடி

மரக்கறிகள்  - முருங்கைக் காய், கரட். உருளைக் கிழங்கு, பூக்கோவா, செலறி,பூசணி, கத்தரிக்காய்,சுக்கினி,கோல்றாபி, போன்சி, மைசூர் பருப்பு, துவரம்பருப்பு, தக்காளி 

தாளிப்பதற்கு - சிறிது எண்ணெய்,கடுகு சீரகம்,கறிவேப்பிலை

பெருங்காயம் - சிறிதளவு

பழப்புளி - சிறிது

உள்ளி - ஒரு பூடு அல்லது அரைப் பூடு

இஞ்சி - ஒரு அங்குல அளவு

எல்லா மரக்கறிகளும் போடத் தேவை இல்லை. விரும்பிய நான்கு ஐந்து போட்டால் உருசியாக இருக்கும். முக்கியமாக பருப்பும் உருளைக்கிழங்கும் சுவையைக் கூட்டும்.

மரக்கறிகள் எல்லாவற்றையும் வெட்டி - உங்களுக்குப் பிடித்த அளவில் - அரிசியையும் நன்றாகக் கழுவி நீர் விட்டு அவியவிட வேண்டும். இத்துடன் சிறிது இஞ்சி, உள்ளி இரண்டையும் சிறிதாக அரிந்து  போடலாம். உள்ளியைப் பெரிதாகவும் போடலாம். இரண்டு அல்லது மூன்று நன்கு பச்சை மிளகாயையும் சேர்த்துப் போட்டு அவிக்க நல்ல சுவையும் மனமும் வரும். துவரம் பருப்பு என்றால் மரக்கறிகளுடன் சேர்த்துப் போடவேண்டும். மைசூர் பருப்பு மரக்கறிகள் சிறிது அவிந்தவுடன் போட்டால் கரையாது. சிறிது கறி மஞ்சள் முதலே போட்டு மரக்கறிகளும் சோறும் வெந்தவுடன் சிறிது பழப்புளி, பெருங்காயம் சிறிது விட்டு இறக்கிவிட்டு, சிறிய வெங்காயத்தைக் கடுகு சீரகம் வெடித்தவுடன் போட்டு சிறிது கறிவேப்பிலைகளும் போட்டு முக்கால் வதங்கலில் மரக்கறிச் சோற்றுக் கலவையில் போட்டுக் கலந்து மூடிவிட்டு உடனேயோ சிறிது நேரம் கழியவோ உண்ணலாம். முக்கியமாக வடகம், மோர்மிளகாய்,பப்படத்துடன் உண்ண சுவையோ சுவை. 

நான் இப்படிப் பந்தியாக எழுதி இருக்கிறேன் என்று பயப்பிட வேண்டாம் ரதி. மிக இலகு செய்வது. ஒரு அரை மணித்தியாலம் போதும் செய்ய.

ஜேர்மனியிலும் பெரும்பாலானா ஆலயங்களில் குழை சாதம்தான் அன்னதானம்.
இதிலே முக்கியமாக பூசணி.. மரவள்ளி.. கத்தரிக்காய் ஆகியவற்றின் பங்களிப்பு முக்கியம்.

எனினும் ஆலயங்களில் வரிசையில் காத்திருந்து வாங்கி உண்ணும் சாதத்தின் சுவை, வீட்டுத் தயாரிப்பில் கிடைப்பதில்லை! 

சிலவேளை நளபாகம் என்பதாலோ?!!  :o  :lol:

அப்படி இல்லை. கோவிலுக்குப் போகும்போது அநேகர் உண்ணாமல் தான் போவது. அதனால் அங்கு எப்பிடிச் செய்திருந்தாலும் பசிக்கு அமிர்தம்போல் தான் இருக்கும் சோழியன். :D  :D 
 
Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • Like 1
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

அதொண்டும் பெரிய வேலை இல்லை அக்கா.. எல்லா மரக்கறிகளையும் வெட்டி அரிசியை கழுவி அதுக்குள்ள போட்டு கொஞ்சம் பழபுளி மஞ்சள்தூள் உப்பு மிளகாய்தூள் எல்லாம் போட்டு மூடி அவிய வச்சு இறக்க வேண்டியதுதான்... நமக்கு தெரிஞ்சது அம்புட்டுதேன் அக்கா... :D

இதை முயற்சி செய்து பாருங்கோ!

