Jump to content

குழைச் சாதம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமைக்க நேரம் கிடைக்காதவர்கள் அவசரத்தில் காய்கறிகளையும், அரிசியையும் கலந்தடித்துச் சமைப்பதா குழைசாதம்? புளிக்கஞ்சி என்று ஊரில் பிலாவிலையில் தொன்னை செய்து குடிப்பதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. புளிக்கஞ்சியில் மிளகாய்க் கொட்டை அதிகம் இருக்கும், அரிசி குறைவாக இருக்கும். இதில் அரிசி அதிகமாகிக் குழைந்து சாதமாகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை என்ன வகை மரக்கறிகள்? கேள்விப் பட்டதில்லையே ?
 
சரியான பெயர்களை அல்லது படங்களை தர முடியுமா ? (கூகிள் image ?)

கோல்றாபி.

411385_Kohlrabi_detail.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமைக்க நேரம் கிடைக்காதவர்கள் அவசரத்தில் காய்கறிகளையும், அரிசியையும் கலந்தடித்துச் சமைப்பதா குழைசாதம்? புளிக்கஞ்சி என்று ஊரில் பிலாவிலையில் தொன்னை செய்து குடிப்பதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. புளிக்கஞ்சியில் மிளகாய்க் கொட்டை அதிகம் இருக்கும், அரிசி குறைவாக இருக்கும். இதில் அரிசி அதிகமாகிக் குழைந்து சாதமாகின்றது.

அலோ அண்ணா.. எங்களைப்பாத்து என்ன நக்கலா... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலோ அண்ணா.. எங்களைப்பாத்து என்ன நக்கலா... :D

சமையலை ரசித்துச் செய்தால் சாப்பாட்டில் சுவை இருக்கும். அதைத்தான் கைப்பக்குவம் என்று சொல்வார்கள்.. வெந்ததையும் வேகாததையும் அந்தரத்தில் சமைப்பதைவிட குறுகிய நேரத்தில் தயாரிக்கும் ருசியான உணவுகளை முயற்சிப்பது நல்லது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறை தந்து உதவிய அனைவருக்கும் நன்றி.நான் வெள்ளிக்கிழமை செய்து பார்த்து,சாப்பிட்டு விட்டு என் கருத்தை எழுதுகிறேன்.

நான் இது வரை புழுங்கல் அரிசி சமைத்ததில்லை.எப்படி அந்த அரிசியை சமைத்து சாப்பிடுகிறார்கள்:D ...அவிய கண நேரம் எடுக்கும் போல:lol:

துவரம் பருப்பை வறுத்தா சமைக்க வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமையலை ரசித்துச் செய்தால் சாப்பாட்டில் சுவை இருக்கும். அதைத்தான் கைப்பக்குவம் என்று சொல்வார்கள்.. வெந்ததையும் வேகாததையும் அந்தரத்தில் சமைப்பதைவிட குறுகிய நேரத்தில் தயாரிக்கும் ருசியான உணவுகளை முயற்சிப்பது நல்லது!

சுருக்கமா உனக்கு எதுக்கு உந்த வேலை சாண்ட்விச்சை சாப்பிடு எண்டு சொல்லுறியள்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுருக்கமா உனக்கு எதுக்கு உந்த வேலை சாண்ட்விச்சை சாப்பிடு எண்டு சொல்லுறியள்.. :D

சாண்ட்விச்தான் சாப்பிட வேண்டுமென்றில்லை. அதையும் எத்தனை நாளுக்குத்தான் சாப்பிடுவது!

துரித உணவு சமையல் முறைகள் பல ஆங்கிலத்தில் மாணவர்களுக்கென்றே உள்ளன: http://studentrecipes.com/

எங்களுக்கும் பயன்படும். செத்தல் மிளகாயும், வெங்காயமும், தூளும் இருந்தால் எதையும் நம் உணவாக்கலாம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறை தந்து உதவிய அனைவருக்கும் நன்றி.நான் வெள்ளிக்கிழமை செய்து பார்த்து,சாப்பிட்டு விட்டு என் கருத்தை எழுதுகிறேன்.

நான் இது வரை புழுங்கல் அரிசி சமைத்ததில்லை.எப்படி அந்த அரிசியை சமைத்து சாப்பிடுகிறார்கள் :D ...அவிய கண நேரம் எடுக்கும் போல :lol:

துவரம் பருப்பை வறுத்தா சமைக்க வேண்டும்?

புழுங்கல் அரிசி சீக்கிரமா அவிய ஒரு கைப்பிடி அமெரிக்கன் அரிசியை சேர்த்து உலை வையுங்க இல்லாவிடின் பிரஷர் குக்கரில் சமையுங்க இலகுவாக அவியும்.துவரம் பருப்பு பொடி செய்வதற்க்குத்தான் கூடுதலாக வறுப்பதுன்டு வறுக்காமலும் போடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறை தந்து உதவிய அனைவருக்கும் நன்றி.நான் வெள்ளிக்கிழமை செய்து பார்த்து,சாப்பிட்டு விட்டு என் கருத்தை எழுதுகிறேன்.

நான் இது வரை புழுங்கல் அரிசி சமைத்ததில்லை.எப்படி அந்த அரிசியை சமைத்து சாப்பிடுகிறார்கள் :D ...அவிய கண நேரம் எடுக்கும் போல :lol:

துவரம் பருப்பை வறுத்தா சமைக்க வேண்டும்?

இனி இவங்கள்தான் குழைச்சாதம் செய்து தருவாங்கள்.. :icon_mrgreen:

https://www.facebook.com/video/video.php?v=352961354855928&set=vb.256749824477082&type=2&theater

Link to comment
Share on other sites

நேற்று இதைச் செய்தேன்.
 
1/2 கப் பாஸ்மதி
கொஞ்சம் மைசூர் பருப்பு
போஞ்சி 6 
கத்தரி 1/2  பகுதி
கப்சிகம் மிளகாய் 1 ( கட்லட் செய்யும் மிளகாய்)
உருளைக் கிழங்கு 1
குட்டி கரட்டுகள் 10
பொம்பே வெங்காயம் 1/2  பகுதி
 
இவ்வளத்தையும் துண்டாக்கி
 
தக்களிப் பேஸ்ட் 1 மேசைக்கரண்டி
கிறீன் பீஸ், சோள மணிகள் குளிரில் உறைந்தவை [ Frozen] கொஞ்சம்  
 
இவ்வளவையும் பிறஷ குக்கரில் போட்டு கொஞ்சம் கரம் மசாலா, கொஞ்சம் சாம்பார் பொடி, உப்பு போட்டு ஒன்றறை கப் தண்ணீர் விட்டு அதன் மேல் கொஞ்சம் நெய் விட்டு மூடி அவித்தேன்.
 
இறக்கும் போது நன்றாக கிண்ட வேண்டும். ( திஸ் இஸ் மிக்ஸிங்..)   :huh:
 
சக்ஸஸ். !!
 
றொம்ப பெருமையாக இருந்தது ( ஐ மீன் நம்ம சமையல..)   :D
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறை தந்து உதவிய அனைவருக்கும் நன்றி.நான் வெள்ளிக்கிழமை செய்து பார்த்து,சாப்பிட்டு விட்டு என் கருத்தை எழுதுகிறேன்.

நான் இது வரை புழுங்கல் அரிசி சமைத்ததில்லை.எப்படி அந்த அரிசியை சமைத்து சாப்பிடுகிறார்கள் :D ...அவிய கண நேரம் எடுக்கும் போல :lol:

துவரம் பருப்பை வறுத்தா சமைக்க வேண்டும்?

துவரம் பருப்பை வருக்காமலும் சமைக்கலாம். சாடையாக வறுத்தால் வாசமாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறை தந்து உதவிய அனைவருக்கும் நன்றி.நான் வெள்ளிக்கிழமை செய்து பார்த்து,சாப்பிட்டு விட்டு என் கருத்தை எழுதுகிறேன்.

நான் இது வரை புழுங்கல் அரிசி சமைத்ததில்லை.எப்படி அந்த அரிசியை சமைத்து சாப்பிடுகிறார்கள் :D ...அவிய கண நேரம் எடுக்கும் போல :lol:

துவரம் பருப்பை வறுத்தா சமைக்க வேண்டும்?

அக்கோய்,
 
சமைச்சு தனிய அடிக்கிறியள் போல கிடக்குது. ஒரு சிலமனையும் காணம்.
 
பயப்படாம வந்தது, எப்படி, குலை சாதம் வந்தது எண்டு சொல்லுங்கோவன். சாப்பிட வர மாட்டோம்.  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவிர்க்க முடியாத காரணங்களால் இன்னும் செய்து பார்க்க முடியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவிர்க்க முடியாத காரணங்களால் இன்னும் செய்து பார்க்க முடியவில்லை

வேலை மினைக்கெட்ட பன்னாடையள் இருக்கும் வரைக்கும் உனக்கு ஒரு குறையுமில்லையடி தங்கச்சி.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலை மினைக்கெட்ட பன்னாடையள் இருக்கும் வரைக்கும் உனக்கு ஒரு குறையுமில்லையடி தங்கச்சி.. :D

அதுதானே,
 
 உலையில தண்ணி கொதிக்குது, குலை சாதம், செய்யிறது எப்படி எண்டு கேட்டா, ஒருத்தரும் தருகினம் இல்லை எண்ட மாதிரி எல்லாம் கத்தின கத்தலில, நாங்களும் வேலை மினக்கட்டு எழுத, இப்ப என்னடா வெண்டால்.....
 
 இன்னும் செய்து பார்க்கவில்லையாமே....  :blink:  :o  :lol:

கேட்டு.... பத்து நாளாச்சு,

இன்னும்... அது செய்யுற நோக்கமும் இல்லை, அந்த அசுமாத்தமும் இல்லை. :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகப் பத்து நாள் தானே. எதோ  பத்துக் கிழமை ஆனமாதிரி ஆளாளுக்கு கத்துரியள். மனமாச் செய்ததால் தானே சமையலும் உருசிக்கும் அதுதான் ரதி வெயிற்றிங். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலை மினைக்கெட்ட பன்னாடையள் இருக்கும் வரைக்கும் உனக்கு ஒரு குறையுமில்லையடி தங்கச்சி.. :D

மன்னிக்க வேண்டும் அண்ணா.அவசரமாக செய்வதற்காகத் தான் கேட்டேன் பின் தவிர்க்க முடியாத காரணங்களால் செய்ய முடியாமல் போய் விட்டது.நேற்று செய்து பார்த்தேன் எதிர் பார்த்ததை விட நன்றாக இருந்தது.

நான் பாசுமதி அரிசி,து.பருப்பு,மரவள்ளி கிழங்கு,உ.கிழங்கு,பூசணிக்காய்,தக்காளி ஆகியவற்றை சேர்த்தேன்.கத்தரிக்காய் பொரித்து இறக்கின பிறகு சேர்த்தேன்[நாக்கு சுவையாய் சாப்பிட்டு பழகி விட்டது.]

செய்முறையை தந்து உதவின அனைத்து உறவுகளுக்கு மீண்டும் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

உண்மையிலே நான் செய்து பார்த்தேன். இப்போ நான் இருக்கும் நாட்டில் அதிகமாக மரக்கறிகள் இல்லை. ஜெர்மனியில் இணையம் மூலம் ஒடர் பண்ணி தான் கொஞ்சம் எடுத்தேன்.

சிவத்த பச்சை அரிசி (தீட்டாத), பூசணிக்காய், உருளை கிழங்கு, தக்காளி, பீன்ஸ், கரட், பருப்பு,வெங்காயம்,பச்சை மிளகாய், கொஞ்சம் தூள்,உப்பு, கொஞ்சமா ஒலிவ் எண்ணெய், கொஞ்சம் கூட தண்ணீர்.

அந்த மாதிரி இருந்தது.மோர் மிளகாயும், பொரிச்ச நெத்தலி கருவாடும் சேர்த்து சாப்பிட்டேன். இதுவரை நான் சமைச்ச சாப்பாடிலேயே இது தான் பிடிச்சு இருக்கு.

நன்றி குறிப்புகளை வழங்கி ஊக்கமளித்தவர்களுக்கு.

கேட்டவர் யாராகினும் ஊரே பயன் பெற்று இருக்கிறது பூமியில் பெய்யும் மழை போல

முக்கியமா ரைஸ் குக்கர் என்றால் என்ன என்றே தெரியாத நாட்டில், எனக்கு ரைஸ் குக்கர் தந்து உதவிய நண்பனுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • 4 years later...

கறியையும் சோற்றையும் புறம்பாக சமைத்து ஒன்றாக கலக்கும்போது கிடைப்பது   குழைசோறு

தயிர்சாதம், புளிச்சாதாம், எழுமிச்சை சாதம் வேறு எதையாவது பொட்டலமாக கட்டி எடுத்து போவது கட்டு சாதம்.

மரக்கறிகளுடன் அரிசியையும் சேர்த்து கூட்டாக  சமைத்து எடுப்பது கூட்டஞ்சோறு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.