Jump to content

இருட்டுப் பூனைகள் - இக் கதையை தொடருங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அறை

 

நடுவில் ஒரு விளக்கு

 

எதிர் எதிர் மூலைகளில்  இரண்டு ஆண் பூனைகள், இரண்டு பெண் பூனைகள்

 

விளக்கு அணைக்கப்படுகின்றது

 

 

அடுத்து என்ன நடக்கும்?

 

-------------------

 

இதனை கள உறவுகளே தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருட்டை கண்ட.....
இரண்டு பெண்  பூனைகளும்... பயத்தில்,
மியாவ், மியாவ்.... என்று கத்தியது.
 

அந்த குரல் வந்த திக்கில்...
ஆண் பூனைகள், சத்தம் போடாமல் கிட்டப் போய்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டப் போன ஆண் பூனைகள்

மெதுவாக பேசின

 

"விளக்கை அணைத்தது யார் தெரியுமா"

 

"தெரியவில்லை"

 

"எமக்கு எதிராக் நேற்று கூட்டம் போட்டு பேசின சுண்டெலிகளின் தலைவன் தான்"

 

"அப்படியா"

 

"ஓம் அவை எம்முடன் போர் தொடுக்க தயாராகி விட்டன"

 

அப்போது திடீரென்று பெண் பூனைகளில் ஒன்று வீரிட்டு கத்தியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெதுவாய்......
நகத்தால், விறாண்டி.....
"ஐ லவ் யூ"  சொன்னது....
அதைக் கேட்ட, பெண் பூனை.......

 

-------

 

மிகுதியை ஆராவது, தொடருங்கப்பா...
இல்லா விட்டால், நெடுக்சை... கூப்பிட்டு விட்டு விடுவேன். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டப் போன ஆண் பூனைகள்

மெதுவாக பேசின

"விளக்கை அணைத்தது யார் தெரியுமா"

"தெரியவில்லை"

"எமக்கு எதிராக் நேற்று கூட்டம் போட்டு பேசின சுண்டெலிகளின் தலைவன் தான்"

"அப்படியா"

"ஓம் அவை எம்முடன் போர் தொடுக்க தயாராகி விட்டன"

அப்போது திடீரென்று பெண் பூனைகளில் ஒன்று வீரிட்டு கத்தியது

வீரிட்டு கத்திய பெண் பூனைக்கு பக்கத்தில் போய் அந்த ஆண் பூனைகள் பார்த்த பொழுது இன்னுமொரு திருட்டுப்பூனை அந்தப்பெண் பூனையுடன் ஒட்டிக்கொண்டிருந்தது.... இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆண் பூனைகள் இரண்டும் எதற்கு பெண் பூனையுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறாய் என்று கேட்டபொழுது கனடா குளிர் தாங்க முடியவில்லை என்று அந்த திருட்டு ஆண் பூனை பதில் சொல்லியது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெதுவாய்......

நகத்தால், விறாண்டி.....

"ஐ லவ் யூ"  சொன்னது....

அதைக் கேட்ட, பெண் பூனை.......

 

என்ன துணிவு உனக்கு? இன்றுதான் உன்னைப் பார்க்கிறேன். பார்த்தவுடனேயே நெருங்கி வந்து ஐ லவ் யூ சொல்கிறாயே. அறிவிருக்கா என்றது.

 

நீதான் என்னைப் பார்க்கவில்லை. நான் உன்னை மறைந்திருந்து தினமும் பார்க்கிறேன். முன்னால் நிக்கும் *** இரண்டும் உன் பின்னால் ஒரு மாதமாக அலைவதைப் பார்க்கிறேன். அதனால் தான் நான் துணிவாக வந்து ஐ லவ் யூ சொன்னேன் என்றது.

 

*** என்றதும் மற்ற இரண்டு பூனைகளுக்கும் ரோஷமும் கோபமும் வர பொறாமையோடு அந்தப் பூனைமேல் பாயத் தயாராயின.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருட்டில் நடப்பதை எல்லாம் நிதானமாய் அவதானித்துக்கொண்டு இருந்தது சுண்டெலிகளின் தலைவன்

"சுருளி". சுருளியின் மனத்தில் பல்வேறு சிந்தனை ஓடிக்கொண்டு இருந்தது. 5 பட்டி கிராமங்களாலும் ஏக மனதாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவன் நான். என் எண்ணங்கள், செயல்பாடுகள் இந்த சமூகத்துக்கு நன்மை ஒன்றை மட்டுமே பயக்க வேண்டும் என்பதில் தீர்மானமாய் இருந்தான்.

தன் இனம் இப்பொழுது இரண்டு முனைகளில் யுத்த அபாயத்தில் இருப்பதை நன்கு உணர்தான்.