புழுங்கல் அரிசி இதற்கு சுவையானது. கழுவி சிறிது நேரம் ஊறவிடுங்கள்.

அரிசியைப் போல ஒன்றரை மடங்கு தண்ணீர் விடுங்கள். அதனுள் தேவையான பொருட்களை போட்டு குழம்பு மாதிரி வைத்து..

கொதித்து வரும்போது ஊறிய அரிசியை போட்டு கிளறி மூடிவிடுங்கள்.

தண்ணீர் சோற்று மட்டத்துக்கு வற்றியதும்... அடுப்பின் வெப்பத்தை குறைத்து.. மீண்டும் ஒருமுறை கிளறி மூடி விடுங்கள்.

அவ்வளவுதான்! குழை சாதம் ரெடி!!  :o  :D

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

கனடாவில் கோவில்களில் குழைசாதத்தினைத் தான் அன்னதானமாக தருவார்கள். சில கோயில்களில் சுப்பராக இருக்கும்.  முக்கியமாக Middlefield இல் இருக்கும் ஐயப்பன் கோவில், கனடா செல்வ சந்நிதி கோயில் ஆகியவற்றில் தரும் சாப்பாடு அருமை.

சாமியை கும்பிட போகாட்டியும் மனைவி மக்களுடன் அந்தப் பக்கம் போகும் போது அடியேன் வரிசையில் நின்று அன்னதானம் வாங்கிச் சாப்பிடுவது வழமையாக்கும்.

உப்பிடி கன புருசன்மாரை லைவ்விலை பாத்திருக்கிறம்.....மனுசி பிள்ளையளை கோயிலுக்கு கூட்டிக்கொண்டு வந்தவையாம்.......வெளியிலைதான் நிப்பினமாம்... :D

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

எல்லாரும் நல்லாய் இருக்கும் என்று சொல்லினமே தவிர ஒருத்தரும் ஒழுங்கான செய்முறை தருகீனம் இல்லை :lol:

எடியே! சாம்பாருக்கை சோத்தை போட்டு கிண்டி விட்டியெண்டால் அது குழையல்சாதம் :icon_idea: .....இதுக்குப்போய் காட்டுக்கத்து கத்திக்கொண்டு...... :D  :lol:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

மரக்கறிகள்  - முருங்கைக் காய், கரட். உருளைக் கிழங்கு, பூக்கோவா, செலறி,பூசணி, கத்தரிக்காய்,சுக்கினி,கோல்றாபி, போன்சி, 

இவை என்ன வகை மரக்கறிகள்? கேள்விப் பட்டதில்லையே ?
 
சரியான பெயர்களை அல்லது படங்களை தர முடியுமா ? (கூகிள் image ?)
 
முருங்கை காய் இதுக்கு சரி வருமா? ருசியாக இருந்தாலும், எங்கே கலந்து ஒளிந்து இருக்கும் என்று தெரியாத வகையில் வாயை, நாக்கினை மீன்முள்ளு மாதிரி குத்தி பதம் பார்க்குமே? 
Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites

பூக்கோவா
400px_wei_blumenkohl.jpg

சுக்கினி
zucchini.jpg

Share this post

Link to post
Share on other sites

இவை என்ன வகை மரக்கறிகள்? கேள்விப் பட்டதில்லையே ?

சரியான பெயர்களை அல்லது படங்களை தர முடியுமா ? (கூகிள் image ?)

முருங்கை காய் இதுக்கு சரி வருமா? ருசியாக இருந்தாலும், எங்கே கலந்து ஒளிந்து இருக்கும் என்று தெரியாத வகையில் வாயை, நாக்கினை மீன்முள்ளு மாதிரி குத்தி பதம் பார்க்குமே?

முருக்கங்காயா.... எனக்கு எண்டால் இது சரியாகப்படவில்லை... :D Edited by சுபேஸ்

Share this post

Link to post
Share on other sites

முருக்கங்காயா.... எனக்கு எண்டால் இது சரியாகப்படவில்லை... :D

நன்றி soliyan, யாயினி
 
மூன்றாவது முள்ளங்கி என நினைக்கிறேன்?
Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு