Jump to content

ஹரியானா/மகாராஷ்டிராவில் கொடி நாட்டிய பாஜக ...


Recommended Posts

19-bjp-flag326-600.jpg
 
 
மும்பை: சிவசேனாவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட போதிலும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தான் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த மகாராஷ்டிராவில் அண்மையில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தனது 25 ஆண்டுக கால கூட்டணி கட்சியான சிவசேனாவின் உதவியின்றி போட்டி இட்டுள்ளது. மகாராஷ்டிராவிலும் மோடி அலை வீசுகிறது என்பதை நிரூபிக்க பாஜக விரும்பியது.
 
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக இதுவரை 91 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சிவசேனாவோ 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 14 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முன்னதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தெரிவித்துள்ளதாவது, மகாராஷ்டிராவில் மோடி அல்ல அவரது அப்பாவால் கூட சிவசேனாவின் ஆதரவு இன்றி வெற்றி பெற முடியாது என்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் பாஜக மகாராஷ்டிராவில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/bjp-leads-maharashtra-even-without-shiv-senas-help-213243.html


 

 

சன்டிகர்: ஹரியானாவில் முதல் முறையாக பாஜக ஆட்சியமைக்கிறது. காங்கிரஸை வீழ்த்தி தனிப்பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. 90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. கடந்த 15ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 73 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக 45 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்திய தேசிய லோக் தளம் 19 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும், பிற கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
 
தேர்தல் கருத்துக்கணிப்புகளின்படி ஹரியானாவில் பல ஆண்டுகாலம் நடந்த காங்கிரஸ் ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்திய தேசிய லோக் தள தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். இந்த தேர்தலில் தங்கள் கட்சி 40 இடங்களில் வெற்றி பெறும் என்று துஷ்யந்த் தெரிவித்தார். ஆனால் அந்த கட்சி வெறும் 19 இடங்களையே கைப்பற்றியுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/assembly-polls-haryana-may-see-end-decade-long-congress-rul-213249.html


Read more at: http://tamil.oneindia.com/news/india/assembly-polls-haryana-may-see-end-decade-long-congress-rul-213249.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகாராஷ்டிராவில்....
சிவசேனா, பா.ஜ.க. வின் வாக்குகளை பிரிக்கும் போது.....
காங்கிரஸ் சைக்கிள் காப்பிலை, முன்னுக்கு வந்து விடுமோ.... என்று அச்சப் பட்டேன்.
நல்ல வேளை... அப்படி ஒன்றும் நடக்கவில்லை. :)

Link to comment
Share on other sites

2 மாநில சட்டசபை தேர்தலில் மோடி அலை பா.ஜ அமோக வெற்றி கருத்துகள்

 

Tamil_News_587516427041.jpg

00:25:32 Monday 2014-10-20

 

Thala 55: 3 songs ready
 
morevideo_ventuno.jpg

புதுடெல்லி : மக்களவைத் தேர்தலில் பெற்ற மிகப் பெரிய வெற்றியைத் தொடர்கிறது பாஜ. அரியானாவில் 90 தொகுதிகளுக்கு நடந்த சட்டப் பேரவை தேர்தலில் 47 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது.மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உயர்ந்து அந்த மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. 25 ஆண்டுகள் கூட்டணியில் இருந்த சிவசேனா ஆதரவு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், எதிர் தரப்பில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை வெளியில் இருந்து தருவதாக அறிவித்துள்ளது.இதன் மூலம் கடந்த 15 ஆண்டுகளாக மகாராஷ்டிராவில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, 10 ஆண்டுகளாக அரியானாவில் இருந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

மக்களவை தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி. அதைத் தொடர்ந்து நடைபெற்ற சில மாநில சட்டப் பேரவை இடைத் தேர்தலில் பாஜவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில் மகாராஷ்டிரா, அரியானாவுக்கான சட்டப் பேரவை தேர்தல் கடந்த 15ம் தேதி நடந்தது. பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மகாராஷ்டிராவில் 27 பிரசார கூட்டங்களிலும், அரியானாவில்11 பிரசார கூட்டங்களிலும் பங்கேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 

மகாராஷ்டிராவில் சிவசேனா உடனான கூட்டணி முறிந்ததால், இரு மாநிலத்திலும் தனித்தே போட்டியிட்டது பாஜ. இரு மாநிலங்களிலும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமலேயே, பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதனால், தேர்தல் முடிவை அறிந்து கொள்ள நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

2 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தொடக்கம் முதலே பாஜ இரு மாநிலங்களிலும¢ முன்னிலை பெற்று வந்தது.

அரியானாவில்: அரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜ 47 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. கடந்த 2009 தேர்தலில் 4 தொகுதிகளில் மட்டுமே வென்ற பாஜவின் வாக்கு சதவீதம் 24 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில் 9.05 சதவீதமாக இருந்த பாஜவின் வாக்கு சதவீதம் 24 சதவீதம் உயர்ந்து தற்போது 33.2 ஆக உள்ளது.சவுதாலாவின் இந்திய தேசிய லோக் தளம் கட்சி 20 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 15 தொகுதிகளுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளில் பாஜ 7 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் 1, இந்திய தேசிய லோக் தளம் 2 தொகுதிகளில் வென்றன. இந்த வெற்றியின் தாக்கத்தை சட்டசபை தேர்தலிலும் பா.ஜ. தக்க வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில்: மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளில் பாஜ 257 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது. 23 தொகுதிகளில் பாஜ சின்னத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. 25 ஆண்டு காலம் இருந்த சிவசேனா உடனான கூட்டணி முறிந்ததால் பாஜ தனித்து போட்டியிட்டது. அதேபோல் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் முறிந்து தனித் தனியாக போட்டியிட்டன.

நான்கு முனைப்போட்டியுடன், ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியும் போட்டியில் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது 288 தொகுதிகளில் பாஜ, 122 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. 1990க்குப் பிறகு மாநிலத்தில் ஒரு கட்சி 100க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிப் பெறுவது இதுவே முதல் முறையாகும். பெரும்பான்மைக்கு 145 எம்எல்ஏக்கள் தேவை. பெரும்பான்மை பலம் இல்லாதபோதும், தனிப் பெரும் கட்சி என்ற நிலையில் ஆட்சியை அமைக்க பாஜ தயாராக உள்ளது. 

பழைய கூட்டணி கட்சியான சிவசேனாவின் ஆதரவு கிடைக்குமா என்ற பேச்சுக்கள், எதிர்பார்ப்புகள் இருந்தன.சிவசேனா கட்சி 63 இடங்களில் வெற்றிப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 42 தொகுதிகளுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளில் வென்றது. கடந்த தேர்தலில் 13 தொகுதிகளில் வென்ற ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மான் சேனாவுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் ஆதரவு

இந்நிலையில் யாரும் எதிர்பாராத திருப்பமாக, எதிர் தரப்பில் இருக்கும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, பாஜவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்தது. அக்கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல், “மாநிலத்தின் நலனுக்காக பாஜ அரசு அமைய நிபந்தனை இல்லாத ஆதரவை வெளியில் இருந்து தரத் தயாராக உள்ளோம்Ó என்று வெளிப்படையாக அறிவித்தார். மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சிமைக்க பா.ஜ. கட்சியின் மூத்த தலைவர் அத்வானி ஆதரவு தெரிவித்துள்ளார். கட்சித் தலைமை கேட்டுக் கொண்டால், இதற்கான முயற்சியில் ஈடுபடவும் தயார் என்று அறிவித்துள்ளார்.

இதனிடையில் இரு மாநில தேர்தல் முடிவுகள், மகாராஷ்டிரத்தில் எந்தக் கட்சியின் ஆதரவைப் பெறுவது, புதிய முதல்வர்கள் உள்ளிட்டவை குறித்து பாஜவின் ஆட்சி மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று பாஜ தேசிய தலைவர் அமீத் ஷா தெரிவித்துள்ளார். இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த தோல்வி பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

தேர்தல் முடிவு சுவாரசியங்கள்

இரு மாநில தேர்தல் முடிவுகளில் பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ள. அதில் குறிப்பிடத்தக்கவை:

* பிரபல தொழிலதிபரும், காங்கிரஸ் தலைவருமான நவீன் ஜிண்டாலின் தாயார் சாவித்ரி ஜிண்டால் அரியானாவில் தோல்வி அடைந்தார்.

* மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான நாரா யண் ரானே முதல்முறையாக தனது தேர்தல் தோல்வியை சந்தித்தார். 1990 முதல் 6 முறை எம்.எல்.ஏ. வாக இருந்துள்ளார் ரானே.

* அரியானா அமைச்ச ரும், 6 முறை சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரேவாரி அஜய் சிங் யாதவ், 3வது இடத்தையே பிடித்தார்.

* மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவரா ஜின் சகோதரி வந்தனா சர்மா தோல்வி அடைந்தார்.

* அரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் சவுதாலாவும் தோல்வி அடைந்தார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=114215

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.