மிகவும் கொடிய விஷங்களை உணவில் வைத்து விருந்து படைக்கப்பட்டு தினம்தோறும் நா வறண்டு, உடல் கருகி மடியும் ஒரு கூட்டம், விஷத்தில் இருந்து தப்பி குற்றுயிர் குலை உயிராய் தப்புவோரை உயிருடன் பிடித்து சித்திரவதை செய்து அங்கம் அங்கமாய் பீய்த்தெரியும் எஜமான் விசுவாசம் நிரம்பிய இந்த பூனைக் கூட்டம்...

 

நான் பிளம்பு அவர்கள் விட்ட இடத்தில் இருந்து எழுதிய பந்தி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் என்றாலே பிரச்சனைதான். அதுவும் மூன்று ஆண் பூனைகளுக்கு இரண்டு பெண்பூனைகள். எனவே நிட்சயமாய் இவர்கள் தமக்குள்ள அடிபடத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் சண்டை மும்மரமானவுடன் நாம் தாக்குதலைத் தொடங்கவேண்டும் என எண்ணியபடி மற்றைய பூனைகளை அழைத்து தன் திட்டத்தை விபரிக்கத் தொடங்கியது.


சுருளியின் திட்டத்தைக் கேட்ட மற்றைய பூனைகள் வியந்து மலைத்தன.இந்தப் பெரிய பூனைகளை அத்தனை இலகுவாக நம்மால் அழிக்க முடியுமா என அச்சத்துடன் சுருளி கூறுவதைக் கேட்டபடி இருந்தன.

Link to comment
Share on other sites

'திடீரென்று' தோன்றிய ஒளி.

ஒரு மின்னல் கீறு போல கீறி மறைந்தது.

அது மின்னலா அல்லது மின்குமிழியிற்கு கிடைத்த அதி மின்சாரமா என்று கணிப்பதற்குள்,

'படா...ர்' என்று ஒரு சத்தம்.

 

கதவை அவ்வளவு வேகமாக அடிக்க கூடியவர் யாரும் இல்லை என்ற ஒரே எண்ணம் மட்டும் எல்லா பூனைகளுக்கும் பொதுவாக இருந்தது.

அந்த சத்தத்தை தொடர்ந்து மீண்டும் மயான அமைதியும் கும் இருட்டும் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்க போகிறது என்பதை மட்டுமே கட்டியம் கூறின.

(கதையை வெள்ளிக்கிழமையை நோக்கி திருப்ப வேணுமா வேண்டாமா..?? நீங்களே முடிவு செய்யுங்கள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மப்பில் வந்த பூனைக்கு கதவை மெல்லமாக சாத்த தெரியவில்லை....

 

படார் என்ற சத்தத்துடன் கதவை சாத்தியவுடன் தன்னை சுதாகரித்துக்கொண்டது கிழட்டு பூனை...

 

கும்மிருட்டும் மயான அமைதியும்  குமாரசாமி எனும் கிழட்டுபூனைக்கு பழகிப்போனதால்.......

 

அங்கிருந்த ஆண்பூனைகளின் இருப்பிடத்தை இலகுவாக கண்டு பிடித்தது......அந்த கிழட்டு பூனை.....

 

இரு பெண்பூனைகளையும் தன்னகத்தே அபகரிப்பதற்கு அந்த இரு ஆண்பூனைகளும் வில்லங்கமாக இருப்பதை..... .

 

பூனைக்கண்ணால் பார்த்து  ஒரு திட்டம் தீட்டியது....

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மொத்தமாகவும்... சில்லறையாகவும் பூனைகள் பெற்றுக் கொள்ளலாம் ....
யம்மாடியோவ் ...அவ்ளோ  பூனைகள்...

மப்பில் வந்த பூனை, கிழட்டு பூனை,  குருட்டுப் பூனை, செவிட்டுப் பூனை... ஆண் பூனை , பெண் பூனை
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மொத்தமாகவும்... சில்லறையாகவும் பூனைகள் பெற்றுக் கொள்ளலாம் ....

யம்மாடியோவ் ...அவ்ளோ  பூனைகள்...

மப்பில் வந்த பூனை, கிழட்டு பூனை,  குருட்டுப் பூனை, செவிட்டுப் பூனை... ஆண் பூனை , பெண் பூனை

 

 

நீங்கள், .எந்த... வகையை சேர்ந்த பூனை  என்று,

தன்னிலை விளக்கம் கொடுத்தால்....  நன்று. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மொத்தமாகவும்... சில்லறையாகவும் பூனைகள் பெற்றுக் கொள்ளலாம் ....

யம்மாடியோவ் ...அவ்ளோ  பூனைகள்...

மப்பில் வந்த பூனை, கிழட்டு பூனை,  குருட்டுப் பூனை, செவிட்டுப் பூனை... ஆண் பூனை , பெண் பூனை

 

 

உங்கள் பார்வையில் சரள நயனங்கள் மாறிவிட்டதோ?  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள், .எந்த... வகையை சேர்ந்த பூனை  என்று,

தன்னிலை விளக்கம் கொடுத்தால்....  நன்று. :)

 

நாம ருசி கண்ட பூனை தலைவா. :D 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.