Jump to content

"தீபாவளி" எதுக்கு கொண்டாடுறோம் தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"தீபாவளி" எதுக்கு கொண்டாடுறோம் தெரியுமா?

 

தீபாவளி என்றாலே அனைவருக்கும் மனதில் ஒருவித கொண்டாட்டம். ஏனெனில் அந்த நாளன்று புதிய ஆடை அணிந்து, பலகாரம் செய்து, பட்டாசு வெடித்து, அந்த தினத்தை கோலாகலமாக கொண்டாடுவோம். அதிலும் இந்த நாளன்று வீட்டிற்கு விருந்தினர் பலர் வருகைத் தந்து, தீபாவளியை குடும்பபத்தோடு கொண்டாவார்கள். ஆமாம், இந்த தீபாவளி எதற்கு கொண்டாடுகின்றோம் என்று தெரியுமா?

 

தீபாவளி என்றால் என்ன?

'தீபம்' என்றால் 'விளக்கு'. 'ஆவளி' என்றால் 'வரிசை'. அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி, இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும். மேலும் இவ்வாறு செய்யும் போது, நமது மனதில் இருக்கும் அகங்காரம், கோபம், பொறாமை போன்ற குணங்களை எரித்துவிட வேண்டும் என்பதையும் குறிக்கும். அதனால் தான் இதற்கு தீபாவளி என்று பெயர் வந்தது.

 

20-1-vastu-tips-for-diwali.jpg

 

தீபாவளி எதற்கு கொண்டாடுகின்றோம்?

தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்ளை, நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா!!!

* இராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால், அந்நாட்டில் உள்ள மக்கள் இராமனை வரவேற்பதற்கு, தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக இராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

 

20-2-rama.jpg

 

* கிருஷ்ணன், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அந்த நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால், தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.

 

20-3-lord-krishna.jpg

 

* இலங்கையை ஆண்ட இராவணன், சீதையை கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால், இராமன் இராவணனை எதிர்த்துப் போராடி, இராவணனை அழித்துவிட்டு, சீதையை மீட்டு கொண்டு, தனது தம்பியான இலட்சுமணனுடன், அயோத்திக்கு செல்லும் போது, அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க, நாட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று இராமாயண இதிகாசத்தில் சொல்லப்படுகிறது.

 

20-4-ravana.jpg

 

* சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகெளரி விரதம் முடிவுற்றதும், அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு, 'அர்த்தநாரீஸ்வரர்' ஆக உருவெடுத்ததால், தீபாவளி கொண்டாடப்படுவதாக, ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.

 

20-5-arthanareeswar.jpg

 

எனவே தான், நாம் தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுகின்றோம். உங்களுக்கு வேறு ஏதாவது காரணங்கள் தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு இணைப்பு, தமிழ்சிறி!

 

இதிலிருந்து தெளிவாகத் தெரியாது என்னவென்றால்... ஒரு காலத்தில் ' விளக்கு ஒளி' யுடன் தொடர்புடைய ஒரு பண்டிகை இருந்தது! (தீபம் என்பது வடமொழி) !

 

பிற்காலத்தில்.. கலாச்சாரங்களுக்கு எதுவாகவும், வெவ்வேறு இனங்களைச் சமாதானப்படுத்தவும் காரணங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன அல்லது விளக்கங்கள் அளிக்கப்பட்டன என்பதே உண்மையாகும்!

 

நானும் ஒரு விளக்கத்தை அளிக்கலாம் என்று எண்ணுகின்றேன்!

 

சக்கரவர்த்தி ராஜராஜ சோழன் தென்னாசியா முழுவதையும் தனது காலடியின் கீழ் கொண்டுவந்த நாளே... அவனது உத்தரவின் பெயரில் 'தீபாவளியாக' க் கொண்டாடப்படுகின்றது!

 

இனி எல்லோரும் சந்தோசமாகத் தீபாவளி கொண்டாடுவோம்! :D  

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
உங்களுக்கு வேறு ஏதாவது காரணங்கள் தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சும்மா பம்பலுக்கு நேரம் போகுதில்லை என்று கொண்டாடுகிறோம்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

புது உடுப்பு போட,ஆடு வெட்டுவதற்காக கொண்டாடுவோம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

புது உடுப்பு போட,ஆடு வெட்டுவதற்காக கொண்டாடுவோம்.

 

நந்தன் சொன்னதைத்தான் நானும் சொல்லுறன்.. :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடி நல்லநாள் பெரியநாள்களில் தான் அவையள் வடிவாக் குளிச்சு முழுகி புது உடுப்போட கோயிலுக்கு வந்து கலர் காட்டுவினம்! :rolleyes: உதுக்காக எண்டாலும் மாசத்துக்கு ஒருமுறை எண்டாலும் தீபாவளி வரவேணும்! :o நான் எண்டால் பாக்கிறேல்லை. :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி என்றால் நாலு நல்ல படம் வரும் . :icon_mrgreen:

நாளை கனடாவில் கத்தி ,பூஜை இரண்டும் வருது ,

 

ஒன்று சமந்தா மற்றது சுருதி .யாரை  முதலில் பார்க்கின்றது என்றுதான் பிரச்சனை . :o

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒன்டும் சொல்லை. ஒரு தகவலுக்காக இணைச்சிருக்கிறன்  :wub:

 

10702212_581845978609908_290547177073751

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.